சில வாரங்களாகவே சிவரூபனுக்கு மதுமிதாவின் தொந்திரவு சற்று எல்லை மீறி செல்வதாகவே மனதில் பட்டது.அவளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று மனதில் பல யோசனைகள்.இதற்கிடையில் அவனது புராஜெக்ட் வேறு முடிக்கமுடியாமல் சற்று இழுக்க மனஉளைச்சல் அதிகமானது.இன்னும் இருவாரங்களே உள்ளன அவனது புராஜெக்ட் முற்றிலுமாக முடித்து அதனுடைய அறிக்கை சமர்பிக்க வேண்டும்.ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளதால் இந்த தாமதம்.இவ்வாறு பல சிந்தனைகளில் தன் இருக்கையில் இருந்தவனைக் களைத்தது அலுவலக பணியாளரின் குரல்,
“சார்…”என்று அழைத்தவனை ரூபன் கேள்வியாக நோக்க,
“சார் உங்கள ப்ரின்சிபால் சார் கூப்பிடுரார் சார்…”என்றுவிட்டு செல்ல ரூபனுக்கு அவர் எதற்காக அழைத்திருப்பார் என்று புரிந்தது.எவ்வளவு நம்பிக்கையுடன் கூறினார் நீ இதை முடிப்பாய் என்று இப்போது இன்னும் முடியவில்லை என்று கூறினால் என்ன நினைப்பார் தன்னைப் பற்றி என்று தன்னை தானே நொந்து கொண்டவன் நேரமாவதை உணர்ந்து அவரைக் காண சென்றான்.அவனைக் கண்டவுடன் வரவேற்ற கோபாலன்,
“வா ரூபா…எப்படி இருக்க…”என்று பொதுவாக விசாரிக்க,
“நல்லா இருக்கேன் சார்…”என்று பதிலளித்தவன் அடுத்து எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனை செய்து கொண்டிருக்க கோபாலனோ,
“என்ன ரூபா…ஏதோ டென்ஷன்ல இருக்க…எதாவது பிரச்சனையா…”என்று அவனது யோசனை பொதுந்திய முகத்தைக் கண்டு கேட்டார்.ரூபனோ அவரிடம் எவ்வாறு தன் விஷயத்தைக் கூறுவது என்று தயங்கினான்.அவன் ஏதோ தன்னிடம் பேச தயங்குகிறான் என்பதை உணர்ந்த கோபாலன்,
“ரூபா ஏன் இவ்வளவு டென்ஷன்…ஜஸ்ட் ரிலாக்ஸ்…”என்றார் அவனை இயல்பாக்கும் பொருட்டு ஆனால் அவரது வார்த்தைகள் அவனை மேலும் வருத்த,
“சார்…நீங்க என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கீங்க…என்னால அந்த நம்பிக்கையை காப்பாத்த முடியும்னு தோணல சார் என்னை மன்னிச்சிடுங்க…”என்று தன் மனதில் உள்ளதை உடைத்து பேசிவிட்டான்.அவனை ஆழமான பார்வை பார்த்த கோபாலன்,
“ரூபா…நான் உன்னை இப்ப கூப்பிட்டது அடுத்தவாரம் நம்ம கல்லூரில நடக்க போற கல்சுரல்ஸ் புரோகிராம் பத்தி பேச தான்…உன் புராஜெக்ட் பத்தி இல்ல….நான் இப்பவும் சொல்லுறேன் உன்னால முடியும்…ஆனா இப்ப நீ ஏதோ ஒருவித பதட்டத்தில இருக்க முதல்ல அதை குறை…ஏன் திடீர் பதட்டம் ரூபா….எப்போதும் நிதானமா இருக்குற நீ இவ்வளவு பதட்டபடுற அளவுக்கு என்ன நடந்துச்சு…ஏதாவது பிரச்சனையா…”என்று கேட்க ரூபனுக்கு தான் சங்கடமாகி போனது அதே சங்கடத்துடன் அவரை ஏறிட்டவன்,
“சாரி சார் கொஞ்சம் பெர்சனல் பிராபிளம் அதான்…ஐ ம் சாரி…”என்று மன்னிப்பை வேண்டியவன் அவரிடம் கல்சுரல்ஸ் பற்றிய விஷயங்களை விவாதித்துவிட்டு பின் தன் வகுப்புக்கு சென்றான்.
அன்றைய வகுப்புக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு தன் அலுவலக அறைக்கு வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.காலை இருந்த பதட்டம் இப்போது இல்லை அவனிடம் அதுவும் கோபாலனிடம் பேசிவிட்டு வந்தவுடன் மனதில் சிறிய தெளிவு தன் மீது இவ்வளவு நம்பிக்கை அவர் வைத்திருக்கிறார் ஏன் என்னிடம் இல்லாமல் போனது ஏன் மனது தேவையில்லாமல் பதட்டம் அடைகிறது என்று யோசித்திக் கொண்டு இருக்கையில் அவனது கைபேசி பீப் என்ற ஒலியுடன் குறுஞ் செய்தி வந்ததை காண்பித்தது.யாராக இருக்கும் பார்க்காமலே புரிந்தது அது மதுவிடம் இருந்து வந்த செய்தி என்று இவ்வளவு மனதை குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது அவனுக்கு.எல்லாம் இவளால் என்று தன் பல்லிடுக்கில் முனகியவன் இன்று இவளுக்கு முதலில் முடிவுகட்டனும் என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
மாலை எப்போதும் போல் கல்லூரி முடிந்து தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான் ரூபன்,அப்போது அவனை உரசியபடி வந்து நின்றது மதுவின் வண்டி,
“ஹாய் அத்தான்…என்ன இன்னக்கி ரொம்ப அழகா இருக்கீங்க…”என்று எப்போதும் போல் அவளது சேட்டைகளை தொடங்க இவ்வளவு நாள் அவளை ஒரு பொருட்டாக கூட மதிபக்காமல் செல்பவன் இன்று நின்று அவளை தீர்க்கமாக பார்த்தான்.அவனது பார்வை உணர்ந்தவள்,
“என்ன அத்தான் பார்வையெல்லாம் பலமா இருக்கு…”என்று தன் துடுக்கு தனத்தை விடாமல் பேச அதுவரை கோபத்தை அடக்கி இருந்த ரூபனுக்கு கோபம் எல்லை கடந்தது அவளது கையை பிடித்து இழுத்து அருகில் இருந்த மரத்தின் பின் புறம் சென்றவன்,
“ஏய்…உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது…ச்சீ என்ன மாதிரி பொண்ணு நீ ஒரு ஆம்பள ஒதுங்கி போறான் பின்னாடியே இப்படி சுத்துற…உனக்கு எல்லாம் சொன்னா புத்தி வராது…இதுக்குனே வெளில நிறைய பேர் அலையிராங்க அவன்கிட்ட போ…”என்று தன் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் வார்த்தைகளை விட மதுவிற்கு ரூபனின் திடீர் கோபத்திலேயே சற்று நடுங்கியவள் நெருப்பு போல அவன் கக்கிய வார்த்தைகளில் தீ சுட்டாற் போல் விலக ரூபனுக்கு அன்று நாக்கில் சனி தான் புகுந்தது இருந்தது போல அவளை எப்படியாவது தன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தன் வார்த்தைகளில் கவனம் இல்லை.
“ஏன் விலகுற இந்த மாதிரி நெருங்கி நிக்கனும் தான உனக்கு எப்போதும் நினைப்பு…”என்று கூறி அவளை தன் கை வளைவுகளில் இழுத்து ஆவேசமாக அணைக்க முற்பட மதுவிற்கு ஏற்கனவே ரூபனின் வார்த்தைகள் மனதை வாள் கொண்டு அறுத்திருக்க மனதும் உடலும் தன் போல் நடுங்கியது.
கோபத்தில் அவளை அணைத்தவன் அவளை நகரவிடாமல் தன் இருகைகளாலும் இறுக பிடித்தான்.அவனது கைகள் அவளது இடையில் ஊர்ந்தது,அவளது கழுத்து பகுதியில் சூடான மூச்சுக் காற்றை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனது முகம் நோக்கினாள்.அவளது முகத்திற்கு மிக அருகில் இருந்தது ரூபனின் முகம் அதில் தெரிந்தது எல்லாம் ரௌத்திரம் மட்டுமே.மிதமிஞ்சிய கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதை மறந்தவனாக இருந்தது அவனது அடுத்த செயல்.
தன் முகத்தின் அருகில் இருந்த அவளது முகத்தை கண்டவன் கோபம் அழுகையில் துடித்துக் கொண்டிருந்த உதட்டின் தன் விரல்களால் நீவ நொடியில் அவனது நோக்கத்தை உணர்ந்த மது தன் மொத்த வலிமை கொண்டு அவனை உதறி தள்ளினாள்.அவள் அவ்வாறு தள்ளுவாள் என்று எதிர்பாராத ரூபன் நிலை தடுமாறி கிழ் விழுந்தான்.அவன் சுதாரிக்கும் முன் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள் மதுமிதா.ரூபனுக்கு அப்போது தான் செய்யவிருந்த காரியத்தின் வீரியம் புரிய எழுந்து தன்னையே திட்டிக் கொண்டு அவளை தேட அதற்குள் அவள் சென்றிருந்தாள்.