அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்
இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில் யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும் அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே பப் வந்ததையும் பார்த்த பிர்லா ‘அந்த பெண்ணுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா !’ என ஒரு நொடி தான் யோசித்தான்
பின் பப் வரும் பெண் எப்படியோ நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கிக்கொண்டான்
இதோ இப்போது அந்த பெண் மட்டும் தனியாய் இருக்க ‘கூட ஒருத்தன் இருந்தானே எங்கே பேனான் ?’ என அவனது மூளை தீவரமாய் யோசனை செய்து கொண்டிருக்க அவளின் குரல் அந்த யோசனையை தகர்த்து எறிந்தது.
“எவ்வளோ தான் குடிச்சாலும் மத்ததெல்லாம் போதையே ஏற மட்டுதே, ஆனா நீ ரொம்ப போதை தர்ற, எனக்கு நீ வேணும், தயவு செஞ்சு திறந்திடு ப்ளீஸ்” என சொல்லி ஒரு கையில் பாட்டிலை எடுத்து, மறு கையால் ஓப்பனரை வைத்து திறக்க,’ம்ஹூம்’ முடியவேயில்லை
‘ஏற்கனவே திறந்து தர தயாராய் இருந்த பேரரிடம் “நானே திறந்துப்பேன் ” என ஏன் சொன்னோம் ? எதற்காக சொன்னோம் ? என புலம்பியவள்
“ப்ருந்தா உனக்கு எதிரி உன் வாய் தான் குடிச்சு தான் வீட்டில் மாட்றனு பார்த்தால் குடிக்காமலேயே பப்ல மாட்டிக்கிற இரண்டுக்கும் காரணம் உன் வாய் தான் இந்த வாய் இல்லைனா நீயெல்லாம் எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா ? குடிச்சு குடிச்சு இப்படி குடிகாரியா ஆயிட்டியே ” என ஓட்கா பாட்டிலுடன் பேசிக்கொண்டிருக்க சற்று அதிகமாய் சிரித்துவிட்டான் பிர்லா
பிர்லாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு, அவன் புறமாய் திருப்பியவள் பாட்டிலில் இருந்து கையை எடுத்துவிட்டு டேபிளில் அதே கையை வைத்து அதில் தன் கன்னத்தை தாங்க அந்த பட்டென்ற செயலில், அவளின் ஒரு பாதி முகம் முழுவதும் கற்றை கூந்தல் மறைத்தபடி விழ கண்களில் இருந்த போதையுடன்
“ ஹேய் மேன், எதுக்கு சிரிக்கற ?” என புருவங்களை வேறு ஏற்றி இறக்க !
அந்த செய்கையில் ஸ்தம்பித்து விட்டான் பிர்லா
கன்னத்தில் இருந்த விரல்களை எடுத்து அவன் புறமாய் சொடுக்கிட்டு
“உன்ன தான் மேன் ஏன் சிரிக்கிற ?”என தெளிவாய் கேட்க
‘ஒன்றுமில்லை‘ என தானாகவே தலை இடவலாமாய் அசைய
“பொய் சொல்லாத நான் பாட்டிலை திறக்கிற லட்சனத்தை பார்த்து தானே சிரிக்கறே!” என இந்த முறை அடுத்த புருவத்தை உயர்த்தி அவன் திகைத்த பார்வையை கண்டு கொள்ளாமல்
“லேடீஸ் கஷ்டபடுறதை பார்த்தா ஜென்ஸ்க்கு கில்டியா இருக்குமாமே, உனக்கு அதெல்லாம் இல்லையா…. சிரிச்சிட்டு இருக்க கம் கம்…, “ என அவனை ஒரு விரலில் அசைத்து அழைத்து
“கம் கம் அண்ட் ஓபன் தி லிட்” என சட்டமாய் அழைத்தாள்
‘கட்டின புருஷன் மாதிரி எப்படி கூப்புடுறா பாரு !” என திகைத்தவனுக்குள் மனதினுள் சுவாரஸ்யம் எழ, அவளுக்கருகில் சென்றான் பிர்லா,அவளெதிரில் அமர்ந்து பாட்டிலை ஓபன் செய்து கொடுக்க
“நீ மட்டும் எப்படி இத்தனை டக்குனு ஓபன் பண்ணின ? எனக்கு வரவே மாட்டுது !” என சிரித்தபடி
“தேங்க்யூ” என்றாள் பின் அதை கிளாஸில் ஊற்றி எடுத்தவள், பிர்லாவை ஒரு பார்வை பார்த்து பின் அந்த கிளாஸை கீழே வைத்துவிட்டு, அவனுக்கும் ஒரு கிளாஸில் ஊற்றி, இரண்டு கிளாஸையும் எடுத்து ‘சியர்ஸ்’ என சொல்லி அதன் பின்பே அவள் குடிக்க
இவன் கையில் இருந்ததை விட்டு அவளையே பார்த்திருந்தான்.
“கிளாஸை பாரு மேன் ஏன் என்னையே பார்க்குற ?” குடித்தபடியே இவள் பேச
‘கிளாஸில் இருக்கிறதை விட நீ போதையா இருக்க ’ மனதில் பட்டதை பட்டதே தவிர்த்து வெளியே சொல்லவில்லை.
ஆனால் அவன் பார்வையில் “என்ன டேட்டிங் வரனுமா ?” அசால்ட்டாய் இவள் கேட்க
பிர்லாவிற்கு பக் என இருந்தது அவள் கேள்வியில்
“இல்லை அப்படிலாம் இல்லை !” என இவன் சொல்வதற்கு முன்பே
“பட் எனக்கு டேட்டிங் போற பழக்கமில்ல உன் கூடனு இல்ல யார் கூடவும் போனதில்லை போகவும் மாட்டேன் ” என்ற இவள் பதிலில்
“நம்புற மாதிரி இல்லையே !” என அவன் பார்வை ஓட்காவில் பதிய
“குடிக்கிற பொண்ணு எல்லாம் உன் பார்வையில் தப்பா விழுந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை ”என சட்டமாய் பதில் சொல்ல
“பார்க்க அழகா இருக்க ரிச்சாவும் தெரியிற ! அப்பறம் ஏன் குடிக்கிற பழக்கம் ? உனக்கு எதுவும் பிராப்ளமா.?” தன்னை போல் எதுவும் பாதிப்பினால் இருக்குமோ என கேட்க
“ரிச் தான் ! அழகு தான் ! ஆனா ப்ராப்ளம்லாம் இல்லப்பா டேஸ்ட் ஒட்டிக்கிச்சி ப்ரண்ஸ் கூட பெட் கட்டி குடிக்க ஆரம்பிச்சது அப்பறம் அப்படியே பழக்கமாயிடுச்சு ” நெடுநாளைய குடிகாரி போலவே பேசினாள்
ஏதோ சோக கீதம் வாசிப்பாள் என நினைத்த பிர்லாவிற்கு அவளின் பதில் அவளின் பணதிமிரை தான் உணர்த்தியது அது கொடுத்த எரிச்சலில்
“நீயெல்லாம் பியர்க்கே மட்டையாய்டுவ உனக்கு ஓட்காவா ?” என கிண்டல் செய்ய
“பியர்ல மட்டை கன்பார்ம் தான் ஆனால் ஓட்கால தான் ஸ்மல் எதுவும் இல்ல அப்ப தான் வீட்டில் யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க ” என அடுத்த கிளாஸை காலி செய்ய…
“அடிப்பாவி !” என பிர்லா வாய் பிளக்க
“என்ன அடிப்பாவி நீ தண்ணி யடிக்கறது உங்க வீட்டில் தெரிஞ்சா உன்னை தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா ?” என பிர்லாவிற்கு மனதார ஒரு கொட்டு வைத்து “பெரிசா அடிப்பாவி சொல்ல வந்துட்டான் ” என கடுப்பில் இவள். சொல்ல…
“ஓட்கா குடிச்சும் தெளிவா இருக்காளே ” என பிர்லா நினைத்தபடி
“வீட்டுக்கு தெரியாதுன்ற இந்த டைமில் உங்க வீட்டில் தேட மாட்டாங்களா ?” என ஒரு பார்வை பார்க்க
“ஹீ ஹீ… நான் தான் க்ரூப் ஸ்டடினு பொய் சொல்லிடுவேனே ” என
“அடிப்பாவி ?” இந்த முறையும் வாய் பிளக்க
“சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதே வந்த வேலையை பாரு ” என அவனருகில் இருந்த ஓட்கா கிளாஸை காட்ட
“எனக்கு ட்ரிங்கிங் ஹேபிட் கிடையாது ”என அதை தொடக்ககூட செய்யாமல் இவன் பேச
“அப்பறம் ஏன் இங்க வந்த ? சாமி கும்பிடவா ?” என இவள் கேட்க
அதற்குள்
“பிர்லா ” என ஸ்ரீநாத்தின் குரலில்
அவனை பார்த்து கையசைத்தபடி “இதுக்கு தான் வந்தேன் ” என அவளிடம் சொல்லிவிட்டு தன் முழுக்கை டீசர்ட்டை முழங்கை வரை ஏற்றிவிட்டவன் விறு விறுவென சென்றான்.
காதை பிளந்தது அந்த ஹிந்தி பாடல் வரிகள்
“அர்ரே லடிக்கி ப்யூட்டி புல் கர் கயி ச்சல்
ச்சல் ச்சல் ச்சல்…
அர்ரே லடிக்கி ப்யூட்டி புல் கர் கயி ச்சல்
ச்சல் ச்சல் ச்சல்…” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற படி பிர்லாவின் உறுதியான உடல் நெருப்பில் உருகிய மெழுகை போல் அவன் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்தது
அங்கிருப்பவர்களின் பார்வையை அவனுடனேயே எடுத்து செல்லும் வகையானது அவனது ‘ கன்டெம்ப்ரரி சால்சா….’ ஆணுக்கென முறுக்கேறிய அவனது உடல், வளைந்து நெளிந்து ஆட அவனுக்கு சரியாய் ஈடு கொடுத்து கொண்டிருந்தான் ஸ்ரீநாத்
களைப்படையும் வரை ஆடித்தீர்த்தான் பிர்லா பின் ஸ்ரீநாத்தை விட்டு விட்டு அவளின் அருகில் வந்தமர்ந்தவன்
“கூலிங் இல்லாமல் ஒரு கோக் ” என ஆர்டர் செய்து விட்டு அவளை பார்க்க
“சாமி கும்பிட வரலை சாமியாட வந்த போல ” என ஒரு கிளாஸில் இருந்ததை காலி செய்தபடி இவனுடன் வாயடித்தாள்.
அந்த உயரமான ,சிறு இருக்கையை கொண்ட ரோலிங் சேரில் அமர்ந்து இடம் வலம் என இசைக்கேற்ப அசைந்து கொண்டிருந்தவனை தாண்டி சென்றது அவள் பார்வை ‘பேச்சு என்கிட்ட, ஆனால் பார்வை வேற எங்கேயோ இருக்குதே’ என அதை பின்பற்றி இவனும் திரும்பி பார்க்க
பப்பின் வெளியில் பார்த்த அந்த ஒருவன் ஒரு சேர் தள்ளி சுவரோரமாய் நின்றபடி அவளை பார்த்து கண் அடிப்பதும் கண்ஜாடை காட்டி அழைப்பதுமாய் இருக்க ப்ருந்தா போதையேறிய கண்களால் முறைக்க முயன்று தோற்று கொண்டிருந்தாள்
பிர்லாவிற்கு அவன் செய்கையில் நான்கு அரை விட்டால் என்ன ? என்பது போல் பார்த்திருக்க
அந்நேரம் பில்லுடன் வந்தான் பேரர் அவனை பார்த்ததும் ப்ருந்தாவின் மனம் கணக்கு போட
தன் பர்சை வேண்டுமென்றே கீழே தள்ளி விட்டாள்
இவள் எடுப்பதற்காய் எழுந்து வர
”வெயிட் மேம் நான் எடுக்கேன் ” என பேரர் குனிந்து எடுக்க குனிந்திருந்த அவனின் பின்புறத்தில், நின்றிருந்த ப்ருந்தா தன் இடையால் ஓங்கி இடிக்க
“ஏய்…” என அலறியபடி அந்த பேரர் பேலன்ஸ் இல்லாமல் முன் புறம் பாய எதிரில் சுவரோரமாய் நின்றருந்த அவனின் அடிவயிற்றுக்கும் கீழ் நச்சென தன் தலையால் மோதி, தான் கீழே விழாமல் கைகளை ஊன்றி எழுந்து தன் முன்னால் இருந்தவனை பார்க்க
கால்களுக்கிடையில் கை வைத்தபடி “ஆ “ என்ற அலறலுடன் சுருண்டு கிடந்தான் அவன்
பிர்லாவிற்கு வியப்பில் கண்கள் விரிந்து அப்படியே நின்றுவிட்டான்.