Advertisement

அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்….  சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்… அவர்கள் இருவருக்கும் இது வழமை …… அந்த நேரத்தை இருவரும் மிகவும் ரசிப்பார்கள்…….        சில வேளைகளில் இருவரும் கடலின் கரையில் அதாவது கால்கள் நீரில் நனையுமாறு உள்ள தூரத்தில் இருவரும் தம் கைகளை பின்னிக்கொண்டு நடப்பர்…… இன்னும் சில வேளைகளில் சூரிய அஸ்தமனத்தை கடல் மண்ணில் அமர்ந்து இருவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள்……

சாருவிற்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்…..அதுவும் கடலை ரசித்துக்கொண்டு கடல் காற்று மேனியில் மோத அதை அனுபவித்தவாறு ஐஸ்கிரீமை ருசிப்பதில் அலாதி பிரியம்….. அதை சாரு கூறி அறிந்த அஸ்வின் கடற்கரை வரும் வேளைகளில் எல்லாம் அவளிற்கு கொனேட்டோ வாங்கி கொடுப்பான்…. சாரு அதை தனியே சாப்பிடாது அவனுக்கு ஊட்டி விடுவாள்…..இதற்காகவே அஸ்வின் எப்போதும் ஒரு ஐஸ்கிரீமோடு தான் வருவான்…. ஏன் உனக்கு வாங்கவில்லை என்று கேட்கும் சாருவிடம் ஏதாவது காரணம் சொல்லி சமாளிப்பான்… இது தொடரவும் ஒரு நாள் சாரு கேட்டுவிட்டாள்…

“ஏன் ரௌடி பேபி என்னோட ஐஸ்கிரீமிலேயே எப்பவும் நீ பங்கு கேட்குற???? உனக்கு ஒன்று வாங்குனா ரெண்டு பேரும் நிறைய சாப்பிடலாம்ல…. பாரு உன்னால எப்பவும் நான் பாதி ஐஸ்கிரீம் தான் சாப்பிடுறேன்…. போ இன்றைக்கு நீ உனக்கு ஒன்று தனியா வாங்கி சாப்பிடு” என்று அஸ்வினை விரட்ட

“வாங்கலாம் ஜிலேபி….ஆனா அது நீ எச்சிப்படுத்திட்டு எனக்கு ஊட்டுகின்ற ருசியை கொடுக்காதே…  என்ன பண்ண???”

“டேய் திருடா….. வெளியில துர்வாசர் மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இப்படி லவ்ஸ் பண்ணுறியா???? நான் உன்னை என்னமோனு நினைத்தேன்…. ஆனா நீ லவ் சப்ஜக்ட்டில் பி.எச்.டி வாங்கயிருப்ப போல….என்னலாம் செய்ற??” என்று சாரு கூற அஸ்வின் சிரித்தவாறு அவள் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை ஒரு கடி கடித்து ருசித்தான்….

அன்றும் இருவரும் இந்த நேரத்தை சேட்டைகளுடன் அனுபவித்தனர்… அப்போது சாரு திடீரென்று அஸ்வினிடம்

“ரௌடிபேபி நம்ம ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு ஏதும் யோசித்து வைத்திருக்கியா??”

“பார்டா என் ஜிலேபிக்கு ஹனிமூன் ஆசை வந்திருச்சி…… நீ ஓகேன்னு சொன்னா இன்றைக்கே கொண்டாடிரலாம்” என்று அஸ்வின் அவளை வம்பிழுக்க…

“அடிங்… உனக்கு இப்படி ஒரு ஆசையிருக்கா….. ரௌடி …. சரி நான் கேட்டதற்கு பதில் சொல்லு…. நீ எங்க கொண்டாடலாம்னு பிளான் பண்ணியிருக்க???”

“நான் ஏதும் பிளான் பண்ணல ஜிலேபி..”

“டேய் உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும்…. இன்னேரம் நீ நம்ம குழந்தையை எந்த ஸ்கூலில் சேர்க்கனும்குற வரை பிளான் பண்ணியிருப்ப….. நீ வெல் பிளான்ட் பர்சன் னு எனக்கு தெரியும். சோ சொல்லு எங்க போகலாம்னு யோசிச்சிருக்க???”

“அது எப்படி சாரு எல்லாத்தையும் சரியா கண்டுபிடிச்சிர்ற??? சரி சொல்லுறேன்… அதுக்கு முதல்ல நீ சொல்லு…நீ எங்க போகலாம்னு பிளான் பண்ணியிருக்க???”

“அதுக்கு தான் நீ இருக்கியே… நீ இருக்கும் போது நான் எதுக்கு அதை பற்றி எல்லாம் யோசிக்கனும்…..நீயே சூப்பரா ஏதாவது யோசித்து வைத்திருப்ப…சொல்லு….எந்த இடத்திற்கு போறோம்…??”

“என்னோட பாட்டி கிராமத்திற்கு…..”

“என்ன ரௌடிபேபி எல்லாரும் சுவிஸ்,பாரிஸ் னு சொல்லுவாங்க நீ என்னானா கிராமத்திற்கு போகலாம்னு சொல்லுற??”

“உனக்கு இந்த ஐடியா பிடிக்கலையா ஜிலேபி??” என்று அஸ்வின் சற்று வருத்தத்துடன் கேட்க

“ஐயோ அப்படி இல்லை பேபி… நீ ஏதும் ரீசன் இல்லாம இப்படி செய்ய மாட்டனு எனக்கு தெரியும்…. அந்த ரீசன் என்னான்னு சொன்னா நானும் பிரப்பேர் ஆவேன்…”

“ஹாஹா… நீ பாரதியாரோட காணி நிலம் வேண்டும் கண்ணம்மா பாட்டு கேட்டுருக்கியா???”

“ஆமா..? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??”

“அதை ரியல் லைப்பில் செய்து பார்க்கனும்னு ஆசை…”

“சரி அதை எப்படி நம்ம ஹனிமூனில் செய்ய போறோம்??”

“சொல்றேன்…. அதுக்கு முதலில் அந்த பாட்டை நல்லா  கேளு” என்றுவிட்டு அந்த பாடலை தன் மொபைலில் ஒலிக்கச்செய்தான் அஸ்வின்…

 

காணி நிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும், – அங்கு

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும் – அங்கு

கேணியருகினிலே – தென்னைமரம்

கீற்று மிளநீரும்.

 

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும் – நல்ல

முத்துச் சுடர்போலே – நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவேணும், – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

 

“இந்த பாட்டில் வருகின்ற மாதிரி தான் பாட்டி ஊரில் இருக்கின்ற அவங்க தோட்ட வீடு….அந்த வீடு தோட்டத்திற்கு நடுவில் கட்டியிருக்காங்க…. வீட்டை சுற்றி அழகழகான பூமரங்கள்…  பத்து பன்னியிரண்டு தென்னை மரம் இல்லை. ஆனா அங்க நாலு தென்னை மரங்கள் இருக்கு… அதோடு அங்கு ஒரு மல்லிகை பந்தலும் இருக்கு…. அதோட வாசம் அப்படியே ஆளை தூக்கும்… அந்த வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருக்கு… இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக அங்க இலாம்பு விளக்கு வைத்திருப்பாங்க….அந்த வெளிச்சத்தில் அந்த இடம் அவ்வளவு அழகா இருக்கும்… இங்க பல லட்சம் செலவு பண்ணி வீட்டை அலங்கரிக்கிறாங்க… ஆனா அங்க அந்த அந்த சுண்ணாம்பு அடிக்கப்பட்ட அந்த மண்வீடு இங்குள்ள வீடுகளோட அழகையே மிஞ்சிரும்….. அதோட அங்கு மரங்கள் இருப்பதால எப்போதும் பறவைகள் சத்தம் இருந்துட்டே இருக்கும்… அங்கிருக்க தென்னை மரத்தோட இளநீர் செம்ம டேஸ்ட்… வெயில் காலத்துக்கு ரொம்ப இதமா இருக்கும்… அந்த இடத்தை சுற்றி வேலி அமைச்சிருப்பாங்க… அந்த வேலியில் ஒரு இடத்தில சின்ன கதவு இருக்கும்…. அது கம்புகளை இணைத்து அமைக்கப்பட்டிருக்கும்…. வீட்டிற்கு வெளியே சின்ன திண்ணை இருக்கும் அங்க உட்கார்ந்து அந்த வியூவை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்….. அந்த திண்ணையில் ஒரு இலாம்பு தொங்கிட்டு இருக்கும்….அந்த திண்ணையில் உட்கார்ந்த சும்மா குளு குளுனு காற்று வீசும். அதை அப்படியே உள்ளெடுத்து வெளிய விட்டா அவ்வளவு சுகமா இருக்கும்…..அப்புறம்” என்று மீதி பாடலை ஒலிக்கவிட்டான் அஸ்வின்.

 

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் – எங்கள்

கூட்டுக் களியினிலே – கவிதைகள்

கொண்டுதர வேணும் – அந்தக்

காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்

காவலுற வேணும், – என்றன்

பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

 

“அந்த ரம்மியமான சூழலில் நீயும் நானும் மட்டும் இருக்கனும்…. நீ மடிசாரி கட்டிக்கிட்டு அந்த திண்ணையில் சாப்பிட அமர்ந்திருக்க எனக்கு நீ உன் கையால் சமைத்த சமையலை பரிமாற அதை நான் உன்னை ரசித்தவாறே சாப்பிடனும்…… நான் சாப்பிட்டு முடிந்தோன நான் என் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உனக்கு பரிமாறனும்….. நீ உன்னோட சாப்பாட்டில் கொஞ்சம் உன் கையால் எனக்கு ஊட்டி விடனும்….. நானும் உணவை வாங்கும் சாக்கில் உன் கையை மெல்ல கடிக்க நீ ரொம்ப வலித்த மாதிரி கத்தி என்னை முறைக்கனும்…. நானும் சிரிச்சிட்டே உன்னை பார்த்து கண்ணடிக்க நீ அதில் உன் முகம் சிவந்திருக்க அந்த நிலவொளியில் எனக்கு அது போதையேற்றனும்…… சாப்பிட்டு முடிந்தவுடன் நான் வெளி வாசலில் மரக்கட்டிலை எடுத்துபோட்டு உட்கார்ந்திருக்க நீ எனக்கு வெற்றிலை மடிச்சி குடுக்கனும்……அதை வாங்கி நான் கொஞ்சம் சாப்பிட்டு உனக்கு கொஞ்சம் ஊட்டி விடனும்…. அந்த வெற்றிலை மென்னுகிட்டே நான் உன்னை என்னோடு அணைத்து அந்த வானத்தில் காய்ந்து கொண்டிருக்கும் நிலாவை ரசிக்கனும்….. அந்த நேரம் பனி பொழிய நீ குளிர்தாங்காம என்னை இறுக்கமா அணைச்சிக்கனும்…..உன் அணைப்பு என்னை பித்தனாக்க நான் உன் காதில் அதை என்னோட காதல் மொழியில் உறைக்கும் போது நீ வெட்கப்பட்டு என்னை தள்ளிவிட்டுட்டு எழும்பி ஓடனும்… நீ என்னை விட்டு ரொம்ப தூரம் ஓடாதவாறு உன் கையை பிடித்து நான் இழுக்க நீ அப்படியே என் மேல வந்து விழ என்னை நிமிர்ந்து பார்க்க முடியாம வெட்கப்பட்டு என் நெஞ்சில் சாய்ந்து கொள்ளனும்… உன் நாடி பிடித்து நான் தலையை உயர்த்த நீ அதை தடுக்க நான் என் மறுகையால் உன் இடுப்பை கிள்ள நீ துள்ளி விலகும் போது நான் உன்னை பார்த்து இஞ்சி இடுப்பழகி பாட்டு பாடுவேன்… அதுக்கு ஏற்ற மாதிரி நீயும் என்கூட சேர்ந்து ஆடுவ……” என்று அஸ்வின் ஒரு கிறக்கத்துடன் தன் கற்பனையை கூற சாருவோ அவனை பார்த்து பலமாக சிரித்தாள்…. அதில் கலைந்தவன்

“ஏன் ஜிலேபி சிரிக்கிற???  நான் சொல்லுறது ரொம்ப மொக்கையா இருக்கா???”

“அவ்வளவு மொக்கை இல்லை…. ஆனா எப்படி ரௌடிபேபி என்ன பாட்டு பாடுவனு கூடவா பிளான் பண்ணுவ???? இப்படியா டா ஹனிமூனை ஒருத்தன் பிளான் பண்ணுவான்??”

“ஹாஹா ஜிலேபி….இது டீசர் தான் மா…. நீ மெயின் பிக்கசரை பார்க்கும் போது இன்னும் மெர்சர் ஆகிருவ”

“அப்படியா பேபி சரி இப்ப டீசரில் நீ பாடப்போறேனு சொன்ன பாட்டை இப்ப பாடிக்காட்டு???” என்று சாரு கூற அஸ்வின் பாடத்தொடங்கினான்…

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே

மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்

மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

 

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க

உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே

புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே

உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட

உள்ளம் மட்டும் உன் வழியே நானே

 

இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக

கள்ளச் சிரிப்பழக

மறக்க மனம் கூடுதில்லையே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே

அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு

நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான …

 

என்று அவர்களுக்கு இடையிலான அந்த இனிய நாள் நினைவுவந்து அவளது மனதை இனிமேல் அந்த நாள் வராதா என்று ஏங்கச் செய்தது…அவளது ஏக்கம் அதிகமாக மனமோ உன் முடிவு என்ன என்ற கேள்வியை எழுப்பி அந்த இனிய ஏக்கத்தை கலைத்தது… அதன் விளைவாக அவளிற்கு கண்ணீர் பெருக இரவு முழுவதும் கண்ணீரில் கரைந்தாள்….. அதன் விளைவாக காய்ச்சல் அவளை சிறைபிடித்தது…..இரண்டு நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தவள் மூன்றாம் நாள் கண்விழிக்கையில் ஆஸ்பிடலில் இருந்தாள்….அவள் கண் விழித்ததும் அவளருகே வந்த ஷெண்பா

“இப்ப உடம்பிற்கு எப்படி இருக்கு சாருமா???”

“நான் எங்கே இருக்கேன் சித்தி??? எனக்கு என்னானது???”

“ஆ… நீ ரெண்டு நாளா சொர்க்கத்தில தூங்கிட்டு இருந்த இப்போ தான் உன்னை அங்க இருந்து எழுப்பி கூட்டிட்டு வந்தோம்” என்று ஷெண்பா பின்னாலிருந்து சஞ்சு குரல் கொடுக்க

“நீ எப்போ சிங்கப்பூரில் இருந்து வந்த???”

“நான் நேற்று காலையிலேயே வந்துட்டேன்… அப்போ அஸ்வின் தான் கால் பண்ணி உன்னை அட்மிட் பண்ணி இருக்கதா சொன்னாரு…. நான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்…”

“ஆமா சாரு மா உனக்கு காய்ச்சல்னு தெரிந்தவுடன் அந்த தம்பி தான் டாக்டரை கூட்டிட்டு வந்துச்சி…நீ ஜுரத்தில விடாம அனத்திட்டு இருந்த…. நான் டாக்டர் நம்பரை உன்னோட போனில் தேடும் போது அஸ்வின் தம்பி கால் பண்ணிச்சி…. அதுகிட்ட விஷயத்தை சொன்னவுடன் உடனே கையோட டாக்டரை கூட்டிட்டு வந்திச்சி… டாக்டர் உன்னை செக் பண்ணி பார்த்திட்டு உன்னை அட்மிட் பண்ணணும்னு சொல்லிட்டாரு..ரெண்டு நாளா நீ சுய நினைவே இல்லாம இருந்த… சஞ்சு தம்பி வர வரைக்கும் அஸ்வின் தம்பி தான் துணைக்கு இருந்தார்…சஞ்சு தம்பி தான் அவரை வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்…” என்று நடந்த அனைத்தையும் ஷெண்பா ஒப்பிக்க சாருவிற்கு இனியும் அஸ்வினை பிரியும் முடிவு சாத்தியமல்ல என்று உறுதியானது….தனக்கு ஏதும் என்றால் ஓடி வருபவன் எந்த காலத்திலும் தான் அவனை விட்டு பிரிய அனுமதிக்க மாட்டான் என்று அவளுக்கு நிச்சயமானது….. இனிமேல் என்ன செய்வது என்று யோசிக்கத்தொடங்கினாள்……

???????????????????????????????????????????

Advertisement