lathabaiju
இதயத்துள் வரலாமா – 18
அத்தியாயம் 18
கையைப் பிசைந்தபடி போர்ட்டிகோவில் தேவிக்காய் காத்திருந்த விஜயா ஆட்டோ வந்து நிற்கவும், வேகமாய் ஒரு குடையுடன் கேட் அருகே சென்றார்.
“அ..அக்கா, ஆட்டோவுக்குக் காசு கொடு..த்திருங்க…” எனச் சொல்லி முடிக்குமுன் தேவி மயங்கி விழப்போக வேகமாய் தாங்கிக்...
ஒரு காதல் இடைவேளை – 12
அத்தியாயம் 12
ஒட்டியாணத்தைக் கையில் எடுத்த நித்தியாவின் விழிகள் வியப்பில் குண்டு பல்பாய் விரிந்தது.
“இ..இது… இது…” எனத் திகைப்புடன் இழுக்க,
“ஆமா, இது… இது… அதே ஒட்டியாணம் தான்” எனச் சிரித்த ராமைக் கண்களில் காதல் வழியப்...
இதயத்துள் வரலாமா- 17
அத்தியாயம் 17
விக்ரம், குப்தாவுடன் அலுவலக அறையில் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் கீழே வந்ததைக் கண்ட குப்தாவின் மனைவி, “ஆவோ பேட்டி, மழே வர்ற போல இருக்கி. டின்னர் ரெடி, சாப்பிட்லாம்?” என்றவர் மகளிடம் விக்ரமை அழைத்து...
ஒரு காதல் இடைவேளை – 11
அத்தியாயம் 11
“கட்… ஷாட் ஓகே…” இயக்குநர் ராம்சரண் சொல்லவும் அந்தக் காட்சி முடிய ஓய்வாய் தனது இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தான் ராம்சரண். புரடக்சன் பாயை அழைத்து ஒரு டீயை வாங்கிப் பருகிக் கொண்டே வேலை...
இதயத்துள் வரலாமா – 16
அத்தியாயம் 16
கரும்பச்சை வண்ணத்தில் அழகிய கல் வேலைப்பாடுகள் கொண்ட டிஸைனர் சேலை அணிந்து, அதற்குப் பொருத்தமான நகைகளுடன், அழகாய் தலை முடியைச் சீவி, அழகு மயிலாய் அவளைத் தயாராக்கி வைத்திருந்தாள் நிகிதா.
பொதுவாகவே நிகிதாவுக்கு...
ஒரு காதல் இடைவேளை – 10
அத்தியாயம் 10
“நித்யாம்மா, வீடு வந்திருச்சு…” டிரைவர் ரவியின் குரலில் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நித்யா கலைந்தாள்.
வண்டி நின்றதில் குழந்தைகளும் உறக்கம் கலைந்து கண்ணைத் தேய்த்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பூஜை செய்த பொருட்களை எடுத்துக்...
இதயத்துள் வரலாமா – 15
அத்தியாயம் 15
தேவி கண்மூடிப் படுத்திருக்க, சட்டென்று அவள் கழுத்தில் ஒரு குறுகுறுப்புத் தோன்றியது.
என்னவோ ஏதோவென்று கண்ணைத் திறந்தவளின் முகத்தருகே, மிக அருகில் தெரிந்த விக்ரமின் முகத்தைக் கண்டு அதிர்ச்சியில் கத்தப் போக, குரல்...
ஒரு காதல் இடைவேளை – 9
அத்தியாயம் 9
நித்யா கேரளா சென்ற ஒரு வருடத்தில், தன் தோழி கீதாவின் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் சென்னை வந்திருந்தாள். மினிஸ்டர் சக்ரபாணியின் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, அவர் தமிழ்நாடு முதலமைச்சராகப்...
ஒரு காதல் இடைவேளை – 8
அத்தியாயம் 8
மறுநாள் நித்யா அன்னையுடன் கேரளா கிளம்புவதாக இருந்தது. இன்று காலையில் தன் நெருங்கிய தோழியும், அமைச்சரின் மகளுமான கீதாவைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள் நித்யா. கீதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்க, தோழியர்...
ஒரு காதல் இடைவேளை – 7
அத்தியாயம் 7
“இனி அந்த ராம் காதல், கீதல்னு உங்கிட்ட ஏதாவது பேசினான்னு என் காதுக்கு வந்துச்சு, அவனை ஆளே அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன், பார்த்துக்க” என அன்னை மிரட்டலாகச் சொன்ன இறுதி வார்த்தைகள் நித்யாவின்...
ஒரு காதல் இடைவேளை – 6
அத்தியாயம் 6
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தான் அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
உணவு இடைவேளை நேரத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளமே கலகலத்துக் கிடந்தது. டெக்னீஷியன்கள் அவர்கள் குழுவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உணவருந்திக்...
ஒரு காதல் இடைவேளை – 5
அத்தியாயம் 5
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ராமை அலைபேசியின் குரல் கலைத்துவிட அதை எடுத்தான்.
அக்கா ராஜலட்சுமி அழைத்திருக்க, எடுத்துக் காதில் வைத்தான்.
“சொல்லுக்கா”
“தம்பி, என்னய்யா இப்படிப் பண்ணிட்ட. நீங்க ரெண்டு பேரும் பிரியறதா சொன்னப்பகூட ஏதோ ரெண்டு...
ஒரு காதல் இடைவேளை – 4
அத்தியாயம் 4
“தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண்.
“நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி?...
ஒரு காதல் இடைவேளை – 3
அத்தியாயம் 3
திங்கள் கிழமை.
எல்லாம் முடிந்துவிட்டது.
இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது.
மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக்...
ஒரு காதல் இடைவேளை – 2
அத்தியாயம் 2
எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர்.
சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத்...
ஒரு காதல் இடைவேளை – 1
ஒரு காதல் இடைவேளை
அத்தியாயம் 1
கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ.
‘பரஸ்பர...
ஒரு காதல் இடைவேளை – இன்ட்ரோ
ஒரு காதல் இடைவேளை
அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக்...
இதயத்துள் வரலாமா – 14
அத்தியாயம் – 14
நந்தினி வந்திருந்த உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுபாஷினி அடுக்களையில் எல்லாருக்கும் மதிய உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார். நந்தகுமார் வீட்டுக்குப் பந்தலிட வந்தவர்களை வாசலில் நின்று விரட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன...
இதயத்துள் வரலாமா – 13
அத்தியாயம் – 13
அன்றைய உறக்கத்தைத் தொலைத்தது நந்தினியின் விழிகள் மட்டுமல்ல, அவளோடு மேலும் நான்கு விழிகளும் உறங்காமல் பழையதை அசை போட்டபடி விழித்திருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரர்கள் விக்ரமும், தேவியும்.
விக்ரமின் மனதில் கல்யாணத்தன்று நடந்த...
இதயத்துள் வரலாமா – 12
அத்தியாயம் – 12
கண்ணில் கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய் அதைக் காண முடியாமல் அதிர்ச்சியில் திரும்பி நின்றாள் நந்தினி. அந்தப் பெரிய குளியலறையின் வெளியே இருந்த வராண்டாவில் தரையில் தேவி மல்லாந்து படுத்திருக்க...