Advertisement

கனவிலே
தோன்றிய விம்பம்
வாழ்நாள் முழுவதும்
தொடரும் என்று
உணர்ந்தது
உன்னை பார்த்த
அந்த நொடி

கார் பாக்கிங்கில் தன் பென்ட்லியை நிறுத்திவிட்டு டைன்மோர் என்று பெயர் பலகையினை தாண்டி வெவ்வேறு நிற குரோட்டன் செடிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்த சிறு நீரூற்று வாயிலிற்கான வழியை மறைத்தாற் போல் நடுவில் நிற்க அவற்றை என்றும் போல் அன்றும் உதாசீனாப்படுத்திய படி அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலினுள் சென்றான் ரிஷி.

மின் தூக்கியின் உதவியோடு ஹோட்டலில் பூட் கோட்டிற்கு சென்றான். பூட் கோட்டினுள் நுழைந்தவுடன் அவன் கண்களில் பட்டது மதிய உணவிற்காக வந்திருந்த ஸ்ரீயும் அவளது நண்பர் பட்டாளமும். அவர்களை தாண்டி தான் ரிசவ் செய்திருந்த டேபிளிலை நோக்கி நகர்ந்தான்.

அப்போது அவனது செவிகளில் “பப்ளி இப்போ நம்மை பாஸ் பண்ணி போனவர் செம்ம ஸ்மார்ட் ல..” என்று விழுந்தது.

இவர்களுக்கு இதே வேலை என்று நினைத்தாலும் அந்த கூற்றுக்கு சொந்தமானவளின் வசீகரக்குரலில் ஈர்க்கப்பட்டு அவர்களின் உரையாடலை கேட்கும் பொருட்டு அவர்களுக்கு அருகில் இருந்த மேசையில் அமர்ந்தான்.

“யாரை ஸ்ரீ சொல்ற?” என்று வினவினாள் ஹேமா.

“நமக்கு ஸ்ரெய்டா லெப்ட்ல பொன்டி புளு கலர்ல வ்ரோன் பிராண்ட் சர்ட் போட்டுட்டு செல்லை நோண்டிட்டு இருக்காரே அவரை தான் சொல்லுறேன்?”

“ஹேய் ஸ்ரீ எனக்கு ஒரு டவுட். கலரை சொல்லுற சரி. எப்படி கரக்டா சர்ட் பிராண்டையும் சொல்லுற?”

“ரொம்ப முக்கியமான டவுட்.. இந்த பரத் பேர்த்டேக்கு நானும் ரவியும் பர்ச்சசுக்கு போய் இருந்தோம். அப்போ இந்த ரவி வ்ரோன் பிராண்ட் செக்ஷனை பார்த்து ஜொல்ளு விட்டுகிட்டு இருந்தான். இவன் இப்படி ஜொல்ளு விடுற அளவுக்கு அப்படி என்னடா இருக்குனு அந்த செக்ஷனை சுத்தி பார்த்தேன். அதனால தெரியும்.”

“டேய் ரவி எல்லாரும் பொண்ணுங்களை தான் ஜொல்ளு விடுவாங்க. நீ என்னடானா சேர்ட்டை ஜொல்ளு விடுற?” என்று தன் நண்பனை வாரினாள் ஹேமா.

“உனக்கு என்ன தெரியும் அந்த பிராண்டை பத்தி?? பொண்ணுங்களுக்கு மேக்கப் கிட் மாதிரி பசங்களுக்கு சேர்ட் பிராண்ட்ஸ்”
“ஹேய் லூசுங்களா.. உங்க பஞ்சாயத்தை கொஞ்சம் நிறுத்துங்க. அடியேய் உன்கிட்ட என்ன நான் ஒரு கேள்வி கேட்டா நீ அதுக்கு பதில் சொல்லாம அவனோடு ஆர்கியு பண்ணிகிட்டு இருக்க??” என்று இடைபுகுந்தாள் ஸ்ரீ.

“சரி சொல்லு. என்ன கேட்ட?” என்று தன்னை வினவிய தோழியிடமே வினவினாள் ஹேமா.

“அடியேய் ஹேமா உனக்கு நேரம் நல்லாயிருக்கு அதுனால தப்பிச்ச… சரி நான் ஒருத்தரை காண்பித்தேனே அவரு செம்ம ஸ்மார்ட் ல?”

“அவர் ஸ்மார்ட்னா அவர்கிட்ட போய் சொல்லு அதை விட்டுட்டு என்கிட்ட ஏன்டி சொல்லிகிட்டு இருக்க?”

“ஆமால. சரி அவர்கிட்டயே போய் சொல்லிவிடுவோம்” என்று தன் இருக்கையில் இருந்து எழச்சென்ற தன் தோழியை நிறுத்தினாள் ஹேமா.

“ஸ்ரீ பேசாம உட்காருடி. வந்த இடத்தில் வம்பு வளக்காத. இது நம்ம கேண்டின் இல்லை. த்ரீ ஸ்டார் ஹோட்டல்; இங்க வருபவர்கள் எல்லாம் பெரிய இடம். ஏதாவது வம்பிழுத்து வச்சிராத. டேய் ரவிஇ கிஷோர் என்னடா பார்த்துகிட்ட இருக்கீங்க சொல்லுங்கடா??”

“ஸ்ரீ நீ அடங்கவே மாட்டியா? சஞ்சுவும் சுந்தரும் வர வரைக்கும் சரி சும்மாயிரேன். ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலானு பார்த்த இவளுக்கு அதுவும் பொறுக்க மாட்டேன்குது.” என்று அங்கலாய்த்தான் ரவி.

“அட தின்னப் பொறந்தவனே அவளை சமாளிக்காம பிரியாணி போச்சேனா பீல் பண்ணுற? இரு ரேணுகிட்ட ஒன்னுக்கு ரெண்டா போட்டு குடுக்கிறேன்”

“நோ மோர் சண்டை காய்ஸ். ஜஸ்ட் சிட் என்டு வாச்” என்று லெப்ட் சைட் டோபிளை நோக்கி நகர்ந்தாள் ஸ்ரீ.

“டேய் ரவி அவ போறாடா அவளை போகவிடாம நிறுத்துடா”
என்று கிட்டத்தட்ட அலறினாள் ஹேமா.

“விடு ஹேமா. நல்ல எண்டர்டைமன் ஒன்று கிடைச்சிருக்கு. அதை என்ஜாய் பண்ணாம பீல் பண்ணிகிட்டு இருக்க. என்ஜாயிட்.”

“அவளை பத்தி தெரிந்துமா என்ஜாய் பண்ண சொல்லுற?”

“அவளை பத்தி மட்டும் இல்லை அவ கலாய்க்க கிளம்பிபோற ஆளையும் பற்றி தெரிந்ததால் தான் உன்னை என்ஜாய் பண்ண சொல்லுறேன். யாருனு கேட்காத அவளே வந்து சொல்வாள்” என்று அமைதியாகவே பதிலளித்தான் ரவி.

இவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த ரிஷியிற்கும் ஸ்ரீ என்ன செய்ய போகின்றாள் என்ற ஆர்வம் மேலோங்கியது. ஆகையால் நடப்பதை பொறுமையாக கவனிக்க தொடங்கினான் ரிஷி.

“எக்ஸ்கியூஸ்மீ பிரோஇ மே எய் ஹேவ் எ சீட்”

“யா சுவர்.”

“தான்க்யூ. ஸ் ட் ஓகோ இப் ஐ கண்டினியூ தி கான்வசேஷன் இன் தமிழ்”

“ஹா ஹா எனக்கு பிராப்ளம் இல்ல. சொல்லுங்க.”

“நான் நேரா விஷயத்துக்கே வந்துர்றேன். பிரதர் நீங்க செம்மா ஸ்மார்ட்டா இருக்கீங்க. அதை சொல்ல தான் வந்தேன்.”

“ஹா ஹா அப்படியா இதை அந்தா வர்றாங்களே அவங்க கிட்டயும் கொஞ்சம் சொல்லிரும்மா.” என்று அம்மேசையை நோக்கி வந்துக்கொண்டிருந்த வினயாவை காட்டினான் ஆதேஷ்.

“யாரு பிரதர் அது? உங்கள் கேள் பிரண்டா?” என்ற ஸ்ரீயின் கேள்விக்கு “அதை அவளிடமே கேட்டு தெரிந்துகொள்” என்று பதிலளித்தான் ஆதேஷ்

“ஹாய் சிஸ். ஐயம் ஸ்ரீதான்யா. யுவர் குட்நேம் பிளிஸ்?”

திடீரென அறிமுகமில்லாத நபர் தன்னிடம் பேசவும் திகைத்த வினயா மறுகணமே தன்னை சமாளித்துக்கொண்டு ஸ்ரீயிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் வினயா.

“நீங்க ரொம்ப ஸ்வீட் வினயா சிஸ்… பிரதர் கேட்க மறந்துட்டேன். உங்க பெயர் என்ன?” என்ற கேள்வியில் திகைப்படைந்த வினயா தன் பார்வையை ஆதேஷ் பக்கம் திருப்ப அவனோ “ஏன் ஸ்ரீ அதை இவ்வளவு நேரமா கேட்கனும்னு தேணலையா?” என்று சிரித்தவாறே எதிர் கேள்வி கேட்டான் ஆதேஷ்.

இவர்களது உரையாடலில் குழப்பமடைந்த வினயா
“ஆதேஷ் யாரு இவங்க உங்களோட ரிலேடிவ்வா? இவங்களை நான் எந்த பங்ஷன்லயும் பார்த்ததா நியாபகம் இல்லையே”

“வினயா சிஸ் உங்க கன்பியூசனை நான் கிளியர் பண்ணுறேன். எனக்கு பிரதரை ஒரு பைவ் மினிட்ஸா தான் தெரியும். நான் ஒரு கம்பிளிமண்ட் சொல்ல வந்தேன். அதை சொன்னப்போ அதை உங்களுக்கு பாஸ் பண்ண சொன்னாரு பிரதர். அதான் உங்களுக்கு வெயிட்டிங்”

“அப்படி என்ன ஸ்ரீ சொன்னீங்க?”

“ஐயோ இந்த வாங்க போங்க எல்லாம் வேணாம். நார்மலாவே பேசலாம்”

“சரி சொல்லு ஸ்ரீ அப்படி என்ன சொன்ன?”

“பிரதர் நீங்க செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்கனு சொன்னேன்”

“யாரு இவரா? சும்மா காமடி பண்ணாத ஸ்ரீ”

“பார்த்தியா ஸ்ரீ நான் எதுக்கு இவகிட்ட சொல்ல சொன்னேன்னு இப்ப புரியுதா?”

“இல்லை சிஸ். நீங்க அண்ணாவை இப்படி கலாய்க்க கூடாது.”

“என்ன ஸ்ரீ இப்படி கட்சி மாறிட்ட. உங்க அக்காவுக்கு கெத்து காட்டலாம்னு பார்த்தா இப்படி பல்டி அடிச்சிட்ட”

“அவ பல்டி அடிக்கவில்லை அவ உங்களை சூம் போர்கஸ்சில் பார்த்த பிறகு தான் அவளோட கம்ப்ளிமன்ட் தப்புனு புரிந்துக்கிட்டா. அதான் எனக்கு சப்போர்ட்டா பேசுறா”

“எப்படி சிஸ் மைண்ட் வாய்சை சரியா கேட்ச் பண்ணீங்க?”

“சிறப்பு… மிகச்சிறப்பு.. இப்படி தான் ஒரு அப்பாவியை வச்சி செய்றதா?” என்ற ஆதேஷிற்கு

“இன்னமும் செய்வோம் ஆனால் இன்னைக்கு இது போதும்” என்று தடாலடியாக பதிலளித்தாள் ஸ்ரீ.

“ஓகோ.. நாம இன்னும் சரியா இன்ரடியூஸ் ஆகவே இல்லை. சோ நானே ஆரம்பிக்கிறேன். நான் ஸ்ரீதான்யா. சாப்ட்வேர் என்ஜினியர். கே.டி டெக்னாலஜிஸ் ல வர்க் பண்றேன்.”

“ நான் ஆதேஷ். இவங்க என்னோட பியான்சி வினயா. வன் ஓப் தி டிரைக்;டர் இன் ஓ.எஸ் கண்ஸ்ரக்ஸன். வினயா ஹவுஸ் சேர்ஜனா வேர்க் பண்ணிட்டு இருக்கா..”

“வாவ் சூப்பர். கன்கிராட்ஸட் போத். பிரதர் உங்கள் விசிட்டிங் கார்ட் தாங்களே?”

“சிஸ் உங்க போனை கொஞ்சம் தாங்களே?”

“இந்தா ஸ்ரீ” என்று இருவரும் ஒரு சேர வழங்க
சுpல வினாடிகளின் பின் “சிஸ் என்னோட நம்பர் சேவ் பண்ணியிருக்கேன். வீல் கீப் இன் டச். இப்போ நான் போகனும். அங்க என்னோட வந்தவங்க வெயிட் பண்ணிட்டு இருங்க. நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம். பாய் போத் ஒப் யூ” என்று கிளம்ப தயாரான ஸ்ரீ யை

“ஸ்ரீ ஜஸ்ட் எ செக்கன்ட். இந்தா எங்களோட வெடிங் இன்விடேஷன் நீ கட்டாயம் வருனும். மத்த பங்ஷனுக்கு நான் உன்னை பேர்சனலா இன்வைட் பண்ணுறேன்” என்று தம் கல்யாணப்பத்திரிகையை இருவரும் ஒரு சேர வழங்கினர்.

“டோன்ட் வொரி. ஜமாய்ச்சிரலாம். ஓகே சீயு…” என்று அவர்களிடமிருந்து விடை பெற்றாள் ஸ்ரீ.

இவளது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரிஷியிற்கு ஸ்ரீயை நினைத்து வியப்பாக இருந்தது. அவளது குறும்புத்தனம் வெளிப்படையான பேச்சு அனைத்தும் அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

அறிமுகமில்லாதவர்களை அவள் அணுகிய விதம் அவர்களுடன் நட்பு பாராட்டியே முறை அனைத்தும் அவனைக் கவரவே செய்தது.

அதை விட அவனைக் கவர்ந்;தது ஸ்ரீயின் வசீகரக்குரல். ரிஷியின் மனதில் அவனறியாமல் ஸ்ரீயின் பால் ஈர்ப்பு வந்ததை உணர்ந்த நொடி தன் மனது போகும் பாதை அறிந்து அதை கட்டுக்குள் கொண்டு வர முயன்று அதில் வெற்றியும் பெற்றான் ரிஷி. அவனது முயற்சிக்கு தோள் கொடுக்கும் முகமாக வந்து சேர்ந்தான் அவன் தோழன்.

Advertisement