ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது……” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க,
அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள்.
அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல வேலை கொஞ்ச நேரம் முன்னாடி நடந்த எதையும் அவ பார்க்கல’ என்று நினைத்து நிம்மதி ஆகி திரும்ப,
ஹாசி அவன் வைத்த குங்குமத்துடன் நின்றிருந்தாள். அதை கண்டு “ஷிட்……” என்று நெற்றியில் கை வைத்தவன், அர்ச்சனா திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்வதை பார்த்து “ஹாசி உன்கிட்ட நான் அப்புறம் பேசறேன்” என்றுவிட்டு ஓடிவிட்டான்.
ஹாசியோ சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் திகைத்து போய் நின்றிருந்தாள். பின் என்ன நினைத்தாளோ திடீரென்று “யாஹு……” என்று துள்ளி குதித்து துவங்கினாள்.
“லவ் யூ சிக்கி….. லவ் யூ சோ மச்….. “ என்று சிரிப்புடன் சொன்னவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு. பூரிப்பாக ஆணவன் வைத்த குங்குமத்தை தொட்டு பார்த்தாள்.
பல ஆண்டு கனவு நினைவான சந்தோஷம் அவள் முகத்தை பிரகாசமாக்க தன்னவன் மனதில் தானும் இருக்கிறோம். இவ்வளவு நாளும் காதலை சொல்ல முடியாமல் திணறி இன்று புது முறையில் தன் காதலை சொல்லிவிட்டான் என்று நினைத்தவளுக்கு வெட்க சிரிப்பு வந்தது.
சிக்கி உனக்காக நான் காத்திட்டு இருந்த மாதிரி நீயும் எனக்காக காத்திருந்தன்னு நினைக்கும்போதே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
முதல்ல இந்த விஷயத்தை அந்த ரஞ்சன்கிட்ட சொல்லணும். நீ என்னை மறந்திருப்பன்னு சொல்லி என்னெல்லாம் பேசுனான் தெரியுமா. லூசு பய அவனுக்கு எங்க தெரிய போகுது நம்மோட காதலைப்பத்தி’ என்று தனக்குள் பேசி கொண்டவள்.
ஆனாலும் நம்ம ஆளு ப்ரோபோசலே டிப்ரண்ட்டாதான் இருக்கு. எனக்கு இது புடிச்சுருக்கு. ஐ அம் இம்ப்ரஸ்ட்’ என்று சொல்லி கொண்டவள் பின் நினைவு வந்தவளாக ‘அச்சோ….அவரு போய் ரொம்ப நேரம் ஆச்சு, நான் பாட்டுக்கு இங்க நின்னு குதிச்சுட்டு இருக்கேன்.
அங்க போயி அவரு என்ன பண்றாருன்னு பார்ப்போம்’ என்று நினைத்தவள் அவர்கள் குடும்பம் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.
ஹாசி சென்று வெகு நேரம் ஆகவும் மித்து அவளை தேடி வந்தாள்.
கனவு உலகத்தில் இருப்பது போல் ஹாசி வர, அவளை பார்த்து குழம்பி போன மித்து பின் அவள் நெற்றியில் வைத்திருக்கும் குங்குமத்தை கண்டு அதிர்ந்து வேகமாக அவளிடம் சென்றாள்.
ஹாசி எதிரில் வருபவளை கவனிக்காமல் செல்ல, தன்னை கண்டு கொள்ளாமல் செல்பவளை கண்டு “பே…. வென்று” விழித்தவள் “ மச்சி….. ஹே…. மச்சிநில்லுடி” என்று அவளை இழுத்து பிடித்து நிறுத்த,
பேந்த பேந்த விழித்தவள், எதிரில் இருப்பவளை கண்டு “ஹே மித்து நீ இங்க என்ன பண்ணுற” என்று கேட்க,
அவளோ இடுப்பில் கை வைத்து முறைத்து “என்னடி ஆச்சு உனக்கு நீபாட்டுக்கு போற. ஆமா….இது என்ன கோலம் இது யாரு பண்ணுன வேலை.
அங்க குங்குமம் வச்சா என்ன அர்த்தம் தெரியுமா? யாருடி வச்சது? வேற யாரும் வச்சாங்களா இல்லை நீயே……”
“ஏ…. ச்சி….. போடி….. நான் எதுக்கு வச்சிக்க போறேன். இது என் புருஷன் வச்சது”
“எதே….. புருஷனா? என்னடி சொல்ற?”
“ஆமா. இங்க பொட்டு வச்சா புருஷன்னுதானே அர்த்தம். அப்போ என் புருஷன்தான் வச்சான்”
“என்னடி உளறுற. அந்த காலம் மாதிரி பேசிட்டு. எவன் அவன்னு என்கிட்ட சொல்லு….”
“சொன்னா……என்ன பண்ணுவ”
“நான் ஒன்னும் பண்ண மாட்டேன். அந்த அளவுக்கு நான் ஒர்த்தும் இல்ல. அண்ணாகிட்ட சொல்லி ரெண்டு தட்டு தட்ட சொல்றேன்”.
“யாருகிட்ட சொல்லி?”
“என் அண்ணாகிட்ட சொல்லிதான். என்ன? அவன் ஆளு பார்க்க பழம் மாதிரி இருக்கான்னு நினைக்குறியா. ஜிம்க்கு எல்லாம் போறான்டி. கோபம் வந்தா அடி வெளுத்துடுவான். சும்மா பயப்படாம சொல்லு”.
“அவரே அவரை எப்படிடி அடிச்சுக்க முடியும்” என்று கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கேட்க,
முதலில் புரியாமல் விழித்தவள் பின் புரிந்து கண்களை அகல விரித்து வாயை பிளக்க,
தன் கரம் கொண்டு அவள் வாயை மூடியவள் “பார்த்துடி கொசு உள்ள போயிட போகுது. வா போகலாம். எல்லாரும் தேட போறாங்க” என்று அவள் கையை பிடித்து இழுத்து செல்ல,
அவள் இழுத்த இழுப்பிற்கு சென்ற மித்து “அடியேய் என்னடி சொல்ற. ஹர்ஷாவா பொட்டு வச்சான். ஆனா….. ஏன் இப்போ….?
“ஏன்னா இப்போதான் அவருக்கு லவ்வ சொல்ல தைரியம் வந்திருக்கு”
“ஹைய்யோ…. எனக்கு தலை எல்லாம் சுத்துதே”
“அது ஒரு பக்கம் சுத்தட்டும் நீ அங்க இருக்கவங்ககிட்ட எதையும் சொல்லாம இரு போதும். நேரம் வரும்போது நாங்களே சொல்லிக்கறோம்”.
“நேரம் வரும்போது……”
“ஆமா…”
“நான் ஒன்னும் சொல்ல வேண்டி இருக்காது. உன்னை பார்த்தாலே கண்டுபிடிச்சுருவாங்க”
“எப்படி?…. எப்படி கண்டுபிடிப்பாங்க”.
“ம்ம்…. உன் நெத்தில இருக்க பொட்ட வச்சுதான். அதை அழிடி முதல்ல” என்க,
உடனே முகம் வாடி போனவள் “ச்ச….. முதல் முதல்ல என் சிக்கி வச்ச பொட்டு அதை போய் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா அழிக்க வேண்டியதா இருக்கே” என்று அவள் வருந்த,
“அடேய்….. இது எல்லாம் கடவுளுக்கே அடுக்காதுடா. பொட்டே திருட்டுத்தனமாதான்டா வச்சிங்க” என்று மித்து சொல்ல,
அவளை முறைத்தவள் “என்னடி ஓவரா பேசற நான் உன் நாத்தனார் ஆக்கும். ஒழுங்கா மரியாதை குடு. இல்ல நாத்தனார் கொடுமையை ஆரம்பிச்சுடுவேன்”.
“ம்கூம்….. இங்க மட்டும் என்ன வாழுதாம் நாங்களும் நாத்தனார்தான்” என்றவளை முறைத்த ஹாசி “எல்லாம் என் நேரம்”என்றுவிட்டு,
“சரி…. சரி….. அதைவிடு. இந்த அழகான நாள எப்போவும் நான் நியாபகம் வச்சிக்கணும் அதுக்காக இந்த பொட்டோட என்னை ஒரு போட்டோ எடு” என்று தன் போனை குடுத்தவளை கண்டு சிரித்த மித்துவும் “எப்படியோ நல்லா இருந்தா சரிதான்” என்றுவிட்டு போட்டோவை எடுக்க ஆரம்பித்தாள்.
அங்கு ஹர்ஷா அர்ச்சனா பின்னால் சென்றவன் “அச்சு இன்னைக்கு கோவிலுக்கு வரேன்னு சொல்லவே இல்லையே” என்க,
அவளோ “ஷு….. அப்பா பாப்பாரு. நார்மலா சாமி கும்பிடற மாதிரி நில்லு” என்றவுடன் அவனும் அதே போல் நிற்க,
ஐயரிடம் ஜாதகத்தை எடுத்து தர சொன்னவள், அவர் சென்றவுடன் “அக்காக்கு மாப்பிள்ளை ஜாதகம் ஒன்னு வந்திருந்துச்சு நல்ல இடம் . இது அமைஞ்சா பரவால்லன்னு அப்பா சொல்லிட்டு இருந்தார்.
நீயும்தான் கோவிலுக்கு போறேன்னு சொன்ன, எந்த கோவிலுன்னு சொன்னியா? சொல்லாமதானே வந்த.“
“சரி அதை விடு. இந்த சேரில செம்மையா இருக்க கல்யாண பொண்ணு மாதிரி. இப்போவே அங்க மரத்துல இருக்க மஞ்ச கயிறை கழட்டி உனக்கு கட்டவா” என்றவனை முறைத்தவள் “கட்டுவ…. கட்டுவ. ஆமா யார் அந்த பொண்ணு. அவகூட தனியா நின்னு என்ன பேச்சு உனக்கு”
‘நல்ல வேலை நாங்க நின்னுட்டு இருந்ததை மட்டும் பார்த்தாள் ….’ என்று மனதில் நினைத்தவன் “ஹிஹிஹி….. அவ தான் அச்சு அவ”
“அவதான் என்னோட சின்ன வயசு பிரண்ட். பாரின்ல இருந்து வந்துருக்கான்னு சொன்னனே”
“ஓஓ……ஆனா பார்க்க அப்படி தெரியலையே”
“இல்ல. அதைதான் நான் காலைல சொன்னேன். பார்க்க எங்க ஊரு பொண்ணு போல இருக்கன்னு”
“அதை எதுக்கு நீ சொன்ன. எதுக்கு நீ அவளை பார்த்த” என்று கேட்டு கொண்டிருக்கும்போதே ஐயர் ஜாதக நோட்டை கொடுக்க அதை வாங்கியவள் நடக்க துவங்கினாள்.
“நீ நினைக்கற மாதிரி இல்ல அச்சு. சும்மா பிரண்ட்லியாதான்.”
“ப்ரண்ட்லியானாலும் இனி இருக்க கூடாது. சரி போதும். நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம். பின்னாடி வராத”
“நான் வேணா என்னோட ஜாதகத்தை தரவா”
“ஏன் என் அக்காவை கட்டிக்கற பிளான் இருக்கா”
“ச்சி…ச்சி…. நான் உனக்கு பார்க்க சொன்னேன்”
“எனக்கு பார்க்கும்போது தா போதும். பாய்” என்றுவிட்டு அவள் ஓடிவிட,
ஹர்ஷாவோ சிரித்து கொண்டு அவள் போவதை பார்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மித்து ‘ம்ம்….. ரெண்டும் தனியா நின்னு சிரிச்சுட்டு இருக்குங்க. அப்போ ஹாசி சொன்னது உண்மைதான் போல’ என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.,
பின் ஹர்ஷா அருகில் சென்றவள் “அண்ணா என்ன தனியா நின்னு சிரிச்சுட்டு இருக்க” என்று கேட்க,
உடனே நாக்கை கடித்து கொண்டவன் “ஒன்னும் இல்லையே…சும்மா ரீல்ஸ் பார்த்துட்டு சிரிச்சேன்”.
“ஹோ…. இப்போ எல்லாம் வானத்துல ரீல்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்களா எனக்கு இது தெரியாம போச்சே” என்க,
“வானத்துலயே லூசு மாதிரி உளராம வா” என்றவன் முன்னால் சென்றுவிட, அவளோ குறும்பு சிரிப்புடன் “நான் லூசா இல்லை வானத்தை பார்த்து சிரிச்சுட்டு இருந்த நீ லூசா” என்றவள் பேச்சு காதில் விழாதது போல் ஹர்ஷா சென்றுவிட,
மித்துவோ “ஏங்க பிரதர் நான் சொன்னது உங்களுக்கு கேட்கல அப்படிதானே” எப்படியோ என் ரூட் கிளியர் ஆச்சு. இதை முதல்ல நம்ம ஆளுகிட்ட சொல்லணும். வீட்டுக்கு போய் கால் பண்ணலாம் என்று நினைத்து கொண்டாள்.
ஹார்ஷாவிற்கு ஹாசியை பார்த்தபின்தான் சற்று முன் நடந்த நிகழ்வுகள் நியாபகம் வர, அவள் நெற்றியை பார்த்தான் அங்கிருந்த குங்குமம் அழிக்கபட்டு இருந்தது.
பாரினில் வளர்ந்த பெண் இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள் என்று நினைத்தவன் இருந்தாலும் நாம ஒரு சாரி கேட்டிரலாம் என்று ஹாசி முகத்தை பார்க்க, அவளோ அவனை பார்த்து சிரித்து வைத்தாள் .
‘கோபம்லாம் ஒன்னும் இல்ல போல, அதை சாதாரணமாதான் எடுத்துகிட்டா, நல்ல பொண்ணு’ என்று நினைத்தவன் பின் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.
வீட்டிற்கு சென்றவுடன் ஹாசி முதலில் போன் செய்தது நிரஞ்சனுக்குதான். அவளின் முதல் நண்பன் அவன்தான். சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் அவள் முதலில் நாடுவது அண்ணனைதான்.
அந்த பக்கம் போன் எடுக்கப்பட்ட உடன் “அண்ணா……நான் ஜெயிச்சுட்டேன். ஐ அம் சோ ஹேப்பி……” என்றவள் கத்த,
காதில் இருந்த போனை விலக்கி, காதை நன்றாக தேய்த்து கொண்டவன் “ஹப்பா…. மெதுவா பேசுடி. காது அடைக்குது. என்ன விஷயம்? எதுக்கு கத்துற?”
“டேய் அண்ணா. என் ஆளு எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டான். அதுவும் எப்படி பண்ணுனான் தெரியுமா. ஐ அம் இம்ப்ரெஸ்ட். செம்ம நான் யோசிக்கவே இல்ல.
எதிர்பாராம டக்குன்னு. ஒரு நிமிஷம் நான் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்னா பார்த்துக்கோ. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. இதை உன்கிட்ட உடனே சொல்லணும்னு ஆசையா வந்தா…. நீ என்னடான்னா கத்துறேன்னு சொல்ற. போடா தத்தி”.
“ச்ச…. அப்படி இல்லடா ஹாசி. திடீர்னு காதுக்குள்ள வந்து நீ கத்துன மாதிரியே ஒரு பீல் அதான் அப்படி கேட்டுட்டேன்.
சரி அதைவிடு. அந்த பழம் எப்படி உனக்கு ப்ரொபோஸ் செஞ்சான்” என்றவன் கேட்க,
“டேய் அண்ணா. அவருக்கும் உனக்கும் ஆகாதுதான் அதுக்காக இப்போவும் அதே மாதிரி அவரை நீ கூப்பிட கூடாது. ஒழுங்கா மச்சான்னு கூப்பிடு இல்லை. பேர் சொல்லி கூப்பிடு அது என்ன பழம்.
உன்கிட்ட இருந்துதான் அந்த மித்து லூசுக்கும் ஒட்டிச்சா. சொந்த அண்ணன்னு கூட பார்க்காம எப்படி சொல்றா”
“டேய்…. டேய் அது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல அவன் எப்படி ப்ரொபோஸ் பண்ணுனான்னு சொல்லு” என்றபின் கோவிலில் நடந்த அனைத்தையும் சொன்னவள் “என்னோட காதல், காத்திருப்பு எதுவுமே வீண் போகலண்ணா” என்றவள் சொல்ல,
அண்ணனாக நிரஞ்சனுக்குமே மிகுந்த மகிழ்ச்சிதான். பின்னே தங்கையின் காதலை அறிந்தவன் ஆயிற்றே.
“ரொம்ப சந்தோஷம்டா. அடுத்து என்ன கல்யாணம்தானே. நான் வேணா அப்பா, அம்மாகிட்ட பேசவா”
“டேய் அண்ணா இது பக்கத்து இலைக்கு பாயசம் மாதிரி தெரியுது. உனக்கு வேணும்னா நீ கேளுடா. என்னை ஏன் கோத்துவிடற.
நான் கொஞ்சநாள் ஜாலியா ஹேப்பியா சுத்திட்டு அப்புறம்….” என்று தன் மனதில் உள்ளதை எல்லாம் அண்ணனிடம் சொல்ல, அவனும் பொறுமையாக அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான்.
“சரி ப்ரோ ரொம்ப பேசி மொக்க போட்டுட்டேன். இப்போ நீ போய் ரெஸ்ட் எடு. நான் அப்புறமா பேசறேன்” என்றவள் அப்படியே பெட்டில் படுத்து தன்னவனை நினைத்து கனவு காண துவங்கிவிட்டாள்.
மற்றொரு அறையில் ஹர்ஷா தன் போனில் இருக்கும் அர்ச்சனாவின் நிழல் படத்தை பார்த்து “இன்னைக்கு உனக்கு வர வேண்டிய ஒன்னு, என்னோட அவசரத்தால ஹாசிக்கு போயிடுச்சு. மே பி நமக்கான நேரம் இன்னும் வரல போல” என்று பேசி கொண்டிருந்தான்.
நேரம் அப்படியே செல்ல இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சமயம் பத்மா போன் அலறியது. அதை எடுத்து பேசியவர் சற்று நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரும் இருக்கும் இடத்திருக்கு வந்தார்.
“ஏங்க அங்க எங்க கிராமத்துல திருவிழா வருதாம். எல்லாரையும் வர சொல்லி என் அம்மா போன் பண்ணுனாங்க எல்லாரும் போலாமா?”
“ம்கூம்…. மரியாதை தெரியாத ஆளுங்களா இருக்காங்க. மககிட்ட சொன்னா ஆச்சா, மருமகன்கிட்ட சொல்றது இல்ல. வீட்டு பெரிய மனுஷி….” என்றவர் சொல்லி கொண்டிருக்கும்போதே கிருஷ்ணன் போன் அடிக்க அவரது மாமனார்தான் அழைத்திருந்தார்.
பாட்டி உடனே பேசுவதை நிறுத்தி சாப்பிட துவங்கினார். பத்மாவின் தந்தை கிருஷ்ணனிடம் பேசிவிட்டு, தேவகி பாட்டியிடமும் சொல்லிவிட்டு வைக்க, பத்மா அவரை கிண்டலாக பார்த்தார்.
வேக வேகமாக சாப்பிட்ட தேவகி பாட்டி. “நான் நாடகம் பார்க்க போறேன்” என்றுவிட்டு எழுந்து செல்ல,
பத்மாவோ கணவனிடம் “உங்க அம்மா இருக்காங்களே……” என்று இழுக்க,
கிருஷ்ணனோ , “அவங்கதான் இருக்காங்களே உங்க சண்டைல என்னை இழுக்காதீங்கப்பா” என்றுவிட்டு போய் விட,
கடுப்பான பத்மா “டேய் ஹர்ஷா உங்க பாட்டி……” என்று சொல்ல வர,
தலைக்கு மேல் கையை தூக்கிய அண்ணன் தங்கை இருவரும் “ஆளவிடுங்க….. எனக்கு தூக்கம் வருது” என்று ஓடி விட,
ஹாசி அவர்கள் செயலை கண்டு சிரிக்க,பத்மா அவளிடம் “பார்த்தியா ஹாசி இப்படிதான் கல்யாணம் ஆனதுல்ல இருந்து என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது” என்க,
அதற்குள் அங்கு வந்த மித்து “ம்மா…. போங்கம்மா போய் வேலைய பாருங்க. என்னமோ பாட்டி உங்களை அடிக்கறதும், நீங்க பாட்டிகிட்ட அடி வாங்கிறதும் புதுசு மாதிரி புலம்புவீங்க போங்க போங்க. நீ வா ஹாசி நா உன்கிட்ட ஒன்னு காட்டணும்” என்று அவள் அறைக்கு அழைத்து சென்றுவிட்டாள்.
கடைசியில் பத்மாவும் ‘சரி அவங்க மறுபடியும் என்கிட்டதானே வந்தாகனும் அப்போ பேசிக்கறேன்’ என்றுவிட்டு படுக்க சென்றுவிட்டார்.
வேற பெண்ணிற்கு போக வேண்டிய ஒன்றை தான் பொக்கிஷமாக நினைத்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்தால் ஹாசி நிலை என்ன ஆகும்.
வீட்டின் சந்தோஷ மன நிலை, ஹர்ஷா காதல் விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ. காத்திருந்து பார்ப்போம்.