அவள்முகத்தைபார்த்தவன் “இந்தளவுக்குபயம்வேண்டாம். கொஞ்சம்ஜாக்கிரதையாஇருப்போம்ன்னுதான்சொல்றேன். நீஎன்பொண்டாட்டிஇப்போ. அதுக்கேஉன்கிட்டஅவன்வரமாட்டான். ஆனாநாமளும்கொஞ்சம்பாதுகாப்பாஇருப்போம்ன்னுதான்சொல்றேன்… சும்மாபயந்துட்டுஇருக்காத.” என்றவன்அவள்அசையாமல்போகவும், தன் கையை நீட்டி லேசாக அவள் கையை பற்றி அழுத்த, சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.
அவள் பார்க்கவும் “என்ன.. என்ன ஆச்சு இப்போ..” என்று அவன் கேட்க,அவன் பிடித்திருந்த தன் கையை பார்த்தாள் அவள். “என்ன இப்போ கையை விடணுமா..” என்று நினைத்துக் கொண்டவன் பிடித்திருந்த கையை விடவே இல்லை. துர்கா அவன் கையை பார்த்தாலும் எதுவும் பேசாமலே இருக்க, வசதியாக போனது அவனுக்கு.
கையை பிடித்துக் கொண்டவன் “சும்மா யோசிச்சிட்டே இருக்காத. உன்னை பயமுறுத்த இதெல்லாம் சொல்லல. விடு” என்றவன் மீண்டும் அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க, சரி என்பதை போல் தலையசைத்தாள் அவள்.