அத்தியாயம் – 11

கரு நிற வானத்தில் வர்ண கோலங்கள் போட்டு கொண்டிருந்தது வான வேடிக்கை. திருவிழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் தயாராகி கோவிலுக்கு கிளம்பினர்.

வழி எங்கும் வளையல் கடை, பலூன் கடை, ஐஸ் க்ரீம் கடை என அனைத்தும் வரிசைகட்டி இருக்க, இளங்காளையர்கள் தாவணி பெண்களை ரசித்து கொண்டு இருந்தனர்.

ஹாசிக்கும், ரஞ்சனுக்கும் அனைத்தும் புதிதாக இருக்க, வழி முழுதும் இருப்பதை ரசித்து கொண்டே சென்றனர். கோவிலுக்கு சென்று சாமி கண்ணார தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தனர்.

பெரியவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிவிட, சின்னவர்கள் கடை தெருவை சுற்றிவிட்டு வருவதாக சொல்ல, மகளிடம் ஆயிரம் பத்திரம் சொன்ன ராஜ் மகனிடம் பார்த்து கொள்ளும்படி கண் ஜாடை காட்டிவிட்டே சென்றார்.

தகங்கையைப்பற்றி தெரிந்த ஹர்ஷாவோ “மித்து உனக்கு பனி சேராது ஒழுங்கா வா வீட்டுக்கு போகலாம்”.

“அண்ணா…. அண்ணா…. ப்ளீஸ். இது எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுண்ணா. ஒரு நாளுல என்ன ஆக போகுது. ப்ளீஸ்……” என்று கெஞ்ச,

தங்கையின் கெஞ்சலில் மனம் இறங்கியவன் “சரியென்றுவிட”அதன் பின் ஏது தடை.

ராட்டினம் சுற்றி, குச்சி ஐசை வாங்கி சாப்பிட்டு என்று ஜாலியாக சுற்றி வர,

ஹர்ஷா போனில் அர்ச்சனாவிடம் பேச முடியுமா என்ற நப்பாசையில் மெசேஜ் அனுப்பி கொண்டே இருக்க, அதுவோ டபிள் டிக் கூட காட்டாமல் சிங்கிள் டிக்கிலேயே இருக்க கடுப்பானவன் ‘வீட்டுக்கு போனா போனை எங்கயாவது தூக்கி போட்ருவா போல.

இவ்ளோ பயப்படுறவ எப்போ அவங்க வீட்ல விஷயத்தை சொல்லி அவங்க சம்மதத்தை வாங்குவாளோ தெரியல’ என்று புலம்பி கொண்டான். அந்த யோசனையில் இருந்தவன் ஏதேச்சையாக திரும்ப அங்கு ஒருவன் ஹாசியை இடிப்பதை போல் வருவதை கவனித்து டக்கென்று கையை நீட்டி அவள் இடையை பிடித்தவன் தன் அருகில் இழுத்திருக்க,

வேகமாக அவன் மார்பில் மோதி நிமிர்ந்தவள் ஒன்றும் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ எதிரில் வந்த நபரை முறைத்து கொண்டு இருந்தான்.

‘என்ன ஆச்சு இப்போ……’ என்றவள் விழிக்க, அவனோ இடிக்க வந்தவனைதான் முறைத்து கொண்டே இருந்தான்.

அப்போது அங்கு லெமன் ஜூஸுடன் வந்த ரஞ்சன் இருவரும் நின்றயிருக்கும் நிலையை பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்க,

சற்று நேரம் முன்பு நடக்க இருந்த விஷயத்தை நினைத்த ஹர்ஷாவிற்கு ரஞ்சன் மீதுதான் கோபம் வந்தது. தங்கச்சியை பார்த்துக்கறதை விட அப்படி அவனுக்கு என்ன வேலையென்று.

உடனே ரஞ்சனை கோபமாக பார்த்தவன் “தங்கச்சி…தங்கச்சின்னு உருக்குனா மட்டும் பத்தாது. வந்த இடத்தில் அவளை பொறுப்பா பாதுக்காப்பா பார்த்துகணும் அதைவிட்டுட்டு தனியா ஜூஸ் வாங்கி குடிக்க போனா, இப்படிதான் கண்ட நாயும் மேல இடிக்க வரும்” என்று சொல்ல,

அவனை உறுத்து பார்த்த ரஞ்சன் “அதை நீ சொல்ற பாரு. அங்க உன் தங்கச்சி ராட்டினம் சுத்துனதுல தலை சுத்துது வாந்தி வருதுன்னு சொன்னா, அவளுக்காகதான் இதை வாங்க போனேன்.

பொறுப்பபத்தி யார் பேசுறதுன்னு பாரு” என்று சொன்னவன் மித்து இருக்கும் இடம் நோக்கி போக,

ஹர்ஷா உடனே பதட்டத்துடன் மித்து அருகில் சென்று “என்னடா என்ன ஆச்சு? உனக்கு எதுவும் வேணும்னா அண்ணாக்கு குரல் குடுக்க வேண்டியதுதானே” என்க,

ரஞ்சன், “கூட வந்த தங்கச்சிய மறந்துட்டு போன்ல முழுகி போனவங்களுக்கு இப்போ ரொம்பதான் அக்கறை” என்க, ஹர்ஷா ரஞ்சனை முறைத்தான்.

ரஞ்சன், “டேய் முதல்ல என் தங்கச்சிய விடுடா எதுக்குடா இப்படி புடிச்சு வச்சுருக்க” என்று கோபமாக சொல்ல,

அப்போதுதான் ஹாசி இடையில் பதிந்திருந்த தன் கரங்களை விலக்கியவன் “சாரி….சாரி…. நான் மித்துவ பார்க்க வந்த அவசரத்துல உன்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்துட்டேன்” என்றவாறு கரங்களை எடுக்க,

அவனை முறைத்த ஹாசி “வா அண்ணா நாம போகலாம்” என்றவாறு செல்ல,

ரஞ்சனும் ஹர்ஷாவை முறைத்து கொண்டே சென்றான்.

“நல்ல குடும்பம். ரெண்டும் எப்புடி பார்த்துட்டு போகுது பாரு. அது சரி போனை பார்த்துட்டு மித்துவை பார்க்காம விட்டது என் தப்புதானே. அதானல அவங்கள சும்மா விடறேன்’

‘இல்லைனா என்ன ராசா பண்ணியிருப்ப’ என்று குதித்து வந்த மனசாட்சியை கண்டு கொள்ளாதவன் சோர்ந்து போய் அமர்ந்திருந்த தங்கை கையை பிடித்து அழைத்து செல்ல,

அங்கு காரோடு வந்து நின்றான் ரஞ்சன். காரில் தங்கையை அமர வைத்தவன் தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு “டிரைவர் போகலாம்” என்று நக்கல் குரலில் சொல்ல,

பல்லை கடித்த ரஞ்சன் தன் அருகில் அமர்ந்து கெஞ்சலாக தன்னை பார்க்கும் தங்கையை கண்டு கண்களை இறுக மூடி திறந்தவன் வீட்டை நோக்கி செல்ல துவங்கினான்.

வீட்டிற்கு வந்தவுடன் ஹாசி மித்துவை அழைத்து செல்ல, ஹர்ஷா ஏதோ மெசேஜ் வரவும் அர்ச்சனாவாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்து பார்த்து கொண்டே வர, அதை கவனித்த ரஞ்சன் அவன் கால்களுக்கு இடையே தன் கால்களை வைத்து தட்டி விட,

தடுமாறி கீழே விழுந்தான். “ஹா…. ஹா…. ஹா….” என்று சிரித்த ரஞ்சன் “என்னடா இன்னும் உனக்கு நடக்க தெரியலையா. நாளைக்கு திருவிழா கடைல தள்ளு வண்டி வாங்கி தரேன் அதை தள்ளி நடை பழகு. இவ்ளோ பெருசு வளர்ந்து எதுக்கு பால் புட்டி” என்று சிரித்து கொண்டே செல்ல,

பல்லை கடித்த ஹர்ஷா ‘டிரைவர்னு சொன்னதுக்கு பலி வாங்கிட்டான். மறுபடியும் என்கிட்ட மாட்டுவல்ல அப்போ பேசிக்கறேன் உன்னை’ என்று எழுந்தவன் வேகமாக உள்ளே சென்றான்.

தாமதமாக வந்தவர்களை திட்டிய பத்மா அனைவரையும் சாப்பிட சொல்ல, அவர்களோ கடையில் சாப்பிட்ட தீணி வகைகளால் வயிறு புல் என்றுவிட்டனர்.

சோர்ந்து தெரிந்த மகளிடம் என்னவென்று கேட்க, அவள் சொன்ன பதிலில் காளியானவர் “உனக்குதான் அது எல்லாம் செட் ஆகாதுன்னு தெரியுமே அப்புறம் ஏன்டி அதுல ஏறுன. உன் அப்பாக்கு தெரிஞ்சா ஓவரா நெஞ்ச நாக்குவாறு போ போய் படுத்து நல்லா தூங்கு” என்று அனுப்பிவிட்டு,

மற்றவர்களிடம் “ பாலாவது குடிச்சுட்டு போய் படுங்க” என்று கொடுக்க, அதை வாங்கி குடித்தவர்கள் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.

நடு இரவு வேலை அனைவரும் உறங்கிவிட்டனர் என்பதை உறுதி செய்து கொண்ட கொலுசு அணிந்த ஒரு ஜோடி மென் பாதம் மொட்டை மாடியை நோக்கி பதுங்கி பதுங்கி சென்றது.

ஒருவழியாக மாடிக்கு சென்ற அந்த உருவம் அங்கு நிலவை ரசித்து கொண்டிருந்தவனை கண்டு இதழ் கடித்து “ம்கூம்…” என்ற செரும,

வேகமாக திரும்பிய அந்த ஆண் வேறு யாரும் அல்ல நம்ம ரஞ்சன்தான்.

“ஹேய் மிது எப்போ வந்த? நீ இப்போ இங்க இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன் வந்துட்ட. ஐ மிஸ் யூடி பொண்டாட்டி” என்றவன் அவளை அணைக்க வர,

குனிந்து லாவகமாக அவன் அணைப்பில் சிக்காமல் விலகி கொண்டவள் “வவ்வ…. வவ்வ….” என்று அவனுக்கு பலிப்பு காட்ட,

அவனோ “ரொம்ப பண்ணாதடி. உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. அதுவும் இன்னைக்கு பார்க்க செம்மையா இருந்தடி. ஐயா டோடல் பிளாப்”.

“ஓஹோ….. அப்போ நான் இன்னைக்குதான் பார்க்க அழகா இருந்தேனா” என்று இடுப்பில் கை வைத்து ஆணவனை முறைக்க,

அவனோ திரு திருவென விழித்தவன் “ஹேய் என்னடி என்கிட்ட சண்டை போடவா இங்க வந்த” என்று அவள் கழுத்தோடு கை போட்டு அவளை வளைத்து பிடித்தவன் தன் மூக்கோடு அவள் மூக்கை உரசி “என் பொண்டாட்டி எப்போவும் அழகுதான். ஆனா ட்ரடிசனல் ட்ரெஸ்ல இன்னும் அழகா இருந்தா போதுமா” என்றவன் மூக்கு அவள் கன்னத்தில் படம் வரைய,

அவன் செயலில் உடல் கூசி போனவள் “நிரன் என்ன பண்ற. யாரவது வந்திர போறாங்க. தள்ளி நில்லு”.

“உன்னை தள்ளிட்டு வேணா போறேன். ஆனா தள்ளி எல்லாம் நிற்க முடியாது. உன்னை பார்க்க வேலை எல்லாம் சீக்கிரமா முடிச்சுட்டு ஓடி வந்தா. மேடம் கண்டுக்கவே மாட்டிக்கிறீங்க”

“ம்ம்….. என்ன பண்றது நிரன். அம்மா…அப்பாக்கு விஷயம் தெரிஞ்சுடுமோன்னு பயம் அதான்….”

“இப்படியே பயந்துட்டு இருந்தா எப்படிடி பொண்டாட்டி. நா ரிடர்ன் யூஎஸ் போகும்போது உன்னையும் கூட்டி போறதுதான் பிளான். சீக்கிரம் வீட்ல நம்ம விஷயம்பத்தி சொல்லணும்” என்க,

மித்ராவோ பயந்த குரலில் “வீட்ல ஏத்துப்பாங்களா நிரன். எனக்கு என்னமோ பயமாவே இருக்கு”.

“ஏன்டி இப்படி இருக்க. என் தங்கச்சிக்கு இருக்க தைரியம் கொஞ்சமாவது உனக்கு இருக்கா?”

“அவ்ளோ தைரியம் எல்லாம் எனக்கு வேண்டாம். நான் நானா இருக்கேன். அதுவே போதும்” என்று முகத்தை கோபமாக வைத்து கொண்டு சொன்னவள் கன்னத்தை கிள்ளியவன் “கோபப்படாத செல்ல குட்டி. நமக்கு கிடைக்கறதே கொஞ்ச நேரம் அதயும் சண்டை போட்டே போக்க வேண்டாம்” என்று சொல்ல,

அதன்பின் காதலர்களுக்கே உரிய வகையில் அவர்கள் நேரத்தை செலவிட்டனர். அவர்கள் உலகத்தில் மூழ்கி இருந்தவர்கள் பின் பக்கம் நின்றிருந்தவனை கவனிக்க தவறிவிட்டனர்.

சற்று நேரம் பேசியவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து “சரி நிரன் நான் கிளம்பறேன் டைம் ஆச்சு” என்க,

அவனோ “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதால்தான் என்ன? ஏன் அவசரம்? என்ன அவசரம் சொல்லு கண்ணே?” என்று பாட,

ஆணவனை செல்லமாக முறைத்தவள் “நான் இங்கயே இருந்தா. உன் மாமனார் கண்ணுலயோ இல்ல என் மாமனாரும் கண்ணுலயோ சிக்கி சின்னா பின்னம் ஆகிடுவேன். அதுக்கு பெட்டர் இப்போவே நான் கிளம்பறது” என்றவள் எழுந்து கொல்ல,

அவள் கையை பிடித்தவன் “கதைப்போமா….. கதைப்போமா….” என்று மீண்டும் பாட,

இது ஆவாரத்துக்கு இல்லை என்று நினைத்த மித்ரா “நிரன் விளையாடாத டைம் ஆச்சு. யாரவது வந்திர போறாங்க. நான் போறேன். நாளைக்கு பார்க்கலாம்” என்றுவிட்டு ஓடியவள் எதிரில் இருந்தவன் மார்பில் மோதி விழ போக, அவளை அப்படியே தாங்கி பிடித்தவன் முகம் முழுவதும் கோபத்தில் நிறைந்திருந்தது.

அண்ணனை அங்கு எதிர்பார்க்காதா மித்ரா அதிர்ந்து “அண்ணா……” என்று குரல் வெளிவராமல் வாயை மட்டும் அசைத்தாள்.

ஹார்ஷாவின் முறைப்பை கண்டு திரு திருத்தவள் ரஞ்சனை பார்க்க, அவனோ கூலாக நின்றிருந்தான்.

ஹர்ஷாவிற்கு ரஞ்சன் நின்றிருந்தவிதம் மேலும் கோபத்தை ஏற்ற, பற்களை கடித்தவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

ரஞ்சனோ தன் நைட் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு “ம்ம்ம்ம்…. ரொம்ப பசியா இருக்கு அதான் ரெண்டு தோசை சுட்டு சாப்பிட்டு போலாம்னு வந்தேன்னு சொல்லு மிது” என்க,

ஹர்ஷா அவனை உக்கிரமாக முறைத்தான். அதை கண்டு தோளை குலுக்கி கொண்டவன் வேறு பக்கம் தன் பார்வையை செலுத்த,

“மித்து இந்நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை”

ரஞ்சன், “என்ன மிது உன் அண்ணனுக்கு மாலை கண் நோய் எதுவும் இருக்கா என்ன? அதான் எதுக்கு வந்தேங்கறத ஓரமா நின்னு பார்த்துட்டானே. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி” என்க,

மித்ராவோ ‘அமைதியா இருடா ப்ளீஸ்’ என்றவாறு கண்களால் கெஞ்ச, அவனோ அதையெல்லாம் கண்டு கொண்டது போலவே இல்லை.

ரஞ்சன் பதிலில் பல்லை கடித்த ஹர்ஷா “மித்ரா உன்கிட்டதான் கேட்கிறேன். வாயை திறந்து பதிலை சொல்லு,

“அண்ணா…. அது….. வந்து….. நான்….. வந்து….. ர…. ரஞ்சன்……”

“ஹேய் பொண்டாட்டி எதுக்கு இவ்ளோ பயப்படுற. இந்த பால் டப்பா என்ன பண்ணிடுவான்னு நடுங்கற” என்று மித்ராவிடம் கேட்டவன்,

ஹர்ஷா புறம் திரும்பி “ஆமா…. நானும் உன் தங்கச்சியும் லவ் பண்றோம் சீக்கிரமே வீட்ல இருக்கவங்க சம்மதத்தோட கல்யாணம் செய்துக்க போறோம். இப்போ என்ன”.

ஹர்ஷா, “நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”.

ரஞ்சன், “உன்கிட்ட யார் பர்மிசன் கேட்டது”.

“எனக்கு உன்னை பிடிக்கல”

“ச்சி…… என்னடா பேசற. உனக்கு ஏன்டா என்னை பிடிக்கணும். நீயும் நானுமா குடும்பம் நடத்த போறோம். அப்படி எல்லாம் ஒரு எண்ணம் இருந்தா அதை அடியோட அழிச்சுடு.

நான் பாரின்ல வளர்ந்தந்தாலும் நம்ம கல்ச்சர விரும்பரவன். உனக்காக எல்லாம் என் விருப்பத்தை மாத்திக்க முடியாது. நான் அந்த மாதிரி பையன் இல்லை” என்று நக்கலாக சொல்ல,

அவன் என்ன சொல்கிறான் என்று முதலில் புரியாமல் விழித்த ஹர்ஷா, பின் புரிந்து கண்களை அகல விரித்தவன் “டேய்…” என்று அவன் அணிந்திருந்த டீ ஷர்ட் காலரை பிடிக்க, ரஞ்சனும் அவன் டீ ஷர்ட்டை பிடித்து சிங்கமாக சில்லிர்த்து கொண்டு நின்றான்.

இருவரையும் கண்ட மித்ராவிற்கு மயக்கம் வராத குறைதான். “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்” என்றவாறு இருவருக்கும் இடையில் வந்து அவர்களை பிரிக்க முயல,

அவர்களை அசைக்க முடியவில்லை “அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நிரன்.,….. அண்ணா மேல இருந்து கைய எடுங்க” என்று அழுத்தமாக சொன்னவள், அண்ணா……” என்று அழைக்க,

ரஞ்சன் மேல் இருந்து தன் கையை எடுத்த ஹர்ஷா இருவரையும் முறைத்து கொண்டு நிற்க, உன் முறைப்பு என்னை ஒன்னும் பண்ணாது என்பது போல் நின்றிருந்தான் ரஞ்சன்.

மித்ரா, “அண்ணா ப்ளீஸ். அவரு நல்லவருதாண்ணா. கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்” என்றவள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்தவாறு நிற்க,

ஹர்ஷா இருவரையும் கூர்ந்து பார்த்தவன் அதன் பின் எதுவும் சொல்லாமல் விறு விறுவென சென்றுவிட,

செல்லும் அண்ணனை கண்டு திகைத்தவள் “அண்ணா….. அண்ணா….” என்று கத்தி கொண்டே செல்ல,

அவனோ அவளை திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

அண்ணன் கோபமாக செல்வதை பார்த்து பயந்து போன மித்ரா. காலை என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று மனதிற்குள்ளே பல யோசனைகளோடு அப்படியே நின்றிருந்தாள்.

மித்ரா, ரஞ்சன் காதலை ஹர்ஷா ஏற்று கொல்லமாட்டானா?

காலை அனைவருக்கும் இவர்கள் காதல் விஷயம் தெரிந்தால் என்ன செய்வார்கள் அனைத்தையும் காத்திருந்து பார்க்கலாம்…