வயது – 4
அனுராதா வீட்டிற்க்கு வந்த மறுநாளே அவர் செழியனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்.அவனை போல் கோடீஸ்வரனுக்கு பெண் தர கசக்குமா என்ன???
அனைத்தையும் அலசி ஆராய்ந்து அனு தேர்ந்தெடுத்த பெண் தான்ஆராதனா.ஆனால் அவள் கோடீஸ்வர்கள் வீட்டுபெண் அல்ல மீடில்கிளாஸை விட மேல்தட்டு வீட்டுப்பெண்.இதை அவனிடம் சொல்லும்போதே அவன் முகத்தில் சிந்தனை ரேகை பரவியது.
அதை சிந்திப்பதற்க்குள் மிக பெரிய அதிர்ச்சியை தந்தார் அவனின் அக்கா.அதுஅவளின் வயது 23 என்றதுதான்.
“அக்கா…என்ன இது 23 வயசு பொண்ணா போய்……” செழியனின் குரலில்அதிர்ச்சியும்,எரிச்சலும் இருந்தது.
“23 வயசு பொண்ணா போய் என்ன கொலை செய்யவா போறேன் கல்யாணத்தான பண்ணி வைக்கப்போறேன்” அவர் குரலில் காட்டம் தெரிந்தது.
“மாம்ஸ் வேணா எங்க விட்டு வேலைக்காரி சரோஜா வயசு 39 தான்…நீங்கஇரண்டு பேரும் ‘மேட் பார் ஈச் அதர்’ இருப்பீங்க” என்றாள் அனிஷா பிரியாவுடன் ஹை-பை கொடுத்துக்கொண்டே.
அனுராதாவின் முறைப்பில் தானாக அனிஷாவின் கிண்டல் நின்றது.
“கமான் ஆன் அண்ணா…பொண்ணு சும்மா தேவதை மாதிரி இருக்கா…எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு…உங்களுக்கு ஏத்த பொண்ணு… ஓகே சொல்லுங்க அண்ணா”என்றாள் பிரியா.
“அப்ப உன் புருஷன் பிரகாஷுக்கு கட்டிவை” சுடாக சொன்னான்.
“அந்த மூஞ்சுக்கு நானே பெரிசு இதுல இவ வேறயா???”
“போட்டோவ இங்க வச்சிட்டு போறேன் பாரு… நான் உன்னோட விருப்பத்தையோபதிலயோ கேட்கல… சும்மா தகவல் சொன்னேன் உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ அவதான் உனக்கு மனைவி.உன் பேச்சைக்கேட்டு, உன்விருப்பத்த மதிச்சு நான் பண்ண தப்பெல்லா போதும்” என்று உறுதியாககூறிவிட்டு அனிஷா,ப்ரியாவுடன் கிளம்பினார்.
அவன் அவர் வைத்துவிட்டு சென்ற கவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கே புலப்படவில்லை.
கல்யாணம் அவனிற்க்கு ஒரு தலைவலி என்றால் அக்கா பார்த்திருக்கும் பெண்ணின் வயது அதை விட பெரிய குடைச்சலாக இருந்தது.40 எங்கே?23 எங்கே? என்று கணக்கு போட்ட மனம் பல எண்ணங்களை சுற்றி ஓடியது.
‘அக்கா அவ்ளோ உறுதியா சொல்லிட்டு போறதை பார்த்தா அந்த பொண்ணுக்கும் ஓகே போல தெரியுதே’ என்று எண்ணினான்.
‘ஐயோ கல்யாணமே கஷ்டம்னு சொல்றேன் இதுல இவ்ளோ சின்ன பொண்ணா போய்…ஏன் அக்கா இப்படி புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க’ என்று எண்ணும்போதே இன்னொரு விஷயம் அவனுக்கு உறைத்தது.அது அந்தப் பெண் அனுஷாவை விட ஒரு வயது இளையவள் என்று.
அது இன்னும் அவனுக்கு கசப்பான உணர்வை ‘இதுக்கு ஒத்துக்கவே கூடாது…கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன மாதிரி இதுவும் நம்ம கை மீறி போகக் கூடாது’ என்று எண்ணி அவன் அந்த கவரை எடுக்கப் போக அவன் மொபைல் கரடியாக செயல்பட்டது.
எடுத்துப் பார்க்க அது அவனுடைய பி.ஏ விஸ்வாமிடம் இருந்து வந்தது.ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாக அவனுக்கு நினைவு படுத்த அவன் பேசியபடியே அவன் அலுவலக அறைக்கு சென்றான். அதன்பிறகு அவனின் வேலைகள் அவனை உள்வாங்க ஆரம்பித்தது.
அவன் வேலைகள் அனைத்தும் முடிந்து அவன் அறைக்கு வர இரவு 10 மணிக்கு மேல் ஆனது.வந்தவனின் பார்வை பால்கனியில் உள்ள மேஜையின் மேலிருந்த கவரில் பதிந்தது. அவனின் மனமோ ‘இதை பார்த்து என்ன பண்ணப் போறோம் எப்படியும் வேண்டாம்னு சொல்லப் போறோம் எதுக்கு இதை பார்த்து’ என்று நினைத்து அதை தன் கட்டிலின் பக்கத்தில் உள்ள மேஜையின் மேல் போட்டுவிட்டு நித்திரையை தழுவ முயன்றான்.
எதை பார்க்க வேண்டாம் என்று எண்ணினானோ…அதையேதான் வாழ்நாள் முழுவதும் தன் கண்ணெதிரில் நிழல் உருவமாக பார்க்க போகிறோம் என்று அவன் உணரவில்லை.
*************************
இன்று எப்படியும் அக்காவிடம் பேசி இதை மறுத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் திவாகரனின் வீட்டுக்கு சென்றவனை அனைவரும் ஆர்வமாக இன்முகத்துடன் வரவேற்க அதுவே சொன்னது இன்று தனக்கு பெரிய ஆப்பு கன்ஃபார்ம் என்று.
கண்ணசைவில் அனிஷாவிடம் என்னவென்று கேட்க அவள் கழுத்தில் கையை குறுக்காக வைத்து நாக்கை வெளியே தள்ளி ஒரு கொடூரமான சம்பவம் என்று செய்கை செய்ய,ஒன்றும் புரியாமல் அக்காவை பார்த்து தான் ஒத்திகை பார்த்ததை சொல்ல ஆரம்பிக்கும்போதே
அனுராதா “உனக்குத்தான் கால் பண்ணனும் நினைச்சேன்…நல்லது நீயே வந்துட்ட”
“என்ன ஆச்சு?!ஏதாவது முக்கியமான விஷயமா?!”
“ஆமா ரொம்ப முக்கியம் தான்…நீ இப்ப என்ன பண்றேன்னா நான் சொல்ற இடத்துக்கு போற ஆராதனாவையும் வர சொல்லி இருக்கேன்…எதுக்கும் நீங்க நேர்ல பார்த்துக்குறது நல்லது”
“யார் அது ?நான் ஏன் போய் பார்க்கனும்?” என்று குழம்பி கேள்வி கேட்க
“டேய்!!! நேத்து தானடா சொன்னேன்…உனக்கு பார்த்து இருக்க பொண்ணு…போட்டோ கூட கொடுத்தேனே”
அவனுக்கு தான் இதை நிராகரிக்க வந்தால் தன் தமக்கை இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்விட்டார் என்று புரிந்தது…இனிமேல் தான் எதை சொன்னாலும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்…வீண் வாக்குவாதம் அவர் உடலுக்கும் மனதுக்கும் நல்லது அல்ல என்று தோன்ற ‘இனிமேல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனிடம் சரணடைவது’ சமயோசிதமான முடிவு என்று அவனுக்கு தோன்றியது.
ஆனால் அவனுக்கு ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை…ஏன் இந்தப் பெண்ணிடம் அக்கா அதிக ஈடுபாடும்,பிடிவாதமும் பிடிக்கிறார் என்று.
“என்ன யோசிக்கிற செழியன்” அனுராதா வினவ
“ஒன்னும் இல்லக்கா…அது… பேரு மறந்துட்டேன் அதான்…”
“சரி…நேரத்தை வீணாக்காமல் போய் பாருடா…”என்று கூறி ஒரு காபி ஷாப்பின் பெயரை சொல்ல ஒரு மார்க்கமாக தலையை ஆட்டினான் செழியன்.தான் ஒரு மார்க்கமாய் திரும்பி வரப் போவது தெரியாமல்!!!
************************
மனதில் எழுந்த சஞ்சலத்தையும் பயத்தையும் போக்க கந்த சஷ்தி கவசத்தை படித்து கொண்டிருதார் ஜானகி .
ஜானகி,60 வயது அனைவரையும் சாந்த படுத்த கூடிய முகஅமைப்பு கொண்டவர்.ஆனால் அவரை பார்த்து சாந்தம் அடைய வேண்டியவரோ சாமி ஆடி கொண்டிருப்பார்.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாவம் வாயிலா பூச்சி.
பணம் செழித்து இருந்தும் தன் வீட்டில் உள்ள சந்தோஷமின்மையும் , தான் செய்த தவறினால் இன்று தன் பிள்ளை கஷ்டப்படுவதும் தான் அவரின் இந்த சஞ்சலதுக்கு காரணம்.
பாடி முடித்துவிட்டு பூஜை அறையை விட்டு வரும்போது அந்த விட்டின் வேலைக்காரரும் , ஜானகி மீது உண்மையான அன்பு கொண்ட ஜீவன் கோதாவரி பாட்டி வந்து “ஜானுமா!!! நம்ம லஷ்மி பாப்பா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் பேசுனுச்சு நீ பூஜைல இருக்கேன்னு சொன்னேன… சரி அப்புறம் பேசுறேன்னு சொன்னிச்சு” என்றார்.
அதை கேட்டு ஜானகியின் முகத்தில் கவலை ரேகைகள் தோன்றின .அதை பார்த்த கோதாவரி பாட்டியோ ” பயப்படாத ஜானு…பாப்பா நல்லா இருக்கேன் தான் சொன்னிச்சு ” என்றார்.
அவரை பார்த்து ஒரு பெருமூச்சுடன் “எனக்கு புள்ளையா பொறந்து எப்படி அவ நல்லா இருக்க முடியும்? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த சாபம் …”
“அப்படி எல்லாம் சொல்லாத ஜானு… எல்லாம் சரியாகும் கனவுலயும் நினைச்சோமா நம்ம பாப்பா வாழ்க்கை இப்படி மாறும்னு எதுவும் நம்ம கைல இல்ல ஜானு “
“கடவுள் எப்போதான் இந்த சோதனையை நிறுத்துவானோ…பார்ப்போமா… நான் லக்ஷ்மி கிட்ட பேசிட்டு வரேன் “என்று தன் அறைக்கு சென்றார்.
*************************
மாலை 5 மணிக்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த காபி ஷாப்க்குள் நுழைந்தான் செழியன்.சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்ட அந்த காபி ஷாப்பில் மிதமான கூட்டம் இருந்தது.கொஞ்சம் வித்தியாசமாகவும்,பொழிவாகவும், பார்க்க ரம்மியமாக காட்சி அளித்தது.
அதன் சிறப்பம்சமே அந்த கடையின் வடிவமைப்பும்,அதன் உட்புற வெளிப்புற வடிவமைப்பும் தான்.உட்புறம் அனைத்தும் மரப்பலகையால் வடிவமைத்து வார்னிஷ் செய்யப்பட்டிருந்தது. தரைகள் கூட பலகையால் செய்யப்பட்டதாக இருக்க, சிறு கொடி போன்ற அமைப்பிலான கம்பியில் பிங்காவில் ஆன ஜாடிகள் வர்ணங்கள் பூசப்பட்டு குரோட்டன்ஸ்,கொடி போன்ற வகையறாக்களை உள்ளடங்கிய தாவரம் வளர்க்கப்பட்டு இருந்தது.
சுற்றி அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருந்தது…வெளியே உள்ள தோட்டத்தையும் செடிகளையும் கண் குளிர பார்த்து ரசிக்க என்று பொன் மஞ்சள் நிறம் கொண்ட மின் விளக்குகள் ஆங்காங்கே தொங்க விடப்பட்டு இருந்தது.உள்ளே மரத்தால் ஆன மேஜையும் பிரம்பால் ஆன நாற்காலியும் ஆங்காங்கே அழகாக பிரித்து போடப்பட்டு இருந்தது.மெல்லிய இசை பின்னால் இதமாக ஒலிக்க ,ஜாதி மல்லி,முல்லை,ரோஜா பூ வாசம் என்று அனைத்தும் கலந்து காற்றில் மிதமாக மணம் வீசிக்கொண்டு இருந்தது அந்த “லான் கஃபே “.
இதை அனைத்தையும் பார்த்து உள்ளம் உவந்து,ஆழ் மனதில் இனம் புரியாத அமைதி சூழ்ந்து சுற்றுப்புறத்தை அனுபவித்து மென்புன்னகையோடு செழியன் அமர்ந்து இருப்பான் என்று நினைத்தால் அது நம்முடைய பெரிய தவறு…அதைவிட மடத்தனம் வேறு எதுவும் இல்லை.
அந்த காபி ஷாப்பில் இருந்த எதுவும் எந்த சூழ்நிலையும் அவன் கவனத்தை கவரவில்லை மாறாக அவன் ஒரு எரிச்சலுடனும்,குழப்பத்துடனும் இருந்தான்.எப்படி அந்த பெண்ணிடம் பேசி இதை தட்டி கழிப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.ஒருவேளை அந்தப் பெண்ணும் நம்மை போல கட்டாயத்தில் சம்மதம் சொல்லி நம்மை பார்ப்பவளாக இருந்தால் அது தனக்கு இன்னும் வசதி என்று எண்ணினான்.
அப்போதுதான் அவனுக்கு ஒன்று உரைத்தது தான் அவளைப் பார்த்தது இல்லை என்றும் தமக்கை கொடுத்த புகைப்படத்தை தான் பொருட்படுத்தி கொள்ளவில்லை என்றும்.தன் முன்னால் அவள் வந்து நின்றால் கூட தனக்கு அவளை அடையாளம் தெரியாது என்று அவனுக்கு உரைத்தது.
‘ச்சை!!!இந்த அக்கா போன் நம்பர் குடுத்தா ஈசியா இருந்திருக்கும் இல்ல…எங்க இருக்கானு கேட்டு தெரிந்து இருக்கலாம்’ என்று நினைக்க
அவனின் மனசாட்சியோ ‘டேய்ய்ய்!!! நம்பர் வாங்கி என்ன கட்டிக்க போற பொண்ணு கடலையா போட போற’… ‘இந்த கல்யாணம் வேண்டாம் பிடிக்கலைனு சொல்லி நிறுத்துனு கெஞ்சுறதுக்கு இவ்வளோ சீன் தேவையில்லை’ என்று இடித்துரைக்க
‘போட்டோ பார்க்காமலும் நம்பர் வாங்காமலும் வந்தது தன்னுடைய தவறு தான்’ என்று உணர்ந்து தன் அக்காவிடம் பேசி நம்பர் வாங்குவோம் என்று நினைத்து தன் கைப்பேசியை எடுத்து வெளியே செல்லும் பொழுது
“ஹலோ சார்” என்று ஒரு குரல் அவன் அருகில் கேட்டது.
அங்கு அவனின் கிளைன்ட் ஒருவன் தன் சகாக்களுடன் நின்று கொண்டிருந்தான்.அவனிற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் ஒரு வில்லாவை வடிவமைத்து கொடுத்திருந்தான்.அதனால் வந்த பழக்கத்தில் அவனை அழைத்தான்.
அவனைக் கண்டுகொண்ட செழியன் “ஹாய் பிரதீப்” என்று அருகில் செல்ல
“என்ன சார் இந்த பக்கம்… நீங்க தான் எப்பவும் பிஸியா இருப்பீங்களே” என்று வினவ
செழியன் மனதுக்குள் ‘இப்ப இவன் கிட்ட என்ன சொல்வது பொண்ணு பார்க்க வந்தேன்னா? இல்ல அந்த பொண்ணுகிட்ட வேண்டாம்னு சொல்லி கெஞ்ச வந்தேன்னா?’ என்று மனதுக்குள் தனக்கு கவுண்டர் கொடுத்ததையும் மீறிய “ஆங்…பிரெண்ட் ஒருத்தர பார்க்க வந்தேன்” என்று பொய்யுரைக்கும் போதே அவன் மொபைலில் கால் வர
“ஒகே சார்!!! யூ கேரியான்…அப்புறம் மீட் பண்ணுவோம்” என்று கூறி அவன் கிளம்பினான்.
தன் பர்சனல் எண்ணிற்கும் பதிவு செய்யப்படாத ஒரு எண்ணிலிருந்து கால் வர குழப்பத்துடன் ஆன் செய்து காதில் வைத்தான்.
மறுமுனையிலிருந்து “ஹலோ செழியன்!!!” என்று ஓர் பெண் குரல் மென்மையாக கேட்க
“எஸ்!!! நீங்க?” என வினவ
“Mrs.செழியன்” என்றது அக்குரல் சிறு சிரிப்புடனும் ஒருவகையான துள்ளலுடனும்
“வாட்?” என அவன் அதிர
இப்பொழுது இன்னும் சிரிப்புடன் “கொஞ்சம் உங்க ரைட்ல திரும்பி சைட்ல பாருங்க” என்று அந்த குரல் சொல்ல திரும்பியவனின் பார்வையில் பட்டாள் நம் நாயகி ஆராதனா.பின்னணியில் பூக்களைக் கொண்டு ஒரு சிறு பூவாக அழகாக காட்சி தந்தாள்.சிரிப்புடனும் அதனால் உண்டான கன்னத்து குழியுடனும் அவளை பார்த்த செழியனுக்கு ஒன்றும் உறைக்கவில்லை…சிலை போல நின்றான் அவளை பார்த்துக்கொண்டே
அவள் தான் அவன் அருகில் வந்து தன் வலது கரத்தை நீட்டி “ஆராதனா” என்று மெல்லிய சிரிப்புடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
” பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீ தான்
அதன் வாசங்கள் எல்லாம் நீ தான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு”