மயக்கும் மான்விழியாள் 20

மாலை தன் இறுதி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகும் நேரம் ரூபனின் கைபேசி அழைத்தது.புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யாராக இருக்கும் என்று யோசனையுடனே ஏற்று காதில் வைக்க,

“ஹலோ…அத்தான்….”என்ற மதுவின் உற்சாக குரல் கேட்க ரூபனுக்கு அவசரப்பட்டு இவக்கிட்ட நம்பர் குடுத்தது தப்போ என்று இவன் யோசனை செய்ய அதற்குள் மதுவோ,

“ஹலோ…அத்தான்….அத்தான்…”என்று கத்தத் தொடங்கினாள். ரூபனோ,

“ஏய் கத்தாத….எதுக்கு இப்ப போன் பண்ண….”என்று கேட்க

“ம்ம்…சாம்பாருக்கு உப்பு போடனும் அதுக்கு தான்…”என்று நக்கலாக கூறி ரூபனுக்கு பிபியை ஏற்றினாள். ரூபனுக்கோ முதலில் இவ என்ன சொல்லுரா என்று ஒரு நிமிடம் புரியாமல் யோசித்தவனுக்கு சில நிமிடங்களுக்கு பிறகே அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்பதை உணர்ந்து இவன் பேசும் முன்,

“என்ன அத்தான் உப்பு போட்டீங்களா…”என்று மேலும் நக்கல் அடிக்க ரூபனோ,

“ஏய் ஒழுங்க பேசு…இல்ல கட் பன்னிடுவேன்…”என்று அடிக்குரலில் சீற,அச்சோ என் ஆசை அத்தானுக்கு கோபம் வந்துடுச்சே…உன் வாயக் கொஞ்சம் குறைடி மது…உன் ஆளுக்கு இதெல்லாம் பிடிக்காது போல…என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,

“ஓகே ஓகே…நோ டென்ஷன்…நோ டென்ஷன்…”என்று மன்னிப்பை வேண்ட அதுக்கூட அவனுக்கு கிண்டலாகவே தெரிந்தது,

“இப்ப எதுக்கு கால் பண்ண…அத சொல்லு…”என்று வார்த்தைகளை கடித்து துப்ப தன் விளையாட்டு தனங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு,

“நான் பார்க்கல தான் இருக்கேன் வந்துடுங்க…மறந்துடிவீங்களோனு தான் போன் பண்ணேன்…”என்று கூற ரூபனோ,

“எல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு வரேன்…நீ போனை வை…”என்று கடுகடுவென்று கூறி போனை வைத்தான்.

“அச்சோ என்ன அத்தானுக்கு இவ்வளவு கோபம் வருது…ரொம்ப கோபக்கார் போல…நாம கொஞ்சம் ஜாக்கரதையா தான் இருக்கனும்….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் ரூபனுக்காக காத்திருக்கலானாள்.

தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு மதுவை சந்திக்க பார்க்கிற்கு சென்றான் ரூபன்.அது பெரிய பார்க் அங்கு ஓரத்தில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் மதுமிதா.இன்னக்கி இவக்கிட்ட பேசி ஒரு வழிக்கு கொண்டுவரனும் என்று மனதில் கூறிக் கொண்டே மதுவை நெருங்கினான் ரூபன்.

ரூபன் வந்ததில் இருந்து அவனையே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமிதா.கல்லூரியில் இருந்து நேரிடையாக வந்ததால் பார்மல் உடையில் இருந்தான் ரூபன்.சாதாரண உடையிலேயே பார்பவர் மனதை அள்ளும் அவனது உருவம் இப்போது இந்த பார்மல் உடையில் அவளை கொள்ளைக் கொண்டது.அவன் மீது விழுந்த கண்களை எடுக்க முடியாமல் மது தவிக்க ரூபனோ அவளிடம் எப்படி கூறி புரிய வைப்பது என்று யோசித்தபடியே வந்தான்.

“எப்படி பார்த்தாலும் நம்மல கொள்ளையடிக்குறானே….”என்று மது தன் மனதில் கமென்டிரி கொடுத்துக் கொண்டிருக்க

“என்னை பார்த்தது போதும் என்ன விஷயமா என்னை இங்க வர சொன்ன…”என்று ரூபன் இறுக்கத்துடனே கேட்க மதிவோ,

“என்ன அத்தான் இன்னும் கோபம் போகலையா…”என்று அவனது இறுகிய முகத்தை பார்த்து கேட்டாள்.

“என் முகம் எப்படி இருந்தா உனக்கு என்ன…நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”என்று அதே கடுகடு முகத்துடனே பேசினான்.தன் கல்லூரியில் இருந்து மதுவை பார்க்க கிளம்பும் போதே முடிவு செய்து கொண்டான் அவளிடம் இளக்கம் காட்டாமல் பேச வேண்டும் என்று.அதன்படி அவன் இறுக்கத்துடனே பேச மதுவிற்கு தான் சற்று கலக்கமாகி போனது எப்படி இவனிடம் தன் விருப்பத்தைக் கூறுவது என்று.இரு நிமிடங்கள் பேச்சுக்கள் அற்ற நிமிடங்களாக கரைய ரூபனுக்கு கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது அதே கோபத்துடன்,

“சரி நான் கிளம்புறேன்…”என்று கூற அவனை நகர விடாமல் கைகளை பிடித்திருந்தாள் மது அவன் கோபமாய் பேசும் முன்,

“ஏன் அத்தான் என்னை புரிஞ்சிக்கவே மாட்டீங்கிரீங்க…”என்று கலங்கி வந்தது அவளது வார்த்தை,அவளது கலங்கிய கண்களைக் கண்டவனுக்கு மனதும் வலிக்க தான் செய்த்து.முதல் முறை பார்த்த போது மலர்ந்து இருந்த அவளது பெரிய விழிகள் இன்று தன்னால் கலங்கியிருக்க அதைக் காண முடியாமல் வேறு புறம் முகம் திருப்பியவன்,

“இலகாதே மனமே…இலகாதே…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். முயன்று தன்னை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றான்.மதுவோ அவனது முகத்தில் வந்து போன பாவனைகளைக் கண்டவள்,

“மதூ…விட்டுடாத…எப்படி எல்லாம் முகத்தை மாத்துராரு…எதையோ மனசுல வச்சு தான் இப்படி நடந்துக்கிறார்…விட்டுடாத…”என்று கூறிக் கொண்டவள்.ரூபனின் கண்களை நேராக பார்த்து,

“அத்தான் உங்கள எனக்கு பிடிச்சிருக்கு…உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்…”என்று கேட்க ரூபனோ பதில் ஏதும் கூறாமல் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.அவனது பார்வையின் அர்த்ததை உணர்ந்தவள்,

“அத்தான் ப்ளீஸ்…இப்ப நம்ம இரண்டு பேரை பத்தி மட்டும் யோசிங்க…நம்ம குடும்பத்தை இதில் இழுக்காதீங்க…”என்று கூற அதுவரை அவளது கைகளில் இருந்த தன் கரத்தினை வெடுக்கென எடுத்தவன் அவளை தீர்க்கமாக பார்த்து,

“அது எப்படி இவ்வளவு சுயநலமா நீ யோசிக்குற…எனக்காக எல்லாம் செஞ்ச என் குடும்பத்தை விட்டுட்டு நேத்து வந்த உனக்காக நான் யோசிக்கனுமா…சூப்பர்…”என்று ஏளனமாக வந்தன வார்த்தைகள்.அவனது ஏளனத்தில் மது குனி குருகி போக தன்னை மீறிய கேவல் பிறந்தது அவளிடம்.

தன் காதலை எப்படியேனும் அவனிடம் கூறி சம்மதம் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இவள் அவ்வாறு பேசியிருக்க அதுவே இவளுக்கு எதிராகி போனது.அதுவும் தன்னவனின் எள்ளான பேச்சில் மனது நொருங்க அவளையும் மீறி கண்களில் குளம் கட்டியது.இந்த முறை அவளது கலங்கிய விழிகளைக் கண்டு கலங்கவில்லை அவன் மாறாக கோபம் தலைக்கேற,

“போதும் நிறுத்திருயா…சும்மா அழுது காரியம் சாதிக்கலாம்னு பார்க்குறியா….”என்று ரூபன் கோபமாக கேட்க,அவனது கேள்வியில் அதிர்ந்து நோக்கினாள்,அவளது பார்வைக் கூறும் பாஷைகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

“முதல்ல நீ கிளம்பு இங்கிருந்து….சும்மா காதல் அதுஇதுனு பிணாத்திக்கிட்டு திரியாம போ போய் ஒழுங்கா படிக்கிற வழிய பாரு….இதே மாதிரி திரும்பியும் ஏதாவது உளறிக்கிட்டு வந்து நின்னனு வச்சுக்கோ…”என்று கோபமாக கூறிக் கொண்டிருக்கையிலேயே,

“என்ன செய்வீங்க…எங்க அப்பாக் கிட்ட சொல்லுவீங்களா…சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்ல…”என்று அவனை விட கோபமாக வந்தது மதுவின் வார்த்தைகள்.அவளை முறைத்தவன்,

“பொது இடமா இருக்கேன்னு பார்க்குறேன் இல்ல…”என்று ரூபன் கூறும் முன்,

“இல்லனா மட்டும் என்ன கட்டிப்பிடிச்சு முத்தமா கொடுக்க போறீங்க…”என்று அதுவரை அமிங்கியிருந்த மதுவின் விளையாட்டு பேச்சு மீண்டும் தலை தூக்க,

“ச்ச என்ன பொண்ணு நீ எல்லாம்…நீ கூப்பிட்டேனு நான் வந்தேன் பாரு என்னை சொல்லனும்…எப்படியோ போ…ஆன திரும்பி…”என்று அவளின் முன் விரல் நீட்டி எச்சரிக்க கை நீட்ட அவனது ஒற்றை விரலை பிடித்த மது,

“திரும்பியும் வருவேன் அத்தான்…உங்கள அவ்வளவு சீக்கிரம் விடுறதா இல்ல…”என்று கூறி அவன் சுதாரிக்கும் முன் அவனது அந்த ஒற்றை விரலில் இதழ் ஒற்றி விட்டு அவன் அடிக்கும் முன் ஓடி விட்டாள்.அவர்கள் அமர்ந்திருந்தது இரு மரங்களின் நடுவில் இருக்கும் கல் பெஞ்ச் என்பதால் யாரும் அவர்களை கவனிக்கவில்லை.அவளது செயலில் கோபம் தலைக்கேற அதே பெஞ்சில் தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான் ரூபன்.

அவனது மனதில் மதுவை எதில் சேர்ப்பது  என்ற யோசனையே.சிறுபிள்ளை போல் அவள் செய்யும் செயல்கள் பிற்காலத்தில் அவளுக்கு பிரச்சனையாக மாறிவிடும் இதில் அவள் மட்டும் அல்ல அவனிற்கும் கெட்ட பெயரையைக் கொடுக்கும்.இதை எல்லாம் இவளிடம் எப்படிக் கூறி புரிய வைப்பது என்று பல சிந்தனைகளில் உழன்றவனை நிகழ்விற்கு கொண்டு வந்தது கைபேசி அழைப்பு தேவகி தான் அழைத்திருந்தார்.திரையில் தாயின் முகத்துடன் வந்த அழைப்பைக் கண்டவனுக்கு தான் செய்வது தான் சரி என்ற எண்ணம் மனதில் பதிந்தது.ஒரு ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன் தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

மது கூறியது போல் ரூபனை சும்மாக இருக்க விடவில்லை அவனிடம் பேச அழைப்பு விடுக்க அவனோ அவளது எண்ணைக் கண்டவுடன் சைலென்டில் போட அவளோ குறுஞ் செய்திகள் அனுப்ப தொடங்கினாள்.ஒருகட்டத்தில் அவளது எண்ணையே பிளாக் லிஸ்டில் ரூபன் போட அதில் மேலும் தூண்டப்பட்டவள் தினமும் மாலை அவனை சந்தித்து தொந்திரவு செய்ய தொடங்கினாள்.முதலில் எரிச்சல் அடைந்தவன் பிறகு இவளை எல்லாம் கண்டு கொள்ளவே கூடாது என்ற ரீதியில் புறக்கணிக்க அவளோ எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் அவனை சீண்டுவதிலேயே குறியாக இருக்க ரூபனின் கோபமும் எல்லை கடக்கும் நாளும் வந்தது.

இந்நிலையில் மதுவின் வீட்டில் நித்யாவிற்கு வரன் அமைந்திருக்க அருணாச்சலம் அவளின் கல்யாணத்திற்கு முடிவு செய்தார்.அதில் தன் தம்பியிடம் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதாக பூமிநாதனிடம் பணம் கேட்க அண்ணனின் சூழ்ச்சி தெரியாத அவரும்,

“என்ன அண்ணா நீங்க என்கிட்ட போய் இதெல்லாம் கேட்டுக்கிட்டு…உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துங்குங்க…”என்று வெள்ளேந்தியாக கூற அருணாச்சலமோ தம்பியின் வருவாயில் பாதியை தன் பெயரில் வருமாறு மாற்றியிருந்தார்.வீட்டின் மொத்த செலவும் அவரது கையில் இருப்பதும் அவருக்கு வசதியாகி போக யாருக்கும் இது தெரியாமலே போனது.சுந்தரி மட்டும் மாத செலவிற்கு கேட்கும் போது ஏதோ குறைவதாக தோன்ற அதை அவரிடம் கேட்டார்.பூமிநாதனோ தன் அண்ணன் கல்யாண செலவிற்கு கொடுத்திற்பதாக கூற சுந்தரிக்கு மனதில் ஏதோ தவறாகபட அன்றிலிருந்து யாரிடமும் கூறாமல் தன் கையில் மீறும் தொகையை மிச்சப்படுத்த தொடங்கியிருந்தார்.