Advertisement

 கரை காணா காதலே – 15

 

நகரின் மிக பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச முறையில் சுவாசித்து கொண்டிருந்தான் வேதாந்த்… அந்த அறைக்கு வெளியே மஹதி, இரு கைகளையும் பிசைந்து கொண்டு முகத்தில் ஒரு பதட்டத்துடனும், சிறு நடுக்கத்துடனும் நின்றிருந்தாள்..

ஆம், அவள் தான் அவனை மருத்துவமனையில் சேர்த்தது..

வேதாந்த் மஹதியின் நினைவுகளில் லயித்து இருந்த போது, அவனது கவன குறைவால் எதிரே வந்த லாரியை கவனிக்கவில்லை… அவன் சுதாரிக்க நினைத்த போது நிலைமை கை மீறி இருந்தது…

என்னதான் புதிய வகை வண்டி, அட்வான்ஸ்ட் மாடலாக இருந்தாலும் அவனால் அந்த நேரத்தில் தன்னை காத்துக்கொள்ள முடியவில்லை.. கால்களிலும், தலையின் பின் புறத்திலும் பலமாக அடிபட்டு இருந்தது…

லாரியில் வந்தவருக்கும் சிறு சிறு காயங்கள் தான்…

வேதாந்த், மஹதி இருவரும் ஒரே பகுதியின் அடுத்த அடுத்த தெருவில் வசிப்பதால், இருவரும் பயணிப்பதும் ஒரே வழியில் தான்.. வேதாந்த்திற்கு அடிபட்டதும் சிறிது நிமிடங்களில் மஹதி அவ்வழியாக வந்தாள்..

“என்ன ஒரே கூட்டமா இருக்கு, ஏதோ அக்ஸ்சிடென்ட் போலவே” என்று அவளுக்குள் நினைத்து கொண்டு அக்கூட்டத்தில் நுழைந்து பார்த்தாள்…

பார்த்தவளின் முகத்தில் அதிர்ச்சியே!!!

“சீனியர் “

“இது சீனியர் ஆச்சே ??? அச்சோ யாரை கூப்பிடுவது ??” என்று யோசித்து கொண்டிருந்தாள்…

கூட்டத்தில் இருந்தோரும் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து சொல்லிக்கொண்டிருந்தனர்… மேலும் இருவர் அவனை காரிலிருந்து வெளியே எடுக்க முயற்சித்தனர்… மஹதி அதற்கு மேல் பொறுக்க மாட்டாது வேகமாய் அவன் அருகில் சென்றாள்…

அதற்குள் அவனை வெளியே எடுப்பதற்கும், அவள் சென்று தாங்கி பிடிப்பதற்கும் சரியாய் இருந்தது…அவனின் பாரம் தங்காமல் மடங்கி அமர்ந்துவிட்டாள் மஹதி…

வேதாந்திற்கு கொஞ்சம் கொஞ்சமாய் சுய   உணர்வு போய்க் கொண்டிருந்தது..

“சீனியர் இங்க பாருங்க…. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது பயபடாதீங்க… இப்போ ஹாஸ்பிட்டல் போய்டலாம்” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்…

ஆனால் அவனுக்கோ, அவள் மடியில் தலை சாய்த்து இருப்பதே ஒரு நிம்மதியை கொடுத்திருந்தது…

ஆம், உயிர் பிரிந்தாலும் அவள் மடியில் பிரியட்டுமே!!!!! என்ற எண்ணம் தான்…

இது என்ன வகை காதல்…

கண்டிப்பாய் ஒரு தலை காதல் தான்… இன்னும் யாரிடமும் பகிரவில்லை,,, முக்கியமாக அவளிடமும் சொல்லவில்லை…

அவளிடம் காதலை சொல்ல வேண்டும்… இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்க வேண்டும்…மணம் முடிக்க வேண்டும்… இன்னும் எவ்வளவோ இருக்கிறது ஆனால் சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதே வேதாந்தின் எண்ணம்…

அவள் நினைவில் தான் தனக்கு இப்படி ஆனது என்றாலும், அவள் அடுத்த நொடியே கண் முன் இருக்கிறாள் என்பதை தான் அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை…

“மஹா….”

அவன் அழைத்ததும் மஹதி சுற்றும் முற்றும் தேடினாள்… யாரை அழைக்கிறான்?? என்று..

“உன்னைத்தான் மஹா…” என்றவனின் பார்வை நிலைத்தது அவளின் மதி முகத்தில் தான்…

“சீனியர் என் பேர் மஹதி”…

“தெரியும்…” என்று இமைகளை மூடி திறந்தான்…மேலும் அவனால் பேச முடியவில்லை… அவளை பார்த்துக்கொண்டே மயக்கமடைந்துவிட்டான்..

சரியாய் அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, ஹாஸ்பிட்டல் வரை உடன் வந்து அவனை அட்மிட் செய்த பிறகே அவளுக்கு அசுவசமாகியது…

அதன் பின் ஹாஸ்பிட்டலில் அவனின் விவரங்கள் கேட்ட பின் “தான் இன்னும் யாருக்கும் தெரியபடுத்தவே இல்லை” என்று அவள் மூளை உரைத்தது…

வேகமாய் அவள் பையை தேடினாள்… அன்று அவன் கொடுத்த விசிட்டிங் கார்டு தான் அது…

காலேஜில் அவனை கண்ட பின்பு , “அவங்க கார்டு நமக்கு எதுக்கு, திருப்பி கொடுத்து விடுவோம்” என்ற நினைப்பில் எடுத்து வைத்தது..

ஆனால் அது இந்த மாதிரி இக்கட்டான நிலையில் உதவும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை…

அவனது கார்டில் அவனது ஆபீஸ் நம்பர்க்கு அழைத்து, அவனின் அப்பா நம்பர் வாங்கி விஷயத்தை தெரிவித்தாள்… மகனின் நிலையை கேட்ட குணாவும்,சத்யாவும் அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே வந்திருந்தனர்… சத்யா வரும் போதே பெரும் அழுகுரலுடன் தான் வந்திருந்தார்…

ரிசப்ஷனில் கேட்டு, icu இருக்குமிடம் வந்தவர்கள், கண்ணாடி கதவு வழியே மகனின் நிலையை பார்த்தவர்கள் நொந்து போயினர்… அவனை பார்த்ததும் அடுத்ததாக அவர்கள் பார்வை தேடியது மஹதியை தான்…

ஏனென்றால், போனில் அழைத்து தகவல் சொல்லியது ஒரு பெண் எனவும் என்னவோ , ஏதோ என்று அடித்து பிடித்து வந்தாகிற்று…. இனிமேல் தானே விசாரிக்க வேண்டும்.,.. அங்கே இருந்த சேரில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்றார் சத்யா…

இவளாக தான் இருக்க வேண்டும் என்ற மன உந்துதல் தான்…

“ஏம்மா நீ தான் எங்க பையனுக்கு அடி பட்டுருசுன்னு போன் பண்ணுனியா ??”

“ஆமாம் ஆன்ட்டி நான் தான் பண்ணுனேன்..” என்றவளின் குரலில் வருத்தம் தெரிந்தது..

“என்ன ஆச்சும்மா, எப்படி என் பையனுக்கு இப்படி ஆச்சு ??” வரிசையாய் கேள்வியை அடுக்கி கொண்டிருந்தார் சத்யா…

அவரின் கேள்விகளில் மஹதி சிறிது மிரண்டு  தான் போனாள்..

பின்னே, தெரிந்தவர் என்று உதவி செய்ய போனால், என்ன எது என்று அவளை கேட்டாள் என்ன சொல்லுவாள்… இதற்கு பயந்து கொண்டே தான் நம்மில் பலர் கூட ஒதுங்கி போகிறோம் இது மாதிரியான சந்தர்ப்பங்களில்…

அவளது கலங்கிய முகத்தை கண்ட குணா, சத்யா அருகில் வந்து அங்கிருந்த வாட்டர் ப்யுரிபையரில் தண்ணீர் பிடித்து கொடுத்து சத்யாவை அமர்த்தினார்…

“என் பேர் குணசேகரன் மா, நான் தான் வேதாந்தோட அப்பா..” என்று மஹதியிடம் தன்னை அறிமுக படுத்திக் கொண்டார்…

“தெரியும் அங்கிள்…”

“எப்படிமா இந்த அக்ஸ்சிடேன்ட் ஆச்சு ???”

“தெரியலை அங்கிள், நான் காலேஜ்ல இருந்து வரும் போது கூட்டமா இருந்துச்சு அதான் என்னன்னு பாக்கலாம்ன்னு பாத்தேன், பாத்தா இவர்… எங்க காலேஜ் சீனியர், ப்ரெசிடென்ட் சோ அப்படியே விட்டுட்டு வர மனசில்லை… அதான் நானே ஹாஸ்பிடல் வரை கூடவே வந்து அட்மிட் பண்ணிட்டு உங்களுக்கு இன்போர்ம் பண்ணுனேன் அங்கிள் “ என்று தனக்கு தெரிந்தவரை குணாவிடம் சொன்னாள் மஹதி…

“என் குலம் காக்க வந்த தெய்வம்மா நீ..” என்று சத்யா ஓடி வந்து மஹதியின் கைகளை பிடித்து கண்ணீர் வடித்தார்…

“ஹய்யோ அப்படி  எல்லாம் இல்ல ஆன்ட்டி , ப்ளீஸ் நீங்க எப்படி எல்லாம் பேசாதீங்க” என்று சங்கடத்தில் நெளிந்தாள்…

ஆனால் இன்று தெய்வம் என்று சொன்ன சத்யா கொலைகாரி என்று அதே வாயாலேயே சொல்ல போகிறார் என்று அவர் அறியவில்லை….

இது தான் விதியின் விளையாட்டு என்பதோ!!!!

ஆனால் நடப்பவை எல்லாம் முன்னமே தெரிந்தால், வாழ்கையின் சுவாரசியம் குறைந்து விடுமே!!!!

இதற்காக சொல்லி வைத்தவை தான் விதி….

வேதாந்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அந்த டாக்டர் வெளியே வந்தார்..

“என்ன ஆச்சு டாக்டர் “ பதட்டத்துடனே கேட்டார் குணா…

“கடவுள் கிருபைன்னு தான் சொல்லணும், உங்க பையனுக்கு தலைல கொஞ்சம் அடி… இன்னும் கொஞ்ச பலமா அடிசுருந்தா கூட மூளைக்கு போகிற நரப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் பட் வெளி அடி தான்..அதுவும் ரத்தப்போக்கு ஓரளவு கண்ட்ரோல் பண்ணனுதுனால பரவாயில்லை….அண்ட் கால்ல தான் பயங்கர அடி… முட்டிக்கு கிழே ஆப்ரேஷன் பண்ணனும், ப்ளேட் செட் பண்ணனும் சோ பீ ரெடி பார் தட் ஆப்ரேஷன்… ஆப்ரேஷனுக்கு அப்பறம் ஒரு  ஆறு மாசம் புல் ரெஸ்ட்ல தான் இருக்கணும்…இட்ஸ் எ ரிஸ்கி ஆப்ரேஷன்” என்று நிலம் அதிராமல் ஒரு குண்டை போட்டு விட்டார்…

இதை கேட்டதும் சத்யா தான் ரொம்பவும் பயந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார்…

“என் முந்தாணியை பிடிச்சுட்டு சுத்திட்டு இருக்க பையனை இப்படி  ஆறு மாசம் நடக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களே” என்று சிறிது சத்தமாகவே அழ ஆரம்பித்திருந்தார்…

குணவோ டாக்டரிடம் பேசிக்கொண்டே அவர் பின்னாடியே சென்று விட்டார்..

மஹதி தான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள், கண் முன் அடிபட்டது, ஹாஸ்பிடலில் சேர்த்து முதலுதவி கொடுத்து, அவன் வீட்டிற்கும் தகவல் சொல்லியாகிற்று, இன்னும் என்ன நாம கிளம்ப வேண்டியது தான் என்று நினைத்து கொண்டே  சத்யா பார்த்தவள் அவர் கதறி அழுது கொண்டிருப்பதை பார்த்தவள் அவரிடத்தில் விரைந்தாள்…

“ஆன்ட்டி..” என்று அவர் தோள் தொட, சத்யா அப்படியே மயங்கி சரிந்தார்…

உடனே அருகில் இருந்த நர்சை அழைத்து, அவருக்கு சிகிச்சை செய்து முடிக்க குணா வந்து விட்டார்…

“ஒண்ணும் இல்ல அங்கிள், ஜஸ்ட் மயக்கம் தான்..” அவர் கேட்காமலேயே அவருக்கு பதில் கூறிய மஹதியை அவருக்கு பிடித்து தான் போனது…

மெல்ல அவள் அருகில் வந்தவர் “ரொம்ப நன்றிமா, நீ மட்டும் அவனை சேர்க்காம இருந்திருந்தா அதிக ரத்த போக்காகி உயிருக்கே ஆபத்தா ஆகி இருக்கும்ன்னு டாக்டர் சொன்னங்கமா…இப்போ இவளையும் நான் வர்ற வரை கூடவே இருந்திருக்க…இதுக்கு எல்லாம் ரொம்ப நன்றிமா..” என்று கையெடுத்து கும்பிட போனவரை வேகமாய் தடுத்தாள் மஹதி….

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க அங்கிள், நீங்க பெரியவங்க உங்க ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் “ சிரித்தபடியே சொன்ன மஹதியை தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார் குணா…

“ஓகே அங்கிள் நான் இன்னும் வீட்ல கூட சொல்லல..சோ நான் கெளம்பறேன், நீங்க ஆன்ட்டியையும், சீனியர் சாரையும் பாத்துக்கோங்க..” என்றவாறே கிளம்ப தயாரானாள்…

“அச்சச்சோ பாரேன் நான் இருந்த டென்ஷன்ல உன்னை கவனிக்க மறந்துட்டேன்மா, உன் வீடு எங்கே ?? நான் என் டிரைவரை அனுப்புறேன் அவர் உன்னை ட்ரோப் பண்ணிடுவாருமா, அப்படியே வீட்லயும் சொல்லிட்டு வர சொல்லிடுறேன்..” என்று சிறிது வேகமாய் சொன்னார் குணா.,

“இட்ஸ் ஓகே அங்கிள், நான் வண்டில தான் வந்தேன், நான் போய்டுவேன் நீங்க இவங்களை கவனிச்சுக்கோங்க அங்கிள்….போய்ட்டு வரேன்…” என்று வேகமாய் கிளம்பினாள் மஹதி…

வீட்டிற்கு வந்தவள், கமலாவதியிடமும், தமிழிடமும் நடந்ததை சொன்னவள்… நேராக ரூமிற்கு சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தவள் தமிழ் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு,  சோபாவில் அமர்ந்திருந்த கமலாவ்தியின் மடியில் படுத்து கொண்டாள் சலுகையாக….!!!!

கமலாவதியும், தமிழும் தொழில் நிமித்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்….

மஹதிக்கு ஒரே சிந்தனை தான்….

“அவனை தாங்கி பிடிக்கும் போது அவன் ஏன் நம்மளை மஹான்னு கூப்பிட்டான்..”

“மடியில் படுத்து இருக்கும் போது அவன் பார்வை சரி இல்லையே….அன்னிக்கு பார்த்த பார்வைக்கும் இன்னிக்கும் நெறையவே வித்தியாசமா இருந்ததே ???? என்னவா இருக்கும்…”

இளவயதில் எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு உள்ளுணர்ச்சி இவளுக்கும் இருந்தே…அதே போல ஒரு ஆணின் சாதாரண பார்வைக்கும், வேறு விதமான பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதவள் அல்ல மஹதி….

அவர்கள் கம்பெனியில், வெளியிடங்களில் என எல்லா தரப்பு ஆண்களின் பார்வைகளை எதிர் கொண்டவள் தானே….

நிமிர்ந்த பார்வை என்று நின்று பேசுவாள்..

பார்வைகள் தவறானவை என்றாள் அவ்விடம் நிற்காமல் ஒதுங்கி விடுவாள்….
ஆனால் வேதாந்தின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை இவள் உணரவே இல்லையே!!

பகிரப்படாத காதலில் இது ஒரு தொல்லை தான்…

ஏதேதோ யோசித்தவள் எப்படி உறங்கினாள் என்றே தெரியவில்லை…

ஆதவன் நிலவு பெண்ணை வழி அனுப்பிக் கொண்டிருந்தான்…

எப்போதும் போல் கண் விளித்தவளுக்கு, நேற்று நடந்தது நினைவு வர சிறிது நேரம் பிடித்தது..

“எப்படி ரூம்க்கு வந்தேன், ஒரு வேளை அம்மா கூட்டிட்டு வந்து இருப்பாங்க..” என்று தனக்குள்ளாகவே பேசியவள், கல்லூரிக்கு கிளம்ப தயரகினாள்..

கல்லூரி வரும் வழியிலேயே, நேற்று அக்ஸ்சிடேன்ட் நடந்த இடத்திற்கு வரவும் மனம் தானாய் வேதாந்த் நினைவிற்கு சென்றது….

கூடவே அவனது புரியாத பார்வையும்…. (உனக்கு தான் புரியலை… எங்களுக்கு புரிஞ்சது )

யோசித்து கொண்டே வந்தவள், ஹாஸ்பிடல் போய் பாக்க முடியாது… சரி அவங்க ப்ரிண்ட்ஸ்க்கு தெரிஞ்சு இருக்குமே….அவங்க கிட்டே கேட்டுக்கலாம்..” என்று விட்டுவிட்டாள்…

தான் தலையிலேயே தான் மண்ணை வாரி தூற்றப்போவது தெரியாமல்!!!!

அவள் கல்லூரியில்  நுழைந்ததுமே, கல்லூரி முழுவது அவனுக்கு அக்ஸ்சிடேன்ட் ஆனா பேச்சு தான்…

“ஹே வந்துட்டியா ?? மதி உனக்கு தெரியுமா நம்ம வேதாக்கு அக்ஸ்சிடேன்ட்டாம், நேத்து தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க… சர்ஜெரி கூட முடிஞ்சதாம்..நம்ம காலேஜ் பொண்ணு தான் அட்மிட் பண்ணி இருக்காங்களாம், பட் யாருன்னு தெரியலை…தெரிஞ்ச போய் ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்..”  என்று நிமி மூச்சு விடமால் பேசிக்கொண்டே இருந்தாள்…

“ஹோ நேத்து டாக்டர் சொன்ன சர்ஜெரி முடிஞ்சுருச்சு போலவே….அங்கிள் நாம தான் சொல்லாம காலேஜ் பொண்ணுன்னு மட்டும் சொல்லி இருக்காரே…பெரியவங்க பண்ணினா எதாவது அர்த்தம் இருக்கும்” என்று நினைத்தாள்…

அவள் நினைத்தது போலவே குணா அவ்வாறு செய்தததில் ஒரு அர்த்தம் இருந்தது என்னவோ உண்மை தான்…

ஏனென்றால் பெரிய அக்ஸ்சிடேன்ட் போலீஸ் கேஸ் எடுக்கும் அளவுக்கு ஆகி விட்டது, அதனால்  யார் பக்கத்தில இருந்தாங்க, யார் ஹாஸ்பிடல்ல இருந்தாங்கன்னு போலீஸ் விசாரணை போது தேவையில்லாத கேள்விகள் வரும்… உதவி செய்த அவளுக்கு ஏன் வீண் பிரச்னை என்று தான் குணா சொல்லவில்லை…

அதிலும் அவன் பெண் பிள்ளை வேறு…விசாரணை அது இது என்று வந்துவிட்டால் என்ன செய்வது…. உதவி செய்தவளுக்கு எப்படி தொந்தரவு நேர விடுவதாம்???

மஹதி  வேதாந்தை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்து கொண்டிருந்தாள்…

அவனின் பார்வை என்னவோ செய்திருந்தது….அதற்க்கு விடை கிடைக்காமல் அவனை மறுபடியும் அவளால் பார்க்க முடியாது என தோன்றியது…

அதற்கு தானாய் ஒரு வழி கிடைத்தது…

லஞ்ச் பிரேக் டைமில் கேண்டீன் நோக்கி சென்று கொண்டிருந்தனர் மஹதியும், நிமியும்…

“சீனியர்க்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே மதி… ஈவ்னிங் நாம போய் பாத்துட்டு வரலாமா ???” மஹதியிடம் கேட்டாள் நிமி…

“எப்படி போய் பாக்க முடியும்???? எந்த ஹாஸ்பிடல் எங்க இருக்குனு தெரியாம எப்படி போய் பாக்குறதாம்????”

கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து மிக நெருக்கமான நட்பு இருக்கிறது நிமிஷாவுக்கும், மஹதிக்கும்…

ஆனால், அவ்வளவு நெருங்கிய நட்பிடமே வேதாந்தை காப்பாற்றியதை மறைத்தாள்….

ஏன் ???

எதற்காக ??

இது மஹதி அவளிடமே கேட்டுக்கொண்ட கேள்வி…..

பதில் தான் தெரியவில்லை…

காரணம் என்னவோ ஒன்று தான்… அவனின் பார்வை பரிமாற்றமும், செல்ல அழைப்புமே!!!!!

அவனின் பார்வை அவளை சிந்தை விலக வைத்திருந்தது…மனதையும் தாண்டி ஊடுருவி இருக்கிறது….

ஆக மொத்தத்தில் என்னவோ செய்திருக்கிறது…..செய்கின்றது…..செய்யும்!!!!

இதை யோசித்துக் கொண்டே வந்தவளுக்கு, அங்கே சஞ்சீவும், பிரபாவும் பேசிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டது…

உடனே வழி கிடைத்து விட்டது.. .நேராய் அவர்கள் இருக்குமிடம் விரைந்தாள்…

“ஹே மதி எங்க போற… சொல்லிட்டு போடி…” பின்னாலே நிமியும் அவளை தொடர்ந்தாள்….

அவள் அவர்களை சென்றடைந்ததும் தான் அங்கே சஞ்சீவையும், பிரபாவையும் கவனித்தாள் நிமிஷா…

மஹதியை கண்ட சஞ்சையோ ரெக்கை இல்லாமல் பறந்தான்…. பின்னே அவள் பின்னே தெரியாமல் சுற்றி கொண்டிருப்பவன்… அவளே இவனை தேடி வந்திருக்கிறாள் என்றால் பறக்கத்தானே செய்வான்!!!!!!!!!

இமை சிமிட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்…

அதில் பிரபாவை கண்டதும் அவள் முகத்தில் கடுமை சொல்லாமல் கொள்ளாமல் ஏறியது…முகத்தை சுருக்கினால்…

இதை பிரபாவும் கண்டு கொண்டான்…கண்டவன் எதையோ முணுமுணுத்தான்…அவர்கள் அறியா வண்ணம்…

“சீனியர் இப்போ உங்க பிரண்ட்க்கு எப்படி இருக்கு… காலேஜ் புல்லா இதே பேச்சு தான்…அதான் உங்க கிட்டே கேட்டு பார்க்கலாம்ன்னு வந்தோம்..” என்றாள் மஹதி..

அவளின் குரலில் தான் கலைந்தான் சஞ்சீவ்…

“அஹான் ஆமாம் மதி, கொஞ்சம் பலமான அடி, சர்ஜெரி பண்ணி இருக்காங்க இவ்நிங் போய் பாக்கணும்….நம்ம காலேஜ் கேர்ள் தான் அட்மிட் பண்ணி இருக்காங்க, பட் யாருன்னு தெரியலை…வேதாந்த்க்கு இன்னும் நினைவு வரலை சோ வந்ததும் கேக்கணும்…” என்றான் சஞ்சீவ்…

அவனது கடைசி வரிகளில் சிறிது அதிர்ந்தாள் மஹதி….

நான் தான் என்று உண்மையை சொல்லி விடுவனோ ???? அப்படி சொல்லி விட்டால், இவனிடம் விசாரித்ததை எப்படி எடுத்து கொல்லுவான் ??

சிறிது நேரத்தில் தலை சுத்துவது போலவே இருந்தது… இவள் யோசிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிமி, சஞ்சீவி ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தாள்.. அவருக்கு என்ன ஆச்சு, எப்படி, எங்க இருக்காங்க, என்ன சர்ஜெரி, எப்படி பண்ணி இருக்காங்க??

அனைத்தும் இடைவிடாமல் கேட்டு கொண்டிருந்தாள்.. அவன் பதில் சொல்வதற்குள் ஒரு வழி ஆகி விட்டான் என்றே சொல்ல வேண்டும்…

“இங்க பாரு அதான் சொல்லிட்டான்ல,எந்த ஹாஸ்பிட்டல்ன்னு போ போய் பாத்துக்கோ..அதை விட்டுட்டு இங்க வந்து நை நை ன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காதே…இது வேற யார இருக்க முடியும் பிரபா தான்…

அவனின் சீண்டலில் சிலிர்த்தவள், பேச வாய் திறப்பதற்குள் மஹதி அவளின் கைகளை பிடித்து அழுத்தி, “ நாங்க கெளம்பறோம் , டைம் ஆச்சு..” என்று அடிச்சு பிடித்து கிளம்பினாள்…

இன்னும் இருந்தால் நிமிஷா பேச ஆரம்பித்து விட்டாள் என்ன செய்வது!!!!

அவள் செல்லும் வழியையே விழி விலகமால் பார்த்து கொண்டிருந்தான் சஞ்சீவ்….

நாட்கள் செல்ல செல்ல வேதாந்தை பற்றி அறிந்து கொள்ள சஞ்சீவிடம் அடிக்கடி பேசலானால் மஹதி..

அது கொண்டு செல்லும் முடிவை அறியாமல்…

 

Advertisement