ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக இருந்தது.
பத்மா, ரேவதி ஒரு பக்கம் சேரியை பார்த்து கொண்டு இருக்க, மித்ரா புடவை எடுக்க வர மாட்டேன் என்றவளை அவள் ஆபிசிற்கே சென்று தூக்கி வந்துவிட்டான் ரஞ்சன்.
“நிரன் நீங்க வர வர சரியில்ல”.
“என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட. மாமா பர்பாமன்ஸ் பத்தலையோ…. அடி கள்ளி……” என்று அவள் கன்னத்தில் இடித்தவன் “உன் எதிர்பார்ப்பு எனக்கு புரியுது. அதுக்கெல்லாம் கல்யாணம் ஆகணும்டி செல்ல குட்டி. இப்படி அவசரப்பட்டா என்ன பண்றது. சரி உனக்காக.. உனக்காக மட்டும் வேணா அந்த ட்ரையல் ரூம் பக்கம் ஒதுங்குவோமா. மாமா அப்போ சரியான்னு சொல்லு” என்றவன் அவள் இடையோடு கையிட்டு தன் அருகில் இழுக்க,
‘ஆத்தி…. விட்டா இவன் இப்போவே நம்மள சுவாகா பண்ணிடுவான் போலயே, இவன் இருப்பான்னுதான் நான் வரலைன்னு சொன்னேன். ஆபிஸ்கே வந்து தூக்கிட்டு வந்துட்டானே’ என்றவள் மனதில் புலம்ப,
“உன் மைண்ட் வாய்ஸ அப்புறம் பேசிக்கோ இப்போ வா சேரி செலக்ட் பண்ணலாம்” என்றவன், அவளை ஹாசி நின்றிருந்த இடத்திற்கு அழைத்து சென்று “ஹாசி வா போகலாம்” என்று மற்றொரு கையால் தங்கை கரத்தை பிடிக்க போக,
இருவர் கைக்கும் இடையில் வந்தது மற்றுமோர் முரட்டு கரம். “எவ அவ…” என்று ரஞ்சன் திரும்பி பார்க்க, ஹாசியயே பார்த்து கொண்டு நின்றிருந்தான் ஹர்ஷா.
‘இந்த கொசு தொல்லை தாங்க முடியல’ என்று முணு முணுத்த ரஞ்சன் ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்க,
“சேரி செலக்ட் பண்ண நாங்க போயிக்கறோம். நீ என் தங்கச்சிய கூட்டிட்டு போ” என்று சொல்ல,
அவனோ “உன்னை நம்பி என் தங்கச்சிய விட்டுட்டு போக மாட்டேன்” என்றான்.
“டேய் நீ ஓவரா போற. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன். என்னை நம்பி அவளை விடாம, வேற யாரை நம்பி விட போற”
“ஒரு வருஷ கணக்கு வச்சிருக்கவனை நம்பி என் தங்கச்சிய அனுப்பறதா இல்லை” என்றவன் சொன்னவுடன் ஹர்ஷா, மித்ரா, ஹாசி என அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
ஹர்ஷா பல்லை கடித்து ரஞ்சனை பார்த்தான். அவனோ அவசரத்தில் உளறியதை எண்ணி நாக்கை கடித்தவன் பின் சமாளிக்கும் பொருட்டு “ஆமா மாப்பிள்ளை மரியாதை எல்லாம் ஒரு வருஷம்தானே கிடைக்கும் அதான் சொன்னேன்” என்க,
மித்ராவோ “அது எப்படி நிரன் நீங்க அப்படி சொல்லலாம். வீட்டு மாப்பிள்ளைக்கு எப்பவுமே மரியாதை உண்டு” என்றவள் சொல்ல,
அண்ணன் தங்கை இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, கடைசியில் ஹர்ஷாதான் “விடு மித்து. நம்ம ஊர்ல எல்லாம் வீட்டு மாப்பிள்ளைக்கு வருஷம் பூரா மரியாதை கொடுப்போம். அவங்க ஊர்ல ஒரு வருஷம்தான் குடுப்பாங்களோ என்னவோ. அதைதான் மச்சான் சொல்றாரு” என்றவன் கிண்டலாக சொல்ல,
அவனை முறைத்து பார்த்த ரஞ்சன் “மித்து, ஹாசி வா போகலாம்” என்று சொல்லி செல்ல போக,
ஹாசி கையை பிடித்த ஹர்ஷா ரஞ்சனை பார்த்து “நாங்க எங்களுக்கானதை செலக்ட் பண்ணிக்கறோம். நீங்க உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கோங்க” என்றுவிட்டு ரஞ்சன் பேச இடம் கொடுக்காமல் அவளை இழுத்து சென்றுவிட,
ரஞ்சன் செல்லும் அவர்களையே யோசனையாக பார்த்திருந்தான். மித்ராவோ “என்ன நிரன் ஏன் அவங்களையே பார்த்துட்டு இருக்கீங்க. அண்ணாக்கூடதானே ஹாசி போறா. அவன் பார்த்துப்பான் வாங்க” என்று சொல்ல,
ரஞ்சன் அதன்பின் தங்கை நினைவில் அமைதியாகி போனான். புடவை எடுக்கும்போதும் ஏதோ யோசனையில் இருந்தவன் முகத்தை மித்ரா திரும்பி திரும்பி பார்க்க, அவனோ தன்னுள் மூழ்கி இருந்தான்.
ஹாசியை தனியாக அழைத்து வந்த ஹர்ஷா “ஹாசி ஏன் இப்படி பண்ணுன” என்று கோபமாக கேட்க,
அவளோ அவனை புரியாமல் பார்த்தாள்.
அவள் பார்வையை வைத்தே தான் என்ன சொல்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா “நமக்குள்ள பேசின விஷயத்தை எதுக்காக அவன்கிட்ட சொன்ன” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,
அவனை கூலாக பார்த்தவள் “என் அண்ணனுக்கும் எனக்கும் இடைல எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்ல. நாங்க அப்படிதான் சின்ன வயசுல இருந்தே வளர்ந்திருக்கோம்.
இப்போ வந்த உங்களுக்காக வருஷ கணக்கா பழகுன விஷத்தை எப்படி மாத்திக்க முடியும்” என்று கேட்க,
தன்னை விட அவள் அண்ணன் முக்கியம் என்று சொன்னது ஏனோ அவனுக்கு கோபத்தை அதிகமாக்க, “ஹாசி நீ பேசுறது சரியில்ல. நீ முன்னாடி மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்ட”
“நான் எப்போவும் போலதான் இருக்கேன். நிமிஷத்துக்கு ஒரு முறை மாறுற குணம் எனக்கு இல்லை. சரி இப்போ எதுக்கு இப்படி தனியா கூட்டிட்டு வந்தீங்க. என் அண்ணன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான். நான் போறேன்”.
“நில்லு ஹாசி. நீ ஏன் இப்படி பண்ற. முதல்ல மாதிரி நீ என்கிட்ட பேசுறது கூட இல்ல. போன் பண்ணுனாலும் சரியா பதில் சொல்றது இல்ல”
“நமக்குள்ள பேச என்ன இருக்கு ஹர்ஷா. அதான் பேச வேண்டியது எல்லாம் அன்னைக்கே பேசி முடிச்சாச்சே. இன்னும் நமக்குள்ள பேச என்ன இருக்கு”
“இருக்கு ஹாசி. என்னை பேசவிட்டாதான் என்ன இருக்குன்னு தெரியும்”
“நமக்குள்ள எதுவும் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். இதுல உன்னை பேச விடறதால மட்டும் ஒன்னும் மாற போறது கிடையாது. நான் போறேன்” என்று செல்ல போனவள் கையை பிடித்து நிற்க வைத்த ஹர்ஷா “ஹாசி நான் சொல்றதை கொஞ்சம் கேளு”.
“ஹர்ஷா கையை விடு. எல்லாரும் பாக்கறாங்க.”
“பார்த்தா பார்க்கட்டும். நீ என் பொண்டாட்டி. உன் கையை நான் பிடிக்கறதுல எவன் என்ன கேட்க போறான்” என்றவன் அழுத்தமாக கேட்க,
அவனது பொண்டாட்டி என்ற வார்த்தையில் திகைத்து போனவள் அவனை விழி விரித்து பார்க்க,
“என்னடி என்ன பார்த்துட்டு இருக்க, நானும் போனா போகுதுன்னு விட்டா ஓவரா பண்ற. இங்க பாரு நீ என்கூடதான் இருக்க போற. நான் எடுக்கற புடவையதான் ஓகே பண்ண போற. அண்ணன் நொண்ணன்னு எங்கயும் போன அவ்வளவுதான் சொல்லிட்டேன். புரியுதா” என்றவன் அதிகார தொணியில் அவளுக்கு கோபம் வர,
“இங்க பாரு ஹர்ஷா நீ ரொம்ப ஓவரா போற, உன்கூட தான் இருக்கணும்னா என்ன அர்த்தத்துல சொல்ற, ஒரு வருஷத்துக்கு உன்கூட இருப்பேங்கறதுக்காக நீ ஆட்டி வைக்கற பொம்மையா நான் இருக்கணுமா? அதெல்லாம் என்னால முடியாது.
நான் என் இஷ்டத்துக்குதான் இருப்பேன். என்னை கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்காத அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றவள் கோபமாக கத்த,
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு அவள் ஒரு வருடம் என்று சொன்னது மேலும் கோபத்தை அதிகரிக்க,
“என்னடி பண்ணுவ ஹான்….என்ன பண்ணுவ”என்று கோபமாக அவளை நெருங்கி நிற்க, அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் “நான் என் அண்ணாகிட்ட சொல்லுவேன். முடிஞ்சா இந்த கல்யாணத்தை நி…..” என்று மேலும் பேச போனவளை அருகில் இருந்த ட்ரையல் ரூமிற்குள் தள்ளியவன் தானும் உள்ளே சென்று அவள் இடையில் கை வைத்து தன்னருகில் இழுத்தவன், மற்றொரு கரத்தால் அவளது முகத்தை தாங்கி அவள் மென் இதழ்களை முரட்டுதனமாக சிறை செய்தான்.
ஆணவனின் செயலில் விக்கித்து போனவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய துவங்க, அதை உணர்ந்தவன் மேலும் வன்முறையை அவன் இதழில் காட்ட, துடித்து போனவள் அவனை தன்னிடம் இருந்து விலக்க முனைய,
அதை உணர்ந்தவன் தன் உடலோடு அவளை மேலும் இறுக்க, வலியில் துடித்தவள் ‘ம்ம்ம்….’ என்று கத்த, மெதுவாக அவள் இதழில் இருந்து பிரிந்தவன் காதோரம் குனிந்து “ஒரு வருஷம் இல்ல. உன் வாழ்க்கை முழுக்க என்னோடதான் இருக்க போற. இனி ஒரு முறை ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு கல்யாணத்துக்கு வருஷம் குறிச்சுட்டு இருக்காத” என்றவன் சொல்ல,
பெண்ணவளோ அவன் செய்கையில் வாயடைத்துதான் போனாள்.
“அப்புறம்…. உன் அண்ணாகிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு சொன்னல்ல. போய் இதையும் சொல்லு.
எப்படியும் எங்க போனன்னு உன் அண்ணன் கேட்பான். அதுக்கு என்னை கட்டிக்க போறவன் தனியா தள்ளிட்டு போய் அவன் உடம்போட என்….”
“ஸ்டாப் இட் ஹர்ஷா. ஏன் இப்படி கேவலமா பிஹேவ் பண்ற”
“நானா பண்ணலடி நீதான் பண்ண வைக்கற”என்றவன் அவள் இதழில் துளிர்த்திருந்த இரத்தத்தை கண்டு அதை தன் இதழால் துடைக்கும் ஆர்வம் எழுவதை தடுக்க முடியாமல் தடுமாறியவள் முகத்தை திருப்பி தன் முடியை கோத,
இதுதான் சமயம் என்று நினைத்த ஹாசி வேகமாக அந்த ரூமில் இருந்து வெளியில் வந்தவள் தன் முகத்தை அழுத்தமாக துடைத்து அருகிலிருக்கும் சேரில் சோர்ந்து போய் அமர்ந்தாள்.
முகத்தை துடைத்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, அப்படியே இருந்தவள் மனம் முழுவதும் பல போராட்டங்கள்.’ஏன்? ஏன் இப்படி பண்றான்? அவனோட காதல் என்ன ஆனது? ஒரு வேலை என்னை அர்ச்சனாவாக நினைக்கிறானோ’ என்றவள் யோசிக்கும்போதே அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, உனக்காகவாடா காத்திருந்தேன் நீ என்னை ஏமாத்திட்ட ஹர்ஷா.
நீ லவ் பண்ண விஷயத்தை கூட ஓரளவு கடந்து வர முடிஞ்ச என்னால, உன்னோட இந்த நெருக்கத்தை ஏத்துக்க முடியல, என்னை எந்த எண்ணத்துல நெருங்கறனு எனக்கு சுத்தமா புரியல.
நீ நான் உருகி உருகி காதலித்தவன்தான், ஆனால்…நட்பு என்ற வட்டத்தில் எட்டி நிறுத்திவிட்டு இன்று இப்படி நெருங்கி வர காரணம் என்ன, இனி என்னோடுதான்னு சொல்றான்னே அதுக்கு அர்த்தம்தான் என்ன’ என்று புரியாமல் விழித்தவள் அப்படியே நின்றிருக்க,
அப்போது ஒரு கரம் அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்தது. யார் என்று நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் நின்றிருந்த ஹர்ஷாவை கண்டு விழிக்க,
அவனோ “நம்ம லைப்ல என்ன நடக்குதுன்னு நமக்கு தெரிஞ்சா மட்டும் போதும் ஹாசி. இனி உன் லைப்ல எனக்கு மட்டும்தான் முதலிடம். அண்ணன் ஆட்டுக்குட்டின்னு சுத்திட்டு இருக்காம, ஒழுங்கா இனி இங்கயே செட்டில் ஆக போறோம்ற மைண்ட் செட்ட வளர்த்துக்கோ. பிரியனுங்கற எண்ணத்தை குழி தோண்டி புதச்சுடு புரிஞ்சுதா. வா போலாம்”
“ஆனா…. ஹர்ஷா….. நீ….. உன்னோட……லவ்……”
“ஆமா நான்தான். என்னோட லவ்தான். அது முடிஞ்சு போன விஷயம். அதில் இருந்து எப்படி மூவ் ஆன் ஆகணும்னு எனக்கு தெரியும். நீ அதையெல்லாம் யோசிக்க தேவையில்ல” என்றுவிட்டு அதற்கு மேல் அவளை பேச விடாமல் புடவை எடுக்கும் இடத்திற்கு இழுத்து சென்றான்.
அங்கு மித்ரா பல புடவை காட்டியும் எதுவும் சொல்லாமல் ரஞ்சன் தங்கையை எண்ணி கவலையில் அமைதியாக இருக்க, கடுப்பான மித்ரா எதுவும் பேசாமல் அங்கிருந்த சேரில் போய் அமர்ந்துவிட்டாள்.
அவள் சென்ற பிறகுதான் தன் தவறை உணர்ந்த ரஞ்சன். மித்ரா அருகில் சென்று அமர்ந்து “என்ன ஆச்சு மிது எதுவும் பிடிக்கலையா” என்று கேட்க,
அவனை முறைத்தவள் “என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த நிரன். நான் வரலைன்னுதானே சொன்னேன். விடாப்பிட்டியா இழுத்துட்டு வந்துட்டு, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”.
“சாரி மிது. அது ஹாசி என்ன பண்றாளோன்னு….”
“என்ன பண்றளோன்னா என்ன அர்த்தம். என் அண்ணன் ஒன்னும் அவ்ளோ கேவலமானவன் கிடையாது. எத்தனை டைம் ரெண்டு பேரும் தனியா வெளிய போயிருக்காங்க தெரியுமா. இப்போ என்னவோ பூச்சாண்டி கூட உன் தங்கச்சிய அனுப்புன மாதிரி ஓவரா பண்ணிட்டு இருக்க.
நீ இப்படி பண்றது என் அண்ணனை அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு” என்று தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தில் கோபமாக சொல்ல,
தன் நெற்றியை தேய்த்தவன் ‘இவ வேற நேரம் காலம் தெரியாம பாச மழையை பொழிஞ்சுட்டு இருக்கா’ என்று புலம்பியவன் “சரி நான் ஒன்னும் உன் அண்ணன சந்தேகப்படல. என்ன இருந்தாலும் என் தங்கச்சில அதான் கொஞ்சம்,….. சரி அதைவிடு. இப்போ வா போய் புடவை செலக்ட் பண்ணலாம்”.
“இல்ல. நான் வரல. உனக்கு உன் தங்கச்சிதானே முக்கியம். அவளையே யோசிச்சிட்டு இரு. நான் ஆபிஸ்க்கே போறேன். இப்போ நான் சொல்றது ஹாசி மேல இருக்க பொறாமைனால இல்ல. என்னைப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலங்கறதுக்காகதான்” என்றவள் செல்ல போக, சரியாக அதே நேரம் ஹாசி தோளில் கை போட்டவாறு அங்கு வந்து சேர்ந்தான் ஹர்ஷா.
“என்ன மித்து புடவை செலக்ட் பண்ணிட்டீங்களா” என்க,
மித்ராவோ ஹாசியை ஒரு பார்வை பார்த்தவள் பின் “இல்லண்ணா சேரி கல்யாண புடவை செலக்ட் பண்றதை விட, அவருக்கு யோசிக்க முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு. அதையெல்லாம் அவர் யோசிச்சு முடிக்கட்டும் அப்புறம் எடுத்துக்கலாம். இல்லைன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை.
அம்மா எடுத்துட்டு வரட்டும் அதை நான் கட்டிக்கறேன். இப்போ நான் ஆபிஸ் கிளம்பறேன்” என்று செல்ல போனவளை கண்டு ரஞ்சன் திகைத்து போய் நிற்க,
அவர்கள் முகத்தை வைத்தே இருவருக்குள் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா. அதை வெளியே காட்டி கொள்ளாமல் “அட வா மித்து. உன் ஆளுக்கு பார்த்து செலக்ட் பண்ண தெரியாதுதான். அதுக்காக அப்படியே விட முடியுமா. நீதான்டா உன் கல்யாணத்துல ஹீரோயின். நீ கட்டற புடவை உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்ல, அம்மா டேஸ்ட் எப்படி இருக்கும்னு அப்பாவை பார்த்தா தெரியலையா.
நான் செலக்ட் பண்ணி தரேன் வா” என்றுவிட்டு அழைத்து செல்ல, மித்ரா அண்ணன் தங்கை இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹர்ஷாவுடன் நடந்தாள்.
ரஞ்சன் தலையை இரு புறமும்ஆட்டி கொண்டு செல்ல போக, அவனை தடுத்த ஹாசி “என்ன ஆச்சு ரஞ்சு? ஏன் மித்து இப்படி பார்த்துட்டு போறா” என்று கேட்க,
ரஞ்சன் நடந்ததை சொல்ல, அவனை முறைத்த ஹாசி “என்ன ரஞ்சு ஏன் இப்படி பண்ணுன? மித்து எவ்ளோ ஆசையா வந்திருப்பா”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. வர மாட்டேன்னு இருந்தவள நான்தான் ஆபிஸ்ல போய் கூட்டிட்டு வந்தேன். இப்போ கோவமா இருக்க. அதெல்லாம் அவளை நான் ஈஸியா சமாளிச்சுடுவேன். எங்க போயிட போறா பார்த்துக்கலாம் வா”
“இல்ல ரஞ்சு. நீ பண்ணுனது தப்புதான்”
“சரி தப்புதான். இனி என்ன பண்ண முடியும் பார்த்துக்கலாம். ஆமா அந்த லூசு என்ன சொன்னான். பெரிய இவனாட்டம் பேசிட்டு போறான்.
“பேசறது மட்டும் இல்ல. செயலையும்நான் பெரிய இவன்தான். பாரு உன் தங்கச்சிக்கு அழகான புடவை செலக்ட் பண்ணிட்டேன். ஹாசி இங்க பாரு நல்லா இருக்கா” என்று ஆகாய நீல வண்ண பட்டு புடவையை அவள் முன் நீட்ட,
அந்த புடவையும் கலரும், அதில் இருக்கும் டிசைனும் அவளுக்கு மிகவும் பிடித்து போக, அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாளே தவிர வாயை திறந்து எதுவும் பேசவில்லை.
ரஞ்சன் அவனை பார்த்து முறைக்க “என்ன மச்சான் ரொம்ப பாசமா பாக்கற மாதிரி இருக்கு. இந்த பார்வை எல்லாம் என் தங்கச்சியோட நிப்பாட்டிக்கோ. அப்புறம் உன் ஆளு அங்க தனியா புடவை பார்த்துட்டு இருக்கா. நீ போ. அந்த பொண்ணு புடவை கட்டிவிடறேன்னு சொல்லுச்சு. வா ஹாசி நாம போகலாம்” என்றவன் அவளை இழுத்து சென்றுவிட்டான்.
அதன் பின் ரஞ்சன் மித்ராவிடம் எவ்வளவோ கெஞ்சியும் மலை இறங்காதவள் அமைதியாக இருக்க, அதில் கடுப்பானவன் “என்னடி ஏன் ஓவரா பண்ற. அதான் சாரி கேட்கறேன்ல”
“சாரி கேட்டா சரியா போச்சா. நீங்க என்னமோ என் அண்ணன மோசமானவன் மாதிரி ட்ரீட் பண்றீங்க. இது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உங்களை லவ் பண்றேன்தான் அதுக்காக என் அண்ணனை விட்டு குடுக்க முடியாது.
அவன் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை. உங்க வீட்டு மருமகனும் கூட, அவனுக்கான மரியாதையை கண்டிப்பா நீங்க குடுத்துதான் ஆகணும். இனி என் அண்ணனை மரியாதை குறைவா பேசுனீங்கன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்றுவிட்டு தன் தாயின் அருகில் சென்று நின்றுவிட்டாள்.
மகளை பார்த்த பத்மா “என்ன மித்து சேரி எடுத்தாச்சா” என்று கேட்க,
ரஞ்சன் அதன்பின் தன் தவறை உணர்ந்தவன் மித்ராவிடம் பேச முயற்சி செய்ய, அவளோ பத்மாவைவிட்டு நகரவில்லை.
அதன்பின்னான நேரம் அனைவருக்கும் உடைகளை எடுப்பது, உடை அளவு சரியாக இருக்கிறதா என்று போட்டு பார்ப்பது என நேரம் செல்ல துவங்கியது.
ஒருவழியாக உடையை எடுத்தவர்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர். அதன்பின் இரு ஜோடிகளும் சந்தித்து கொள்ளவே இல்லை.
காலை மண்டபத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட இரு ஜோடிகளும் அமைதியான பார்வையோடு இருந்தனர்.
ஐயர் மங்கள நாணை அணிவிக்க சொல்ல, இரு ஆண்களும் ஒன்று போல் தன் இணையின் சம்மதத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் முகத்தை பார்க்க,
மித்ரா மென்மையான சிரிப்பை உதிர்த்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் என்றால் ஹாசியோ ஆணவனின் கண்களை ஆழ்ந்து பார்த்து தன் பல வருட கனவு நினைவேற போகிறது என்ற எண்ணத்தில் கண்கள் மின்ன தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவிக்க,
ஆண்கள் இருவரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பெண்கள் கழுத்தில் மங்கள நாணை பூட்டினர்.
இதை அனைத்தையும் நினைத்து பார்த்த ஹாசி வேண்டுமென்றே அங்கிருந்த ஒரு ஜீன்ஸை எடுத்து அணிந்து கொண்டு தயரானாள் ஏர்போர்ட் செல்ல,
இவ எதுக்கு இப்போ ஏர்போர்ட் போறா, இந்த பாட்டிகிட்ட வேற என்னவோ சொல்லி அனுப்புனா என்னன்னு தெரியலியே சரி. வழக்கம் போல அடுத்த எபில பார்க்கலாம்.