22.2
தங்கை விஷயம் கேள்வி பட்டதில் இருந்து கருண் இந்த ஒரு வாரமாக அவன் அப்பாக்கு பக்கபலமா மருத்துவமனையிலே இருக்கிறான் .
என்ன செய்ய முடியுமோ அவர்களால் ஆன அனைத்தையும் செய்தனர் .
அசைவே இல்லாமல் படுத்து இருக்கும் ஷிவானியிடம் “ஏய் சண்டை கோழி ! சீக்கிரம் சிலிர்த்து எழுந்து சண்டை போடு டா, என்னை மன்னித்து விடு” என்று கருண் அவள் கையை வருடினான் ..
இதை கண்ட ஷிவேந்தர் அவள் முழித்து இருக்கும் போது சண்டை கோழி சொன்னா சும்மா விடுவாளா ?? ஒரு வழி செய்து தான விடுவா சிரித்துக் கொண்டான்..
ஜீவா, அன்று அமெரிக்கா கிளம்புவதாக இருந்தது ..ஷிவானிக்காக அவன் பயணத்தை கான்செல் செய்து விட்டான் . “சிவா, வேண்டும் என்றால் அமெரிக்கா அழைத்து செல்லலாமா? என்னால் இவளை இப்படி பார்க்கவே முடியல …”
“குட்டிமா, உனக்காக எத்தனை பேர் டா .. எங்களை தவிக்க விடாமல் சீக்கிரம் எழுந்துக்கோ செல்லம்” என்று இடை விடாது மனதில் பேசிக் கொண்டு இருந்தான் .
கண்ணன் ஜீவாவிடமும் மன்னிப்பு கேட்டார்..
********
மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்றாலும் அவர்களுக்கு மேலே ஒருவன் இருக்கிறானே….. கண்ணன் திறமை மீது சிவாக்கு நம்பிக்கை இருந்தாலும் எதற்கும் கடவுள் அருள் வேண்டுமே ..
என்ன தான் வேண்டினாலும் ஒரு வாரம் கழித்தே ஷிவானி கண்விழித்தாள். அதற்கு பிறகு அவள் உடல் வேகமாக குணமடைந்தது .. மகளை எண்ணி கண்ணன் அவளை சோதனை செய்ய செல்லவே பயந்தார் ..
அழும் ரஞ்சனி கையை ஷிவானி ஆதரவாக பற்றி “அண்ணி, எனக்கு ஒன்றும் இல்லை . இப்பவே எழுந்து ஓடுவேன். உங்க தம்பி தான் விடமாடீன்கிறார் . உங்க பையனுக்கும் என் மகளுக்கும் கல்யாணம் செய்து , நம்ம பேரனை பார்க்காமல் போக மாட்டேன் ..கவலை படாதீங்க” என்று ரஞ்சனியை ஆறுதல் படுத்தினாள்.
“அப்போ என் மகன்” என்று அங்கே வந்த அவள் அண்ணன் கருணை பார்த்து என்ன சொல்வது என்று முழித்தாள். எங்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என்று தானே எண்ணி இருந்தோம்..
சிவா அவள் கைகளை இதமாக வருடி “என்ன டீ, எதுக்கு இப்படி யோசிக்கிற? கருண் எங்களுக்கு உங்க வீட்டு பெண் தான் வேண்டும்” .
அவள் முழிப்பதை கண்டு “என்ன ஷிவானி …உங்க அண்ணன் பெண்ணை நம்ம மகனுக்கு கட்டி வைத்திடலாம் சொல்லறேன் . நம்ம வீட்டு மருமகள் …”
“இது நல்லா இருக்கே ! அப்படியே செய்திடலாம் அண்ணா” .
ஓய்வாக இருந்த நேரத்தில், சிவா கண்ணனை பார்க்க சென்ற நேரத்தில் டுயுடி மருத்துவரிடம் ஷிவானி அவள் ரிபோர்ட் வாங்கி படித்தாள். அன்று நடந்த விபத்தை நினைத்தால் இப்போதும் அவள் உடம்பு தூக்கி போட்டது. எங்கே இனி என் வாழ்வில் ஷிவேந்தரை பார்க்க முடியாதோ என்று எப்படி பயந்தேன் . அடிபட்டு மயங்கும் முன் அவள் ஷிவேந்தர் தான் கண் முன் தோன்றினான் .
ரிபோர்டில், நாற்பத்தைந்து நாள் கரு அழிந்ததை கண்டு கண்ணில் நிற்காமல் கண்ணீர் . நிஜமாகவா ? என் ஷிவேந்தர் உயிர் என் கருவிலா … அவள் வயிற்ரை தடவி இந்த அம்மா வேண்டாம் அழிந்துவிட்டயா செல்லம் . உனக்கு என்னை பிடிக்கவில்லையா ? ஏன் சிவா இதை பற்றி பேசவில்லை..
அப்போது தான் ஒன்றை யோசித்தாள். ஷிவேந்தர் அருகில் இருக்கிறானே தவிர அவளிடம் பேசுவது இல்லையோ ..என் முகம் பார்த்தே என் தேவைகளை அனைத்தும் கவனித்துக் கொள்கிறானே ? இத்தனை நாளா மயக்கத்தில் இருந்ததினால் கவனிக்கவில்லையோ ?
இந்த கரு அழிந்ததுக்கு நான் தான் காரணம் கோபமோ ?
இதுவரை ஷிவானி தூங்கும் வேளையில் தான் கண்ணன் வந்து பரிசோதித்து சென்றார் . அவள் கோபத்தை கண்டே அருகில் செல்ல பயந்தார்..
நினவு திரும்பிய அன்று மயக்க நிலையில் விழித்த ஷிவானி, கண்ணன் மருத்துவமனையில் இருப்பதை கண்டு “எதற்கு என்னை இங்கு சேர்த்தீர்கள் அப்படியே என்னை விட்டு இருக்கலாமே , நிம்மதியா போய் சேர்ந்து இருப்பேனே, நான் சொல்வது இப்ப கூட உங்களுக்கு புரியலையா இந்தர்” என்று வலியால் அழும் அவளை தேற்ற முடியாமல் தோற்றான் . அவள் கதறுவது பொறுக்க முடியாமல் ஷிவேந்தர் கண்கள் கலங்கி, “என்ன பேச்சு பேசற டா ..என்னை விட்டு போய்ட முடியுமா” என்று அனைத்துக் கொண்டான் ..
கண்ணன் செய்த வேலைக்கு அவரை தொலைத்து கட்டி இருக்கணும் . அதுவும் அவன் கண்மணியை நம்பாமல் அவரை நம்பினதுக்கு எத்தனை வேதனை. அதுக்கே சும்மா விட்டு இருக்க கூடாது . அவன் மனைவி ஷிவானியை பிழைக்க செய்து அவன் கையை கட்டி போட்டார் . என்ன தான் அராஜகம் செய்து இருந்தாலும் அந்த நேரத்தில் கண்ணன் அவனுக்கு தெய்வமாக தான் தோன்றினார் . அவன் உயிரை அவனுக்கு திருப்பி தந்தவர் அல்லவா.
ரிப்போர்ட் படித்து கலங்கி இருக்கும் ஷிவானியை காண கண்ணன் அறைக்குள் நுழைந்த போது , “ இப்ப எதுக்கு இங்க வந்தீங்க .. என் குழந்தையை அழித்து விட்டீர்களே ! திட்டம் போட்டு தான செய்தீங்க..
எதற்காக என்னை பிழைக்க வைத்தீர்கள் . எனக்கு என்பதால் சரி ..இதுவே சிவாக்கு என்றால் என்னால் தாங்க முடியாதே ..உங்க கண் முன் வராமல், கண் காணாம போய்டறேன் . நீங்க பிழைக்க வைத்த உயிரை வேண்டும் என்றாலும் எடுத்துக்கோங்க . சிவாவை ஒன்றும் செய்திடாதீங்க” கதறினாள்.
அவள் கதறலை கேட்டு கண்ணன் அரை வாங்கினது போல துடித்தார் . இதுவரை அவர் செய்த அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றி ..கைராசிக்காரன் என்ற பெயரிலே கர்வம் கொண்டவர் . ஆபரேஷன் முடிந்தவுடன் அவரிடம் என் மகனை, என் புருஷனை ,எங்க அம்மாவை ,என் அப்பாவை , என் குழந்தையை காப்பாற்றிய உங்களை கடவுளா பார்க்கறோம் . ஆயுள் முழுதும் மறக்கமாட்டோம் என்று வார்த்தைகளை கேட்டு, இப்போது அவர் மகள் நீ கொடுத்த உயிரை எடுத்துக்கோ கதறியதை பார்த்து அவருக்கு இதய வலியே வந்துவிட்டது ….
நிர்மலா வீட்டுக்கு வா அழைத்தும் நான் வரல மறுத்தாள். சிவா பேசாததை எண்ணி மருகினாள் . பாட்டி கோமதியிடம் “என்னை அங்கு கோவைக்கு அழைத்து போகிறீர்களா ? ப்ளீஸ் ..என்னால் இனி இங்க இருக்க முடியாது ..”
சிவா, “அது எல்லாம் முடியாது ..என்னுடன் தான் அவ இருக்கணும் சண்டை போட்டான் .”
பாட்டியை வெளியே அனுப்பி ஷிவானியிடம் அழுத்தமாக “என்னுடன் தான் நீ வர .. இதுக்கு மேல் பேசினால் நான் என்ன செய்வேன் தெரியாது” என்று மிரட்டினவுடன் “நீங்க மிரட்டினால் கேட்கணுமா ? முடியாது ..என்ன செய்வீங்க ..”
அவன் , அவள் கழுத்தில் இருக்கும் தாலியை பற்றியவுடன் அழுந்த பிடித்துக் கொண்டாள்.. அவள் கண்களை பார்த்து “ என்ன? இது இல்லை என்றால் இன்னொன்று வாங்கி மாட்டிக் கொள்ள போற சொல்ல போறீயா?
அப்படி செய்தால் அது வேறு ஒருவன் கட்டின தாலி போல தான், இந்த நிமிடத்தில் இருந்து நீ யாரோ , நான் யாரோ” என்றவுடன் வாயை அழுந்த மூடிக் கொண்டாள். அதற்கு பிறகு அவனிடம் பேசவே இல்லை .. அவன் வீட்டுக்கே அழைத்து சென்றான்.
ஷிவானி பேசவில்லை என்றாலும் பார்த்து கவனித்துக் கொண்டான் . அவளுடன் இருப்பதே போதும் எண்ணினான் . அன்று ஷிவானியை ,ஹாஸ்பிடலில், ரத்த வெள்ளத்தில் பார்த்ததை எண்ணினால் இன்னும் அவன் உடல் நடுங்கும் . ஷிவானி தூங்கும் வரை அருகிலே வரமாட்டான் .. அவள் தூங்கின பிறகு குழந்தை போல அவன் கைவளைவிலே பாதுகாத்தான் ..
தேவா ,ராஜ் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகியது என்றதை ஜீவா, சிவாவிடம் சொன்னவுடன் “அப்படியா? பிரேக் பிடிக்காமல் நடந்த விபத்து தான?”
ஜீவா அதிர்ச்சியா “அது எப்படி சிவா? இப்ப தான விபத்து நடந்தது போன் வந்தது ..அதற்குள் உனக்கு” .
“நேற்றே என் மாமா குறி ஜோசியம் சொன்னார்” .
ஜீவா மீண்டும் அதிர்ச்சியா “என்ன?”
“ஜோசியம் ,ஜோசியம் …”
கண்ணன் மூலம் “உயிர் இருக்கு .. ஆனா அவர்கள் எழுந்து நடமாட முடியாது” என்றதை கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்தான் ..அவன் வனியை வருத்தியவர்களை சும்மா விடுவானா ? அவனுக்கு தான் இந்த மாதிரி விஷயத்தில் பழக்கம் இல்லையே !
மாப்பிளை கேட்டு கண்ணன் செய்யாமல் விடுவாரா என்ன ?
ஒரு நாள் ஷிவானி தூங்குவதா நினைத்து சிவா அவன் பாட்டியிடம் கண்ணன் மனமாற்றம், முதலில் அவர் செய்தது கோபத்தை தூண்டினாலும் பின்னர் ஷிவானியை முழுதா கொடுத்ததால் தான் சும்மா விட்டேன் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொண்டான்.
இந்த உலகில் எனக்கு வேற எதுவும் வேண்டாம் . என் வனி எனக்கு கிடைத்ததே போதும் என்று சிறு குழந்தை போல சந்தோசம் கொண்டான். அந்த மனநிலையில் அவனிடம் அவன் உயிரை தவிர என்ன கேட்டாலும் கொடுத்து இருப்பான்.. அவன் உயிர் தான் வனிக்கு சொந்தமானதாச்சே ..
அவன் பேசுவதை கேட்க ஷிவானிக்கு ஆச்சிரியம்.. இருந்தாலும் கண்ணன் குணம் அறிந்து நம்ப முடியவில்லை . அவள் அம்மா ,அண்ணன் மூலம் கூட கண்ணன் மனமாற்றம் கேள்விபட்டாள்..
இதற்கு எல்லாம் விலை …என் குழந்தை .. என் நிம்மதி ..இழந்த பொன்னான நாட்கள் ..சந்தோஷ தருணங்கள்..
சிவா அவளிடம் ஒரு வார்த்தை கூட குழந்தை பற்றி கேட்கவே இல்லையே என்ற வருத்தம் வேறு அவளை அரித்துக் கொண்டு இருந்தது ..
ஸ்கேன் ரிப்போர்ட் வந்தவுடன் முதலில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கா என்று தான் பல தடவை பார்த்தாள். எந்த பிரச்சினையும் இல்லை என்றவுடன் தான் இயல்பாக மூச்சுவிட்டாள்.
உடல் நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின பிறகு ஒரு நாள் ஷிவானி கோவிலுக்கு போக வேண்டும் என்று சிவாவை படுத்தி எடுத்தாள். எப்போதும் போல புடவையை கையில் வைத்து அவனை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றாள்..
“பார்க்கிறதில் ஒன்றும் குறைச்சல் இல்லை” என்றதை கேட்டு
“வேற எதில் குறைச்சல்” என்று சண்டைக்கு சென்றாள்..
சும்மாவே மயங்கி இருக்கேன் ..இதில் இப்படி நெருக்கமா வந்தா… மனுஷன் நிலைமை புரியாம படுத்துவதை பாரு .. கொஞ்ச நாளாகவே அவனை சீண்டி வேடிக்கை பார்ப்பதே வேலையாக வைத்து இருக்கிறாள்.
அவள் கெஞ்சலில் உருகினான் ..அவன் புடவை கட்டுவதில் கண்ணாக இருப்பதை கண்டு அவள் கண்ணில் இருந்து கண்ணீர் அவன் மீது பட்டு சிதறியது ..
ஷிவேந்தர் பதறி “ என்ன ஆச்சு ..” அவளை சோதித்த படி “எங்கயாவது வலிக்குதா கண்ணம்மா?”
“என்னை ஒரு நோயாளி போல பார்ப்பதை விடுங்க சிவா .. என்னை ஏன் தவிர்க்கிறீங்க.. என்னால உங்க உதாசீனத்தை தாங்க முடியல” என்று அவன் மார்பின் மீது கட்டி பிடித்து அழுது தீர்த்தாள்.. “எனக்கு சத்தியமா நம்ம குழந்தை பற்றி தெரியாது ..”
“உனக்கு எப்படி .. ச லூசு ,உன்னை போய் தப்பா .. அப்படி எல்லாம் இல்லை எனக்கு தெரியும் டா ..”
“நான் மருத்துவர் சிவா .. ஒரு ரிப்போர்ட் கூட படிக்க முடியாதா என்ன?” சிறு குழந்தை போல “என்னை பிடிக்கவில்லையா இந்தர்” என்றதை கேட்டு வாரி அனைத்துக் கொண்டான் ..மடி மீது இருத்தி “ இந்த தேவதைய பிடிக்காது குருடன் கூட சொல்ல மாட்டான் ..”
“ஆனா நீங்க என்னை தவிர்க்கீறீங்களே?”
அவள் கழுத்து வளைவில் குறுகுறுப்பு மூட்டி “ உன்னை தவிர்க்க முடியாமல் நான் படும் வேதனை எனக்கு தான தெரியும்’ .. அவன் செயலில் உடலில் உள்ள அத்தனை செல்களும் விழித்து எழுந்தது..
“நான் உன்னை …. குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன் குட்டிமா ..நீ சொல்லுவதை நம்பாமல் உங்க அப்பாவை பற்றி பேசியே உன்னை வருந்த விட்டு இருக்கிறேன் டா ….இது போக என் உயிரை காக்க என்னிடம் சொல்லாமல் ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்து இருக்க ..
எனக்காக உங்க அப்பா அம்மாவை பகைத்துக் கொண்டு என் கை பிடித்தாய் . நீ அத்தனை தடவை சொல்லியும் கொஞ்சமாவது நம்பி இருக்க வேண்டாம் . என் மீது உன் உயிரையே வைத்து இருக்கிறாய் ..உன் அன்பிற்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்” என்று அவன் கண்கள் கலங்கியது .
“ உனக்கு கஷ்டத்தையே தான் கொடுத்து இருக்கேன் . எந்நேரம் சண்டை. காதலித்தால் மட்டும் போதாது காதலித்தவளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டாம் .. எது எப்படி இருந்தாலும் , உனக்கு எதாவது என்றால் என் உயிர் என்னிடம் இருக்காது டா.. அது மட்டும் உறுதி. இதற்கிடையில் தேவா ? அதுதான் போட்டு …..” சொன்னவுடன் நாக்கை கடித்துக் கொண்டான் ..
“என்ன சார் ..பிலோவில் வந்திடுச்சா” என்று ஷிவானி நக்கலாக கேட்டவுடன் “உனக்கு…..” என்று வார்த்தை அவனுக்கு திக்கியது .
“எல்லா உண்மையும் அறிவேன் . உங்க மாமனாருடன் சேர்ந்து அவரை போல யோசிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள் போல … நல்ல முன்னேற்றம்”.
“உன்னை அப்படி பார்த்தவுடன் என் உயிர் என்னிடம் இல்லை தெரியுமா” என்று அவளை இறுக்கி அனைத்துக் கொண்டான் .. “நீ பிழைத்துக் கொண்டதால் இதோட விட்டேன் ..இல்லை …”
“அச்சோ கேடி , ரவுடி பயமா இருக்கே” என்று பயந்தது போல அனைத்துக் கொண்டவுடன் “ யாருக்கு? உங்களுக்கா மேடம் ..எல்லாத்தையும் பயப்படுதீட்டு பேசுவது கேளு ..”
“சிவா ! இதில் நீங்க வருத்தப்பட ஒன்றும் இல்லை .. நீங்க வளர்ந்த விதம் வேறு .எல்லாரையும் நல்லவர்களாகவே பார்த்து பழகி திடீர் என்று வேற கோணத்தில் பார்க்க சொன்னா .. நான் அவருடனே வளர்ந்ததால் எனக்கு தெரிந்தது.. உங்களை சொல்லி குற்றம் இல்லை . இவரை பார்த்த பிறகு தான் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதில் உங்க நல்ல மனசு தான் தெரியுது .. நீங்க சொக்க தங்கம் .. உங்க காதல் தான் என்னை மீட்டு வந்து இருக்கு ..
நீங்க ரொம்ப அப்பாவி சிவா ..என்னை பார்த்து கொஞ்சமாவது கத்துக்கோங்க . எங்க அப்பாவை எப்படி எதிர்த்து நின்றேன் . நல்லவரா இருக்கலாம் ..ரொம்ப நல்லவரா இருந்தா தான் தப்பு …”
அப்போதும் அவன் முகம் தெளியாமல் யோசனையில் இருப்பதைக் கண்டு அவன் காதில் கிசுகிசுப்பாக “ என்னை ஏமாத்திக்கிட்டே இருக்க டா .. எப்ப ஹனிமூன் போறோம் ..”
ஷிவேந்தர் சம்மந்தம் இல்லாமல் , “வனி, நம்ம குழந்தை யார் போல இருக்கும் ..உன்னை போலவா ? என்னை போலவா ? உன்னை போல ரௌடியா இருந்தா ரொம்ப கஷ்டம் ஆச்சே..”
நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன சொல்லறான் குழம்பினாள்.
ஷிவேந்தர் பிடிவாதமாக “சொல்லு டா ..”
ஷிவானி கோபமாக அவனை முறைத்து “எங்க ஆயாவை போல ..”
“இல்லை வேண்டாம் . எனக்கு என் ஷிவானி குட்டி போல தான் வேண்டும் .. அறிவு மட்டும் என்னை போல ..”
புகை வண்டி போல மூச்சு விட்டு “என்னை மக்கு என்றா சொல்லறீங்க ? உங்களை ..”
“ நான் எப்போது அப்படி சொன்னேன் தங்கம் .. உனக்கே தெரிந்து இருக்கு பார்த்தாயா ?அதை அப்புறம் டீல் செய்யலாம்…இப்ப சொல்லு ..”
ஹனிமூன் பற்றி முன்பு அவன் பிளான் செய்தது சொன்னதை கேட்டு, “அது எல்லாம் எனக்கு தெரியாது . இன்னும் ஒரு வாரத்தில் அழைத்து போகல நான் படிக்க ஜெர்மனி கிளம்பறேன் ..”
“அடிங்க .. எங்க போற ..பேசின அப்புறம் பாரு .. உன் உயிர் கூட என்னை விட்டு தனியா போக முடியாது, தெரியும்ல .. இங்க பத்திரமா வைத்து இருக்கேன்” என்று இதயத்தை தொட்டு காட்டினான் ..
அவள் இதயத்தை காட்டி “ நீங்க இங்க தான் இருக்கீங்க என்று நான் ப்ரூவ் செய்தாச்சு . நீங்க இருப்பதினால் எத்தனை ஸ்ட்ராங் தெரியுமா..”
“உன் காதலை எண்ணி கர்வமா இருக்கு ஷிவானி” உச்சியில் முத்தம் பதித்தான் ..
“சிவா ,இந்தர்..ஷிவ் ,என் செல்லம் ,என் பட்டு குட்டி ,என் மொட்டு குட்டி .என் சக்கர கட்டி..”
“குட்டிமாக்கு என்ன வேலை ஆகணும் ..”
அவன் கையில் உள்ள புடவையை காட்டி , “கட்டி விடு சொல்லி எத்தனை நேரம் ஆச்சு.. இது கட்டி விட தெரியல, இதில் குழந்தை வேணுமாம் . யாரை போல பட்டிமன்றம் வேற” .
அவள் காதில் கிசுகிசுப்பாக “ குழந்தை வேண்டும் என்றால் புடவை கட்டி விடவா வேண்டும் ..அப்படி இல்லையே ? நல்லா யோசித்து சொல்லு செல்லம் ..கட்டனுமா ..இல்லை ..”
அவன் வாயை அழுந்த மூடி “ பேசாத .பட் பாய் … டர்ட்டி ராஸ்கல்”
“பட் பாய் இருந்திட்டு போறேன் . இத்தனை சொன்ன பிறகு மெயின் பிச்சர் பார்க்காமல் விட போறது இல்லை” என்று அவளை சீண்டி சிவக்க வைத்தான் ..கணவன் கையில் பாவை அவள் மெழுகானாள்..
“சிவா, என் அண்ணாக்கும் , உங்க அக்காக்கும் வாக்கு கொடுத்து இருக்கிறோமே ?”
“மூச்சு ..இன்னும் மூன்று வருஷம் கழித்து தான் வாயை திறக்கனும் ..முதலில் என்னை கவனி …படித்து முடிங்க ..அப்புறம் பார்க்கலாம் ..”
“அப்ப ஜெர்மனி போகட்டா ..”
அச்சோ, பழைய ரெகார்ட் மாதிரி பேசுனதையே பேசி கொள்ளறாலே! இவளை பேசவே விட கூடாது.. “ஏன் டி பிசாசு, உலகில் அங்க மட்டும் தான் கல்லூரி இருக்கா ? இங்கயே உன்னை சேர்த்தாச்சு ..என்னை விட்டு எங்கயும் போக விடமாட்டேன் ..”
முறைத்துக் கொண்டு நிற்கும் அவளை பார்த்து இவள் இப்படி கோபப்படும் அளவிற்கு என்ன சொன்னேன்! ஆஹா பிசாசு சொல்லிட்டேனா ?பிலோவில் வந்திடுச்சே என்று நழுவும் முன் அவனை பிடித்து ஒரு வழி செய்துவிட்டாள்.
சிவா பல முறை கண்ணன் பற்றி பேச வந்து வனி மனநிலையை எண்ணி தவிர்த்தான். ஏற்கனவே அவரை பற்றி பேசி அவளை வருத்தியது போதும் எண்ணம் ..
ஷிவானிக்கு அவர் மீது நல்ல எண்ணம் வர மறுத்தது ..ஹார்ட் அட்டாக் வந்தது என்று கேள்விப்பட்டும் பார்க்க போகவில்லை . கொஞ்சம் காலம் ஆனால் சரியா போகுமோ . அவர் செய்தது எல்லாம் இல்லை அழிக்க மனம் என்ன சிலேட்டா? இல்லை ஒட்டிக் கொள்ள பெவிபாண்டா ? காலம் தான் பதில் சொல்லணும் ..
ஷிவேந்தருக்காக, அவன் ஒன்றும் சொல்லாமலே கேஸ் வாபஸ் வாங்கினாள். அப்போதைக்கு அதுவே பெரிய விஷயமாக அவளுக்கு தோன்றியது ..
கண்ணன் மகன், மகள் ஷேர் தவிர அவரது அனைத்தையும் டிரஸ்ட் பெயரில் எழுதி வைத்தார் .டிரஸ்ட் மூலம் இலவசமாக மாதம் ஐந்து ஆபரேஷன் , மருந்துகள், இலவச சிகிச்சை செய்யணும் முடிவு செய்தார் .. இதை எல்லாம் கேட்ட ஷிவேந்தர் சந்தோசம் அடைந்தான் . வனிக்கு சந்தோஷமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை .
************
ஹனிமூனில் , அவன் அருகில் அழகா துளியில் கொள்ளும் மனைவியின் அழகை ரசித்து, “தூங்கவா வந்தோம் கும்பகர்னி ..எழுந்து என்னை கவனி டி..” என்று குறுகுறுப்பு மூட்டினான்.
“அடபாவி, அரைமணி நேரம் முன்பு வரை உன்னை தான கவனித்து கொண்டு இருந்தேன் .. இப்ப தான கஷ்டப்பட்டு கண் மூடினேன் . ப்ளீஸ் இந்தர் !” போர்வையை இழுத்து போர்த்திய படி கதகதபுக்காக அவனுடன் ஒன்றினாள்.
அவள் காதருகே “அது உன் கனவிலே இருக்கும் செல்ல குட்டி .”.
“அப்படியா ? நிஜமா கனவா ? இப்படியும் கனவு வருமா” என்று அவள் முகம் செவ்வரளி நிறம் கொண்டது . அதை ரசித்து , “எதுக்கு டி இப்ப முழிக்கிறா.. கனவா? நனவா டெஸ்ட் செய்திடலாமா ?”
அவன் குறும்பை ரசித்து , “நீ சரியான வில்லன் டா .. நான் எப்படி டா உன்னை காதலித்தேன்” என்று அலுத்துக் கொண்ட போது சிவா மிரட்டும் குரலில் “படத்தில் வில்லன் என்ன செய்வான் தெரியுமா ? எனக்கும் வில்லனா மாறி பார்க்கணும் ஆசை. எப்படி?” என்று கண்ணடித்தவுடன்
“அச்சோ , நீங்க உங்களை காதல் மன்னன் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? எனக்கு தான தெரியும் இந்த முரடனை பற்றி” என்று சிரிப்பதை ஆசையாக மனதில் நிறைத்துக் கொண்டான் .
அவன் கள்ள பார்வையை கண்டு “நான் தோத்து போயிட்டேன் பாஸ் ..உங்க ரொமாண்டிக் பார்வை எல்லாம் எனக்கு பார்க்க வராது ..”
“உனக்கா வராது ..உன்னுடைய துறுதுறு கண்கள் தான் என்ன காதல் செய்ய தூண்டுச்சு ..அதுக்காக” என்று கண்களில் முத்தம் கொடுத்தான் ..
“இந்த அழகிய இதழ்கள் தான் என்னை கவிதை எழுத தூண்டியது . அதற்கு ஒரு முத்தம் .இந்த வாய் தான் …..”
“வர்ணித்து முடிங்க நான் தூங்கி எழுந்துக்கிறேன் ..”
“நான் உன்னை தூங்க விட்டால் தான தூங்குவீங்க மேடம் …சரி, உன்னை முதல் முதலில் எப்ப பார்த்தேன் சொல்லு ..”
ஷிவானி, என் கல்லூரி வாசலில் ..சரியான தேதி, நேரம் ,அவன் போட்டு இருந்த சட்டை நிறம், என்ன வாட்ச், அவன் பேசிய வசனம் எல்லாம் துல்லியமாக சொன்னாள். சும்மா கிண்டல் செய்தது இவள் மனதில் இப்படி பதிந்து இருப்பதை எண்ணி சந்தோசம் அடைந்தான்.
“அது நீங்க என்னை பார்த்த நாள் குட்டிமா ..நான் உங்களை பார்த்த நாளை சொல்லுங்க ..”
“ஹே, அதுக்கு முன்பே பார்த்து இருக்கீங்களா?” என்று ஆச்சரியம் அடைந்தாள் .. “உங்க பாட்டியுடன் கோவிலிலே , எங்க மாமா ஊரிலே” என்றவுடன் “அப்போதேவா ..நான் அப்போது 12 தான படித்துக் கொண்டு இருந்திருப்பேன் ..”
அவள் போட்டு இருந்த பாவாடை, தாவணி நிறம் சொன்னவுடன் நம்ப முடியாமல் “அப்போதே லவ்வா ?”
“லவ் என்று சொல்ல முடியாது.. ஆனா உன் முகம் என் மனதில் கல்வெட்டா பதிவாகிடுச்சு” என்று அந்த நாளை எண்ணி கண்ணை மூடினான் … “சூப்பர் சிவா ..எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று முத்த மழை பொழிந்தாள்.
“நம்ம நேசிப்பவர்களை விட, நாம நேசிக்கபடுவதை கேட்க எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா சிவா .. .”
சிவா வருத்தமாக “உனக்கு அப்படி ! ஆனா எனக்கு ..வந்த சூப்பர் பிகர் எல்லாம் விட்டு இந்த சப்ப பிகருக்காக உருகி இருக்கேனே கவலை அரிக்குது ! என்ன கொடுமை சிவா ..”
“அடப்பாவி ! நேற்று நைட் கூட…” என்று அவன் காதில் ரகசியம் பேசி அவனை நெலியா வைத்தாள்..
“போடா பேசியே அறுக்கிற ? தூக்கம் வருது..”
“ஆஹா சிக்னல் கிடைச்சிடுச்சே” என்று கத்தினதை பார்த்து தலையில் அடித்துக் கொள்வதை தவிர அப்போதைக்கு அவளால் வேற என்ன செய்ய முடியும்.
அவள் மார்பின் மீது சாயிந்து ‘எனக்கென துடிக்கும் உன் இதயம்’ என்று அவன் கண்ணில் கண்ணீர் .. சிவாக்கு என்ன சமாதானம் சொன்னாலும் அந்த நாளில் தாக்கம் இருக்க தான் செய்தது .. அவன் காதல் மனைவி அவன் நிலையை உணர்ந்து
“நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்..
காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்பொழுதும்
காதலினாலே இப்பொழுதும் …….
நெஞ்ஜோரமா துளிர்த்த காதல் இருவரின் இதயத்தையும் நிறைத்தது . அவர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் . அன்ன பறவை போல என்றும் பிரியாமல் , சந்தோஷமாக இருக்க வாழ்த்தி விடை பெறுவோம் ..
முற்றும் …………..