அத்தியாயம் -13

ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி.

“பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள் மனதுக்குள் என்ன அன்னைக்கு பொட்டு வச்சான் லவ்வ சொன்னான் அப்புறம் கண்டுக்கவே இல்ல.

ஒருவேலை ஊருக்கு போனதுக்கு அப்புறம் எதுவும் பேசுவானோ என்று நினைத்தாலும் அளவில்லா மகிழ்ச்சி அவள் முகத்தில். பின்ன பல வருட காதல் கை கூடி விட்டதே.மற்றவர் அறியாமல் அவனை ஓர கண்ணால் ரசித்து கொண்டே வந்தவள் ‘எப்போ பாரு போனு முதல்ல அதை தூக்கி போடணும்’ என்று முணு முணுத்து கொண்டே வர,

அப்போது கவனித்தாள் ஒரு தாவணி அணிந்த பெண் பின்னால் பார்த்து கொண்டே ஓடி வருவதை. அவள் தூரத்தில் வரும்போதே அவளை கவனித்த ஹாசி ‘என்ன இந்த பொண்ணு இப்படி ஓடி வர்றா, வர்ற வேகத்தை பார்த்தால் என்று யோசிக்கும்போதே ஹார்ஷா அருகில் அவள் வந்திருக்க, அவனோ போனில் மும்முரமாக இருக்க, நொடி நேரத்தில் இருவருக்கும் இடையில் வந்து நின்றிருந்தாள் ஹாசி.

“அம்மா……” என்று கத்தியவாறு அந்த பெண் ஹாசி மீது விழ, அவளோ ஹர்ஷா மீது விழுந்தாள்.

இரு பெண்கள் விழுவதை எதிர் பார்க்காத ஹார்ஷாவும் கீழே விழுந்தான்.

ஆணவன் கீழே இருக்க அவன் மீது பெண்ணவள் விழ மோதிய வேகத்தில் அவள் இதழ் அவன் மார்பில் அழுத்தமாக பதிந்து விலகியது. அதில் இருவர் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

“ஐயோ……” என்று அந்த தாவணி பெண் வேறு ஹாசி காது பக்கம் கத்த, அவள் முதுகு பக்கம் இருந்த அந்த பெண்ணை பார்த்து முறைத்தவள் “உனக்கு கண்ணு தெரியாதா. இப்படிதான் வந்து விழறதா” என்று கடுப்பாக கேட்டாலும், அவன்மீது அழுத்தமாக படுத்திருந்தவளுக்கு பட படப்பாக ஆனது.

மேல் இருந்த பெண்ணோ வேகமாக எழுந்தவள் “ஹையையோ என்ன மன்னிச்சுடுங்க. யாரு பஸ்ட் ராட்டினத்துகிட்ட போறதுன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் பெட் வச்சாங்க. அதான் அவங்க வர்றாங்களான்னு பார்த்துட்டே ஓடி வந்ததுல உங்களை கவனிக்கல என்ன மன்னிச்சுடுங்க அண்ணே, அண்ணி” என்று அந்த பெண் எழ,

அண்ணன் அண்ணி என்று சொன்னதில் ஹாசிக்கு மனம் மகிழ்ச்சியாக சிரித்து கொண்டே ஹர்ஷாவை நிமிர்ந்து பார்க்க அவனோ அந்த பெண்ணை முறைத்து ‘இவங்க போதைக்கு நான்தான் ஊறுகா போல, ஒரு நிமிஷம் அரண்டு போயிட்டேன்’ என்று புலம்பி, ஹாசியை பார்த்து “எந்திரிக்கற ஐடியா இருக்கா இல்ல இப்படியே நாள் புல்லா இங்கயே இருக்கலாமா” என்று நக்கலாக கேட்க,

அவளோ அவனை முறைத்தவள் வேகமாக எழ, அவள் தலையில் இருந்த மூடி அவன் சட்டை பட்டனில் மாட்டி கொண்டது. அதை கவனியாதவள் வேகமாக எழ, “அம்மா……” என்று கத்தி கொண்டே மீண்டும் அவன் மீது விழுந்தாள்.

“ஹேய் ஹாசினி மெதுவா எந்திரி.முடி பட்டன்ல மாட்டியிருக்கு இரு நான் நான் எடுத்துவிடறேன்” என்றவாறு அதை எடுக்க முயற்சித்து கொண்டிருந்தான்.

ஹாசிக்கு சுற்றி தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு ஒரு மாதிரி ஆகிவிட, “ஹர்ஷா ப்ளீஸ் சீக்கிரம் எடு. எல்லாரும் நம்மை பாக்குறாங்க” என்று சொல்ல, அவனும் “அதான் எடுக்கறேன்ல வெயிட் பண்ணு” என்றான்.

மித்ராவைபற்றிய யோசனையோடு பெற்றோர்களோடு முன்னால் சென்ற ரஞ்சன். அப்போதுதான் கவனித்தான் தங்கை உடன் வரவில்லை என்பதை.

‘ஹையையோ…. இவ எங்க போனா?” என்று வேகமாக வந்த பாதையில் சென்றான் அங்கு ஒரு இடத்தில் கூட்டமாக இருப்பதை கவனித்தவன் ‘என்ன கும்பலு குரங்கு வித்தை எதுவும் காட்டுறாங்களா’ என்ற யோசனையோடு அங்கிருந்தவர்களை விலக்கி கொண்டு உள்ளே சென்று பார்க்க,

ரஞ்சன் மீது ஹாசி இருப்பதை கண்டு அதிர்ந்து “ஹாசிம்மா என்ன ஆச்சு?” என்று பதற,

ஹர்ஷாவோ “என்னடா உன் டக்கு. விழுந்து இவ்ளோ நேரம் கடந்து ஓடி வர்றான் பாரு லூசு பய. அடேய் எடுப்பட்ட பயலே உன் தொங்கச்சிக்கு ஒன்னும் ஆகல நான்தான் கீழ நசிங்கிட்டு இருக்கேன். முதல்ல அவளை எழுப்புடா. பார்க்கதான் ஒல்லியா இருக்கா. ஹப்பா….. என்ன வெயிட்டு அரிசி மூட்ட மாதிரி இருக்கா” என்று சொல்ல,

அண்ணன், தங்கை இருவரும் ஒரு சேர அவனை முறைத்தனர். பின் ஒருவழியாக மாட்டியிருந்த முடியை அவன் எடுத்துவிட அவனில் இருந்து எழுந்தவள் அவனை முறைத்துவிட்டு அண்ணன் அருகில் சென்று நின்றுவிட,

சட்டையை நீவி கொண்டே தானும் எழுந்த ஹார்ஷா அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து விட்டு ‘ஆளுக்கும் வெயிட்டுக்கும் சம்மந்தம் இல்லாம இருக்காளே’ என்றுவிட்டு “என்ன லுக்கு வாங்க போலாம்” என்று செல்ல போனவன் ,

சுற்றி இருந்தவர்களை பார்த்து “இன்னும் எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க. அவ்ளோதான் கம்பெனி காட்டும் அதுக்கு மேல காட்டாது. மத்த கம்பெனி காட்டும் ஆனா எங்க கம்பெனி காட்டாது. போங்க போய் வேலைய பாருங்க” என்று சொல்லிவிட்டு நின்றிருந்த அண்ணன் தங்கையை கண்டு கொள்ளாமல் கோவிலுக்குள் அவன் சென்றுவிட,

செல்லும் அவனை தலையில் அடித்து கொண்டு பார்த்த ரஞ்சன் “ஏன் ஹாசிம்மா உனக்கு இந்த பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா” என்று சலிப்பாக கேட்க,

அவளோ செல்லும் அவன் முதுகை ரசித்து பார்த்து கொண்டே “கோணலா இருந்தாலும் அது என்னோடது அண்ணா” என்றாள்.

“என் அண்ணன் ஒன்னும் கோணல் இல்ல. உன் அண்ணன்தான் கோணல் புத்திகாரன்” என்ற குரல் பின் இருந்து கேட்க,

இருவரும் ஒரு சேர திரும்பினர். அங்கு கைகளை கட்டியவாறு இருவரையும் முறைத்து கொண்டு நின்றாள் மித்ரா.

அவளை அங்கு எதிர்பார்க்காதவர்கள் “ஹிஹிஹி……” என்று சிரித்து வைக்க, அவர்களை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள் அதன்பின் ஒன்றும் பேசாமல் முன்னால் செல்ல ஹாசி அவள் பின்னோடு ஓடினாள்.

பெண்ணவளின் கோபம் எதனால் என உணர்ந்த ரஞ்சன் எதுவும் பேசாமல் பெரு மூச்சுடன் அவர்களை தொடர்ந்து சென்றான்.

மித்ரா முகம் காலையில் இருந்தே ஒரு மாதிரி இருப்பதை கவனித்த ஹாசி. அண்ணனை பார்க்க அவன் முகமும் வாடிதான் இருந்தது. இருவருக்கும் இடையில் என்னவோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள் அதைப்பற்றி அவளிடம் பிறகு பேசலாம் என்று முடிவெடுத்து மித்ராவிடம் .வள வளவென்று பேசி கொண்டே சென்றாள்.

அவளும் ஹாசி பேச்சுக்கு “ம்ம்ம்….” கொட்டி கொண்டு இருந்தாலும், மனதில் ஏனோ ஒரு கவலை சூழ்ந்து இருந்தது. அது அண்ணனை பற்றியும் அவளது காதலனை பற்றியும் உண்டான கவலை.

ஹாசியும் மித்ராவும் சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டே பேச்சியின் பேரன் மனைவி கிருத்திகாவுடன் அமர்ந்திருந்தனர்.

அங்கு அவர் மூன்று கல்லை கூட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்த தாயிடம் ஓடி வந்த பேச்சியின் பேரன் கோகுல் “ம்மா…. கெட வெட்டிட்டாங்க” என்க, அவரோ “கெட உடனே உதறுனுச்சா” என்று கேட்டார்.

“ம்ம்ம்ம்….. தண்ணி தெளிச்ச உடனே உதறிடுச்சு. அந்த முக்கு வீட்டுகாரங்க கெடதான் இன்னும் உதறள. அடுத்த செட்காரங்களே வந்து வெட்டிட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. சரி அப்பா ஆட்ட வீட்டுக்கு தூக்கிட்டு போய் கிளீன் பண்ண ஆரம்பிக்கறேன்னு சொல்ல சொன்னாரு.

சமைக்க ஆளுங்க வந்துருவாங்கலாம் எல்லாம் எடுத்து குடுக்கணுமாம் உன்னையும் சீக்கிரம் வர சொன்னாரு” என்றுவிட்டு திருவிழா கடையில் வாங்கிய கண்ணாடியை மாட்டி கொண்டு ஓடிவிட்டான்.

அடுப்பு புகையில் கண்கள் எரிய அதை தேய்த்து கொண்டே அமர்ந்திருந்த ஹாசி, “என்னக்கா முடிஞ்சுதா” என்று ரஞ்சனியிடம் கேட்க, அவரும் “அவ்ளோதான்டா போலாம்” என்று அங்கிருந்த பைப்பில் நீரை பிடித்து பொங்கல் பாத்திரத்தை நன்றாக துடைத்து அடுப்பெரிந்து கொண்டிருந்ததற்கு அருகில் இருக்கும் சாம்பலை தொட்டு பொங்கல் பாத்திரத்திற்கு பட்டையை போட்டவர் அதை எடுத்து கூடைக்குள் வைத்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார்.

அவர் செய்வதை எல்லாம் ஆச்சர்யமாக பார்த்த ஹாசி “ஏன்க்கா சூடான பத்திரத்துல கை வைக்குறீங்களே சுடல” என்க,

அவரோ சிரித்து கொண்டே “பழகிடுச்சு…..” என்றுவிட்டு கோவிலின் உள்ளே சென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த இலையில் இரண்டு கரண்டி பொங்கலை எடுத்து வைத்தவர். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்து வந்துவிட்டார்.

தங்கையும், மித்துவும் கிளம்புவதை பார்த்த ரஞ்சன் தானும் செல்ல முனைய அவன் கையை பிடித்து தடுத்தது இன்னொரு கரம்.

“யார்ரா அது” என்று திரும்பி பார்த்தவன் பேச்சி பாட்டியை கண்டு புருவம் சுருக்கி “என்ன ஆச்சு பாட்டி? எதாவது வாங்கணுமா?” என்று யோசனையோடு கேட்க,

“ஆமாம்…” என்று தலையசைத்தவர் வேறு எதுவும் பேசாமல் அவனை இழுத்து செல்ல, அவனோ “பாட்டி எங்க கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க நானே வரேன்” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே,

முகம் முழுதும் முடி வளர்த்து மூஞ்சு எது தலை எது என்று தெரியாதது போல் பெரிய பட்டை நெற்றியில் போட்டு நின்றிருந்தவர் முன் கொண்டு போய் அவனை நிற்க வைத்த பாட்டி “எய்யா பூசாரி நான் சொன்னன்ல அந்த பையன் இவன்தான் கொஞ்சம் என்னன்னு பாரு” என்க,

அவர் செய்வதை புரியாமல் பார்த்து கொண்டிருந்த ரஞ்சன் “என்ன பாட்டி…” என்று சொல்லும்போதே அவன் மூஞ்சில ஒரு கை திருநீரை வீசிய அந்த நபர் கையில் வேப்ப இலையை வைத்து கொண்டு அவனை உறுத்து விழிக்க,

வாயில் விழுந்த திருநீரை “தூதூ…” என்று துப்பிய ரஞ்சன் ‘என்னடா நடக்குது இங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தவனை இழுத்துட்டு வந்து என்னடா பண்றீங்க. ஆமா இந்த முடி வளர்ந்தவன் எதுக்கு நம்ம இப்படி பாக்குறான்.

ஒருவேலை ஆண்களே பார்த்து பொறாமைபடும் பேரழகன் நானுங்கரதால இப்படி பாக்குறாரோ. ச்ச….. என்ன ஏன்டா இவ்வளவு அழகா படச்ச ஆண்டவா…..’ என்று முணு முணுத்தவன் தலையில் கையில் வைத்திருந்த வேப்பிலையால் அடிக்க,

“ஆஆஆ….. ஹேய் எதுக்கு என்ன அடிச்ச?” என்று கோபமாக கேட்டவனை கண்டு கொள்ளாத பூசாரி தன் அருகில் நின்ற இருவருக்கும் கண் காட்ட இருவரும் ரஞ்சனின் இரு புறமும் வந்து நின்று அவன் கைகளை மடக்கி இறுக்கமாக பிடித்து கொண்டனர்.

“டேய் என்னை விடுங்கடா……” என்றவன் குதிக்க,

பேச்சி, “பூசாரி புள்ள எவ்ளோ உக்கிரமா இருக்கான் பாருங்க. எப்படியாவது சரி பண்ணிவிடுங்க. வெளியூர் பையன் வேற. கல்யாணம் கூட ஆகல” என்று சொல்ல,

ரஞ்சனோ ‘டேய் நீங்க எல்லாம் தமிழ்லதான் பேசுறீங்க ஆனா ஒன்னும் புரியலடா என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்கடா’ என்று கத்த,

அவன் அருகில் சென்ற பேச்சி “ஒன்னும் கவலைப்படாத்தப்பு. பூசாரி பாத்துப்பாரு”.

“பாட்டீஈஈ…. நான் கவலை பட்டேன் அதை நீங்க பார்த்தீங்க. இங்க என்னதான் பண்றாங்க அதை சொல்லுங்க”

“அது ராசா……” என்று சொல்ல வருவதற்கு முன் அவரை விலக்கி நிறுத்திய பூசாரி “யார் நீ?” என்று அதட்டும் குரலில் கேட்க,

“ப்பூ…. இது கேட்கதான் இப்படி புடிச்சு வச்சுருக்கீங்களா. நான் கூட பயந்துட்டேன். ஆனாலும் உங்க ஊர்ல பேர் கேட்கற விதம் வித்தியாசமா இருக்கு” என்றவன் பாட்டியின் புறம் திரும்பி,

“உனக்குதான் நான் யாருனு தெரியுமே சொல்ல வேண்டியதுதானே” என்க,

அவனை யோசனையாக பார்த்த பாட்டி “சாந்தியா….” என்க,

அவனோ “சாந்தியா….” என்று முறைக்க,

“அப்போ கனகு….”

“பாட்டி……”

“அதுவும் இல்லையா அப்போ அந்த சாந்தாவாதான் இருக்கும்”

“ஐயோ பாட்டி நான் ரஞ்சன்……” என்று சொல்லிவிட்டு,’இந்த பாட்டிக்கு என்ன லூசா பொம்பள புள்ளைங்க பேரா சொல்லுது’ என்று விழிக்க,

“பூசாரி பார்த்தீங்களா அவளே சொல்லிட்டா ரஞ்சனின்னு போனா வாரம் மருந்து குடிச்சு செத்து போனாவதான் என்னன்னு பாருங்க” என்று சொல்ல,

ரஞ்சன், “எதே மருந்து குடிச்சு செத்தவளா. டேய் மண்டைய பிச்சுக்கணும் போல இருக்கு மரியாதையா இங்க நடக்குதுன்னு சொல்லுங்க. இல்ல இருக்க வெறிக்கு கழுத்த புடிச்சு கடிச்சுடுவேன்” என்று கத்த,

“ஆத்தி……” என்று அலறிய பேச்சி, கழுத்தை கை வைத்து மூடி “பூசாரி சீக்கிரம் அந்த வேப்பிலைய வச்சு அடிங்க” என்று சொல்ல,

அதன்பின் நடந்த கொடுமையில் ரஞ்சன் மண்டை மேல் ஒரு கொண்டை முலைத்து இருந்தது.

பூசாரி கை வலிக்கும் வரை அடித்தவர் பேச்சியின் புறம் திரும்பி “எல்லாம் முடிஞ்சுதும்மா. முதல்ல போக மாட்டேன், நான் ரஞ்சன்னு ஆம்பள பய பேர சொல்லி தப்பிக்க பார்த்துச்சு அடிச்ச அடில இருக்க இடம் தெரியாம ஓடி போச்சு.

இனிமே ஒன்னும் பிரச்சனை இல்ல. எதுக்கும் ராவு நேரத்துல வெளிய போகாம பார்த்துக்கோங்க. இந்த தாயத்த பையனுக்கு கட்டுங்க” என்று சொல்ல,

“ரொம்ப நன்றிப்பா வந்த இடத்துல புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சேன்னு பயந்துகிட்டே இருந்தேன்” என்றுவிட்டு தன் சுருக்கு பையில் இருந்து ஒரு இருநூறு ரூபா நோட்டை எடுத்து கொடுத்தார்.

அதை கவனித்த ரஞ்சன் “அடி பாவி கிழவி காசு குடுத்து என்னை அடிக்க வைக்கறதுல்ல உனக்கு என்ன யூஸ். இப்போ இங்க என்ன நடந்துச்சு.

நான்பாட்டுக்கு சிவனேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். ஏதோ வாங்கணும் வா ராசான்னு சொல்லி கூட்டி வந்து அடி வாங்க வச்சு. அடிச்சவனுக்கு இந்த பாட்டி காசும் தருதே ஏன்.

என்னங்கடா நடக்குது இங்க’ என்றவன் விழித்து கொண்டு இருக்க, அவன் கையை பிடித்து கூட்டி போன பாட்டி “ராசா பூசாரி சொன்னது கேட்டுச்சுல்ல நேரம் கெட்ட நேரத்துல வெளிய எல்லாம் போக கூடாது.

பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும் ராசா. பாரு அதுவே சொல்லுது ரஞ்சனினு. வயசு பையன் பார்த்து சூதனமா இருந்துக்கப்பா” என்றுவிட்டு சென்றுவிட,

அடி வாங்கியத்தில் நொந்து போய் இருந்த ரஞ்சன் ‘கீழ் பாக்கம் போக வேண்டிய கேஸ் போல. ச்ச இதை நம்பி வந்தேன் பாரு என்னை சொல்லணும்.

முதல்ல இந்த ஊரைவிட்டு போகணும் வந்ததுல இருந்து ஒன்னும் சரியில்ல’ என்று சொல்லி கொண்டே வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டில் அங்கு மித்து அறைக்கு சென்ற ஹாசி “என்னடி ஆச்சு ஏன் உன் முகம் இப்படி இருக்கு”.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்றவள் சொல்ல,

அவளை அழுத்தமாக பார்த்தவள் “நிஜம்மா ஒன்னும் இல்ல” என்று கேட்க,
அவள் பார்வையில் தடுமாறிய மித்ரா அவளை அணைத்து அழுது கொண்டே இரவு நடந்த அனைத்தையும் சொல்ல,

ஹாசி முகம் யோசனையாக மாறியது.

அடுத்து ஹாசி என்ன செய்ய போகிறாள் என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்……