அத்தியாயம் -23

ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார்.

‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள்.

அப்போது அங்கு அவளுடன் பணி புரியும் கார்த்திக் வர,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சினேகமாக சிரித்து கொண்டனர்.

“என்ன ஹாசி இந்நேரத்துக்கு நீ கம்பியூட்டர் கூடல்ல மல்லுகட்டிக்கிட்டு இருப்ப. என்ன திடீர்னு கேன்டீன் பக்கம் காத்து அடிக்கிது”.

“ஹே கார்த்தி …. நான் வர்றது இருக்கட்டும். நீ எங்க இங்க”

“நான்லாம் ஆபிஸ் வர்றதே இந்த கேன்டீன்காக மட்டும்தான். நீ இங்க வந்ததுதான் ஆச்சர்யம்”

“ம்ம்…. அது சரி. என்னை மட்டும் இந்த கம்பெனிக்கு நேந்துவிட்ருக்காங்களா என்ன. எப்போ பாரு வேலை செஞ்சுட்டே இருக்க. நான்லாம் கெஸ்டு ஒர்க்கர். வந்த பிராஜெக்ட் முடிஞ்சுதுன்னா கிளம்பிடுவேன். நீங்க அப்படியா? இங்கயே எப்போவும் ஒர்க் பண்ண போறவரு. நீங்களே இங்க வரும்போது நான் வர கூடாதா? என்ன ஒரு அநியாயம்”.

“இந்த மாதிரி விஷயம் எல்லாம் அடிக்கடி சொல்லும்மா. அப்போதான் வேலைக்கு வரோம்ங்கற பீலே வருது”.

“ஏன் கார்த்திக் அப்படி சொல்றீங்க”.

“இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம். எனக்கு இப்போதான் இறுபது….” என்று சொல்ல வந்தவன் பெண்ணவள் முறைப்பை கண்டு “கொஞ்சம் ஓவரா இருக்கோ……” என்று அசடு வழிந்தவாறு கேட்க,

அவளோ “கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர்….” என்றாள்.

“சரி ஓகே. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் டுவன்ட்டி பைவ் ஓகேவா” என்று கேட்க, அவளோ ‘இவன் என்ன லூசா. இவன் வயச நம்மகிட்ட கேட்குறான்” என்பது போல் பார்த்து வைக்க,

அவனோ “லூசு எல்லாம் இல்ல. உன்னோட நான் சின்ன பையன்தான். அதனால மரியாதை தேவையில்லைனு சொல்ல வந்தேன். அதுக்குள்ள என்ன கொண்டு போய் கீழ்பாக்கத்துல சேர்த்துருவ போல”

“எதே….. என்ன விட சின்ன பையனா. உங்களுக்கு ஸ்கூல் போற பொண்ணு இருக்குன்னு கேள்வி பட்டேன்”

“எது….. எனக்கு பொண்ணா…. எவண்டா இப்புடி ரூமர கிளப்பி விட்டது. நான் இன்னும் கமிட்டட் கூட ஆகல” என்று பதற,

ஹாசியோ அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.

அவள் சிரிப்பில் உள்ள கிண்டலை புரிந்து கொண்டவன் “அம்மா தாயே உன்னைவிட சின்ன பையன்னு சொன்னது தப்புதான்ம்மா. அதுக்குன்னு போற போக்குல இப்படி குண்ட தூக்கிப்போட்டுட்டு போயிடாத.

என்னையும் ஒரு ஆளா மதிச்சு பார்கற பொண்ணுங்க கூட, பார்க்காம போயிடும். அப்புறம் லைப் ஒரே ட்ரையா போகும். எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். இப்படி எல்லாம் சத்தமா கூட சொல்லிடாதம்மா தாயே. மீ பாவம்” என்று பாவம் போல் சொல்ல,

அவன் சொன்ன தோரணை ஹாசியை அடக்க முடியாமல் சிரிக்க வைத்தது.

“ஒருத்தன் இங்க கதறிட்டு இருக்கானே. இல்ல. இனி சொல்ல மாட்டேன்னு. ஒரு வார்த்தை உன் வாயில வருதா.

“ச்ச…. என்ன கார்த்திக் நான் போய் அப்படி சொல்லுவானா…..” என்று அப்பாவியாக விழி விரித்து கேட்க,

அவளது அப்பாவி லுக்கை நம்பலாமா வேண்டாமா என்ற யோசனையில் கார்த்திக் மூழ்கி போனான்.

“ரொம்ப யோசிக்காதீங்க. ஆமா…. உங்க டீம்கு ஒரு வேலை குடுத்து முடிக்க சொன்னாங்களே அது என்னாச்சு”

“டீம் புல்லா குரூப்பா ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. சரி நாம போய் ஒரு காபி குடிச்சுட்டு வரலாமேன்னு இந்த பக்கம் வந்தேன். சரி நமக்கு தெரிஞ்ச பொண்ணாச்சே அதிசயமா இந்த நேரத்துக்கு கேன்டீன் வந்திருக்கே, ஒரு கப் காபி தண்ணி வாங்கி தரலாம்னு….. உன்கிட்ட வந்தேன்.
போதுமா விளக்கம்”.

“ம்ம்…..உங்க டீம் எல்லா வேலையும் பர்பெக்ட்டா பண்றாங்கங்கற தைரியம் நீங்க ஜாலியா டென்ஷன் இல்லாம சுத்தி வர்றீங்க. ம்ம்ம்ம்….. இருக்கட்டும் இருக்கட்டும். நான் போகும்போது உங்க டீம்ல இருந்து ரெண்டு பேர கூட்டிட்டு போறேன். அப்போதான் நீங்க கொஞ்சம் சீரியஸா வேலை பார்ப்பீங்க”.

“அடடா எப்போ பாரு ஆபிஸ் வேலைனுதான் பேசுவியாம்மா நீ. இந்த ஆபிச தூக்கி பிடிச்சது போதும் கொஞ்சம் இறக்கி விடும்மா. கை வலிக்க போகுது” கிண்டலாக சொல்ல,

உடனே ஹாசி வேகமாக “கார்த்தி ….. சீக்கிரம் கைய நீட்டு” என்று சொல்ல,

அவனோ புரியாமல் விழித்தாலும் கையை நீட்ட. உடனே தன் கையில் தாங்க முடியாமல் தூக்கி வைத்து கொண்டிருக்கும் பொருளை அவன் கையில் கொடுப்பது போல் காற்றில் கை அசைத்தவள் “என் கண்ணான ஆபிச உன் கையில் குடுத்துருக்கேன். அது கண்ணுல நான் ஆனந்த கண்ணீரைதான் பார்க்கணும். துக்கத்துல கண்ணீர் வராம நீதான் பத்திரமா பார்த்துக்கணும்” என்று வராத கண்ணீரை துடைத்து சொல்வது போல் சொல்ல,

உடனே கையை உதறி அவளை முறைத்தவன் “ஆனாலும் உனக்கு லொள்ளு ஜாஸ்திதான் ஹாசி”என்க,

அவளும் சிரித்து கொண்டே “சரி சரி பேச்சு வாக்குல எனக்கு வாங்கி தரேன்னு சொன்ன அந்த காபி தண்ணிய மறந்துறாத கார்த்திக்”

“அதெல்லாம் மறக்க மாட்டேன். நீ போய் உட்காரு நான் வாங்கிட்டு வரேன்”என்றவன் சொன்ன பிறகுதான் ஹாசிக்கு தான் இங்கு வந்ததற்கான காரணம் நினைவு வர தலையில் கை வைத்தவள் கேன்டீனை சுற்றி தன் பார்வையை ஓட்டினாள்.

அங்கு இருந்த ஒரு டேபிளில்
அமர்ந்து அவர்களைதான் முறைத்து கொண்டிருந்தான் ஹர்ஷா.

‘யார் இவன் ஹாசிக்கூட பேசிட்டு இருக்கான். அவன் முழியும், அவனும் பார்க்கவே கோழி திருடறவன் மாதிரி இருக்கான்.

‘அடேய் டப்ஸா கண்ணா நல்லா கண்ணை திறந்து பாருடா. அழகாதானே இருக்கான். அவனை போய் கோழி திருடன்னு சொல்ற. உன் மனசாட்சி நானே கேட்குறேன்டா. உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா. ரேமண்ட் மாடல் மாதிரி இருக்கறவன என்ன வார்த்தை சொல்லிட்ட” என்று அவன் முன் குதித்தது அவன் மனசாட்சி,

அதை எரிச்சலாக பார்த்தவன் “நீ எனக்கு மனசாட்சியா அவனுக்கு மனசாட்சியா மைதா மாவ உருட்டி வச்ச மாதிரி இருக்கான் அவனை போய் மாடல்னு சொல்ற” என்று பற்களை கடித்து கொண்டு கேட்க,

“டேய்….. டேய்….. அடங்குடா அவனுக்கு மனசாட்சியா இருந்தா நான் ஏன் உன் முன்னாடி நிக்க போறேன். நீ வந்த விஷயத்தை பேசாம எதுக்கு தேவையில்லாதத யோசிக்கற. அவ யார்கூட பேசுனா உனக்கு என்ன?”

“எனக்கு என்னவா. டேய் மனசாட்சி நீ என்னோட மனசாட்சியா போயிட்ட இல்ல. நீ கேட்ட கேள்விக்கு. உன் வாயை உடச்சிருப்பேன். அவ என்னோட பிரண்ட். அவ நலன்ல எனக்கு அக்கறை இருக்கு.

பாரின்ல இருந்து வந்த பொண்ணு தப்பான ஒருத்தன் கூட நட்பு வச்சிக்க கூடாதுங்கற நல்லெண்ணத்துல நான் கேட்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

“ஆமா இவரு பெரிய மன்னர் போருக்கு போறாரு. இவரை வந்து போகதீங்க மன்னான்னு தடுக்க போறாங்க. பிரண்ட்.. ப்ரண்ட்னு இப்படி உருக்குறியே அவ தலைல இருக்க கட்ட கவனிச்சியா? இதை கூட நான்தான் சொல்ல வேண்டி இருக்கு. போடா போய் எதுக்கு வந்தியோ அதை பேச ஆராமி. அர்ச்சனா வேற உனக்காக காத்திட்டு இருப்பா.

வீட்ல வேற பேசிட்டாளா என்னன்னு தெரியல’ என்று சொல்லி செல்ல,

அவனோ “அட ஆமா கோவில்ல அன்னைக்கு பார்க்கும்போது ஒன்னும் கட்டு இல்லையே இன்னைக்கு என்னாச்சு. வரட்டும் கேட்போம். அவ வரா நீ போடா மானங்கெட்ட மனசாட்சி” என்று சொல்ல,

‘எல்லாம் என் நேரம்….’ என்று புலம்பி கொண்டே சென்றது அது.

ஹாசி ஹர்ஷாவை பார்த்துவிட்டாள். இவன் எதற்கு நம்மை பார்க்க வந்திருக்கிறான்’ என்று யோசனையில் புருவம் சுருக்கியவள் கவனத்தை தன் பக்கம் திருப்பிய கார்த்திக் ஏதோ சொல்ல, அவளும் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கார்த்திக், ஹாசி இருவரும் சிரித்து சிரித்து பேசி கொண்டிருக்க, அதை கண்ட ஹர்ஷாவிற்கு காதில் புகை வராத குறைதான்.

‘நான் வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. என்னை பார்க்க வராம அவன்கூட என்ன பேச்சு அதுவும் சிரிச்சு சிரிச்சு’ என்று பல்லை கடித்தவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

நேரம் ஆவதை உணர்ந்த ஹாசி “அட போங்க கார்த்திக் உங்க கூட பேசுனா டைம் போறதே தெரிய மாட்டிக்கிது. என்னை யாரோ பார்க்க வந்திருக்கறத வாட்ச் மேன் சொன்னாரு.

அவங்களை பார்க்க வந்தேன்.உங்க கூட பேசுனதுல அவரை மறந்துட்டேன். நான் போய் அவர்கிட்ட பேசிட்டு வரேன். அப்புறம் கண்டிப்பா ஒரு நாள் காபி வேணும்” என்க,

அவனும் “ஷுர் உனக்கு இல்லாததா” என்றுவிட்டு சென்றான்.

கார்த்திக் சென்றவுடன் ஹர்ஷாவை அவள் திரும்பி பார்க்க அவனோ டேபிள் மேல் கைகள் இரண்டையும் ஊன்றி அதில் தன் முகத்தை தாங்கியவாறு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

ஆணவன் கூறிய பார்வை பெண்ணவளை ஏதோ செய்ய, யோசனையோடு சென்றவள் அவன் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள்.

ஹாசி அமர்ந்தவுடன் அவள் நெற்றியில் இருக்கும் கட்டை பார்த்தவாறு “என்ன ஆச்சு ஹாசி? கோவில்ல பார்க்கும்போது நல்லாதானே இருந்த. எப்படி திடிர்னு காயம். உன் அண்ணன் உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னான். போனை குடு நான் பேசறேன்னு சொன்னேன்.

என் தங்கச்சிகிட்ட நீ பேச வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்லிட்டான். எப்படி அடி பட்டுச்சு? என்க. .

மனதில் அவன் மேல் மலை அளவு கோபம் இருந்தாலும் நண்பன் என்ற வார்த்தையை அவன் பயன்படுத்துவதால், கைகளை இறுக்கமாக மூடி தன்னை கட்டுப்படுத்தி கொண்டவள் “ஒன்னும் பெருசா இல்ல. அண்ணாவும் நானும் வெளிய சாப்பிட போனோம். அங்க ஸ்லிப் ஆகி விழுந்திட்டேன். அதான் பெருசா நீ ஆபிஸ் தேடி வந்து விசாரிக்கற அளவுக்கு ஒன்னும் இல்ல”.

“உன்னை பார்க்க நான் வர வேண்டாம்னு சொல்றியா ஹாசி” என்று ஆழ்ந்த குரலில் கேட்டவன் அவளையே பார்த்திருக்க,

அவளுக்கோ ‘என்னை எதுக்குடா நீ பார்க்கணும்’ என்ற கடுப்பு அதனால் பேச்சை மாற்றும் பொருட்டு “சரி சொல்லு என்ன திடீர்னு என்னை பார்க்க வந்திருக்க எதாவது முக்கியமான விஷயமா”

ஹர்ஷா, “யார் ஹாசி அவன்?”

ஹாசி, “எவன்?” என்று கேட்க,

“ம்ம்ம்….. இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தியே அவன்”

“ஹோ…. என்னோட பிரண்ட் கார்த்திக். இதை கேட்கவா உங்க ஆபிஸ் வேலைய கூட பார்க்காம இங்க வந்த ”

“ஹாசி விளையாடாத. இப்போ இருக்க பசங்க எல்லாம் எப்படின்னு உனக்கு தெரியாது. பிரண்டுன்னு நீ சொல்ற. ஆனா எனக்கென்னம்மோ அவன் சரியில்லன்னு தோணுது. அதனால அவன்கூட அதிகம் பேச்சு வச்சுக்காத “ என்று சொல்ல,

ஹாசிக்கு ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது உடனே கோபமாக “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. எதாவது சொல்லனும்னு சொல்லிட்டு இருக்காதா.

அது மட்டும் இல்லாம நான் ஒன்னும் குழந்தை கிடையாது. என்கிட்ட பேசுறவன் என்ன நோக்கத்துல பேசுறான்னு என்னால புரிஞ்சுக்க முடியும். அதனால நான் யார்கூட பேசணும். எப்படி பேசணும்னு எனக்கு ஆர்டர் போடாத. என்னை கண்ட்ரோல் பண்ண நினைக்காத ஹர்ஷா. நான் இருந்த ஊர்ல இது எல்லாம் சாதாரணம்” என்று வெடுக்கென்று சொன்னவளை புருவம் சுருக்கி பார்த்தவன் “என் மேல கோபமா இருக்கியா ஹாசி” என்று கேட்க,

அவளோ விரக்தியாக சிரித்தவள் “உன் மேல கோபப்பட நான் யாரு ஹர்ஷா”என்றாள்.

“ஹேய் என்ன ஆச்சு உனக்கு. நீ என்னோட பிரண்டு. உன் மேல எனக்கு முழு அக்கறை இருக்கு. புதுசா வந்த இடத்துல யாரு என்னன்னு தெரியாம பேசி. நீ எதுலயும் மாட்ட கூடாதுன்னுதான் சொன்னேன். சரி விடு உனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் இருந்தா ஓகே நான் எதுவும் சொல்லல. நீ என்னை எப்படி நினைக்கறியோ தெரியல. ஆனா நான் என்னோட பெஸ்ட் பிரண்டாதான் பாக்குறேன்” என்று அழுத்தமாக சொல்ல,

அவளுக்கோ எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது. ‘பிரண்ட்….. பிரண்ட்….. நீ எனக்கு பிரண்ட் இல்லடா. உயிர்….. என்னோட உயிர். உன்னை மட்டுமே நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மனசுல சுமந்துட்டு இருக்க பைத்தியக்காரி நான். ஆனா நீ பிரண்ட்னு ஒரு வார்த்தை சொல்லி என்னை கொன்னுட்டடா துடிக்க துடிக்க கொன்னுட்ட’ என்று கத்த வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை பல்லை கடித்து அடக்கியவள் அவனேயே அமைதியாக பார்க்க,

அவனோ “எனக்கு புரியுது ஹாசி. நீ ஏன் கோபமா இருக்கேன்னு” என்று சொல்ல,

அவளோ அவனை புருவம் சுருக்கி பார்த்தாள். ஒருவேலை தனது காதல் அவனுக்கு தெரிந்துவிட்டதோ என்று,

“உனக்கு விருப்பம் இருக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னோட காதலும் உனக்கு தெரியும். எனக்கும் இதுல விருப்பம் இல்லைதான் என்னை என்ன பண்ண சொல்ற? அப்பா என்னை கார்னர் பண்ணுறாரு.

இதுல ஜோசியம் ஜாதகம்னு வேற சொல்லிட்டு இருக்காரு. அவங்க பண்ணுறதுக்கு நான் என்ன பண்ணுவேன். என் மேல ஏன் கோபப்படுற” என்றவன் கேட்க,

அவளுக்கோ தலையும் புரியவில்லை, வாழும் புரியவில்லை. “என்ன விருப்பம் இல்ல ஹர்ஷா. எனக்கு நீ என்ன பேசறேன்னு புரியல”

“புரியலையா…”

“ஆமா. நீப்பாட்டுக்கு வந்து ஜோசியம் ஜாதகம் கோபம்ன்னு சொல்லிட்டு இருக்க. எனக்கு ஒன்னும் புரியல”

“அப்போ உனக்கு இந்த விஷயம் தெரியாதா?”

“ம்ப்ச்….. ஹர்ஷா என்ன விஷயம்?” என்று கேட்கும்போதே ஹார்ஷாவிற்கு போன் வந்துவிட்டது. அதை எடுத்து பார்த்தவன் அச்சு என்ற பெயர் மின்ன, அவளுடன் பிறகு பேசி கொள்ளலாம் என்று நினைத்தவன் அதை எடுக்காமல் அப்படியே சைலண்டில் போட்டுவிட்டு எதிரில் இருந்தவளை ஆழ்ந்து பார்க்க,

அவளது குழப்ப முகமே அவளுக்கு எதுவும் தெரியாது என்பதை அவனுக்கு உறுதிப்படுத்த பெரு மூச்சு விட்டவன்.”வீட்ல மித்ராக்கும் நிரஞ்சனுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்துருக்காங்க” என்றவுடன் ஹாசி முகம் மலர்ந்து போனது.

“வாவ்…. சூப்பர். நல்ல விஷயம்தான். இதுக்கு எதுக்கு எனக்கு கோபம் வர போகுது. எனக்கு இதுல விருப்பம்தான். ஏன் எனக்கு பிடிக்காதுனு சொன்ன? உனக்கு பிடிக்காம போக வாய்ப்பு அதிகம் என் அண்ணன உனக்கு பிடிக்காது. ஆனா எனக்கு உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்” என்று சொல்ல,

அவளையே அழுத்தமாக பார்த்தவன் அடுத்து சொன்ன வார்த்தையில் திகைத்தவள் “வாட்….என்ன உளறுறீங்க” என்று கோபமாக கேட்டிருந்தாள்.

(வழக்கம் போல அவன் என்ன கேட்டிருப்பான்னு சஸ்பன்ஸ் வைக்கலாம்னு பார்த்தேன். ஆனா பாருங்க உங்களுக்கே தெரியும் அடுத்து அவன் என்ன சொல்லி இருப்பான்னு. அதனால….. இப்போ….. நான் என்ன…. சொல்ல வரேன்னா….. இத்தோட இந்த எபி முடியுதுங்க. அடுத்த எபியில் சந்திக்கலாம்)

இருந்தாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்போம்.

இருவரும் என்ன முடிவு எடுக்க போகிறார்கள்? அர்ச்சனா தங்கள் வீட்டில் நடந்ததை ஹர்ஷாவிடம் சொல்வாளா காத்திருப்போம்..