Advertisement

அஸ்வின் சிரிக்க அவனது சிரிப்பில் கடுப்பான சாருவோ

“இப்போ நீ சொல்ல போறியா இல்லையா” என்று கேட்க அஸ்வினோ

“எனக்கு பசிக்குது ஜிலேபி.. சோ பஸ்ட் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா?” என்று அவன் டீலிங் பேச பசி என்ற வார்த்தையை கேட்டவுடன் சரி என்ற சொல்ல வாயெடுத்த சாருவை அவளது மனசாட்சி

“சாரு பாவம்னு நினைக்காத அவன் உன்னை டைவர்ட் பண்ண தான் பசிக்குதுனு சாட்டு சொல்லுறான்… ஏமாந்துவிடாதே… முதலில் விஷயத்தை கறந்துக்கிட்டு அதுக்குபிறகு சாப்பாட்டிற்கு ஓகே சொல்லு… இல்லைனா இவன் டாபிக்கை மாற்றி விடுவான். பிறகு உன்னை பற்றிய அந்த பெட் நேக் சீக்ரெட் தெரியாமலே போய்விடும்….சோ உஷாராகிக்கோ சாரு” என்று அவளது மனசாட்சி சொல்ல அதன் படி நடக்க முடிவு செய்த சாரு

“சாப்பாட்டிற்கு ஒரு அவசரமும் இல்லை. நீ முதலில் அந்த பெட் நேமிற்கான ரீசனை சொல்லு… அதன் பின் ஆறஅமர சாப்பிடலாம்..”

“ஏன் ஜிலேபி இப்படி கொடுமை பண்ணுற??? எனக்கு பசிப்பதை விட உனக்கு அதை பற்றி தெரிந்து கொள்வதுதான் முக்கியமா??? உன்னோட ரௌடி பேபி பாவம்ல… முதலில் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா??”

“இப்போ ரீசன் சொல்லாம இங்க இருந்து எழும்பி பாரேன்.அப்போ தெரியும் இந்த சாரு யாருனு…” என்று சாரு எச்சரிக்கை விட அவளது எச்சரிக்கையை பொருட்படுத்தாது அஸ்வின் எழு முயல அவனை இழுத்து அமர்த்தி அவன் தலையில் கொட்டினாள் சாரு…. தன் தலையை தேய்த்தவாறு

“ஏன் ஜிலேபி இப்படி கொட்டுன??? ரொம்ப வலிக்குது மா…. இப்படி இரக்கமே இல்லாம இந்த பேபியை கொட்டிட்ட தானே .. போ உனக்கு ரீசன் சொல்லமாட்டேன் ” என்று அஸ்வின் முறுக்கிக்கொள்ள அவனது பேச்சில் அசராத சாருவோ

“அப்போ நீ மறுபடியும் கொட்டு வாங்க ரெடியாகிட்ட…. சரி உன் ஆசையை ஏன் நான் கெடுக்கனும். இந்தா வச்சிக்கோ.” என்றுவிட்டு அவனை மறுபடியும் அவனை கொட்ட முயல அவளை தடுத்த அஸ்வின்

“ஐயோ என்னை விட்டுரு ஜிலேபி.. இதுக்கு மேல என் மண்டை தாங்காது…. இப்ப உனக்கு ரீசன் தானே வேணும். சொல்லுறேன்..”

“இதை கேட்பதற்கு எவ்வளவு வேலை பார்க்க வேண்டி இருக்கு ” என்றவாறு தன் கையை சுழற்றி காட்டி சிரிக்க அஸ்வின் அவளை முறைத்துவிட்டு கதையை சொல்ல தொடங்கினான்.

“உனக்கு ரப்பன்சல் பிரின்சஸ் ஸ்டோரி தெரியுமா???”

“பெருசா ஏதும் தெரியாது… அவளை ஒரு உயரமான கோட்டையின் உச்சியில் ஒரு விச் சிறை வைத்திருந்ததாகவும் அவளுக்கு அந்த கோட்டையின் உயரத்திற்கு நீளமான கூந்தல் இருந்ததும் தெரியும்..”

“அது மட்டும் இல்லை… அவ சூப்பரா பாட்டும் பாடுவா… அவளோட தனிமையை போக்குவதற்காக அவளது இனிமையான குரலில் பாட்டு பாடுவா…. அவளோட பாட்டு எல்லாருக்கும் கேட்கும்…. ஆனா யாரு பாடுறானு யாருக்கும் தெரியாது.   அவளோட ராஜகுமாரன் அவளோட அந்த பாட்டை கேட்டு தான் அவளை தேடிட்டு வந்து காப்பாற்றி கூட்டிட்டு போவான்”

“அதெல்லாம் சரி… ஆனா எனக்கு எதற்கு அந்த பெயரை வைச்சாங்க???”

“அதானே உனக்கு எதற்கு அந்த பெயரை வைச்சாங்க இந்த பசங்க??” என்று அவள் கேட்ட கேள்வியை அவளிடமே திருப்பி படித்த அஸ்வினை முறைத்தாள் சாரு. மறுபடியும் கொட்டு விழுமோ என்று பயந்த அஸ்வின்

“கூல் ஜிலேபி நானே என்னோட ஏழாவது அறிவை யூஸ் பண்ணி கண்டுபிடிக்கிறேன்” என்றுவிட்டு ஏதோ யோசனை வந்தவனாக சாருவின் நாடியை பிடித்து வலமும் இடமுமாக திருப்பினான். பின்

“ஜிலேபி உனக்கு காலேஜ் டைமில் ஹெயார் லாங்காவா இருந்தது??”

“ஆமா…இப்போ தான் வசதிப்படாதுனு சார்ட்டா கட் பண்ணி விட்டுக்குவேன்.. ஏன் கேட்குற??”

“ஆ மேட்டர் சிக்கி விட்டது…. “

“அந்த மேட்டர் என்ன?”

“அதுவா… என்னைக் கண்டவுடன் நீ எஸ் ஆகின்ற மேட்டர் நம்ம பயலுகளுக்கு தெரிந்திருக்கு… அதானப்பட்டது என்னவென்றால் நான் லாஸ்ட் இயர் அப்படிங்கிறதால பிராக்டிசிற்கு ரொம்ப ரேர் ஆ தான் வருவேன். அப்போ பசங்க இப்படி பஸ்ட் இயர் பொண்ணு நல்லா பாடுது கூட்டிட்டு வாரேன் அண்ணானு போறவங்க நீ கிளாசுக்கு போய்ட்ட அப்படிங்கிற செய்தியோட தான் வருவாங்க.. இப்படி மூன்று தரம் நடந்திருச்சி அதான் பசங்க உனக்கு அப்படி ஒரு பெயரை வச்சிட்டாங்க. வாய்ஸ் இருக்கு ஆனா ஆளைக்காணோம்..” என்று விட்டு அஸ்வின் சிரிக்க

“நான் என்ன பண்ண??? நீ அங்கிருந்த எல்லா கேள்சையும் சிஸ்டர்னு தான் கூப்பிட்டு பேசுவ… எங்க என்னையும் அப்படியே கூப்பிட்டுருவியோனு பயம் அதான் அப்படி ஓடி ஒழிந்தேன்…. உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்குதில்ல??”

“ஓகே கூல் ஜிலேபி… இப்ப சரி நம்ம சாப்பிட்ற வழியை பார்க்கலாமா??”

“ம்.. சரி”என்று சாருவிடம் உத்தரவினை பெற்றுக்கொண்டு உணவினை ஆடர் செய்ய சென்றான். அவன் ஆடர் செய்துவிட்டு வந்த இரண்டு நிமிடங்களில் பேரர் உணவுடன் வந்து அவர்கள் அமர்ந்திருந்த மேசையில் அழகாய் அடுக்கிவிட்டு அந்த காண்டில் ஸ்டேண்டில் இருந்த மெழுகுதிரியையும் மாற்றிவிட்டு அவர்கள் இருவரையும் நோக்கி “ஹெவ் எ நைஸ் டைம் சார் அன்ட் மேம்” என்று இருவரையும் வாழ்த்தி விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்… அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அங்கிருந்த உணவு வகைகளை பார்வையிட்ட சாருவிற்கு ஆச்சர்யம். அவளது ஆச்சரியத்திற்கு காரணம் அங்கிருந்த உணவு வகைகள் அனைத்தும் அவள் மிக விரும்பி உண்பவை..

“ரௌடி பேபி உனக்கு எப்படி எனக்கு இந்த டிஸ் எல்லாம் பிடிக்கும்னு தெரியும்??”

“வாட் எ பிளசன்ட் சப்ரைஸ்… உனக்கும் இந்த டிஸ் எல்லாம் பிடிக்குமா??? எனக்கும் இதெல்லாம் பிடிக்கும். அதான் ஆடர் பண்ணேன்.”

“சும்மா ரீல் சுத்தாத …. உன் முகத்தை பார்த்தாலே நீ ஓவர் ஆக்டிங் பண்றது புரியிது…. சோ உண்மையை சொல்லு… யாரு உனக்கு ஸ்பை வேலை பார்த்தது???” அவளது கேள்வியில் சிரித்த அஸ்வின்..

“ஏன் ஜிலேபி இதை கண்டுபிடிக்க யாராவது ஸ்பை வைத்திருப்பாங்களா???”

“யாரு வைத்திருப்பாங்களோ இல்லையோ நீ வைத்திருப்ப…உன்னை நம்ப முடியாது…சொல்லு யாரு அந்த ஸ்பை…??”

“ஹாஹா…. என்ன ஒரு நம்பிக்கை…அந்த ஸ்பை வேற யாரும் இல்லை உன்னோட வன் என் ஒன்லி உயிர்த்தோழன் சஞ்சய் தான்”

“அவனா???”

“ஆமா அவன் தான்…”

“அவன் தான் அந்த கருப்பாடா?? இது தெரியாம போயிருச்சே எனக்கு….”

“ஜிலேபி நீ அவனை கருப்பாடுனு சொல்வது சரியில்லை… அவன் என்னா கலர்… அவனை போய் கருப்புனு சொன்னா பார்க்குறவங்க உன்னை லூசுனு தான் நினைப்பாங்க… “

“அப்போ அவனை ஆடுனு சொல்றது உனக்கு பிராப்ளம் இல்லை….அந்த கலர் தான் பிராப்ளம்…”

“ஆமா.. ஆமா..”

“இது சஞ்சுவுக்கு தெரிந்தது…..அவன் உன்னை வைத்து சல்சா ஆடிருவான்…”

“ஐயோ ஆமா.. யாருகிட்ட தப்புனாலும் அவன்கிட்ட இருந்த தப்பமுடியாது”

“என்ன ரௌடி பேபி அனுபவம் பேசுதா??”

“ஆமா ஜிலேபி இந்த பிளானை அவன்கிட்ட சொல்லி ஹெல்ப் வாங்குவதற்குள் டிசைன் டிசைனா கேள்வி கேட்டு என்னை கலங்கடிச்சிட்டான்”

“என் ரௌடி பேபியையே கலங்கடிச்சிட்டானா??”

” ஆமா ஜிலேபி ஒரு நிமிஷம் எனக்கு ஏதோ குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்று பதில் சொல்லுற பீலிங் வந்திருச்சி… அவ்வளவு பவரா இருந்திச்சு அவனது ஒவ்வொரு கேள்வியும்… உன்னோட உயிர்த்தோழன்னு ப்ரூவ் பண்ணிட்டான்” என்று அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த சாரு

“அப்படி என்னதான் கேட்டான்??”

“எப்போ,எதுக்கு,எப்படி, எதனால, எங்க இப்படி எ னா வரிசையிலே கேள்வி கேட்டு என்னை திணறடிச்சிட்டான்” என்று அழும் பாவனையில் அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த சாரு

“ஹாஹா அவன் எப்பவும் அப்படி தான். அவனோட விஷயங்களை பற்றி தேடுறானோ இல்லையோ என்னை பற்றிய விஷயங்களில் ரொம்ப கவனமாக இருப்பான். அவனும் நானும் சயில்வுட் பிரண்ட்ஸ்.. ஒரே ஸ்கூலில் தான் படித்தோம். அவனும் நானும் நண்பர்களா இருந்தா கூட அவன் என்னை தன் கூட பிறக்காத சகோதரியா தான் பார்த்துக்குவான்.. என்னோட பாடி கார்ட்னு சொல்லலாம். ஸ்கூல் டைமில் யாரும் என்கிட்ட வந்த வாலாட்ட முடியாது.. அப்படி வந்து சேட்ட பண்ணுறவங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவான்.. இவன் இப்படி பிஹேவ் பண்ணுறத பார்த்து எங்களோட நண்பர்கள் எல்லாம் அவனிடம் நீ சாருவை லவ் பண்ணுறியானு கேட்க அதுக்கு அவன் அவ என்னோட தங்கைடா… அவளை நான் எப்படி  அப்படி நினைப்பேன்னு அவங்களோட சண்டை பிடித்து அவங்களோட பேசுவதையே நிறுத்திட்டான். நான் தான் அவனிடம் கெஞ்சி திரும்ப பேச வைத்தேன். அப்பா இறந்த பின் நான் என்ன பண்ணுறதுனு தெரியாம இருந்தப்போ அவன் தான் ராம் அங்கிளிடம் பேசி எல்லாவற்றையும் சரி பண்ணான். அங்கிளும் அப்பாவும் நண்பர்கள் அப்படிங்கிறதால அங்கிளும் எந்த ஹெசிடேஷனும் இல்லாம பிசினசை அவர் கண்ரோலுக்கு எடுத்துகிட்டாரு… நானும் டிகிரியை வீக் என்டிற்கு ஷிப்ட் பண்ணி அங்கிளோட சேர்ந்து பிசினசில் இன்வால்வ் ஆனேன். சஞ்சு பாரினில் படிச்சிட்டு இருந்ததால அவனால் இங்க வந்து எனக்கு ஹெல்ப்பா இருக்க முடியலை… அதுக்காக அவன் சும்மா இருக்கவில்லை. அவனும் அங்கே பார்ட் டைமில் டிகிரியை கண்டினியூ பண்ணிக்கிட்டே அங்கிளோட பிரண்ட் ஒருத்தரின் கம்பனியில் வர்க் பண்ணான். பிறகு டிகிரி முடிந்தவுடன் இங்க வந்து என்னோட வர்க் பண்ண தொடங்கிட்டான். இது வரை எல்லா வெற்றி தோல்வியிலும் அவனும் ராம் அங்கிளும் தான் கூட இருந்தாங்க…. எனக்கு பிறந்த வீட்டு உறவுனா அது அவங்க மட்டும் தான் என்றைக்கும்..”

“ஓகே ஓகே உன் நண்பன் புராணம் போதும்… எனக்கு பசிக்குது… வா சாப்பிடலாம்…” என்று உணவினை அவளுக்கு பரிமாறத்தொடங்க…

அவளோ சிரித்தவாறு

“என் ரௌடிபேபிக்கு கூட பொறாமைலாம் வருது…சூப்பர்..சூப்பர்” என்று அவனை கேலி செய்ய அவனோ தன் காரியத்திலேயே கவனமாக இருந்தான்…

அவளுக்கு பரிமாறிய பின் அவன் தனக்கு பரிமாறிக்கொண்டான். அவனது செயலில் மகிழ்ந்த சாரு அதற்கு பரிசாக அவனது கன்னத்தில் முத்தமொன்றை வைக்க அஸ்வின் அவளது செயலில் சிரித்தான். அவளது கைகளை அவனது கைகளால் பற்றியவாறு

“என்ன என்னோட ஜிலேபி செம்ம மூடில் இருக்கா போல”

“ஆமா… இல்லையா பின்ன… என்னோட ரௌடி பேபி கூட இந்த அழகான நிலவொளியில்  கான்டில் லைட் டின்னர் சாப்பிடுறதுனா சும்மாவா…. எவ்வளவு சுகமான அனுபவம் இது…. “

“அப்போ உனக்கு இது பிடித்திருக்கா???” “எனக்கு அந்த நிலவொளி , இந்த கார்டன் வியூ, இந்த பிரபோசல் பிளான், ரௌடி பேபியோட சாங், இந்த கான்டல் லைட் டின்னர், சாக்கலேட்…. இப்படி நீ எனக்காக பார்த்து பார்த்து செய்த எல்லாமே பிடிச்சிருக்கு…. அதைவிட இது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த என் ரௌடி பேபியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா இதுல ஒன்று மிஸ்ஸிங்… நீ ஏன் எனக்கு ரிங் குடுக்கவில்லை….??”

“அதுவா ஜிலேபி… கொஞ்சம் பஜட் இடிச்சிருச்சி அதான்..”

“டேய் பொய் சொல்லாத… நீ ரீசன் இல்லாமல் ஏதும் செய்ய மாட்ட… அதுனால மறைக்காமல் என்னானு சொல்லு” என்று சாரு கூற அவளது புத்தி சாதூர்யத்தை என்றும் போல் இன்றும் வியந்தவாறு

” ஹாஹா கண்டுபிடிச்சிட்டியே…. ரிங் கொடுப்பது பாரின் கல்சர்… தாலி தான் நம்ம கல்சர்… அதை அணிவிக்க கூடிய சந்தர்ப்பம் இது இல்லை… அதான் அதை வேண்டாம்னு விட்டுட்டேன்”

“பா… பார்டா என்னோட ரௌடி பேபி கூட கலாச்சாரத்தை பாலோ பண்ணுது…” என்று சிரிக்க அவளது சிரிப்பை ரசித்துக்கொண்டு இருந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாக

“ஐயோ ஜிலேபி பார்த்தியா ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். வா ஒரு செல்பி எடுக்கலாம்.. நம்மளோட வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நாள் இது… இதை நம் மனப்பெட்டகத்தில் சேமித்தாலும் புகைப்படமா இருந்தா அது இன்னும் ஸ்பெஷல்…நீ ஒரு உம்மா குடுத்தா அது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்” என்றவாறு அவளை நோக்கி கண்ணடிக்க அவள் முகம் சிவந்தாள்….

இவ்வாறு செல்லச்சீண்டல்களுடனும் , கவனிப்புக்களுடனும் அந்த இனிய உணவு நிறைவுபெற்றது…

அங்கிருந்து கிளம்பிய அஸ்வின் தன்னுடைய காரில் சாருவை அவளது வீட்டில் இறக்கி விட அவனிடம் விடைப்பெற்று இறங்க முயன்ற சாருவை கைபிடித்து தடுத்த அஸ்வின்…

“ஜிலேபி லவ் யூ சோ மச்” என்று கூறியவாறு அவளது முகத்தை அவனது கைகளில் ஏந்தி முன்னுச்சியில் அவன் முத்தமிட அவளோ ஒரு மோனநிலையில் சிக்குண்டாள்…. அதன் விளைவாக அவளது தலை அவன் மார்பில் சாய்ந்தது.

“ஜிலேபி நீ எப்பவும் இப்படியே என்கூடவே இருக்கனும். எதுக்காகவும் யாருக்காகவும் என்னை விட்டு போகக்கூடாது… அதே மாதிரி நானும் உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன். இன்னைக்கு உன்னோட முகத்தில் தெரிந்த மலர்ச்சி எப்பவும் உன்னை விட்டு போகவிடமாட்டேன்… உனக்குனு யாரும் இல்லைனு நீ இந்த நொடியில் இருந்து பீல் பண்ணக்கூடாது… எல்லாம நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன். இதை நீ எப்பவும் மனசுல வைத்திருக்கனும்…. இது நான் உனக்கு பண்ணித்தருகின்ற பிராமிஸ்.. அதோட நான் எது செய்தாலும் உன்னோட நலனை எப்பவும் கன்சர்ன் பண்ணுவேன். சோ எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும் நீ என் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது புரியிதா??”

“ம்…”

“ஓகோ பாய் லேட்டாச்சி. நீ இறங்கு… பாய் குட் நைட்…லவ் யூ ஜிலேபி.”

“ம்…” என்றுவிட்டு சாரு காரிலிருந்து இறங்கி தன் வீட்டினுள் சென்றாள்… அவளது கால்கள் தான் சென்றதே தவிர மனமோ அஸ்வினிடமே மண்டியிட்டுக்கிடந்தது.

 

Advertisement