“இப்போ இங்க எதுக்குலே வந்திட்டு நீ அங்கவே ரெஸ்ட் எடுல, அலைச்சல் வேணாம்ல. ஆரவ் வரும் போது உனக்கு குழந்தை பிறந்திரும், அப்போ இங்க வந்திருன்னு சொன்னாவ”
அவியகிட்ட சரின்னு சொல்லிட்டு என்னோட ரூமுக்கு வந்திட்டேன். அவிய வரும் போது எனக்கு குழந்தை பிறந்திடுமா, அவிய என்னோட இருக்க மாட்டாவலான்னு கவலையா இருக்கு எனக்கு.
எனக்கு இப்போவே அவியளை பாக்கணும்ன்னு சொல்லி நா ஒரே அழுகை அம்மாக்கிட்ட, அவிய பாவம் என்ன செய்வாவ என்னைய சமாதானம் படுத்துறாவ.
எனக்கு புரியாம இல்லை ஆனா அவிய ஞாபகமாவே இருக்கு. கல்யாணியும் இப்போ மாசமா இருக்கறதுனால அம்மா அவளை வரச்சொல்லலை.
அக்காவுக்கு வீடியோ கால் போட்டு விட்டுட்டாங்க பேசச்சொல்லி. அக்காவை பாத்ததும் கொஞ்சம் அமைதியானேன்.
அக்காவுக்கு இன்னும் குழந்தை இல்லை. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு அவங்களுக்கு. அவகிட்ட எப்படி பேசன்னு நா பாக்க “வள்ளி எனக்கு சந்தோசமா இருக்குட்டி, நா அம்மா ஆகலைன்னாலும் பெரியம்மா ஆகிட்டேன்டின்னு…” கண்ணு கலங்க அக்கா சொன்னப்போ எனக்கு ஒரு நிமிஷம் எப்படியோ ஆச்சு.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை இந்த உலகத்துல இருந்திட்டே தான் இருக்கு. எனக்கு இப்போ அவிய கூட இல்லைங்கற கவலை மட்டும் தான்.
ஆனா அக்கா பாவம்ல இப்போ எங்கயோ வெளிநாட்டுல இருக்காவ. கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா குழந்தை இல்லைன்னு எவ்வளவு ஏங்கி போயிருப்பாவன்னு நினைக்கும் போது என் கவலை எல்லாம் ஒண்ணுமில்லன்னு தோணிச்சு.
அக்கா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு படுத்தேன். நா அவியளையே நினைச்சுட்டு இருந்தேன்னு அவியளுக்கு தெரிஞ்சுட்டு போல அன்னைக்கு நைட் எனக்கு கூப்பிட்டாவ.
வீடியோ கால்ல வந்தாவ “வள்ளிக்கண்ணுன்னு…” அம்புட்டு ஆசையா கூப்பிட்டாவ.
“சொல்லுங்க எப்படி இருக்கீங்க??”
“நல்லாயிருக்கேன், நீ ஏன் டல்லா இருக்கே?? இன்னும் சாப்பிடலையான்னு கேட்டாவ…”
“அதெல்லாம் அப்பமே ஆச்சு ரெண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடுதேன்னு” சொன்னேன். அவியளுக்கு அது புரிஞ்சுதோ இல்லையோ எனக்கு தெரியலை.
அவியகிட்ட எப்படி சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அம்மா அப்போ உள்ள வந்தாவ. “அத்தையா கொடு நான் பேசறேன்னு” சொன்னாவ.
அம்மாகிட்ட பேசவும் அம்மா விஷயத்தை அவியகிட்ட சொல்லிட்டாங்க. இப்போ என்ட கொடுக்க சொல்லிருப்பாவ போல அம்மா போனை கொடுத்திட்டு வெளிய போயிட்டாவ.
“வள்ளிக்கண்ணு லவ் யூ வள்ளிக்கண்ணு… ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் இப்போ… எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் உன்னை வந்து பாக்குறேன்னு” சொன்னாவ. நிறைய அட்வைஸ் பண்ணிட்டு வைச்சுட்டாவ.
நா ஊருக்கு வந்தப்போ நடந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு. என்ன நினைச்சாலும் நெஞ்சுக்குழியில ஒரு பந்து வந்து அடைச்ச மாதிரி இருக்கு அது போகவே மாட்டேங்கு.
அன்னைக்கு நைட் அத்தை அம்மாக்கு போன் பண்ணி பேசிட்டு இருந்தாவ. அந்த வாரமே வந்து பாக்கறதா சொல்லியிருந்தாவ.
வர்றேன்னு சொன்னவிய இன்னும் வரவே இல்லை. “அம்மா அத்தை இன்னைக்கு வர்றேன்னு தானே சொன்னாவ, எப்போம்மா வருவாவ…”
அம்மா ஒண்ணுமே சொல்லலை என்ட, கண்ணு மட்டும் கலங்குது. என்னவோ நடக்குது என்ன நடக்குதுன்னு யாரும் என்ட சொல்லலை.
அப்பாவும் காலையில எப்படியோ என்னை பார்த்திட்டு போனாவ. எனக்கு நாலு நாளா மனசு சரியில்லாம கிடக்கு. இதுல எல்லாரும் இப்படி பாத்தா எனக்கு ரொம்ப பயந்து வருது இப்போ.
“அம்மா அத்தைன்னு…” மறுபடியும் ஆரம்பிச்சேன்.
“நாளைக்கு உனக்கு செக்அப் இருக்குல நீ போய் படு. நான் ருக்குகிட்ட பேசறேன்னு…” சொல்லிட்டு போயிட்டாவ.
நா பின்னாடியே போய் “அத்தைகிட்ட நானும் பேசணும்ன்னு” சொன்னேன்.
அம்மா அழுதிட்டு இருந்தாவ போல என் குரல் கேக்கவும் கண்ணை துடைச்சிட்டாவ.
“அம்மா என்னம்மா ஆச்சு எதுக்கும்மா அழறீங்க??”
“ஒண்ணுமில்லை வள்ளிம்மா…”
“எதுவும் பிரச்சனையாம்மா?? சொல்லுங்கம்மா??”
“இல்லைடா…”
“நீங்க மறைக்க மறைக்க எனக்கு ரொம்ப பயமாயிருக்கும்மா…”
“இல்… இல்லைடா அது…”
“சொல்லுங்கம்மா…”
“மருமவன் போன கப்பல் தீப்பிடிச்சிட்டாம்…”
எனக்கு அதுக்கு மேல எதுவுமே கேக்கலை நா அப்படியே கீழே உட்கார்ந்திட்டேன். கடைசியில என் மனசு தவிச்ச தவிப்பு ஏன்னு இப்போ புரிஞ்சுச்சு. அவிய இல்லாம நா எப்படியிருப்பேன்.
“குட்டி அப்பாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதுய்யா… அப்பா நம்மளை பாக்க சீக்கிரமே வருவாவ பாரேன்னு…” என் வயித்துல இருக்க எங்க குட்டிச்செல்லத்துக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.
எனக்கு என்னாச்சு எனக்கு தெரியலை. கண்ணு எங்கயோ இழுத்திட்டு போகுது. வள்ளிக்கண்ணை பார்க்கணும், மனசு முழுக்க அவளை பத்தி தான் ஓடுது.
என்னோட வாரிசை சுமந்திட்டு இருக்கா, அவளை பாக்கணும், பாக்கணும்ன்னு ஒவ்வொரு அணுவும் துடிக்குது. ஆனா என்னால எழத்தான் முடியலை.
நினைவுகள் எனக்கு இருக்கு. ஆனா என்னோட உடல் அதுக்கு ஒத்துழைக்கலை. அவளை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்திருக்கக் கூடாதுன்னு இப்போ தோணுது.
பாவம் சின்னப்பொண்ணு தானே அவ. அவளைப்பத்தி தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளை நானே ஹர்ட் பண்ணிட்டேன்னு இப்போ நினைக்கிறேன்.
அம்மாவை புரிஞ்சுகிட்டு அவங்களை ஒண்ணும் சொல்லாத நான் அவளையும் புரிஞ்சிருக்கணும்ல. நானெல்லாம் என்ன மனுஷன்.
அம்மா சொன்ன மாதிரி அவ இல்லாதப்போ தான் அவளோட அருமை புரியுது. எனக்கு எப்படி எல்லாமே நீட்டா இருக்கணுமோ, அவளுமே அந்த மாதிரி தான்.
நான் எப்படி எங்க ரூமை நீட்டா வைப்பேனோ அவளும் அதே மாதிரி தான் வைச்சிருந்தா. ஆனா இன்னும் அழகுப்படுத்தி வைச்சிருந்தா.
எங்க ரூம் மட்டுமில்லை வீடு அப்படி தான் இருந்துச்சு. அவளுக்கு தெரிஞ்ச தையலை வைச்சு எல்லாம் அழகா டிசைன் பண்ணி அதை இன்னும் அழகாக்கி வைச்சிருந்தா.
அவ என்னோட இருக்கும் போது குறைகளை மட்டுமே தான் நானும் பார்த்திருக்கேன். எல்லா ஆண்கள் மாதிரி தான் நானும் அவகிட்ட நடந்துக்கிட்டேன்.
பெண்கள் மட்டும் எப்படித்தான் இடத்துக்கு தகுந்த மாதிரி தங்களை மாத்திக்கறாங்கலோ. உண்மையிலேயே அது பெரிய விஷயம்.
அந்த காலத்துல எல்லாம் பதினஞ்சு வயசுல கல்யாணம் பண்ணதா சொல்வாங்க. அவ்வளவு சீக்கிரம் ஒரு வீட்டுல அவங்க எந்த அளவுக்கு தங்களை பொருத்திக்கறாங்க.
உண்மையாவே பெண்கள் ரொம்ப கிரேட். என்னோட வள்ளிக்கண்ணு கூட எங்க வீட்டோட இப்போ தானே பொருந்த ஆரம்பிச்சிருக்கா.
அத்தனை வருஷம் வளர்த்த பெத்தவங்களை விட்டு வந்திருக்கா, அவளுக்கு இங்க எல்லாமே புதுசு. அதெல்லாம் அவங்க பழகிக்க நாளாகும் தானே, இதெல்லாம் நான் யோசிக்கலை அப்போ. அவளுக்கு இருக்க பொறுப்பும் பொறுமையும் எனகில்லைன்னு இப்போ தோணுது.
எதுக்கு இவ்வளோ யோசிக்கறேன்னு பார்க்கறீங்களா. அவ அம்மாகிட்ட பேசி இருக்கா, சாரி கேட்டிருக்கா. எப்படி முடியும் அதெல்லாம் எனக்கு ஆச்சரியம் தான்.
அம்மா அவ்வளவு சந்தோசமா பேசினாங்க. அவங்களே மருமகளை தூக்கி வைச்சு தான் பேசிட்டு இருந்தாங்க. எனக்கும் இப்போ அதே சந்தோசம் தான்.
“ஸ்ஸ்… ஆஆ…”
“பெயின் தெரியுது அவருக்கு, கான்ஷியஸ் திரும்புது…” யாரோ பேசுற குரல் எனக்கு கேக்குது.
யாரைப்பத்தி சொல்றாங்கன்னு தான் எனக்கு தெரியலை. என்னால இன்னும் கண்ணை திறக்கவே முடியலை.
அணுவணுவா வலிக்குது. என்ன நடந்துச்சுன்னு யோசிக்க முயற்சி பண்ணேன். கப்பல் தீப்பிடிச்சது நினைவுக்கு வருது.
அடுத்த டேங்க்கும் வெடிக்கற சத்தம் தான் நான் கடைசியா கேட்டது. நான் அங்க தான் பக்கத்துல இருந்தேன். அப்போ தான் எனக்கு ஏதோ ஆகியிருக்கணும்.
அப்போ நான் செத்து போயிட்டனா, இனிமே என் வள்ளிக்கண்ணை பார்க்க முடியாதா. அம்மா, அப்பா எல்லாம் இனி என்ன செய்வாங்க…
“டோன்ட் ஸ்ட்ரைன்”
“யாருக்கு சொல்றீங்க??”
“உங்களுக்கு தான் மிஸ்டர் ஆரவ்”
நான் மெதுவா கண்ணை திறக்கறேன். என் முன்னாடி நிழலாடுது. யாரோ நிக்கறாங்க. இது நிச்சயமா நம்ம ஊர் இல்லை. எங்க இருக்கோம். அப்போ நாம பொழைச்சிட்டோமா…
“அம் ஐ ஆல்ரைட்??”
“எஸ் யூவர் பெர்பெக்ட்லி ஆல்ரைட்ன்னு” சொல்றாங்க.
எனக்கு இன்னும் தெளிவாகலை, நிழலா தான் உருவங்கள் தெரியுது. கொஞ்ச நேரத்துல எனக்கு பரிட்சயமான குரல் கேக்குது. தாமஸ்… தாமஸ் தான் பேசறான்.
என்னைப்பத்தி தான் விசாரிக்கறான். அவங்க குரல் இப்போ தேய்ஞ்சு எங்கயோ கேக்குது. என்னைவிட்டு தள்ளிப் போய்ட்டாங்க போல.
நான் இருக்கேன் அப்படிங்கறதே இப்போ எனக்கு நிம்மதி தான். சீக்கிரமே சரியாகி நான் இங்க இருந்து கிளம்பணும்ன்னு மனசு சொல்லிட்டே இருக்கு. வள்ளிக்கண்ணை பார்க்கணும்.
இங்க நான் எவ்வளவு நாளா இருக்கேன்னு வேற தெரியலை. தாமஸ்… தாமஸ்… என்னையறியாம அவனை சத்தமா கூப்பிட்டேன்.
யாரோ வேகமா ஓடி வர்ற சத்தம் என்னால உணர முடியுது. கண்ணை திறந்து பார்க்க முயற்சி பண்றேன், முடியலை.
“ஆரவ்…” தாமஸ் குரல்.
“தாமஸ்… இங்க தான் இருக்கியா… பக்கத்துல வாயேன்…”
அவன் என் பக்கத்துல வந்து என் கையை பிடிச்சிக்கிட்டான்.
இப்போ கண்ணை பொறுமையா திறந்தேன். நான் ரொம்ப நாளா கண் விழிக்காம இருந்திருக்கணும் அதனால தான் என்னால சரியா பார்க்க முடியலைன்னு நினைக்கிறேன்.
இப்போ தாமஸ் முகம் கலங்கலா எனக்கு தெரியுது, மறுபடியும் கண்ணை மூடி திறந்தேன். கொஞ்சம் தெளிவாவே பார்க்க முடியுது என்னால.
“என்னாச்சு தாமஸ்??”
“ஒண்ணுமில்லை நீ நல்லாயிருக்க ஆரவ்”
“அன்னைக்கு என்னாச்சு தாமஸ்?? நான் எப்படி இங்க இருக்கேன்??”
“நாம அப்புறம் பேசலாம் ஆரவ். நீ இப்போ தான் ரிகவர் ஆகிட்டு வர்றே, இன்னைக்கு தான் நீ கண் முழிச்சிருக்க, இன்னும் டூ த்ரீ டேஸ் தான் நீ எழுந்து நடமாடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு”
“வீட்டுக்கு பேசணும் தாமஸ்”
“பேசலாம் அப்புறம் பேசலாம் நீ ரெஸ்ட் எடுன்னு…” சொல்லிட்டு அவன் போய்ட்டான்.