மணி ஐந்து என்றதும் அந்த காரியாலயத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால் இருந்த கணணிகளை அனைத்து விட்டு கதிரைகளை தள்ளிக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து தங்களது பைகளோடு வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, கௌசல்யா மட்டும் இன்னும் அமர்ந்து கணணியை தட்டிக்கொண்டிருந்தாள்.
“போகலாமா?” என்று வந்து நின்றாள் கிரிஜா.
கிரிஜாவும் கௌசல்யாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்களும் கூட.
“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு கிரி. ஒரு அஞ்சு நிமிசம் உக்காரு டக்குனு முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றாள் கௌஷி என்கின்ற கௌசல்யா.
லேட்டாக வீடு சென்றால் அவள் மாமியார் பேசும் பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியாதே!
“நாளைக்கு சண்டே! டி.. இன்னக்கி முடிச்சிட்டு போனாதான் மண்டே வந்து நான் நிம்மதியா வேலை பார்க்கலாம். இல்லனா அந்த மேனேஜர் உண்டு இல்லனு பண்ணுவாரு” கண்களை கணணியிலிருந்து எடுக்காமல் கௌஷி பேச
“உனக்கு விஷயம் தெரியாதா? அடுத்த வாரம் புது மேனேஜர் வாறாராம். நீ இப்படி பெண்டு நிமிர வேலை பார்க்க தேவை இல்ல” என்று அவளை வலுக்கட்டாயமாக அவளது இருக்கையை இழுத்து அவளை எழுப்பி இருந்தாள் கிரிஜா.
“இரு டி… எனக்கு இன்றைய வேலைய இன்றைக்கே! முடிக்கணும் பெண்டிங்க் வைக்கிறது பிடிக்காது” என்று மீண்டும் அமர்ந்து கௌஷி வேலை பார்க்க கிரிஜா முகத்தை சுளித்தவாறு அமர்ந்து கொண்டாள்.
அது ஒரு காப்பீட்டு நிறுவனம். ஆயுள் காப்பீடு. மருத்துவ காப்பீடு. இயலாமை காப்பீடு. வீட்டு உரிமையாளரின் காப்பீடு. ஆட்டோமொபைல் காப்பீடு. பிற பொறுப்பு காப்பீடு என்பன இங்கு வழங்கப்படும். கௌஷியின் வேலை அன்றைய அனைத்து காப்பீடுகளையும் கணனியில் பதிவேற்றுவதும் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதென்பதை பதிவேற்றுவதுமாகும்.
“பஸ்ஸ பிடிச்சி வீட்டுக்கு போய் சேருறதுக்குள்ள போதும் போதும் என்றாகுது. அதுக்காக இவ வண்டில ஓசிலல போய்கிட்டு இருக்கேன். இவளுக்கென்ன கல்யாணமாகியும் புருஷன் கூட இல்ல. இஷ்டத்துக்கு ஊர சுத்தலாம். கேட்க மாமியாரா இருக்காங்க?” மனசுக்குள் பொருமிக்கொண்டிருந்தாள் கிரிஜா.
தோழி காத்துக்கொண்டிருப்பதால் அவசர அவசரமாக வேலையை முடித்த கௌஷி கன்ணணியை அமர்த்தி கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டாள்.
“அஞ்சு நிமிஷம்னு சொன்ன ஆறு நிமிஷமாக்கிருச்சு” கிரிஜா முறைக்க
“என்ன வேலை பார்க்க விட்டிருந்தா நாலு நிமிஷத்துல கூட முடிச்சிருப்பேன். வேலை பார்க்க விட்டியா… சரி.. சரி.. வா போலாம்” ஸ்கூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு படிகளில் இறங்க கிரிஜாவும் கூடவே நடந்தாள்.
“உனக்கென்னடி யம்மா… உங்க வீட்டுக்கு போன உடனே! உன் அம்மா டீ போட்டு கொடுப்பாங்க, கொஞ்சம் லேட்டான உங்க அப்பா தெருவுக்கே வருவாங்க. நைட்டானா டின்னர் மேசைல ரெடியா இருக்கும். டீவி பார்த்துகிட்டே சாப்பிட வேண்டியதுதான்.
எங்க வீட்டுல அப்படியா? நான் போய்த்தான் எங்க மாமனாருக்கும், மாமியாருக்கும் டீ போட்டு கொடுக்கணும், டின்னர் சமைக்கணும். காலை டிபனிலிருந்து மதிய சாப்பாடுவரைக்கும் செஞ்சி வச்சிட்டுதான் வரணும். அந்தம்மா ஒரு வேல பண்ணாது. ஹாயா உக்காந்து டீவி பொட்டிய வெறிச்சி பார்த்துகிட்டு சீரியல்ல உள்ள மருமகளுங்கள குறை சொல்லிகிட்டே இருக்கும்.
அந்த மருமகளுகள திட்டுற சாக்குல என்ன மறைமுகமா திட்டி மனச ஆத்திக்கிறாங்களாம்” கிரிஜா புலம்பியவாறே வர கௌஷி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாளே ஒழிய எந்த பதிலையும் சொல்லவில்லை.
அன்றாடம் கிரிஜா புலம்புவதுதான். என்ன எது என்று கேட்டால் ஓவரா புலம்புவாள் இவள் அட்வைஸ் செய்வாள். கௌஷி அப்படி சொன்னா இப்படி சொன்னா என்று அவள் கணவன் சுரேஷிடம் சொல்லியும் விடுவாள். என்னமோ! இவள் தனிக்குடித்தனம் போகும்படி கூறியது போல அவள் கணவன் இவளை முறைத்து விட்டு செல்வான்.
எதற்கு வீண் வம்பு என்று அதன்பின் கிரிஜா என்ன புலம்பினாலும் கௌஷி வாயை திறப்பதில்லை.
இதோ என் பின்னாடி வரவ மூணு அக்கா கூட பிறந்தவ ரொம்ப கஷ்டப்பட்டு கடனை உடன வாங்கித்தான் அவங்க அம்மா, அப்பா இவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். வாழ வந்த இடத்துல மாமியாரையும், மாமனாரையும் பெத்தவங்களா பார்க்காம, அவங்களுக்கு வேலை பாக்குறத ஒரு கஷ்டமா பேசிகிட்டு இருக்கா.
ஐயோ பாவம் ஒரே இடத்துல வேலைக்கு போறோமே என்று என் ஸ்கூட்டில கூட்டிகிட்டு போனா… என்னமோ ஸ்கூட்டிக்கு சொந்தக்காரியே அவதான் நான் டைவர் போலவும் பேசுவா.
அவ மாமியாரையும் சொல்லணும். வீட்டுக்கு வந்த மருமகளை வேலைக்கு அனுப்பாம பேரனையோ பேத்தியையோ பெத்துகொடுமா…ன்னு சொல்லாம கொழுத்த பணம் மாச சம்பளமா வருது என்றதும் வேலைக்கு போக சொல்லிட்டாங்க. இவ புருஷன்காரன் வேற வீட்டு லோனு, வண்டிக்கு லோனுனு இவ சம்பளத்தை நம்பி இருக்காரு.
அட அவ கதையை விடுங்க. இவ சொல்லுறத போல தினமும் எங்க அம்மா வீட்டுக்கு போனா டி போட்டு கொடுப்பாங்க. அதுவும் எப்படி? இவ சொல்லுறது போல சந்தோசமாகவா? என் பொண்ணு வேலைக்கு போய் களைச்சு வரலாலே என்று கவலையாகவா? நான் ரெண்டு நிமிஷம் லேட் ஆனாலும் என்ன திட்டிகிட்டே கொடுப்பாங்க.
இதுவே ஒரு பையனா பொறந்திருந்தா? இப்படியெல்லாம் திட்டுவாங்களா? சத்தியமா திட்ட மாட்டாங்க.
எங்க வீட்டுல என் கல்யாணத்த பத்தி மட்டும்தான் பேசுவாங்க. அத பத்தி பேச ஆரம்பிச்சா ஒரு நாள் பத்தாது. அத வேற ஒருநாள் பார்க்கலாம். இப்படித்தான் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சினை” எல்லாம் நம்ம கௌஷியின் மனசாட்ச்சிதான் கூவியபடி அடுக்கு மாடி கட்டிடத்துக்குள் நுழைந்திருந்தது.
ஆறு மாடிகளை கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கிரிஜாவின் வீடு இரண்டாம் மாடியிலும் கௌஷியின் வீடு மூன்றாம் மாடியிலும் இருந்தது. வண்டியை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியதும் கிரிஜா வேகமாக மின்தூக்கியை அடைய கௌஷி பொறுமையாக வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றாள்.
“என்ன டி… இன்னைக்கும் லேட். போ… போய் குளிச்சிட்டு வா..”
“ம்மா… ஏழு நிமிசம் லேட் எல்லாம் ஒரு லேட்டா… வர வர நீ எனக்கு அம்மாவா மாமியாரான்னே தெரிய மாட்டேங்குது” கைப்பையை சோபாவின் மீது தூக்கி எறிந்தவள் குளியலறைக்குள் புகுந்திருக்க மகளை வசை பாடியவாறு அவளுக்கு டீயாத்த சென்றாள் இந்திரா கௌஷியின் அன்னை.
வீட்டில் இருந்துகொண்டு இன்று நடக்கும் அநியாயங்களை டீவி செய்தியில் தினமும் பார்ப்பவள் தானே. மகள் வீட்டிலிருந்து கிளம்பினாள் கடவுளை வேண்டிக்கொண்டு வரும்வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பாள் இந்திரா.
அதை அவளிடம் விலாவரியாக பொறுமையாக எடுத்துக் கூறினால் “நான் என்ன சின்னக் குழந்தையா? அதுவுமில்லாம கிரிஜா கூட தானே வரேன்” என்று அன்னையை கடிவாள் கௌஷி.
“திடிரென்று கிரிஜாவின் கணவன் வந்து அழைத்தால் அவ பாட்டுக்கு அவன் கூட போயிடுவான். நீ தனியா தானே வரணும்” தனது நெஞ்சில் இருக்கும் பயம் எனும் நெருப்பை மகள் புரிந்துகொள்ள மாட்டாள் என்பதனால் மகள் கொஞ்சம் நேரம் லேட்டானாலும் எரிந்து விழுவாள்.
குளித்து விட்டு வந்தவள் ஒரு பேண்ட் டி ஷர்ட்டில் இருக்க, டீயை கையில் கொடுத்த இந்திரா மகளை முறைத்தாள். அதை கண்டுகொள்ளாது டீயை பருகியவள் “டின்னருக்கு என்ன பண்ண போற?” என்று கேட்க
“இட்லி தான்” என்றாள் இந்திரா கோபமாக.
“அதுக்கு எதுக்கு மூஞ்ச உம் என்று வச்சிக்கிட்டு சொல்லுற?” கௌஷி முறைக்க
“ஆமாடி பொண்ணா லட்சணமா புடவைய கட்டிக்கிட்டு இருக்காம இது என்ன டிரஸ்? குறைஞ்சது சுடிதாராவது போடணுமா வேணாமா?” ஆதங்கமாக பொரிய ஆரம்பித்தாள் அன்னை.
“ஏன்ம்மா.. வேலைக்கு போகும் போது பொண்ணா லட்சணமா புடவை கட்டிக்கிட்டு தானே போறேன்? வீட்டுக்குள்ளேயாவது என் இஷ்டப்படி இருக்க விட்டேன்” கௌஷி அன்னைக்கு புரிய வைக்க முனைய,
“ஏன்டி ஒரு அவசரம்னா வெளிய போக தேவ வந்தா இந்த ட்ரெஸ்ஸோட அப்படியே போய்டுவியா? ஒழுங்கா துணிய போட்டிருக்கலாம்ல”
“என்ன அம்மாவும் பொண்ணும் இன்னைக்கும் இதே பிரச்சினையை ஆரம்பிச்சிட்டீங்க போல” என்றவாறு உள்ளே வந்தார் கௌஷியின் தந்தை கதிர்வேலன்.
“பாருங்க அப்பா இந்த அம்மா எப்போ பார்த்தாலும் எதையாவது சொல்லிக்கிட்டு” தந்தையின் கையிலிருந்த பையை வாங்கியவாறு முறையிட்டாள் மகள்.
“இருபத்தி நாலு வயசாச்சு இன்னும் கொழந்த போல அப்பாகிட்ட கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு” மகளை முறைத்தவாறே கணவனை ஏறிட்டு “அப்பாவும் பொண்ணும் ஒண்ணா சேர்ந்தா என்ன எங்க பேச விடுறீங்க? இருங்க உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று இந்திரா உள்ளே செல்ல
“இன்னக்கி டின்னர் இட்லி ..ப்பா…” என்று மகள் சிரிக்க,
“இன்னக்கி அவ பேவரிட் டீவி ப்ரோக்ராம் இருக்கா..” என்று தந்தை மகளை ஏறிட உதட்டை சுளித்தாள் பெண்.
“நல்லவேளை வாரம் ஒருக்கா போடுறான். தினமும் போட்டா எங்க நிலைமை என்ன ஆகிறது” கதிர்வேலனும் மனைவியை கிண்டல் செய்ய காபியோடு வந்தாள் இந்திரா.
“இட்லி வித் வெரைட்டி சட்னிதான்” என்று சிரித்தாள் கௌஷி.
“அப்பாகும் பொண்ணுக்கும் என்ன கிண்டல் செய்யலைன்னா தூக்கம் வராதே” இந்திரா கோபமாக முகம் திருப்ப அன்னையை கட்டிக்கொண்டாள் கௌஷி.
“நான் என்ன சொல்ல வரேன்னா… ஆத்துற அவசரத்துக்கு வெளில போக வேண்டி வந்தா…” என்று இந்திரா ஆரம்பிக்கும் பொழுது
“அச்சச்சச்சோ… இந்த ட்ரெஸ்ஸோடத்தான் நான் தினமும் காலைல அப்பா கூட நம்ம பிளாட் கார்டுன்ல ஜாகிங் போறேன். அப்போ அது வீட்டுக்கு வெளிய போறது இல்லையா?” அன்னையின் வாயை அடைத்தாள் மகள்.
“உனக்கு புரிய வைக்க முயற்சி செய்யிற என்ன சொல்லணும் டி…” திட்டியவாறே இந்திரா உள்ளே செல்ல,
“அவ கெடக்குறா விடுமா.. கண்ட கண்ட சீரியலை பார்த்து பொண்ணுங்கன்னா இப்படி இருக்கணும்னு வரையறுக்குறா. வெளிய போனா ஏதாவது நடந்துடும்னு பயப்படுறா. நீயும் அவள புரிஞ்சிக்க முயற்சி பண்ணு” மனைவியை திட்டுவது போல் திட்டி விட்டு மகளுக்கு சொல்ல வேண்டியதையும் சொல்லி விட்டு இடத்தை காலி செய்தார் கதிர்வேல்.
கதிர்வேலன் ஒரு பிரின்டிங் ப்ரெஸ்ஸில் கண்காணிப்பாளராக வேலைபார்ப்பவர். ஊரில் நடந்த பிரச்சினையால் நல்ல சம்பளத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு தோட்டத்தோடு கூடிய சொந்த வீட்டையும் விற்று மனைவி மகளோடு சென்னையில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று குடியிருக்கிறார்.
மூன்று படுக்கையறை. பெரிய வாசல், பெரிய சமையலறை. மூன்று குளியலறை கொண்ட பெரிய வீடுதான். ஆனாலும் மனதுக்கு திருப்தி இல்லை. சொந்த ஊர், வளர்ந்த வீடு போல் வருமா?
இந்த வேலையையில் கிடைக்கும் சம்பளம் கூட ஊரில் பார்த்த வேலையைவிட குறைவான சம்பளம் தான். வீட்டுக்கு அருகில் என்பதனால் போக்குவரத்து செலவு இல்லை. அறியாத ஊரில் மனைவிக்கு ஒன்றென்றால் ஓடி வரும் தூரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் கதிர்வேலனின் எண்ணம்.
அதை புரிந்துகொண்டுதான் இந்திராவும் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்கிறாள். சொந்த வீடு என்பதனால் பெரிய செலவுகள் இல்லை. இப்பொழுது மகள் வேறு வேலைக்கு போய் சம்பாதிப்பதனால் பணக் கஷ்டம் இல்லை. இருக்கும் ஒரே மனக் குறை மகளது கல்யாண வாழ்க்கைதான்.
அதை பற்றி கணவனிடம் பேசினால் கண் கலங்கி விடுவார். அவரும்தான் எத்தனை தடவை மாப்பிளை வீட்டுக்கு சென்று அவமானப்படுவது?
ஆம் கௌஷிக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றது. நடந்த பிரச்சினையால் மாப்பிள்ளை சக்தியின் அன்னை சாம்பவி இந்த திருமணத்தை ரத்து செய்யும்படி பஞ்சாயத்தில் மனு கொடுத்திருந்தாள்.
பஞ்சாயத்து தலைவர் சாம்பவியின் அண்ணனும் இந்தாராவின் அக்கா கணவருமான சகாதேவன் இருந்ததனால் தங்கையின் செய்கை அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் கூட. இது குடும்ப பிரச்சினை என்பதனால் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ய, செல்லத் தங்கை சாம்பவி இன்றுவரை இறங்கி வரவில்லை என்பதுதான் உண்மை.
மகளிடம் பேசினால் “என்ன இப்படியே விட்டுடுமா.. கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்கின்றாள். அவள் அப்படி சொல்வதற்காக விட முடியாதே!
மாப்பிள்ளைக்கும் இவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருந்திருந்தால் வீட்டில் பேசி இந்த ஆறு வருடத்தில் அன்னையை சமாதானப் படுத்தி இருப்பாரே!
நடுவில் இருந்து இரு குடும்பத்தையும் இணைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பது இந்திராவின் அக்கா சந்திராவும் மாமா சகாதேவனும் தான்.
அவர்கள் முயற்சி செய்து என்ன பிரயோஜனம். சேர்ந்து வாழ வேண்டியவர்கள் நினைக்க வேண்டாமா?
விடியக் காலையிலையே! கதிர்வேலனின் அலைபேசி அலறியது. அழைத்தது ஊரிலிருந்து பிரணவ் தான் போன் செய்திருந்தான். சுகயீனமாக படுத்த படுக்கையாக இருந்த சகாதேவன் காலமான செய்தியை கூறத்தான் அழைப்பு விடுத்திருந்தான்.
மகாதேவன் லட்சுமி தம்பதியர்களுக்கு ஒரே மகனாக சகாதேவன் இருக்க, பதினாறு வருடங்கள் கழித்து பிறந்தாள் சாம்பவி. அன்னை தந்தைக்கு மட்டுமல்லாது அண்ணனுக்கும் செல்லத் தங்கையாகிப் போனாள் அவள்.
மகாதேவனின் நண்பரின் பிள்ளைகள்தான் சந்திராவும் இந்திராவும். ஒரு கார் விபத்தில் பெற்றோரை இழந்து அனாதையாக இருவரும் இருக்க, பெண்குழந்தைகளை வளர்க்க சொந்தபந்தங்கள் முன்வராததால் மகாதேவன் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.
சாம்பவிக்கும் இந்திராவுக்கு ஒரே வயதுதான். சந்திரா அவர்களை விட நாலு வருடங்கள் மூத்தவள். சதிராவிடம் ஒட்டிக்கொள்ளும் சம்பாவிக்கு ஏனோ இந்திராவை கண்டால் ஆகாது.
அப்பா தனக்கு வாங்குவது போலவே! துணிமணி, பொம்மை என்று வாங்குவதனால் தினமும் இந்திராவோடு சண்டை பிடித்துக் கொண்டுதான் திரிவாள்.
சகாதேவனும் பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருந்தது. இத்தனைக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் சகாதேவன். நிச்சயம் செய்ய சென்றால் பசுமாடு இறந்து விட்டது என்று நிச்சயம் தடைபட, லட்சுமிக்கு அந்த இடம் வேண்டாம் என்று வேறு இடத்தில் பெண் பார்த்தார்.
திருமண நாளன்று பெண்ணின் தந்தை இறந்து விட்டார். அந்த இடமும் வேண்டாம் என்று வேறு இடத்தில் பெண் பார்க்க சென்றால் பெண்ணின் சேலையில் தீப்பற்றி எரிந்தது.
இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் வரைக்கும் சென்று அந்தப் பெண் மண்டபத்திலிருந்து காணாமல் போனாள்.
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தடங்கல் வரவும் சகாதேவன் மனமுடைந்து கொஞ்சம் நாள் எந்த வரணும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல லட்சுமியும் அமைதியானார்.
“கைல வெண்ணையை வச்சிக்கிட்டு ஊரு முழுக்க அலையிறீங்களே!” சந்திராவை பார்த்தவாறு வெற்றிலையை வாயில் திணித்தார் தரகர்.
“என்ன சொல்ல வரீங்க?” லட்சுமி புரியாது கேட்க
“அம்மா இந்த காலத்துல எந்த மருமக சொன்ன பேச்சு கேட்டு நடக்குறாங்க? மாமியாரை அடக்கத்தான் பாக்குறாளுங்க, புருஷன முந்தானைய முடிஞ்சி வச்சிக்கிட்டு மாமியாரை அடக்கி ஒரு மூலைல முடக்கி வைக்கணும்னுதான் பெரிய வீட்டு சம்மதமா தேடுறாளுங்க.
இப்போ காபி கொடுத்துட்டு போச்சே பொண்ணு தரைக்கும் வலிக்காம, உங்க சொல்ல மீறாத பொண்ணா நீங்க வளர்த்த பொண்ணு. அந்த பொண்ணையே தம்பிக்கு கட்டி வைங்களேன்” வெற்றிலையை குதப்பியவாறு தரகர் பேச
“சொத்து சோகத்தோடு மருமக வருவான்னு நெனச்சேன். இப்படி வெறுங்கையோட வீட்டுக்குள்ளேயே நான் வளர்த்து வச்சிருக்குறதாலதான் இத்தனை தடங்கள்னு இப்போதான் புரியுது” தரகருக்கு மறைமுகமாக தனது மறுப்பை சொன்ன லட்சுமி கணவரிடம் காய்ந்தார்.
“இந்த அனாதைங்கள கூட்டிட்டு வரும் பொழுதே சொன்னேன் தரித்திரம் புடிச்சதுங்க, வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன்னு. நீங்கதான் கௌரவம், அது. இதுனு பேசுனீங்க” என்று ஆரம்பிக்க
“யாரு டி அனாதை? அடியேய் கூறுகெட்டவளே! நாங்களா கல்யாணம் பண்ணி வச்சா ஊரு பேசும் என்றுதான். நாலு பேர் கிட்ட வீட்டுல தேவதை மாதிரி பொண்ணு இருக்கா, நான் ஊரு பூரா என் பையனுக்கு பொண்ணு பார்த்து திரியிறேன். வயசு வித்தியாசம் அது இதுனு பேசினேன்.
எல்லாரும் சந்த்ராவ தேவனுக்கு கட்டி வைக்கத்தான் சொல்லுறாங்க. அத நான் உன்கிட்ட சொல்லுறத விட முதல்ல தரகர் சொல்லட்டுமுன்னுதான் அமைதியாக இருந்தேன்” என்ற மகாதேவன் சில உண்மைகளை கூற வாயடைத்து போனாள் லட்சுமி.
பெண் குழந்தைகளுக்கு படிப்பு அவசியமில்லை என்று மகாதேவன் சந்திராவுக்கு பதினேழு வயதாகும் பொழுது தனது மகன் சகாதேவனுக்கே திருமணம் செய்து வைத்தார்.
தன்னை விட பன்னிரண்டு வருடங்கள் சிறிய பெண்ணை மணக்க சகாதேவனும் கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. ஆனால் சந்திராவுக்கு சகாதேவன் மேல் அப்படி ஒரு விருப்பம். சின்ன வயதிலிருந்தே அன்பாக, பாடம் சொல்லி தருவத்திலிருந்து, எதை கேட்டாலும் மறுக்காமல் செய்துதரும் சகாதேவன் ஹீரோவாக தெரிய அந்த சின்ன பெண்ணின் மனதில் குடிவந்திருந்தான் சகாதேவன்.
“என் பையன கட்டிக்கிறியா டி..” என்று லட்சுமி அதட்ட சந்திராவின் தலை தானாக ஆடியது மனதில் இருந்த விருப்பத்தால் மட்டுமே! ஆனால் லட்சுமிக்கு அது மருமகள் தனது காலடியில் கிடப்பாள் என்ற எண்ணத்தை தோற்று வித்திருந்தது.
திருமணம் நடந்தாலும் சகாதேவனால் சந்திராவை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விலகியே இருக்கலானான்.
“அத்தான், அத்தான்” என்று அவனையே சுற்றி சுற்றி வந்து அவனுடைய அத்தனை வேலைகளை பார்பவளை ஒதுக்கவும் முடியாமல் திணறுவான் சகாதேவன்.
இரண்டு வருடங்கள் கடந்தும் அவளுடன் சேர்ந்து வாழ மனம் ஒட்டாமல் சகாதேவன் இருக்க, மருமகள் கர்ப்பம் தரிக்காததை எண்ணி கொதித்தார் லட்சுமி.
“உனக்கு கல்யாணம்தான் தடங்கள்னு பார்த்தா கட்டின பொண்டாட்டி வேற மலடியா இருக்கா… இவள அத்து விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க, வேற எவளையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊரு தப்பா பேசும், இவ தங்கச்சியையே கட்டிக்க” கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் பேசினாள் லட்சுமி.
“அம்மா.. என்ன பேசுறோம் என்று புரிஞ்சிதான் பேசுறீங்களா? ஏற்கனவே ரொம்ப சின்ன பொண்ண கட்டிகிட்டேன்னு அவ கூட என் வாழ்க்கையை ஆரம்பரிக்க முடியாம ரெண்டு வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். என்ன போய்…” என்றவன் வேறு பேசாது அந்த இடத்தை விட்டு சென்று விட அதிர்ந்து நின்றாள் அன்னை.
ஒரு அன்னையிடம் மகனாக இதை பற்றி பேச சகாதேவன் விரும்பவில்லையென்றாலும், பண்ண திருமணமே இன்னும் மனதுக்கு உவப்பாக இல்லை. இதில் இரண்டாம் திருமணமா அதுவும் தான் தங்கையாக, குழந்தையாக பார்க்கும் இந்திராவையா? என்றதும் கொதித்தான்.
இந்திரா சாம்பவியை போல் அவன் மேலையே ஏறி விளையாடுவாள், அதனாலயே சாம்பவிக்கும் இந்திராவுக்கும் சண்டை வந்து விடும். சந்திரா அவன் அருகில் கூட செல்ல மாட்டாள். எட்ட நின்று அவர்கள் இவனோடு விளையாடுவதை பார்த்து ரசிப்பாள். சகாதேவன் வா என்று அழைத்தால் போதும் அவ்விடத்தை விட்டு சிட்டாக பறந்து விடுவாள்.
வயதுக்கு வந்த பின் இந்திரா அவனோடு சகஜமாக பேசினாலும் சந்திரா அவனை விட்டு ஒதுங்கியே இருக்கலானாள். அவன் முன்னால் கூட வரமாட்டாள். அந்த ஒதுக்கம் அவன் கண்ணில் பட்டாலும் கருத்தை கவரவில்லை. சின்ன பெண்ணை அம்மா அதட்டி, பயமுறுத்தி இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான்.
“ரெண்டு வருஷமா வாழ்க்கையே ஆரம்பிக்கலையா? இந்த வீட்டுல என்னதான் நடக்குது? ஏன் டி.. சாந்திமுகூர்த்தம் முடிஞ்ச அன்னக்கி விடிய காலைல மருமகளை கூப்பிட்டு என்னத்த விசாரிச்சா நீ?” விஷயத்தை கணவனிடத்தில் கொண்டு போன லட்சுமியை மகாதேவன் வசை பாட ஆரம்பித்திருந்தார்.
“நான் என்னத்த விசாரிக்க, இந்த காலத்து சிறுக்கீங்களுக்கு அதெல்லாம் விவரம்னு விட்டுட்டேன்”
“நல்லா விட்ட. வீட்டுலயே இருக்குற புள்ளைங்களுக்கு அந்த விவரமெல்லாம் எப்படி டி தெரியும். போ.. போய் புருஷன் கூட எப்படி குடும்பம் நடத்தணும்னு சொல்லிக் கொடு”
“என் தலையெழுத்து…” மருமகளை வசை பாடியவாறு சென்ற லட்சுமி குழந்தை பிறக்கவில்லையென்றால் சகாதேவனும் இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டலானாள்.
இரவில் அறைக்கு வந்த சகாதேவனும் மனைவி கண்களை துடைப்பத்தை கண்டதும் நெஞ்சம் கலங்கத்தான் செய்தது. என்ன? ஏது? என்று விசாரிக்க மனம் துடித்தாலும் கண்டிப்பாக தான் அன்னையிடம் கூறிய விசயத்தினால்தான் மனைவி கண்ணீர் வடிக்கிறாள் என்று தெரியும் அதனால் ஒன்றும் கேட்காமல் தூங்கலாம் என்று தலையணையை புரட்டிப்போ போட
“அத்தான்” என்று வந்து நின்றாள் சந்திரா.
“என்ன?” என்றும் கேட்க வில்லை. “சொல்லுமா” என்றும் சொல்லவில்லை அமைதியாக அவளையே பாத்திருந்தான் சகாதேவன்.
புடவைதான் கட்டி இருந்தாள். சிவந்த நிறம். அழுது, அழுது முகமும் சிவந்து கண்கள் வீங்கி பார்க்கவே பாவமாக இருந்தாள். இன்னும் விசும்புவது நிற்கவில்லை.
“உங்களுக்கு என்ன பிடிக்கலையா?” கேட்கும் பொழுதே கண்களிலிருந்து கண்ணீர் குபீரென்று பாய தொண்டையடைத்து கதறி அழுது விட்டாள்.
அவள் சேலை முந்தியை கொண்டே கண்ணீரை துடைத்து விட்டவன் தன்னருகில் அவளை அமர்த்திக் கொண்டு “யார் சொன்னா? உன்ன எனக்கு பிடிக்காது என்று” அவனுக்கு அவளை பிடிக்கும். மனைவியாக பார்க்கத்தான் மனம் முரண்டிக்கொண்டு இருக்கிறது என்று எப்படி கூறுவான். அதற்கு காரணமும் அவள் தானே!
“அப்போ..அப்போ..” என்றவளுக்கு “ஏன் என்னுடன் வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்கீங்க?” என்று கேட்க நா எழவே இல்லை.
ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் அதிகம் பேசியதில்லை. ஏன் திருமணமாகி இந்த இரண்டு வருடங்களில் அத்தான், அத்தான், அத்தான் என்பதை தவிர அதிகம் பேசி இருக்க மாட்டாள்.
அவன் குளிக்க சென்றால் துண்டோடு சென்று நின்று அவன் கவனிக்க வில்லையென்றால் அத்தான் என்று அழைப்பாள். துண்டு என்று சொல்ல மாட்டாள் பார்வையால்தான் சொல்வாள். சாப்பாடு பரிமாறும் பொழுதும் கூட அப்படித்தான் அத்தான் என்றால் இவன் அவள் முகம் பார்க்க வேண்டும் கையில் ஒரு கரண்டியை வைத்துக்கொண்டு இவள் அவன் முகம் பார்ப்பாள் அவன் “வை” என்றால் வைப்பாள் வேண்டாம் என்றால் வேறொன்றை அள்ளிக்கொண்டு “அத்தான்” என்பாள்.
“அன்னை சொல்லித்தான் இவள் அடிக்கடி அத்தான் என்கின்றாளா? சொல்லி சொல்லி மனதில் நிறுத்த முயற்சி செய்கின்றாளா?” என்ற சந்தேகம் சகாதேவனும் இருந்துகொண்டே இருந்தது.
“கல்யாணம் ஆகும்வரைக்கும் என்ன அண்ணான்னு கூப்பிட்டுட்டு கல்யாணம் அனா பிறகு அத்தான்னு கூப்பிட ஆரம்பிச்ச? இஷ்டமில்லாம எங்க அப்பா, அம்மா சொன்னதுனால உன்ன விட வயசுல ரொம்ப பெரியவனா கமகாதேவன் லட்சுமி தம்பதியர்களுக்கு ஒரே மகனாக சகாதேவன் இருக்க, பதினாறு வருடங்கள் கழித்து பிறந்தாள் சாம்பவி. அன்னை தந்தைக்கு மட்டுமல்லாது அண்ணனுக்கும் செல்லத் தங்கையாகிப் போனாள் அவள்.

“கல்யாணம் ஆகும்வரைக்கும் என்ன அண்ணான்னு கூப்பிட்டுட்டு கல்யாணம் அனா பிறகு அத்தான்னு கூப்பிட ஆரம்பிச்ச? இஷ்டமில்லாம எங்க அப்பா, அம்மா சொன்னதுனால உன்ன விட வயசுல ரொம்ப பெரியவனா கல்யாணம் பண்ணிக்கிட்டியேன்னுதான்…” சகாதேவன் பேசி முடிக்கவில்லை.
“அது ஏதோ சின்ன வயசுல தெரியாம அண்ணான்னு கூப்பிட்டேன். விவரம் தெரிஞ்ச வயசுல உங்கள அண்ணான்னு எப்போவாச்சும் கூப்பிட்டு இருக்கேன்னா?” என்றவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்க,
யோசனையில் பார்த்த சகாதேவன் “கூப்பிட்டிருக்க அம்மா முன்னாடி” என்றவனுக்கு தன் மனைவியின் மனது நன்றாகவே புலப்பட்டிருக்க புன்னகைக்கலானான்.
அதன்பின் அவர்களின் வாழ்க்கையை துவங்க எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் பிள்ளை பாக்கியம்தான் அவ்வளவு சீக்கிரம் கைகூடவில்லை.ல்யாணம் பண்ணிக்கிட்டியேன்னுதான்…” சகாதேவன் பேசி முடிக்கவில்லை.
“அது ஏதோ சின்ன வயசுல தெரியாம அண்ணான்னு கூப்பிட்டேன். விவரம் தெரிஞ்ச வயசுல உங்கள அண்ணான்னு எப்போவாச்சும் கூப்பிட்டு இருக்கேன்னா?” என்றவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்க,
யோசனையில் பார்த்த சகாதேவன் “கூப்பிட்டிருக்க அம்மா முன்னாடி” என்றவனுக்கு தன் மனைவியின் மனது நன்றாகவே புலப்பட்டிருக்க புன்னகைக்கலானான்.
அதன்பின் அவர்களின் வாழ்க்கையை துவங்க எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் பிள்ளை பாக்கியம்தான் அவ்வளவு சீக்கிரம் கைகூடவில்லை.