சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே…இதோ அடுத்த பதிவு..
மயக்கும் மான்விழியாள் 14
மருத்துவர் இன்று ஒரு நாள் மட்டும் இருக்க சொல்லி கேட்க இருக்க மறுத்துவிட்டாள் மதுமிதா.ஏற்கனவே சுந்தரி பூமிநாதனின் குடைச்சலில் மதுவிற்கு விபத்து என்று உளரியிருக்க அவ்வளவு தான் மகளை காண வேண்டும் என்று பூமிநாதன் வீட்டில் பிடிவாதம் பிடிப்பதாக ஆனந்த் கூறியவுடன் கிளம்பிவிட்டாள் மது.நிவேதா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை.நிவேதாவின் கைபேசி மூலம் தன் கடை மேளாருக்கு தனக்கு விபத்து என்று தகவல் தெரிவித்து ஒரு நாள் மட்டும் விடுமுறை வாங்கினாள்.
நிவேதா மேலும் இரு நாள் விடுமுறை எடுக்க சொல்ல மது வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.மதுவின் பிடிவாத்தில் நிவேதாவிற்கு கூட கோபம் தான் இருந்தும் அமைதியாக இருந்து கொண்டாள்.மது வீட்டுற்கு வந்தவுடன் நேராக பூமிநாதனைக் காண சென்றாள்.விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தார் பூமிநாதன் அவரின் அருகில் சென்று,
“அப்பா…”என்று அழைத்தாள்.மகளின் குரலைக் கேட்டு திரும்பியவர்,
“மதூ…எப்படிடா இருக்க…இந்த அப்பா எதுக்கும் தேவையில்லைனு முடிவே பண்ணிட்டியாடா…உனக்கு ஆக்ஸிடன்ட் ஆனத கூட மறைச்சிட்ட…அப்பா எங்க வரப் போரார்…அப்படினு தான சொல்லல…”என்று அவர் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி அழ ஆரம்பிக்க மதுவால் எதுவும் கூறமுடியவில்லை.சற்று நேரம் தந்தையின் அழுகைக் கண்டு ஸம்பித்து நின்றுவிட்டாள்.தந்தை பயப்படுவார் அதனால் கூறவேண்டாம் என்று சொல்லியிருக்க அவர் இவ்வாறு வருந்துவார் என்று மது நினைக்கவில்லை.என்ன தான் பிள்ளைகள் வளர்ந்துவிட்டாளும் பெற்றவர்களின் கண்களுக்கு அவர்கள் குழந்தைகள் தான்.
பூமிநாதன் மனதில் ஏற்கனவே திருமணமாக வேண்டிய வயதில் மகளின் வருமானத்தில் தான் வாழ்கிறோமே என்ற குற்ற உணர்வு இதில் மகள் தனக்கு விபத்து நேர்ந்ததைக் கூட மறைத்து மேலும் வலிக்க செய்திருந்தது.தந்தை மகளின் பாசபோராட்டத்தை சுந்தரி தான் முடித்து வைத்தார்.
“என்னங்க நீங்க அவளே அடிப்பட்டு வந்துருக்கா அவகிட்ட போய் அழுதுகிட்டு…”என்று அதட்டவும் சற்று மட்டுபட்ட பூமிநாதன் தன் மகளின் தலைக் காயத்தை ஆராய்ந்தவாரே,
“ரொம்ப வலிக்குதாடா….”என்று கேட்க இல்லை என்னும் விதமாக தலையாட்டியவள் தந்தையின் மடியில் தலை சாய்த்து,
“கொஞ்ச நேரம் படுத்துக்குறேன் ப்பா…”என்று கூற பூமிநானுக்கு வெகு நாட்களுக்கு பிறகு மகள் தன்னிடம் உரிமையாக பேசியது மற்றதை மறக்க செய்தது.ஆம் உரிமையாக தான் மதுவின் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களுக்கு பிறகு மதுவின் பேச்சே குறைந்துவிட்டிருந்தது அனைவிரிடமும் ஒரு ஒதுக்கம் கேட்பதற்கு மட்டும் தான் பதில் வரும் இதில் பூமிநாதனிடம் பேச்சு என்பதே குறைந்தது இதில் எங்கிருந்து உரிமை கொண்டாட.ஏதாவது தவறு செய்தால் இப்படி தான் தன் அப்பா மடியில் தலை சாய்த்து அவரிடம் செல்லம் கொஞ்சி அவரை சமாதானப்படுத்துவாள்.இவ்வளவு நாட்களுக்கு பிறகு அவள் அவ்வாறு கேட்கவும் பெற்றவர் உள்ளம் மலர்ந்தது.
“சரி விடுடா…ரொம்ப கலைச்சு போய் தெரியுர போடா போய் ஓய்வு எடு…”என்றவர் சுந்தரியிடம் திரும்பி,
“நீ புள்ளைய பாருமா…எனக்கு எதாவது தேவைனா உன்னை கூப்பிடுறேன்…”என்று கூற சுந்தரியும் சரி என்றவாறு மதுவின் அறைக்கு சென்று அவளுக்கு படுக்க வசதி செய்து கொடுத்துவிட்டு,
“எதாவது வேணும்மான கூப்பிடுடி…இதோ வரேன்…”என்று சமையல் அறைக்குள் சென்றார்.தாய் சென்றவுடன் மதுவின் மனது மீண்டும் ரூபனை நினைத்தது எதற்காக வந்திருப்பான்,கௌதமை அவனுக்கு எவ்வாறு தெரியும் என்று பல கேள்விகள் மனதில் எழ மீண்டும் தலை பாரமாவது போல இருக்க கைளால் தலையைபிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
மதுவிற்கு பால் ஆற்றிக்கொண்டு வந்த சுந்தரிக்கு மகளின் நிலை மேலும் கலக்கத்தை உண்டாக்க,
“எனக்கு எதுவும் இல்லமா…நான் நல்லா தான் இருக்கேன்…நீங்க பயப்படாம இருங்க…”என்று அவருக்கு தைரியமூட்டியவள் அவர் கொடுத்த பாலை பருகிவிட்டு மருத்துவர் கொடுத்த மருந்துகளையும் விழுங்கிவிட்டு படுக்க மருந்துகளின் வீரியத்தால் உறக்கம் ஆட்கொண்டது அவளை.அயர்ந்து உறங்கும் மகளைக் கண்ட சுந்தரிக்கு மனது வலிக்க சீக்கிரம் என் மகளுக்கு விடிவுகாலத்தைக் கொடு கடவுளே என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.
மறுநாள் எப்போதும் போல் தன் வேலைக்கு கிளம்பிய மகளை எவ்வளவு கூறியும் தடுக்க முடியாமல் போனது.அதனால் சுந்தரி முறைத்தபடி,
“நாங்க சொல்ரத கேட்க கூடாதுனு முடிவு பண்ணிட்டல மது…இன்னும் உனக்கு உடம்பு முழுசா குணமாகல இன்னும் இரண்டு நாள் லீவு போட்டா என்ன…”என்று காலையிலிருந்து சுந்தரி கத்திக்கொண்டிருக்க அது மதுமிதாவின் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.நிவியும் தன் பங்கிற்கு,
“அக்கா…சித்தி தான் சொல்லுராங்கல்ல இன்னக்கி ஒரு நாளாவது லீவு போடலாம்ல…”கெஞ்சவே செய்ய அவளது செயலில் மதுவின் முகத்தில் புன்னகை மலர,
“நிவி கொஞ்சம் வேலையிருக்குடா…இல்லனா லீவ் எடுக்க மாட்டேனா…அதுவும் மாசக்கடைசி சம்பளக் கணக்கு வேற முடிக்கனும் அதான்…”என்று விளக்கியவள் தன் தாயிடம் திரும்பி,
“அம்மா…சீக்கிரமா முடிச்சுட்டு வந்துடேறேன்…”என்றுவிட்டு தான் கடைக்கு வந்தாள்.அனைத்தும் நல்லவிதமாகவே சென்றது மதியம் வரை.மதியம் போல் தீபக் வந்தான் எப்போதும் அழைத்து பேசுபவன் இன்று நேரிடையாக வரவும் அனைவர் கவனமும் இவர்கள் மேல் திரும்பி மீண்டது வந்தவன்,
“என்ன மது உனக்கு நேத்து ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாம்…ஏன் என்கிட்ட நீ சொல்லல…இப்ப எப்படி இருக்கு….”என்று உரிமையாக கேள்விகளை தொடுக்க மதுவிற்கு கட்டுக் கடங்காமல் கோபம் வந்தது இருந்தும் அருகில் உள்ளோரைக் கருத்தில் கொண்டு அவள் அமைதி காக்க அவளது அமைதியை மேலும் சீண்டும் விதமாக தான் இருந்தது தீபக்கின் செய்கை,
“என்ன மது ஆச்சு ஏன் ஒருமாதிரியா இருக்க உடம்புக்கு முடியலயா…”என்று கேட்டபடி தீபக் அவள் நெற்றியில் கை வைக்க வர அவ்வளவு தான் மது கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் அனைத்தும் கட்டவிழ்ந்தது.கோபமாக தன் இருக்கையில் இருந்து எந்திரித்தவள் தீபக்கை ஓங்கி அறைந்திருந்தாள்.
தன் ரூமிற்கு மதுவை அழைத்தால் அவள் வரமாட்டாள் என்று நினைத்து தான் தீபக் அவளைக் காண வந்தது.அது மட்டுமில்லாமல் அனைவர் பார்க்கும் படி பேசினால் தங்கள் இருவருக்குள்ளும் ஏதோ இருப்பதாக அனைவருக்கும் தெரியும் அதன் மூலம் மதுவை நெருங்கலாம் அதோடு அனைவர் முன்னும் மதுவால் எதுவும் செய்யமுடியாது என்ற நினைப்பில் வந்தவனக்கு மதுவின் செய்கை பெருத்த அதிர்ச்சியை தர,
“ஏய்…”என்று தீபக் குரல் உயர்த்தும் முன் மது வேகமாக தன் கடை முதலாளியின் அறைக்குள் சென்றுவிட்டாள்.அனைவர் முன்னும் அவள் தன்னை அடித்தது மட்டுமில்லாது தான் பேசும் முன் சென்றவளின் வேகமாக பின்னே சென்ற தீபக்கிற்கு மது தங்கள் கடையின் முதலாளியின் அறைக்கு செல்லவும் இகழ்ச்சியான புன்னகை அவனது முகத்தில்.
நடராஜன் அந்த சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி.பல வருடங்களாக இதே தொழிலில் இருப்பவர்.அதே போல் சென்னையில் பல இடங்களில் அவருக்கு மார்கெட் உள்ளது.பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர்.அவரை பற்றி நன்கு அறிந்து தான் மது அவரிடம் வேலையில் சேர்ந்தது.
மதியவேளையில் தன் கேபின் முன் மூச்சு வாங்க வந்து நின்ற மதுமிதாவைக் கண்டு,
“என்னமா…இந்த நேரத்துல…என்ன விஷயம்…”என்று கேட்டுக் கொண்டிருக்க,
“மாமா….நான் சொல்லுறேன் மாமா…”என்றபடி வந்தான் தீபக்.அவனது மாமா என்ற அழைப்பைக் கேட்டு ஒரு நிமிடம் ஸம்பித்து தான் போனாள் மது.இவன் முதலாளிக்கு ஏதோ ஒரு உறவு என்ற வகையில் தெரியும் இப்போது இவன் இவ்வளவு உரிமையாக அழைப்பதைப் பார்த்தால் மிகவும் நெருங்கிய உறவோ என்று சந்தேகம் எழந்தது.
மதுவின் நினைப்பை பொய்யாக்காமல் இருந்தது அவர்களது உறவு முறை.அவள் அதிர்ச்சியாக பார்பதை உணர்ந்த நடராஜன்,
“இவன் என் தங்கையின் மகன் தான்…”என்று கூற மதுவிற்கு சற்று நடுக்கம் தான் கூறவருவதை இவர் நம்புவாரா என்று.இருந்தும் இது தன் பலவீனத்தைக் காட்டும் சமயம் அல்ல என்று உணர்ந்தவள் நிமிர்ந்து அமர,
“மாமா…இதோ இருக்காளே இவளுக்கு என் மேல ஒரு கண்ணு…எப்ப பாரு என் கேபின்ல தான் இருப்பா…இவளுக்கு நேத்து ஆக்ஸிடன்ட்னு சொன்னாங்கனு கேட்க வந்த என்னை எல்லார் முன்னாடியும் அடிச்சது மட்டுமில்லாம எவ்வளவு தைரியமா ஒங்ககிட்டேயே சொல்ல வந்திருக்கா பாருங்க….இவ மாதிரி ஆளுங்க…”என்று மேலும் என்ன கூற வந்திருப்பானோ அதற்குள் இடியென இறங்கியது மதுவின் கரம்.அவளது செய்கையில் மேலும் சினம் தலைக்கேற தீபக்,
“ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என்னையவே அடிப்ப…”என்று எகிறிக் கொண்டு அவளின் அருகில் செல்ல பளார் என்று அறைந்திருந்தார் நடராஜன்.அவரின் செய்கையில் அதிர்ந்த தீபக் ஏதோ கூறவர அவனை ஒற்றை விரல் கொண்டு அடக்கியவர்,
“என்னை மன்னிச்சிடுமா…நீ சொன்ன போது கூட நான் நம்பல….என் தப்பு தான்…”என்றவர்.தீபகின் அருகில் வந்து,
“ஏன்டா நாயே…பொம்பளைங்கனா உனக்கு அவ்வளவு கேவலமா போயிட்டாங்களா…நீ என் தங்கச்சி மவன்னா என்னவேனா செய்வியோ…அதுவும் என்கிட்ட வேலை செய்யுற பொண்ணுக்கிட்டேயே உன் வேலையைக் காட்டுரியா தொலைச்சுடுவேன் பார்த்துக்க…”என்று எச்சரிக்க அதில் மேலும் கடுப்பானவன் நடராஜனிடம்,
“மாமா…நான் உன் வளர்ப்பு மாமா..என்னை நம்ப மாட்டியா….நான் சொல்ரதவிட இந்த வேலை செய்ரவ…”என்று மீண்டும் மதுவை தரக்குறைவாக பேசும் முன் பளார் என்று அறைந்த நடராஜன்,
“டேய்…தொழில் செய்யற இடம் எனக்கு கோவில் மாதிரி..என்னை கொலைகாரனா மாத்திடாத…”என்று உறுமியவர்,
“என்ன சொன்ன நான் உன் வளர்ப்பு மாமா…அதுதான்டா என்னை இவ்வளவு நேரம் இந்த பொண்ணை நம்பவிடாம பண்ணிடுச்சு…இல்ல…”என்று அவனை உதைக்க காலை ஓங்க அவரது செய்கையில் முதல் முறையாக நடுக்கம் பிறந்தது தீபக்கிற்கு.தான் சொன்னால் மாமா நம்புவார் என்ற நம்பிக்கையில் வந்தவனுக்கு அவரது செய்கையில் நடுக்கம் வந்தென்றால் இவ்வளவு நடந்த பிறகும் நிமிர்ந்து நிற்கும் மதுவைக் கண்டு குழப்பமும் உண்டானது. தீபக்கின் பார்வை உணர்ந்த நடராஜன்,
“என்னடா மாமாக்கு எப்படி தெரிஞ்சுதுனு பார்க்குரியா…”என்றவர் மது அவரிடம் கொடுத்த உரையாடல் பதிவை போட்டுக் காட்டினார்.அதில் தீபக் மதுவிடம் பேசிய காதல் வசனங்கள் அனைத்தும் பதிவாகியிருக்க மூச்சே நின்றது தீபக்கிற்கு.இது எப்போது என்பது போல அவன் மதுவை பார்க்க அவளோ இவனின் புறம் பார்வையை திருப்பக்கூடவில்லை.
ஆம் மதுமிதா தீபக்கின் தொந்திரவு ஆரம்பத்தில் இருந்து அவனது கேபினுக்கு தனியாக செல்லும் போதெல்லாம் அவன் தன்னிடம் பேசிய காதல் வசனங்களை தன் மொபைலில் பதிவு செய்திருந்தாள்.தனக்கு ஆபத்து வரும் போது உபயோகிக்க நினைத்தாள்.ஆனால் அவளது விபத்தின் முதல் நாள் அவன் மிரட்டவும் நடராஜனுக்கு இதை பற்றி கூறவேண்டும் என்று தான் அவள் கிளம்பியது அதில் எதிர்பாராதவிதமாக அவளுக்கு விபத்து நடந்திட இன்று வேலைக்கு வந்த உடன் அவரிடம் அனைத்தையும் கூறி அவரிடம் இந்த ஆதாரங்களையும் கொடுத்துவிட்டாள்.
நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சி தான் தன் வளர்ப்பு மகன் போல பாவித்த தீபக் இவ்வாறு செய்வான் என்று அவர் நினைக்கவில்லை.அதிலும் கடைசியாக அவன் மதுவை மிரட்டவது போல பேசியது அவருக்கு மேலும் கழிவிரக்கமாக போனது.அதன் வெளிபாடு தான் இந்த கோபம்.
தன் கைகளால் கன்னத்தை தாங்கிய படி நின்ற தீபக்கை காண மேலும் கோபம் ஏறியதே தவிர இறங்கவில்லை மதுமிதாவிற்கு,
“சார் நான் கிளம்புறேன் சார்…நாளைக்குள்ள என்னோட வேலையெல்லாம் முடிச்சுக்கொடுத்துறேன் சார்….இனி நான் இங்க வேலைக்கு வரமாட்டேன் சார்…”என்றுவிட்டு அவள் வெளியில் வர அவளின் பின்னே வந்தார் நடராஜன் அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
மதுமிதா வேலைக்கு சேர்ந்ததில் இருந்து பார்ப்பவர் தானே யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டாள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள்.இன்று நடந்தது வெளியில் தெரிந்தால் அவருக்கு தானே நஷ்டம் அதுமட்டுமில்லாமல் தன் மார்கெட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு என்று பலபேர் அவரை பாராட்டியுள்ளனர்.இன்று நடந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என்று நினைத்தவருக்கு பயம்பிடித்துக்கொண்டது.
மார்கெட்டை விட்டு வெளியில் வந்த மது தன் வண்டியை எடுக்க செல்ல,
“மது நில்லுமா…”என்றபடி வந்தார் நடராஜன்.
“என்ன சார்…”என்றாள்.
“அது…அது…”என்று தடுமாறியவர் தன்னை யாரேனும் பார்கிறார்களா என்று சுற்றத்தை கவனிக்கவும் தவரவில்லை.அவர் வந்ததன் நோக்கத்தை உணர்ந்தவள்,
“என்ன சார் இந்த விஷயத்தை நான் வெளியில சொல்லக் கூடாது அதுதானே…”என்று ஏளனமாக கேட்க நடராஜனுக்கு முகத்தை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை.இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்க,
“என்னாச்சு விழி…”என்றபடி வந்தான் ரூபன்.மீண்டும் அவனைக் கண்டவுடன் அதிர்வு மதுமிதாவிற்கு இவன் எதுக்கு இங்கு வந்தான் என்று,நடராஜனோ மதுவிற்கு தெரிந்தவரோ இவள் ஏதாவது கூறிவிடுவாளோ என்ற பயம் மனதில் இருந்தாலும் வெளிக்காட்டாமல் நிற்க மது இப்போது எது பேசினாலும் பிரச்சனையில் முடியும் என்று உணர்ந்து,
“சரி சார் என்னால எந்த பிரச்சணையும் வராது…”என்று ஒற்றை வார்த்தையில் அவருக்கு பதில் தர,
“ரொம்ப நன்றிமா…இனி இதுபோல நடக்காது நான் பார்த்துக்குறேன் நீ எப்போதும் போல வேலைக்கு வாமா…”என்றுவிட்டு நகர ரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“விழி…என்ன வேலை…என்ன எதாவது பிரச்சனையா…உனக்கு உடம்பு எப்படி இருக்கு…”என்று அவளது தலை காயத்தை ஆராய்ந்தவரே கேட்க வேகமாக பின்வாங்கிய மது,
“என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்….உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க….”என்று கூறி நகரப்பார்க்க அவ்வளவு தான் அடுத்த நிமிடம் அவளின் கைகளை அழுத்தமாக பிடித்திருந்தான் சிவரூபன்.அவள் கைகளை உருவ முயல முடியவில்லை அவளாள் அந்தளவிற்கு இரும்பென இருந்தது அவனது பிடி.நிமிர்ந்து அவனைக் காண அவனது கண்களில் ரௌத்திரம்.அதற்கெல்லாம் சலைத்தவளா மதுமிதா அவளும் முறைத்துக்கொண்டு நின்றாள்.இருவரும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு நிற்க இருவரும் கட்டிக்கொண்டு நிற்கும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று கூறிக்கொண்டிருந்தது அவர்களின் விதி.