தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி.
கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க,
வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க, கடைசியாக நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவு வந்தது.
அதில் கண்கள் கலங்கியவள். இத்தனை வருஷத்துல உனக்கு என் நினைவு கொஞ்சம் கூட வரலையா ஹர்ஷா. ஆனா….. நான் உன்னை மட்டும்தானே நினைச்சுட்டு இருந்தேன். காதலினு அவளை அறிமுகப்படுத்தறியே அப்போ நான் உனக்கு யார்? சுத்தமா என்னை மறந்துட்டல்ல? என்ன பத்தி நினைக்கவே இல்லையா? அவ தான் உன் காதல்னா அவளதான் நீ கல்யாணம் பண்ணிக்க போறேன்னா… சின்ன வயசுல இருந்து உன்னை மட்டுமே கணவனாவும், காதலனாவும் நினைச்சுகிட்டு இருக்க எனக்கு நீ என்ன பதில் சொல்ல போற,
என் மனசு முழுக்க நீ நிறைஞ்சு இருக்க மாதிரி நானும் உனக்குள்ள இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேனே. ஆனா…அப்படி இல்ல. ஆம்பளைங்க கண்ணு முன்னாடி இருக்கறதைதான் விரும்புவாங்கன்னு காட்டிட்டல்ல, என்ன மறந்துட்டல்ல’ என்று தனக்குள் மறுகி கொண்டு இருந்தவளுக்கு தன் காதலை அவனிடம் சொல்ல தயக்கம் ஏற்பட்டது.
‘இனி நீ எனக்கானவன் இல்லை. பண்றது எல்லாம் பண்ணிட்டு கடைசியா பாரின்ல வளர்ந்த பொண்ணு அதையெல்லாம் ஈஸியா கடந்துடுவன்னு சொல்ல வேண்டியது. என்னோட மனசு உனக்கு அவ்வளவு எளகாரமா போச்சா.
நான் உன்னை லவ் பண்றேன் தான் உயிருக்கு மேல விரும்பறேன் தான். நீ வேணுமா என்னோட உயிர் வேண்டுமானு கேட்டா, நீ தான் வேணும்னு கண்ண மூடிட்டு சொல்லுவேன்தான். அந்த அளவுக்கு உன்னை எனக்கு பைத்தியமா புடிக்கும்தான். ஆனா அதுக்காக உன்கிட்ட வந்து வாழ்க்கை பிச்சை கேட்டு நிற்க மாட்டேன்.
உனக்கு அவளதான் புடிச்சிருக்குன்னா. நீ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ. ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க. ஆனா என் மனசுல இருக்கறதை இனி நான் யாருக்கும் தெரியப்படுத்த போறது இல்லை’ என்று உறுதியாக நினைத்து கொண்டாலும் காதலின் வலி அவள் கண்களில் இருந்து கண்ணீராக வெளியேறி கொண்டு இருந்தது.
அப்போது சரியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.
ஹாசி தனக்குள்ளே உலண்டு கொண்டு கண்ணீரோடு அமர்ந்திருப்பதை கண்டு பதறினாலும், வேகமாக அவள் அருகில் சென்றவன் ஓங்கி ஒரு அரைவிட திடுக்கிட்டு போனவள் நிமிர்ந்து பார்க்க அவளது அண்ணன் கோபமாக நின்றிருந்தான்.
“அண்ணா…….”
“உஷ்…..பேசாத கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? என்ன நினைப்புல ரோட்ல நடக்குற? குழந்தையா நீ? எதிர்ல லாரிகாரன் ஹார்ன் அடிச்சிட்டே வரான் நீ பாட்டுக்கு குறுக்க வந்துட்டு இருக்க. என்னதான் ஆச்சு உனக்கு? ஏன் அப்படி பண்ணுன? என்று கோபமாக கேட்க,
அவளோ எதுவும் சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ துவங்கினாள்.
தங்கை அழுவதை பார்த்து துடித்து போனான் அவன். எதற்கும் அழாத தங்கை கதறி அழுவதை கண்டு, ஒருவேலை அவளை எவனாவது……’ என்று நொடிக்குள் பல யோசனைகள் அவனுள் தோன்ற நடுங்கி போனவன்,
“என்ன ஆச்சு ஹாசி? என்று பயந்த குரலில் கேட்க,
“அண்ணா….. “ என்று அவனை அணைத்துக்கொண்டவள் மேலும் கதறி அழ. காலை நன்றாக பேசிக்கொண்டு ஆபீசுக்கு சென்ற பெண். இப்பொழுது இப்படி கட்டிப்பிடித்து கதறிக் கொண்டிருப்பதை கண்ட ஆணின் உள்ளம் பதறிப் போக “ஹாசி என்னாச்சு சொல்லுடா….. யாராவது உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்களா? ……” என்று தயங்கி தயங்கி என்றாலும் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அவன் கேட்க,
அண்ணனிடம் இருந்து விலகியவள் அவனை புரியாமல் பார்த்து, அவன் முகத்தில் இருக்கும் கலவரத்தை கண்டு புரிந்து கொண்டவள் ‘இல்லை….’ என்னும் விதமாக மறுப்பாக தலையசைத்தாள்.
அதன்பின்தான் அவனுக்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது. அப்போ ஏன்டா இப்படி பண்ணுன? ஒரு நிமிஷம் என் மூச்சே நின்னு போச்சு. நல்ல வேலை அந்த பக்கமா இருந்த ஒருத்தர் உன்னை தள்ளிவிட்டதால லாரில அடி படாம தப்பிச்ச.
அவரு மட்டும் தள்ளிவிடலைன்னா என்ன ஆகி இருக்கும். எப்போவும் தைரியமா, தெளிவா இருக்க பொண்ணு. இப்படி சுற்றி என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவுக்கு வர என்ன காரணம்” என்க,
ஹாசி அமைதியாக தலை குனிந்து கொண்டு கண்ணீர் வடித்து கொண்டு இருந்தாள்.
தங்கை நிலை அவனுக்கு அவள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவளை அப்படியே விட எண்ணம் இல்லாதவன் “இப்போ சொல்ல போறியா இல்லையா ஹாசி” என்று கோபமாக கேட்க,
அவளோ அழுகையோடே கோவிலில் நடந்த அனைத்தையும் சொல்ல துவங்கினாள். அவள் சொல்வதை கேட்ட நிரஞ்சனுக்குமே பெரிய அதிர்ச்சிதான்.
“என்ன சொல்ற ஹாசி ஹர்ஷா வேற ஒரு பொண்ணை லவ் பண்றானா? ஆனா……” என்று மேலும் அவன் ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஹாசி,
கசந்த சிரிப்பை உதிர்த்து “ஆமாண்ணா. ஹர்ஷா ஒரு பொண்ண லவ் பண்றான்” மேலும் மனம் நொந்த குரலில் “அ…அ…. அந்த பொ…பொ…பொண்ணு….” என்று ஏதோ சொல்ல வந்தவள் பின் பெரு மூச்சுடன் “சரி அதை விடு. அந்த பொண்ணு உண்மையதானே சொன்னுச்சு. நாம வீட்டுக்கு கிளம்பலாமா” என்று தன்னை சாதாரணமாக காட்டி கொள்வது போல் கேட்க,
தங்கையை கூர்ந்து பத்தவன் “அந்த பொண்ணு என்ன சொன்னுச்சு?” என்று கேட்க,
அவளோ “உண்மைதான் சொன்னாங்க” என்று மேம்போக்காக சொன்னாலும் அந்த வார்த்தையில் இருந்த வலியை அண்ணன் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“அந்த உண்மைதான் என்னன்னு கேட்டேன். சொல்லு” என்றவனின் அழுத்தமான குரலே சொன்னது நீ என்னிடம் சொல்லி ஆக வேண்டும் என்ற கட்டளை அதில் இருப்பதை.
தலையை குனிந்தவள் இரு கைகளையும் கோர்த்து பிரித்து எடுத்தவள் மெல்லிய குரலில் “ஹர்ஷா அந்த பொண்ணதான் லவ் பண்றானாம். என் கண்ணுல அவனுக்கான காதல் இருக்கறதை அந்த பொண்ணு நோட் பண்ணிடுச்சாம். அ…. அ…அதனால அ…அவன் கிட்ட இருந்து என்….என்.,.. என்னை….. விலகி இருக்க சொன்னாங்க” என்று சொல்ல நிரஞ்சனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது.
பல்லை கடித்தவன் “இன்னொரு பொண்ணை லவ் பண்றவன் எதுக்காக உன் நெத்தில……” என்று சொல்ல வந்தவன் தங்கைக்கு அதை நினைவு படுத்தி அழவைக்க வேண்டாம் என்று நினைத்து தன் பேச்சை நிறுத்த.
அவளோ கசந்த சிரிப்பை உதிர்த்து “எதுவுமே….. எதுவுமே….. எனக்கானது இல்லண்ணா” என்று சொல்லி மேலும் அழ,
நிரஞ்சன் அவளை புரியாமல் பார்த்து “உனக்கானது இல்லைன்னா?என்ன சொல்ல வர்ற?” என்று கேட்க,
ஹாசினியும் ஹர்ஷா சொன்ன அனைத்தையும் சொன்னாள். பல்லை கடித்தவன் “என்னதான் அவன் நினைச்சுட்டு இருக்கான். பண்றது எல்லாம் பண்ணுவான் . பாரின்ல இருந்து வந்ததுனால நாம அதை பெருசா எடுத்துக்க கூடாதா?. நீயும் பொண்ணு தான். உனக்கும் மனசு இருக்கும். ஆசை இருக்கும்னு அவன் நினைச்சு பார்க்கவே இல்லைய? நான் போய் அவனை என்ன பண்றேன் பாரு” என்று போனவன் கையை பிடித்தவள் “அண்ணா அவன் என்ன பிரண்டா நினைக்கிறாண்ணா”
“அவன் என்னவா நெனச்சா எனக்கு என்ன? நீ அவனை பிரண்டா மட்டுமா நினைச்ச. ச்ச….. அவனை நினைச்சாலே எனக்கு கடுப்பாகுது” என்று சொன்னவனை அழுத்தமாக பார்த்தவள் “அவன் என்னை பிரண்டா மட்டும்தான் பார்க்கறான். உனக்கு புரியுதா அண்ணா”
“அதுக்காக என் தங்கச்சியை அவன் கஷ்டப்படுத்துவானா” என்க,
அவளோ “உன் தங்கச்சியை இப்ப யாரும் கஷ்டப்படுத்தல தேவையில்லாம நீ போய் சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை”
“என்ன கஷ்டப்படுத்தல இல்ல என்ன கஷ்டப்படுத்தலன்னு கேட்கறேன் எதிரில் லாரி அவ்ளோ வேகமா வந்தது. நீ பாட்டுக்கு கண்டுக்காம வர்ற. ஒரு நிமிஷம் என் உயிரே நின்னு போயிடுச்சு தெரியுமா. யாரோ ஒரு புண்ணியம் வந்து தள்ளிவிட்டதுனால அந்த பக்கம் போய் விழுந்த.
அப்போவும் அங்க இருந்த கல்லுல போய் விழுந்துட்ட அவ்ளோ ரத்தம். என் கண்ணு முன்னாடியே உன் உயிர் போக பார்த்துச்சு. எப்போவும் தெளிவா இருக்கறவ, இப்போ உன்ன பத்தின நினைப்பே இல்லாம, அவன நினைச்சிட்டே வந்து சாக போயிட்ட. இது உனக்கு கஷ்டம் இல்லன்னு சொல்றியா. அவனை நான் என்ன பண்றேன் பாரு” என்று செல்லப்போனவனை, “அண்ணா நான் சொல்றதை நீ கேட்க போறியா இல்லையா” என்று அழுத்தமாக கேட்க,
அவனோ “முடியாது” என்றான்.
“சரி நீ போ. போய் அவன்கிட்ட சண்டை போட்டுட்டு வா. ஆனா திரும்பி வரும் போது உன் தங்கச்சி உயிரோட இருக்க மாட்டா”
“என்னடி பேசுற” என்று கோபமாக அவன் கேட்க,
“ஆமா. கண்டிப்பா நீ போயிட்டு வரும்போது நான் உயிரோட இருக்க மாட்டேன். இன்னொரு பொண்ண லவ் பண்றவன்கிட்ட போய், என் தங்கச்சி உன்னைய லவ் பண்றா, அவள நீ கல்யாணம் பண்ணிக்கோ, அவளுக்கு வாழ்க்கை பிச்சை போடு. அவ உனக்காக கஷ்டப்படுறா. லாரியில விழ போனான்னு சொல்ல போறியா?
“இல்ல ஹாசினி. அப்படி கேக்க போகல”,
“நீ எப்படியும் கேட்க வேண்டாம். நம்ம உடனே ஊருக்கு கிளம்புறோம் அதற்கான ஏற்பாடு பண்ணு” என்று சொல்ல நிரஞ்சனோ பெருமூச்சுடன் “கொஞ்சம் யோசி” என்று சொல்ல,
கண்களை மூடி சற்று நேரம் அமர்ந்திருந்தவள் பின் நினைவு வந்தவளாக “ஓ ஆமால்ல மித்ராவ விட்டுட்டு போகக்கூடாது. வீட்ல பேசலாம்ண்ணா. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி சீக்கிரமா நம்ம இங்க இருந்து அமெரிக்கா போயிடலாம். என்னால இங்க இனி இருக்க முடியும்னு தோணல” கசங்கிய முகத்துடன் அவள் சொல்ல,
நிரஞ்சனோ அவளை அடிபட்ட பார்வை பார்த்து “ஏன் ஹாசி. உன் அண்ணன் ஒன்னும் அவ்ளோ சுயநலவாதி இல்ல. நீ கஷ்டத்துல இருக்கும்போது நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பேன்னு நினைச்ச” என்று கேட்க,
அண்ணனை கூர்ந்து பார்த்தவள் “என்ன சொல்ற”
“நீ சொன்ன மாதிரி நாம சீக்கிரம் அமெரிக்கா கிளம்பலாம். நாம மட்டும்”
அண்ணனை கூர்ந்து பார்த்தவள் “எல்லா ஆம்பளைங்கலும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க இல்ல. உங்க சுயநலத்துக்கு பொண்ணுங்க நாங்கதான் பலி ஆகறோம்” என்று சொன்னவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது.
“ஹாசி அது….. நீ….”
“நான்தான் எனக்கு என்ன இப்போ. காதல் இல்லைனா வாழவே முடியாதுன்னு நினைக்கறவ உன் தங்கச்சி இல்ல. அவனுக்கு அந்த பொண்ண பிடிச்சுருக்குன்னா கல்யாணம் செய்து சந்தோஷமா இருக்கட்டும். நாம மித்ராவ கூட்டிட்டுதான் கிளம்பறோம். இப்போ போனா இனி நான் இந்தியா திரும்ப போறது இல்ல. கூடிய சீக்கிரம் வீட்ல பேசு. இல்ல. நான் பேசவா” என்று கேட்டவளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான்.
அண்ணனின் அமைதி அவன் எண்ணத்தை அவளுக்கு தெரியப்படுத்தபெரு மூச்சுவிட்டவள் “மித்ராவ மறந்து உன்னால வேற பொண்ண கல்யாணம் செய்துக்க முடியுமா” என்றவள் கேட்க,
அவனோ இறுகிய முகத்துடன் இல்லை என்று மறுப்பாக தலையசைக்க,
“எனக்கு தெரியும். என் வாழ்க்கையை உன்னோட காதலோட சேர்த்து குழப்பிக்காத. நாம இங்க இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பனும் அதுக்கான வேலைய ஆரம்பி” என்று சொல்ல,
நிரஞ்சன் அவளையே பார்த்திருந்தான்.
‘என்ன’ என்று கேட்ட தங்கையிடம் “முடிவே பண்ணிட்ட இல்லையா” என்று கேட்க,
‘ஆமாம்’ என்று தலை அசைத்தவள், “உனக்கு இங்க இருக்கணும்னு விருப்பம் இருந்தா. நீ வேணா….”
“நாம ஒன்னாவே கிளம்பலாம். இப்போ வீட்டுக்கு கிளம்பலாம். பத்து மணி ஆச்சு. அம்மா வேற போன் பண்ணிட்டே இருக்காங்க. டாக்டர் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு. ”என்க,
“அண்ணா…. அம்மாக்கு…”
“நான் எதுவும் சொல்லல. ரெண்டு பேரும் வெளிய வந்துருக்கோம்னு சொல்லியிருக்கேன். வீட்டுக்கு போய்….”
“என்ன சொல்லணும்னு நீயே சொல்லு”
“ஹோட்டல் ரெஸ்ட் ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்னு…”
“ம்ம்ம்….. பொய் நல்லா சராளமா வருது போல” என்றவனுக்கு பதில் அழிக்காமல் அவள் எழுந்து நடக்க துவங்க. மருந்தின் வீரியத்தில் தள்ளாடினாள். உடனே தங்கையை தாங்கி பிடித்தவன் அவள் தோள்களில் கை போட்டு அழைத்து சென்றான்.
இதற்கிடையில் ஹர்ஷா வீட்டில் பத்மா அவர்கள் திருமண விஷயத்தை சொல்ல, மித்ரா ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் என்றால் ஹர்ஷா திகைத்து போய் கத்த துவங்கிவிட்டான்.
யாரை கேட்டு முடிவு பண்ணுனீங்க. எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம். முதல்ல மித்ராக்கு பண்ணுங்க. நான் இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கறேன்” என்று சொல்ல,
இதை எதிர்பார்க்காத பத்மா கணவனிடம் என்ன செய்வது என்று கண்ணால் கேட்க,
அவரோநான் பேசுகிறேன் என்பது போல் கண் மூடி திறந்தவர் “என்னாச்சு ஹர்ஷா. உனக்கு ஹாசிய பிடிக்கலையா?”
“ஹையோ அப்பா பிடிக்குது, பிடிக்கலைங்கறது இங்க விஷயம் இல்ல. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம். முதல்ல தங்கச்சிக்கு பண்ணுங்க” என்று சொல்ல,
அண்ணனை குழப்பமாக பார்த்த மித்ரா ‘என்ன ஆச்சு அண்ணாக்கு. அவனும் ஹாசிய லவ் பண்றான்தானே, அப்புறம் ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்’ என்று பார்த்தாலும், தன் காதலுக்கு அண்ணன் எந்த தடையும் கூறவில்லை என்று நிம்மதியாகி போனாள்.
கிருஷ்ணன், “ஹர்ஷா நீ நினைக்கற மாதிரிதானே நிரஞ்சனும் நினைப்பான். தங்கச்சிக்கு பர்ஸ்ட் முடிச்சுட்டு அப்புறம் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு. அதனாலதான் பொண்ணு குடுத்து எடுக்கற மாதிரி பேசி முடிவெடுத்து இருக்கோம்”
“முடியாதுப்பா. நீங்க என்ன சொன்னாலும் என்னால ஹாசிய கல்யாணம் செய்துக்க முடியாது” என்று பிடிவாதமாக இருந்த மகனிடம் பத்மா எவ்வளவோ எடுத்து சொல்ல,
அவனோ முடியாது என்பதில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை கணவனை கண்களால் மிரட்டிய பத்மா எதாவது சொல்லி சமாளிங்க என்க,
திரு திருவென விழித்தவர் டக்கென்று “ஹர்ஷா கண்ணா உங்க அம்மா உசுரே. நீ பண்ற கல்யாணத்துலதான்ப்பா இருக்கு” என்று சோக குரலில் சொல்ல,
மொத்த குடும்பமும் அவரை அதிர்ந்து போய் பார்த்தது.
ஹர்ஷா திருமணத்தால்தான் பத்மா உயிரோடு இருக்க முடியும் என்றால் அப்படி என்ன நடந்திருக்கும். பத்மா உயிருக்கு என்ன ஆபத்து நிகழ இருக்கிறது.
ஹர்ஷா, ஹாசியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்வானா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.