17:
அவள் மலர்ந்த முகத்தை வைத்தே கோமதி பாட்டி , வைதேகி பாட்டி சந்தோசம் கொண்டார்கள். புது பெண்ணை கிண்டல் செய்து சிவக்க வைத்தனர் .
“யாரு என் செல்லத்த கிண்டல் செய்வது” என்று அவளுடன் வந்து அமர்ந்து கொண்டான் .
“ஷிவானி, உன்னை மாமா கூப்பிட்டாங்க ! அவர் ரூமிலே இருக்கார் ..”
“நான் பார்த்துக்கிறேன் அத்தை!” என்று சிவாவிடம் ஜாடை காட்டி நகர்ந்தாள் . அவன் அப்பா எல்லாரிடமும் அளவா தான் பேசுவார் . ரெண்டு அண்ணிகள் இருந்தால் பொதுவாக பேசி நகர்ந்து விடுவார் . இப்ப இவளிடம் அப்படி என்ன பேச ?
ஷிவானி பாட்டி கோமதி, “ என்ன மாப்பிள்ளை ஊருக்கு எப்ப வரீங்க !மறு வீட்டுக்கு வரணும் !”
அண்ணி எல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு தான மறுவீடு போனாங்க! இவ அப்பா இங்க இருக்க எதுக்கு பாட்டி வீட்டுக்கு மறுவீடு! அந்த மனிதர் ஊரிலே, கல்யாணம் செய்தவுடன் எஸ்கேப்! நேற்றும் விருந்து போது சரியா வந்து கிளம்பிட்டாங்க . இதுவரை என்னிடமும் ஒன்றும் அப்படி சிரித்து பேசவில்லையே ! சிரித்து பேசவில்லையா ? இல்லை பேசவே இல்லையா?
அவர் அண்ணா, தம்பி ,அப்பா தான் பேசிக் கொண்டு இருந்தாங்க..
அப்போது தான் அவர் பேசவே இல்லை உணர்ந்தான்.
அவனுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது .. அப்பவிடமோ ,இல்லை வனியிடமோ முதலில் கேட்கணும்.
நேற்று இரவு விருந்து முடிந்தவுடன் , மகளிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டாரே! அவள் அண்ணாவும் , அண்ணியும் கூட யாரோ மூன்றாம் மனிதர் போல தான் நடந்து கொண்டாங்க ..அப்படி என்ன ஷிவானி மீது கோபம் .எங்க குடும்பம், அவங்க அந்தஸ்துக்கு ஒரு அளவுக்கு ஈடா தான இருக்கோம் ..
ரைட் வந்த மனிதன் வீட்டிலே அவர் பெண் வாழ்வதா என்ற கோபமா ? இல்லை அவர் பார்த்த மாப்பிளையை விட்டு என்னை காதலித்தால் என்று கோபமா ?
ரெண்டு நாளாக , ஷிவானியும் அவள் அப்பா அம்மாவை மிஸ் செய்வது போல இல்லையே ! அக்கா ரஞ்சு, மாமாவை கல்யாணம் செய்து கொண்டு போன போது எப்படி அழுதா ? இவர் கோபம் கொண்டால் எனக்கு என்ன ? என் கண்ணம்மா என்னிடம் வந்து சேர்ந்தாலே ! அதுவே போதும் ..
சிவா ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டு இருந்த போது அறைக்குள் நுழைந்த ஷிவானியை கண்டு, “ என்ன மேடம் மாமனாருடன் ரொம்ப கிளோஸ் போல ! உன்னிடம் கேட்க நிறையா கேள்விகள் இருக்கு டா ! இப்ப மணி ஆச்சு ..போயிட்டு வந்து பேசலாமா ?”
“ இன்றைக்கே கண்டிப்பா போகனுமா ?”
“ ஆமாம் டா ..சீக்கிரம் வந்திடறேன் .. உனக்கு தான் அரட்டை அடிக்க ஆளுங்க இருக்கங்களே ! அவங்களுடன் பேசினால் புருஷனையே மறந்திடற” என்று கொட்டு வைத்து கிளம்பினான் .
சிவா வரும் வரை வீட்டில் உள்ளவர்களுடன் அரட்டை ,சமையல் உதவி என்று பொழுது கழிந்தது .. ஷிவானி வீட்டில் வேலை ஆளுங்களே சமையல் செய்திடுவார்கள். ஆனா சிவா வீட்டில் மேல் வேளைக்கு மட்டும் தான் வேலையாள், சமையல் செய்வது பாட்டி ,அத்தை இல்லை ரெண்டு அண்ணிகள் .
அவர்கள் செய்கிறார்கள் என்று அவளால் சும்மா இருக்கவும் முடியவில்லை . பழக்கம் இல்லாத வேலையை செய்ய கொஞ்சம் திணறினாள்.
“ இந்தர் ஆபிஸ் எங்க அக்கா.. நீங்க ஹாஸ்பிடல் போகனுமா ?”
இந்த சிவா இன்னமும் அவளிடம் இவன் டாக்டர் சொல்லவில்லையா என்று சரண்யாக்கு அதிர்ச்சி ..
அவனை பற்றி பேச்சை தவிர்த்து “ நான் தினமும் அரை நாள் போவேன் .நித்யா அவ கிளாஸ்க்கு மாலை போவா ! உங்க கல்யாணம் என்பதால் ஒரு வாரம் லீவு . பெண்கள் வீட்டு வேலை என்று சோம்பி இருக்க கூடாது , அவங்க காலிலே நிற்கணும் ,சுதந்திரமா இருக்கனும் மாமா எண்ணம் .
நான் கல்யாணம் போது போட்ட கண்டிஷனே வேலைக்கு போகணும் என்று தான் . அவர் எண்ணம் எங்களுக்கும் வசதியா போச்சு ..
உடம்பை வருத்தி சம்பாதிக்கணும், இங்க செலவுக்கு கொடுக்கணும் எல்லாம் அவசியம் இல்லை . நரேன் தவிர நான் என்ன சம்பாதிக்கிறேன் யாருக்கும் தெரியாது . கேட்டதும் கிடையாது . நமக்கு என்று வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் , நம்மளை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும் மாமா பாலிசி .
அவர் மகன்களும் அவரை போலவே ! மூன்று பேரும் அவங்க சொந்த முயற்சியால் தான் முன்னேறி இருக்கிறார்கள் . நம்ம அத்தையுமே கிளப் மூலம் சோசியல் சர்வீஸ் என்று அவர்களால் முடிந்ததை செய்வார்கள் .
நீயும் டாக்டர் தான ! இனி மேற்கொண்டு என்ன செய்ய போற !”
ஷிவானி மனதில், நான் இனி இந்த தொழிலே வேண்டாம் என்று இருக்கேன் . இவர்கள் எல்லாம் வேளைக்கு போக நான் சோம்பி இருக்க முடியுமா ? அப்ப இனி என்ன செய்வேன் என்ற கேள்வி அவள் மனதை அரிக்க தொடங்கியது . இத்தனை நாளா விளையாட்டா நினைத்தது போல் இனி இருக்க முடியாதோ !
“ மாமா, சிவாவிடம் படிக்க வை சொல்லிக்கிட்டு இருந்தார் . என்ன மேல் படிப்பு எடுக்கப் போற ஷிவானி !”
“ அது அவரிடம் கேட்டு தான் முடிவு செய்யணும் அக்கா” என்று அப்போதைக்கு நழுவினாள்.
விசாலம் ஷிவானியிடம் “ உன்னுடைய நகை எல்லாம் லாக்கரில் வெச்சுக்கோ ! நீ தான் அதை பாதுகாக்கணும் ..உங்க அப்பா ,அம்மா உன்னை விட்டது போல நாங்க விட முடியாது ..எங்களுக்கு சிவா ஆசை, சந்தோசம் தான் முக்கியம்” .
விசாலம் பேச்சை கேட்ட ஷிவானிக்கு தான், என்னமோ போல் ஆகிவிட்டது. என் சிவா மட்டும் போதும் என்று தான வந்து இருக்கேன் . தெரிந்து தான கல்யாணம் செய்து கொண்டார்கள் ..பிறகு எதற்கு இப்படி குத்தி காட்டனும் என்று அவள் மனதில் கோபம் ..
“ என்றுமே நாங்க பெருமைக்காக எதையும் செய்ததே இல்லை ஷிவானி . நீ எது செய்தாலும் இந்த குடும்ப மானம், கௌரவம் அதில் அடங்கி இருக்கு மட்டும் நியாபகம் வெச்சுக்கோ ! எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவு செய்யாத . குடும்பத்துக்காக வாழ்வதும் சந்தோசம் தான் . அனுசரித்து போக கத்துக் கொள்ள வேண்டும் .. இங்க உனக்கு என்றுமே கஷ்டம் வராது உறுதியா சொல்ல முடியும். இதுவரை இங்கு யாரும், யாரையும், எதற்கும் வற்புடுத்தியது இல்லை . அப்படி ஒரு வேலை உன் மனதில் சங்கட எண்ணம் தோன்றினால் தராளமா தனி குடுத்தனம் போகலாம்..”
ஷிவானி முகத்தைக் கண்டு, “என் அத்தை என்னிடம் சொன்னதை தான், நான் சரண்யாவிடம் ,நித்யாவிடம் சொல்லி இருக்கிறேன் . என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தது போல உங்க உணர்வுகளுக்கும் நாங்க மதிப்பு கொடுக்கணும் இல்லையா ?”
விசாலாத்திற்கு எங்கே ஷிவானி ஷிவேந்தருக்காக அவள் அப்பா அம்மாவை தூக்கி போட்டது போல, வேற எதோ காரணத்துக்காக மகனை வேண்டாம் சொல்லிடுவாளோ என்ற பயம் ஆரம்பத்திலிருந்து இருந்து கொண்டே தான் இருக்கு ..
ஷிவானி தெளிவாக “அத்தை, உங்க பயம் அவசியம் இல்லாதது . நான் உறுதியா சொல்லறேன், என் சிவாக்காக தான் எங்க அப்பா, அம்மா உட்பட அத்தனையும் வேண்டாம் உதறிவிட்டு வந்து இருக்கேன் . சிவா மனம் கோனும் படியா நடக்கவே மாட்டேன் . இந்த குடும்ப கௌரவத்துக்கு என்னால் பங்கம் வராத படி நடந்து கொள்வேன் அத்தை” .
நீ சொல்வதை உன்னால் கடைசி வரைக்கும் காப்பாற்ற முடியுமா பார்க்கலாம் என்று விதி கேலி செய்து சிரித்தது …
“நாலு சுவருக்குள் பேச ஆள் இல்லாமல் கஷ்ட பட்டு வளர்ந்த எனக்கு இப்படி ஒற்றுமையா கூட்டு குடும்பத்தில் வாழ சிறு வயது முதலே ஆசை ” என்று கண்ணில் நீருடன் பேசுவதைக் கேட்டு விசாலம் மனம் உருகியது . அவளை அணைத்த படி
“எனக்கு தெரியும் டா, இருந்தாலும், இந்த குடும்பத்துக்காக சொல்லி தான் ஆகணும் . மாமாக்கு நம்ம குடும்பம் மீது யாரும் ஒரு சொல் தாப்பா சொல்ல கூடாது எண்ணம் ! இதுவரை மகன்களையும் கண்டிக்கும் நேரத்தில் கண்டித்து அரவணைத்து போகும் நேரத்தில் அரவணைத்து போகிறார்.
நான் முதலில் சிவா மீது கோபமா தான் இருந்தேன் . நீ அவன் மீது வைத்து இருக்கும் பாசத்தைக் கண்டு உடனே கல்யாணத்துக்கு சரி சொன்னேன் . உனக்கு எதா இருந்தாலும் நாங்க இருக்கோம் மட்டும் நியாபகம் வெச்சுக்கோ” என்றவுடன் ஷிவானி கண்ணீர் பெருகியது .
“அசடே, யாரவது பார்த்தால் முதல் நாளே மாமியார் மருமகளை ராகிங் செய்யறாங்க கிண்டல் செய்ய போறாங்க ! உங்க மாமாவே அவர் செல்ல மருமகளை இப்படி செய்துவிட்டாயே என்று உள்ளே வைத்து விடுவார் . போ, போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு !”
இவரை போய் தப்ப நினைத்துக் கொண்டோமே என்று தலையில் குட்டி “தங்க யு அத்தை” என்று அவர் கன்னத்தில் முத்தம் வைத்து சிட்டாக பறந்தாள்.
அங்கு வந்த வைதேகியிடம் “ விளையாட்டு பெண்ணா இருக்க அத்தை! சின்ன பெண் தான,சொன்ன புரிஞ்சுப்ப” என்று மருமகளை பற்றி பெருமையாக பேசினாள்.
இந்த சின்ன பெண் தான் ஷிவாக்காக அவள் அப்பாவையே எதிர்த்துக் கொண்டு வந்து இருக்கிறாள்…
அப்பப்ப அவள் அப்பா , அம்மாவை எண்ணி வருத்தம் அடைந்தாள். இங்கே வந்து ரெண்டு நாள் ஆச்சு . புது இடம் சூழல் எப்படி இருக்கேன் ஒரு போன் கூட இல்லையே! அதை எல்லாம் போக்கும் வகையில் சிவா அவன் பாச மழையில் அவளை திணறடித்தான். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அவளுக்காக பார்த்து செய்தான்.
அவளை கண்மணி போல் காக்கும் சிவாவே அவள் உலகம் என்று அவனை சுற்றி வந்தாள். அவள் அன்பை வாரி வழங்கினாள். உலகமே அவள் கையில் என்று சந்தோசம் அடைந்தாள்.
சமையலில் உதவி என்கின்ற பேரில் வேலை செய்து கொண்டு இருந்த ஷிவானி இன்னும் ஒரு வாரத்தில் ஆதி கிளம்புவதாக மெச்செஜ் பார்த்தவுடன் “அக்கா , ரொம்ப நேரமா அவருக்கு ட்ரை செய்யறேன் .போனை எடுக்க மாடீங்கிராறு !”
“அவன் ஹாஸ்பிடல் போனா போனை சிலெண்ட் போட்டிடுவானே ஷிவானி . அவனா உன்னை அழைத்தால் தான் உண்டு” . மிக்சி ஓடும் சத்தத்தில் சரண்யா சொன்ன முன் பாதி கேட்காமல் போனது
“அவரே பார்த்து அழைக்கட்டும் . நான் ஆதி , ஜீவாவை பார்க்க போறேன் . அவர் வந்தா சொல்லிடுங்க . சீக்கிரம் வந்திடறேன் அக்கா ..”
சரண்யா தயங்கிய படி , “ஷிவானி, அத்தை அண்ணன் உங்களை பார்க்க வரதா சொல்லி இருக்காங்க .. அவங்க வந்து போன பிறகு போகலாமே ! அத்தைக்கு அவங்க அண்ணன் என்றால் உயிர் . அவர்களை அவமதித்தது போல ஆகும் நினைக்க போறாங்க “.
“அக்கா, அவங்க எப்படியும் இரவு உணவு வரைக்கும் இருப்பாங்களே! அதற்கு பிறகு போக முடியாது” . கண்டிப்பா போகணும் என்று எப்போதும் அவ அப்பாவுடன் பிடிவாதம் பிடித்து கிளம்புவதை போல கிளம்பினாள் .
இவளிடம் மெதுவா சொல்லி தான் புரிய வெக்கணும் என்ற நித்யாவை பார்த்து “சரியா சொன்ன நிது. அவளே கொஞ்ச நாள் போனால் புரிந்து கொள்வாள்.”
ஜீவா, அமெரிக்கா கிளம்புவதற்குள் அவளுக்கு இத்தனை உதவி செய்த அவனுக்கும் , அவள் பெரிப்ப மகள் நந்தினிக்கும் பேசி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் நிறைந்து இருந்தது . ஜீவாவுடன் பேசி தான் பாட்டியிடம் பேச வேண்டும்.
மாலையில் ஆசையாக வீட்டுக்கு திரும்பிய சிவாக்கு , ஷிவானி வீட்டில் இல்லை என்ற ஏமாற்றமே மிஞ்சியது . நேற்றே அவளை வெளியே அழைத்துக் கொண்டு போகணும் நினைத்து இருந்தான் ..வேலை விஷயத்தில் மறந்துவிட்டான்.
இன்றாவது போகலாம் நினைத்தால் ….எங்க போனா ! எதுக்கு இத்தனை முறை கால் செய்து இருக்கா ? அவளுக்கு அழைத்தால் எடுக்கவில்லை ..
..அவன் மாமா ,அத்தை , அவர் பெண் மஞ்சு எல்லாரும் வந்து இருந்தார்கள் . நுழைந்தது முதல் “ஷிவானி எங்க டா! நீயும் அவளும் ஒன்றா தான போனீங்க” என்று அவன் அன்னை கேட்டு நச்சரித்தாள்..
அவள் என்னுடன் வரவில்லை என்று சொல்லி அவன் அன்னையை டென்ஷன் செய்ய வேண்டாம் அமைதியாக இருந்தான் .
தனியா எங்க போனா ? அண்ணியிடம் எதாவது சொல்லி இருப்பாளோ ! சரண்யா, நித்யா பிசியாக இருந்ததால் அப்போதைக்கு பேச முடியவில்லை ..
அவன் மாமா சதாசிவம் “எங்கப்பா என் மக!”
“இப்ப வந்திடுவா மாமா ..கோவிலுக்கு போகணும் சொன்னா ? நான் தான் வர வழியிலே இறக்கி விட்டு வந்தேன்” என்று மழுப்பினான் .
“என்ன பையன் போ! அவளுடன் போயிட்டே வந்து இருக்கலாமே ! இதை எல்லாம் சொல்லனுமா” என்று அவன் மாமா சொல்லிக் கொண்டு இருந்த போது ஷிவானி வேகமாக நுழைந்தாள் .
அச்சோ , இவ எதாவது சொல்லி சொதப்ப கூடாது என்று உடனே “ ஷிவானி , இங்க இருக்கும் கோவிலில் இருந்து வர இத்தனை நேரமா ? கூட்டமா ? பார்கிங் இல்லை என்று வீட்டுக்கே வந்துட்டேன் ..சாரி டா” என்று அவளுக்கு பேச இடம் கொடுக்காமல் அவனே பேசி முடித்தான் .
என்ன சொல்லறீங்க இந்தர் என்று பேச வந்ததை அப்படியே பேசாமல் விழுங்கினாள்.
“இவங்க தான் மாமா, அத்தை” என்றதும் சிவாவுடன் அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். சதாசிவம் மெச்சும் பார்வையை தங்கையிடம் வீசினார் ..
“வனி, அண்ணி அப்போதில் இருந்து தேடறாங்க போ” என்று அவள் உள்ளே சென்ற பிறகு தான் மூச்சு விட்டான் ..
இரவு அவர்கள் அறையில், “ எங்க போன ஷிவானி . சொல்லிட்டு போக கூடாது . அவசரமா எங்க போன ! வெளியே போகலாம் எத்தனை ஆசையாக வந்தேன்” என்று முறைத்து “மாமாவை பார்க்க போனியா ?”
“மாமா இன்று ஊரிலே இல்லையே!”
“ எங்க அப்பா இல்லை , உங்க அப்பாவை சொன்னேன் !”
“அவர் தான் எனக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை சொல்லிட்டாரே! அப்புறம் அவரை எதுக்கு பார்க்க போறேன்! அவரா அழைத்தாலும் நான் போவதாக இல்லை” .
இன்று இதை பற்றி அவளுடன் கண்டிப்பா பேச வேண்டும் குறித்துக் கொண்டான்.
“என் செல்லம் வேற எங்க போனீங்க ?”
“நான் ஜீவாவை பார்க்க போனேன்!” சிவா அதிர்ந்து ஜீவாவா ? மனதில் இன்றே அவனை பார்க்க போகணும் என்ன அவசியம் …
“அவனை எதுக்கு?” குரல் மாறாமல் காக்க பெரும் பாடு பட்டான் ..
என்ன தான் மருத்துவனா இருந்து கவுன்செலிங் என்ற பெயரில் ஆயிரம் பேருக்கு அட்வைஸ் செய்தாலும், தனக்கு என்று வரும் போது பொறாமை உணர்வு தலை தூக்குவதை அவனால் தவிர்க்க முடியவில்லை .
“ஆதி, நிகில் அடுத்த வாரம் ஊருக்கு போறாங்க.. நாம எல்லாரும் சினிமா போகலாமா கேட்டாங்க ..உங்களை கேட்டு சொல்லறேன் சொல்லிட்டேன் ..என்ன போகலாமா ?”
சிவா முகத்தை கண்டு “சாரி இந்தர் . உங்களிடம் சொல்லிட்டு போகவில்லை என்று கோபமா ? நான் உங்களுக்கு பல தடவை அழைத்து பார்த்தேன் . நீங்க எடுக்கவில்லை . அக்காவிடம் சொல்லிட்டு தான் போனேன்” என்று கெஞ்சும் மனையாளிடம் ஷிவானி, “ இன்று மாமா அத்தனை தொலைவில் இருந்து நம்மளை காணவே வந்து இருக்காங்க . நீ கிளம்பி போனா அம்மாக்கு கோபம் வராதா .. அண்ணியும் எத்தனை நேரம் சொல்லி சமாளிப்பாங்க !
கல்யாணம் ஆனா புதிதில் தனியா கிளம்பினா தப்பா எடுத்துக்க மாட்டாங்களா! என்னுடன் தான் கிளம்பி இருக்க நினைத்து பேசாமல் இருந்தாங்க” .
“தப்பா எடுத்துக்க என்ன இருக்கு ! ஏன் தனியா போக கூடாது சிவா ! எனக்கு பழக்கப்பட்ட இடம் தானே ! தேவை என்றால் போக தானே வேண்டும் . எல்லாத்துக்கும் உங்களை எதிர் பார்க்க முடியுமா ? நீங்க தான சொன்னீங்க ,அடுத்தவங்களுக்கு எல்லாம் பார்க்காத உனக்கு என்ன தோணுதோ செய் என்று ! முக்கியமான விஷயமா ஜீவாவை பார்க்கணும் தோனுச்சு ! கிளம்பிட்டேன்” ..
அப்படி என்ன அவன் முக்கியம் என்று தோன்றினதை கேட்காமல் வாய்க்குள்ளே தள்ளினான் . அவள் அப்பவே என்ன என்று சொல்லி இருந்தால் அவன் மனதில் வளரும் வேண்டாத சந்தேக குப்பை செடியை முளையிலே வளரவிடாமல் கிள்ளி இருக்கலாம் .
நான் சொன்னது எனக்கே ரிபீட் ஆகுதே ! அவளுக்கு அவன் வீட்டு நிலைமையை விளக்கி எடுத்துரைத்தான் ..
ஷிவானி வீட்டில் எந்நேரம் வேண்டும் என்றாலும் வெளியே போவாள் ,எப்போது வேண்டும் என்றாலும் வருவாள் .. அதற்கு என்று இரவு வெகு நேரம் எல்லாம் வெளியே தங்க மாட்டாள் . கோமதிக்கு பயந்து எட்டு மணிக்குள் வீடு திரும்பிடுவாள் .. அவளை ஒருவரும் கேள்வி கேட்டதே இல்லை .. இன்று சிவா , சரண்யா கேட்ட போது இதை எதுக்கு இப்படி பெரிது செய்கிறார்கள் என்று தான் தோன்றியது ..
கூட்டு குடும்பத்தில் இருந்தால் இப்படி தான் என்று போக போக புரிந்து கொள்வாளோ என்னமோ ?
“ சரி இந்தர் , நீங்க சொன்ன படியே கேட்டுக் கொள்கிறேன்” என்று அவனிடம் சரண் அடைந்தவுடன் “குட் ! என் தங்கம் இத்தனை ஸ்மார்ட் ..நான் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு……….”
“வாய திறந்தா பொல்லாதவ ஆகிடுவேன் ,ஜாக்கிரதை!” என்று அவன் வாயை அவள் கைகள் கொண்டு மூடியவுடன் முத்தம் பதித்து குறுகுறுப்பு மூட்டினான் .சும்மாவே இருப்பதில்லை திருடா என்று அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள் .
இரவு அவன் மனையாளின் அருகில் பேசணும் நினைத்தது எல்லாம் மறந்து போனது ..
ஷிவானி ,சீக்கிரமாகவே அந்த வீட்டில் பொருந்திவிட்டாள். அவள் எதிர்பார்த்த வாழ்க்கை , துணை கிடைத்ததை எண்ணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
அவனுடன் இருக்கும் நேரம் எல்லாம் சொர்க்கத்தில் இருப்பது போல திளைத்தாள். அவன் செய்யும் லூட்டி , சுவாரஸ்யமான பேச்சு ,செல்ல சீண்டல்கள் என்று பொழுது வேகமாக நகர்ந்தது . அந்த இனிய தருணங்களை எல்லாம் மனதில் பொக்கிஷமாக பாதுகாத்தாள். அவன் வீட்டில் இருந்தால் அவளை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் கைக்குள்ளே அடைகாத்தான் .
அடுத்து வந்த வாரத்தில் ஒரு நாள் மதியம் வேலை முடித்து அறைக்கு வந்த ஷிவானி, பெட்டியை பாக் செய்துக் கொண்டு இருந்த சிவாவைக் கண்டு “எங்க இந்தர் கிளம்பற! பாட்டி ஊருக்கு அடுத்த வாரம் தான போறோம். ஹனி மூன் அடுத்த மாதம் தான் போக முடியும் சொன்ன !”
“ஹனி! நான் முக்கியமான வேலை விஷயமா பிரான்ஸ் போகணும் . முதலில் அடுத்த மாதம் எண்ணி இருந்தேன்! இந்த வாரம் தான் அந்த கான்பிரன்ஸ் . இப்ப தான் கைக்கு டிக்கெட் கிடைத்தது . நாளைக்கு கிளம்பி நான்கு நாளில் திரும்பிடுவேன் !”
இறங்கின குரலில் “நாலு நாளா? பிசினஸ் மீட்டிங்கா! நானும் வரேன் சிவா ! பிரான்ஸ் பார்த்தது போல் ஆச்சு, நம்ம ஹனி மூன் கொண்டாடினது போல் ஆச்சு !” அவளை பார்க்கவே பாவமாக இருந்தது ..இருந்தாலும் “அங்கு போனா உன்னை பார்க்க எல்லாம் நேரம் இருக்காது டா ! எத்தனை சீக்கிரம் முடிக்கிறேனோ அத்தனை சீக்கிரம் திரும்பிடுவேன் ! நீ இருந்தால் உன்னை தனியா விட்டு போகணும் கஷ்டமா இருக்கும் .இங்க தான் இத்தனை பேர் இருக்கங்களே !”
“உங்க அண்ணா , தாத்தா யாரையாவது போக சொல்லு! நீ இங்கயே இரு இந்தர் ப்ளீஸ்” என்று கெஞ்சும் மனையாளை ஆசையாக அனைத்துக் கொண்டான் .
இவளிடம் இப்ப என்ன சொல்லி புரிய வைக்க !
“என்ன பதிலை காணோம் இந்தர்”.
இந்த ஒரு வாரத்தில் என்னை பற்றி இவளிடம் முழுதா சொல்லி இருக்கணும் . அப்ப எங்க இது எல்லாம் தோணுது. முதலில் பேச எங்க நேரம்..
“அவங்க எல்லாம் போக முடியாது ! நான் தான் போகணும் வனி” ! அதற்குள் முக்கிய போன் கால் வந்ததால் வெளியேறினான்.
கட்டில் மீது கிடக்கும் அவன் பைல், பாஸ்போர்ட் எல்லாம் பார்வையிட்டாள் . “டாக்டர் ஷிவேந்தர்” என்றதை பார்த்து அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை .
கைகள் நடுங்கியது .. அருகில் இருந்த காகிதத்தில் “2016-2017 INTERNATIONAL PSYCHIATRY MEDICAL CONFERENCE ….. PARIS” அழைப்பிதழை பார்வையிட்டாள். அவன் லெட்டெர் pad கண்ணில் பட்டது! அதில் Dr. M .Shiventhar MD இருந்தது . அவள் காண்பது கனவா என்று கூட குழம்பினாள் . அப்ப, சிவா மனநல மருத்துவனா ???? ஏன் இதுவரை சொல்லவில்லை ….
அவன் வேலை தவிர உலகில் உள்ள அணைத்து விஷயத்தையும் பேசிக் கொண்டோமே ! நான் கேட்கவில்லை என்றால் அவனாவது சொல்லி இருக்கலாமே ! எங்க அப்பாவுடன் சேர்ந்து என்னை ஏமாற்றி இருக்கானா?