22.1:

“நீ செய்யும் அலம்பல் எல்லாம் தாங்கல டீ! கோபம் போல நடிப்பது எத்தனை கஷ்டமான விஷயம் தெரியுமா? மனுஷனே டென்ஷனா இருந்தேன். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னை வெருப்பேத்தவே ஜாலியா ஊருக்கு வேற போயாச்சு !”
“ஜாலியா?நான்! நான் ஊருக்கு அப்பாவை பார்க்க போகிறேன் என்று போனது மும்பைக்கு தான்! அப்புறம் மேகலா ஆன்ட்டி பார்க்க போனேன்.உங்களிடம் சொல்லி இருந்தால் போய்ட்டு வா வழி அனுப்பி இருப்பீங்களா ?” .
“என்ன சொல்லற? மறுபடியுமா? நிஜமாவா ? அவன் வீட்டுக்குமா? என் செக்யூரிட்டி முத்து சொல்லவே இல்லை”.
“நாங்க சொல்ல கூடாது என்று மிரட்டி வைத்து இருந்தோமே ?அங்கு ராம்கி அண்ணனிடம் அத்தனை உண்மையையும் ஆதாரத்துடன் போராடி விளக்கினேன் . டெஸ்ட் ரிப்போர்ட் காட்டியும் , வேண்டும் என்றே மாற்றிவிட்டோம் என்று எங்களை நம்பவில்லை.
கிருஷ்ணன் ,தேவ் அண்ணா மூலம் ஷ்ரவனை உடனே இந்தியா வரவழைக்க எல்லா ஏற்பாட்டையும் செய்தோம். ஆனந்த் அண்ணா இங்க இல்லையே தவிர அவரும் எல்லா உதவியும் செய்தார். மேகலா ஆன்ட்டி பாவம் . மகனிடம் பொய் பேசி உடனே வரவழைத்தார்கள் .
உங்க நண்பன் என்ற துரோகிக்கு கோடீஸ்வரி மனைவியா வரணுமாம். அவளை திருமணம் செய்ய தான் இத்தனை சீக்கிரம் இந்தியா வந்தான்”.
அவனுக்காக கண்மணி எத்தனை ரிஸ்க் எடுத்து இருக்கிறா என்று நினைக்கவே உடல் பதறியது . எங்கயாவது தப்பு நடந்து இருந்தால் …….
“மூன்று அண்ணாவும் ,வெற்றி மாமாவும் ஹெல்ப் செய்யவில்லை என்றால் இந்த மக்கு புருஷனை வைத்து ரொம்ப கஷ்டம் தான்”
“யாரு டீ மக்கு! உன்னை பேசவே விட கூடாது ! புருஷனுக்கு மரியாதை தருவதில்லை என்று உங்க ஆத்தாவிடம் சொல்லறேன் ! உங்க அம்மா, அத்தை ,எல்லாம் எப்படி மரியாதையா நடந்து கொள்கிறார்கள்” .
“உனக்கு விவரமே பத்தவில்லை டா சித்து. எல்லா படுக்கை அறையிலும் இதே கூத்து தான் நடக்கும் . விட்டால் மனைவி காலில் கூட விழுவார்கள். நான் உன்னை அப்படியா செய்ய சொன்னேன் !”
“விட்டா அதையும் சொல்லுவீங்க மேடம் . என் தேனு குட்டி சொன்னால் இப்பவே ரெடி தான் …”
சித்து நண்பர்களை எண்ணி பூரித்தான். அவன் அப்பாவும், சித்து மீது நம்பிக்கை வைத்து , பின்னால் இருந்து எத்தனை சப்போர்ட் செய்து இருக்காங்க என்று எண்ணி சந்தோசம் அடைந்தான் .
சித்து வருத்தமாக “எங்க தப்பு நடந்தது கண்மணி ! இவர்கள் எனக்கு உதவுவதை போல தான ஷ்ரவனுக்கு உதவினேன் ! கடைசியில் என்னிடமே அவன் வேலையை காட்டிவிட்டானே! துரோகி”
“விடு பா ! அவனுக்கு உங்க நண்பன் என்று சொல்ல கூட தகுதி இல்லை” .
“நான் அன்று உண்மை சொன்ன பிறகு என்ன நினைத்தாய் கண்மணி !”
“இப்பவாது வாயை திறந்தாயே கடன்கார என்று திட்டிக் கொண்டேன் . உங்களுக்கு தான் என் மீது எத்தனை நம்பிக்கை . இந்த உண்மை எல்லாம் முதலிலே சொல்லி இருந்தால்……”
“சொல்லி இருந்தால்” என்று எதிர் கேள்வி கேட்டான் .
முகம் சிவந்து அழகாக வெட்கப்பட்டு, அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள். மேலும் மேலும் புதைந்து கொண்டாள்.
கண்மணி பீடிகையுடன் “சித்து, நான் ஒன்று சொன்னா தப்ப நினைத்துக் கொள்ள கூடாது !”
“ இப்படி கேட்டாலே எதோ தப்பா தான் கேட்ப தெரியுது! சொல்லு !”
அவள் பையில் இருந்து நந்துவை தத்து எடுப்பதற்கான பேபரை காட்டினாள். “அவனுக்கு நீங்க அப்பாவா , நான் அம்மாவா இருந்து வளர்த்தலாம்!”
“கண்மணி, அது சரி பட்டு வராது !”
“ஏன் !”
“நீயே இன்னும் சின்ன பெண்! உன்னால் இந்த பொறுப்பை எடுத்து செய்ய முடியாது! அதுவும் அவனுக்கு ஸ்பெசல் அட்டென்ஷன் தேவை !”
“இதை எல்லாம் யோசித்து இருக்க மாட்டேன் சொல்லறீங்களா சித்து ! நந்துக்கு அந்த பொருக்கி இனி பேப்பரில் கூட அப்பாவா இருக்க கூடாது! அவனை சிறந்த பள்ளியில் சேர்த்த வர்மா அங்கிள் முடிவு செய்து இருக்கிறார் .ராம்கி அண்ணா அவர் பாதுகாப்பிலே தான் இருக்கணும் சொல்லறார். நம்மால் எப்ப முடியுமோ அப்ப போய் பார்த்துக் கொள்ளலாம், இல்லை அழைத்து வரலாம் . நமக்கு என்று குழந்தை பிறந்தாலும் நந்து தான் மூத்த மகன் .
அவனுக்கு நான் தான் அம்மா ! இதில் எந்த மாற்றமும் இல்லை” .சித்து பதில் பேசாமல் இருக்கவே “அத்தை ,மாமா கூட சரி சொல்லிட்டாங்க!”
அவன் முகத்தில் யோசனையை கண்டு
“என்னமோ செய்யுங்க! என் முடிவை சொல்லியாச்சு” என்று கோபத்தில் திரும்பி படுத்துக் கொண்டாள். அவளுக்கு தெரியும் அவள் சித்து கண்டிப்பா சரி சொல்லுவான் என்று!
உடனே அவள் வைத்து இருந்த பேப்பரில் கையெழுத்திட்டான் .
விளக்கை அணைத்து அவளையும் அணைத்தான் .
“தொடாத டா ! போ, என்னிடம் பேசாத ?”
“நானும் அதையே தான சொல்லறேன்! பேசியே நேரத்தை கழிக்கிற! கொஞ்சம் நேரம் விளையாடலாமா? ஒன்றரை வருஷம் டூ மச் !வெளியே சொன்னால் சிரிப்பாங்க !என் தங்கை -ஆனந்த் ஜோடி எத்தனை வேகம்” .
“இப்பவாது தெரிந்தால் சரி! இதை போய் வெளியே வேறு சொல்லுவாங்களா?” என்று முனுமுனுத்தாள் .
“பாரு இனி என் வேகத்தை தேனு குட்டி. விளையாட்டை தொடங்கலாமா ஜில்லு?”
“என்ன விளையாட்டு” என்று கேட்கும் முன் அவன் விளையாட்டை தொடங்கி இருந்தான். அவளின் பேச்சுக்கு தடா போட்டான் .விடிய விடிய இன்ப கடலில் மூழ்கி முத்தெடுத்தனர். சித்து அவளுக்கு வேற உலகத்தை காட்டினான். புது புது பாடங்களை கற்றுக் கொடுத்தான்.
“நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ… கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே
என்று சித்துக்கு பிடித்த பாடலை மென்மையாக பாடினான் . அவன் குரலில் கண்மணி மயங்கினாள்.
விடியற் காலையிலே தூங்கிக் கொண்டு இருந்த கண்மணி அழகை ரசித்து, அவளை அப்படியே அள்ளி அனைத்துக் கொண்டான் . “தூங்க விடு டா. இப்ப தான் அரை மணி நேரம் முன்பு தான தூங்க ஆரம்பித்தேன்” .
“என்னது டா வா! ரொம்ப தான் டீ மரியாதை!”
“நீ, நேற்று செய்த வேளைக்கு உனக்கு இந்த மரியாதை போதும் !”
சித்து அப்பாவியாக “நான் என்ன டீ செய்தேன் !”
“என்ன செய்தீங்களா?அம்னீஷியாவா? விடிய ,விடிய ……….”
அவன் கிண்டல் செய்வதை அறிந்து அவனை தலையணை வைத்து அடிக்க தொடங்கினாள். சித்து அவனுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு தான் விடுவித்தான் .
கண்மணி பொறாமையில் “சித்து, அன்று நிஜமா அந்த பெண் உன் அறைக்கு வந்த போது ஒன்றும் நடக்கவில்லை தான! அவள் பெயர் கரீனாவா?”

“இரு யோசிக்கிறேன்! நான் நல்ல தண்ணி அடித்து இருந்தேன்! முதல் தடவை வேற?”
கண்மணி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
உள்ளுக்குள் சிரித்து “அந்த நாளை மறக்க முடியாமல் தவிப்பவன் நான் . இத்தனை வருடத்தில் என்ன நடந்தது உன்னிடம் மட்டும் தான் சொல்ல போறேன்! ரொம்ப எச்சைடிங்,ரொமாண்டிக் அனுபவம் ஜில்லு! என் அறைக்குள் நுழைந்த போது கட்டிலில் பார்த்தால் ….
ஏற்றின போதையை விட அதிக போதை ஏறியது . அப்படி ஒரு அழகு !அவளும் அவள் கலரும் !”

கண்மணி கலரை பார்த்து “இது எல்லாம் கலரா? சுண்டினால் ரத்தம் தெறிக்கும் கலர். கொள்ளை அடிக்கும் அழகு!”
கண்மணி இடுப்பை கண்டு “இது எல்லாம் என்ன இடுப்பு! இடுப்பு என்று ஒன்று இருக்கா தேடனும் .
அவ கண்கள் அப்ப! அப்படி ஒரு காந்த சக்தி !என்னை இழுதிடுச்சு ! அப்படியே ………”
கண்மணி பொறுமையை இழுத்து பிடித்து “போதும் சித்து ! இடுப்பு அடுப்பு பேசி மேலும் கடுப்பை கிளறாதே”
“இரு கண்மணி! அவள் உதடு இருக்கே ! தேனில் ஊறிய பலா !சுவைக்க ,சுவைக்க சான்சே இல்லை …கழுத்துக்கு கீழே ! இடுப்புக்கு மேலே ! ஐயோ ! சொல்ல வார்த்தையே இல்லை ஜில்லு”
அவளை பற்றி ஏன் கேட்டோம் என்று கண்மணி நொந்து கொண்டாள். அவளை வர்ணிக்க ஆரம்பித்ததில் இருந்து என்னை வேறு ஜில்லு கூப்பிடறான் .
அப்புறம் முக்கியமான………
அவன் வாயை மூடி “போதும் ! இதுக்கு மேல எதாவது சொன்ன நான் கொலைகாரியாகிடுவேன். ஜாக்கிரதை” மிரட்டி குளியல் அறைக்குள் புகுந்தாள்.
“முழுதா கேட்டு போ கண்மணி! எனக்கு அவளை பற்றி சொல்லியே ஆகணும் ! சொல்லாமல் விட போறது இல்லை !சீக்கிரம் வா” என்று குரல் அவளை தொடர்ந்தது.
எப்படி என்னிடமே இப்படி எவளோ ஒருத்தியை வர்ணிக்கலாம் ! இவனை எல்லாம்! நானும் நல்லா தான இருக்கேன் என்ற போது, “உனக்கு என்ன டீ செல்லம்! சும்மா கும்முன்னு இருக்க” என்று சித்து பின்னால் இருந்து அனைத்துக் கொண்டான் .

அவன் மீது சாயிந்து கொண்டு
“உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன்
மௌனமா இங்கே
உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஓ .. எப்போதும் .. ஓ…….”
“கண்மணி, சூப்பரா பாடற! தேனு என்பதால் இப்படி தேன் குரலில் பாடுறையோ ஜில்லு!”
அவன் கண்மணி காதை கடித்தவுடன் அலறி “எருமை! போடா போ ! நீ வர்ணித்த அழகியிடமே போ! இங்க எதுக்கு வந்த! நான் குளிக்கணும் !”
“நானும் தான்” என்று அவளை பேச விடாமல் அவன் லீலைகளை தொடர்ந்தான் .

“நான் தான் புடவை கட்டி விடுவேன்! அவன் ஆசையாக கொடுத்த புடவை, ப்ளௌஸ் கண்டு “இப்படி இறக்கமா இருக்கே !புடவை முழுதும் நெட்டா?”


“ஹே பட்டிகாடே ! உங்க பக்கத்துக்கு வீட்டு ஆயா ப்ளௌஸ் போடுவதே இல்லை! எத்தனை மாடர்னா இருக்காங்க! நீ என்ன என்றால் இறக்கமா இல்லை? கிறக்கமா இல்லை படுத்தற?”
“இறக்கமா இருக்கு சொன்னால்! அச்சோ ! பின்னால் வெறும் கயிர் மட்டும் தான் இருக்கு ! இதை எப்படி போட”
“எப்படி போட என்று நான் சொல்லி தரேன் ஜில்லு! உனக்கு சிரமமே வேண்டாம் . நானே போட்டு விடறேன் ! இந்த மாதிரி என் ஜில்லு போடணும் நானே டிசைன் செய்து கொடுத்தேன் !” என்றான் பெருமையாக.
“போட தெரியலைனா சொன்னேன்! எனக்கு வேண்டாம்!”
“வேண்டாம் என்றால் எனக்கும் சந்தோசம் தான் ! இதை போடு, இல்லை என்றால் வேற கிடையாது !” என்று கப்போர்ட் சாவியை கையில் எடுத்துக்கொண்டான். அப்ப போட்ட துணியும் இவன் செய்த அலம்பலில் ஈரம் ஆகிடுச்சே!
வேற வழி இல்லாமல் கண்மணி அந்த புடவை கட்டி ப்ளௌஸ் போட்டாள்!அவள் அழகில் அசந்து விட்டான். சொக்கி தான் போனான் .
உள்ளுக்குள் என் கனவு தேவதை என்று வர்ணித்து “இப்ப தான் அவளை போல ஒரு அளவுக்கு வர !”
“உன்னை எல்லாம் ! ச்சே போடா” என்று கோபத்தில் அவள் முகம் சிவந்தது .அதை ரசித்து “Mr. சிவத்துக்கு போன் போட்டுக் கொடு !”
“எதுக்கு” !
“இல்லை வேண்டாம்! உங்க ஆத்தாக்கு போட்டு கொடு !”
“என்ன விஷயம் !”
“மணி பகல் 12 ஆச்சு .இன்னும் உங்க பேத்தி எனக்கு காபி தண்ணீ கூட கொடுக்கவில்லை சொல்ல போறேன் !”
“அடபாவி! கொஞ்சம் கூட நகர விடாம படுத்தி எடுத்திட்டு கம்ப்ளைன்ட் வேற செய்வியா? உன்னை” என்று அவனை துரத்தினாள்.
கீழே வீட்டில் ஒருத்தரையும் காணாமல் சித்து “எங்க டா யாரையும் காணோம் !”
“நான் தான் வேலை ஆட்களை வர வேண்டாம் சொன்னேன்!”
“அடிபாவி! முதலிலே மாமியாரும் , மருமகளும் திட்டம் தீட்டி இப்படி சதி செய்து இருக்கீங்களா? பால் ,பிரட் சாப்பிடலாமா?”
“நான் உங்களுக்கு சமையல் செய்ய போறேன் !”
“விடிய விடிய வேலை செய்து களைத்து போய் இருக்கேன் கண்மணி !ப்ளீஸ்!பாதி வேலை தான் முடிந்து இருக்கு ! எனக்கு தெம்பு வேண்டும் . சாப்பாட்டை கண்ணில் காட்டு!” அவன் போலியாக புலம்ப, முறைத்து பார்த்தாள்.
அவளை வேலை செய்ய விடாமல் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டு தொந்தரவு செய்தான் .”வேலையை கெடுக்காத டா! உங்களுக்கு தான் மணி ஆகும் பரவாயில்லை என்றால் எனக்கும் ஒன்றும் இல்லை .நாலு மணி வரைக்கும் சமையல் அறைக்குளே இருக்கலாம்” .