அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன்.
“ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன் நீ என்னடான்னா இப்படி கேட்கிற ”
“அப்படி என்ன பண்ணின மறந்திட்டேன் போல கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம் !” என
அவ்வளவு தான் நவரசங்களையும் முகம் பிரதிபலிக்க, ஓய்வில்லாத வேலையை அவளது வாய் தத்து எடுத்து கொள்ள, பிர்லாவிற்கு தேவையான அத்தனையும் கிடைத்துவிட்டது
கிடைத்த அத்தனையும் அவனது புருவச்சுழிப்பினுள் சிக்கி வெளி வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
‘அடி…ப்….பாவி இப்படி ஒரு வேலை பார்த்ததுக்கு நான் கோமா ஸ்டேஜுல் தான் இருந்து இருக்கனும் ‘ நிஜமாகவே தன் மனசாட்சியை பாராட்டினான் பிர்லா.
இத்தனை சொல்லியும் அமைதியாய் இருக்கும் பிர்லாவை பார்த்து “ஹேய் நிஜமாவே என்மேல கோபம் இல்லை தானா ?” என
“இல்லை ஆனால் இனிமேல் இப்படி டென்சன் பண்ணாத !” அட்வைஸூம் சேர்ந்து செய்தான்.
“பண்ணினால் என்ன பண்ணுவ ?” வழக்கம் போல் சேட்டையை ஆரம்பிக்க்
“அன்னைக்கு மாதிரி டெம்ப்ரவரியாலாம் கழட்டி விட மாட்டேன், இனி பர்மணன்ட் தான் ”என இவளை மிரட்ட
“யாரு… நீ…? பர்மணன்டா கழட்டி விடற ஆளு ? என் மேல கோபம் இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணிட்டு நான் சேப்பா வீட்டுக்கு தான் போறேனானு செக் பண்ண பின்னாடியே வந்தவன் தானே நீயெல்லாம் வாய் பேசாத” என சொல்லாமல் விட்ட அந்த ஒன்றையும் போட்டு உடைத்தாள்.
பிர்லா அப்படியே நின்று விட்டான். அன்று மருத்துவமணைக்கு தான் சென்று நின்ற நிலை நியாபகம் வர, அந்த நிலையில் கூட ப்ருந்தாவின் நலனை பிரதானமாய் எண்ணிய தன் மனதை எண்ணி வியந்து போனான்.
கூடவே “என்ன பிர்லா பண்ணி வச்சு இருக்க சும்மாவே ஆடுவா இதில் இது வேறையா ?” விழிகள் பிதுங்க நின்றிருந்தான் பிர்லா
“உன் முழியே எல்லாத்தையும் காட்டி கொடுக்குது பிர்லா சொல்லு, சொல்லு நீ ஸ்ராங் ஆயிட்ட தானே ! என்னோட காதலில் ?” என அவனை வகையாய் சிக்க வைத்தாள் ப்ருந்தா.
“ஆமாம் ஆமாம் ஸ்ட்ராங் ஆகிட்டேன்… உன் மேல இருக்குறது எல்லாம் லவ் இல்லை ஜஸ்ட் ஒரு மேக்னட்டிக்ஸம் தான்னு இப்போ நான் ரொம்ப ஸ்ட்ராங் ஆகிட்டேன்.” என
“இந்த ஞானம் இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு,ஆனா எங்க எப்படி பிறந்தது ?” இவள் நக்கலாய் கேட்டாள்.
“ஈஷா யோக கொடுத்த ஞானம் தான் ” அவளை கிண்டலாய் இவன் பார்க்க
“ஓ… அப்படி என்ன சொன்னார் யோகாவில் ?”
“காதல் ஒரு கண் கட்டு வித்தைனு சொன்னார்” நிஜமான ஞானியாய் மாறி அவன் பேச
“கொஞ்சம் ‘விம்’ பார் போட்டு விளக்கினா நல்லா இருக்கும்….” ஏதோ வில்லங்கமாய் வர போகும் பதிலை நன்றாகவே எதிர்பார்த்தாள் என்பது அவளது கேள்வியிலேயே தெரிந்தது
“இல்லைன்னா….” இவனும் வம்பிழுத்தான்.
“ரம் போட பார்- க்கு தான் போகனும்”
“நீ ஓட்கா தான குடிப்ப ”
“ரம்மும் சரக்கு தான இல்ல அது மட்டும் ராமர் கோவில் தீர்த்தமா ? எல்லா சரக்கும் அடிப்பேன் நீ மேட்டருக்கு வா ” என
‘பாவி ஆம்பளை பையன் நானே ஒன்னும் குடிச்சதில்லை ஆனா நீ ’ என மனதினுள் தோன்றியதை மறைத்து
“அவர் சொன்னதை அப்படியே இவளிடமும் சொல்ல துவங்கினான் பிர்லா ஆனால் அவளுக்கு தேவையானதை மட்டுமே சொன்னான் மற்ற நேர்மறை எண்ணங்களை அழகாய் மறைத்து வைத்து பேச துவங்கினான்.
“இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு “காதல்”
“உங்களுக்குச் சமூக ரீதியாக ஒரு துணை தேவைப்படுகிறது. அது உடலிச்சையினால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையினால் பிறப்பது உண்மையான காதல் ஆகாது.
“இதில் எதையுமே நான் எதிர் பார்க்காமல் காதலிச்சேன், கல்யாணமும் பண்ணிகிட்டேன்னு யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்….”
“காதலை ஒரு முதலீடாக நினைத்து வாழ்க்கையைத் தொடங்கினால், சீக்கிரமே சலிப்பும், வலியும், வேதனையும் வருவதைத் தவிர்க்க முடியாது”
ஊனும் உயிருமாய் பல வருடங்கள் வரை செய்த காதல், அவர்களது திருமணத்தின் பின் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கழித்து அவர்களைப் பார்த்தால், பகீரென்றிருக்கும். துடிப்பும், உயிரோட்டமுமாக இருந்தவர்கள், உலகத்தையே தொலைத்துவிட்டவர்கள் போல் உலர்ந்திருப்பார்கள்.
யாரைப் பற்றி நினைத்தாலேயே முகத்தில் ஆனந்தம் வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது வேதனையாக மாறிவிட்டிருக்கும்.
ஏன் இப்படி? எல்லாம் மாயை….! ஏனெனில் காதல் என்பது ஒரு கண்கட்டு வித்தை
இப்போ சொல்லு அவர் சொன்னது எல்லாமே சரி தானே ! என அவனிரு புருவங்களையும் உயர்த்த
“சாமியாராவா !” அவள் பேசியதில் சிரிப்பு தொற்றிக்கொள்ள “அப்படிலாம் போக மாட்டேன், போற ஐடியாவும் இல்லை எனக்கு” என
“ம் சாமியாராவும் போகலை, என்னையும் கல்யாணம் பண்ணிக்க மாட்ட ! பேசுற பேச்செல்லாம் சாமியார் மாதிரி இருக்கு, பப்புல ஆடுற ஆட்டத்தை பார்த்தா மாமியாரையவே கரெக்ட் பண்ணிடுவன்னு தோண வைக்கிற… இதில் எது உண்மை ”
“ஏய்…” மீண்டும் ஒரு முறை அவள் வாயை அடைத்தான் பிர்லா “பேசறதை யோசிச்சு பேசவே மாட்டீயா நீ ?” ப்ருந்தாவின் கடைசி வார்த்தை அப்படி ஒரு பதட்டத்தை கொடுத்திருந்தது பிர்லாவிற்கு.
அவன் கையை தட்டிவிட்டுவிட்டு “எனக்கு நீ பதில் சொல்லி தான் ஆகனும் இரண்டில் எது உண்மை சொல்லு !” என
“ஒரே முறை சிரிக்க வைக்கிற, மறுமுறை பதற வைக்கிற இதில் உன்னோட உண்மையான முகம் எதுன்னு நீ சொல்லு, அப்பறமா நான் சொல்றேன்” பதிலுக்கு இவன் கேட்க
“அது நீ நடந்துகிறதை பொறுத்து ?” கொஞ்சமும் யோசிக்காமல் பதில் கொடுக்க.
“அப்படினா ?” இவன் புருவங்கள் உயர்ந்தது.
“நீ லவ் பண்ணினா நான் சிரிக்க வைப்பேன், லவ் பண்ணலைனா பதற வைப்பேன் ” அசராமல் இறங்கி அடித்தாள் ப்ருந்தா.
“என்ன டீல் பேசறியா ?” கொஞ்சமாய் வார்த்தைகள் தெறித்து விழுந்தது பிர்லாவிற்கு.
“நீ எப்படி வேணாலும் அதுக்கு பேர் வச்சுக்க ஐ டோண்ட் கேர்” என்பது போல் நின்றிருந்தாள் ப்ருந்தா.
“டீலிங்னு சொல்றதை விட தேவைனு சொல்லு அது இன்னமும் ரொம்ப சூட்டபிள் ஆகும்”
“என்னது தேவையா?” மார்புக்கு குறுக்கே இருந்த கைகள் தடாரென கீழ் விழ, அப்படி ஒரு அதிர்ச்சியுடன் இவனை பார்க்க
“தேவை தான் உன்னோட தேவை நான் அதுக்கு லவ்னு பேர் வேற !
“ஓ லவ்க்கு பேரு தேவை அப்போ கல்யாணத்துக்கு உங்க டிக்ச்னரியில் என்ன மீனிங் இருக்கு பிர்லா ? காதலுக்கு தேவைனு பேர் வச்சு அதை கொலை பண்ணாத !” என கேள்வி எழுப்பியவள் “என்னை லவ் பண்ண மாட்ட சரி ! உன் லையன்லையே வரேன்…. கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ற…. அது நானா இருந்துட்டு போறேன்…. உன்னை பொறுத்த வரை அது தேவையா நினைச்சுக்கோ…. என்னை பொறுத்த வரை அது காதலா இருந்துட்டு போகட்டும்” எனக்கு நீ மட்டும் போதும் என்ற பேச்சு அதிகமாய் வெளிப்பட்டது ப்ருந்தாவிடம்.
“அப்படினா ?”
“நீ எனக்கு வேணும் பிர்லா சத்தியமா, உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியலை… நீயே சொல்லு நான் எப்படி இருந்தா உனக்கு பிடிக்கும், கண்டிப்பா நான் சேன்ஜ் ஆயிடுவேன் அதுவும் உனக்கு பிடிச்ச மாதிரி” ப்ருந்தா பேச பேச சேர்த்து வைத்திருந்த அத்தனை மன திடமும் கட கட வென சரிந்து தான் போனது பிர்லாவிற்கு.
“இப்போ கூட கரெக்ட் பண்ண தான் ஐடியா கேட்கிற… காதலிக்கவும் ஐடியா கேட்கலை…. எனக்கு எப்படி காதலை உணர வைக்கன்னு நீ யோசிக்கவும் இல்லை… அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்பறம் ‘உனக்கு காதலை புரிய வச்சு திருத்தி காட்டறேன்னும்’ சொல்ல மாட்ற… ”