21.1:
ஷிவானி அவன் கண்ணிலே சிக்காமல் ஆட்டம் காட்ட ,ஷிவேந்தருக்கு தான் என்ன வாழ்க்கை என்று ஆனது.. பிடிவாதம் பிடிக்காமல் சொன்னதை கேட்டால் தேவலையே என்று வருந்தினான்.
அன்று சீக்கிரமே மருத்துவமனையில் வேலை முடித்து வந்தவுடன் ஷிவேந்தர் அவன் மனையாளை தேடினான் . வீட்டில் எங்கும் அவளை காணவில்லை .. சிவா பேசவில்லை என்றாலும் அவன் பின்னாலே சுற்றி எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள்.. சிவா கோபமாக இருந்தாலும் அவ அருகாமையை ரசித்தான்.
தோட்டத்தில் பக்கத்துக்கு வீட்டு சுட்டீஸ் கவி ,நவீன் ,வினீத்துடன் செடிக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி பேசிக் கொண்டு இருந்தாள். சுட்டீசுடன் கதை பேசும் அழகை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டு இருந்தான் . ஷிவேந்தர் தண்ணீர் குழாய் மீது காலை வைத்து அழுத்தியதால் பைப்பில் தண்ணீர் வரவில்லை .சிவா அதை கவனிக்கவில்லை .
அவள் முகத்தருகே வைத்து என்ன என்று பார்த்த போது தான் ஏன் தண்ணீர் இல்லையா? கவி இதை பிடி ! நான் பார்க்கிறேன்.
அவளை பார்த்துக் கொண்டு இருந்த ஷிவேந்தர் , பக்கத்து பைப்பில் தண்ணீர் வருதே எப்படி என்று காலை எடுத்தவுடன் ஷிவானி முகத்தில் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டு அடித்தது ..குட்டீஸ் கையில் பைப் இருந்ததால் ‘தண்ணீர் வந்திடுச்சு’ சத்தம் வந்ததே தவிர அவள் மீது இருந்த பைபை அகற்றவில்லை ..
ஷிவானி தொப்பலாக நனைந்து இருந்தாள். அவர்கள் மீதும் தண்ணீர் பீச்சி விளையாட ஆரம்பித்தாள்.
குழந்தை போல குதுகலிக்கும் அவள் மீது இருந்து கண்ணை பிரித்து எடுக்க முடியாமல் திணறினான் .இது எல்லாம் நல்லா தான் இருக்கு ..என் பேச்சை மட்டும் கேட்டால் நல்லா இருக்குமே என்று யோசித்து நின்று கொண்டு இருந்த சிவா மீதும் தண்ணீர் அடித்தாள்.
திடீர் தாக்குதலால் திணறினான் . ‘உன்னை’ என்று அவளை துரத்தி சிறைபிடித்தான் . ‘அங்கிள் ,அக்காவை விடாதீங்க . பனிஷ் செய்யலாம் ..எங்களை பார்த்து எங்க மம்மி திட்ட போறாங்க’ .
இதமான காற்று வீச ஷிவானி ஈர உடல் நடுங்க ஆரம்பித்தது ..அதை உணர்ந்து அவளை மேலும் இறுக்கி பிடித்து சுட்டீசிடம் , ‘என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம் நீங்களே சொல்லுங்க’ ..
‘கவி’ என்று அவள் அன்னை குரல் கேட்கவே ‘நல்ல பனிஷ்மெண்ட் நாளைக்கு வந்து சொல்றோம் அங்கிள் ..பை அக்கா’ என்று சிட்டாக நழுவினார்கள் .
‘ எனக்கு தெரியும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று! உங்க அக்காக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு. அதை திறக்காத படி பனிஷ் செய்திடலாமா ?’ அவள் காது மடல்களில் முத்த ஊர்வலத்தை தொடர்ந்தான் . குளிர்ந்த உடல் அவன் சூடு முத்தங்களில் அடங்காமல் மேலும் நடுங்க ஆரம்பித்தது . அவனிடம் மேலும் ஒன்றினாள்.
திடீர் சிவா உடல் இறுகியது . என்ன ஆச்சு ? வனி யோசிக்கும் முன் அவளை விளக்கி ‘போ ஷிவானி ,முதலில் துணி மாற்று !’
‘எங்களுக்கு தெரியும்’, அவனிடம் பழிப்பு கட்டி நகர்ந்தாள்.
அப்போதைக்கு ஷிவானி மீது கோபம் இல்லை என்றாலும் அதை இழுத்து பிடித்து சொன்னான் .
அங்கே நிற்கும் அவன் கோமதி பாட்டியை கண்ட ஷிவானி , இவர்களுக்காகவா இந்த நாடகம் ..அதை நினைக்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது ..
வைதேகி கொஞ்ச நாளா உனக்கும் , சிவாக்கும் எதாவது சண்டையா என்று பல தடவை கேட்டு விட்டாள் . அவர்களிடம் சண்டை இல்லை ப்ரூவ் செய்யவா சிவா என்னை அணைத்தான் . அதில் மயங்கி .. ச ..
பாட்டி அப்போது தான் வந்தார்கள் என்று ஷிவானிக்கு தெரியாது..
ஷிவேந்தர், அவனுக்கே அவளை அந்த நேரத்தில் விலக்க கஷ்டமா இருந்தாலும் இவளுடன் கொஞ்சம் கண்டிப்பா நடந்து கொண்டால் அமைதியா போவாளா ? புரிந்து கொள்வாளா? யோசிப்பாளா பார்க்கலாம் எண்ணி அப்படி செய்தான் .
********
அவளை அப்படி விலக்கியது கஷ்டமா இருக்க , அவள் பின்னாலே அவள் அறைக்கு சென்றான் . வருத்தமா இருப்பா நினைக்க அறைக்குள் நுழைந்தவுடன் ஜீவாவுடன் பேசுவதை கண்டு கோபம் கொண்டான் . இவனை அடக்கினால் தான் ஷிவானி அடங்குவா ..
ஷிவேந்தர் , ஜீவாவை அழைத்து “எங்க குடும்பத்தில் நடக்கும் எல்லா குழப்பத்துக்கும் நீ தான் காரணம் ஜீவா ! எல்லாம் உன்னால் தான் . யாருக்கோ அட்வைஸ் கொடுத்து தான் அடிபட்டு வந்து இருக்க . அப்பவும் அடங்காமல் இருந்தால் ? உனக்கு எல்லாம் அறிவே இல்லையா ? முதலில், நீ என் பெண்டாட்டிக்கு தூபம் போடாமல் இரு . அவளுக்கு முடிந்தால் புத்தி மதி சொல்லி திருத்து .. உன் வேலையை பார்த்து கிளம்பு.. எங்க வீட்டு விஷயத்தில் தலையிடாதே, நான் பார்த்துக்கிறேன்” என்று எச்சரித்தான் ..
பலநாள் கழித்து ஷிவேந்தர் அறைக்குள் கோபமாக நுழைந்த ஷிவானி “எப்படி நீங்க ஜீவாவிடம் அப்படி கடுமையா நடந்து கொள்ளலாம் . நான் என்றாவது உங்கள் விஷயத்தில் தலையிட்டு இருக்கேனா ? அப்புறம்… இதுவே நான் உங்க நண்பன் குணாவை சொன்னால் சும்மா இருப்பீங்களா ?”
ஷிவேந்தர் மெதுவாக , நிறுத்தி நிதானமாக “குணா எனக்கு நண்பன் மட்டும் தான் ..ஆனா ஜீவா…..அவனுக்கு நீ யார்”
ஷிவானிக்கு ஷிவேந்தருடன் கல்யாணம் நடக்கவில்லை என்றால் வனி பேசுவது சரி .. அவளுக்காக கவலை பட சிவா இருக்கும் போது நடுவில் இந்த ஜீவா யார் என்ற கேள்வியே சிவாவை அப்படி பேச தூண்டியது ..
சிவா சொன்ன கடைசி வாக்கியத்தை கேட்காமல்….
அவன் சட்டையை பிடித்து “ என்ன சொன்னீங்க? யாரை பார்த்து ……ஜீவா என்னை காதலித்து உண்மை தான் . நான் எப்போதும் அவனை சிறந்த நண்பனா தான் பார்த்து இருக்கேன் ! என்னிடம் அவன் காதலை சொல்லி யாசித்தாலும் ஆதி ,நிகில் போல அவனை சிறந்த நண்பனா மட்டும் தான் என்னால் பார்க்க முடிந்தது . என் வாழ்க்கையில் நான் காதலித்தது உங்களை மட்டும் தான் ..என்று உங்களை காதலிக்கிறேன் என்று அவனிடம் சொன்னேனோ அன்றில் இருந்து என்னிடம் நண்பனாக தான் பழகுறான்.
அதை எப்படி இப்படி கொச்சை படுத்தி பேசலாம்.. இந்த கேள்வியை கேட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டீர்கள்”.. ஷிவேந்தர் முகத்தை பார்த்து “ஒருவன் செயலை வைத்து உங்களால் அவனை எடை கூட போட முடியாது .என்னத்த படித்து கிழித்தீர்கள். பெரிய மனநல மருத்துவன் பேர் .. அரைகுறைக்கு வைத்தியம் பார்த்து அரைகுறையாகவே ஆகிவிடீர்கள் போல. ஆணும் , பெண்ணும் சிறந்த நண்பனா இருக்க கூடாதா என்ன ? நீங்களும் படித்தவர்கள் தானே ! உங்களுக்கு எத்தனை பெண் தோழிகள் இருப்பார்கள் ..”
கண்ணில் கோபத்துடன் “ உங்கள் தோழிகள் ஷீலாவும் , அனிதாவும் தான் உங்களை காதலித்து இருக்கிறார்கள். அதுவும் ஷீலா உயிருக்கு உயிரா காதலித்து தற்கொலை வரைக்கும் சென்று இருக்கிறார்கள்..”
அவள் தான மினிஸ்டர் பெண் என்ற செய்தி அவள் கண்ணில் மின்னியது ..
அன்று எதேர்ச்சியாக சொன்னதை ஜேம்ஸ் பாண்ட் கண்டுபிடிச்சிட்டாளே.. நான் கோடு போட்டா அம்மணி ரோடு போட்டு அதிலே பிளைனே ஓட்டிட்டா என்று மெச்சிக் கொண்டான்.
“அதை அறிந்து என்றாவது உங்களிடம் நீங்களும் காதலித்தீர்களா கேட்டு இருப்பேனா ? யார் என்ன சொன்னாலும் எனக்கு தெரியும் , என் ஷிவேந்தர் அப்படி இல்லை என்று .. ஏன் நீங்க பிரான்ஸ் சென்ற போது தேவா, நீங்க திலோவுடன் இருக்கும் பல போட்டோவை அனுப்பி, உங்களை பற்றி அப்படி தப்ப சொன்ன போது கூட நம்பவில்லை ..
என் மீது உங்களுக்கு ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போச்சு .. ஜீவாவுடன் பேசினால் காதலில் விழுந்திடுவேனா ? காதல் என்றால் தடுமாறும் வயதிலே ஜீவாவை வேண்டாம் சொன்னவள் .. இப்போது அவனை .. நீங்க நினைப்பதே அபத்தம் தெரியவில்லை . என்னை எப்படி இப்படி சீப்பா எடை போட்டீங்க?
நான் சொன்னேன் என்பதற்காக நந்தினியை கல்யாணம் செய்ய உடனே ஒத்துக் கொண்டான் ..இப்போது அமெரிக்கா சென்றால் கண்டிப்பா ஒரு வருடத்திற்குள் வர முடியாது என்பதற்காக பாட்டி நிச்சயம் முடித்து கிளம்பட்டும் சொன்னாங்க ..நான் தான் கெஞ்சி இருக்க வைத்து இருக்கிறேன்..அடுத்த வாரத்தில் நிச்சயம் .நேற்று பாட்டி வந்து சொல்லிட்டு போனாங்க ! நீங்க தான் இல்லை …”
என்னை பேச விடராளா ராட்ஷசி, விடாது பேசிகிட்டே இருந்தால் .. மொழி அறியாத பிள்ளை போல ஷிவேந்தர் முழித்துக் கொண்டு இருந்தான் .
அப்போது பார்த்து அவன் செல் போனில் சரியாக “முன்னாள் காதலி ,முன்னாள் காதலி” பாட்டு பாட கையில் இருந்த செல் போனை நழுவ விட்டான் … நல்லா இருக்கு வைத்த காலர் டுயுன் சரியான நேரத்தில் ஆப் வைக்குதே என்று தலையில் அடித்துக் கொண்டான் ..
“ இப்படி பேசும் உங்களுடன் இனி பேசுவதே வீண் …உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை ..உங்களுக்காக எங்க வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் எதிர்த்து வந்ததுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். உங்கள் காதலை சொன்னால் மட்டும் சண்டைக்கு வந்தீர்கள் .. என் இதயத்தில் நீங்க மட்டும் தான் இருக்கீங்க இதயத்தை திறந்து காட்டவா ?
அப்படி நான் என் காதலை உங்களிடம் ப்ரூவ் செய்யணும் அவசியம் இல்லை . . இனி தயவு செய்து என்னிடம் பேசாதீர்கள்” என்று பக்கத்துக்கு அறைக்குள் முடங்கினாள்.
எப்போதும் பொறுமையாக போகும் சிவா அப்படி பேசினதை எண்ணி வருத்தம் கொண்டான். சாதாரண மனிதன் போல நடந்து கொண்டேனே என்று வெட்கினான் .! அவனுக்கு கண்டிப்பா ஜீவா ,ஷிவானி மீது துளி கூட சந்தேகம் கிடையாது .. சிவாவை விட்டு ஜீவாவுடன் எல்லாத்தையும் பகிர்ந்ததால் தான் இந்த கோபம், ஆற்றாமை என்று அவனுக்கு மெதுவாக தான் புரிந்தது..
இவளை எப்படி சமாதனம் செய்ய ? தலையை தாங்கி அமர்ந்து கொண்டான் ..
ஷிவானி கோபம் அவனை வாட்டியது.. எந்நேரம் அவள் அறையிலே முடங்கினாள்.
அவன் கோபத்தால் ஷிவானி எப்படி வாடினால் என்று அப்போது உணர்ந்து கொண்டான் ..பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக மாறிய கதையை எண்ணி வருந்தினான் . இருவரும் அடுத்தவருக்கு பார்த்தே வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறார்கள் என்று எப்போது தான் உணர போகிறார்களோ !
அந்த ஜீவாவிடம் இவன் மனக்குமுறலை சொன்னால், வனியிடம் எடுத்து சொல்வான் பார்த்தால் போட்டு கொடுத்து இருக்கான் துரோகி ! இவனை என்று பல்லைக் கடித்தான் ..ஜீவா சொல்லவில்லை .உன் மனையாள் துப்பறியும் சிங்கம் தானே கண்டு பிடித்து இருக்கிறாள் எப்ப புரிய போகுதோ?
அவளா விருப்பட்டு தேர்ந்து எடுத்த வாழ்க்கை. யாரிடம் பகிர்ந்து கொள்ள ! ஷிவேந்தர் மீது கோபம் எரிமலையா எரிந்து கொண்டே இருந்தது .இவனுக்காக எல்லாத்தையும் விட்டு … இனி அதை எண்ணி பிரயோஜானம் இல்லை ..இப்படி எத்தனை நாள் சண்டையிலே கழிய என்று வருந்தினாள்.
“வனி, சாரி டா ..உன் கோபம் ,பேச்சு, செயல் எல்லாம் உங்க அப்பா கோபத்தை மேலும் அதிகம் செய்யுது . எனக்கு பயமா இருக்கு . அதனால் தான் நான் அப்படி சொன்னேன் . அதுவும் சொல்லணும் சொல்லவில்லை …”
“சொல்லணும் நினைக்காமலே இப்படி பேசறீங்க . இன்னும் எண்ணி பேசினால் ? நான் தான் உங்களிடம் பேச பிடிக்கவில்லை சொல்லறேனே…அப்புறம் எதுக்கு என் பின்னாலே வரீங்க .”.
“ரோட்டில் போகும் பெண் பின்னால் போவது போல பேசற ..”
அப்படி வேற நினைப்பு இருக்க என்று பார்வையில் எரித்தாள்.. அச்சோ சிவா உன் வாயே உனக்கு முதல் எதிரி டா என்று அவனை திட்டிக் கொண்டான் .
அவள் பின்னாலே அவள் அறைக்கு சென்று “வனி நில்லு ! ஜீவா கொஞ்சம் சாம்பிராணி போடாமல் இருந்தால் உங்க அப்பா மீது கோபம் அடங்கும் என்று நினைத்தேன்” என்றவுடன் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்..
‘சும்மா முறைக்காத டி! எனக்கு வெட்கமா இருக்கு ..’
நான் கோபமா முறைத்தால் வெட்கமா இருக்கு சொல்லறான் .. இவனை எல்லாம் திருத்தவே முடியாது பல்லைக் கடித்தாள்.
ஷிவேந்தர் பாவமாக , “அவனிடம் சொன்னால் எடுத்து சொல்வான் பார்த்தால் போட்டு கொடுத்து இருக்கான் .. அந்த ஜீவா கையில் கிடைத்தான் …”
“நான் உங்க மனைவி ..என்னுடன் உங்க சண்டையை நிறுத்திக் கோங்க” என்று எச்சரித்தாள்..
அவளை சீண்டும் விதமாக “மனைவியா ? மனைவி என்றால் எல்லா விஷயத்திலும் மனைவியா நடந்து கொள்ளனும் .ரெடியா ?” அவன் என்ன சொல்ல வரான் புரிந்து மேலும் கோபம் கொண்டாள்.
அவள் “ச போடா” என்றதை கேட்டு “ஹே கண்ணம்மா , போடா சொல்ல கூடாது நான் கேட்டதுக்கு வாடா சொல்லணும் .. சொல்லு பார்க்கலாம்”.
சிவா என்ன கெஞ்சியும் அவள் கோபம் குறையவில்லை .எப்படி ஜீவாவுடன் சேர்த்து பேசலாம் .இவனுக்காக எல்லாத்தையும் விட்டு வந்தால் என்ன வேண்டும் என்றால் பேசலாமா ? இவன் சொன்னதை எல்லாம் கேட்டு இவன் காலடியிலே விழுந்து இருப்பேன் நினைத்தானா … தப்பு என்றால் சிவாவ இருந்தால் என்ன கண்ணனா இருந்தால் என்ன ?
வேண்டும் என்றே அவன் அண்ணி முன் அவளை சீண்டினான் ..அப்படியாவது அவனிடம் பேசி சண்டை போடுவாளா என்று எதிர்பார்த்தான் ..எல்லாமே தோல்வியை தழுவியது.
**********
வனி வீட்டில் இருக்க , நித்யா, சரண்யா அவன் அம்மா எல்லாரும் கோவிலுக்கு கிளம்புவதாக இருந்தது . அங்கு வந்த ஷிவேந்தர், ஆஹா சூப்பர் . யாரும் இல்லையா? இவளை எப்படியாவது பேச வைத்திடலாம் என்று இனிய தருணத்துக்காக காத்துக் கொண்டு இருந்தான் . வெளியே செல்லாமல் ஷிவேந்தர் வீட்டில் இருப்பதை அறிந்த வனி ‘அத்தை உங்களுடன் நானும் கோவிலுக்கு வரேன்’ ..
ஷிவேந்தர் , நான் இருக்கேன் தெரிந்தும் கிளம்பினால் என்று அவன் மனம் சிணுங்க தான் செய்தது ..தளராதே என்று அவனுக்குள் சொல்லி நானும் உங்களுடன் வரேன் என்று அவனும் கிளம்ப தயாரானான் . வீட்டிலே இவளை எப்படி நிறுத்த ..
இவர்கள் ஊடலை அறிந்த சரண்யாவிடம் “ அண்ணி, உங்களை நம்பி தான் இருக்கேன். எப்படியாவது அவளை விட்டிட்டு போங்க ப்ளீஸ்” கெஞ்சினான் . வனியை என்ன சொல்லி தடுக்க என்று புரியாமல் யோசிக்கும் சரண்யாவை கண்டு ‘யோசி சிவா’ …என்று அவனுக்குள் சொல்லி காஸ் , AC ரிப்பேர். மளிகை ஹோம் டெலிவரி .
சரண்யா அவன் காலை மிதித்து “அல்ப காரணங்களை அடுக்காதே! இந்த வேளைக்கு நம்ம முத்தம்மா, தோட்ட ஆளும், வாட்ச்மன் போதும்” என்று பல்லைக் கடித்தாள்.
“அண்ணி, உங்க அம்மா வீட்டுக்கு போயிடு போறேன் சொல்லுங்க . அங்கு இருக்கும் ரோவர் நாய் கண்டால் என் செல்லத்துக்கு பயம் .உடனே வரல சொல்லிடுவா” என்று வழி கிடைத்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் .
சந்தேகமாக , “அப்படி சொல்லுவா? உனக்கு அந்த நாயே பரவாயில்லை சொல்லிட்டா ..” அண்ணி என்று சிணுங்கினான் ..
சிவா அறைக்குள் நுழையும் போது , நித்யா அழைத்து, அத்தை புடவை கட்ட சொல்லி ஆர்டர் வனி !
அதை கேட்ட வனி புடவையா ? பேசாமல் வீட்டிலே இருந்திருக்கலாம் என்று நொந்து கொண்டாள்.
அழகிய பிங்க், நீல வண்ண சில்க் காட்டன் புடவையை கையில் எடுத்த போது ஷிவேந்தர் அந்த புடவையை அவளுக்கு காட்டிவிட்டது தான் நியாபகம் வந்தது ..கண்ணீரை உள்ளுக்குள் தள்ளி ,எதுக்கு அவனை நினைக்கணும் , எதிர் பார்க்கணும். வீம்பாக ,இவனுக்கு மட்டும் தான் புடவை கட்ட தெரியுமா ? நானும் கட்டறேன் என்று கணினி மூலம் எப்படி புடவை கட்ட தேடி அவளே அசத்தலாக கட்டினாள்.
யார் உதவியும் இல்லாமல் அத்தனை அழகாக கட்டி இருந்ததை கண்டு சந்தோஷம் தாளவில்லை ..
அழகாக தலை பின்னி, கழுத்து, காதுக்கு பொருத்தமான நகைகளை அடுக்கும் போது கதவருகில் நிழல் ஆட சரண்யா எண்ணி ‘அக்கா ,நானே கட்டினேன் எப்படி இருக்கு’ என்று மலர்ச்சியா திரும்பும் போது ஷிவேந்தர் மீது மோதிக் கொண்டாள்..
நீங்க சாரி !
இவளுக்கு இதே வேலையா போச்சே என்று முடிக்கும் முன் இருவரும் பாலன்ஸ் தவறி மெத்தையில் விழுந்தனர் .சிவா கீழ் இருக்க ஷிவானி அவன் மீது இருந்தாள். பல நாள் கழித்து அவளை அருகில் கண்டு மூச்சு விட மறந்தான் . எங்க அத்தை இவளை வெயிலே படாமல் வளர்த்தாங்களா? அந்த புடவையில் அவள் நிறம் மேலும் பளீர் என்றது. மீன்களை போல கருவிழிகள் அங்கும் இங்கும் அலைப்பாயிந்தது.
தேனில் ஊறிய பலா சுளை போல உதடுகள் பளபளத்தது.. அதன் ருசியை சுவைக்க சொல்லி மூளை கட்டளை பிறப்பித்தது . அவள் மீது இருந்த வந்த இதமான நறுமணத்தில் மயங்கினான் . அவள் மயக்கும் கண்கள் அவனை காந்தம் போல இழுத்தது .அவனை அறியாமல் அவள் இடுப்பை அழுத்தி உதட்டை சிறை செய்திருந்தான். அவள் மேனியில் அவன் கைகள் சுதந்திரமாக விளையாடியது..
அவன் செயலுக்கு ஒத்துழைக்கும் உடலையும் ,உள்ளத்தையும் அடக்கி ,ஷிவானி கோபமாக “என்னை விடு டா ! என்னிடம் எப்படி அப்படி பேசலாம் ! என்னை தொடாதே “
அதை கண்டுகொள்ளாமல், “அது எப்படி செல்லம் தொடாமல் ..உனக்கு பாடம் நடத்தியே எனக்கு வயசாகிவிடும் ” என்று மேலும் முன்னேறிய கைகளை தடுத்து எச்சரிக்கும் குரலில் “இது தான் லிமிட் சிவா” என்று அவனிடம் இருந்து திமிறி வெளியேறினாள்.
ஷிவேந்தர் கோபத்தில் “போடி ! நீ என்ன பெரிய இவளா” என்ற குரல் அவளை தொடர்ந்தது. சரண்யா அழைத்து பேசியவுடன் இது சிவா வேலை தான் எண்ணி மேலும் கோபம் கொண்டாள்.
வீட்டில் யாரும் இல்லாமல் இருவரும் தனித்து இருக்க சிவா அவளை சீண்டி வம்புக்கு இழுத்துக் கொண்டு இருந்தான் .சோபாவில் அவள் அமர்ந்து இருந்த போது அவள் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டு சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்தான் .
அவன் கைகளை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தி, பல்லைக் கடித்து “ஹாலில் ரொமான்ஸ் தேவையா ?” அதை கேட்ட சிவா துள்ளி எழுந்து , “ஆஹா என் செல்லம் சொல்வது சரி தான்..வா அப்ப நம்ம அறைக்கே போகலாம்” ..
கண்ணில் நீருடன் “போடா ! உனக்கு நான் வேண்டாம் .வேற ஆளை பாரு …” என்று கிடைத்த சந்தர்பத்தில் நழுவினாள்.
இவளை விட கூடாது . .சமையல் அறைக்கு தோசை வார்க்க சென்றால் பின்னாலே சென்று கெஞ்சினான் .எதிர் பார்க்காத நேரத்தில் பின்னால் இருந்து கட்டிக் கொண்டு முத்தம் பதித்தான். கனவு போல , “இதுவே என் பழைய ஷிவானியா இருந்தால் கிடைத்த சான்ஸ் விடுவாளா” என்று அவளிடம் சொல்லி ஏக்க பெருமூச்சு விட்டான் .
சத்தம் இல்லாமல் ஐஸ் கியூப் எடுத்து வந்து அவள் ப்லௌசில் போட்டுவிட்டு நகர்ந்து கொண்டான் .நேரமாக உருக துள்ளி குதித்தாள்… “சிவா என்ன செய்யறீங்க ?” அவன் மேடையில் தள்ளி அமர்ந்து இருப்பதை பார்த்து “ ஏன் டா என்னை படுதற”. இயலாமையில் டேபிள் மீது தலை கவிழ்ந்தாள் .
அவளுக்காக சுட்ட தோசைகளை கபளீகரம் செய்தான் . பெண்டாட்டி கையால் சாப்பிடுவது தனி சுகம் தான்.. அவள் வேண்டாம் சொல்லியும் அவளுக்கு மிரட்டி ஊட்டினான் .
இத்தனை செய்தும் அவள் மனம் இறங்கவில்லை என்றால் …அவன் பேச்சின் வீரியத்தை எண்ணி நொந்து கொண்டான் .
அவள் கிட்ட வரும் போது அவளிடம் ஏதோ மிஸ்ஸிங் ? என்ன ..ஆஹா கண்டு கொண்டு வேகமாக வெளியேறினான் . நேரம் ஆகா சத்தம் இல்லாமல் போகவே சுற்றியும் பார்வை சுழலவிட்டாள் .அத்தனை நேரம் அவள் பின்னால் சுற்றி திரிந்தவன் எங்கே போனான் .குரங்கு எங்க போனால் என்ன ?
அவள் மனம் கேட்காமல் வீடு முழுதும் பார்வை ஓட்டினாள். எங்கும் சிக்கவில்லை ..வேலை என்று கிளம்பிவிட்டனோ ! எனக்கு வீட்டில் தனியா இருக்க போர் அடிக்கும் தான் கிளம்பினேன் .அதையும் கெடுத்தான் மகராசன் .
அவளுக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து அவளை கண்காணிக்க ஆரம்பித்தான் ..அவள் தேடுவதை கண்டு உள்ளம் துள்ளியது ..
தேடியபடி வெளி வரும் போது ஒற்றை புருவத்தை ஏற்றி என்ன என்றான் ..
அவனை கண்டவுடன் அவள் கண்ணில் தெரிந்த சந்தோஷத்தை கண்டு துள்ளினான் . யாரோ யாரையோ தேடினாங்க ?
யாரையும் இல்லை என்று உள்ளே சென்றவுடன் அவளை பின்னால் இருந்து தூக்கி சுற்றி மடி மீது இறுக்கி கொண்டான் .
தலை சுற்ற அவன் தோளிலே தலை சாயித்து அமர்ந்து கொண்டாள். அவள் தலையில் மல்லிகை பூ வைத்து ஆசையாக அதை முகர்ந்து “இப்ப தான் சரி” ..அவன் செயலில் கிறங்கித்தான் போனாள்..இருந்தாலும் பேசவில்லை ..
அவன் அருகிலே ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டாள். அந்த மௌனமே பல மொழிகள் பேசியது .. அன்று இரவும் அவள் அறையிலே முடங்க அவனுக்கு கோபத்தை உண்டு செய்தது.. உன்னை என்ன செய்யறேன் பாரு..
*******