Advertisement

நிதம் உன்னை
அறிய தவம் கிடக்கும்
என் கண்களுக்கு….
உன் வரவால்
என்று
தரிசனம் தருவாய்
ரதியே…

தனது ஹோண்டாவினை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி.சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஸ்ரீதான்யா.

அவளை கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம் கூறிய காவலாளி தொடக்கம் வேலைக்கார ஆயா வரை அனைவருக்கும் காலை வணக்கத்தை கூறியவாறு தன் இருக்கையை அடைந்தாள் ஸ்ரீ.

அவளை காலை வணக்கம் கூறி வரவேற்ற அவளது தோழி ஹேமா அவள் யாரையோ தேடுவதை கண்டு “ஹேய் ஸ்ரீ வந்ததும் வராததுமா யாரடி தேடுற? உன் அடிமை பரத்தை தேடுகிறாயா? அவன் இன்னைக்கு ஆபிஸ் லீவு. நீ இப்படி அவனை தேடுறனு தெரிஞ்சிச்சி இதோ வந்தேன் தேவினு எங்க இருந்தாலும் ஓடி வந்துருவான். சே சான்ஸை மிஸ் பண்ணிட்டானே.. டேய் பரத் உனக்கு சுக்கிரன் ரிவர்ஸ்ல போறாரு டா” என்று அங்கு இல்லாத பரத்திற்காக போலியாக வருந்தினாள் ஹேமா.

“அடியேய் ஹேமா ஏன்டி இந்த கொலைவெறி? நான் யாரை தேடுனாலும் அவனை தேடுறதா தான் அர்த்தமா?? நானே நம்ம பேர்த்டே பேபியை காணவில்லையேனு தேடிட்டு இருந்தேன். நீ என்னடானா அந்த மாங்காய் மடையனை என் தேடலோட சின்க் பண்ணற. வர வர உன்னோட லூட்டி அதிகமாகிட்டே போகுது. ராஜூ அண்ணாகிட்ட சொல்லி உன்னை அடக்கி வைக்க சொல்லனும்.”

“உங்க அண்ணாவை சமாளிக்கிறது எல்லாம் ஒரு விஷயமா? அத விடு நீ எதுக்கு அவளை இவ்வளவு சீரியஸா தேடுற?”

“அவளுக்கு விஷ் பண்ணத்தான்”

“இல்லையே இதுல வேற ஏதோ உள்குத்து இருக்க மாதிர் இருக்கே?”

“இதுல என்னடி உள்குத்து இருக்குது?”

“வேற என்ன இருக்க போகுது டீரீட் மிஸ் ஆகிருமோ அப்படிங்கிற உள்குத்து தான்”

“ வாவ் நீ எப்போ இவ்வளவு அறிவாளியானாய்? ஆனா நீ இப்படி எல்லாம் யோசிக்கிற ஆள் இல்லையே?” என்று தன் தோழியை வாரினாள் ஸ்ரீ.

“இப்ப நீ என்ன சொல்ல வருகிறாய்? என்னை அறிவாளினு சொல்லுறியா இல்லைனா மண்டைல சரக்கே இல்லாத மாங்கா மடச்சினு சொல்லுறியா?”

“டிசிஷனை உன்னோட சாய்ஸ_க்கு விடுறேன். இப்போ சஞ்சு எங்கனு சொல்லு?” என்று தன் கேள்வியிலேயே குறியாக இருந்தாள் ஸ்ரீ.

“அந்தா அவளே வந்துட்டா அவகிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோ இப்ப ஆளை விடு.” என்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் ஹேமா.

“ஹேப்பி பர்த்டே பப்ளிமாஸ். ஹேவ் எ வாண்டர்புள் டே ஸ்வீட்டி. எங்கடி கேக்? இன்னைக்கு ட்ரீட் தாரேனு சொன்னது மேடமுக்கு நியாபகம் இருக்குதில்ல? பிறகு பைசா இல்லைனு மொக்கையாக்கிற மாட்டாய் தானே? ஏய் என்னடி நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லமா ஏதோ காஞ்சனா படம் பாரக்;கிற மாதிரி என்னையவே பார்த்துட்டு இருக்க?”

“என்னை எங்கடி பேசவிட்ட நீ பாட்டுக்கு ஏதோ பிரஸ் மீட்ல ஜேனலிஸ்ட் நம்ம அரசியல்வாதிகளை பேசவிடாம கேள்வி கேட்டுகிட்டே போற ரேஞ்சில கேட்கிறாய்? இதுல இவங்க காஞ்சனா படத்தை வேற சிங்க் பண்ணுவாங்களாம்..”

“சரி சரி விடு மச்சி அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம். இப்ப சொல்லு எங்க ட்ரீட் வைக்க போற?”

“வேற எங்க நம்ம கேன்டீன்ல தான் ட்ரீட்.”

“இதுக்கு நீ எனக்கு ஒரு பாட்டில் விஷம் வாங்கி குடுத்திருக்கலாம்”

“அப்படியா ஸ்ரீ? நீ இதை முன்னாடியே சொல்லியிருந்தன அதையே வாங்கி குடுத்திருப்பேனே? நல்ல சான்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டேனே” என்று போலியாக கவலை கொண்ட சஞ்சுவை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள் ஸ்ரீ.

“கிராதகி எவ்வளவு நாளாய் இந்த பிளானில் இருக்க? ட்ரீட் கேட்டதுக்கு இப்படி மர்டர் பண்ணுற லெவலுக்கு போவியா?
…ட்ரீட் கேட்ட நண்பியை விஷம் வைத்து கொன்றாள் இளம் பெண்…
அப்படினு ஹெட்லைன் வரனும்னு ஆசைப்படுறியா?”

“ஹேய் ஸ்ரீ இது கூட நல்லா தான் இருக்கு? அப்போவாவது உன்ன மாதிரி ட்ரீட் கேட்கவே பிறந்த ஜீவன் எல்லாம் அடங்கி இருக்கும்”

“ ஹேய் பப்ளி அப்பவும் நான் ஆவியா வந்து ட்ரீட் கேட்டு தொந்தரவு பண்ணுவேன்”

“நீ அடங்கவே மாட்ட. உன்கிட்ட வாய் குடுத்து நாங்க தான் விழி பிதுங்கி நிக்கனும்”

“இப்போ சரி மேடத்தோட திறமைய தெரிஞ்சிக்கோ. சரி இப்போ சொல்லு எங்க இன்னைக்கு ட்ரீட்?”

“இங்க பக்கத்துல இருக்க டைன்மோர் ரெஸ்டோரன்ட் போகலாம்.”

“ஓகே பப்ளி. சுந்தர் ரவி கிஷோர் எல்லோருக்கும் இன்போர்ம் பண்ணிட்ட தானே?”

“ஆமா ஸ்ரீ ரவிக்கு ஹெட் ஆபிசுக்கு போக இருக்காம். அங்க போயிட்டு நேர ரெஸ்டாரன்ட்டுக்கு வந்துர்றேனு சொன்னான். நாம எல்லாரும் சேர்ந்து லன்ச் பிரேக்குக்க கிளம்புனா சரி.”

“பப்ளி பிளான்னா சும்மாவா?.. சும்மா தெறிக்கும் ல…”
“இப்ப நீ என்ன சொல்ல வர்ற ?”

“ நான் ஒன்னும் சொல்ல வரலை. இப்ப நாம வேலைய பார்ப்போம். இல்லைனா டீம் லீடர் வந்து கத்தும்”
“ இன்னைக்கு தப்பிச்சடி நீ இன்னொரு நாள் மாட்டாமயா போவ அப்போ பார்த்துக்கிறேன்.”

“வேலையை கவனி பப்ளி” என்றவாறு தன்வேலைகளை கவனிக்க தொடங்கினாள் ஸ்ரீ.

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

“ரிஷிராஜ் டெக்ஸ்டைல்ஸ்” தலைமை அலுவலகத்தில் தனது அலுவலக அறையில் தன் கல்லுரித்தோழனுடன் பல நாள் கழித்து உரையாடிக்கொண்டிருந்தான் ரிஷி.

“டேய் ஹரி என்னடா திடீர்னு என்னோட நியாபகம் வந்திருக்கு?? என்னடா விசேஷம்?”

“டேய் ரிஷி எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? ஆனாலும் நீ என்னை இப்படி அசிங்கப்படுத்த கூடாது. ஏதோ ஆப் சைட் போனதால காண்டக்ட் விட்டுப்போச்சி அதுக்கா இப்படி எல்லாம் சொல்வாயா?” என்றான்; உண்மையான வருத்தத்துடன் ஹரி.

“டேய் ஹரி நீயா இவ்வளவு பீல் பண்ணுற?? என்னால நம்பவே முடியல மச்சான். நம் ஹிட்லர் தில்லைநாதனையே தலைதெறிக்க ஓட விட்ட என் பங்கு ஹரியா இப்படி பேசுறது? நம்பமுடியலையே?? மச்சி சம்திங் ரோங் என்னனு சொல்லு??” என்று தன் நண்பனின் மாற்றத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டான் ரிஷி.

“சொல்லுறேன் மச்சான் ஆனா போன்ல இல்லை. இன்னைக்கு லன்சுக்கு லோடஸ் அவனியு டைன்மோர்க்கு வரமுடியுமா? இல்லாட்டி வேற வேர்க் எதாவது கமிட் ஆகிட்டியா?”
“இல்லடா நாம இன்னைக்கு மீட் பண்ணலாம். இன்னைக்கு கமிட் ஆகி இருந்த கிளையன்ட் மீட்டிங் கேன்சல் ஆகிருச்சி. சோ நோ இசியுஸ். நாம டைன்மோர்ல மீட் பண்ணலாம்;;.”
“தேங்ஸ்டா மச்சான். நாம அங்க மீட் பண்ணலாம். பாய் டேக் கெயார்.”

“ஓகே டா பாய்” என்று நண்பனது அழைப்பிற்கு விடை கொடுத்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

Advertisement