சாரல் மழையே
அத்தியாயம் 12
தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க…. கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட… தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள… கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள்.
“எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க,
“அவனைப் பார்த்து புன்னகைத்தவள், எனக்கு இப்பெல்லாம் ரொம்பப் பசிக்குது.” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல,
“உனக்குக் கோழி பசி.” எனக் கணவன் அவளின் தட்டைப் பார்க்க…
“எனக்கு இல்லை.” என்றவள், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உணவு உண்ண…
“சாப்பிடுறது நீ, ஆனா காரணம் நீ இல்லையா?” எனக் கேட்டவன், கீர்த்தி அவனை ஒருமாதிரி பார்க்கவும், அவனுக்குப் புரிந்தும் புரியாத நிலை.
மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு, அவன் கீர்த்தியையே பார்க்க… அவள் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல ஜமுனாவுடன் பேசிக்கொண்டே உணவருந்த…. எழுந்து கை கழுவிவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டு, தாத்தா பாட்டி இருந்த அறைக்குச் சென்றவன், அவர்கள் ஏற்கனவே படுத்திருக்க…. மகளுடன் வெளியே தோட்டத்திற்குச் சென்றான்.
அவளுடன் கதைப் பேசிக்கொண்டே நடக்க, கீர்த்தியும் உண்டு முடித்து வெளியே வந்தாள்.
அத்தை ஊருக்கு சென்றதால்… தன்னுடன் விளையாட ஆள் இல்லை எனத் தந்தையிடம் அபிநயா குறைப்பட….
“கவலைப்படாதீங்க டா செல்லம். உங்க அம்மா உன் கூட விளையாட ஆள் ரெடி பண்ணிட்டாங்க.” என மனைவியைப் பார்த்துக் கொண்டே தர்மா சொல்ல….கணவன் தன் ரகசியத்தை அறிந்ததில்…. கீர்த்தி வெட்கம் கொண்டாள்.
“யாருப்பா….” என அபி கேட்க,
“உங்க அம்மாவை கேளு.” என்றான்.
“அம்மா உன்னை நாளைக்கு விளையாட பார்க்க கூடிட்டு போவேனாம்.” எனக் கீர்த்திப் பேச்சை திசை திருப்ப, அபியும் மறுநாள் பார்க் செல்லும் குஷியில் இருக்க… மகளைச் சென்று தன் அம்மாவின் அறையில் விட்டவன், அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ஆவலுடனே தங்கள் அறைக்குச் சென்றான்.
கீர்த்திப் படுக்கை விரிப்பை சரி செய்திகொண்டிருக்க, அவளைப் பின்னால் இருந்து அணைத்தவன், “நினைச்சதை சாதிச்சிட்ட போல… இப்போ சந்தோஷமா.” என்றான்.
“உங்களுக்கு இல்லையா?” எனக் கீர்த்தித் திருப்பிக் கேட்க,
“எனக்கு எப்படி இல்லாம இருக்கும். எனக்கும் ரொம்பச் சந்தோஷம்.”
“ஆனா யாரோ எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் சொன்னாங்க.”
“அப்படிச் சொன்னேன் தான். ஆனா உன் விருப்பம் தெரிஞ்சு சரின்னு தானே சொன்னேன். இப்ப நான் இல்லாமலா உனக்குக் குழந்தை வந்தது.” எனக் கேட்க, கீர்த்தி அவன் மீதே சாய்ந்து கொண்டாள்.
“நான் உனக்காகத்தான் யோசிச்சேன் கீர்த்தி. ஆனா உனக்கே இஷ்டம்னு தெரிஞ்சதும், எனக்கும் விருப்பம் தான். அபிக்கும் தம்பியோ, தங்கையோ இருந்தா கூட ஒரு சப்போர்ட்டா இருக்கும்.” என்றவன் மனைவியை முத்தமிட…. கீர்த்தி அந்த நொடியை கண்மூடி ரசித்தாள்.
“இதுக்கு அடுத்து இன்னும் ஒன்னு மட்டும்.” எனக் கீர்த்திச் சொல்ல… தர்மா மனைவியை விலக்கி நிறுத்தியவன், “அடங்க மாட்டியா நீ. உனக்குப் பிரசவம் விளையாட்டா போயிடுச்சா கீர்த்தி. இதோட போதும் சொல்லிட்டேன்.” என, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கீர்த்தியும் விட்டுவிட்டாள். தர்மாவுக்கும் அது புரிந்துதான் இருந்தது.
கீர்த்திக்கு நிறையக் குழந்தைகள் வேண்டும் என்று ஆசை. முதலில் ஒரு குழந்தை போதும் எனத்தான் தர்மா இருந்தான். கீர்த்தியின் ஆசைக்குதான் அடுத்த ஒன்றிற்கே சம்மதித்தான். இதில் இன்னொன்றுக்கு இப்போதே அடிபோட்டு பார்த்தாள். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.
தர்மா உடைமாற்றிக் கையில் புத்தகத்துடன் கட்டிலில் சாய…. கீர்த்தி அவன் தோளில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
“நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். இனி இன்னும் நீ கவனமா இருக்கணும். எவ்வளவு நாள் உன்னோட கிளாஸ் இருக்கு. கார் மெதுவா ஓட்டு.” என அவன் சொல்ல… எல்லாவற்றிற்கும் ம்ம்.. என்றாள்.
பாதி உறக்கத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இப்போதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு. அதுக்குள்ள நமக்கு ரெண்டாவது குழந்தை வரப் போகுது. குழந்தை பெத்துக்கிறது பெரிசே இல்லை. ஆனா அவங்களை நல்லா வளர்க்கணும்.”
“எனக்கு அந்தக் கவலை இல்லை. உங்களைப் பார்த்து வளர்ந்தாலே போதும் தர்மா.” எனக் கீர்த்தி அந்த உறக்க கலக்கத்திலும் சொல்ல…
“சத்தியமா உன்னை மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கையில வருவான்னு நினைச்சதே இல்லை.” என்றான்.
“மீ டூ.” என்றவள் உறங்கிப் போனாள். அவள் நன்றாக உறங்கும் வரை அப்படியே இருந்தவன், பிறகு அவளை நன்றாகப் படுக்க வைத்து, விளக்கணைத்து மனைவியை அனைத்தபடி அவனும் உறங்கினான்.
கீர்த்தி எப்போதும் எழுந்துகொள்ள ஏழு மணியாகிவிடும். அவள் மெதுவாகக் கண்திறக்க… அவள் எதிர்ப்பார்ப்பை பொய் ஆக்காமல் தர்மா யோகா செய்து கொண்டிருந்தான். அவர்கள் அறையின் பால்கனி கதவை திறந்து வைத்துவிட்டு, அறையின் உள்ளேதான் செய்வான். இவள் பார்க்கும் போது தலைகீழாக நின்று கொண்டிருந்தான். அடுத்து அவன் மூச்சுப் பயிற்சி செய்ய…. கீர்த்திச் சத்தமில்லாமல் சென்று அவன் மடியில் உட்கார்ந்து கொண்டாள். இது வழக்கமாக அவள் செய்யும் சேட்டை என்பதால்…. கண்திறந்து மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன், அவளைத் தன்னோடு அனைத்தும் கொண்டான்.
கீர்த்தி அவன் மார்பில் சுகமாகச் சாய்ந்திருக்க… அவர்கள் அறையின் கதவு தட்டப்பட…
“வந்துட்டா உங்க இளவரசி. கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண விடமாட்டா…” எனச் சலித்தபடி கீர்த்தி எழுந்து செல்ல…
“நைட்டெல்லாம் உன் கூடத்தானே இருந்தேன். அப்ப நீ தூங்கிட்டு, இப்ப ஏன் என் பெண்ணைத் திட்டுற…” என்றான் தர்மா.
“உள்ளே ஒன்னு உட்கார்ந்திருக்கு இல்ல… அதுவும் உங்க பிள்ளைத்தானே… நல்லா சாப்பிட்டு என்னைத் தூங்க வச்சிடுச்சு.” என்றபடி கீர்த்திக் கதவைத் திறக்க…. அபி உள்ளே ஓடி வந்தாள்.
“குட் மார்னிங் பா.” என்றவள் தர்மாவின் மடியில் உட்கார்ந்துகொள்ள…
முயல் குட்டி போல இருந்த மகளைக் கொஞ்சியவன், “பால் குடிச்சீங்களா பேபி.” எனக் கேட்க, ம்ம்… என்றாள். தர்மா எப்போதும் மகளிடம் வாங்க போங்க என பன்மையில் தான் பேசுவான். அப்போதுதான் மகளும் மற்றவர்களிடம் பேசும் போது, அப்படியே பேசுவாள் என்ற எண்ணம்.
“யோகா பண்ணுவோமா.” என்றவன், மகளையும் யோகா செய்ய வைக்க… கீர்த்திப் பல் துலக்கியபடி அப்பாவையும் மகளையும் ரசித்துப் பார்த்திருந்தாள்.
சிறிது நேரம் மகளை யோகா செய்ய வைத்துவிட்டு, தர்மா யோகா மேட்டை எடுத்து வைக்க… அபியும் அவளுடையதை எடுத்து வைத்தாள். அவள் வேலையை அவளே செய்யப் பழக்கி இருந்தான்.
மகளைச் செல்லம் கொஞ்சினாலும், செல்லமாக மட்டும் வளர்க்கவில்லை. அதே போலக் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பாவும் இல்லை. சில விஷயங்களுக்கு இல்லையென்றால் இல்லைதான். ஆனால் அதே கீர்த்திக்கு அப்படியில்லை. அவள் கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்.
“ஏன் எனக்கு மட்டும்.” என்றால்….
“நீ கோட்டீஸ்வரர் பொண்ணு மா… என் பொண்ணு அப்படியா?” என்பான்.
உண்மையில் கீர்த்தி வைத்திருக்கும் கைப்பேசியில் இருந்து கார் வரை எல்லாமே விலை உயர்ந்தவை. ஆனால் தனக்கு என்றால் தர்மா விலை குறைவானதே பயன்படுத்துவான்.
கீர்த்தி அவள் வீட்டில் எப்படியிருந்தாள் எனத் தர்மாவுக்குத் தெரியும். அதனால் இங்கேயும் அவளுக்கு வசதி குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்வான்.
“மாடிக்குப் போகலாமா பா…” என ஆர்வமாகக் கேட்ட மகளிடம், “இதோ வந்திடுறேன். என்றவன், கீழே சென்றுவிட்டு வரும் போது கையில் கீர்த்திக்கு பால் இருந்தது.
“பிள்ளை உண்டானா இதுவேறு ஒரு தண்டணனை. இதுக்குப் பயந்தே குழந்தை பெத்துக்கக் கூட யோசனையாக இருக்கு.” எனக் கீர்த்தித் தத்துவம் பேச…
“இல்லைனா வரிசையா பத்து பெத்துடவ.” எனத் தர்மா கேட்டதற்கு… “பின்ன இல்லையா…” எனக் கீர்த்தி ஜம்பமாகப் பேச… நல்லா பேசுற மா என்பது போலத் தர்மா பார்த்திருந்தான்.
“நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். இனி இன்னும் நீ கவனமா இருக்கணும். எவ்வளவு நாள் உன்னோட கிளாஸ் இருக்கு. கார் மெதுவா ஓட்டு.” என அவன் சொல்ல… எல்லாவற்றிற்கும் ம்ம்.. என்றாள்.
“வந்துட்டா உங்க இளவரசி. கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண விடமாட்டா…” எனச் சலித்தபடி கீர்த்தி எழுந்து செல்ல…