16.2:
“என் செல்லதுக்காக பார்த்து , பார்த்து இப்படி அழகா, ரசனையா அலங்காரம் செய்ய சொன்னேன். அனுப்ப வேண்டியவங்களை அனுப்புவதை விட்டு வரிசையா ஆட்களை அனுப்பினால் கோபம் வராதாக்கும்,” என்றவுடன் வனி கிளுக் என்று சிரித்துவிட்டாள்.
“என் நிலைமையை பார்த்தால் சிரிப்பு வருதாக்கும்” என்று அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான் .
“மூச்சு முட்டுது டா ! உங்க அண்ணிகள் உங்களை விட ச்வீட்”
“….அது எப்படி? நான் தான் ச்வீட் என்று ப்ரூவ் செய்யட்டா?” என்று அவனை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பளபளக்கும் இதழ்களை வருடினான்.
“அச்சோ தெரியாம சொல்லிட்டேன் ! நீங்க தான் ச்வீட் ! வெல்ல கட்டி ! சுகர் பாக்டரி……. இப்படி வழிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள் சிவா !”
“எங்க அண்ணனை விட நான் தேவல என்று நினைத்து இருப்பாங்க”
எளிதான அலங்காரத்தில் அவனை கிறங்கடித்தாள் . என் செல்லம் இத்தனை அழகா ? அவனிடம் இருந்து நழுவி “ இந்தாங்க, முதலில் இதை குடிங்க .. கோல்ட் பாதாம் மில்க் .கொழுந்தனுக்கு தெம்பு வேண்டுமாம்” என்று சிரித்துவிட்டாள் ….
ஷிவானி பாவமாக , “ கொழுந்தன் அடிக்கும் லூட்டியை தாங்க எனக்கு தான் தெம்பு வேண்டும் என்று அவங்களுக்கு தெரியல போல…”
“உனக்கு ஓவர் லொள்ளு தான் . ஐயா அல்ரெடி புல் சார்ஜ் தெரிஞ்சுக்கோ ! வேண்டும் என்றால் டெஸ்ட் செய்திடலாமா ?”
“சிவா ,நான் உங்க மனைவி என்று இன்னும் நம்ப முடியவில்லை” . அவன் கைகள் அவள் இடையை அழுத்தியவுடன் அவள் தேகம் முழுதும் சிலிர்த்தது.. அவன் மார்பிலே ஒன்றிக் கொண்டாள்.
“வனி, வனி ,தூங்கிடாத! உன்னிடம் கொஞ்சம் பேசணும் ..”
“ தூக்கம் வருது இந்தர். ரொம்ப நாள் கழித்து செம டான்ஸ் …நீங்களும் அசத்திடீங்க ?”
“ஐயா எல்லாம் பிறக்கும் போதே எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற்று பிறந்து இருக்கேன் .inborn “ என்று பெருமையாக பேசினான் .
ஓவர் பீத்தல் பா !
அவள் இடுப்பில் குறுகுறுப்பு மூட்டி முன்னேறிய கைகளை பிடித்து “ சும்மா இரு திருடா ,கூச்சமா இருக்கு” என்று தடுத்தாள்.
இது எல்லாம் வேளைக்கு ஆகாது .. அந்த AC அறையிலும் அவள் காது மடல்கள், கன்னங்கள் சூடாகி மேலும் சிவந்தாள்.. மூடிய இமையில் ‘கண்ணம்மா’ அழுந்த முத்தமிட்டான்… அவன் குரல் அவள் உயிர் வரை தீண்டியது . அவ சிலிர்த்த தேகத்தை கண்டு, “என்ன மேடம் ..சத்தம் இல்லாமல் இருக்கீங்க ..”
அவன் காதில் மெல்ல
“என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண்பேச வார்த்தை இல்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெக்கம் தள்ள
சின்ன சின்ன ஆச
உள்ள திக்கி திக்கி பேச
மல்லிகபூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்து பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேற்க
புத்தம் புது வாழ்க்
என்ன உன்னோடு சேர்க்க
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள் ….
சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே
எந்நாளும் எந்நாளும்
சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னால சேருதே
பாரம் கூடுதே
தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே ……..
அவள் இனிய குரலில் மயங்கினான் . அவன் உடல் கதகதப்பில் அவனுள்ளே அவளை புதைத்துக்கொண்டாள் . அவளை விலக்க முடியாமல் “வனி செல்லம்” என்று ஆசையாக மேலும் இறுக்கி அணைத்து கொண்டான் . கொஞ்ச நேரம் சத்தம் இல்லாமல் போகவே “ தூங்கிடீன்களா ? ரொமாண்டிக் சாங் பாடி உச்சுபேத்தி விட்டு தூங்கினால் என்ன அர்த்தம் டி !”
விலகாமல் ரகளை செய்யும் ஷிவானி கழுத்தில் குறுகுறுப்பு மூட்டிய படி ” உனக்கே நல்லா இருக்கா ? மூன்று நாளா ஏமாத்தற ?”
“ அடப்பாவி ! கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆச்சு ! அதற்குள் உங்களுக்கு மூன்று நாளா?”
அவன் உதடுகள் அவள் முகம் எங்கும் முத்திரை பதித்தது. “ட்ரைலர் போர் அடிக்குது .. இனி மெயின் பிக்சர் ஒட்டிட வேண்டியது தான்” என்று அவளை தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் . இனிதான இல்லறம் தொடங்கியது .
விடிய விடிய பல பாடங்களை கற்றுக் கொடுத்து காலை ஐந்து மணிக்கு மேல் தான் அவளை தூங்க விட்டான் .
அறைக்குள் வெளிச்சத்தை கண்டு விழித்த சிவா, அவனை ஆசையாக கட்டிக் கொண்டு தூங்கும் மனையாளை ரசித்தான் . அழகி என்று அழுந்த முத்தம் கொடுத்து முன்னேறிய கைகளை தடுத்து , “ கொஞ்சம் தூங்க விடு டா ! இப்ப தான தூங்க ஆரம்பித்தேன் ..”
“எனக்கு தூக்கம் வரலையே!”
“ப்ளீஸ் டா !கண் எரியுது” .. இண்டர்காம் அலறியவுடன் “இந்தர் போன் அலறுது…”
“சரி அண்ணி ! நான் எடுத்துக்கிறேன்..”
அவன் சரண்யா அண்ணி அவர்களுக்காக அறை வாசலில் பாலும், காலை உணவும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள்.
செல்லம், கொஞ்சம் சாப்பிட்டு படுத்துக்கோ !
கண்களை மூடிய படியே “ யாரு சிவா ! “
“அண்ணி தான் டிபன் கொடுத்து அனுப்பி இருக்காங்க ..”
“அண்ணியா???” அறக்க , பறக்க வேகமாக எழுந்தாள்.
“மணி எட்டா ? என்னை முன்பே எழுப்பி இருக்க கூடாது . இப்ப அவர்களிடம் என்ன சொல்ல ! நான் குளிக்க போறேன்” என்று சிவா சொல்வதை காதில் வாங்காமல் மின்னல் வேகத்தில் குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
பாட்டி தலைக்கு குளிக்க சொன்னாங்களே! குளித்து வெளியே வந்த ஷிவானி, “சிவா, சல்வார் போட்டுக் கொள்ளட்டா!”
‘ச, அது எல்லாம் எதுக்கு டா ! எனக்கு சரி வராது. என்ன சரி தான?’ குறும்பாக வினவிய சிவாவிடம்
வனி சீரியசாக “அத்தை உன்னிடமும் சரி வராது சொன்னாங்களா? என்னிடமே அத்தனை தடவை சொல்லும் போது உன்னிடம் சொல்லாமல் இருப்பாங்களா ?”
“ என்னது, எங்க அம்மா சொன்னாங்களா ? எதை டீ…” நான் என்ன சொல்லறேன் இவ என்னத்த சொல்லறா ?
“ அத்தை இந்த ஒருவாரம் மட்டும் எல்லாரும் வர போக இருப்பாங்க, புடவை கட்டு சொன்னாங்க ! இப்ப அண்ணியை வர சொல்லட்டா !”
“இதை சொன்னாங்களா!” என்று பிடித்து வைத்த மூச்சை இயல்பாக விட்டான்.
“புடவை தான் எனக்கும் வசதி ….”
“டேய் , திருடா . உங்களுக்கு என்ன வசதி .நீங்க எதோ ரெண்டு அர்த்தமாகவே பேசுவது போல இருக்கே !”
இல்ல , ஆமாம் என்று மாறி மாறி தலை ஆட்டினான் .
குளித்து புத்துணர்வாக இருக்கும் மனையாளை ரசித்த படி “அண்ணா கிளம்பும் வரை அண்ணி வரமாட்டாங்க!”
கப்போர்டை திறந்து “ இந்தர், எந்த புடவை கட்ட?” அவள் கலெக்ஷன் பாதி வெள்ளை நிறத்தில் இருந்தது .
“உனக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்குமா வனி!”
வனி உடனே, “எனக்கு பிடிக்குமோ, இல்லையோ எங்க அப்பாக்கு பிடிக்காது !அதுனாலே……” என்று சொல்லும் போது சிவா முறைத்தான் .
“அப்ப எனக்கு பிடித்த நிறம் உங்களுக்கு பிடிக்காதா மேடம்” என்று விளையாட்டு போல கேட்டவுடன் “என் சிவாக்கு எது எல்லா பிடிக்குமோ, எனக்கும் பிடிக்கும்” என்று கட்டிக் கொண்டாள் .
“ நீங்க bad பாய் ! இன்னும் குளிக்கவில்லை ..”
“சரி வா ரெண்டு பேரும் குளிக்கலாம்” என்று குளியல் அறைக்குள் தள்ளிக் கொண்டு போனான் .. “அச்சோ! இப்ப தான குளித்தேன் சிவா !…உங்களை……” என்று அவனுக்கு தாரளமாக கொடுப்பதை கொடுத்து பெற்றுக் கொண்டாள் . இது நல்ல பெண்டாட்டிக்கு அழகு …
“எத்தனை தடவை குளிக்க சிவா… “
“ எத்தனை தடவை தோணுதோ அத்தனை தடவை ..”.மேலும் பேசினால் இவன் ஏதோ இடக்காக செய்வான் என்று பேசாமல் அமைதியானாள்.
புடவைகளை ஆராய்ந்து அவள் நிறத்துக்கு பொருத்தமான ஊதா மற்றும் பச்சை நிற டசர் சில்க் புடவையை எடுத்துக்கொடுத்தான்.
அவன் கிளம்பும் வரை புடவையை வைத்து அப்படியும் இப்படியுமாக கட்ட போராடிக் கொண்டு இருந்த ஷிவானியை கண்ணாடி வழியாக ரசித்துக்கொண்டு இருந்தான் .
அவளுக்கு முதல் நாளே விசாலத்திடம் திட்டு வாங்கனுமா என்ற கவலை …இப்ப என்ன செய்ய ? ஷிவானி கலங்கின கண்களை கண்டு “கண்ணம்மா !என்ன ஆச்சு !”
கலங்கின கண்களை குனிந்தபடி மறைத்து “மணி வேற ஆச்சு! எங்க பெரிமா காலையிலே ஆறு மணிக்கே எழுந்துக்க சொல்லி அனுப்பினாங்க! இப்ப மணி ஒன்பது ஆச்சு! இந்த புடவையே கட்ட வரல ..”
“ அதுக்கா இப்படி ! நான் கட்டி விடறேன் ! உனக்கு கட்டிவிடவே நான் கத்துகிட்டேன் !” அவளை சீண்டி ,கொஞ்சி சிவக்க வைத்து, இயல்பாக்கி தான் விட்டான் . “ஷிவானி, அவங்களுக்காக, இவங்களுக்காக எப்போதும் செய்து பழகாத ! உனக்கு எப்படி பிடிக்குதோ, இருக்கணும் தோணுதோ அப்படி செய்து பழகு!”
“முதல் நாளே சூப்பர் போதனை! கொஞ்சம் அத்தையிடம் உங்க பையன் உங்க பேச்சை கேட்க வேண்டாம் சொல்லறாரு சொல்லிடறேன்! என்ன சொல்லட்டா ?” என்று குறும்பாக வினவியவுடன்
“ அடி பாவி, வந்தவுடனே கும்மி அடிக்கணும் நினைக்கிறியே! நான் அப்படி அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை செல்லம். எல்லாருக்கும் நாம இன்று மெதுவா தான் எழுந்துப்போம் தெரியும் . வேகமா எழுந்து போய் இருந்தால் தான் ஆராய்ச்சி செய்து இருப்பாங்க . சும்மா இப்படி டென்ஷன் ஆக வேண்டாம் சொல்லறேன்” . ஷிவானி பூம்பூம் மாடு போல தலையை எல்லா பக்கமும் ஆட்டினாள் .
“ இப்ப எத்தனை அழகா இருக்கு . நான் சொல்வதற்கு எல்லாம் இப்படியே செய்தால் எத்தனை நல்லா இருக்கும் கண்ணம்மா …”
“ச இந்தர் , உங்க இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்றி வைக்க மாட்டேனா ?” என்று வீரப்பா பேசி அவனிடம் மாட்டிக் கொண்டாள்.
ஷிவேந்தர் விஷமமாக சிரித்து இப்ப பாரு “செல் போனை எடு , ஷர்ட் பட்டன் போட்டு விடு , எனக்கு தலை துவட்டி விடு !”
அவன் அருகே நின்று , அவன் தலையை துவட்டும் போது புடவை மத்தியில் தெரிந்த அவள் வெளிர் இடுப்பு , அங்க வளைவுகள் அவனை பாடாய் படுத்தியது .. அதில் நர்த்தனம் ஆடியபடி “கண்ணம்மா ப்ளீஸ் …இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும் !”
இவன் பிளான் செய்தே நம்ம வாயை பிடுங்கி விட்டான் என்று முனுமுனுத்தது , முறைத்துக்கொண்டு அவன் சொன்னதை செய்தாள் .
ஷிவேந்தர் சிரித்த படி, “ சரி வா ! நாம விட்ட பாடத்தை தொடரலாமா .. மெயின் பிச்ஷர்..”
எல்லாத்துக்கும் சரி என்று செய்து வந்த ஷிவானி அவன் சொன்னதுக்கு அர்த்தம் புரிந்தவுடன் “ஹா ! போடா !… படவா , ஓவர் லொள்ளு செய்தால் பிச்சுபுடுவேன் பிச்சி ! ஏற்கனவே மணி ஆச்சு சொல்லிக்கிட்டு இருக்கேன் ,காமடி செய்துகிட்டு” ..
அவளை அணுவணுவாய் ரசித்து “உண்மையா தான் செல்லம்” என்று அவள் அருகில் முன்னேறிய போது “ இந்தர், ஸ்டாப் … இந்த டீலிங் எல்லாம் நைட் வெச்சுக்கலாம் சரியா ! என் செல்லம் தான” என்று பின்னால் நகர்ந்தாள் .
பிழைச்சு போ !
தலை முடியை தளர்வாக பின்னி, பூ வைத்து கண்ணாடியில் இப்படி அப்படியுமாக திருப்பி, அவள் பிம்பத்தை கண்டு சூப்பர் சிவா என்று முத்தத்தை பறக்க விட்டாள். அப்போது தான் கழுத்தில் எதோ குறைவது போல இருந்தது.. என்னது?
சும்மா இருக்கும் நல்ல பையனை இப்படி படுத்தினால் என்ன செய்ய ? என்று அவள் அருகில் தாவி குதித்து முன்னேறி, அவளை இறுக்கி அணைத்து அவள் தலையில் இருந்த மல்லிப்பூவை முகர்ந்து, கழுத்து வளைவில் முகத்தை பதித்து குறுகுறுபூட்டி அழுந்த முத்தம் கொடுத்தான்.
“சிவா ! என் தாலி ! எங்க டா ?”
“உன்னை பார்த்து அந்த மாதவன் பட டைலாக் சொன்னேன் என்பதற்காக அதே போல தாலி எங்க கேட்கிற ? கல்யாணம் ஆன அடுத்த நாளே தாலியை காணோம் சொல்லற ! தமிழ் பெண்ணா நீ ! உனக்கு ஓவர் லொள்ளு பெண்டாட்டி !”
சிவா , விளையாடாமல் எங்க சொல்லுங்க !
“என்னை கேட்டால் ? உனக்கு நேற்றே அதை கட்டியாச்சு ! இனி அது உன் பொறுப்பு ! தாலி கட்டின புருஷன் இங்க இருக்கேன் ! என்னை கண்டுக்காமல் அதை தேடிக்கிட்டு இருக்க ? உன்னை எல்லாம் என்ன செய்யறது டீ! தாலி முக்கியமா ? இல்லை நான் முக்கியமா?”
கட்டில் மெத்தை ,எல்லாம் தேடினபடி “ நீ வேண்டாம், தாலி தான் வேண்டும் ! என்னை கொலைகாரி ஆக்காதே இந்தர்… விடிய விடிய உங்களை தான கண்டுகொண்டு இருந்தேன் ! இப்ப இப்படி சொன்னால் …உங்களை அப்புறம் கவனிக்கிறேன் !”
“ அடிப்பாவி , இப்படியா சத்தம் போட்டு மானத்தை வாங்குவாங்க ! விட்டா மைக் வைத்து ஊருக்கே சொல்லுவ போல இருக்கே” என்று அவனும் அவளுடன் தேடினான் .
“ ஹா ! இந்தர் .. நேற்று நீ தான குத்துது என்று கழட்டின…எங்க போச்சு !”
“இருக்கும் வேளையில் , அந்த நேரத்தில் அதை தான் நியாபகம் வெச்சுப்பாங்களா செல்ல கட்டி ! நீயே சொல்லு !” என்று அவள் கோபத்தீக்கு மேலும் எண்ணெய் ஊற்றினான் .
அரை மணி நேர தேடலுக்கு பின் கட்டில் சந்தில் இருந்ததை கண்டு பிடித்தான் .
“ இத்தனை நேரம் தேடி கண்டு பிடித்து இருக்கேன் . என்னை கண்டுகொண்டால் தான் இதை தருவேன்” என்றவுடன் “போடா, நீயே வெச்சுக்கோ! நான் போறேன் !”
என்ன தான் அவன் அம்மா ,பாட்டி மாடர்னா இருந்தாலும் அந்த வீடு மருமகள்கள் தாலி ,மெட்டி கண்டிப்பா அணிய வேண்டும் சட்டம். நித்யாக்கு காலில் மெட்டி போட்டாலே அலர்ஜி ஆகும், இருந்தாலும் மருந்து போட்டு போட்டுக்கோ என்று தான் அவன் பாட்டி கூறினாள்.
அவன் ஏமாந்த சமயத்தில் அதை கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.
“ இந்தர், அடுத்த மாதம் இதே போல் இன்னொன்று வாங்கி கொடுத்திடு !காலையில் இருந்து எத்தனை கஷ்டம் பாரு !”
“ஆமாம் செல்லம் ! இன்னொரு மெயின் பிக்சர் ஓட்டி இருக்கலாம்” என்றவுடன் நீ திருந்தாத கேஸ் என்று அவனை முறைத்து வெளியேறினாள்.