அத்தியாயம் -33

பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர்,

படிப்பிற்காக புது இடத்திற்கு செல்ல போகிறோம் என்ற ஆர்வத்தில் இளம் வயதினர் என அந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

அங்கிருந்த கபேயில் யூஸ் அண்ட் த்ரோ கப்பில் இருக்கும் காபியை ரசித்து குடித்து கொண்டு அல்ட்ரா மாடல் பெண்ணாக அமர்ந்திருந்தாள் ஹாசி.

காலையில் திருமணம் முடித்த பெண்ணா இவள் என்பது போல் முற்றிலும் மாறி இருந்தாள். என்ன கையில் இருந்த மருதாணியும் கழுத்தில் ஆணவன் கட்டிய தாலியும் இல்லாமல் போயிருந்தாள். நிச்சயம் இவள் வேறு பெண்தான் என்று சொல்லும் அளவிற்கு அவள் மாற்றம் இருந்தது.

கணவனானவன் கையால் வகுட்டில் வைத்த குங்குமம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. எப்போதும் அவள் அணியும் சுடி காணாமல் போய் கிழிந்த ஜீன்சும் குட்டி டீ ஷர்ட்டும் அதன் மேல் ஒரு கோட்டும் அணிந்து கண்களில் கூலர்சுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவள் கப் காலி ஆனவுடன் தன் கையில் இருக்கும் வாட்சில் மணியை பார்த்தாள்.

தான் எதிர்பார்த்த பிளைட் வந்துவிட்டது என்ற அறிவிப்பு வர எழுந்து வேகமாக வெளியேறினாள்.

காத்திருப்போர் நிற்கும் இடத்திற்கு சென்று நின்றவள். தான் அழைத்து செல்ல வந்த ஆளை தேடி கண்களை நாளா புறமும் சூழலவிட்டாள்.

அவளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் வந்தான் அவன். அவனை கண்டவுடன் அவள் முகம் பூவாக மலர “ஹேய்…. மைக்…நான் இங்க இருக்கேன்” என்று குரல் கொடுத்தாள்.

அவளை பார்த்து முகம் நிறைந்த சிரிப்பை வெளியிட்ட மைக் என்ற மைக்கேல் “ஹனி……” என்று கத்தி கொண்டே ஓடி வந்து அவளை அணைக்க வர, அதற்குள் இருவருக்கும் இடையில் வந்து நின்றது ஒரு உருவம்.

மைக் அந்த உருவத்தை அணைத்து பின் வேறுபாடு உணர்ந்து விலகி அவனை குழப்பமாக பார்க்க, ஹாசியோ ‘இந்த பன்னாட எங்க இருந்து வந்தான். எப்போ வந்தான்னு தெரியலையே’ என்று யோசித்து கொண்டிருக்க,

மைக்கை பார்த்து தன் முப்பத்தி ரெண்டு பல்லயும் காட்டி சிரித்தவன் வேறு யாரும் அல்ல, ஹாசியின் கணவன் ஹர்ஷாவேதான்.

மைக் அவனை யாரென்று தெரியாமல் விழிக்க, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள எண்ணி அவன் “ஹாய் ப்ரோ என்ன அப்படி பாக்குறீங்க. நான் ஹர்ஷா. ஹாசியோட”

“ப்ரண்ட்” என்று முடித்து வைத்தாள் ஹாசி.

ஹர்ஷா அவளை பார்த்து முறைக்க. அவளோ “நீதானேப்பா அப்படி சொன்ன. உன்னை பிரண்டா மட்டும்தான் என்னால பார்க்க முடியும். அதனால ஒரு வருஷம் ப்ரண்டாவே இருந்து பிரியலாம்னு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

அவனோ “ஹாசி அது அப்போ. இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு உண்மையா இருக்கணும்னு நான் நினைக்கறேன்”.

“ஆமாப்பா. உண்மையான நண்பனா மட்டும் இரு” என்றவள் மைக் புறம் திரும்பி “ஹேய் மைக் என்ன அப்படி முழிக்கற நாங்க அப்படிதான் பேசிட்டே இருப்போம். ஜர்னி எல்லாம் எப்படி இருந்திச்சி.

சென்னை ரொம்ப ஹாட்தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அப்புறம் அங்கிள், ஆண்ட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க ” என்றவள் கேட்க,

“எல்லாரும் நல்லா இருக்காங்க. உன்னைதான் எல்லாரும் மிஸ் பண்றோம்” என்றவன் சொல்ல,

ஹர்ஷாக்கு அவன் தமிழை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அதை அவனிடமே கேட்கவும் செய்தான் “உங்களுக்கு தமிழ் தெரியுமா” என்றவன் கேட்க,

ஹாசி, மைக் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

அதை கண்டு ஹர்ஷா காதில் புகை வராதகுறைதான். இப்போ நான் என்ன கேட்டேன்னு இந்த வெள்ள பன்னி என் பொண்டாட்டிய பார்த்து சிரிக்கறான். ஆம்பளைங்களை பார்த்து பேசவே இவனுக்கு வராதோ’ என்றவன் கருவி கொண்டு இருக்க,

மைக்கோ “என்னோட தமிழ் டியூட்டர் என் செல்ல ஹனிதான்” என்றவன் அவள் கன்னத்தை கிள்ள போக,

அவன் கையை லாவகமாக தடுத்து பிடித்த ஹர்ஷா “ஹிஹிஹி…. அப்படியா ப்ரோ. வெல்கம் டூ இந்தியா” என்றவனை அணைத்து கொள்ள, ஹாசியோ அவனை குழப்பமாக பார்த்தாள்.

“ஓகே ப்ரோ வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றவன் சொல்ல,

மைக்கோ “ஹனி டன்ஜன் எங்க” என்று கேட்க,

ஹர்ஷாவோ “டன்ஜனா … எங்க டன்ஜனா இருக்கு” என்று புரியாமல் கேட்க,

ஹாசியோ நெற்றியை தடவியவள் மைக்கிடம் “அவனுக்கு இன்னைக்கு மேரேஜ்ல வீட்ல இருக்கான். அதான் நான் வந்திருக்கேன்ல வா போகலாம்” என்று முன்னால் செல்ல,

அப்போதுதான் அவள் உடையை கவனித்த ஹர்ஷாவிற்கு பக்கென்று இருந்தது. அடி பாவி என்னடி இப்படி கிழிஞ்ச ட்ரெஸ் போட்டு இருக்க. நெத்தில நான் வச்ச பொட்டு இல்ல. ஆளே மாறிட்டளே.

தாலியாவது போட்டு இருக்காளா இல்லையான்னு தெரியலையே என்ற யோசனையில் இருக்க, அவன் கையை யாரோ சுரண்டவும் என்னவென்று பார்த்தவன் முன்னால் மைக்தான் நின்றிருந்தான்.

மைக், “என்ன ப்ரோ கனவு கண்டுட்டு இருக்கீங்க. லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வாங்க. நான் ஹனிகூட போறேன்” என்று ஓட போனவன் சட்டை காலரை பின் பக்கம் இருந்து பிடித்து இழுத்தவன் “ப்ரோ எங்க போறீங்க. எங்க ஊர்ல அவங்க அவங்க பொருள அவங்க அவங்கதான் தூக்கணும் பிடிங்க” என்று சூட்கேசை தூக்கி அவன் தலையில் வைத்தவன் கைகளில் பேகை மாட்டிவிட்டான்.

மைக், “ப்ரோ அதான் ரோலர் இருக்குல்ல. அப்புறம் ஏன் அதை என் தலைல வச்சிங்க. இறக்குங்க. நான் தள்ளிக்கிட்டு வரேன்”

“என்ன பேசுறீங்க ப்ரோ. நாங்க பூமிய பூமா தேவியா கும்பிடறவங்க. அவங்க மேல உருட்டி எல்லாம் வர மாட்டோம்” என்று சொல்ல,

மைக்கோ அங்கு ஓரமாக ஐஸ் கிரீம் கேட்டு குதித்து அழும் குழந்தையை பார்த்து கோபம் வர முகம் சிவக்க “உருட்டிட்டுதான் வரமாட்டீங்க. ஆனா குதிப்பீங்க இல்ல” என்று கேட்க,

“ஹிஹிஹி…. குழந்தையும் தெய்வமும் ஒன்னு ப்ரோ. தப்பா பேசாதீங்க” என்றுவிட்டு அவனோடு சென்றவன் ஹாசி அருகில் செல்லும் போது மைக்கிடம் இருந்து பேகை தான் பிடுங்கி தலையில் வைத்து கொண்டவன் “ஹப்பா என்ன வெயிட்டு ஹாசி கொஞ்சம் இதை இறக்கி விடேன்” என்று பாவம் போல் சொல்ல,

அவன் சேட்டையை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருந்தவள் “சாரி நகம் உடைஞ்சுடும். என்னால முடியாது. மைக் நீ…” என்று ஏதோ அவள் சொல்ல வர,

அதற்குள் ஹர்ஷா அவன் கையில் இருந்த பேக்கை மைக் கையில் குடுத்து. இதுதானே சொல்ல வந்த நானே குடுத்துட்டேன்” என்றவன் அப்போதுதான் அவள் அணிந்திருந்த ஜீன்ஸை பார்த்து ‘ம்கூம் இவ கிழிஞ்ச ஜீன்ஸ் வாங்குனாளா இல்ல வாங்கி கிழிச்சாளான்னு தெரியல’ என்று முணகி,

“சரி வாங்க போலாம். நான் கார்லதான் வந்தேன். மைக்கு நீ இன்னா பண்ணுற இந்த பொட்டிய தூக்கிட்டு என் பின்னாடி வர. இன்னா ஓகேவா” என்று சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டு முன்னால் போக,

“மைக் இந்த கார்ல ஏறு. நாம போகலாம்” என்று ஹாசி அமர்த்தலாக மற்றொரு காரை காட்டி சொல்ல,

“தெரியும்டி. நீ இப்படிதான் பண்ணுவேன்னு. அதனாலதான் நான் ஓலா புக் பண்ணி வந்தேன். வா நீ பேசி வச்ச கார்லயே போலாம்” என்றவாறு அவர்களுக்கு முன் அவன் ஏறி அமர்ந்து கொள்ள,

மைக்கோ இவன எங்க இருந்து புடிச்ச ஹனி சரியான அராத்தா இருக்கான். கொஞ்ச நேரத்துல என்னை பாடா படுத்திட்டான். ஆமா லாஸ்ட்டா அவன் என்ன லாங்குவேஜ் பேசுனான். தமிழ் மாதிரி இருக்கு ஆனா தமிழ்தானா…..” என்று தன் சந்தேகத்தை கேட்க,

“அடேய்…. உன் மொழி ஆர்வத்தை கண்டு வியக்கேன். இதுதான் உனக்கு இப்போ ரொம்ப முக்கியமா. முதல்ல கார்ல ஏறு நாம போலாம் அண்ணா வெயிட் பண்ணிட்டு இருப்பான்” என்றவள் கார் அருகில் செல்ல,

உடனே தள்ளி அமர்ந்த ஹர்ஷா “வா பொண்டாட்டி வந்து உட்காரு” என்க,

அவளோ அவனை முறைத்து கதவை அறைந்து சாத்திவிட்டு முன்னால் சென்று அமர்ந்துவிட்டாள்.

“என்னது பொண்டாட்டியா…. அப்படினா வைப்தானே ஹாசி” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போய் கேட்ட மைக்கை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்த ஹர்ஷா “சூப்பர் மாமே. உன் தமிழ் அறிவை கண்டு எனக்கு குஜாலா ஆகிடுச்சு” என்றவன் சொல்ல,

மைக் புரியாமல் விழிக்க, தலையில் கை வைத்த ஹாசி “மைக் உன்னோட விளக்கம் விளக்கெண்ணெய் எல்லாம் அப்புறம் கேட்டுக்கோ இப்போ வீட்டுக்கு போகலாம்” என்றவள், ஹர்ஷாவை பார்த்து “ஏன் ஹர்ஷா மைக்கிட்ட இப்படி பேசற” என்க,

அவனோ, “அது என்னமோ தெரியல. மைக் கிடைச்ச உடனே வார்த்தை அதுவா வருது” என்க, அவனை முறைத்த ஹாசி ‘நான் எந்த மைக்க சொன்னா இவன் எந்த மைக்க சொல்றான் பாரு’என்றுவிட்டு திரும்பிவிட,

ஹர்ஷாவை இடித்து கொண்டு அமர்ந்த மைக் “ப்ரோ கொஞ்சம் தள்ளி உட்காருங்க. இடம் பத்தல”என்று கூற,

‘இவன் பக்கத்துல உட்காரவா ஓடி வந்தேன். எல்லாம் என் நேரம்’ என்று முணகியவன் தள்ளி அமர்ந்து, தன் போனை எடுத்து நோண்ட துவங்கிவிட்டான்.

வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்த மைக் “ஹாசி இந்தியா பொண்ணுங்க எல்லாம் செம்மையா இருக்காங்க” என்று கண்ணடித்து சொல்ல,

ஹர்ஷாவோ “எங்க தமிழ் பொண்ணுங்க எப்பவுமே அழகுதான். உங்க ஊரு பொண்ணுங்க மாதிரியா, வெள்ளையா இருந்தா மட்டும் போதாது. அழகு…. இலட்சணம் அதுவும் இருக்கணும்”.

மைக், “ஹனி நீ எங்க ஊரு பொண்ணுதானே” என்றவன் கேட்க,

அதை கேட்டு அரண்டு போன ஹர்ஷா ’ஆத்தி முதலுக்கே மோசம் வந்துடும் போலயே. “அடேய் ஒலிவாங்கி அவ எங்க ஊரு பொண்ணுடா” என்று சொல்ல,

அவனை புரியாமல் பார்த்த மைக்”என்னா வாங்….”

“வாங்…. இல்லடா வெள்ள பன்னி. ஒலி வாங்கி. மைக்குக்கு தமிழ் அர்த்தம். சும்மா நொய் நொய்ன்னு பேசாம வாடா” என்றவன் ஹாசியை பார்க்க, அவளோ அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

‘எப்பா….. அந்த கண்ணஎன்னா உருட்டு உருட்டுறா. நமக்கு எதுக்கு வம்பு கண்ணை மூடி தூங்கிடுவோம்’ என்று போனை ஓரமாக வைத்தவன் சீட்டில் அப்படியே கண்களை மூடி சாய்ந்துவிட்டான்.

வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்த மைக் “ஹாசி உனக்கும் இன்னைக்குதானே மேரேஜ் அப்புறம் எப்படி வெளிய வந்த”

“இது என்ன கேள்வி. காலால நடந்துதான் வந்தேன்”

“என்ன காமெடியா நாளைக்கு நியாபகப்படுத்து சிரிக்கறேன். ஆமா என் ரதி டார்லிங் எப்படி இருக்காங்க”.

“ம்ம்…. நல்லா இருக்காங்க. உன் டார்லிங்க்கு பயந்துட்டுதான் ரஞ்சன் வரல, நான்லாம் யாரு. நம்ம ஹிஸ்டரி என்ன…. எல்லாருக்கும் டிமிக்கி குடுத்துட்டு நான் வந்துட்டேன்” என்று சிரித்து கொண்டு சொல்ல,

மைக்கும் அவள் சொன்ன விதத்தில் சிரித்துவிட்டான். “என்ன ஆனாலும் இந்த வாலுத்தனம் மட்டும் போகாது. ஆமா உன் அண்ணன் ஏதோ சர்ப்ரைஸ்னு சொன்னானே என்ன அது. எனக்கு பொண்ணு எதுவும் பார்த்து வச்சுட்டானா என்ன?” என்று கேட்க,

ஹர்ஷா, “பொண்ணுதானே பார்த்துட்டா போச்சு. எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு சொல்லு மாமே. நான் உனக்கு உதவி பண்றேன்” என்று சொல்ல,

சிரித்த மைக் “என் ஹனி மாதிரி பொண்ணு வேணும்” என்று சொல்ல,

ஹர்ஷாவோ முதலில் ஷாக் ஆணவன் பின் கூலாக “அதுக்கு நீ பல வருஷம் காத்திருக்கணும்” என்று சொல்ல,

மைக், ஹாசி இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.

“என்ன புரியலையா. ஹாசி மாதிரி பொண்ணு வேணும்னா. ஹாசி பொண்ணுதான் கிடைப்பா. அதுக்கான வேலைய நாங்க இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே.
இன்னைக்குதான் கல்யாணமே ஆகியிருக்கு. அதுக்கு அப்புறம் நாங்க….”

“ஹர்ஷா……” என்று ஹாசி பல்லை கடித்து கொண்டு கத்த,

கார் டிரைவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஹாசி அவரை திரும்பி பார்க்க “சா…. சா…சாரி..
மேடம்” என்றுவிட்டு திரும்பி கொள்ள,

மைக்கோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தான்.

‘மானத்தை வாங்குறானே’ என்று தலையில் கை வைத்த ஹாசி “ஹர்ஷா நாம அப்புறமா பேசலாம். இப்போ கொஞ்சம் அமைதியா வர்றியா”.

“நாம பேசலாம் ஹாசி. ஆனா அதுக்கு எதுக்கு நான் அமைதியா இருக்கணும். ஒலிவாங்கிய அமைதியா இருக்க சொல்லு. அவன் பேசுறதுனாலதான் அவனுக்கு நான் பதில் சொல்ற மாதிரி ஆகுது” என்றவன் சொல்ல,

‘இவன் ஏற்கனவே ஓவரா பேசுவான். இப்போ ஒரு ஆடு மாட்டுனா சும்மாவா இருப்பான்’ என்று மனதில் சொல்லி கொண்டவள்.

இவன்கிட்ட பேசறதும் செவுத்துல முட்டிக்கிறதும் ஒன்னு என்று முடிவு எடுத்தவள் “மைக் ப்ளீஸ்……” என்க,

அவனோ வந்த சிரிப்பை இதழ் கடித்து அடக்கி கொண்டு “ம்ம்….” என்றுவிட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டான்.

ஹர்ஷா நக்கல் சிரிப்புடன் இருவரையும் பார்த்தவன் என் பொண்டாட்டி மாதிரி பொண்ணு வேணுமா. இனிமே இப்படி சொல்லு பார்க்கலாம். யாருகிட்ட’ என்று நினைத்து கொண்டு வேடிக்கை பார்த்தான்.

அப்போது சிக்னலில் கார் நிற்க, வெளியே பார்த்து கொண்டிருந்த மைக் கண்ணில் ஒரு ஆள் ரோட்டில் இயற்கை காட்சியை அழகாக படம் வரைந்திருப்பதை கண்டு விழி விரித்தவன் போனை எடுத்து அதை வீடியோ எடுக்க துவங்கினான்.

மைக் போனை வெளியே நீட்டிய நொடியில் அடுத்ததாக டூ வீலர் ஓட்டிவந்தவன் இடிக்க, அவன் கையில் இருந்த போன் கீழே விழுந்து சிதறியது.

வண்டியில் வந்தவன் அவனை திட்டிவிட்டு போக, அதை பார்த்த ஹர்ஷா சிரிக்க, திரு திருவென விழித்து கொண்டிருந்தான் மைக்.

ஹாசி, “மைக் என்ன இது? இப்படி எல்லாம் கைய வெளிய நீட்டாத. நீ என்ன குழந்தையா உனக்கு தெரியாது. இப்போ போன் போச்சு. உன்னை…….” என்றவள் மேலும் திட்ட, அவனோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு ஹர்ஷாவை பார்த்தான்.

ஹர்ஷா,’இவன் எதுக்கு நம்மை இப்படி பாக்குறான். ஒருவேலை ஹாசிகிட்ட இருந்து காப்பாத்தா சொல்லி பாக்குறானோ’ என்று பெருமையாக நினைத்தவன் “சரி ஹாசி விடு. அவன் எப்படி பாவமா பாக்குறான் பாரு” என்று அவளிடம் சொன்னவன்,

“கூழ் ப்ரோ டென்ஷன் ஆகாதீங்க பாத்துக்கலாம்” என்று அவன் தோளில் தட்ட,

தோளில் இருந்த அவன் கையை எடுத்து தன் கையில் பிடித்து கொண்டவன் “சாரி ப்ரோ….” என்று பாவம் போல் சொல்ல,

இவன் எதுக்கு நமக்கு சாரி சொல்றான் என்று யோசித்த ஹர்ஷா கண்கள் ஒரு நொடி சுருங்கி பின் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

“டேய்……அப்போ……”

“ஆமா ப்ரோ……அ…. அ….. அது…. உ…. உ….. உங்க போன்தான். என் போன் சூட்கேஸல இருக்கு” என்று சொல்ல,

ஹர்ஷா, “டேய்…. உன்னை……” என்று பாய போனவன் கையை இறுக்கி பிடித்த ஹாசி “ஹர்ஷா அதுதான் அவன் சாரி சொல்லிட்டான்ல”

“சாரி சொன்னா சரியா போச்சா”

“ஹர்ஷா பழசு இனி உன் வாழ்க்கைல இல்லன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல இந்த சகுணம்” என்று அவனை அர்த்தமாக பார்த்தவாறு சொல்ல,

அவளை ஆழ்ந்து பார்த்தவன் “பழசு தேவையில்லன்னு நானும் முடிவு பண்ணிட்டேன் ஹாசி. அதை நீதான் நம்பாம இருக்க”

“அப்போ எதுக்கு அவனை திட்டுற”.

“ஹாசி…நாம எதைப்பத்தி பேசறோம்னு உனக்கு நல்லாவே தெரியும்” என்றவர்கள் பேசிக்கொண்டே ரஞ்சன் வீட்டு வாசலிற்கே வந்துவிட்டனர்.

இனி என்ன நடக்க போகிறது என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்.