18.3
சிவா இல்லாமல் ஷிவானிக்கு ரெண்டு நாள் போவது ரெண்டு யுகம் போல இருந்தது . அவ மிஸ் செய்வதை எண்ணி ஷிவேந்தர், இனி, இது போல் அவளை தனியா விட்டு கிளம்ப கூடாது முடிவு செய்தான் .அவளுக்காக ஆசையாக ஷாபிங் செய்தான் .அவனும் அவளை ரொம்ப மிஸ் செய்தான் . அவன் உடம்பின் செல்கள் ஒவ்வொன்றும் ஷிவானியை தேடியது .
“ நாளை மறுநாள் கிளம்பிடுவேன் வனி செல்லம் . இன்னும் ரெண்டே நாள் தான். வந்தா ஏமாற்றாமல் நான் கேட்டதை எல்லாம் கொடுக்கனும்.. என்ன சரியா ? பதிலை காணோம் ..”
வெட்கத்தால் அவள் முகல் செவ்வரளி நிறம் கொண்டது . “என்ன சத்தத்தையே காணோம்” என்று ஹஸ்கி குரலில் கேட்டவுடன் “தூக்கம் வருது சிவா !”
“நான் என் பீலிங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன், உனக்கு தூக்கம் வருதா . அதுவும் பகலில் ….அடிங்க …”
இவன் அருகில் இருந்தால் இரவு கூட தூங்க முடியாதே எண்ணி சிரித்து ,இப்ப நல்லா தூங்கி சார்ஜ் ஏத்திக் கொண்டால் தான…….. என்று பேச முடியாமல் நிறுத்தினதை கேட்டு “வாவ், ஹுரே ! அடி கள்ளி, ரொம்ப முன்னேறிட்ட ! வந்து வெச்சுக்கிறேன் …இப்பவே உன்னிடம் பறந்து வந்திட மாட்டேனா இருக்கு கண்ணம்மா !”
“காய்ந்த மாடு” என்று சீண்டி ,கிண்டல் செய்து வம்புக்கு இழுத்தாள். அவன் கேட்டதை வாங்கிவிட்டு, தாராளமா திருப்பி கொடுத்து தான் விட்டான்.
“நான் இப்போ ஒரு நண்பனை பார்க்க போகணும் வனி ! வந்து உன்னை அழைக்கிறேன் .. இல்லை நாளை? சரியா” என்று வைத்தான் ..
********
சிவா நண்பனின் தங்கை வேண்டாத நண்பர்களுடன் சேர்ந்து போதை பழக்கத்திற்கு அடிமை ஆகி இருக்கிறாள். கான்பிரன்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும் அவன் நண்பன் கபில் கேட்டதுக்காக உதவியை செய்ய வந்து இருக்கான் .ஏற்கனவே போன முறை வந்த போதே அவளுக்கு கவுன்செல்லிங் கொடுத்து இருந்தான் ..
அன்று கான்பிரன்ஸ் முடிந்ததால் பக்கத்து ஊரில் இருக்கும் கபில், நண்பனை காண ஹோட்டலுக்கே வந்து இருந்தான் . பத்தாவது வரை கபில் சென்னையில் சிவாவுடன் தான் படித்தான் .
அவன் தங்கை திலோ, மிகவும் அழகான பெண் . இந்தியாவில் பிறந்து, அவள் அப்பா வேலை காரணமாக அங்கேயே வந்து செட்டில் ஆனவர்கள் .. அந்த ஊரில் இருப்பதால் கிடைத்த சுதந்திரம் , பண புழக்கம் எல்லாம் சேர்ந்து போதை பழக்கத்துக்கு வழி வகுத்தது .
“தங்கை எப்படி இருக்கா?” என்று கேட்டவுடன் “இப்ப கூட பாரில் தான் இருப்பா ..சொன்னா கேட்பதாகவே இல்லை சிவா ! போன தடவை நீ வந்து சென்ற பிறகு போதை பழக்கம் கம்மி ஆகி இருக்கு. மது பழக்கம் அப்படியே தான் இருக்கு தோணுது . எந்நேரமும் பாரிலே தான் இருக்கா..”
“ சரியாகி விடும் டா ! போதை பழகத்தில் இருந்து வெளி வந்ததே பெரிய விஷயம் டா .. அவளுக்கு புது சூழல் ,நண்பர்கள் என்று கொஞ்ச நாள் மாற்றம் இருந்தால் சரியாகிவிடும் . பக்கத்தில் எங்கயாவது , இல்லை இந்தியாவில் யாராவது இருந்தா அங்கே அனுப்பி வை !”
கபிலுக்கு உடனே ஷிவாவுடனே கொஞ்ச நாள் இந்தியா அனுப்பலாம் என்ற எண்ணம் தோன்றியது .. அவன் தங்கையை ஷிவாக்கே மண முடித்து வைக்கலாம் என்று ஆசை ஒரு பக்கம் .
சிவாவை பார்த்து, “என்ன டா , ஆளே வித்தியாசமா இருக்க . முன்பே ஸ்மார்டா இருப்ப ! இப்ப ஹாலிவுட் நடிகன் போல மேலும் அழகா மாறிட்ட……….முகம் எல்லாம் மலர்ச்சியா இருக்கு ! என்ன காரணம் ? பிரான்ஸ் எவளாவது உன்னை…..நைட் பிக்ஸ் செய்தாச்சா ? இல்லை நேற்று ..”
“ ச்சே! வாயை கழுவு டா ! என்னை பற்றி தெரிந்தும் இப்படி கேட்டால் ?”
“அவனவன் இங்க வரதே அதுக்கு தான டா !”
“அது எனக்கு தெரியாது ! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு டா !”
“என்ன கல்யாணமா ? அந்த பெண் ஷிவானியுடனா? சண்டை சொன்ன ?”
“நான் எங்க சண்டை சொன்னேன் ! அவளா சண்டை போட்டா என்று தான சொன்னேன் ..”
“போன வாரம் தான் ஆச்சு ! உனக்கு மெயில் அனுப்பினேனே !”
நான் பார்க்கவில்லை டா.. லண்டன் போயிட்டு நேற்று தான் திரும்பினேன்.. சிவா உண்மையை சொல்லணும் என்றால் திலோவை உனக்கு கட்டிக் கொடுக்கணும் என்று எண்ணம் எனக்கு இருந்தது டா என்று உண்மையை மறைக்காமல் கூறினான் .
சிவா சிரித்து, “ நான் எப்போதும் அவளை என் குட்டி தங்கையாக தான் பார்க்கிறேன் டா! நீ கேட்டு இருந்தாலும் அதையே தான் சொல்லி இருப்பேன் …
அவளுக்கு ஏற்ற மணமகனை நானே தேர்வு செய்யறேன் என்று அவளுக்கு வாக்கு வேற கொடுத்து இருக்கேன் ..”
கபில், திலோ இருக்கும் ஹோட்டலுக்கு சிவாவை அழைத்து சென்று, “ நீ போய் திலோவுடன் பேசு ! என்னை பார்த்தால் வேவு பார்க்கிறியா சண்டை போடுவாள் ..நான் ரெண்டு மணி நேரத்தில் வரேன் ..”
அந்த பாரில் , எல்லாரும் ஆடி பாடிக் கொண்டு இருந்தனர் . திலோ ஓரமாக ஒரு டேபிளில் கையில் கோப்பையுடன் அமர்ந்து கொண்டு இருந்தாள். சிவா தூரத்தில் இருந்தே அவளை எடை போட்டுக் கொண்டே அவளிடம் முன்னேறினான் . போன தடவை பார்த்த போது போதையில் அவள் யார் என்றே தெரியாமல் தள்ளாடி ஆடிக் கொண்டு இருந்தாள்.. அவள் அமைதியை வைத்தே எதோ தீவிர சிந்தனையில் இருக்கா என்று சிவா அறிந்து கொண்டான் .
அவள் அருகில் ஒருவன் திலோவை ஆட சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருந்தான் .ஜஸ்ட் கிவ் மீ கம்பனி என்று அவளை கை பிடித்து இழுத்த போது உதறி தள்ளினாள்.
அவன் மறுபடியும் அவளிடம் நகரும் போது, சிவாவை பார்த்து ‘சிவா வந்தாச்சா !’ என்று ஆசையாக கட்டிக் கொண்டு முத்தம் வைத்தாள். அங்கேயே வளர்ந்த அவளுக்கு அது சகஜமாக இருந்தாலும் சிவா தள்ளி நிறுத்தினான் .
அவளை விளக்கி “என்ன திலோ, வரவேற்பு இப்படி பலமா இருக்கு!”
“போன தடவை நீங்க வந்து சென்றதில் இருந்து உங்க நினைப்பு தான். அண்ணாவிடம் கூட பலமுறை நீங்க எப்ப வருவீங்க கேட்டுவிட்டேன்” .
“நீ சொன்னது போல ஒரு பையனை பிடித்து வர வேண்டாம்”
“சிக்குச்சா?”
“தூண்டிலை வீசி காத்துக் கொண்டு இருக்கேன் ..சிக்க மாடீங்குதே! திலோக்கு வர போகும் கணவன் என்றால் சும்மாவா ? கூகிள் நிறுவனத்தில் வேளைக்கு சேர இருபத்தி ஒன்பது ரவுண்டு போகனுமாம் ..அது போல இன்டர்வியு வைத்து எடுக்க வேண்டாம் ..”
“கிழிஞ்சுது லம்பாடி லுங்கி ! எனக்கு கல்யாணம் ஆனது போல தான்.. உங்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருக்கேன் என்றால் பயமா தான் இருக்கு !”
“பாட்டியுடன் பேசினையா? அப்படியே சரியா பழமொழி அள்ளி வீசற” கிண்டல் செய்தான்.. “ திலோ இன்னும் அந்த போதை பழக்கம்…..”
“நீங்க சொன்னதால் நான் அந்த சனியனை தொட கூட இல்லை தெரியுமா?”
“அது விட்டாச்சு , இது?” என்று கையில் உள்ள கிளாசை காட்டினவுடன் …
“தனியா அமர்ந்து இருக்க என்னமோ போல இருக்கு ! அதுக்கு தான் ..”
அவன் சிரிப்பதை பார்த்து “ நிஜமா சிவா !” அவன் முகத்தருகே உதட்டை குவித்து ஊதி காட்டினாள்.
“ நம்பறேன் ! நம்பறேன் ! எனக்கு இங்க தலை வலிக்குது! வெளியே போலாமா ?” அவன் தோள் மீதே தொத்திக் கொண்டு “ நீங்க எங்க கூப்பிட்டாலும் வர தயார். தனியா போர்! ”
“எதுக்கு தனியா இருக்கணும் .. இங்கே வராமல் பார்க் எங்கயாவது போய் இருக்கலாமே ! கொஞ்ச நேரம் நடந்து இருக்கலாம் ,உன் தோழி கிளாரா அழைத்து பேசி இருக்கலாம் .. இயற்கையை ரசித்து இருக்கலாம் . பேகிங் கிளாஸ்.. நான் என்ன சொல்லி இருக்கேன் ..இந்த சூழலே வேண்டாம் திலோ !”
திலோக்கு சிவாவை போல ஒருவனை கல்யாணம் செய்து குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகணும் என்று கொஞ்ச நாளா எண்ணம் . அவளுக்கு வர போகும் கணவன் சிவா போல அவளை பாசமாக பார்த்துக்க வேண்டும், அன்பாக பழக வேண்டும் ஆசை .அதை அப்படியே சிவாவிடம் சொல்லி இருந்தாள்.
“எங்க போகலாம் சிவா ! ஈபில் டவர் ..”
கொஞ்ச நேரம் அந்த பார்க்கில் அமர்ந்துவிட்டு உன் வீட்டுக்கே போகலாம் .
சிவா , ஷிவானியை பற்றியே பேசிக் கொண்டு இருந்தான் . ” உங்க ஷிவானி ரொம்ப லக்கி” என்றவுடன் “இல்லை, அவளை அடைய நான் தான் லக்கி..”
என் மீதும் ஒருவன் இப்படி காதலை பொழிவான என்று திலோ ஏக்கம் கொண்டாள். இதை எல்லாம் ஒரு ஜோடிக் கண்கள் வன்மமாக பார்த்துக் கொண்டு இருந்தது ..அந்த கண்களுக்கு சொந்தக்காரன் ராஜ் மகன் தேவா.. அவன் தான் திலோவிடம் ரகளை செய்தது…
பார்த்தவுடனே ஷிவேந்தரை கண்டு கொண்டான். இவனை திருமணம் செய்ய தான் என்னை அந்த ஷிவானி வேண்டாம் என்றாலா ? உனக்கு இருக்கு டி என்று உடனே அவர்கள் இருவரையும் பல கோணத்தில் புகைப்படம் எடுத்தான் …
பார்த்ததும் இல்லாமல் உடனே ஷிவானிக்கு அவன் பார்த்த காட்சி எல்லாம் புகை படமாக அனுப்பினான் .
ஷிவானி, கீழே நித்யா, தாத்தா ,பாட்டியுடன் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்ததால் தேவா அனுப்பியதை உடனே பார்க்கவில்லை .
அறைக்கு வந்தவுடன் சிவா போன் காலை எதிர் பார்த்து ஏமாந்தாள். இன்னும் ரெண்டு நாள் … அதற்கு பிறகு அவள் அருகில்…. என்று நினைக்கவே சந்தோஷமாக இருந்தது.
அப்போது வரிசையாக மெசெஜ் வந்ததை பார்த்து யாரு இப்படி ! ஏனோ போடோ டவுன்லோட் ஆகா நேரம் ஆனது .. இந்த தேவா என்ன அனுப்பி இருக்கான் .. அதை பார்க்காமல் அப்படியே டெலீட் செய்யலாம் என்று தான் நினைத்தாள்…என்ன என்று பார்த்திட்டு அப்புறம் இவனுக்கு உண்டு !
நாளைக்கு அவள் எழுத போகும் பரீட்சை பற்றி சிவாக்கு சொல்ல வேண்டும் என்று பல முறை முயற்சி செய்தாள். அவள் மனமாற்றத்தை (மருத்துவம் மேல் படிப்பு படிக்க ) அவனிடம் சொல்லணும் காத்துக் கொண்டு இருக்கிறாள் . சொன்னால் அவன் ரியாக்ஷன் எப்படி இருக்கும் ! சந்தர்ப்பம் அமைவது போலவே இல்லை ..
பல நேர முயற்சிக்கு பின் போன் அவன் எடுக்கப்பட்டது.. எடுத்தவுடன் “ஆ ,ஆ ,ஆ இது எனக்கான டைம் டாக்டர்.. என்னை மட்டும் தான் கவனிக்கணும் .தொழிலில் கவனம் சிதற கூடாது !”
இது யாரு ! சிவா போனுக்கு தான் அழைத்தேனா என்று ஷிவானிக்கு சந்தேகம். குழப்பம்.
பின்னாலே, இது என்ன விளையாட்டு திலோ என்று சிவாவின் குரல்.
அவன் கையில் பைலை கொடுத்து , “ எல்லாத்தையும் பார்த்து ஒன்று விடாமல் செக் செய்யுங்க ..நான் போன தடவை போல அப்படியே இருக்கேனா? இல்லை குறைத்துக் கொண்டேனா ? உங்களுக்காக, நீங்க சொன்னீங்க என்று தான் கஷ்டபட்டு குறைத்தேன் தெரியுமா ? அண்ணாக்கு என் மீது எப்போதும் சந்தேகம் ..இல்லை என்றாலும் கேட்க மாடீன்கிறான். நீங்க சொன்னால் தான் நம்புவானாம் .. சில சமயம் அதை நினைத்தால் உதடு ,கை எல்லாம் எப்படி நடுங்கும் தெரியுமா? அந்த சமயத்தில் உங்களை தான் நினைத்துக் கொள்வேன் சிவா” .
சிவா என்று பலமுறை ஷிவானி அழைத்து பார்த்தாள்.
“என்னை நினைத்தாயா ? இல்லை நான் சந்தையில் ஒழுங்கான மாப்பிளை பிடிக்கமாட்டேன் நினைத்தாயா ?”
“சந்தையில் பிடிக்க அவர் என்ன ஆடா ,மாடா ! give respect ..”
“ஒ ஒ ஒ மேடம்க்கு கோபம் எல்லாம் வருதோ….. வரட்டும்” ..
பழைய ரிப்போர்ட், புது ரிப்போர்ட் பார்த்து ‘குட் திலோ ! நல்ல முன்னேற்றம்’ .
“ இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு ? உங்க ஊர் பெண் போல இருக்கேனா ?” குழந்தை போல கேட்கும் திலோவிடம் “இருக்க ..முதலில் போனை குடு !”
“முடியாது ! நான் சமைத்ததை சாப்பிட்டால் தான் தருவேன்” .
“என்ன பிடிவாதமோ ! போகலாம் வா !சரியா இன்னும் ஒரு மணி நேரம் தான் .அதற்குள் உங்க அண்ணன் வந்திடுவான் .எனக்கும் மணி ஆச்சு . காயிந்த ரொட்டியை காட்டாமல் கொஞ்சம் சாதம் இருந்தா போடு தாயே .தயிர் ஊத்தி சாப்பிட்டுக்கிறேன்.. அதுவே நீ வைத்த அறுசுவை விருந்து சொல்லிகிறேன்..”
போன் ஆன் செய்து இருந்ததை சிவா கவனிக்கவில்லை ..இதை எல்லாம் கேட்க ஷிவானிக்கு யாருடன் இத்தனை உரிமையாக பேசறான் ? கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் . மயக்கம் வருவது போல ஆனது . திலோ சிரிப்பின் ஒலியை கேட்டு ஷிவானி போனை கட் செய்துவிட்டாள். நண்பனை தான பார்க்கணும் போனான் ..ஒருவேளை நண்பன் தங்கையோ ! அப்படியா தான் இருக்கும் ..
மெச்செஜ் வேற தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது .
போட்டோவில் சிவா யாரோ பெண்ணுடன் …அவள் இவனை கட்டிக் கொண்டு ,உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல , அவள் சிவாவின் தோளில் சாயிந்து ஒட்டிக் கொண்டு வெளியேறுவது ,காரில் சிவா அவளை அமரும் படி செய்கை செய்வது… இன்னும் எத்தனையோ !
குழந்தை தனம் மாறாமல் பார்க்க அழகா இருக்காளே ! அந்த ஊரில் வளர்ந்த பெண் போல இருக்கிறாளே ! இவளுடன் எப்படி பழக்கம் .
தேவா எண்ணில் இருந்து வந்த போனை எடுப்பதா, வேண்டாமா குழப்பம் . போடோக்களில் கண்ணை ஓட்டிய ஷிவானி கண்டிப்பா போடோ ஷாப் செய்து இருக்க முடியாது . அவளே அவர்கள் பேசுவதை கேட்டாலே ?
எடுத்தவுடன் “ என்ன நான் அனுப்பின போடோ எல்லாம் பார்த்தாயா ? உன் புருஷன் எப்படி ? நல்லா இருக்கானா ? அவனுக்கு மட்டும் எங்கயோ மச்சம் ..அங்க நீ ! இங்க இவ ! ஊருக்கு ஒருத்தி போய், நாட்டுக்கு ஒருத்தி .பேஷ், பேஷ்! ரொம்ப நல்லா இருக்கு. பார்க்க குளிர்ச்சியா ..என்னமோ நான் ஒழுக்கம் இல்லாதவன் சொன்ன ? நான் எப்போதும் ஆமாம், நான் இப்படி தான் என்று சொல்லிக் கொண்டு போய்டுவேன் . இதுவே உன் கணவனை அப்படி சொல்ல சொல்லு பார்க்கலாம் .. அவன் அருகில் இருக்கும் பெண் என்னமா இருக்கா .நல்ல ரசனைக்காரன் தான்.
இவளை பார்க்க தான் பறந்து வந்தானோ !நீ பாவம் தான் ..இனி என்ன செய்வ?” என்று அவள் கோபத்தீக்கு மேலும் எண்ணெய் ஊற்றினான் .
அவளுக்கு பேச இடம் கொடுக்காமல் , “அங்கே உங்க அப்பா வீட்டுக்கும் நீ போக முடியாதே !..அவரிடம் இதை பற்றி பேச கூட முடியாது ! நீயா தேடிக் கொண்ட வாழ்க்கை .. பாவம் தான் .. இதுவே என்னை கல்யாணம் செய்து இருந்தால் …
இப்ப சரி சொல்லு , நான் உன்னை கல்யாணம் செய்து ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன் . அங்க இருக்க கஷ்டமா இருந்தால் இங்கயே செட்டில் ஆகிடலாம் .. எப்படியோ நீ எனக்கு கிடைத்தால் சரி ! என் கைக்கு சிக்காத கிளி நீ மட்டும் தான்..”
“ Stop it .. அவரை பற்றி பேச உனக்கு யோக்கியதையே கிடையாது ! அவர் எங்கு இருந்தாலும் ராமன் தான் . இன்னொரு தடவை என்னை அழைத்தால் ….நடப்பதே வேறு”. கோபத்தில் போனை அணைத்து தூக்கி போட்டாள்.
என் சிவா அப்படி இல்லை ..அவர் கூட படித்த பெண்ணாக இருக்கலாம் இல்லை ..குடும்ப நண்பர்கள் …… கண்ணில் இருந்து கண்ணீர் .. ஷிவாக்காக தான எல்லாத்தையும் தூக்கி போட்டு வந்தேன் ..அப்படி இருக்க தேவா சொல்வது …
அவனே ஒரு பொறுக்கி என்றது மனசாட்சி… சிவா வந்தவுடனே கேட்டுவிடலாம் என்று நினைத்தாலும் அவள் உள்ளம் நிலையில்லாமல் தவித்தது .
ஒரு கட்டத்தில் , மாமா வளர்ப்பில் ஒரு போதும் சிவா தப்பு செய்ய மாட்டான் நம்பினாள். அவன் தலையணையை கட்டி பிடித்து தூங்க முயற்சித்தாள்.
சிவா வந்தான் ..என்ன வனி தூங்கறியா ?
வந்தாச்சா சிவா என்று ஆசையாக துள்ளி குதித்து எழுந்தாள் . நீங்க எனக்கு மட்டும் தான என்று அவனை ஆசையாக கட்டிக்கொண்டாள். அவன் அருகில் யார் அது .போடவில் பார்த்த பெண் போல இருக்காளே !
அவள் எண்ணத்தைக் கலைத்தது சிவா குரல்…
அவளை விளக்கி , நான் சொல்வதை கேட்டு நல்லா தூங்கு ! எனக்கு இனி நீ வேண்டாம் ஷிவானி ! இந்த திலோவே போதும் என்று அவளை ஷிவானி கண் முன் கட்டி பிடித்து அழுந்த முத்தம் பதித்தான்.
சிவா…………… என்று உறைந்து நின்றாள்.
அவன் தோளில் சாயிந்து இருந்த திலோ , நான் எங்கே படுக்க சிவா ! இது என்ன கேள்வி டா ! இத்தனை பெரிய பெட் இருக்கும் போது…….
மெத்தையில் கை ,கால் நடுங்கிய படி வியர்த்து ,அதிர்ந்து அமர்ந்து இருக்கும் ஷிவானியை ,இரக்கமே இல்லாமல் சோபாவிற்கு தூக்கி சென்றான் .என்னை தொடாத !அவளை தொட்ட கையால் என்னை தொடாத என்று திமிறினாள் .
இனி நீ என்ன செய்ய போற ? உங்க அப்பா வீட்டுக்கும் போக முடியாதே ! பாவம் தான் ! வெளியே போய் சம்பாதிக்க ஒழுங்கான படிப்பும் இல்லையே ! என்னுடனே இங்க …..
சி, வாயை மூடு ! வனிக்கு உடம்பு எல்லாம் வியர்த்து கால்கள் தோய்ந்தது. கடைசியில் அந்த தேவா சொன்னது போல ஆனதே! உங்களுக்காக என் சொந்தம் பந்தம் எல்லாத்தையும் இழந்தேனே !
அது பழைய கதை ஷிவானி….
அவள் முகத்தை கண்டு என்ன ஆச்சு ஷிவானி என்று சிவா அவள் அருகில் முன்னேறிய போது அங்கேயே நில்லு ,என்னை தொடாதே என்று அப்படியே மயங்கி சரிந்தாள்.