அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா
“காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின தானே…! உண்மையை சொல்லு ” இன்னும் அவள் தாலி இவன் கையில் தான்.
“இல்லை அதெல்லாம்… அப்படிலாம் இல்லை ” இப்போது கண்கள் வேறெங்கோ
இவள் சரிப்பட்டு வரமாட்டா போலவே என தலையை சற்றே நிமிர்த்தி, பெட்டில் முட்டுக்கொடுத்திருந்த கையை பரந்து விரிந்துகிடந்த கூந்தலுக்கு இடம் மாற்ற கூந்தலோடு கட்டிலும் அவன் முழங்கையை உள் வாங்க சுள்ளென்ற வலி அவளிடம் அவ்வளவு தான்…
‘ம் ப்ருந்தா பேக் டூ பார்ம் ’ என மனதிற்குள் சிரித்தவன் “நீ சொல்லாமல் நான் தள்ளி போக மாட்டேன் இன்னும் அழுத்தமாய் அவள் கூந்தலில் கையை புதைக்க
“ட்டேய்….” “முடியை விடுறா வலிக்குதுடா ” என்றவளை
“அப்போ சொல்லு விடுறேன் ” என அழுத்தமாய் கேட்டவனித்தில்,
“உண்மையை சொன்னால் என் சாவுக்கு நீங்க தான் காரணம்னு உங்க பேரை எழுதி வச்சிட்டு செத்து போய்டுவேன்னு மிரட்டுனேன் போதுமா…?”
“இப்போவாவது விட்டு தொலை…” என முடிந்தளவு அவனை நகர்த்த பார்த்தாள்.
ஆனால் இவள் சொன்ன பதிலை சற்றும் எதிர்பாரதவனாய் ஒருநொடி விழித்தவன், அடுத்ததாய் வெடித்து சிரிக்க துவங்க அவனது முழங்கை கூட சரிந்தது சிரிப்பில் குலுங்கிய அவனது தலையின் பாரம் தாங்காமல்
முதலில் முழங்கை, பின் அவனது தலை என இரண்டுமே அவள் கூந்தலில் இடம் பிடித்திருக்க கண்களை மட்டும் சற்று திருப்பி அவனை பார்த்தாள்.
இன்னமும் சிரித்து கொண்டு தான் இருந்தான் பிர்லா.
“செத்துடுவேனு மிரட்டியாவது என் காதலை நிரூபிச்சுட்டேன்!நீ எப்படி நிரூபிக்க போற பிர்லா?” ஆழ்ந்த குரலில் அவன் சிரிப்பு சத்தம் தானகவே நின்று போனது அவனிடம்.
அவள் கூந்தலில் படுத்திருந்தவன், அப்படியே உருண்டு அவள் முகத்தோடு முகம் உரச நெருங்கி “அதையும் கூடிய சீக்கிரம் பார்க்க தான போற!” இவனும் அதே ஆழ்ந்த குரலில் சொன்னான்
‘உயிரை விட்டுவிடுவேன்’ என்ற ஒற்றை மிரட்டலை பல முறை உபயோகப்படுத்தி இருந்தாலும், அது காதல் மிரட்டலாய் தான் அவனுக்கு தெரிந்தது. ‘உன்னை போலவே உன் காதலும் புரியாத புதிர் தான் ப்ருந்தா’ மனதிற்குள் நினைத்தவன், “ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு!” என அவளை விட்டு விலகி எழுந்தபடி “வா” என பெட்டில் கிடந்த அவள் கைகளை பிடித்து அலேக்காய் தூக்கி “வெளியே போகலாமா ” என்ற பிர்லாவின் கேள்வியில் காதல் ராக்கெட்டே பறக்கவிட்டது அவள் மனம்.
வாட்சில் பார்வை பதித்தவள் “இந்த…இந்த நேரமா? எங்கே?” விழிகள் சாசராய் விரிந்தது.
“வா” என அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“எங்க போறோம்னு சொல்லு, வேற டிரெஸ் போட்டுகிறேன்” என
“டீசர்ட் ஓகே தான், ஜீன்ஸ் ஏதாவது இருந்தா மாத்திக்க” என இவளை அளவிட்டபடியே கூற இவளும் மாற்றிவிட்டு வந்தாள்.
வெகு வருடங்களுக்கு பிறகு காரை தவிர்த்து பைக்கை எடுத்து வந்தான். அவளை அமர்த்திக்கொண்டு அழைத்து சென்றான். இவள் தான் நள்ளிரவு என நினைக்க, இவர்கள் தெரு தாண்டி மெயின் ரோட்டில் பயணிக்கும் போது இது பகலோ என எண்ணும் அளவிற்கு ஜனத்திறள் கூட்டம் கூட்டமாய் அலைமோதிக்கொண்டிருந்தது.
நள்ளிரவிற்கு இன்னும் சில நிமிடங்களே என்ற நிலையில், சாலையெங்கும் வரிசை கட்டி சென்ற வாகனங்களும், விசில் சத்தமும், காதல் ஜோடிகளின் சில்மிஷங்களும் இத்தனைக்கும் இடையில், காதை கிழித்த “ஹேப்பி நியூ இயர், ஹேப்பி நியூ இயர்” என்ற வாழ்த்துக்களும் சிறு சிலிர்ப்பை உண்டு பண்ண பின்னிருந்தபடியே அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் ப்ருந்தா.
ஆரவாரங்களின் நடுவில் ஆத்மார்த்தமாய் அவனுள் உட் புகுந்தாள் ப்ருந்தா.
சில நிமிட பயணங்களின் பின்
“ப்ருந்தா இறங்கு” என்றவனை விட்டு விலகி பைக்கை விட்டு இறங்கி நின்றாள். வந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். அதை விட ஆர்வமாய் அவன் முகத்தை பார்க்க, முகமெல்லாம் புன்னகை பூக்க, அவள் இடையில் கை கோர்த்து அழுத்தமாய் பிடித்துபடி உள் அழைத்து சென்றான்.
அவள் மிக மிக விரும்பும் பப். ரிதமிக் பப்.. இளவட்டங்களின் ஆர்பரிப்புகள், அலைய அலையாய் கரகோசமிட்டபடி, ஆடாப்பாடியபடி இருக்க அதன் நடுவில் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டு ஒரு ஓரமாய் போடப்படிருந்த மேஜையில் முன் இருந்த ரோலிங் சேரில் அமர வைத்தான். அந்த மேஜையின் மேல் இருந்த சிகப்பு நிற வெல்வட் கிளாத்தை உறுவி எறிய அழகழகாய் இரண்டு மூன்று ஓட்கா பாட்டில்கள்
முன்னேற்பாடாய் ரிசர்வ் செய்திருப்பான் போல என எண்ண வைத்தது அவளை.
அவள் விரும்பும் ட்ரிங் . கூடவே அவளோடு ஓட்காவையும் ஏற்றுக்கொண்ட காதல் கணவன் வேறு
“மேரேஜ் ட்ரீட் வித் ஓட்கா” என இவன் ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி சிரித்தான்
‘இது புதுவருடத்திற்கான கொண்டாட்டம் அல்ல என் புது வாழ்க்கை தொடங்கியதற்கான கொண்டாட்டம்’ என அவள் முன் ஓட்கா பாட்டிலை ஓபன் செய்து வைத்தான்.
“ம் ஹேவ் இட் ப்ருந்தா” என பாட்டிலை அவள் புறமாய் நீட்டினான்.
விரிந்திருந்த விழிகளை தாழ்த்தியபடி “ம்ஹூம் “ என மறுத்து இவன் புறமே நகர்த்தினாள் ப்ருந்தா.
“உனக்கு தான் ஓட்கா பிடிக்குமே!” குழப்பமாய் இவன் கேட்க
“அதை விட உன்னை பிடிக்குமே!” குழிந்த கன்னங்களோடு இவள் பேச
“சோ வாட்” என்றான் குறுகுறுப்பாய்.
“உனக்கு தான் இதெல்லாம் பிடிக்காதே” என
அவளுக்கு பிடிக்குமென மதுபானத்தை அவன் கொடுக்க அவனுக்கு பிடிக்காதென இவள் அதை ஒதுக்கி வைக்க, இருவரின் விழிகளும் மோதிக்கொண்டது.
பார்வைகள் உரசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தீ பற்றிக்கொண்டது இருவருக்கும்
“அவன் இதழ்கள் தாமகவே அவளை வா என அழைத்தது.”
அந்த ஒற்றை அழைப்பில் தான் எத்தனை மந்திரம்
கண் கட்டும் வித்தையை அவனும் அறிந்து கொண்டான் போல, கண்களாலேயே கட்டி இழுத்தான் அவளை. இவளும் அந்த வித்தைக்கு கட்டுபட்டு சென்றாள்
தன் அருகே நெருக்கமாய் வந்தவளின் கையை பிடித்தானோ உடலை பிடித்தானோ அவன் கூட அறியான் ஆனால் இதுவரை நடனத்தின் அறிசுவடி கூட அறியாதவளை பிர்லாவின் உடல், அவளுடன் ஒட்டிஉறவாடி கற்று கொடுக்க, பிர்லாவின் கைகளுக்குள் சுற்றி சுழன்று கொண்டிருந்தாள் ப்ருந்தா
பிர்லாவின் மனதின் வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்தாற் போல் வந்து விழுந்தது அந்த பாப் இசை
மிக மென்மையாய் ஆரம்பித்த நடனம், பின்னால் ஒலித்த பாடலுக்கு ஏற்ப வன்மையாய் மாறிக்கொண்டிருந்தது, அவனது அழுத்தமான பிடிகளில்.
ஒரு முறை என்ன பார்த்து
ஓரக் கண்ணால் பேசு
நீ நெருங்கி வந்தால் காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்னை பேசும்
வெறுக்காதே கனவெல்லாம்
சிரிக்காதே…
என்னை விட்டு விலகாத தறிகெட்டமனசு
உன்னைதேடி அலையும்….அடியே .
ஒட்டி இருந்த நிழல் ஒட்டாமல்
உன் பின்ன அலையும்
உன் முட்ட முழி முறைச்சால்
முன்னூறு ஊசி உள்ளே இறங்கும்
கட்டுவீரியனுக்கும் காதல்
ஒன்னு வந்தால் அடங்கும்
என் குட்டி இதயத்தில்
நீ தோண்ட பாக்குற சுரங்கம்!!
நீயும் என்ன நீங்கி போனால்
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமல் தான் போகாதடி
பாசாங்குதான் பண்ணாதடி
சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேண்டி
கோவம் ஏத்தி கொள்ளாதேடி
கொத்தி கொத்தி தின்னாதேடி அடியே .
ஒரசாத உசுரத்தான் உருக்காத மனசத்தான்,
இசைக்கேற்ப உரசிய உடல்கள் , பாடல் வரிகள் கொடுத்த சிலிர்ப்பில் இதழ்களும் உரசிக்கொண்டது, உரச வைத்தான் பிர்லா. தன்னை உரசியவளிடம் உயிரோடு உரசினான். ஆம் அத்தனை நெருக்கத்தில் மெதுவாய் குனிந்த அவன் இதழ் அவள் இதழ்களோடு இடமும் வலமுமாய் மிக அழுத்தமாய் உரசி கொண்டது.
சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேண்டி
கோவம் ஏத்தி கொள்ளாதேடி
கொத்தி கொத்தி தின்னாதேடி அடியே .
மீண்டும் ஒரு முறை கடைசி வரிகள் ஒலிக்க இதழ்களை உரசியவன், அழுத்தமாய் அவள் இதழ்களை கவ்விக்கொண்டான். மின்சாரம் ஒட்டிமொத்தமாய் பாய்ந்தது இருவருக்கும்.
இள நீல நிற மெல்லிய விளக்குகளின் ஊடே பிர்லாவின் முகம் இதுவரை காணாத முகமாய் உருவெடுத்தது. அவள் மீதான ஏக்கத்தை, காதலை வெளிச்சம் போட்டு காட்ட, ப்ருந்தா மூச்சடைத்து மூர்ச்சையாகிப்போனாள்.