கண்ணில் நேர் திரையிட, “ஜெய். நா மூணு கொலை பண்ணி இருக்கேன்”., கேட்கவே கேட்காத த்வனியில் தேஜு பேசினாள்.
அவளது ஜில்லிட்டிருந்த கையை தனது உள்ளங்கையில் வைத்து, மற்றொரு கையை அதன் மேல் வைத்துப் பொதிந்து, “நான் ஐஞ்சு கொலை பண்ணியிருக்கேன், கடைசியா போன வாரம்தான், ஒரு கேஸ் முடிக்க.. ஒருத்தன போட்டுத் தள்ளினேன்”.
“நான் என்கவுண்டர் பண்ணின எல்லாருமே குழந்தைங்களை சிதைச்சவங்க, இதுல ஒருத்தன் ஒரு குழந்தைக்கு தாத்தா வேற. இந்த வயசுல, பேத்தி கூட விளையாட வந்த குழந்தையை .. ராஸ்கல்ஸ். வெல்… எனக்கு அதெல்லாம் கொலைன்னே தோணல, உனக்கு நீ பண்ணினது தப்புன்னு தோணுதா?”
“நோ, நெவர்…”, தீர்மானமாக எஃகின் உறுதியுடன் சொன்னாள்.
“குட். அப்போ வேற ஏதாவது ப்ராப்ளம் இருந்தா சொல்லு.”
வேறு பக்கமாக பார்த்து, “ப்ளீஸ்.. நாளைக்கு கல்யாணம் ஆனதுக்கப்பறம் பேச்சு வாக்குல ஏதாவது தப்பா வந்துட்டா?”, சன்னக் குரலில் கூறினாள். தன்னுடனான வாழ்வைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறாள், என்று தனாவிற்கு தோன்றியது.
“லிசன்.. நான் இண்டென்ஷ்னலா உன்னைக் காயப்படுத்த மாட்டேன் ன்னு நீ நம்பணும், அது மட்டும் போதும். அதே மாதிரி நீயும் என்னைக் காயப்படுத்த மாட்ட-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மத்தபடி நான் இப்படி நடப்பேன் , அப்படி நடப்பேன் -னெல்லாம் வாரண்டீ குடுக்க முடியாது. புரியுதா?”, நிதர்சனத்தை சொன்னான்.
“ம்ம். “, மெதுவாக பதிலுரைத்தாள் .
“இந்த ம்ம். எதுக்கு ? ம்ம். சொல்லு.. , எதுக்கு ?”, பதில் வந்தே ஆகவேண்டும் என்ற த்வனியில் அவனது கேள்வி.
சட்டென நேராக தனஞ்செயனைப் பார்த்தவள்.. கலக்கமாக, “இப்போ நீங்க என்ன போலீசா பாக்கறீங்களா ? இல்ல லவ்வரா பாக்கறீங்களா?, இந்த டவுட் எப்பவுமே வந்தா? “, என்று கேட்டாள்.
ஒரு நொடிகூட தாமதியாமல், “பொண்டாட்டியா பாக்கறேன். இப்பல்ல.. என்னிக்கி உன் பாட்டை கேட்டனோ, அப்பலேர்ந்து.. உன்ன என் பொண்டாட்டியாத்தான் பாக்கறேன்”, தனஞ்செயன் சொன்னதும்.. தேஜு விழி விரிய பார்த்தாள்.
“நம்பு தேஜு, சில விஷயங்களை நம்பித்தான் ஆகணும்”
என்றவன்.. பெறுமூச்சொன்றை விட்டு .. “நிஜமாவே ரொம்ப டென்ஷனாகுது தேஜு .. “, சொன்னவன், நிறுத்தி அவளை இன்னும் நெருங்கி , “இந்த விஷயம் எனக்கு தெரியும்ங்கிற கட்டாயத்துக்காக இல்லாம உண்மையா சொல்லு. உனக்கு என்ன பிடிச்சிருக்குதானே?” கேட்டு.. ஒரு வித படபடப்புடன் காத்திருந்தான்.
கீழ மேலாய் தலையசைத்து தன் சம்மதத்தை சொன்ன தேஜஸ்வினி தலை குனிந்துகொண்டாள்.
“ஃப்ஹு…. ‘, என்று டென்சன் தளர அவள் கைகளை விட்டவன், சட்டென “போலாம், நேரமாயிடுச்சு” என்றான்.
தேஜு கேள்வியாக நோக்க..
“என்ன பாக்கற? எனக்கு என்மேல நம்பிக்கை இல்ல, அதுவும் நீ ஓகே சொன்னதுக்கப்புறமும்..? சான்ஸே இல்ல. எதுக்கும் நீ ரெண்டடி தள்ளியே நட”, என்று சிரித்தபடி கூற…
மெல்லிய குறும்பு எட்டிப் பார்க்க, “நான் மட்டும் சும்மாயிருப்பேன்னு நினைக்கிறீங்களா என்ன? ஹாஸ்பிடல்-ல ஏற்கனவே நான் எல்லை மீறியாச்சு”, என்று தேஜு சிரித்தபடி கவுண்டர் கொடுக்க..
வெடித்துச் சிரித்து, “ஐயோ, என் கற்பு ?”, என்று தனா நாடக பாணியில் போலியாக அதிர..
தேஜு, “ஹ ஹ ஹ.. அதெல்லாம் பத்திரமா தான் இருக்கு. அப்போ, அங்க உணர்வில்லாத நேரத்திலேயும் என் பேர் சொன்னீங்களா, அந்த நேரத்துல உங்களை ரெசிஸ்ட் பண்ண முடியாம…..”,என்று தலைகுனிந்தவள், “ஜஸ்ட் எ கிஸ்தான் ..”, என்று முகம் சிவக்க சொல்ல,
ரோஜாவைப்போல இளம் சிவப்புடன் மலர்ந்திருந்த அவளது முகத்தையே பார்த்து, “தேஜு.. “, என்று உணர்ச்சி வசப்பட்டு அவளருகே வர,
தேஜு அவசரமாக “அயோ.. ஜெய்… நீங்க டி எஸ் பி, இது பப்ளிக் பிளேஸ்”, என்றாள்.
தனா சற்றே சுதாரித்து, “ப்..ஹூம். ஆண்டவா, வீட்டுக்கு ஒழுங்கா போயி சேரனும்”, என்று தலைகோதி, இருவரும் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“பட் தேஜு உனக்கு ஒரு கண்டிஷன். நீ இனிமே டால்-ஸ் செய்யக் கூடாது. பெரிய விஷயம் எதுன்னாலும் எங்கிட்ட சொல்லிட்டுதான் செய்யணும். இன்னொரு விஷயம் , டெக்னிக்கல்லா எனக்கு கொஞ்சம் கத்து தரணும். ஓகே ?”
காரைக் கிளப்பியவள், குறுஞ்சிரிப்போடு “சரி “, தலையசைத்தாள்.
“அப்பறம் எனக்கு ஒரு டவுட்.. எப்படி இவங்கள பத்தின டீடைல் கலெக்ட் பண்ணின? தனி ஒருஆளா நிச்சயம் பன்னிருக்க முடியாது.”
“நா பண்ணல.. எங்க NGOஸ், போதை மறுவாழ்வு மையத்து NGO-ல இருக்கறவங்க, தகவல்களை சேகரிப்பாங்க. டாக்குமெண்டரி தயாரிக்க, எந்த மாதிரி ஏரியால அடிக்ட்ஸ் நிறைய இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க-ன்னு ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி பண்ணுவாங்க. எங்க ஆர்கனைசேஷன், படிக்கற பசங்களுக்கு ஸ்கலர்ஷிப் கொடுக்கறதால.. காலேஜ்-ல ட்ரக்ஸோட தாக்கம் இருக்கான்னு அவங்க மூலமாவும் இன்பர்மேஷன் கிடைக்கும். எல்லாத்தையும் கேதர் பண்ணிட்டு, அதோட ரிலையபிலிட்டி பாத்துத் தான், அடுத்த ஸ்டெப், அதுலேர்ந்து.. நான் மட்டும் தனியாத்தான் பண்ணுவேன்.”
“யு.எஸ். லேர்ந்து வரும்போதே தேவையான மெடீரியல்ஸ், எடுத்துட்டு வந்துடுவேன். அப்பறம் கேஸ் ஸ்டடிக்கு வெயிட் பண்ணுவேன். தென், பிளானிங். அப்பறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே?”
“எப்போவும் பப்ளிக்-கா வெளிய போறதா இருந்தா, பர்தா போன்றது பழக்கம். சோ, ஈஸியா கண்டுபிடிக்க முடியாது. இன்னும் கன்ஃப்யுஸ் பண்றதுக்குத்தான், ஜென்ட்ஸ் ஷூ, கன்சீவ்ட் லுக், ஹைட்டா காமிக்க அதுக்குன்னு ஒரு டைப் ஷூ இருக்கு, நான் அதை இன்னும் உயரமாக்கி போட்டுப்பேன்”.
“சிம் கார்ட்-ஐ பொறுத்தவரை, ரி-ஹெபிலிட்டி சென்டர்-க்கு [மறுவாழ்வு மையம்] வர்றவங்க, பேஷண்ட்ஸ் நம்பர்களை கலெக்ட் பண்ணுவேன், இறந்துட்டாங்கன்னா…, டூப்ளிகேட் ஸிம் வாங்கி எப்போ தேவையோ அப்போ மட்டும் தான் ஆன் பண்ணுவேன், ஐபி அட்ரஸ் வச்சு ட்ராக் பண்ணைக் கூடாதுன்னு, ஒரு மிஷன் முடிஞ்ச உடனே, அதுக்காக யூஸ் பண்ணின ஸிம் , மொபைல், சிஸ்டம், பக்ஸ் எல்லாத்தையும் ட்ராஷ் [குப்பை] ஆக்கிடுவேன்.”
“ஆனா இதெல்லாம் எதுக்காகன்னு, ஒருவேளை உங்களுக்கு தெரிஞ்சே இருந்தாலும், என்னால மனசு விட்டு சொல்ல முடியாது”, என்று தேஜு திக்கித் திணற… “தேவையில்ல .. எனக்கு உன்னோட பாஸ்ட் வேண்டாம். உன்ன கஷ்டப்படுத்தற எதுவும் வேண்டாம்”, என்றவன், “சில விஷயங்கள் ரகசியமாதான் இருக்கணும்..”, உள்ளார்ந்து சொன்னான்.
ஆம். தனா.., தேஜுதான் கொலையாளி என்பதை எப்படி தனா யாருக்கும் சொல்ல மாட்டானோ, அதே போல்… யஷஸ்வினி குறித்தும், யாரிடத்தும் தேஜு சொல்ல மாட்டாள். ரகசியங்கள் ஒருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும்.. அப்போதே அவை ரகசியங்களாக இருக்கும்.
வீட்டின் அருகே வந்ததும் கேட் திறந்து காரை பார்க் செய்து இருவரும் இறங்கியதும், “தேஜு நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன், தருவியா?”, என்று தேஜஸ்வினியின் அருகே வந்து தனஞ்செயன் கேட்க..
ஏதாவது ஏடாகூடமாக கேட்பானோ? என்று தேஜு தனாவைப் பார்க்க, அவன் முகமோ தீவிரமாக இருந்தது.
“ம்ம்”
“உன்னோட TJ மோதிரம்”
“அத என்ன பண்ணப் போறீங்க?”, அவசரமாக கேட்டாள்.
பார்வை கூர்மையாக “என்ன பண்ணனும்னு உனக்குத் தெரியாது?”, என்று கேட்டான்.
“அது யஷஸ் கொடுத்தது”, இறங்கிய குரலில் தேஜு.
“பரவால்ல, அத ட்ராஷ் பண்ணனும், அது இனிமே யார் பார்வைக்கும் போக கூடாது”, என்றான் உறுதியாக.
“சரி”, என்றவள், நினைவு வந்தவளாக, “ஜெயன் ஒரு விஷயம். நார்த் இந்தியால ரெண்டு முக்கியமானவங்க இருக்காங்க, NCB யால அவங்களை பிடிக்க முடியுமா?, ரொம்ப செல்வாக்கான இடம்”, எனும்போது அவளது கற்றை முடி தனாவின் கழுத்திலும் முகத்திலும் உரசிப் போக,
பாதி கவனமுடன், “ஆளு யாரு?”, என்றபடி நகர்ந்தான்.
“என்ன பண்ணப்போறீங்க சொல்லுங்க?”, அவளிடமிருந்து நகர்ந்தவனை கை பிடித்து நிறுத்தினாள்.
“நிறை..ய பண்ணனும்னு பிளான் இருக்கு…”, என்றான் குறும்பாக.
தேஜு, தனாவின் கண்கள் குறும்பு கொப்பளிக்க சிரிப்பதை பார்த்து, “ஜெய், பி சீரியஸ்”, என்றாள் கடினமாக.
ஒரு நெடுமூச்சு விட்டவன் முகத்தை இயல்பாக்கி, “யா சீரியஸாத்தான் சொல்றேன் தேஜு, நிறைய பிளான் வச்சிருக்கேன், மெதுவா சொல்றேன். அதுக்கு முன்னால உன்னோட முடிய கட்டிடேன், ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது”, என்றான் தனஞ்செயன். எவ்வளவு சீரியஸாக நான் பேசுகிறேன்? இவன் என்னடாவென்றால் விளையாட்டுத்தனமாக முடிக்கிறானே? என்ற யோசனை வந்தது தேஜுவின் முகத்தில்.
தேஜு தனது தலைமுடியை கொண்டை போட ஆரம்பிக்க தனஞ்செயன் “தேவுடா, இன்னிக்கு மட்டும் என்னை நல்லவனா வைப்பா”, என்று வாய்விட்டுக் கூறி, மறுபக்கமாக தலையை திருப்பி கொண்டான். அவனது புலம்பலைக் கேட்டு, அது எதற்க்கென்பது சிறிது தாமதமாக புரிய, தேஜுவிடமும் குறுநகை பூத்தது.
“ஹெலோ, மேடம் திரும்பலாமா?, அப்பறம் எ சீரியஸ் பி சீரியஸ்-ன்னு க்ளாஸ் எடுப்பீங்க..”, என்றான் தனஞ்செயன்.
“ப்ச். ஜெய்”, தனஞ்செயனை சீரியஸாக இருக்கச் சொன்னவள், குறுஞ்சிரிப்பு முகத்தில் ஒட்டிக் கொள்ள மனம் லேசாகி இலகுவானாள்.
அவளது அறைக்கு சென்று, இரண்டு நிமிடம் பொறுத்து வந்தாள், மோதிரத்தோடு.
தன்னெஞ்சயனின் அருகே வந்த தேஜஸ்வினி, மோதிரத்தைத் தருவதற்காக கை நீட்ட.. அதை வாங்கியவன்… மோதிரத்தைப் பார்த்தபடி. , “தேஜு . நாளைலேர்ந்து…. டிஜே -ங்கிற இந்த நீ … இறந்த காலம்.., ஓகே.?”, என்றான்.
**********************
தேஜூவின் வீட்டில், தனஞ்செயன் குடும்பத்தினர் அனைவரும் குழுமி இருந்தனர். பெண் பார்க்கும் படலம். அவளும் பொன் பூட்டிய பேரனங்காக வர…, அவளது அழகில் லயித்தான், தலைவியின் நாயகன். அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து.. , விஜயலக்ஷ்மி சித்தி, “நான் இவ கல்யாணம் முடிச்சு, காசிக்கு போயிடுவேன். அம்மா வீட்டு சைடா நீங்கதான் அவளை பாத்துக்கணும்”, என்று விச்சு மாமியிடம் கண்கலங்கி கூறினார்.
“அதுக்கென்ன.. நம்ம தேஜுக்கு நா பண்ணாமலா?”, மாமி உத்திரவாதம் அளிக்க.. இருவீட்டாரும் மிக மகிழ்ச்சியாக ஒப்புத் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.
“க்கும்.. என்னம்மா கல்யாணப்பொண்ணு.. இப்பலேர்ந்தே கனவு காண ஆரம்பிச்சிட்டியா? “, சொர்ணாக்கா பாட்டி தேஜுவை வம்பிழுக்க…
“சரி, அடுத்து வர்ற நல்ல முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வச்சிடலாமே?”, பெரியவர் கேட்க…
“அப்படியே செஞ்சிடலாம்”, என்று சொன்னார் விஜயலக்ஷ்மி சித்தி.
“இல்லத்தை. இன்னும் ரெண்டு மாசத்துல என்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு டெபுடேஷன்-ல மாத்திடுவாங்க. அதனால ரெண்டு மாசம் கழிச்சே வச்சிக்கலாம்”,என்றான் தனஞ்செயன்.
தேஜுவின் விருப்பப்படி போதை தடுப்பு பிரிவில், முயன்று சேர்ந்தான். இவனது நண்பன் எஸ்ஸார் அதே துறையில் இருந்தாலும், தகுதி அடிப்படையிலேயே அங்கே மாற்றல் வாங்கி கொண்டான். மேலதிகாரிகளின் பரிந்துரையும் இருந்ததால் மாற்றல் சுலபமாக இருந்தது.
“வேலை பாட்டுக்கு வேலை, இது ஒரு பக்கம் நடக்கட்டும், தனா”, அப்பா தேவராஜன் சொல்ல…
“அது …. “, என்று தயங்கியவன், “நல்ல காரியத்த தள்ளிப் போடக்கூடாதுப்பா”, அவர் இன்னும் வலியுறுத்த .. “சரிப்பா” என்று விட்டான்.
“சாதாரணமா பொண்ணு வீட்டுக்கு மாப்பிள பாக்க போனாலே, பாட்டுபாட சொல்லுவாங்க.. நம்ம பொண்ணு பாட்டுக்கே பிறந்தவ. சும்மா இருந்தா எப்படி. பாட சொல்லுங்க? “, தனஞ்செயனின் அத்தை .
தேஜஸ்வினி நிமிர்த்து தனாவைப் பார்க்க…, அவன் எப்போதும் செய்யும் வழமையாக…. ‘ பாடு ‘, என்பதைப் போல், கண்மூடி தலையசைத்தான்.
ஹம்ஸத்வனி ராகத்தை அடி நாதமாக கொண்ட…..
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்
(வெள்ளை பூக்கள்)
காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
( வெள்ளை பூக்கள்)
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே
(வெள்ளை பூக்கள்)
போர் மட்டுமல்ல , மனித இனத்திற்கு …
போதையும் பெரும் தீமை விளைவிக்கக் கூடியதுதான்.
அவை இறந்த காலம், ஆவது எப்போது ?
காத்திருப்புகளுடன்…..
நாம்….
[MEDIA=facebook]1145376275839501[/MEDIA]