அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்றான்.
ஹையோ…. இப்போ என்ன பண்றது. இவன்கிட்ட பேசி தெளியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடுமே. ஹாசிக்கு இவன் லவ் விஷயம் தெரியுமா… தெரியாதா…. அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளான்னு வேற தெரியலையே. இந்த அம்மா வேற அதுக்குள்ள வந்து தொரத்திவிட்டுட்டாங்க.
ஹாசிக்கு போன் பண்ணி பேசலாமா…. இல்ல…. இல்ல….. வேண்டாம்’ அவளுக்கு அண்ணன் லவ் விஷயம் தெரியலைன்னா நாமளே உளறுன மாதிரி ஆகிடும். அவ அண்ணனை லவ் பண்றா அதனால ஓகே சொல்லிடுவா ஆனாலும்……. சரி லைட்டா அவகிட்ட போட்டு வாங்க முடியுதான்னு பார்க்கலாம்’ என்று யோசித்தவள் அவளுக்கு போனை போட. அது போகாமலே கட் ஆனது.
‘ம்ப்ச்…. இவ போனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. ஏன் போனே போகல. சரி….. நிரன்கு போன்பண்ணி பேசி பாக்கலாம்’ என்று நினைத்தைவள் போனை எடுக்க, பின் நினைவு வந்தவளாக அச்சச்சோ ….. இவன் லவ் விஷயம் தெரிஞ்சா அவன் என்ன ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலையே.
இந்த விஷத்தை சொல்லாம, கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்னு பேச ஆரம்பிப்போமா….. ம்ம்…. வேற வழி இல்ல. அப்படியே ட்ரைபண்ணி பார்ப்போம். அப்படியே ஹாசி போன்க்கு என்ன ஆச்சுன்னு கேட்கலாம்’ என்று நினைத்தவள் அவனுக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.
ரஞ்சன் தங்கை சொன்ன விஷத்தைபற்றி யோசித்து கொண்டிருக்க போன் அடித்தது. யார் என்று எடுத்து பார்த்தவன் மிது பேபி என்று வரவும் மணியை பார்த்தான். அது இரவு பத்து என்றது. என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்கா. காரணம் இல்லாம இவ கூப்பிடமாட்டாளே’ என்று யோசனையானவன் முன் வந்த அவன் மனசாட்சி ‘பேசுனா தெரிய போகுது. அதுக்கு எதுக்குடா என்னமோ நாசல சைன்டிஸ்ட் யோசிக்கற மாதிரி யோசிச்சுட்டு இருக்க,என்ற மனசாட்சியை முறைத்தவன் ‘எனக்கு தெரியும் நீ மூடு’ என்றுவிட்டு போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.
“ஹேய் மிது செல்லம் என்ன கல்யாணம் பிக்ஸ் ஆனதுல இருந்து மாமா நியாபகம் அதிகமா வருதோ. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க” என்க,
அவளோ ‘ம்கூம்…நான் இருக்க நிலைமைக்கு உன் நியாபகம் ஒன்னுதான் குறை’ என்று மனதில் நினைத்தாலும் வெளியே “ நிரன் விளையாடாதீங்க. ஹாசி போன் என்ன ஆச்சு அவளுக்கு கூப்பிட்டேன் போகல” என்று பேச்சை துவங்க,
அவனோ கடுப்பாக “அப்போ என்கிட்ட பேச போன் போடல. ஹாசிக்கு போட்டு எடுக்கலைன்னுதான் எனக்கு கூப்பிட்டு இருக்க” என்றவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்தவள் “ஹிஹிஹி….. என்ன நிரன் எனக்கு உங்க நியாபகமாதான் இருந்தது. அதான் கூப்பிட்டேன். சரி ஹாசியபத்தி பேச ஆரம்பிக்கலாம்னு அவள கேட்டேன். நீங்க என்னன்னா கோபப்படுறீங்க சரி விடுங்க. நீங்க என்ன பண்ணுறீங்க” என்று கேட்க,
அவனோ கிண்டலாக “ம்ம்…. இப்போதான் உன் சின்ன இடுப்புல …….”
“எதே……” என்று அதிர்ந்து போய் கத்தியவள் குரலில் வந்த சிரிப்பை அடக்கியவன் “ஆமாடி என்னோட கையா……உன்னோட….. சின்ன……”
“ஸ்டாப்……ஸ்டாப்….. நிரன் என்ன பேசுறீங்க. இப்படிதான் என்கிட்ட பேசறதா”
“உன்கிட்ட பேசாம வேற யார்கிட்டடி பேச முடியும். நீதானே என்ன பண்றன்னு கேட்ட, அதான் கனவுல உன்கூட குடும்பம் நடத்துறேன்னு சொன்னா நல்லாவா இருக்கும். அதான் டீடெயிலா சொல்றேன்”.
“அதெல்லாம் ஒரு டீடெயிலும் எனக்கு தேவையில்ல ஆள விடுங்க” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து கொண்டு சொன்னாள்.
“இல்லடி மிது குட்டி நீ ஒரு கேள்வி கேட்டு நான் பதில் சொல்லலன்னா நல்லாவா இருக்கும்”
“அதெல்லாம் நல்லா இருக்கும். யப்பா சாமி தெரியாம கேட்டுட்டேன். வேணா வாயிலேயே நாலு அடி நானே போட்டுக்கறேன் போதுமா”.
“நீ ஏன்டி அடிச்சுக்கற. நான் தரேன் அதுக்கு தண்டனை. உன்னோட அந்த குட்டி உதட்டை என்னோட பல்லால……” என்னும்போதே பட்டென்று போனை கட் செய்த மித்ராவிற்கு பயத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
‘ஆத்தி என்ன இவன் இப்படி ஏடா கூடமாவே பேசறான். இது எங்க போய் முடிய போகுதோ தெரியல. ம்கூம்…. இனி கல்யாணம் முடியற வரைக்கும் இவனுக்கு போனே பண்ண கூடாது. போன் என்ன போன்னு நேர்ல பார்த்தா கூட பேசாம ஓடிடணும். அதுதான் நமக்கு நல்லது.
லவ் பண்ண ஆரம்பிச்சு இந்த ரெண்டு வருஷத்துல அப்பப்போ தொட்டு பேசுனாலும். போன்ல இப்படி எல்லாம் பேச மாட்டானே. நல்லாதானே இருந்தான். இப்போ மட்டும் என்ன ஆச்சு இவனுக்கு. உண்மைய ஓபனா ஒத்துக்கணும்னா அவன் நேர்ல வந்து சொன்னதை செஞ்சா கூட நான் இந்த அளவுக்கு டர்….. ஆகியிருக்க மாட்டேன். ஆனா….. பேசியே வேர்க்க வைக்கறான்’ என்று வேர்த்த நெற்றியை துடைத்து கொள்ள, அதே நேரம் அவள் போன் மணி அடித்தது.
யார் என்று பார்க்க ரஞ்சன்தான் அழைத்தான். ’இவரா……பேசுன வரைக்குமே வேர்த்து விறு விறுத்து போச்சு. இனி மறுபடியும் பேசுனாருன்னா நான் அவ்வளவுதான்.
ம்கூம்…. போனை அட்டன் பண்ணவே கூடாது’ என்று முடிவெடுத்தவள் போனில் மின்னும் அவளவன் பெயரையே பார்த்து கொண்டிருந்தாள்.
மித்ரா இப்படிதான் செய்வாள் என்று தெரிந்த ரஞ்சன் ஒரு மெசேஜை தட்டிவிட்டு கூலாக ஒன்…டூ…. த்ரி… என்று எண்ண துவங்க அவன் போன் இப்போது அடித்தது. வேறு யாரு மித்ராதான் கிண்டலாக சிரித்தவன் அதை அட்டன் செய்து “என்ன செல்லம் அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன். வண்டிய ஸ்டார்ட் பண்ண போறேன்” என்றவாறு பெட்டில் சாய்ந்து படுக்க,
‘ஆத்தி’ என்று நெஞ்சில் கை வைத்தவள் “இப்போ எதுக்கு வர்றீங்க. அதான் நான் போன் பண்ணிட்டேன்ல. ப்ளீஸ் நிரன் வீட்டுக்குள்ள போங்க. நீங்க எங்கயும் வர வேண்டாம் “
“அதெல்லாம் முடியாது. என் பொண்டாட்டிய நான் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் பிடிவாதமாக சொல்ல,
‘பேசாம தூங்கி இருக்கலாம். நானே வந்து மாட்டிக்கிட்டேனே’ என்றவாறு தலையில் அடித்து கொண்டவள் “ப்ளீஸ் நிரன் சொன்னா கேளுங்க”.
“முடியாது”
“ஹையோ…நிரன் ப்ளீஸ்….”
“சரி நீ இவ்ளோ கெஞ்சரதால யோசிக்கலாம்னு இருக்கேன்……” என்றவுடன் அவள் முகத்தில் வெளிச்சம் பரவ,
நிம்மதி நிறைந்த குரலில் “யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம் நிரன் நல்லா யோசிங்க” எப்படியோ அவன் வராம இருந்தா போதும். இந்த ஹர்ஷா வேற ஒருமாதிரிஇருக்கான். அவன் கண்ணுல சிக்குனா அவ்ளோதான்’ என்று தனக்குள் நினைத்து கொண்டவள் அமைதியாக இருக்க,
அவனோ நக்கலாக சிரித்து “ஆமா…. ஆமா…. எனக்கும் தெரியும். யோசிக்கறது நல்லதுன்னு. சரி நல்லா யோசிச்சுட்டேன். இப்போ நான் அங்க வராம இருக்கணும்னா……. “
“இருக்கணும்னா…….”
“நீ……”
“நான்……”
“என்னை……”
“உன்னை…….”
“……………”
“சொல்லு நிரன் என்ன ஆச்சு? நான் உன்னை……ஒழுங்கா சொல்லு எதுக்கு இப்படி இழுத்துட்டு இருக்க?.” என்றவள் கோபமாக. கேட்க,
“ம்ம்….. சொல்றேன்…சொல்றேன். அது ஒன்னும் பெரிய வேலை இல்ல. உன்னால கண்டிப்பா முடியும்”
“நீ முதல்ல என்ன வேலைன்னு சொல்லு. என்னால முடியுமா…. முடியாதான்னு நான் சொல்றேன்”.
“கள்ளி…. எவ்ளோ அவசரம் பாரு” என்றவன் சொல்ல, அவளிடம் இருந்து ஒரு உச்சு சத்தம் வந்தது.
“சொல்றேன்…. சொல்றேன். நீ நாளைக்கு என்னை பார்க்கும் போது இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தருமோ……”
“எதே……”
“ஹேய்…. மிது….. மிது….. இருக்கியா…. மிது….”
“ஹான்……”
“என்ன ஆச்சு எத்தன டைம் கூப்பிடறேன்”
‘இப்பயும் ஹும்னு கேட்காமலேயே இருந்திருக்கலாம். ஆனாலும் இவன் என்னை அதிகம் வச்சு செய்யறான்’ என்று மனதுக்குள் புலம்பியவள் வெளியே “நிரன் ப்ளீஸ் நான் ஒரு முக்கியமான விஷயம் பேச போன் பண்ணுனேன். நீ என்னடான்னா என்னை பேசவே விட மாட்டிக்கிற”
“அவ்வா….. அவ்வா….. “ என்று வாயில் அடித்தவன் “ஏன்டி இப்படி பொய் சொல்ற. நான் என்னவோ உன்னை பேச விடாம லிப் லாக் போட்ட மாதி……. “ என்று கரகரப்பான குரலில் கேட்கும்போதே அந்த பக்கம் அவள் போனை கட் பண்ணியதற்கான அறிகுறியாக பீப் சத்தம் கேட்டது.
‘ வச்சிட்டா ம்கூம்…. இதுக்கே இந்த திணறு திணரறா. இவளை கல்யாணம்பண்ணி அப்புறம் நடக்க போற சம்பத்துவத்துக்கு எல்லாம் என்ன ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலையே.
ஊர்ல எவ்ளோ பொண்ணுங்க என் பின்னாடி சுத்தி வந்துச்சுங்க. அதுவும் எல்லாம் பாரின் பொண்ணுங்க வேற. அவங்களை எல்லாம் விட்டுட்டு என் தலையெழுத்து இவ கூட குப்பை கொட்டணும்னு இருக்கே. சரியான இம்சை அதுவும் அழகான இம்சை’ என்று முணு முணுத்தவன் ‘இன்னைக்கு அவளை வம்பிலுக்கற கோட்டா முடிஞ்சுது’என்றுவிட்டு அப்படியே உறங்கி போனான்.