அத்தியாயம்- 7

நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது.

காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள்.

மாடியில் காயும் அவனது ஷர்ட்டை எடுத்து வந்து இரவு நேரங்களில் அணைத்து கொண்டு உறங்குபவள், அவன் ஷுக்கு மேல் தன் செப்பலை எடுத்து வைத்து அவன் கால் மேல் ஏறி நிற்பது போல் நினைத்து சிரித்து கொள்வாள்.

ஒவ்வொரு சமயம் அவளது செய்கை அவளுக்கே பைத்தியக்காரத்தனமாக தெரிந்தாலும் காதல் அதை எல்லாம் சரி செய்து கொள்ள விடவில்லை. அவள் ஒரு பக்கம் தன் சிறு வயது காதலை ரசித்து அனுபவித்து கொண்டு இருக்க,

மறுபக்கம் ஹர்ஷா, அர்ச்சனா காதல் ரணகளமாக சென்று கொண்டிருந்தது.

மற்ற காதல் ஜோடிகள் போல் வெளியில் செல்லலாம் என்றால், வேண்டாம் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்பாள், இரவு போன் செய்தால் எடுப்பதே இல்லை, கேன்டீனில் காபி குடிக்க கூப்பிட்டால் கூட பயந்து பயந்து வருவாள்.

“ஏன்டி இப்படி இருக்க. நாம லவ்வர்ஸ்தானே மத்த ஜோடிங்க ஊர் சுத்தற மாதிரி நாமும் சுத்தணும்னு எனக்கு ஆசை இருக்காதா” என்றவன் கேட்டாள்,

“நான் இப்படிதான். கல்யாணத்துக்கு அப்புறம் அங்க எல்லாம் போனா ஆகாதா. மத்தவங்க பண்றாங்கன்னு நாம பண்ண கூடாது. நமக்கு அது சந்தோஷத்தை குடுக்குதான்னு யோசிச்சு பார்த்துட்டு அப்புறம்தான் அதை செய்யணும். உன்னால காத்திருக்க முடியும்னா……” என்றவள் முடிக்கும்போதே கையெடுத்து கும்பிட்டவன்,

“ஒன்னும் தேவையில்ல. நீ பேசவே வேண்டாம். நான் கத்திருக்கேன்மா பொறுமையா காத்திருக்கேன் போதுமா. இப்போ வா காபி குடிச்சுட்டு வரலாம்” என்று அழைத்து செல்வான் .

ஆனால் மற்ற பெண்கள் ஹர்ஷாவுடன் சாதாரணமாக வந்து பேசினாள் கூட இருவருக்கும் இடையில் பெரிய சண்டையே நடக்கும்.

“அவ எதுக்கு உன்கிட்ட பேசறா? நீ ஏன் அவளுக்கு பதில் சொன்ன?” என்று,

இப்படியே நாட்களும் செல்ல, அன்று ஞாயிற்று கிழமை வேலைக்கு செல்லும் பெரியவர் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் நாள்.

ஊரில் உள்ள அனைவரும் ஓய்வாக இருக்க, நான் எப்போதும் என் வேலையை ஓய்வில்லாமல் செய்வேன் என்பது போல் ஆதவன் தன் பணியை செவ்வனே செய்ய உதயமாகிவிட,

ஹர்ஷா வீட்டில் இருந்து நெய் மனம் கம கமக்க துவங்கியது. தூக்கத்தில் இருந்த ஹாசி நெய் வாசனையில் எழுந்து கீழே செல்ல, அங்கு அடுப்படுயில் நின்று எதையோ கிண்டி கொண்டு இருந்தார் பத்மா.

ஹாசி, “ஆண்டி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு. நெய் வாசம் வீட்டையே தூக்குது” என்று கேட்க,

அவரோ, “பெருசா ஒன்னும் இல்லடா இன்னைக்கு மாமாக்கு பர்த்டே அதான், அவருக்கு பிடிக்குமேன்னு கொஞ்சமா மைசூர் பாக் செய்யறேன்”.

“வாவ். சூப்பர் நியூஸ் ஆண்டி இதை ஏன் நேத்தே சொல்லல, சொல்லியிருந்தீங்கன்னா அங்கிள்கு ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணியிருக்கலாம்ல”

“அதெல்லாம் அவரு விரும்ப மாட்டாரும்மா. உனக்காக ஒரு ட்ரெஸ் வாங்கி வச்சுருக்கேன். வா கொடுக்கறேன். போய் குளிச்சுட்டு அதை போட்டுட்டு வா. கோவிலுக்கு போலாம். அப்படியே அந்த மித்துவ எழுப்பு.

ஞாயிற்று கிழமைனா பன்னண்டு மணி வரை தூங்குவா கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல. போற இடத்துல என்னைதான் கழுவி கழுவி ஊத்துவாங்க” என்று புலம்பி கொண்டே தன் அறைக்கு சென்றவர் அங்கு ஹாசிக்காக வாங்கி வைத்த உடையை கொடுக்க,

அதை வாங்கி பார்த்தவள் “ஆண்டி…. இது……”

“மூச்…. எதுவும் பேச கூடாது. போய் போட்டுட்டு வா”

“ஆனா….. ஆண்டி……”

“எனக்காக போட்டுட்டு வாடா” என்றவர் சமையல் அறைக்கு சென்றுவிட,

தன் கையில் இருக்கும் உடையை மலைப்பாக பார்த்தவள் ‘சரி போடுவோம்’ என்றுவிட்டு, மித்துவை சென்று எழுப்பிவிட்டு, அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

தாயின் தொல்லை தாங்க முடியாமல் எழுந்து குளித்துவிட்டு வெளியில் வந்த ஹார்ஷா. கீழே சென்று தாயிடம் காபி வாங்கி குடித்து கொண்டு இருந்தான்.

ஹாசி தயாராகி கீழே வர, ஹர்ஷா அமர்ந்திருப்பதை பார்த்து “ஹாய் சிக்கி” என்க,

அவள் குரல் கேட்டு திரும்பி பார்த்தவன் விழிகள் பெரிதாக விரிய, அப்படியே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்.

ஆணவன் பார்வை கண்டு மனதில் குதூகலித்தவள் மகிழ்ச்சியை வெளி காட்டாது “ஹலோ சிக்கி என்ன ஆச்சு?” என்று அவன் முன் போய் நின்று கைகளை அசைக்க, அவனிடம் எந்த அசைவும் இல்லை.

உடனே அவன் கையில் கிள்ளி வைத்தவள் “ஹேய்….. சிக்கி என்ன?” என்று கேட்க,

“ஆஆஆ….” என்று அலறி, வலித்த கைகளை தேய்த்து கொண்டே, அவளை சுற்றி வந்தவன் “குடும்பமா சேர்ந்து எங்களை ஏமாத்துறீங்களா” என்று கேட்க,

அவன் கேள்வியில் ஒன்றும் புரியாமல் விழித்தவள் “என்ன ஏமாத்துறோம்? எனக்கு புரியல”.

“உண்மைய சொல்லு நீ அமெரிக்காலாம் போகலதானே. இங்க பக்கத்துல இருக்க அமிஞ்சிக்கரைலதானே வளர்ந்த”

“என்ன சிக்கி உளறுற”

“பின்ன என்னடி நீ வளர்ந்த கல்ச்சர் என்ன? எப்படிபட்ட இடத்துல வளர்ந்துருக்க, அது எப்படி கொஞ்சம் கூட மாற்றம் இல்லாம, அந்த ஊர் வாசனை கொஞ்சம் கூட இல்லாம, எங்க ஊர் பொண்ணு மாதிரியே இருக்க” என்றவன் அவளது பாவாடை தாவணியை கை காட்டி சொல்ல,

அவளோ “இது அத்தை எடுத்து வச்சிருந்தாங்க. சும்மா எதாவது பேசணும்னு பேசாத சிக்கி. நான் ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு புடிச்ச மாதிரிதான் நான் இருப்பேன்.

நாளைக்கே எனக்கு ஸ்லீவ்லஸ், ஸ்கர்ட் போட தோணுனா போடுவேன். அது என் விருப்பம். அப்போ யாரு சொன்னாலும்….. யாரு சொன்னாலும்” என்று அந்த வார்த்தையை அழுத்தி சொன்னவள் “கண்டிப்பா கேட்க மாட்டேன்” என்றவளை பார்த்தவன் “ஆனாலும் இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல” என்றான்.

பத்மா, “அட ஹாசிம்மா. சூப்பரா இருக்குடா. பிளவுஸ் அளவு பத்தாம போயிடுமோன்னு நினைச்சேன் நல்ல வேலை கரெக்ட்டா இருக்கு.

ஆமா மித்து எங்க? அவளை எழுப்புனியாடா?”

“ஹான்…. எழுப்பினேன் ஆண்டி. குளிச்சு ரெடி ஆகியிருப்பா. நான் போய் கூட்டி வரேன்” என்று அவள் மித்து அறை நோக்கி போக,

சரியாக அதே நேரம் அவள் போன் அலறியது. அதை அட்டன் செய்து காதில் வைத்தவள் “ஹாய் உடன்பிறப்பே உனக்கொரு சர்ப்ரைஸ் வீடியோ கால் ஆன் பண்ணு என்றவள் தன் முடியை சரி செய்து கொண்டு ஆவலாக காத்திருக்க,

வீடியோ காலில் வந்த அண்ணனின் பார்வை திகைத்து இருப்பதை கண்டு “எனக்கு தெரியும் நீ ஷாக் ஆவன்னு எப்படி இருக்கேன்” என்றவள் கேட்க, அவனிடம் பதில் இல்லை.

அண்ணனிடம் பேசி கொண்டே மித்து அறைக்கு வந்த ஹாசி அவள் புடவை கட்டி தயாராகி இருப்பதை பார்த்து “ஹே கிளம்பிட்டியா வா போகலாம்” என்றுவிட்டு போனை பார்க்க, அவள் அண்ணன் அப்படியே இமைக்க மறந்து சிலையாக அமர்ந்திருந்தான்.

“ஹேய் ப்ரோ என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி திருட்டு முழி முழிக்கற’ என்று குழப்பமாக கேட்டவள் அப்போதுதான் கவனித்தாள், தவறுதலாக அவள் கை பட்டு கேமரா பின் பக்கத்தை போகஸ் செய்வதை.

‘அடி ஆத்தி……என்னடி வேலை பண்ணிட்டு இருக்க’ என்று அதிர்ந்தவள் “டேய் அண்ணா என்னை பார்க்க சொல்லி வீடியோ கால் பண்ணுனா உன் ஆளை சைட் அடிச்சுட்டு இருக்கியா? வைடா போனை” என்று கட் செய்தவள் “இவன்லாம் ஒரு அண்ணன் தத்தி பண்டாரம். மனுஷனா இவன்” என்று திட்டி கொண்டிருக்க,

சிரிப்போடு அவள் அருகில் வந்த மித்து “தேங்க்ஸ் மச்சான்…” என்க,

அவளை கடுப்போடு பார்த்த ஹாசி “வேணாம் என்னை பேச வைக்காத சொல்லிட்டேன். நானே செம்ம காண்டுல இருக்கேன்”.

“ஹிஹிஹி…… நீ எப்படி வேணா இருந்துக்கோ. ஆனா…. நான் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.என் ஆளுக்கு இந்த ஓவர் பியூட்டிய பார்க்க குடுத்து வைக்கலியே போட்டோ எடுத்து அப்புறம்தான் அனுப்பனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

ஆனா அதுக்குள்ள பேஸ் டல்லா ஆகிட்டா என்ன பண்றதுன்னு கவலைல இருந்தேன். என் கவலைய போக்கனே வந்த தெய்வம்டி நீ. நான் ப்ரஸா இருக்கும்போதே என் ஆளு பாத்துட்டாரு. ஹுர்ரே…..
உசுரே நீதானே….. நீதானே….” என்று பாடி கொண்டே போக,

தலையில் அடித்து கொண்ட ஹாசி ‘ஏன்டி இப்போ நீ பண்ணுனதுக்கு பேரு என்ன தெரியுமா? இதெல்லாம் வெளிய தெரிஞ்சா வருங்கால சந்ததி உன்னை பத்தி என்ன நினைக்கும்’ என்று தனக்குதானே பேசி கொண்டு கீழே சென்றாள்.

அங்கு கிருஷ்ணா கோவிலுக்கு செல்ல தயாராகி நிற்பதை பார்த்து அவர் அருகில் சென்றவள் “ஹாப்பி பர்த்டே அங்கிள்” என்க,

“தேங்க்யூ டா” என்றவர் சொல்ல, அங்கு வந்த பத்மா “எல்லாரும் ரெடி போலாமா….”

“அது வந்து பத்து.,……”

“என்னங்க?”

“எங்க அம்மா……”

“அடே அப்பா….. ஆத்தா மேல ரொம்பதான் பாசம் பொங்குது. கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டேன். எத்தன மணிக்கு கிளம்பணும்னும் சொல்லிட்டேன். அவங்க வராம இருந்தா நான் என்ன பண்றது?”

“நந்தா….. அங்க என்ன சத்தம். உன் பொண்டாட்டி குரல் எல்லாம் உன்கிட்ட ஒசறுது போல. ம்ம்….. எங்க வீட்டு வகையறால கட்டியிருந்தா சொல்லுங்க மாமான்னு நான் உன் அப்பா காலுல விழுந்து கெடந்த மாதிரி கெடந்திருப்பா. ம்ம்ம்….. எங்க? அதுக்குதான் என் மகனுக்கு குடுப்பனை இல்லாம போச்சே” என்றவர் பெரு மூச்சுவிட்டு கொண்டு சொல்ல,

பத்மா, “உங்க ஆத்தா பேசுனதுல உங்க மனசுல இருக்க பாரமே கொறஞ்சிருக்குமே. இப்போ அதை எப்படி ஏத்தறேன்னு பாருங்க” என்றவர்,

மாமியாரின் புறம் திரும்பி “ஏங்க அத்த உங்க அண்ணனோட மூணாவது பொண்ணு மாமியார பார்த்துக்க முடியாதுன்னு கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டாங்களாமே அப்படியா” என்று கேட்க,

மொத்த குடும்பமுமே பாட்டியின் பதிலுக்கு ஆவலாக காத்திருக்க, அவரோ காதில் கை வைத்து “என்னடி பேசற. பேசறதை சத்தமா பேசு. ஒரு மண்ணும் கேட்கல. இந்த மெஷின் ரிப்பேரா போச்சா என்னன்னு வேற தெரியல. ஒன்னும் கேட்டு தொலைக்க மாட்டிக்குது” என்று புலம்பி “இவனுங்க என்ன என் மூஞ்ச பார்க்குறானுங்க எலேய் வாங்கடா போவோம்.

கோவிலுக்கு நேரமாகுதா இல்லையா” என்று வெளியில் செல்ல, அவர் பார்வை ஒரு நொடி மருமகளிடம் ‘நான் உனக்கு மாமியார்டி’ என்ற ரேஞ்சில் பார்த்தது.

வாயில் கை வைத்த பத்மாவோ “அடேய் ஹரிஷு இதை கேட்டியா? இப்போ நான் பேசுனது உன் பாட்டிக்கு கேட்கலையாம். அது எப்படிடா அவங்க குடும்பத்தைபத்தி பேசுனா மட்டும் காது கேட்காம போகுது”.

கிருஷ்ணா, “ச்ச…ச்ச…. அப்படி எல்லாம் இல்லம்மா. வயசாகிடுச்சுல்ல, உண்மையாவே நீ பேசுனது அவங்க காதுல விழுந்துருக்காது” என்று தாயிற்கு கொடி பிடித்து கொண்டு வர,

கணவரை கேவலமாக ஒரு லுக் விட்ட பத்மா “இன்னும் என்னை பைத்தியக்காரியாவே நினைச்சுட்டு இருக்கீங்க இல்ல” என்க,

பதில் சொல்ல முடியாமல் திணறியவர் பின் “ஆஆ…. போங்க போங்க போய் கார்ல ஏறுங்க. கோவில் நடை சாத்திர போறான்” என்று வெளியே செல்ல,

பத்மாவோ “அதானே அந்த விஷ டப்பாக்கு பொறந்த குட்டி விஷபாட்டுலு நீ னு நொடிக்கு ஒரு தரம் நிரூபிக்கிறாய்” என்று கணவனை திட்டி கொண்டே சென்று காரில் ஏறினார்.

அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்றவர்கள் தரிசனம் முடித்து ஓரமாக அமர்ந்திருந்தனர். அப்போது பத்மா அருகில் வந்த ஒரு பெண் “ஆண்டி இதை வாங்கிட்டு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று கையில் மஞ்சள் கயிறு, குங்குமம் வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி சகிதம் நின்றாள்.

அந்த பெண்ணின் சத்தத்தில் போனில் இருந்து கண்ணை நிமிர்த்திய ஹர்ஷா வந்த பெண்ணை கண்டு புருவம் சுருக்கி,’இந்த பொண்ண எங்கயோ பார்த்திருக்கோமே’ என்று யோசனையாக இருக்க,

பத்மா எழுந்து அந்த பெண் கையில் இருந்து மங்கள பொருட்களை வாங்கி, ஆசீர்வாதம் செய்ய, அப்போது “அக்கா முடிஞ்சுதா……” என்று கேட்டு கொண்டே அங்கு வந்து சேர்ந்தாள் அர்ச்சனா.

ஆம், அர்ச்சனாதான். ஆசீர்வாதம் வாங்க வந்தது அவளது அக்கா நந்தனா.

“ம்ம்…. முடிஞ்சுதுடி போலாம்” என்றவள் பத்மா புறம் திரும்பி “வரேன் ஆண்டி” என்றுவிட்டு செல்ல,

ஹர்ஷாவோ தன்னவளை கோவிலில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான்.

“ம்மா…. ஒரு நிமிஷம் இருங்க வரேன்” என்றவன் பெண்ணவளை தேடி செல்ல,

“ஹாசியோ மித்துவோடு சேர்ந்து வித விதமாக போட்டோ எடுத்து கொண்டு இருந்தாள்.

அர்ச்சனா ஹர்ஷாவை கண்டு திகைத்தாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் அக்காவோடு சென்றுவிட்டாள்.

பெண்ணவளை தேடி வந்த ஹர்ஷா அர்ச்சனா அவர்கள் குடும்பத்தோடு நின்றிருப்பதை கண்டு அவர்கள் அருகில் இருக்கும் தூணின் பின் சென்று நின்று அவர்கள் பேசுவதை கவனிக்க துவங்கினான்.

நந்தனா,“ப்பா…… நீங்க சொன்ன மாதிரி இங்க இருக்க எல்லா சுமங்கலிங்ககிட்டயும் தாம்பூலம் கொடுத்துட்டேன்” என்க,

அவரும் “ம்ம்…சரி. இனியாவது சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை உனக்கு அமையுதான்னு பார்க்கலாம்” என்றவர் சொல்லி கொண்டிருக்கும்போதே அவர் போன் அலறியது.

அதை எடுத்து பார்த்தவர் ஆபிஸ் கால் எனவும் “அர்ச்சனா ஐயர்கிட்ட அக்காக்கு வந்த ஜாதகத்தை குடுத்தேன் போய் அதை வாங்கிட்டு வா” என்றுவிட்டு போனை காதில் வைத்து கொண்டு சென்றுவிட, அவளும் தந்தையிடம் தலையை ஆட்டிவிட்டு சென்றாள்.

தன்னவள் தனியாக வரும் நேரத்திற்காக காத்திருந்த ஹர்ஷா சுற்றி பார்வையை ஓட விட, யாரோ சாமி கும்பிட்டுவிட்டு வைத்து போன குங்குமம் அங்கு இருந்தது. அதை பார்த்தவன் என்ன நினைத்தானோ அதை எடுத்து கொண்டு மறைவான ஒரு இடத்தில் அவள் வருகைக்காக காத்திருக்க துவங்கினான்.

ஹாசி போட்டோ எல்லாம் எடுத்து முடித்தவள் குடும்பத்துடன் சென்று அமர, தேவகி பாட்டி “எம்மாடி ஹாசி அந்த ஹர்ஷா பய எங்க போனான்னு செத்த பாருத்தா. நேரம் போவுது சீரியல் போட்ருவான் அதுக்குள்ள வீட்டுக்கு போகணும். இந்தா வர்றேன்னுட்டு போனான்.

இன்னும் ஆளை காணோம். அப்படியே அவன் ஆத்தா மாதிரி போனா போன இடம் வந்தா வந்த இடம்னு என்ன புள்ளையோ” என்று சொல்ல,

பத்மாவோ ‘என்னவோ சொல்லிக்கோ என் காது கேட்காது என்ற ரேஞ்சில் அமர்ந்து கொண்டார்.

அர்ச்சனா ஒரு பக்கம் வர, ஹாசி ஒரு பக்கம் வர, ஹர்ஷா ஒரு பிளானோடு நின்றிருந்தான்.

‘இந்த சிக்கி எங்க போனான்’ என்று தன் போனில் அவன் நம்பரை தேடி கொண்டே வந்தவள் கையை யாரோ திடீரென்று இழுக்க பதறி போனவள் என்னவென்று சுதாரிக்கும் முன் அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருந்தான் ஹார்ஷா.

வருவது அர்ச்சனா என்று நினைத்து ஹர்ஷா குங்குமம் வைக்க, ஹாசியாக மாறியது விதியின் சதி இல்லாது வேறு என்ன?

ஏற்கனவே ஹர்ஷா மீது மலை அளவு காதல் கொண்டவள் அவனது இந்த செய்கைக்கு பின் என்ன செய்ய போகிறாள்.

இந்த நிகழ்வால் ஹாசிக்கு ஹர்ஷாவின் பதில் என்னவாக இருக்கும் காத்திருப்போம்.