காதல் துளிர் 18.1:
“டாக்டர் ஷிவேந்தர்” என்றதை பார்த்து அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை .
கைகள் நடுங்கியது .. அருகில் இருந்த காகிதத்தில் “2016-2017 INTERNATIONAL PSYCHIATRY MEDICAL CONNFERENCE ….. PARIS” அழைப்பிதழை பார்வையிட்டாள். அவன் லெட்டெர் pad கண்ணில் பட்டது! அதில் Dr. M .Shiventhar MD இருந்தது . அவள் காண்பது கனவா என்று கூட குழம்பினாள் . அப்ப, சிவா மனநல மருத்துவனா ???? ஏன் இதுவரை சொல்லவில்லை ….
அவன் வேலை தவிர உலகில் உள்ள அணைத்து விஷயத்தையும் பேசிக் கொண்டோமே ! நான் கேட்கவில்லை என்றால் அவனாவது சொல்லி இருக்கலாமே ! எங்க அப்பாவுடன் சேர்ந்து என்னை ஏமாற்றி இருக்கானா?
போன் பேசி முடித்து வந்த ஷிவேந்தர் “வனி ,உனக்கு இங்க இருக்க கஷ்டமா இருந்தா உங்க அம்மா வீட்டுக்கு…. இல்லை அங்க வேண்டாம் … சரி வராது ! பாட்டி வீட்டுக்கு போறியா? எனக்காக…… இங்கயே இரு கண்ணம்மா” என்ற கெஞ்சலும் கூட இருந்தது.
சின்ன விஷயத்தில் கூட என் நலனை கண்டுகொள்ளும் என் இந்தர் கண்டிப்பா என்னை ஏமாற்றி இருக்க மாட்டார் உறுதியாக நம்பினாள்.
சத்தம் இல்லாமல் போகவே அவளை திரும்பி பார்த்தான் .
அவள் கையில் அவன் பாஸ்போர்ட் பார்த்து, ஆஹா தெரிஞ்சிடுச்சா ? .. அவன் செய்த தப்பு உரைத்தது ..என் கண்மணிக்கு எத்தனை அதிர்ச்சியா இருக்கும் என்று அவளுக்காக வருந்தினான் . நான் அவளை ஏமாற்றிவிட்டேன் நினைக்க கூடாது, என் காதலை சந்தேகிக்க கூடாது என்று வேண்டினான் .
இவளிடம் பேசி புரிய வைத்து தான் கிளம்பனும் முடிவு செய்தான்.
அவள் அருகில் முன்னேறி “ வனி, நானே உன்னிடம் சொல்லணும் தான் இருந்தேன் ! ஆனா நடந்த கலவரத்தில் உன்னிடம் சொல்லணும் சுத்தமா மறந்துட்டேன் !”
“சிவா, நாம எத்தனை காலமா லவ் செய்யறோம் !”
என் செல்ல குட்டிய பார்த்த நொடியில் இருந்து …….
“அது தான் எப்ப கேட்கிறேன் !”
சிவா “……எட்டு மாதமா லவ் செய்யறேன்!”
“எட்டு மாதத்தில் ஒரு தடவை கூடவா நீங்க யாரு என்று சொல்லணும் தோன்றவில்லை …”
அவன் பேசாமல் இருக்கவே “சொல்லுங்க சிவா! எனக்கு எங்க அப்பா ,அம்மா, அண்ணாவை பார்த்து டாக்டர் என்றாலே பிடிக்காது சொல்லி இருக்கேன் தானே! திட்டம் போட்டு தான கல்யாணம் செய்தீங்க !”
சொல்ல கூடாது, அப்படி கேட்க கூடாது என்று எண்ணி இருந்தது, அவள் வாயில் இருந்து பட்டென்று வந்து விழுந்தது.
அவன் முகத்தில் அடிபட்ட வலியை கண்டு , மனதிலே சாரி இந்தர் என்று வருந்தி மன்னிப்பு வேண்டினாள்.
“ யார் திட்டம் போட்டு செய்தது வனி! மறைக்கணும் நான் எதையும் மறைக்கவில்லை . அப்போதைக்கு தள்ளி போட்டேன் . உன்னை எத்தனை ஆசையாக வீட்டுக்கு அழைத்து வந்தேன் . என்னை பிடிக்கவில்லை ,உங்க வீட்டுக்கு ஏத்த மருமகள் இல்லை என்று தேவை இல்லாமல் சண்டை போட்டது நீ தானே! என்னிடம் அப்பவே உன் நிலைமையை சொல்லி இருக்கலாமே ! எத்தனை நாள் உன்னுடன் பேசணும் தவித்தேன் .என்ன, எதற்காக என்று யோசிக்க முடியாமல் பித்து பிடிக்க வைத்தவள் நீ தானே!
திடீர் ஒரு நாள் எங்க அப்பா, அடுத்த வாரத்தில் கல்யாணம் என்று பெண் பார்க்க அழைக்கிறார்கள். எனக்கு எப்படி இருக்கும் சொல்லு ! என்னிடம் உனக்கு எதையாவது சொல்லணும் தோணுச்சா ? ஏன் எதையும் சொல்லவில்லை ..
நம்ம கல்யாணத்துக்கு எங்க அப்பா ஒத்துக்கவில்லை என்றாலும் உறுதியா உன்னை தான் கைபிடித்து இருப்பேன் !”
உடனே இந்த காரணத்துக்காக தான சிவா .. எனக்காக ஒரு போதும் உங்க குடும்பத்தை இழக்க கூடாது என்பதற்காக தான் சிவா என்று உள்ளுக்குள் மருகினாள் .
“ பேசு வனி ! உங்க அப்பா ,அம்மா மாதிரி உன்னை, நம்ம குழந்தையை கண்டுகொள்ளாமல் விட்டிடுவேன் என்று தானே உனக்கு பயம் . நீ பழகிய இத்தனை நாளில் என்னை பற்றி உனக்கு கண்டிப்பா தெரிந்து இருக்கும் . அந்த பயம் தேவை இல்லாதது வனி! உங்க அப்பா போல ஒரு போதும் என்னால் இருக்க முடியாது ! என் ஒரு கண் போல நீ !”
“அப்ப இன்னொரு கண் உங்க தொழிலா?”
அவள் தலையை கலைத்து, சிவா சிரித்தபடி “ நீ சொல்வது தான் சரி ! என் அடுத்த கண் நான் நேசிக்கும் என் தொழில் தான்” .
“அதை நீங்க…….. !” அவள் சொல்லாமல் நிறுத்த,
சிவா உள்ளுக்குள் சிரித்து “என்ன? உனக்காக தொழிலை வேண்டாம் சொல்ல சொல்லறியா?”
அவளுடைய கோபத்தை , எப்படியாவது சரி செய்ய வேண்டும், மனதில் இருக்கும் என்னத்தை மாற்ற வேண்டும் எண்ணி அவள் கண்ணை பார்த்து
“சரி, இந்த தொழில் வேண்டாம். பிறகு நாம சாப்பிட என்ன செய்யலாம் நீயே சொல்லு! இப்ப என்னுடன் நீயும் இருக்கிறாய் .எனக்கு வேற எதுவும் தெரியாது . தனியாக ராஜாங்கம் நடத்தி பழகிவிட்டு இனி யாரிடமும் கை கட்டி வேலையும் செய்ய முடியாது. உனக்கு வேற எதாவது தோன்றினால் சொல்லு ..கண்டிப்பா அதையே செய்யலாம் ..”
இவன் விளையாடுறானா என்ன? ஆசையாக வளர்த்த தொழிலை வேண்டாம் சொல்ல எப்படி முடியும் ? சீரியசாக தான் பேசிக் கொண்டு இருந்தான் .
அவள் குழம்பிய முகத்தைக் கண்டு, உன் எதிரில் இருப்பவன் மனநல மருத்துவன் என்று உனக்கு தெரியாமல் போச்சே! உன் மனதை அறிந்து உன் மூலமாகவே சரி சொல்ல வைக்க பேசுவதே எங்கள் திறமை என்று கூட யோசிக்க மாட்டியா வனி என்று சிவா உள்ளுக்குள் சிரித்து ,சோ ச்வீட் என்று கொஞ்சிக் கொண்டான் ..
இது மட்டும் ஷிவானிக்கு தெரிந்தது உனக்கு முதுகில் டின் கட்டிடுவா …ஜாக்கிரதை என்று மனசாட்சி எச்சரித்தது .
வனி பேச முடியாமல் “ச ,ச நான் அப்படி …” தடுமாற
“வனி, என்ன தான் எங்க வீட்டில் நாம சாப்பிட காசு கேட்கவில்லை என்றாலும் என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது! அப்பா இதுவரை எங்களிடம் ஒருமுறை கூட எத்தனை சம்பாதிக்கிறாய் ,என்ன செலவு , பணம் கொடு என்று கேட்டது இல்லை. அவருக்கே அவர் அப்பா தான் இன்னமும் செலவு செய்கிறார் .
நாங்க நாலு பேரும் , அப்பா உட்பட குடும்பத்துக்கு என்று காசு கொடுக்கணும் அவசியம் இல்லை . ஊரில் குத்தகை நிலம் மூலம் வரும் பணமே போதும். இருந்தாலும் வீட்டுக்கு என்று மாதம் ஒரு தொகையை தாத்தாவிடம் கொடுத்திடுவோம் . கொடுக்கவில்லை என்றாலும் ஏன் என்று கேட்கமாட்டார்கள் …அது நியாயமா சொல்லு..
எங்களை பொருத்தவரை எந்த அளவு சுதந்திரம் இருக்கோ அந்த அளவு அவர்கள் மீது மரியாதையும் பயமும் இருக்கு ..நான் சம்பாதிக்க ஆரம்பிக்க முந்தியே என் செலவை நான் தான் பார்த்துக் கொள்வேன் .படிப்பு ,உணவு ,உடை தேவைக்கு மட்டும் தான் கேட்பேன் .
படிப்பு போக எனக்கு ஏதாவது தேவை நண்பர்களுடன் ட்ரீட், இல்லை சினிமா போகணும், வெளியூர் போகணும் என்றால் நான் தாத்தா கடையில் வேலை, இல்லை அண்ணா ஹோட்டலில் , அப்பா கணக்கை கணினியில் ஏற்றி , நம்ம வீட்டை சுத்தம் செய்து பணம் சம்பாதிப்பேன் ! இதில் எனக்கு எங்கேயும் கௌரவ குறைச்சலா தோன்றினதே இல்லை” .
அவன் சொன்னதை கேட்க வனிக்கு மிகவும் ஆச்சரியம்..
அவள் வீட்டில் கைகளில் அழுக்கு படாமல் வளர்ந்த அவளையும் ,அவள் அண்ணனையும் நினைத்து பார்த்தாள்..
கண்களை கொட்டை பாக்கு மாதிரி விரித்துக்கொண்டு பார்க்கும் அழகை ரசித்து , “ வனி ,எங்க அப்பா எங்களுக்கு ஒரு போதும் செலவு செய்ய முடியாது என்று எல்லாம் சொன்னது இல்லை . எங்க அண்ணன்கள் இருவரும் எப்படி செய்தார்களோ நானும் அதை பின்பற்றினேன் .
எங்களுக்கு பொறுப்பு வரணும், பணத்தின் அருமை தெரியனும் என்று தான் இப்படி. இதை எல்லாம் எண்ணி முதலில் கடுப்பாக இருந்தாலும் இவர்களால் தான் எனக்கு பணத்தின் அருமை தெரிந்தது. என் உழைப்பின் பெருமை புரிந்தது .
அப்படி தெரிந்ததால் தான் என் காலிலே நின்று, இன்று சிடியில் முக்கியமான இடத்தில் எனக்கான மருத்துவமனையை கட்டி இருக்கிறேன் . பல பேருக்கு உதவறேன் . இலவசமா வைத்தியம் செய்கிறேன் .
நண்பர்களுடன் சேர்ந்து மக்களின் ஸ்ட்ரெஸ் ,டென்ஷனை எல்லாம் போக்க அடிக்கடி கேம்ப் ஆர்கனைஸ் செய்கிறேன் .
மெடிக்கல் கவுன்சில், வளரும் சிறந்த மருத்துவன் என்ற அவார்ட் கொடுத்து இருக்கு. எங்க அப்பா எனக்கு பின்னால் இருந்து கொடுத்த சபோர்ட் தான் என்னால் இதை சாதிக்க முடிந்தது .
ஏன் உங்க அம்மா பள்ளிகூடத்தில் இருக்கும் சிறப்பு குழந்தைகளுக்கு கூட நான் தான் ஸ்பெஷல் பயிற்சி தருகிறேன் . பணம் இல்லாத குழந்தைகளுக்கு இலவசமாகவே மருந்து தருகிறேன். நான் செய்வதை எல்லாம் விளம்பரபடுத்தனும் சொல்லவில்லை வனி ! நான் என்ன செய்யறேன் உனக்கு தெரியனும் அது தான்” .
‘ரொம்ப சீக்கிரம் இவன் என்ன செய்யறான் சொல்லிட்டான்’ முனுமுனுத்தாள்.. அது தான் அன்று அம்மா பள்ளியில் இவன் காரை பார்த்தேனா ? காரில் ஸ்டிக்கர் பற்றி கேட்ட போது கூட மழுப்பினானே? இவனை எல்லாம் …
“ எங்க அப்பாவும் , தாத்தாவும் அடிக்கடி, வெளி நாட்டுகாரனிடம் இருந்து உணவு ,உடை மட்டும் இல்லாமல், அவங்க போல சின்ன வயதிலே சொந்த காலிலே நின்று சம்பாதிக்கலாம் என்ற நல்ல விஷயத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்” .
சிவாவையே இமைக்காமல் பார்த்து இருக்கும் ஷிவானி உள்ளத்தில் இவன் அப்பாவை போல எனக்கு என் அப்பா என்ன செய்து இருக்கிறார் என்ற கேள்வி எழும்பி நின்றது .. ஒரு விதத்தில் இந்த கேள்வி கூட அபத்தம் என்று தான் அவளுக்கு தோன்றியது.
இதுவரை அவள் அப்பா காசிலே படித்து ,ஊர் சுற்றி, அவர் கொடுத்த படிப்பு வேண்டாம் என்று வீண் சண்டை போட்டு , படித்த படிப்பை ஒழுங்கா உபயோகமா பயன்படுத்தாமல், பிடிக்கவில்லை வேண்டாம் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
பாட்டி சொன்னது போல ஒரு ஏழை மாணவனுக்கு இந்த படிப்பு கிடைத்து இருந்தால் …
படித்த படிப்பை வைத்து மிஸ்டர் கண்ணன் சொல்வது போல சம்பாதிக்கணும் அவசியம் இல்லையே ! சேவை செய்யலாமே ! தேவையான எத்தனை பேருக்கு உதவலாம் . அவருக்கு பிடிக்காததை செய்யணும் ..எதை செய்தால் என்ன? அதுவே அவருக்கு பெரிய அடி தான ! இதை அப்புறமா பார்க்கலாம் என்று ஒதுக்கிவைத்தாள் .
“சொல்லு வனி! என்ன செய்யலாம் …”
இந்த மனநிலையில் யாரா இருந்தாலும் அழுது ,கத்தி, சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்வாங்க… அதே போல வனியிடம் எதிர்பார்த்தான் .
ஆனால் அவன் இதுவரை சொன்னதை பொறுமையாக கேட்டு மிகவும் மெச்சூர்டாக “ எனக்கு வரும் கணவர் மருத்துவனா இருக்க கூடாது நினைத்தேன் . ஆனா என்னை மீறி நடந்த காரியத்துக்கு என்னால் எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை . முன்பே சொல்லி இருக்கலாம் என்ற கோபம் தான். ஏனோ ஏமாந்த உணர்வு .. உங்களுக்கு பிடித்ததை செய்ய நான் தடுக்க போவது இல்லை இந்தர்”.
“அதே போல் உன்னையும் எதுவும் சொல்ல கூடாது சொல்லற ?அது தான ? உன் இஷ்டம் . உனக்கு பிடித்த எது வேண்டும் என்றாலும் செய்யலாம் .. கொஞ்ச நாள் தான், அதற்குள் முடிவு எடு . சும்மா இருக்க நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்று மறைமுகமாக அவளை எதாவது செய்ய சொல்லி தூண்டினான்.
“நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு கண்டிப்பா உங்களுக்கு பைசா கொடுத்திடறேன்” என்று எதிர் வாதம் செய்தாள்.
“நான் என்ன சொல்லறேன் நீ என்ன பேசற ?”
“எல்லாம் ஒன்று தான்…”
“ உனக்கு என்ன உதவி தேவை என்றாலும் செய்ய தயார் கண்ணம்மா.”. ஏற்கனவே சூட இருக்கும் அவளிடம் இந்த சமயத்தில் அவள் படிப்பு கரீயர் பற்றி வாதம் வேண்டாம் பேசாமல் இருந்தான் .
எப்போதும் யோசனையில் இருந்த ஷிவானி ” சிவா, நீங்க சொல்லி இருக்கணும், மறைத்து தப்பு தான் ! என்னை உயிரா நினைத்து இருந்தால் உண்மையை மறைக்காமல் சொல்லி இருப்பீங்க தான !”
“உன்னை உயிரா நினைத்ததால் தான் சொல்ல முடியவில்லை கண்ணம்மா!”
குழந்தை போல அவர்கள் இருவருக்கும் நடுவில் அவள் பெரிய டெட்டி பியர் பொம்மையை வைத்து ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
அந்த பொம்மைக்கு இந்தர் என்ற பெரிய டாலர் செயின், அவன் டி ஷர்ட் ,அவன் போடும் பாடி ஸ்ப்ரே போட்டு விட்டு இருந்தாள்…அதை பார்த்து ஷிவேந்தருக்கு சிரிப்பு தான் வந்தது .
இப்ப சிரிச்சா மேலும் கோபம் வரும் என்று அவள் அருகில் சென்று தரையில் முட்டி போட்டு “ வனி , really I am sorry . உன்னிடம் சொல்ல கூடாது ,மறைக்கணும் இல்லை கண்ணம்மா. அப்போதைக்கு எங்கே தெரிந்தால் நீ என்னை விட்டு விலகிவிடுவாயோ பயம் மட்டும் தான் இருந்தது .உன்னை எந்த காரணத்துக்காகவும் இழக்க கூடாது வெறி .
எனக்கு தெரியும் ,உனக்கு எத்தனை ஆதிர்ச்சியா இருக்கும் என்று . நீ பாட்டுக்கு லூசு மாதிரி வேற எதோ தொழிலை, தாத்தா கடையில் இல்லை அண்ணா ஹோட்டல் , இல்லை கட்டிட வேலையில் கற்பனை செய்து வைத்து இருப்ப தெரியும் . அதற்கு நான் பொறுப்பாக முடியுமா சொல்லு..”
ஷிவானிக்கு வந்த சிரிப்பை அடக்கி அவனை முறைத்தாள். அவள் கண்களில் சிரிப்பை கண்ட ஷிவேந்தர் ஒரு நொடி சந்தோசம் அடைந்தான் . பின்னர் அவள் முகத்தை கண்டு எனக்கு தான் அப்படி தோன்றியதா ? இவள் சிரிக்கலையோ! கோபமா இருக்காளா ? இல்லை வருத்தாம இருக்காளா என்று கண்டுகொள்ள முடியவில்லையே.
அவர்கள் அறையில் அமைதியாக டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் ஷிவானியிடம் “ வனி, கண்ணம்மா ! நாலு நாள் ஊருக்கு போறேன் ! உனக்கு கொஞ்சமாவது பீலிங்க்ஸ் இருக்கா டி ! ரெண்டு நாளா ஒரு சிரிப்பு கூட இல்லை .நீ இப்படி இருந்தால் நான் எப்படி கிளம்ப .. நான் போகவில்லை” என்று அவள் சம்மதத்துக்காக கெஞ்சிக் கொண்டு இருந்தான் .
சிவா போவது எத்தனை முக்கியமான கான்பிரன்ஸ் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் . அந்த கான்பிரன்ஸ் போக அழைப்பு கிடைப்பதே பெருமைக்குரிய விஷயம் ! இவன் திறமையை வைத்து அழைத்து இருக்கிறார்கள் என்றால் எத்தனை பெரிய விஷயம் என்று அவளால் சந்தோசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை .
இதுவே சிவா இடத்தில் அவள் அப்பா இருந்தால் எல்லாம் என் இஷ்டம் நான் அப்படி தான் ! என்னை யாரு கட்டுபடுத்த முடியாது என்று தான் சொல்லி இருப்பார் .
சூ ,டை எல்லாம் கழட்டி போட்டு “ நான் போகவில்லை வனி!” டிரைவர் மருதுவை அழைத்து போகவில்லை என்று வைத்துவிட்டு ஓய்வாக கண்களை மூடி படுத்துக் கொண்டான் . ஷிவானிக்கே அவனை பார்த்தால் பாவமாக இருந்தது . அவளும் அவன் மார்பிலே சாயிந்து படுத்து கட்டிக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து வழியும் நீர் அவன் சட்டையை நனைத்தது .
அதை உணர்ந்து “ ஹே செல்லம், எதுக்கு டா ! நான் இல்லாமல் நாலு நாள் ஜாலியா இருக்கலாம் நினைத்தீர்களா மேடம்! நான் போகவில்லை என்று அழுகையா ? கல்நெஞ்சக்காரி என்பது சரியா தான் இருக்கு”
சிவா என்ன சொல்லியும் அவள் அழுகை நிற்கவில்லை . அவள் கண்களை துடைத்து “அழுதால் உதை கொடுப்பேன் ராஸ்கல் ! என்ன நினைச்சிட்டு இருக்க !”
“நான் என் இந்தரை நினைத்துக்கொண்டு இருக்கேன்” என்று மேலும் இறுக்கிக் கொண்டாள் .
“வாய் மட்டும் தான் சொல்லுது .. ரொம்ப பொய் பேசறீங்க செல்லம்” . அவள் முறைப்பை கண்டுகொள்ளாமல் அவள் அதரங்களை சிறை செய்தான் .”ச, உப்பு கரிக்குது கண்மணி ..”
காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு கட்டிக் கொண்டு “டரைலர் அசத்தல் ..என்ன செல்லம், ரெடியா? மெயின் பிக்சர் பார்க்கலாமா?”
அவனிடம் இருந்து விலகி “ஒழுங்கா கிளம்புற வழிய பாருங்க ! சின்ன புள்ள தனமா என்ன பேச்சு..”
“வனி, உண்மையா நான் போகவில்லை ..”
“இந்தர், சாரி எனக்காக கிளம்புங்க ..உங்களுடையா முன்னேற்றதுக்கு என்றுமே நான் தடையா இருக்க மாட்டேன் ..”
அவன் ஷர்ட் எல்லாம் கண்ணீர் . அதை கண்டு “சிவா, வேற சட்டை போட்டுக்கோங்க ! கசங்கி ஈரமா இருக்கு !”
“வேண்டாம் டா ! எனக்கு என்னமோ நீயே என்னுடன் வருவது போல இருக்கு .இப்படியே இருக்கட்டும்” என்றவுடன் அவள் காதல் பார்வை அவனை இழுத்தது.
“வனி, கிட்ட வாயேன் ,உன்னிடம் ஒன்று சொல்லணும் .”.
என்ன சொல்ல வருவான் தெரிந்து ஷிவானி சிரித்து ஜாக்கிரதையாக கதவருகில் சென்று “ கிளம்புங்க .போய்ட்டு வந்து என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்க , எத்தனை தடவை வேண்டும் என்றாலும் சொல்லுங்க, கேட்டுக் கொள்கிறேன்” .
“வாக்கு மாறக் கூடாது பெண்டாட்டி !”
“கண்டிப்பா இந்தர்” என்று அவன் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டாள்.
ரெண்டு நாளா பக்கத்தில் வராமல் மனிதனை படுத்தி எடுத்துவிட்டு பேசுவதை கேளு ! பெட் அருகே சென்று அவள் டெட்டி பியர் பொம்மையை தூக்கி பிடித்து “ நான் வரும் போது இது இங்க இருந்தால் பொல்லாதவன் ஆகிடுவேன் ஜாக்கிரதை ..இல்லை, இப்பவே வெளியே தூக்கி போட்டிடறேன்” ..சிவா ,அவளுக்காக ஆசையாக வாங்கி கொடுத்த பொம்மை அது ..
“சிவா ப்ளீஸ்! நீங்க வரும் வரை இருக்கட்டுமே !”
“சரி , நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்” என்று கொஞ்சி சிவக்க வைத்து இறுக கட்டி பிடித்து “ மிஸ் U SO MUCH பெண்டாட்டி” என்று மனமே இல்லாமல் கிளம்பினான்..
“ I LOVE U SO MUCH ! தினமும் கால் செய்யுங்க ..”
***********