“ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.
ஹாசி அவனை காயப்படுத்த வேண்டுமென்றுதான் பேசினனாள். ஆனால் அவன் கையை பிடித்தவுடன் அவள் காதல் மனம் மகிழ, அமைதியாக அவன் பின்னோடு சென்றாள்.
இருவரும் சென்று நின்ற இடத்தில் இருந்த பெண் பல புடவைகளை எடுத்து காட்ட, ஹாசியோ அமைதியாக இருந்தாள்.
“என்ன ஹாசி ஏன் அமைதியா இருக்க. புடவையை பாரு”.
“ஹர்ஷா எனக்கு புடவைபத்தி ஒன்னும் தெரியாது. அதனாலதான் அம்மாவ எடுக்க சொல்றேன்னு சொன்னேன். நீதான் என்னை இழுத்துட்டு வந்த. இப்போ வந்து எடுன்னா எப்படி எடுக்க” என்றவள் குறைப்பட,
அவனோ புருவத்தை தேய்த்தவன் நாலைந்து சேலைகளை கலைத்து போட்டு ஒன்றும் செட் ஆகவில்லை என்று உச்சு….. கொட்டியவன்.
அந்த பெண்ணிடம் “லெஹங்கா செக்ஷன் எங்க இருக்கு “ என்று கேட்டு அங்கு அவளை அழைத்து சென்றான்.
“ஆனா….. ஹர்ஷா அத்த சேரிதான் எடுக்க சொன்னாங்க”.
“இல்ல. எனக்கு என்னவோ பிடிக்கல. உனக்கு லெஹங்கா நல்லா இருக்கும். நாம அதையே பார்க்கலாம்” என்றுவிட்டு செல்ல, தனக்கு எது நல்லா இருக்கும் என்று தெரிந்து வைத்திருக்கும் தன்னவனை மனதில் கொஞ்சி கொண்டாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் அவனுடன் சென்றாள்.
நான்கைந்து லெஹங்காவை எடுத்து பார்த்தவன் அதில் மெரூன் நிறத்தில் இருந்த அழகான லெஹங்காவை செலக்ட் செய்தவன் அதை அணிந்து வர சொல்ல,
அவன் ஆடை தேர்வில் வியந்து போனவள் வெளியில் சாதாரணமாக தோள்களை குலுக்கி கொண்டுசென்றவள் அதை அணிந்து வர,
மெரூன் நிற லெஹங்காவில் வெண்ணிற இடை தெரிய, அழகு தேவதையாக வந்தவள் அழகை கண்டு அயர்ந்துதான் போனான் ஆணவன்.
எப்படி இருக்கிறது என்று கேட்பவளுக்கு பதில் அழிக்கமால் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
காளையவனின் பார்வை பெண்ணவள் மனதை சில்லென்று தாக்க, “ஹர்ஷா……” என்று அவள் தோளை தொட்டு உலுக்க,
‘என்ன……’ என்றவனிடம் எப்படி இருக்கிறது என்றவள் கேட்க, அவனோ “ம்ம்ம்……சூப்பர்” என்றான் விழிகள் விரிய,
அவன் சொன்ன தொணியில் உண்டான மகிழ்ச்சியை வெளிக்கட்டாமல் சாதரணமாக “சரி…. ஓகே. நான் போய் மாத்திட்டு வரேன்” என்றுவிட்டு போய் விட,
‘நான்சூப்பர்னு சொன்னதுக்கு உன்னோட ரியாக்ஷன் இவ்ளோதானா’ என்று நினைத்தவன் செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது அவர்களை காணாமல் தேடி வந்தனர் பத்மாவும், ரேவதியும். “ஹர்ஷா என்ன இங்க நிக்குற. புடவை எடுக்கலையா” என்று பத்மா கேட்க,
“ம்ம்ம்….. கல்யாணம் வேண்டாம்…. வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ பொண்டாட்டிக்கு மாஞ்சு மாஞ்சு ட்ரெஸ் செலக்ட் பண்றான் பாரு” என்று தனக்குள் சொல்லி கொண்டவர் வெளியே மென்மையாக சிரித்து மட்டும் வைத்தார்.
ரேவதி, “ஹாசிக்கு லெஹங்கா எடுத்துட்டு மித்ராக்கு சேரி எடுத்தா நல்லா இருக்காது. அவளுக்கும் லெஹங்காவே எடுக்கலாம்” என்றார்.
இங்கு மித்ராவோ ரஞ்சனிடம் மாட்டி கொண்டு விழித்து கொண்டிருந்தாள்.
“நிரன் இந்த கலர் நல்லா இருக்கு”
“இல்ல. இதுல டிசைன் நல்லா இல்ல”.
“அப்போ இது………”
“ம்கூம்…. இதுல பார்டர் நல்லா இல்ல” என்று ஒவ்வொரு புடவையாக ஒதுக்கி வைத்தவனை கண்டு கடுப்பான மித்ரா “நிரன் உனக்கு சேரி செலக்ட் பண்ண தெரியுமா…. தெரியாதா. எதை எடுத்தாலும் எதாவது குறை சொல்லிட்டு இருக்க. இப்போ புடவை எடுக்கலாமா வேண்டாமா?”
“வேண்டாம்”
“வேண்டாமா!!!!”
“ஆமா. வா…. நாம வேற பார்க்கலாம”.
“வேற என்ன பார்க்க போறீங்க “
“வா சொல்றேன்” என்றவன் லெஹங்கா இருக்கும் இடத்திற்கு வந்தான்., அங்கு நின்றிருந்த தங்கையை கண்டு “என்ன ஹாசி இங்க நிக்குற. புடவை…..”
“இல்லண்ணா. லெஹங்காதான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி ஹர்ஷா செலக்ட் பண்ணிட்டான்” என்று சொல்லும்போதே அவள் தலையில் கொட்டு விழுந்தது.
யார் என்று திரும்பி பார்க்க. ரேவதிதான் அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தார்.
ரஞ்சன்,“என்னம்மா? எதுக்கு ஹாசிய கொட்டுனீங்க?”
“பின்ன என்னடா இன்னும் மாப்பிள்ளைய பேர் சொல்லி, வாடா போடான்னு சொல்லிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். ஒழுங்கா மரியாதையா பேசு ஹாசி” என்ற தாயை உதட்டை பிதுக்கி அவள் பார்க்க,
ஹர்ஷாவோ “இல்ல அத்த பரவால்ல. அவளுக்கு எப்படி வருதோ அப்படியே கூப்பிடட்டும். போர்ஸ் பண்ணாதீங்க. நீங்க கல்யாணம் பேசறத்துக்கு முன்னாடில இருந்தே நாங்க பிரண்ட்ஸ்.
அவ அப்படி கூப்பிட்டாதான் எனக்கும் பிடிக்கும். மரியாதை குடுத்து பேசுனா வேற யாரு கூடயோ பேசற மாதிரி இருக்கும்” என்றவன் அங்கிருந்து செல்ல,
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ரேவதி, “என்ன மித்ரா நீ சேரி செலக்ட் பண்ணிட்டியா”
“அ…. அது…. வந்து ஆண்டி உங்க பையன்தான் எதுவும் பிடிக்கலைன்னு இங்க கூட்டிட்டு வந்தாரு”.
ரஞ்சன் “ம்மா…. நீங்க போங்க நாங்க செலக்ட் பண்ணிட்டு வரோம்” என்றவன் அங்கிருந்த லெஹங்காவில் பாதியை எடுத்து மித்ராவிடம் அணிந்து வர சொல்ல, அவளோ கண் விழி பிதுங்கி போனாள்.
“என்ன….. இவ்ளோவா……”
“கள்ளி……ஆசைய பாரு. இது எல்லாம் ஒவ்வொன்னா போட்டு காமி எது நல்லா இருக்கோ அதை மட்டும் எடுப்போம். விட்டா என் பேங்க் அக்கவுண்ட்ல இருக்க எல்லாமே காலி பண்ணிடுவா போல” என்று சொல்ல,
மித்ராவோ “நிரன் இவ்ளோ எல்லாம் என்னால போட முடியாது. நீங்க பர்டிகுலரா ரெண்டு மூணு எடுத்து தாங்க நான் போட்டு பார்க்கறேன்”
“நான் கொடுத்தது எல்லாமே பர்டிகுலரா நான் செலக்ட் பண்ணுனதுதான். போ தேவையில்லாம பேசாம போய் போட்டுட்டு வா. ஹாசி வா நாம அந்த சேர்ல உட்கார்ந்து பார்க்கலாம்” என்று தங்கையை அவன் அழைத்து செல்ல,
அவளோ’என்னடா சொல்றீங்க. ஏதோ கிரிக்கெட் மேட்ச் பாக்கற மாதிரி உட்கார்ந்து பார்க்கலாம்னு சொல்றீங்க. ஹையோ….. இப்பயே எனக்கு கண்ண கட்டுதே” என்று ட்ரையல் ரூமிற்குள் சென்றவள் ஒவ்வொரு உடையாக போட்டு வர துவங்கினாள்.
அண்ணன் தங்கை இருவரும் ஒரு சேர அடுத்து அடுத்து என்று சொல்லி அனைத்தையும் போட வைத்து கடைசியாக மித்ரா மூன்றாவதாக போட்டு வந்த உடையை செலக்ட் செய்ய,
அவளோ “இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று பாவம் போல் கேட்க,
“எல்லாமே போட்டாதானே எது நல்லா இருக்குன்னு தெரியும்” என்று இருவரும் ஒன்று போல் சொல்ல, மித்ராவிற்குதான் எங்கயாவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.
அப்போது அவள் காதருகில் குனிந்த நிரஞ்சன்”இனி போன் பேசும்போது கட் பண்ணுவியா. என் பக்கம் கூட பார்க்காம அம்மா பின்னாடி சுத்துவியா” என்று நக்கல் குரலில் கேட்க,
அடப்பாவி அதுக்குதானா இது என்பது போல் பார்க்க, ‘ஆமாம்’ என்பது போல் பதில் அளித்தவன் முன்னால் சென்றுவிட,
மித்ராவோ’இனி உன்கூடயே இருக்கேன்டா. என்னால முடியல. என்று உடை மாற்றி வந்தே சோர்ந்து போனவளாய் ரஞ்சன் பின்னால் ஓடினாள்.
ஒருவழியாக அனைவரும் உடை எடுத்து முடிய. சாப்பிட ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு ஹர்ஷா பக்கத்தில் அமர போன மித்ராவை ரஞ்சன் ஒரு பார்வை பார்க்க,’ஆத்தி……எதுக்கு வம்பு அவன்கிட்டயே உட்காருவோம்’ இருந்தாலும் இப்போல்லாம் இந்த பையன் ரொம்ப படுத்தறான். என்று அவனை மனதில் திட்டி கொண்டே ரஞ்சன் அருகில் போய் அமர்ந்தாள்.
“என்ன பேபி. உன் அண்ணன் பக்கத்துல உட்காருவ அதை ஷாக்கா வச்சு நைட்டு உன் ரூமுக்குள்ள வந்திடலாம்னு பார்த்தேன். இப்படி என்னை ஏமாத்திட்டியே” என்று சோகம் போல் சொல்ல,
மித்ராவோ “நிரன் வர வர நீங்க கொஞ்சம் கூட சரியில்ல. என்ன இப்படி பண்றீங்க” என்று கேட்க,
அவனோ “நான் இன்னும் ஒன்னுமே பண்ண ஆரம்பிக்கலடி அதுக்குள்ள இப்படி பண்றீங்கன்னு சொல்ற. கல்யாணத்துக்கு அப்புறம் பாரு ஐயா பர்பாமன்ஸ” என்று காலரை தூக்கி விட,
‘இவருகிட்ட பேசறதுக்கு அந்த செவுத்தில முட்டிக்கலாம். உனக்கு இதல்லாம் தேவையாடி மித்து பேசாம சாப்பிடு’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் அதன்பின் அமைதியாக,
ரஞ்சன் விடாமல் எதாவது பேச அவளோ’உன்கிட்ட பேசுனாதானடா ஏடா கூடமா பதில் சொல்லுவ. வாய திறக்க மாட்டனே’ என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
உஷாராகிட்டடா…உஷாராகிட்டா.. என்று சொல்லி கொண்டான் ரஞ்சன்.
அதே சமயம் அண்ணன் அருகில் அமர்ந்த ஹாசி போன் வரவும் அதை எடுத்து கொண்டு சென்றவள் பேசி முடித்து மீண்டும் அமர செல்ல, அவள் கையை பிடித்து தடுத்த ஹர்ஷா தன் அருகில் இருக்கும் சேரில் இழுத்து அமர வைக்க, அவளோ அவனையே யோசனையாக பார்த்தாள்.
மற்றவர்கள் அதை பார்த்தாலும் பார்க்காதது போல் இருந்து கொள்ள, ஹாசியோ இவன் என்ன ட்ரை பண்றான் என்று புரியாமல் இருந்தாள்.
ஹர்ஷாவோ ஹாசிதான் அவன் மனைவி இனி வரும் காலங்களில் அவள் அருக்காமையில் அதிகம் இருக்க வேண்டி இருக்கும் அதனால் இப்போதில் இருந்தே அவளுடன் இருக்க பழகலாம் என்று அவர்களின் எதிர்கால காதல் வாழ்க்கைக்கான முதல் படியில் காலை எடுத்து வைத்தான்.
ஹார்ஷா முயற்ச்சித்தால் மட்டும் போதுமா? ஹாசி என்ன நினைக்கிறாள் என்று தெரிய வேண்டாமா.
ஹர்ஷா முடிவிற்கு ஹாசி ஒத்து கொள்வாளா. இல்லை ஒரு வருடம் முடிந்தது என்று பிரிந்து செல்வாளா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.