“ஆனாலும் உன் கற்பனை ஓவர் கற்பனை”
“அப்போ அந்த மாதிரிலாம் வராதா…”
“வரும் ஆனா அதையெல்லாம் எப்படி கடந்து போகணும்ன்னு எங்களுக்கு தெரியும். எந்த இடத்துல என்ன இருக்கும்ன்னு ஒரளவுக்கு பழக்கம் உண்டு தானே”
“அப்போ புயல், சுனாமிலாம் வந்தா…”
“புயல் வரும், சுனாமிலாம் வந்ததில்லை…”
“புயல் வந்தா கப்பல் ஆடும்ல கவுந்துடுமோ… ஒரு வாட்ஸ்அப் வீடியோ பாத்தேன். பெரிய பெரிய அலையா வந்து கப்பல்குள்ள விழுகுது…”
“நல்லது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே தெரியாது போல”
“கப்பல்ல போறதுல என்ன நல்லது??”
“என்னோட ஒரு ட்ரிப் வர்றியா??”
“ஆத்தி நா வரல சாமி…”
“சும்மா வா வள்ளிக்கண்ணு… உன்னோட போகணும்ன்னு ஆசையா இருக்கு…”
“எனக்கு பயம் கப்பல் கவுந்துடா என்னா செய்ய??”
“அப்போ ரோடுல பஸ் கவிழாதா, டிரைன் தடம் புரளாதா, பிளைட் கீழே விழாதா…”
“எல்லாமே நடக்க தான் செய்யும். நம்பிக்கை வேணும், இந்த நிமிஷம் நிஜம் அதை நம்பணும். எதுவும் ஆகிடும்ன்னு நினைச்சுட்டே இருந்தா வாழ்க்கையை வாழ முடியாது… அதோட சுவாரசியமும் குறைஞ்சு போகும்…”
“நாலு மாசம் முன்னாடி எனக்கு கல்யாணம் நடக்கும்ன்னே எனக்கு தெரியாது. இதோ இப்போ நீ என் கூட இருக்க, இந்த நிமிஷம் நிஜம்…”
“உன்னை எனக்கு பிடிக்குமா பிடிக்காதுன்னு கூட நம்ம கல்யாணம் வரைக்கும் எனக்கு தெரியலை. ஆனா நாம சேர்ந்து வாழலையா…”
“இப்படி உன்னை கட்டிப்பிடிச்சி கிஸ் பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேனான்னு…” சொல்லிட்டே ஒவ்வொண்ணா செஞ்சேன். அவளோட உதடுகிட்ட போகவும் என்னை பிடிச்சி தள்ளிவிட்டுடா…
“இதுக்கு தான் இம்புட்டு அலப்பறையா கூட்டுனீங்களோ”
“வள்ளிக்கண்ணு” என்று சொல்லி அவளை இழுத்து என் மேல சாய்ச்சுக்கிட்டேன்.
“டூ யூ லவ் மீ…”
“சொல்லு…”
“என்ன சொல்லணும்??”
“சே எஸ் ஆர் நோ…”
“நோ…”
“வாட்??”
“நோன்னு சொன்னா நம்பிருவியலோ”
“எதுக்கு நீ எப்போ பார்த்தாலும் என்னை பதற வைக்குறே??”
“நா ஒண்ணும் உங்களை பதற வைக்கலை… எனக்கு எதுக்கு இந்த வீடியோ காமிச்சிய”
“ஏன் என்னாச்சு??”
“எனக்கு பயமாயிருக்கு?? நீங்க இந்த வேலைக்கு தான் போவியளா”
“என்ன பயம் உனக்கு??”
பதில் சொல்லாம என் மேல சாஞ்சுக்கிட்டா… மனசுக்கு என்னவோ செய்யுது. அவளுக்காக தான் கொஞ்சம் யோசியேன்னு மனசு சொல்லுது.
“கொஞ்சம் டைம் கொடு அப்புறம் மாத்திக்கறேன் வேற வேலைக்கு…”
என்னை நிமிர்ந்து பார்த்து நிஜமாவான்னு அந்த மச்சம் இருக்கற புருவத்தை தூக்கி கேக்குறா…
நான் அந்த மச்சது மேல முத்தம் வைச்சு ஆமான்னு தலையாட்டினேன். என் கன்னத்துல பச்சக்கன்னு ஒரு இச் அம்மாடியோவ் இது கனவா நினைவான்னு இருந்துச்சு.
ஐ லவ் தட் மொமென்ட் எனக்கு பிடிச்ச பொண்ணோட எனக்கு பிடிச்ச கடலை என்ஜாய் பண்ண மொமென்ட், இது போல நேர்லயும் ஒரு முறை ஒரே ஒரு முறை அவளை கூட்டிட்டு போகணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.
மை காட் பிளைட் இஸ் லேன்டிங் நான் இன்னும் பெல்ட் போடலை. ரொம்ப நேரமா அனவுன்ஸ்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க, நான் என் கனவுலேயே இருந்திட்டேன். ஓகே வீட்டுக்கு போய் அவளை பாக்குறேன்.
ஒரு காரை பிடிச்சு வீடு வந்து சேர்ந்தேன். காலிங்பெல் அடிக்க முன்னாடி அம்மாக்கு போன் பண்ணேன்.
“சொல்லுலே என்ன இந்த நேரத்துல போன் போட்டுக்கிட்டு இருக்கவன்…”
“அம்மா நான் வீட்டுக்கு வந்திட்டு இருக்கேன். ஒரு பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். கதவை திறந்து வைங்க. அதுக்கு தான் போன் பண்ணேன்…”
“என்னலே சொல்லுத, நீ வாறன்னு முன்னாடியே சொல்லலை… உம் பொண்டாட்டியும் கமுக்கமா இருந்துகிட்டா”
“அம்மாம்மா… நான் அவகிட்டயும் சொல்லலை… நான் வர்றது அவளுக்கு தெரியவே தெரியாது. வேலை முடிஞ்சது சும்மா சர்பிரைஸ் பண்ணலாமேன்னு நான் கிளம்பினதை சொல்லலை…”
“என்னத்த சர்பிரைஸ் போ…”
வீட்டுக்கு வந்திட்டேன். என் பொண்டாட்டி ரூமை லாக் பண்ணி வைச்சிருக்காலோ இல்லை திறந்து வைச்சிருக்காலோன்னு யோசிச்சிட்டே படியேறினேன்.
கதவை மெதுவா திறந்து பார்த்தேன், லாக் போடலை போல. உள்ள வந்து நானே லாக் போட்டேன்.
“வள்ளிக்கண்ணுன்னு…” சொன்னது மட்டும் தான் தெரியும் ஓடி வந்து கட்டிப்பிடிச்சிக்கிட்டா…