அத்தியாயம் -15

அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற,

தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில் அவன் பேச வரும்போது எல்லாம் திருப்பி கொண்டு செல்வாள். இருந்தாலும் ஹார்ஷா எங்கு நின்றாலும் அவளது கண்கள் அவனை சைட் அடித்து கொண்டேதான்இருக்கும்.

ரஞ்சனின் நிலைமைதான் ஏக போகமாக இருந்தது. பேச்சு பாட்டி ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொண்டு வந்து கொடுப்பதும். அவனை அருகில் உட்கார வைத்து, அவரது இறந்து போன தோழி ரஞ்சனி என்று நினைத்து அவர்களது சிறு வயது கதைகளை பேச,

ரஞ்சனோ என்னடா இது எனக்கு வந்த சோதனை என்று அவரிடம் மாட்டி கொண்டு முழிப்பான். இதற்கிடையில் மித்ரா தனியாக மாட்டும்போது எல்லாம் ஓரமாக தள்ளி சென்று ரொமான்ஸ் செய்வான்.

அதில் கடுப்பான மித்ரா “ஏன் நிலன் இப்படி பண்றீங்க. நான் கோவமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல. அப்புறம் சும்மா என்கிட்ட இப்படி நடந்துகிட்டா என்ன அர்த்தம்”

ரஞ்சன், “அர்த்தம் எல்லாம் தனியா ஸ்பெஷலா ஒன்னும் இல்ல செல்லம். நீ கோவமா இருந்தாதான் சில சலுகைகள் எனக்கு கிடைக்குது” என்று கண்ணடித்து கூறியவன் அவள் இதழில் தன் இதழை ஆழமாக பதித்தான்.

ஆணவன் செயலில் பெண்ணவள் அதிர்ந்து விழித்து அவன் மார்பில் கை வைத்து தள்ள முயற்சிக்க, அவனை அவளால் அசைக்க கூட முடியவில்லை.

அவள் கைகளை இறுக்கி பிடித்தவன் அவள் காதருகில் குனிந்து “ஸ்வீட் சாப்டியா என்ன இனிப்பா இருக்க” என்று ஹஸ்கி குரலில் கேட்க,

அவளோ அவனை முறைத்து “மனுஷனாடா நீ. ஒருத்தி கோவமா இருக்காளே அவளை சமாதானப்படுத்துவோம்னு இல்லாம. கிடைக்கற கேப்ல எல்லாம் கெட வெட்டிட்டு இருக்க. இன்னொரு டைம் பக்கத்துல வா கடிச்சு வைக்கறேன்” என்று கத்த,

அவனோ கூலாக “நான் என்னடி பண்ணட்டும் நம்ம நார்மலா இருந்தா என்னை பக்கத்துலயே விட மாட்ட, சரி எதுக்கு அவளை கஷ்ட்டபடுத்திக்கிட்டுன்னு நானும் நல்ல பிள்ளையா கஷ்ட்டப்பட்டு நடிக்க வேண்டி இருக்கும்.

ஆனா இப்போ பாரு நீ கோவமா இருக்க. நான் என்ன பண்ணுனாலும் ஒன்னு முறைச்சுட்டு போவ, இல்ல யாரவது பார்த்துட்டாங்கள்ளான்னு பயந்துட்டு சுத்தி சுத்தி பார்த்துட்டு போவ, இதுக்குன்னு தனியா கோவப்பட மாட்ட, அதான்………”

“பாவி, சண்டாளா, மனுஷனாடா நீ……”

“இல்ல புருஷன்………”

“எதே……”

“ஆமாடி பொண்டாட்டி நான் உன்னோட புருஷன் மனுஷன் இல்ல”

“ஹலோ புருஷன்னு நீ சொல்ல கூடாது. நான் சொல்லணும்”

“நீதான் ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டியே “

“அ…. அ….. அது அப்போ….. இப்போ இல்ல”

“இப்போ இல்லன்னா….. எனக்கு புரியல”

‘போடா மட காஸ்கர் உனக்கு எதுதான் புரிஞ்சுருக்கு’ என்று வாய்க்குள் திட்டி கொண்டவள் “ம்ப்ச்…. இப்போ எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க நான் போகணும் விலகுங்க. யாரும் வந்திர போறாங்க” என்க,

“சரி நீதானே என் புருஷன். நீயேதான் என் அரசன்னு சொல்லு நான் விலகி நீ போக வழி விடறேன்”

“சொல்ல முடியாதுன்னு சொன்னா”

“சோ சிம்பிள். ஏற்கனவே காஞ்சி போய் சுத்தவிட்டதுக்கு வட்டியும் முதலுமா உன் பக்கத்துல நெருக்கமா நின்னு அதாவது உன் மூச்சு காத்தை நான் சுவாசிக்கற அளவுக்கு நின்னு உன்ன எனக்குள்ள ஒளிச்சு வச்சிக்கற மாதிரி என்னோட இழுத்து…..என் கையால உன்னோட சின்ன இடுப்ப………இறுக்கி”

“நிலன் என்ன பேசற. நான் போகணும் தள்ளு” என்று அவன் பேச்சில் அள்ளுவிட்ட மனதை அடக்கி கோவமாக சொல்ல,

“இருடி நான் ஒரு புலோல போய்கிட்டு இருக்கும்போது குறுக்க வந்து கட்டைய போட்டுக்கிட்டு” என்று கடுப்பாக சொன்னவன் “ஹான்….. எதுல விட்டேன்” என்று யோசிப்பது போல் ஓர கண்ணால் பெண்ணவளை பார்க்க,

அவளோ ‘என்னடா இவன் இப்படி பேசுறான். லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து நல்லாதானே இருந்தான். சும்மா கை பிடிக்கறது தோள் உரச நடக்கறதுன்னு நைன்ட்டீஸ் கிட்ஸ் லவ்தானே பண்ணிக்கிட்டு இருந்தான்.

சண்டை வந்தாலும் வந்துச்சு.சும்மா சும்மா…உதட்டை கடிச்சு எடுக்கறான். நாமதான் சண்டை போட்டு சும்மா இருக்க சிங்கத்தை சுரண்டி விட்டுட்டமோ. எப்படியும் கோவமா இருக்க. இதுக்கும் சேர்த்து கோவமா இருன்னு பண்றான்.

ஹையோ இன்னும் என்னெல்லாம் பண்ண காத்திருக்கான்னு தெரியலையே’ என்று பேயடித்தது போல் நின்றிருக்க,

அவனோ, “ஹான்….. நியாபகம் வந்துருச்சு. உன்னோட குட்டி இடுப்புல விட்டேன். அதை அப்படியே இறுக்கி பிடிச்சு…உன் உதட்ட என் உதட்டால….” என்னும்போதே….

“போதும் நிலன்…நிறுத்து.” என்றவள் முகம் பயத்தில் வெளுத்து குரல் நடுங்கி வர,
“என்னடி பொண்டாட்டி இதுக்கே நடுங்கற. இன்னும் நாம பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு. அதுக்குள்ள போதும்னு சொன்னா என்ன அர்த்தம். ஒரு கை தான் இடுப்புல இருக்கு இன்னொரு கை உன்னோட….” என்றவன் வாயை விழுந்து அடித்து கொண்டு மூடியவள் “இப்போ என்ன நான் உன்னை என் புருஷன்னு சொல்லணும் அதுதானே. சொல்றேன். அதுக்கப்புறமாவது என்னை இங்க இருந்து போக விடுவியா” என்று கேட்க,

அவள் கையை மென்மையாக கடித்தவன் குறும்பாக அவளை பார்த்து சிரிக்க, அவளோ ‘ஐயோ….. ஆண்டவா என்னை ஏன் இந்த கிறுக்கன்கிட்ட சிக்க வச்ச’ என்று மனதில் நினைத்து வெளியே அவனை முறைத்து கொண்டு நின்றாள்.

“நீ இப்படி பார்த்தாதான் மாமாக்கு மூடாக்குதுடி செல்லம்” என்று சொல்ல,

நெஞ்சில் கை வைத்தவள் ‘சரியான பைத்தியமா இருப்பான் போலயே, கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோ’ என்று நினைக்க,

“டூ லேட். இப்போ யோசிச்சு ஒன்னும் பண்ண முடியாது” என்று சொல்ல, அவனை அதிர்ந்து பார்த்தவள் “உங்களுக்கு கேட்டுச்சா” என்க,

“நல்லாவே கேட்டுச்சு. இப்போ சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போறியா. இல்ல ரெண்டு பேரும் இங்கயே நின்னு பேசிட்டு இருக்கலாமா? எவ்வளவு நேரம்தான் உன் அண்ணன் நமக்கு காவல் காத்துட்டு இருப்பான் சொல்லுடி”

“எதே……. அ…. அ…. அண்ணன்……காத்திட்டு இருக்காரா?”

“ஆமா…ஆமா…. நாம இங்க நிக்கறதை பார்த்துட்டு. வேற யாரும் இந்த பக்கம் வராம எல்லாரையும் டைவர்ட் பண்ணிட்டு நிக்குறான்” என்று கூலாக சொல்ல,

“அட கல் நெஞ்சக்காரா என்னடா வேலை பண்ணி வச்சிருக்க. ஏற்கனவே என் அண்ணன் செம்ம காண்டுல இருக்கான். நீ ஏன்டா மறுக்கா மறுக்கா அவன்கிட்ட வம்பிலுக்கற. நகரு நான் போறேன்” என்று ஓட போனவள் கையை பிடித்தவன் “சொல்லிட்டு போ” என்க,

மறுபடியும் முதல்ல இருந்தா என்று திகைத்தவள் அவன் மீது கோபம் இருந்தாலும் எட்டி பார்க்க ஹர்ஷா கோபமாக அங்கு நின்றிருந்தான் ‘ஒரு லவ்…ஒரு அண்ணன் இதை வச்சுக்கிட்டு நான் படுற பாடு தலையால தண்ணி குடிக்க வைக்கறாங்க முடியல’ என்று புலம்பி,

“சரி புருஷன் போதுமா நகரு”

“இப்படி மொட்டையா சொன்னா எப்படி. என் செல்ல நிரன் நீதான் என் புருஷன். இந்த உலகத்துலயே நீதான் எனக்கு முக்கியம். என் அம்மா, அப்பாவை விட முக்கியமா என் அண்ணனைவிட நீதான் என் உயிர் மத்தவங்க எல்லாம்…….” என்று மேலும் சொல்லவந்தவனை கண்டு நெஞ்சில் கைவைத்தவள் அவனை பாவமாக பார்த்து “நிரன் ப்ளீஸ்….” என்க, அவனோ பிடிவாதமாக நின்றிருந்தான்.

அதேநேரம் அவர்களது பெற்றோர் வரும் சத்தம் கேட்க, “டேய் நிரன். நீ சமத்து பையனாதானே இருந்த இப்போ ஏன் இப்படி ஆகிட்ட. இப்போ என்ன நான் உன் மேல கோவமா இருந்ததாலதானே இப்படி பண்ற.

ஓகே உன் மேல எனக்கு கோபம் இல்ல. நாம சமாதானமா போயிடலாம். சரியா. இப்போ என்னைவிடு நைட்டு மாடிக்கு வரேன் பேசிக்கலாம்”.

“முடியாது. நீ கோவமாவே இரு. அப்போதான் எனக்கு நல்லது. நீ பேச்சை மாத்தாம நான் சொல்ல சொன்னதை சொல்லு”.

“நிரன்……” என்று பல்லை கடித்தவளை கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன் “பாரு கோவப்படுற அப்போ நமக்குள்ள சண்டைதானே”

“ஹிஹிஹி……இல்லையே நான் கோவப்படலையே சிரிக்கறேன். நல்லா பாரு ஹிஹிஹி……” வராத சிரிப்பை அவள் இழுத்து பிடிக்க,

ரஞ்சனோ “இல்ல நீ கஷ்ட்டபட்டு சிரிக்கற. நீ இன்னும் சமாதானம் ஆகல. அதனால நான் சொல்ல சொன்னதை……” என்றவன் சொல்லும்போதே கிருஷ்ணன் குரல் அருகில் கேட்க,

“நீதான் என் புருஷன் நீயேதான் என் அரசன். எனக்கு நீதான் முக்கியம் என் அம்மா அப்பாவைவிட முக்கியமா என் அண்ணனைவிட” என்று பட படவென்று சொன்னவள் இப்போயாவது கையை விடு என்பது போல் பார்க்க, அவனும் கையை விட,

‘ஹப்பாடா……’ என்று பெருமூச்சுவிட்டவள் அங்கிருந்து ஓட சரியாக அங்கு நின்றிருந்தான் ஹர்ஷா.

மித்ரா அங்கு அண்ணனை எதிர்பார்காதவள் எச்சிலை கூட்டி விழுங்கி “அண்ணா….” என்று இழுத்து விழிக்க, அவன் முகமே சொன்னது அவள் சொன்னதை அவன் கேட்டுவிட்டான் என்று.

மித்ரா,’சரியா போச்சு போ. அண்ணன் முழுசா நான் சொல்றதை கேட்ருச்சு போலவே’ என்று ரஞ்சனை எட்டி பார்க்க, அவனோ அவளை பார்த்து நமுட்டு சிரிக்க,

‘அட பாவி நீ எல்லாம் வேணும்னுதான் பண்ணுனியா. ஏன்டா இப்படி என்னை படுத்துற. இவன் பிளான் பண்ணி பண்றானா இல்லை இவனுக்குனே அமையுதா தெரியலையே’ என்று நினைத்து கொண்டு இருக்க,

ஹர்ஷா, “பார்த்தது போதும். உன் ரூமுக்கு கொஞ்சம் போறியா. அம்மா, அப்பா எல்லாம் வந்துட்டாங்க” என்று இறுகிய குரலில் சொல்ல,

அவர்கள் அருகில் வந்த ரஞ்சன் “ஏன் மச்சான் உனக்கு காண்டு. என் பொண்டாட்டி என்னை சைட் அடிக்கறா அதுல உனக்கு என்ன பிரச்சனை” என்க,

“டேய் உன்கிட்ட பல தடவ சொல்லியிருக்கேன் என்னை மச்சான்னு கூப்பிடாதன்னு” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,

“மச்சான் நானும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டேன். அப்படிதான் கூப்பிடுவேன்னு. ஆனாலும் திரும்ப திரும்ப சொல்ற பார்த்தியா அந்த ஒரே மன தைரியத்தை பாராட்டி இந்தா இந்த ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடு.

நம்ம பேச்சு பாட்டிதான் வாங்கிட்டு வந்தாங்க” என்று குடுத்துவிட்டு மித்ராவை பார்த்து “ஓகே செல்லக்குட்டி நைட்டு மொட்டை மாடில வெயிட் பண்றேன் வந்திடு” என்றுவிட்டு போக,

ஹர்ஷா கோபமாக தங்கையை பார்க்க அவளோ டக்கென்று குனிந்து கொண்டவள் ‘ஆத்தி இவன் சேட்டை எல்லாம் தினுசா இருக்கே. என்னால முடியல’ என்று நினைத்து கொண்டாள்.

ஹார்ஷா தங்கையிடம் “எங்க எல்லாரையும்விட அவன் தான் உனக்கு முக்கியம்னா எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”என்ற அண்ணனை அவள் வெடுக்கென்று நிமிர்ந்து பார்க்க,

அவன் முகமோ அமைதியாக இருந்தது. தங்கையை ஆழ்ந்து பார்த்தவன் “என்ன விட முக்கியம்னு நீ சொல்ற அளவுக்கு நீ அவனை லவ் பண்றனா. உங்க லவ்க்கு என்னால எந்த பிரச்சனையும் வராது. தாராளமா நீ அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று விட்டுப் போக திரும்ப,

“அண்ணன்……அது……” என்றவளது குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

“ஒன்னும் பிரச்சனை இல்லடா. உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்” என்று சொல்லிவிட்டு அவன் அறை நோக்கி செல்ல துவங்கினான்.

அண்ணன் செல்வதையே கண்கள் கலங்க பார்த்தவள் ‘அண்ணா உங்களை கஷ்டப்படுத்திட்டேன்னு தெரியுது. சாரிண்ணா’ என்றுவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்தவள், ஒருவேலை அண்ணன் வர்றத பார்த்துட்டு தான் இவன் வேணும்னே அப்படி சொல்ல சொல்லி இருப்பானோ’ என்ற யோசனையோடு தன்னவனை திரும்பி பார்க்க,

அவனோ பேச்சுப்பாட்டியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் பார்வையை இவர்கள் மீதுதான் வைத்திருந்தான். மித்ரா தன்னை பார்க்கவும் அவளை பார்த்து கண்ணடித்து இதழ் குவித்து காற்றில் முத்தமிட,

இவளோ ‘ஆத்தி முழு பைத்தியமாவே ஆயிட்டானே ஆனாலும் லவ்வர் கோவமா இருந்தா எப்படி எப்படியோ சமாதானப்படுத்துற லவ்வர்ஸதான் நான் பார்த்திருக்கிறேன். ஆனா இவன் சமாதானப்படுத்தற முறை தினுசால்ல இருக்கு’ என்று அலறி அடித்துக் கொண்டு ஓட,

அதை பார்த்து ரஞ்சன் சிரிக்க, பேச்சி பாட்டி தான் சொன்னதுக்குதான் சிரிக்கிறான் என்று நினைத்து “அப்படிதான் பெரிய கூத்தாக்கி போச்சு உன்னை மாதிரிதான் அவகளும் சிரிச்சாங்க. ஒரே அசிங்கமாகி போச்சு ரஞ்சு” என்று சொல்ல,

ரஞ்சனோ “ஆனாலும் பாட்டி நீங்க ரொம்ப நல்லவங்க. என்ன சொன்னாலும் நம்புறீங்க” என்று சொல்ல,

“என்ன ரஞ்சு பொசுக்குன்னு என்னை பாட்டின்னு சொல்லிட்ட. நீயும் நானும் பிரண்டுடி” என்க,

ரஞ்சனோ அவர் வெகுளி தனத்தை ரசித்து சிரித்தான்.

ஹர்ஷா மேலே வந்தவன் ஹாசி அறை பார்த்து ‘ச்ச…. நல்ல பிரண்டு. வந்ததுல இருந்து நல்லா பேசிட்டு இருந்தா. நான் பண்ணுன வேலையால கோவிச்சுட்டுபேசாம இருக்கா.

என்னோட அவசரத்தால நல்ல பிரண்ட இழந்துட்டனோன்னு தோணுது. என்ன ஆனாலும் சரி இப்போ போய் அவகிட்ட பேசி சாரி கேட்கணும். முதல்ல மாதிரி ஹாசி என்கிட்ட நல்லா பேசணும்’ என்று நினைத்தவன் அவள் அறை கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது.

‘என்ன கதவு திறந்து இருக்கு. ரூம்ல ஹாசி இல்லையோ’ என்று யோசனையாக உள்ளே வந்தவன் சுற்றி பார்க்க, பாத்ரூமில் இருந்து பாட்டு சத்தம் கேட்டது.

‘ஹோ….. குளிக்கறா போல, இப்போ நாம இங்க இருக்கறது சரி இல்ல. போலாம். அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைத்தவன் கதவை நோக்கி நடக்க,

‘மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பார்த்து நச்சுன்னு கண்ணாடிச்சான் தையலும் பிஞ்சு இப்போ மச்சினி தரையில குந்திக்கிட்டான் மச்சினி கைலிய கட்டிக்கிட்டு மூலையில் சாஞ்சுகிட்டான்’ என்று ஹர்ஷாவை நினைத்து சத்தமாக பாடி கொண்டே துண்டை கட்டி கொண்டு வெளியில் வந்தாள்.

ஹாசி வெளியில் வரவும் பேச எண்ணி திரும்பிய ஹர்ஷா அவள் நின்றிருந்த நிலையை கண்டு அதிர்ந்து “அச்சச்சோ……” என்று கத்தி கொண்டே திரும்ப,

அப்போதுதான் அவனை கவனித்த ஹாசி திகைத்து நின்ற நொடி அவள் துண்டு நழுவி கீழே விழ, டக்கென்று அதை எடுத்து கட்டியவள் மீண்டும் பாத்ரூமிற்குள் ஓடிவிட,

தன் எதிரில் இருந்த கண்ணாடியை கண்கள் வெளி வந்துவிடும் அளவிற்கு அதிர்ந்து போய் பார்த்த ஹார்ஷா தலையில் அடித்து கொண்டு ‘சாரி கேட்க வந்து என்ன காரியம்டா பண்ணிட்ட. ஹையோ என்னடா இது கிரைம் ரேட் ஏறிட்டே போகுது.

நான் வேற இந்த காண்ணாடில….. ஒரு வேலை நான் பார்த்தது அவளுக்கு தெரிஞ்சுருக்குமோ ‘ என்று நினைக்கும்போதே அவன் இதயம் பட படவென்று அடிக்க துவங்கியது.

உடனே “சாரி….. ஹாசினி உன்கிட்ட பேசலாம்னு வந்தேன். அ…. அ…அது…ம்கூம்…. இப்போதான் வந்தேன். நீ வர்றதை பார்த்ததும் திரும்பிட்டேன். என்…. எ… என்னை தப்பா நினைச்சுடாத சாரி…. சாரி” என்றவன் விறு விறுவென வெளியே சென்றுவிட்டான்.

அறையில் இருந்த ஹாசினிக்கும் மனது பட படவென்று அடித்து கொண்டுதான் இருந்தது.

‘ஹையோ….. மனமே போச்சே அந்த நைட்டிய மாட்டிட்டாவது போயிருக்கலாம்’ நினைத்தவள் முகம் வெட்கத்தில் குங்குமமாக சிவந்துதான் போனது.

(என்னடா நடக்குது இங்க அவன் அர்ச்சனாவை லவ் பண்ணிட்டு சுத்தறான். ஆனா சீன் எல்லாம் ஹாசி கூட நடக்குது. விதி வேற பிளான் போடுமோ. நமக்கென்ன நாம பாட்டுக்கு ஓரமா உட்கார்ந்து மிச்சர் சாப்பிடுவோம் நடக்கறது நடக்கட்டும் என்ற முடிவில் பதிவர்)