21.2:
கண்ணன் காரியரிதரிசி பிலோ ஆன்ட்டி மூலம் உங்க அப்பா கொஞ்ச நாளா கோபமா இருக்கார் .. யார் மீது எதுக்கு என்று தெரியவில்லை..நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு பேபி !
அவள் அப்பாவால் ஷிவேந்தருக்கு ஏதோ ஆபத்து வருமோ ! கண்டிப்பா அப்படி தான் என்று உறுதியாக நம்பினாள். நான் என் சிவாவை விட்டு பிரிந்துவிட்டால்? இன்னும் ஒரு மாதத்தில் மருத்துவ படிப்பு தொடங்க உள்ளது என்று லெட்டெர் வந்தது.. வீட்டில் நடந்த பிரச்சினையில் அவள் படிப்பு விஷயத்தை அவனிடம் சொல்லவே இல்லை ..
சிவாவிடம் எப்படி பணம் கேட்க … சிவா ஒத்துக் கொள்வானா?
ஷிவானி பல நாள் யோசித்து வைத்ததை மணிவாசகத்திடம் “மேல்படிப்பு படிக்கலாம் இருக்கேன்” என்றவுடன் “அட, சந்தோஷமான விஷயம் கண்ணா ! ரொம்ப நல்லது ..நானே உன்னிடம் இதை பற்றி கேட்கலாம் இருந்தேன் .சென்னை தான ! எந்த கல்லூரி ! எத்தனை செலவு ஆனாலும் கவலை இல்லை ..இந்த ரெண்டு மாத காலமாகவே நீ வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் உறுத்தலாகவே தான் இருந்தது .. சிவா என்ன சொல்லறான்” ..
“அவர் என்ன சொல்ல மாமா ! அவருக்கும் நான் மேல் படிப்பு படிக்கணும் தான் ஆசை ..”
உடனே மனசாட்சி அவனுக்கு நீ மேலே படிக்கணும் ஆசை, ஆனா வெளிநாட்டுக்கு சென்று படிக்க சரி சொல்வானா ? அதுவும் இப்போது உன்னை விடுவானா?
*************
அடுத்த நாள் ஜீவா ,நந்தினி நிச்சயம் ..ஊரே கூடி சிறப்பா செய்தார்கள் .ஷிவானி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவள் தங்கை , நண்பனை மணக்க இருப்பதை எண்ணி சந்தோசம் அடைந்தாள்.. ஷிவானி பளிரிடும் அழகில் எப்போதும் போல ஷிவேந்தர் அவனை தொலைத்தான் .கிட்ட வராளா பாரு ! ராட்ஷசி , தள்ளி நின்று கொள்ளறாலே !
எல்லார் முன்னிலையில் அவனை ஒன்றும் சொல்ல மாட்டா என்ற தைரியத்தில் இன்றோடு எங்க கல்யாணம் ஆகி மூன்று மாதம் ஆச்சு ! அதை கொண்டாட என்று வனி கைக்கு பிளாட்டினம் பிரேஸ்லெட் அணிவித்தான் .
அவனை முறைக்க முடியாமல் சிரித்து வைத்தாள். “வனி செல்லம், இப்படி சிரிப்பதற்கு சிரிக்காமலே இருக்கலாம் ,இந்த மாமா பயந்துட்டேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் . அதை கண்ட அனைவரும் ஒ போட்டனர்..
கண்ணன், விழாக்கு லேட்டாக தான் வந்தார் .அவர் இருக்கும் பக்கம் கூட ஷிவானி திரும்பவில்லை .அவள் அன்னை தான் “எப்படி டா இருக்க?” என்று கட்டிக் கொண்டாள். பல நாள் கழித்து பார்த்து சந்தோஷத்தில் அம்மா என்று கண்ணில் நீருடன் அனைத்துக் கொண்டாள்.. என்ன தான் இருந்தாலும் தாய் சேய் உறவு இல்லை என்றாகிவிடுமா ? “ஒரு போன் கூட செய்யவில்லையே கண்ணா ! நான் அழைத்தாலும் எடுப்பதில்லை” என்று நிர்மலா வருத்தப்படுவதை கண்டு
“என்ன அம்மா சின்ன பிள்ளை தனமா ! மிஸ்டர் கண்ணன் எதற்கு என் மனைவியை அழுக வைத்தாய் என்று சண்டை போட போறாரு ! ஆள் வைத்து கூட அடிக்க தயங்கமாட்டார் . பொல்லாதவர்” என்று வருத்தமாக கூறியவுடன் வனி ,என்ன ஆச்சு ..நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அன்னையிடம் கூறினாள்..
கண்ணன் மோசமானவர் தெரியும் , அதற்கு இந்த அளவுக்கு போவார் என்று நிர்மலா இப்போது தான் அறிந்து கொண்டார் .கொஞ்சம் கூட விவரம் இல்லாத மனுஷனா இருக்காரே . இவர் இப்படி செய்தால் ? மகள் வாழ்கையை எண்ணி கொஞ்சம் பயந்து தான் போனார் . சொத்து கொடுக்க வேண்டாம் ! எப்படி மகள் இல்லை சொல்லலாம் என்று கோபமானார்
கண்ணனால் அவளுக்கும், சிவாக்கும் சண்டை என்று ஷிவானி சொல்லவில்லை .அவர்கள் பர்சனல் விஷயத்தில் அன்னையா இருந்தாலும் தலையிடக்கூடாது என்ற பாலிசி கொண்டவள் .
கொஞ்ச காலமாகவே நிர்மலா ஷிவானியை ரொம்ப மிஸ் செய்தாள். வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆசையா பேசவில்லை என்றாலும் எந்நேரம் சண்டை போட்டுக் கொண்டாவது இருப்பாள் … மகளை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளவில்லை என்ற மனவருத்தம் நாளுக்கு நாள் அதிகமாகியது ..
நிர்மலா, அவள் மருமகள் தாராக்கு சின்ன தலை வலி என்றாலும் அவள் பிறந்த வீட்டில் இருந்து அனைவரும் பதறிக் கொண்டு வருவதை பார்த்து ஏன் நாங்க இப்படி இல்லை ..ஷிவானியிடம் ஏன் இத்தனை அன்பு இல்லை , அன்பு இல்லையா, இல்லை அதை வெளிபடுத்த தெரியவில்லையா ?
எங்கே தவறினோம்.. மருமகள் வீடும் பணக்கார வீடு தான் . அவர்கள் பணம் ,புகழ் மட்டுமே வாழ்க்கை என்று இருக்கவில்லையே ! அதையும் தாண்டி அன்பு , பாசம் ,அக்கறை, அவர்கள் குடும்பம் என்று விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்களே !
ஷிவானி சிறு வயதில் இருந்தே அந்த சூழலை தான என்னிடம் கேட்டாள் ? இப்போது இருக்கும் பணத்தால் இழந்த சந்தோஷத்தை வாங்க முடியுமா என்ற மனசாட்சி கேள்வி கேட்டு குடைந்தது .. அவள் கேட்காமலே எதையும் செய்ய ஷிவேந்தர் காத்துக் கொண்டு இருப்பது அப்போது அவள் கண்ணில் பட்டது .. மகள் அவளுடன் இருந்தவரை இப்படி தாங்கவில்லையே, ஒரு விதத்தில் பொறாமையும் ,சிவா மருமகனா அமைய ஒரு விதத்தில் நிம்மதியும் அடைந்தாள்..
“வனி கண்ணா , இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க ..என் கண்ணே பட்டிடும் .என் பேரன் உன்னை நல்லா பார்துக்கிறானா” என்று கோமதி அவளை ஆராய்ச்சி செய்து கொண்டே அவள் அருகில் வந்தாள். இப்ப கூட பார்த்திட்டு தான இருக்கான் என்று முனங்கியது அவள் பாட்டிக்கு தெளிவா கேட்டது .ஷிவானி மீது பார்வையை அகற்றாமல் ஷிவேந்தர் கண்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தான் .
அதை பார்க்க அவள் பாட்டி கோமதிக்கே ஆச்சரியம் . மாப்பிள்ளை அப்பா மணிவாசகம் சம்மந்தி , இவன் பெத்த பெண் எல்லாம் இவனுக்கு பகையாளி. மருமகன் மட்டும் உறவா ..எப்படியோ சேர்ந்தால் சரி என்று கோமதி பெருமூச்சுவிட்டாள்.
ஷிவானி மனதில், அவள் அப்பா என்ன திட்டம் போடுகிறார் ..சிவாவிடம் இருந்து என்னை பிரிக்கவா ? இவர் எதுக்கு சிவாவிடம் பேச வேண்டும் ..
ஷிவானி ,நந்தினிக்கும் ஜீவாக்கும் நடுவில் சென்று “என்ன ஜீவா, எங்க நந்தினி என்ன சொல்லறாங்க !” நந்தினி அருகில் கிறங்கி இருந்தவன் “இப்பவே கடத்திகிட்டு போய்டலாமா இருக்கு ஷிவானி ! உங்க பாட்டியிடம் சொல்லி இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை முடிக்க சொல்லு ! ப்ளீஸ் ..அப்படி செய்தால் ஒரு டப்பா ferro rocher …”
“அட கஞ்ச பயலே ! ஏதோ செவென் ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் சொன்னால் கூட பரவாயில்லை.. நீ பாவம் நந்தினி ..
கல்யாணமா ? எனக்கா என்று அதிர்ந்த அந்த ஜீவா எங்கே? எங்கே” என்று கேலி செய்து தேடினாள். புடவையை தூக்கி பிடித்த படி “நீ விடும் ஜொள்ளில் கீழே கால் வைக்க முடியவில்லை ஜீவா” என்று கிண்டல் செய்தவுடன்
அவள் காதருகே , “சிவா சார் போல என்னால் நந்தினியை காதலிக்க முடியுமா தெரியல வனி.. அவர் கண்ணை பாரேன் ! உன் காதல் கணவர் உருகும் உருகளில் ..நாம சிரித்து பேசுவதை பார்த்து சக்தி இருந்தா என்னை எரித்திடுவார் போல ! பொறாமை ஷிவானி ! இப்படி பட்ட கணவர் கிடைக்க கொடுத்து வெச்சு இருக்கணும் ..யு are சோ லக்கி ..”
ஷிவானியும் “எஸ் ஜீவா ! சிவா அன்பு கிடைக்க உண்மையா நான் கொடுத்து வைத்து இருக்கணும்” என்று உணர்ந்து கூறினாள்.
ஷிவானி தயக்கமாக , “ஜீவா ,சிவா பேசியதுக்கு சாரி .. அவர் என் மீது ..”
“உன் மீது உள்ள அன்பால் தான் சொல்லி இருக்கிறார் தெரியும் ஷிவானி . அவர் தான் தினமும் மூன்று வேலையும் அழைத்து சாரி கேட்கிறார் என்றால் நீயுமா ? விடு வனி…”
அவர்கள் சிரிச்சு பேசுவதை பார்த்த ஷிவேந்தர் நான் இருக்க அவனிடம் அப்படி என்ன சிரிச்சு பேச்சு ? ரகசியம் வேறு ! சண்டை போட சொல்லு ,முதல் ஆளா என்னிடம் வருவா .. மயக்கும் மாய மோகினி .. கோபமும் சண்டையும் உரிமையுள்ள இடத்தில் தான் தோன்றும் என்று யோசிக்க மறந்தான் . .
சிவா ,கண்ணனுடன் ரொம்ப நேரம் பேசுவதை கண்டு ஷிவானி கொதி நிலைக்கு சென்றாள். எப்படி என் புருஷனிடம் பேசலாம் .இந்த ஆளுக்கு நான் வேண்டாம் ,என் புருஷன் வேண்டுமா? இவனிடம் இருந்து என்னை பிரித்து அந்த தேவாக்கு கட்டி வைக்கிறேன் சவால் விட்டு இருக்காரு ! அது தெரியாமல் இந்த லூசு அவரிடம் வழிவதை பாரு ! இந்த சிவா நான் சொன்னால் காது கொடுத்து கேட்டால் தானே ! எப்படியோ போகட்டும் என்று அவளால் விடவும் முடியவில்லை ..
ஷிவானியை சுற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டு இருந்ததால் அவர் பேசின பாதி அவன் காதில் விழவே இல்லை..
“கண்ணனும் கேஸ் வேண்டாம் சொல்லுங்க சிவா. நீங்க சொன்னால் கேட்பா !
.கோபத்தில் நான் எதோ செய்துவிட்டேன் . நான் மகள் இல்லை சொன்னது தப்பு தான் .என்னை மன்னிச்சிடுங்க . என் மனநிலையை கொஞ்சம் யோசித்து பாருங்க !” என்று எப்போதும் போல் நாடகம் ஆடினார் ..
இந்த ஆள் செய்த வேளைக்கு தான் எங்களுக்குள் பிரச்சினை என்று சிவா மனதில் குமுறிக் கொண்டு இருந்தான்.
ஷிவானி அவன் அருகிலே சுத்தி சுத்தி வந்தாள்.
ஷிவேந்தர் , ஆஹா ரொம்ப நாள் கழித்து மேடம் காத்து என் பக்கம் வீசுதே ! கண்ணனுடன் பேசுவதால் தான் என்று நன்கு அறிவான் .. நன்றி மாமா என்று வெகு மும்மரமாக பேசிக் கொண்டு இருந்தான் .
சிவா நண்பன் ஷகீம், கண்ணனின் வலது கை போல என்று தெரிந்து மிகவும் சந்தோசம் கொண்டான் .
“ இந்தர், எனக்கு பசிக்குது ! சாப்பிட போகலாமா” என்று அவன் கையேடு கை கோர்த்துக் கொண்டு அழைத்தாள்.. கண்ணன் முறைப்பை கண்டு கொள்ளாமல் “போகலாமா?” என்று மறுபடியும் கேட்டாள்.
கண்ணன் மனதில் , முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கும் போது இப்படி குறுக்கே இம்சை செய்யறாலே ! எப்படியாவது சிவா மனதை கரைத்திடலாம் ,என் பக்கம் இழுத்திடலாம் பார்த்தால் விடறாளா என்ற கோபமானார்
“ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது என்ன மேனர்ஸ் இல்லாமல்?” என்று கண்ணன் அடி குரலில் சீறினார் .
“நான் உங்களிடம் பேசவில்லை . என் கணவரை தான் அழைக்கிறேன் ..போலாமா இந்தர் ?” இப்ப மட்டும் நீ வரல, தொலைந்தாய் என்ற செய்தி அவள் கண்ணில் தெரிந்தது..
அவள் கண்ணில் என்ன கண்டானோ , “ நான் வரேன் மாமா” என்று விடைபெற்று அவளை அணைத்த படி பக்கத்தில் இருந்த அறைக்குள் நழுவினான் .
கதவை சாத்திய படி “என்ன டி அவசரம் .வீட்டில் அறைக்குள்ளே வருவது இல்லை .இங்க எல்லார் முன்பு இபப்டி அவசரபடுத்தினால்? மனுஷன் என்ன செய்வேன்” என்று அப்படியே மாற்றி பேசினான் .
“அடபாவி ! பேசுவதை பாரு ! டர்ட்டி ராஸ்கல்” கையால் நாலு கொடுத்தாள்.
“ஹே செல்லம் , இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க .. மயக்கிற டி !” அடிக்கும் கைகளை தடுத்து, அவள் இடையை வளைத்து பிடித்து இதழ்களை சிறை செய்தான் . அவளும் அவனை காற்று கூட புக முடியாத படி அனைத்துக் கொண்டாள். அவள் கோபம் அத்தனையும் காணாமல் பறந்தது .அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்தாள்..
அறை வாசலில் , ஆள் அரவம் கேட்டு அவசரமாக விலகினாள். “மோசம் செய்யாத டி ! எனக்கு வேண்டும்” என்று சிறு குழந்தையா சிணுங்க , அவனை முறைக்க முடியாமல் உங்களை என்று முதுகில் ரெண்டு வைத்தாள். “ இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பது போல ! நீயே வழிய சென்று மாட்டிக் கொண்டாயே வனி” என்று போலியாக வருத்தப்பட்டு அவன் தோளில் சாயிந்து கொண்டாள்.
அவள் கசங்கின புடவையை சிவா சரி செய்த படி , “குட்டி பாப்பாவிடம் நல்ல முன்னேற்றம் ..”
ஷிவானி யோசனையாக “யாரை சொல்லற சிவா” ..
“என் பெண்டாட்டியை தான் . அவங்களே புடவை எல்லாம் கட்டி அசத்தறாங்க …” ச்சே போடா என்று வெட்கத்தால் குங்குமமாக சிவந்தாள். அவன் எதிர் பாராத நேரத்தில் அவன் கழுத்தை வளைத்து, அவன் இதழை சிறை செய்தாள்..சிவாக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை…எப்போதும் இந்த மாதிரி எல்லாம் நான் தான செய்வேன் .. இன்று உல்டாவா இருக்கே ..
“இது நீங்க கொடுத்த இந்த ப்ரசெலேட் பரிசிற்கு ..” அதற்கு பிறகு அவன் அவளை விட்டு துளி கூட நகரவில்லை .
*********
ஷிவானி அறையில் ,பாட்டி ! நீங்க செய்தது சரியே இல்லை ..என் மீது அப்படி என்ன நம்பிக்கை இல்லாமல் என்று கோபமாக கோமதியிடம் கத்திக் கொண்டு இருந்தாள்.
அந்த வழியாக சென்ற ஷிவேந்தர் அவள் குரலை கேட்டு இவளுக்கு யாருடனாவது சண்டை போடவில்லை என்றால் மண்டை வெடித்திடுமா என்ன ? சிரித்துக் கொண்டான் ..
வனியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று பக்கத்துக்கு அறை கதவு தாழ்ப்பாள் எல்லாம் கழட்டி அவள் கோப குரலுக்கு காத்துக்கொண்டு இருந்தான் ..
அவன் நினைத்தது போலவே எண்ணி ரெண்டாவது நமிடத்தில், “உங்க மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கீங்க ..ஏன் இப்படி செய்யறீங்க ..ஏற்கனவே ரெண்டு நாளா AC வேலை செய்யவில்லை .சுத்தமா தூங்கவில்லை .இப்ப தாழையும் கழட்டிவிட்டால்?????”
உள்ளுக்குள் ரெண்டு நாள் முன்பே வருவா நினைத்தேன், கடன்காரி அசர கூட இல்லை ..
“என்ன முழிக்கிற ? பதில் சொல்லு” ஷிவேந்தர் சுத்தி முற்றியும் தேடினவுடன்
“என்ன?”
“சின்ன குழந்தை எதாவது இருக்க தேடினேன் ..”
“உங்களை தான் கேட்டேன் ..நீங்க செய்ததுக்கு இந்த மரியாதை போதும் …”
இவ மட்டும் அடங்கவே மாட்டா திட்டி “AC ரிமோட் எடுத்து கொஞ்சம் TEMP அட்ஜஸ்ட் செய் டா ! குளிருது” என்று மேலும் கடுபேற்றினான் ..
“நான் மட்டும் கஷ்டப்பட, நீங்க இங்க சுகமா தூங்கலாம் நினைத்தால்? நான் இனி இங்க தான் படுப்பேன்” என்று வீம்பாக கட்டிலில் படுத்துக் கொண்டாள்..
நான் வேண்டாம் சொன்னது போல குத்திக்கிறாலே!
மூன்று வார காலமாக ஷிவேந்தர் என்ன சொல்லியும் பேசாத வனி, அவளாக சிவாவிடம் “எனக்கு ஒரு உதவி வேண்டும் இந்தர்..”
“செய் என்றால் செய்திட போறேன் ! உதவி என்ன பெரிய பேச்சு எல்லாம்” என்று அவளை அருகில் இழுத்து, அணைத்து கொண்டான்.. “கிறங்கடிக்கிற செல்லம்” என்று அவளை மேலும் இறுக்கினான். அவன் அணைப்பில் அவளை தொலைத்தாள். அவ ஏதோ பேச வருவதை கண்டு “வனி செல்லம், ப்ளீஸ் ..எனக்காக .. கொஞ்ச நேரம் எதையும் பேசாத” என்று அவள் இதழ்களை அவன் இதழ் கொண்டு மூடினான் . எத்தனை நேரம் நீண்டதோ “மூச்சு முட்டுது டா ..முரட்டு பயலே” தள்ளிவிட்டாள். பல நாள் கழித்து அவன் சொர்க்கம் அவனிடம் வந்த சந்தோஷத்தில் நிம்மதியாக உணர்ந்தான்
ஷிவானி அங்கேயே இருந்தால் எதையாவது யோசித்துக் குழப்பிக் கொண்டே இருப்பாள் என்று அவர்கள் ஹனிமூன் செல்ல ஏற்பாடு செய்தான் . இவளை பத்து நாளைக்காகவாது நாடு கடத்தணும் என்று சந்தோஷத்தில் ஷிவானியிடம் “வனி, நான் ஒரு சந்தோஷ விஷயம் சொல்லலாம் இருந்தேன்” .
“நானும் உங்களிடம் ஒன்று சொல்லணும் இருந்தேன் சிவா… உங்களால்,நீங்க செய்த வேலையால் இங்க வந்தேன் நினைக்க வேண்டாம் .நானே வரலாம் இருந்தேன்” .
“வீரப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை டி .. என்ன சொல்ல வந்தீங்க?”
என்று வினவியவுடன் , “நான் மேல் படிப்பு படிக்க போகலாம் இருக்கேன் .. இங்க இருந்து வெட்டியா, தண்ட சோரா பொழுதை போக்க விரும்பல” என்று கண்ணில் துளிர்த்த நீரை அவனிடம் கட்டாமல் மறைத்தாள்.
அவன் தோளில் ஈரத்தை உணர்ந்து, அவள் முகத்தை நிமிர்த்தி “உன்னை வருந்த வைக்கணும் சொல்லவில்லை டா , நீ படித்த படிப்பை உபயோகமாக செலவு செய்யணும், உங்க அப்பா மீது கோபம் கொண்டு உன் திறமையை வீண் செய்கிறாய் என்று கோபத்தில் தான் அப்படி சொன்னேன் கண்ணாம்மா” கெஞ்சினான் ….
“என் பாட்டி எனக்கு கொடுத்த வங்கி அக்கௌன்ட் ! நீங்க கையெழுத்து போட்டால் தான் பணம் எடுக்க முடியும் . அப்படி ஏற்பாடு” என்று பல்லை கடித்தாள்.
“அது எதுக்கு எடுக்கற? என்னிடம் உரிமையா பணம் வேண்டும் கேட்க வேண்டியது தான ?”
இவனிடம் எத்தனை என்று வாங்க ..யுரோவில் செலவு செய்யணும் என்றால் ?
“இல்ல இந்தர் . அது சரிபட்டு வராது .. நீங்க இந்த செக் மட்டும் கையெழுத்து போடுங்க போதும் ..” அவன் மறுப்பாக “அது வேண்டாம் ! எனக்காக ப்ளீஸ்” என்று வற்புறுத்தி “எத்தனை வேண்டும் என்றாலும் கேளு கண்ணம்மா”, அவன் கையெழுத்திட்ட செக் புக் கொடுத்தான் ..
பிடிவாதமாக இருக்கும் சிவாவிடம், எப்படியும் இவனிடம் இந்த பணத்தை திரும்ப கொடுத்திடனும் என்ற முடிவில் வாங்கினாள்.
இந்த பிரிவு நிரந்தரமானதா ? இல்லை தற்காலிகமா ?
பிலோ ஆன்ட்டி மட்டும் இல்லாமல் , detective agent கூட கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையாக இருக்கும் படி சொன்னாங்களே..
சிவாக்கு எதுவும் ஆகா கூடாது .. இங்க இருந்து சீக்கிரம் கிளம்பிடனும் .. அவள் அப்பாவை பற்றி இவனிடம் சொன்னால் காது கொடுத்து கேட்டால் தானே! பேசி பேசி சண்டை வருவது தான் மிச்சம் ..எதற்கும் ஜீவா சொன்னது போல போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் முடிவு செய்தாள் ..
சிவாவை பிரியாமல் அங்கேயே இருக்க முடியா ??? என்ன செய்தால் அவள் அப்பா கோபம் போகும் ?எதாவது வழி?
நடக்காத ஒன்றை சொன்னால் எப்படி அவளால் செய்ய முடியும். இவர் தான வரி கட்டாமல் ஏமாத்தினது. அதற்காக தான இடத்தை விற்றேன்.. அது இப்போது வேண்டும் என்றால்? அது மட்டுமா ?அந்த பொருக்கி தேவா கூட மறு கல்யாணம் ?அவன் தான் சொன்னால் என்றால் இவரும்? ச அவள் உடல் கூசியது ..ஷிவாக்காக அவள் உயிரை கூட கொடுத்திடுவாள் ..
பிரிவு என்றவுடன் எழும் வலியை மறைத்து இது தற்காலிக பிரிவு, நிரந்தரம் இல்லை . அவள் படிக்க போகும் இந்த ரெண்டு வருடத்தில் எதாவது நடந்து அவள் அப்பா திருந்தி விடுவார் நம்பினாள். இந்த படிப்பே வேண்டாம் சொன்னவளுக்கு இந்த படிப்பை காரணம் காட்டி உயிரா நேசிக்கும் கணவரை பிரிகிறோம் என்று விரக்தி புன்னகை பூத்தாள்.
அவளையே இமைக்காமல் , அவள் முக உணர்ச்சிகளை படித்துக் கொண்டு இருந்த சிவா அவள் கண்களில் ஊடுருவி “ இந்த சின்ன மண்டைக்குள் அப்படி என்ன யோசனை ..என்னிடம் சொல்லலாமே கண்ணம்மா ..”
அவள் கண்ணில் வலியை கண்டு “என்ன டா குட்டிமா” அனைத்துக் கொண்டான் .அந்த அணைப்பில் காதல் இல்லை , காமம் இல்லை. எதா இருந்தாலும் நான் இருக்கிறேன் உன்னை காக்க, உனக்காக என்று சொல்லியது .
“படிக்க போறே என்று எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா ? வனி , இப்பவும் சொல்லறேன் உனக்கு பிடித்ததை செய் ! இதிலே படிக்கணும் கட்டாயம் இல்லை டா .. உனக்கு இஷ்டம் இருக்கும் மீடியாவில் மேற்படிப்பு தொடரு .நான் சபோர்ட் செய்யறேன் ..”
இல்லை சிவா , படித்ததிலே உருப்படியா எத்தனையோ செய்யலாம் ..
அவனை விட்டு அவன் மனைவி தனியா பக்கத்து அறையில் கூட இருக்க பொருக்க முடியாதவன் , அவள் கைகளை அழுந்த பிடித்து “ வனி, என்னை விட்டு எங்கேயும் போக கூடாது .. சண்டை போட்டாலும் இங்க இருந்தே போடு கண்ணம்மா” என்று குரல் கமறியது .. அவள் அதிர்ந்த முகத்தை கண்டு எதுக்கு “இந்த ரியாக்ஷன் குட்டி …உன் இஷ்டம் இல்லாமல் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன் இது உறுதி …”
“ பார்க்க தான போறேன்” என்று சிரித்துவிட்டாள்.. “இப்படி எல்லாம் சிரித்தால் நான் பொறுப்பு ஆகா முடியாது நியாபகம் வெச்சுக்கோ”..
“எனக்கு கார்டியன் உங்க பேரை தான் போட்டு இருக்கேன் .”.
அவள் என்ன படிக்க போற என்று கேட்ட ஷிவேந்தர் எங்கே என்று கேட்க தவறினான் . சென்னையில் அவள் படித்த கல்லூரியில் தான் மேல்படிப்பு என்று நம்பினான்.
உறங்கும் போது கூட கவலையா இருக்கும் அவள் முகத்தை கண்டு, ஒரு வேலை ஷவானி சொல்வது போல நடக்கும் பிரச்சினை எல்லாத்துக்கும் அவள் அப்பா தான் காரணமா இருப்பாரோ என்று சந்தேகம் துளிர் விட தொடங்கியது ..
இதை எப்படி அறிய ? எங்கயோ தப்பு செய்யறேனோ?
ஆதி சொன்னது ..
அது எந்த அப்பாவா இருந்தாலும் அந்த வயதில் பெண் பின்னால் அலையும் பையனை மிரட்ட தான் செய்வார் . அதை வைத்து கண்ணன் மோசமானவர் சொல்ல முடியாதே ! என்று அவனுக்குள் வாதாடினான்