ஏதாவது உடம்புக்கு வந்தா என்ன ? ஏது? ன்னு பார்க்கிறியா ?
எங்கே போறோம் ? எப்போ வரோம் ? ஏதாவது தெரியுமா ? உனக்கு ” கோபம் தொண்டை வரை அடைக்க பற்களைகடித்துக்கொண்டு நின்றார்
அவர் தோரணையை பார்த்த பார்வதிதேவி “இதில் கோபப்பட என்ன இருக்கு…? வேலன் தான் சமையல்காரன் உங்களுக்கு வேணும்கிறதை வேலன் சமச்சு போடுறான்
எங்கே போகனும்னாலும் கண்ணப்பன் தானே கூட வர்றான் அவன் தானே உங்க டிரைவரும் கூட !
உடம்புக்கு ஏதாவது வந்தா உங்க கூடவே சுத்தறதுக்கு நான் என்ன டாக்டரா ?
சமையல்காரன், டிரைவர், டாக்டர்ன்னு இவங்க ரோலில் நான் என்ன ப்ளே பண்ண முடியும் ?” பார்ன் வித் சில்வர் ஸ்பூன் பேமிலியில் பிறந்த பார்வதிதேவிக்கு இப்படி தான் வந்தது பேச்சு.
பார்வதிதேவியின் பதில் இருக்கும் அத்தனை கோபத்தையும் கிளப்ப “உன் பதில் இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சிருந்தும் இன்னமும் உன் அன்புக்காகவும் பாசத்துக்காகவும் எதிர்பார்க்க வைக்கிற இல்லையா! இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்க வாழ்க்கையே போச்சு !!” என்ன சொல்லவந்தாரோ !
“இரண்டு பேரும் நிறுத்துறீங்களா ?” கண்ணாடிசில்லாய் உடைந்து வந்தது பிர்லாவின் வார்த்தைகள்.
பெற்றோர்கள் அதிர்வாய் அவனை நோக்க
“உனக்காக இதை செஞ்சேன் அதை செஞ்சேன் பதிலுக்கு நீ என்ன செஞ்சேன்னு கேட்குறதுக்கு இது பிசினஸ் இல்ல டாட் லைப் இட்ஸ் அ லைப் டாட் !”
“அது அவளுக்கு தெரியலையே பிர்லா? லைப்ன்னு தெரியலையே! நம்பலோட லைப்னு தெரியலையே! இன்னமும் இவளுக்கு பிசினஸ் தான் முக்கியம்“ சோபாவில் கிடந்த பைல் திக்கிற்கொன்றாய் பறந்தது சந்திராவின் கோபத்தால்…ஆனால் உண்மை கோபம் கெங்காவின் உடல் நிலை தான். அதற்கு முக்கிய காரணம், இப்போது கூட இவளுக்கு தெரியாமல் தானே கெங்காவை பார்த்து வருகிறேன், அவளை அருகில் வைத்து கொள்ள முடியாத கோபம் இப்படி வெளிப்பட்டது
“ப்பா… போதும் இத்தோட நிறுத்திகோங்க!” பிர்லாவிற்கு கோபம் ஏறியது.
“என்னடா இவ உனக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்டானு புதுசா சப்போர்ட்டெல்லாம் பண்ற?” ஏளனமாய் அவர் பார்க்க
“சப்போர்ட் கொடுக்குறதுக்கு அவங்க அடுத்தவங்க கிடையாதுப்பா! என்னோட அம்மா” கேட்க ஆள் இல்லாமல் நிற்கும் தாயை கண்டு அவன் வார்த்தைகள் தொண்டையை விட்டு வர
“தள்ளுடா” என பிர்லாவை நகர்த்திய பார்வதிதேவி முகத்தை அழுத்த துடைத்து கொண்டு
“என்ன செஞ்சே என்ன செஞ்சேன்னு கேட்கிறீங்களே நல்லா கேட்டுக்கோங்க ! பெத்த மகன் நல்லா இருக்கனும்னு என்னோட வாழ்க்கையையே தூக்கி கொடுத்து இருக்கேன் . கெங்காகிட்ட தூக்கி கொடுத்துட்டு உக்கார்ந்திருக்கேன்…நான் நீங்க விரும்பினதுக்காக இல்லை என் பையனோட சந்தோஷத்துக்காக தான் கெங்காவை ஏத்துகிட்டேன்
“உங்களை பொறுத்தவரை ஒரு பொண்டாட்டி ஸ்தானத்தில் வேணா நான் தோத்து போய் இருக்கலாம் ஆனா ஒரு தாயா நான் தோத்து போக மாட்டேன் ”
“என்னைக்கு நீங்க கட்டினவளை விட்டுட்டு இன்னோருத்தி பின்னாடி போனீங்களோ அன்னைக்கு நீங்க ஒரு ஆம்பளைன்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கிட்டீங்க ”
“என் மகனுக்கு பாசத்தை அள்ளி அள்ளி கொடுக்கலைன்னலும், அவனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் ” ஆக்ரோசமான பேச்சு பார்வதிதேவியிடம்
“இப்போ கூட எனக்காக எதுவும் செய்ய மாட்டேல்ல ” என்ற விரக்தி சந்திராவிடம்
“மாட்டேன் செய்ய மாட்டேன் ”
“அதான் ஏன் ?”
“ஏன்னா ? புருஷனை விட பிள்ளை தான் முக்கியம்
பொண்டாட்டிக்கு பதிலா வப்பாட்டினு ஒரு கணவன் இருக்கலாம், ஆனால் பெத்த தாய் செத்து போனாகூட இன்னொரு அம்மாவை ஏத்துக்கவே ஏத்துக்காது அவளோட பிள்ளைகள் என் மகனும் அப்படி தான் ” பார்வதிதேவி பிர்லாவை பார்த்த பார்வை அவன் சர்வாங்கத்தையும் ஒடுங்க வைக்க குற்ற உணர்வில் பிர்லா நடுங்கி போனான்.
நொடிக்கொரு கெங்காம்மா என அழைக்கு அழைப்புகள் அம்மா என ஒரு போதும் வந்ததே யில்லையே அவன் வாயில் இருந்து. அப்படியென்றால் தன் தாய் சொல்வது போல், இன்னொரு தாயை ஏற்காதோ பிள்ளை உள்ளம். இதையே நினைத்து நினைத்து வீட்டில் இருக்க பிடிக்காமல் மதிய சாப்பாட்டை கூட சாப்பிடாமல் கம்பெனிக்கு கிளம்பி சென்றுவி்ட்டான்.
——-
மீண்டும் அவன் மாலை இறங்கும் வேளையில் தான் வீட்டிற்கு வந்தான் வரும் வழியில் லேசான மழை சாரல் வேறு அவனின் இறுகிய மனதை மழைச்சாரல் கூட குளிர்விக்க முடியாத படி கார் கதவுகளை சிக் என அடைத்து வீடு வந்து சேர்ந்தான் பிர்லா
முதலில் தேடியது தாய் தந்தையை தான் ! ஆனால் இருக்கும் அரவமே தெரியவில்லை.
அதன் பின்னே ப்ருந்தாவை தேட அவளும் இல்லை ! அவள் மொபைலுக்கு அழைத்தான் ஆனால் அவள் மொபைல் பெட்டிலேயே கிடந்தது ‘ப்ச் எங்கே போனா இவ ’ என கீழே வந்தவன்
“வேலன்னா ப்ருந்தா எங்கே ”
“தம்பி ,ப்ருந்தாம்மா மாடியில் இருக்காங்க ” தயங்கியபடி சொல்ல
“மாடியில் இருந்து தான் நான் வரேன் , இல்லையே அவ ”
“மொட்டைமாடியில் பார்த்தீங்களா தம்பி !”
“மொட்டை மாடியில் இவ என்ன செய்றா ?”
“தூரல் விழற மாதிரி இருக்குனு துணி எடுக்க போனாங்க தம்பி அப்போவே போனாங்க ஆனால் ஆளை தான் காணோம் !” தயங்கியபடி சொல்ல
“ப்ச் இதெல்லாம் நீங்க செய்ய கூடாதா ? மழை வேற பெய்யுது , மாடியில் இவ என்ன செய்யுறா !” என தடதடவென படியில் ஏறினான் பிர்லா
மாடிக்கதவு திறந்து உள்ளே நுழைந்தவனை நனைத்தது மழை சாரல் இதுவரை மழையில் நனைந்திராதவன் படபடவென அவன் மீது விழுந்த தூரலில் , மீனாய் துள்ளி மீண்டும் கதவை இடித்து நின்றான் ‘உன் உடலுக்கு மழை ஆகாதே, நனையாதே’, என மனசாட்சி கூறியதை விட அவன் காதல் மனம் தான் உரக்க கூவி அவனை நிறுத்தியது.ஆனால் அவன் பார்வை அவனை நிறுத்தவில்லை.
இருள் சூழ்ந்த மாலை கவிழ்ந்த வேளையில், மெல்லிய வெளிச்சக் கீற்றலின் நடுவே மின்னல் இருளை கவ்வி செல்ல
மெல்ல தூரிய தூரல் கள்ளமில்லாமல் அவள் மீது விழ நிதானமாய் பதிந்த அவன் பார்வை அவள் மீது கள்ளமாய் உரசி சென்றது
சாரல் இவன் முகத்தில் வந்து விழுந்து நிதர்சனத்தை கூறியது என்றால் மழையில் ஒரு நதியாய் துள்ளி கொண்டிருந்த ப்ருந்தா மனதில் விழுந்து கனவிற்கு இழுத்து சென்றாள்.
உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவள் “ஏய் பிர்லா எப்போ வந்த” ஒருமைக்கு தாவி தான் பழைய ப்ருந்தா என்பதை உணர்த்த
“ஏன் அங்கேயே நின்னுட்ட வா வா வா ?”
“நான் வரலை நீ வா !” மழை இரைச்சலையும் தாண்டி இவன் கூச்சலிட
“அட சீ வான்னு சொல்றேன்ல “
“வரலைன்னு சொன்னா கேளு ”
“நீ சொன்னால் கேட்கமாட்ட ” பேசியபடியே இரண்டே எட்டில் அவனருகே வந்தவள், துப்பட்டாவை ஒரு சுழற்று சுழற்றி அவன் பின்புறமாய் போட்டு ,பட்டென இழுக்க, அவள் மீது மொத்தமாய் வந்து விழுந்தான்.
அவன் எடை தாளாமல் இவள் கீழே விழ, அவள் மேலே இவன் கிடந்தான். படபடவென விழுந்த மழைச்சாரல் சில பல நொடிகளிலேயே அவனை முழுதாய் நனைக்க, நடுக்கம் கண்டது அவன் உடல்
“ப்ருந்தா நான் மழையில் நனையக்கூடாது ” நடுங்கிய குரலில் வந்தன வார்த்தைகள்
“ஏன், ஐஸ்கிரீம் பேக்டரி கரைஞ்சிடுமோ ” தன் மேல் கிடந்தவனின் மேல் அவள் கைகள் படர்ந்தது.
“ப்ருந்தா எனக்கு எனக்கு பி பிட்ஸ் இருக்கு ” அவளிடமிருந்து நடுங்கியபடி இவன் விலக சுழற்றி அடித்த மழையும் காற்றும் , ‘பிட்ஸ் இருக்கு’ என்ற வார்த்தைகளை ‘பிடிச்சிருக்கு’ என அவளுக்கு கேட்க வைத்தது.
“எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு பிர்லா ஐ லவ் யூ … ஐ லவ் யூ சோ… மச்….” கூக்குரல் இட்டு அட்டகாசமாய் அவன் இதழ்களை உரசினாள் ப்ருந்தா.
குளிருக்கு தடை போட்ட அவளது இதழ் முத்தமும், அவனுக்கு சூடேற்றியது.
சில நிமிடங்களில் பிர்லாவுக்கு குளிர் எடுக்க ஆரம்பமாக அவளை இழுத்துக்கொண்டு சென்றான். இவளும் ஆடியது போதும் என முடித்து கொண்டு அவனுடன் அறைக்குள் நுழைந்தாள்.
மழை நனைத்த அவளை , அறையினுள் நனைப்பது அவன் வேலையானது மழை தழுவியதை விட அதிகமாய் தழுவ வேண்டிய எண்ணம் போலும் அவனிடம். அதைவிட குளிர் எடுக்கும் உடலுக்கு நிச்சயம் இவள் வேண்டும், காதலை விட காமாமே ஆட்சி செய்தது அங்கே.