அத்தியாயம் -14

ஹாசி யோசனையாக இருப்பதை பார்த்த மித்ரா “என்ன ஆச்சு ஹாசி?” என்று கேட்க,

அவளோ “என்ன உங்க அண்ணன் லவ் பண்ணலாம். நீ எங்க அண்ணன லவ் பண்ண கூடாதா. என்னங்கடா இது அநியாயமா இருக்கு. இரு நான் போய் பேசறேன்” என்றவள் கையை தடுத்து பிடித்த மித்ரா,

“வேண்டாம் ஹாசி இன்னும் ரெண்டு நாளுல நாம ஊருக்கு கிளம்பிடுவோம் அங்க போய் எதா இருந்தாலும் பேசிக்கலாம். இங்க அதை பத்தி பேச வேண்டாம் ப்ளீஸ்” என்று கெஞ்ச,

வேறு வழி இல்லாமல் சம்மதித்த ஹாசி அவளிடம் ‘சரி’என்னும் விதமாக தலையசைத்துவிட்டு தன் அறை நோக்கி சென்றாள்.

அப்போது அவள் எதிரில் வந்த ஹார்ஷாவை பார்த்து அவள் முறைக்க,

‘எதுக்கு இப்போ என்னை இவ இப்படி முறைக்கறா’ என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் அவன் செய்த செயல்கள் அனைத்தும் நினைவு வர “ஹாசி அது….. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல,

அவளும் ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“ஹாசி அது வந்து……” என்றவன் இழுக்கும்போதே,

“ஹாசினி,………” என்று அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தி கொண்டு வந்தான் ரஞ்சன்.

அவனை கடுப்பாக பார்த்த ஹர்ஷா, அவன் கோலத்தை கண்டு சத்தம் போட்டு சிரிக்க, அது ரஞ்சனுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியது.

முகம் முழுதும் திரு நீரை அப்பி கொண்டு வந்து நின்ற அண்ணனை கண்டு சிரித்த ஹாசி “என்னடா அண்ணா பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி வந்து நிக்குற” என்க,

அவனோ “பேச்சி பாட்டிகிட்ட என்னடி சொன்ன?” என்றான் கோபமாக,

அவளோ கொசுவர்த்தி சுருளை சுற்றி யோசித்து சொல்ல, அவளை அடிக்க துரத்தினான் ரஞ்சன்.

“டேய் அண்ணா…. வேண்டாம் சொன்னா கேளு. நான் உனக்கு ஒரே ஒரு தங்கச்சிதானே. பாவம்ல” என்று கத்தி சொல்லி கொண்டே அவன் கையில் சிக்காமல் ஓட,

ரஞ்சனோ “இன்னைக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன் டி. என்ன வேலை பண்ணி வச்சிருக்க. உன்னாலதான் எனக்கு மண்ட மேல கொண்ட முளச்சுருக்கு. என்னா அடி தெரியுமா? அதுக்கு பதிலுக்கு பதில் செய்யாமல் விட மாட்டேன். ஒழுங்கா நில்லுடி” என்று அவனும் தங்கையை கரித்து கொட்டி கொண்டே துரத்தினான்.

அப்பொழுது அங்கு வந்த பேச்சி பாட்டி “ஆத்தி இன்னும் அந்த ரஞ்சனி போகலையா. இந்த துரத்து துரத்துது. கடங்காரன் எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லி என்கிட்ட ஐநூறு ரூபா புடுங்கிட்டானே….

இருக்கட்டும் கோவிலுக்கு போய் அவன் முடிய ஆஞ்சு புடுதேன் ஆஞ்சு’ என்று சொல்லி கொண்டு, ரஞ்சனிடம் “வேண்டாம் சொன்னா கேளு ரஞ்சனி ஒழுங்கா இந்த பையனை விட்டு போயிடு” என்று சொல்ல,

அவரை திரும்பி முறைத்தவன் ‘ இது வீடா மெண்டல் ஹாஸ்பிடலானே தெரிய மாட்டிகிது’ என்று முணு முணுத்து “பாட்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. அவ வேணும்னே உங்ககிட்ட கண்டதையும் சொல்லி இருக்கா” என்க,

“அப்போ எனக்கு தெரிஞ்சுதாலதான் அந்த புள்ளைய கொல்ல துரத்துறியா. வேணாம் ரஞ்சனி அது வாழ வேண்டிய புள்ள” என்று சொல்ல,

அதை கேட்ட ஹாசியோ சத்தமாக சிரிக்க துவங்கினாள்.

ரஞ்சன்,’ஆத்தி இது சரியான பைத்தியம் இல்ல. சரியாகாத பைத்தியம்’ என்று சொல்லி தங்கை அருகில் சென்று அவள் காதை பிடித்து திருக,

“ஆஆ…. டேய் அண்ணா வலிக்குது விடுடா” என்று கத்தினாள்.

பேச்சி பாட்டியும் அவனிடம் பேச வர, அவரை உக்கிரமாக முறைத்தவன் “இங்க பாரு பேச்சி வாய மூடிட்டு இப்போ நீ போகல. எனக்கு நீ செஞ்ச துரோகத்துக்கு கழுத்தை கடிச்சு துப்பிடுவேன் பார்த்துக்கோ” என்று அவர் வழியில் சென்றே அவர் வாயை அடைக்க,

அவரோ “ஏன் ரஞ்சு இப்படி பேசுற. சரி விடு உன் கிட்ட முட்டாய் புடுங்கி திண்ணது தப்புதான். இப்போ வேணா அதை உனக்கு வாங்கி தாரேன் போறியா” என்க,

ரஞ்சனுக்கே இப்போது அவர் சொன்னதில் சிரிப்பு வந்தது. இருந்தாலும் அதை அடக்கி கொண்டு “சரி…சரி போய் வாங்கிட்டு வா”

பேச்சி, “இதோ இப்போவே ஆள் அனுப்பறேன். எலேய் எவண்டா அங்க கடைக்கு போகணும் இங்க வாடா” என்று வீட்டில் வேலை செய்யும் ஒரு நபரை அவர் அழைக்க,

ரஞ்சனோ அவரிடம் விளையாட எண்ணி “பேச்சி அவனை எதுக்கு அனுப்பற. நீதானே என்கிட்ட மிட்டாய் பிடுங்கி திண்ண. அப்போ நீதான் உன் கையால வாங்கிட்டு வந்து குடுக்கணும் போ” என்றான்.

அவரும் “சரி ரஞ்சி” என்றுவிட்டு போக,

“ஹப்பா ஒருவழியா போயிட்டாங்க” என்ற ரஞ்சன் “ஏன்டி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. இப்படியா சொல்லி வைப்ப. கோவில்ல வச்சு அந்த பூசாரி என்ன அடி அடிச்சான் தெரியுமா” என்று பாவம் போல் சொல்லி கொண்டிருக்கும்போதே வெளியில் வந்த ராஜ் மகள் காதை ரஞ்சன் பிடித்திருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

ராஜ், “டேய் என்னடா நடக்குது இங்க. வந்த இடத்துல அமைதியா இல்லாம என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வளர்ந்த புள்ளைங்க மாதிரியா நடந்துக்கறீங்க” என்று கோபமாக கேட்க,

அவனோ அவரை விட கோபமாக “ஆமா உங்களுக்கு ரஞ்சன்னாலே இளிச்சவாய்தானே. என்கிட்டயே வாங்க. உங்க மக என்ன வேலை பண்ணி இருக்கா தெரியுமா” என்று கேட்க,

அவரோ வந்த இடத்தில் இப்படி சின்ன பிள்ளைங்க மாதிரி அடிச்சுக்கிட்டு மானத்தை வாங்குதுங்களே. இதையெல்லாம் பார்த்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க’ என்று மனதில் புலம்பி அவர்கள் அருகில் சென்று ஹாசி காதில் இருந்த ரஞ்சன் கையை எடுத்துவிட்டவர் “ரஞ்சன் அவ என்ன வேணா செய்யட்டும். அதுக்குன்னு நீ இப்படிதான் அவ காதை புடிச்சுட்டு நிற்பியா. ஹாசி சின்ன பொண்ணுடா. அதை புரிஞ்சுக்காம நீயும் அவகூட சேர்ந்து மல்லு கட்டிட்டு நின்னா என்ன அர்த்தம்” என்று கேட்க,

ஹாசியும் வேண்டுமென்றே பாவமாக முகத்தை வைத்து கொண்டு, வலிக்காத காதை தேய்த்து கொண்டே நல்லா கேளுங்கப்பா. கொஞ்சம் கூட வளர்ந்த மாடு மாதிரி நடந்துக்கறது இல்ல. வலிக்குது” என்று சொல்ல,

அவனோ கடுப்பாக “எதே….. இவ சின்ன பிள்ளையா. இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது. இனி இது சரி வராது. என்னை யாருக்காவது தத்து குடுங்க. நான் அவங்க கூடவே நிம்மதியா இருந்துக்கறேன்”

ராஜ்,“ஏற்கனவே உன்னை தத்து எடுத்துதான் வளர்க்கறோம் போடா அங்கிட்டு” என்றுவிட்டு அவன் தந்தை செல்ல,

‘படார்…..’ என்று ரஞ்சன் குட்டி நெஞ்சு வெடித்து விட்டது. ‘என்ன தத்தெடுத்து வளக்குறீங்களா?…..’ என்று திகைத்து நின்று கொண்டிருந்தான்.

அப்போது அவர்களை சாப்பிட அழைக்க வந்தார் ரேவதி.

மகன் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து நிற்பதையும். தந்தையும் மகளும் அவனை கண்டு சிரிப்பதையும் பார்த்த ரேவதி அப்பனுக்கும் மகளுக்கும் வேற வேலை இல்லை எப்போ பாரு என் மகனை வாம்பிலுக்கறதே பொழப்பா வச்சிட்டு இருக்காங்க’ என்று கடு கடுத்துவிட்டு ராஜ் அருகில் சென்றார்.

“ இங்க என்ன நடக்குது? என் பையன் ஏன் இப்படி நிற்குறான். அவனை நீங்க எதாவது சொன்னீங்களா?”

“நாங்க ஒன்னும் சொல்லல. உன் பையன்தான் இருக்க அழகு போதாதுன்னு மூஞ்சு முழுக்க சுண்ணாம்பு அடிச்சுட்டு வந்து நிற்குறான். அவனை நாங்க வேற என்ன சொல்ல போறோம்”
அவரும் மகனிடம் “ரஞ்சா என்னடா முகத்துல இவ்ளோ பவுடர்” என்று புரியாமல் கேட்க,

தாயை முறைத்த ரஞ்சன் “எது? இது பவுடர். அதை நீங்க பார்த்தீங்க”,

அவரும் “இல்லையா பின்ன. அதுதான் மூஞ்ச பார்த்தாலே தெரியுதேடா. கிராமத்து புள்ளைய கல்யாணம் பண்ணனும்னு ஏதும் ஆசை இருக்கோ. அதான் அவங்கள மயக்க இவ்ளோ பவுடர் போட்டுருக்கியா” என்றவர் கேட்க,

“ஆமா…. ஆமா உன் மகனை இப்படியே போக சொல்லு கிராமத்து பொண்ணுங்க எல்லாம் பயத்துல மயங்கி விழுங்க. ஆள பாரு. ஏன்டா இந்த கோலத்துல இருக்கன்னு கேட்காம, அம்மாவும் மகனும் மாதிரியா பேசிக்கிறீங்க” என்று ராஜ் கடுப்பாக பேச,

“உங்களுக்கு எல்லாம் என் மகன் அழகா கண்டு பொறாமை. அதான் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று நொடித்து கொள்ள,

ஹாசியோ “ம்மா உன் மகன் இப்படியே வெளிய போனா பொண்ணுங்க அவன் பின்னாடி வராது. இந்த ஊர் நாய்ங்கதான் கடிக்க பின்னாடி துரத்தும்” என்று சொல்லி சிரிக்க,

“ஏன்டி என் மகனை அப்படி சொல்ற” என்று மேலும் பேச வந்த தாயின் முன் கை எடுத்து கும்பிட்டு ரஞ்சன் “போதும் மகா பிரபு போதும். அது எப்படிம்மா சிரிக்காம சீரியசாவே ஒரு மனுஷனை குடும்பமா அசிங்கப்படுத்துறீங்க” என்று கேட்க,

அவரோ “மகனே நான் உன்னை அசிங்கப்படுத்துவேனாடா. இந்த அம்மாவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட” என்க,

அவரை மேலும் கீழும் பார்த்தவன், “குடும்பமா இது குடும்பமா” என்று கடுப்பாக கேட்க,

ஹாசி, “ஆமா ப்ரோ குடும்பம்தான் அதுவும் நல்ல குடும்பம்” என்று சொல்ல,
நெஞ்சில் கை வைத்தவன் “ஒரு ஆளா உங்க மூணு பேரையும் சமாளிக்க முடியல. நெஞ்சு வலிக்குது அதனால நான் கோபமா போறேன்” என்று நடக்க,

மகன் கையை பிடித்து தடுத்த ரேவதி “டேய் கண்ணா…….”

“என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணாதீங்கம்மா. இந்த ரஞ்சன் ஒரு தடவை முடிவெடுத்தன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றுவிட்டு தன் அறை நோக்கி போனவன் காதில் அவன் சொன்ன விஷயம் விழ,

டக்கென்று நடையை நிறுத்தியவன் அவரை திரும்பி பார்க்க அவரும்
“ஆமாடா கண்ணா மட்டன் குழம்பும், சிக்கன் கிரேவியும் ரெடியா இருக்கு. சாப்பிட வர்றியா. இல்ல….. சரி விடு நீதான் கோவமா இருக்கியே உன் பங்கை நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கறோம்”

ரஞ்சன் மனதில் ‘என்னது….. மூணு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுறீங்களா……’ என்று அதிர்ந்து ‘டேய் ரஞ்சு போற போக்க பார்த்தா ரசம் சோறு கூட மிஞ்சாது போல, நல்லா யோசி இப்போ உனக்கு ரொம்ப முக்கியமானது எது? சோறா சொரணையா…..’ என்ற கேள்வி எழ,

என்ன யோசித்தாலும் சோறுதான் முதலில் வர,உடனே சோறுதான் முக்கியம் அப்புறம் சொரணைய பார்த்துக்கலாம் என்று தீர்க்கமாக முடிவெடுத்து “நான் போய் மூஞ்ச கழுவிட்டு வந்து சாப்பிடறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

ரஞ்சன் வருவதையும் அவன் சொல்வதையும் கவனித்த ஹர்ஷா தன்னை அவன் கடந்து செல்லும்போது “கோவமா இருக்கேன்னு சொன்ன. நான்கூட சாப்பாடு மிச்சமாகும்னு நினைச்சேன்”

“இப்பயும் ஒன்னும் குறையல மச்சான். நீ சாப்பிடாம இரு சாப்பாடு மிச்சம் ஆகும்” என்று நக்கலாக ரஞ்சன் சொல்ல,

கோவமான ஹர்ஷா “டேய்…. மச்சான் சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காத” என்க,

ரஞ்சனோ “என்னங்கடா இது அநியாயமா இருக்கு. மச்சானா மச்சான் கூப்பிடாம அண்ணன்னா கூப்பிட முடியும். அப்படி கூப்பிட்ட முறை தப்பாகாது. மித்ரா என் பொண்டாட்டின்னா அவ அண்ணன் நீ எனக்கு மச்சான்தான்டா”

“டேய்..,……”என்று பல்லை கடித்த ஹர்ஷா “ச்ச…. அறிவு கெட்டவ நல்ல நல்ல பசங்க எவ்ளோ பேர் இங்க இருக்காங்க அவங்களை எல்லாம் விட்டுட்டு உன்னை போய் லவ் பண்ணியிருக்கா பாரு அவளை சொல்லணும்”

“டேய் மச்சான். நீ சொல்ற நல்ல பசங்களைவிட நான் ரொம்ப நல்ல பையன்டா. அதான் என்னை லவ் பண்ணியிருக்கா” என்று சொல்ல, திரும்பி அவனை உறுத்து விழித்தவன் விறு விறுவென தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.

மித்ராவையும் சாப்பிட அழைத்ததால் கீழே வந்தவள் அண்ணனும், ரஞ்சனும் பேசி கொண்டிருப்பதை கண்டு புருவம் சுருக்கி ‘இவங்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமாச்சே, எப்படி ஒன்னா பேசிட்டு இருக்காங்க’ என்று யோசனையாக நின்றிருந்தாள்,

தூரத்தில் நின்றதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனாலும் ஹர்ஷா முகத்தில் இருக்கும் கோபத்தை கண்டு மனது வருத்தப்பட்டவள். ‘எனக்காகவாவது அவரை உனக்கு பிடிக்கணும்ண்ணா’ என்று தனக்குள் சொல்லி கொண்டு பெருமூச்சுடன் செல்ல முனைந்தாள்.

மித்ராவை கவனித்த ரஞ்சன் சுற்றி தன் பார்வை செலுத்திகொண்டே அவள் அருகில் செல்ல, அவளோ அவன் மேல் இருந்த கோபத்தால் கண்டு கொள்ளாமல் விலகி செல்ல,

பெண்ணவள் கையை பிடித்து அங்கிருந்த சுவர் மறைவிற்கு இழுத்துச் சென்றவன் அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக பதித்து விலகினான்.

அவன் திடீர் செயலில் பெண்ணவள் அதிர்ந்து நிற்க அவள் கன்னத்தில் வைத்து தன்னை பார்க்க வைத்தவன் “என்ன பேபி இன்னும் மாமா மேல கோவமா தான் இருக்கியா” என்று கேட்க,

அவன் கையைத் தட்டி விட்டவள் தங்களை யாரவது கவனிக்கிறார்களா என்று பயந்து நாளா புறமும் பயத்தோடு தன் பார்வையை சூழலவிட்டு, யாரும் இல்லை என்றவுடன் நிம்மதியாகி கண்களை இறுக மூடி திறக்க,

அவள் கண்கள் செய்யும் ஜாடையை கண்டு மயங்கியவன் மீண்டும் குனிந்து அவள் கண்களில் இதழ் பதிக்க, “என்ன பண்றீங்க நிரன் யாராவது பார்த்தா என்ன ஆகறது”.என்று கோபமாக கேட்க,

ரஞ்சனோ கூலாக அவள் சேரியின் முந்தானை எடுத்து அவன் முகத்தில் இருந்து அவள் முகத்துக்கு மாறியிருந்த திருநீரை துடைத்துக் கொண்டே “யாராவது பார்பாங்க. நம்ம விஷயம் தெரிய வரும். அடுத்து கல்யாண வேலையை ஆரம்பிப்பாங்கன்னு தான் நானும் இதெல்லாம் பண்றேன். எங்க என் நேரம் மறுக்கா மறுக்கா உன் அண்ணன் கண்ணுலமட்டும்தான் படுது”என்று சோகம் போல் சொல்ல,

அதிர்ந்து போன மித்ரா “என்ன…. அ…. அ….. அப்போ….. அண்ணன் பார்த்துட்டானா”

“ம்ம்கூம்….. அப்போ பார்க்கலடா. இப்போ நாம ரெண்டு பேரும் கிஸ் பண்ணோம்ல அதைதான் பார்த்துட்டான். ச்ச…. உங்க அண்ணனுக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல. தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் ஒன்னா இருக்கறதை இப்படியா பார்க்கறது” என்று அலுத்து கொள்ள,

“அடேய்…… என்னடா பண்ணி வச்சுருக்க. என்னமோ பொண்டாட்டிகூட தனியா உன் ரூம்ல இருக்கும்போது என் அண்ணன் பார்த்த மாதிரி பேசற.

நடு ஹால்ல நின்னுட்டு பண்ற வேலையவாடா நீ பண்ணுன. ஹைய்யோ…..ஏற்கனவே அவன் நம்ம மேல செம்ம கோபத்துல இருக்கான். அதுல இது வேறையா. நான் எதைனு சமாளிக்கறது” என்று சொல்லி தலையில் கை வைக்க,

“நீ இந்த மாமன சமாளிடி செல்லம் போதும்” என்று மீண்டும் அவளை நெருங்க,

அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளி நிறுத்தியவள் “நான் உங்க மேல செம்ம கோவத்துல இருக்கேன். அது உங்களுக்கே தெரியும் ஒழுங்கா போயிடுங்க” என்று விட்டு போக,

தன்னை கடந்து சென்றவள் கையை பிடித்து சொடக்கி அவன் இழுக்க, இழுத்த வேகத்தில் அவன் மார்பில் மோதி நின்றவள் இதழில் மீண்டும் மென்மையாக இதில் பதித்து விலகி, “நீ கோபமாவே இரு அப்பதான் எனக்கு இப்படி எல்லாம் கிஸ் கிடைக்கும். நார்மலா இருந்தா பக்கத்தில் வர கூட விடமாட்ட” என்று கண்ணடித்து கூறிவிட்டு செல்ல,

மித்ராவோ தன்னவன் சேட்டையில் இதழில் பூத்த புன்னகையோடு சாப்பிட சென்றாள்.

ஹர்ஷா அமைதியாக செல்கிறான் என்றால் தங்கை காதலை ஏற்று கொண்டானோ காத்திருந்து பார்க்கலாம்…..