16.1:
மாலை பெரிய நட்சத்திர ஹோட்டலில் ரிசெப்ஷன் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது . மணிவாசகம் ஆடம்பரம் வேண்டாம் தடுத்தும் ‘கண்ணன் மகள் ஓடி போய்ட்டா என்று ஒருவரும் சொல்ல கூடாது அதற்காக தான்’ என்று அவர் வாயை அடைத்தார்.
அவர் பெருமையை நிலை நாட்ட அந்த இடத்தையே வானுலகம் போல அலங்கரித்து இருந்தார் . பிரபலமானாவர்கள் அத்தனை பேரும் வந்து இருந்தனர் . வளர்ந்து வரும் புகழ் பெற்ற மனநல மருத்துவன் ஷிவேந்தர், அவர் மருமகனா என்று அனைவருக்கும் ஆச்சரியம் . ஏனோ அந்த விதத்தில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் .மருமகனும் அவர் நினைத்தது போல மருத்துவன் என்று சந்தோசம் . அதை வெளிக்காட்டாமல் வளைய வந்தார் .
ஷிவானி, அடர் நீலம், இளநீல கலர் பிஷ் கட் லேஹங்காவில் வானுலக தேவதையாக மின்னினாள் . ஷிவேந்தரும் கருப்பு நிற சூட்டில் ஆண்மை ததும்பும் அழகில், தன்னவளுக்கு நிகராக போட்டி போட்டான் . ஷிவானி மீது இருந்த அவன் கண்களை அவனால் பிரித்து எடுக்க முடியாமல் திணறித்தான் போனான் .
வந்தவர்கள் அனைவரும் டாக்டர், என்று விளித்ததால் அவளை தான் அழைக்கிறார்களோ, இல்லை அவள் அருகில் இருக்கும் அவள் அப்பா ,அம்மா ,அண்ணா ,அண்ணி, நண்பர்கள் யாரையாவது தான் அழைக்கிறார்கள் என்று பேசாமல் இருந்தாள். ஷிவேந்தர் மருத்துவனா இருக்கலாம் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை . அதை பற்றி பேசணும் என்று எண்ணி இருந்த ஷிவேந்தரும் நடந்த கலவரத்தில் மறந்தான் .
வந்த சிறப்பு விருந்தினர்கள் சென்ற பிறகு ஷிவானி நண்பர்கள், மற்றும் ஷிவேந்தர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து , ஆட்டம் பட்டம் என்று சந்தோஷமாக நேரம் சென்றது . மேடையில் நண்பர்கள் கேக் வெட்டி ரகளை செய்து கொண்டு இருந்தனர் .
அனைவரும் , தமிழ் பாடல்கள் மட்டும் அல்லாது ஹிந்தி, தெலுங்கு பாடல்களுக்கும் ஆடினார்கள் . ஷிவானி தோழிகள் ஆடியதை பார்த்து ஷிவேந்தர் நண்பர்கள் மூச்சு விட மறந்தனர் .
ஆட்டத்தை கண்டு என்னமா குத்தாட்டம் போடுதுங்க .. இவங்க எல்லாம் டாக்டர்கள் சொல்லிக்கிறாங்க என்று திறந்த வாய் மூடாமல் அந்த இடமே மிதக்கும் அளவிற்கு ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் ஆட்டத்தை ஷிவேந்தர் ரசித்ததை பார்த்து, “இங்க நான் இருக்க அங்க என்ன பார்வை ! கண்ணை நோண்டி பிடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினதை கேட்டு, உனக்கு இத்தனை பொறாமை ஆகாது டீ தங்கம் … கண் இருந்தும் பார்க்காத சொன்னால் எப்படி என்று சீண்டி வம்புக்கு இழுத்தான் .
ரிசெப்ஷன் மேடையில் நிற்கும் ஷிவானியிடம், கொஞ்சம் இப்படி திரும்பு, அப்படி போஸ் கொடு என்று நிகில் படுத்திக் கொண்டு இருந்தான் .போடா உனக்கு வேற வேலையே இல்லை. எங்கே ஆதி!
வந்தாச்சு ! என்ன ரெடியா ?
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த சிவா, ” என்ன ஷிவானி, எதுக்கு ரெடியா கேட்கிறாங்க ! ரொம்ப நேரமா கெஞ்சறாங்க போல”
பல்லைக் கடித்த படி , “அது எல்லாம் ஒனும் இல்லை சிவா ! கொட்டிக்க போகணுமாம்? அதுக்கு தான் இந்த நச்சு.” ஆதியை பார்த்து வாயை திறந்த கொன்னேபுடுவேன். ஒழுங்கா பேசாமல் ஓடிப்போய்டு என்று கண்ணாலே மிரட்டினாள்.
ஆதி அவளை முறைத்து , “ அது எல்லாம் இல்லை சிவா , எங்களுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட சொன்னால் உங்க பெண்டாட்டி பிகு செய்யறாங்க ! என்னமா ஆடுவா தெரியுமா ? எங்க கிளாஸ் டான்சிங் பிரின்சஸ் அவ தான்” ..
சிவா சந்தோஷமாக “ ஹே நிஜமாவா ! சொல்லவே இல்லை …போ வனி ! எனக்காக ..”
“வேண்டாம் சிவா, அவங்களுக்கு தான் வேலை இல்லை என்றால் உங்களுக்குமா ?” ஜீவா, டி ஜேயில் பாட்டு போட சொல்லி அவள் அருகில் வந்தான் .
“ மூன்று பேரும் பேசாமல் போய்டுங்க ..நான் வரல” என்று யாருக்கும் சந்தேகம் வராத படி சிரித்து படி திட்டினாள். நடப்பது அத்தனையும் சிவா சுவாரசியமா பார்த்துக் கொண்டு இருந்தான் ..
அவள் ஏன் ஆட மறுக்கிறாள் என்று மூவருக்கும் தெரியும். அவர்கள் குற்ற உணர்ச்சி போக்க தான் கெஞ்சிக் கொண்டு இருந்தார்கள் .
ஷிவானி வெஸ்டேர்ன் டான்ஸ் நன்றாக ஆடுவாள் . சில வருடங்களாக டான்ஸ் ஆடுவதை தவிர்த்தாள் . அவள் நண்பர்கள் ஆதி .நிகில், ஜீவா சொல்லாமல் போனதில் இருந்து அவளால் தான் அவர்களுக்கு எதோ என்ற குற்ற உணர்வு ! சில சமயம் அவள் அப்பாவால் உயிருக்கு கூட ஆபத்து நேர்ந்து இருக்கும் என்று எண்ணத்தினாலே டான்ஸ் என்றாலே பயந்து, உடல் வியர்த்து கால்கள் உதறும் . கல்லூரியில் நண்பர்கள் கெஞ்சியும் ஆட மறுத்தாள்.
இப்ப ஏனோ அந்த பயம் அவளுக்கு இல்லை . இருந்தாலும் அவளுக்கு தயக்கம்.
ஷிவானி எதிர் பார்க்காத சமயத்தில் ஆதி அவள் கைகளை பற்றி களத்தில் இறக்கினான் ..
“மல்லிகையில் ஒரு மாலை
தங்க சரிகையில் ஒரு சேலை
மல்லிகையில் ஒரு மாலை
தங்க சரிகையில் ஒரு சேலை
பூ ஒன்றை பூட்டி வைக்க தான்
கல்யாணம் கண்டுபிடித்தான்
தொடக்கம் மாங்கல்யம்
தந்துனநென
பின்பு ஜீவிதம்
துண்டனநென
தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துண்டனநென …………..
முதலில் ஆட மறுத்த ஷிவானி , சிவா தந்த ஊக்கத்தில் அவர்களுடன் இணைந்து உற்சாகமாக ஓரிரு ஸ்டேப் போட்டாள் .
அடுத்து அவளுக்கு பிடித்த ஹிந்தி பாட்டு ராம் லீலா படத்தில், டோல்லு பாஜே பாட்டுக்கு ஆட வைத்து தான் மூவரும் விட்டனர் .. மிக நளினமாக ஆடினாள் . ஷிவேந்தர் என் செல்லத்துக்கு இத்தனை திறமையா என்று வியந்தான். அவளுடன் ,ஷிவேந்தரை ஆட அழைத்தவுடன் குஷியாக களத்தில் இறங்கிவிட்டான் .
ஷிவேந்தர் ஆடும் அழகை ஷிவானி வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டு இருந்தாள். முதலில் தயங்கிய ஷிவானி சுற்றியும் நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஜோடியாக அசத்தினார்கள். அனைவரும் வாயை பிளந்தனர் .
கண்ணன் நிர்மலாவிடம் “இவ ஆடுவதை பாரு ! இவ எல்லாம் டாக்டர். மானத்த வாங்கறா! இன்னும் கிளாஸ் போய் இருந்தால் கேட்கவா வேண்டும்! நல்ல வேலை என் நண்பர்கள் எல்லாம் கிளம்பிட்டாங்க…”
நிர்மலா மனதில் இந்த ஆளுக்கு இத்தனை பொறுக்க மாட்டா தனம் இருக்க கூடாது திட்டி ” நீங்க என்ன பேசறீங்க! இந்த இடமே இப்ப தான் கலை கட்டி இருக்கு … உங்க நண்பர்கள் இருந்திருந்தால் அவர்களும் சேர்ந்து ஆடி இருப்பாங்க … டாக்டர் என்றால் ஆட கூடாதா என்ன? எத்தனை சந்தோஷமாக இருக்கிறாங்க பாருங்க ..வேண்டாத மருமகள் கை பட்டா குத்தம் ,கால் பட்டால் குத்தம் இருந்தா இப்படி தான் ..”
அவர்கள் ஜோடியை கண்டு நிர்மலாக்கு சந்தோசத்தில் கண்ணில் கண்ணீர். கணவன் பார்த்தால் அதற்கும் பேச்சு கிடைக்கும் என்று அவசரமாக துடைத்தாள்.
அந்த பக்கம் அமர்ந்து இருந்த விசாலம் மகன், மருமகள் சந்தோஷத்தை பார்த்து, அவள் மாமியார் வைதேகியிடம் “வீட்டுக்கு போனவுடன் ஷிவானிக்கு சுத்தி போடணும் அத்தை, என் கண்ணே பட்டு இருக்கும் .”.
விசாலம் பேசுவதை கேட்ட கண்ணன், தலையில் அடித்து நிர்மலாவை முறைத்து அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார் .
நிர்மலா மனதில் மகள் ஒரு நல்ல இடத்தில் தான் சேர்ந்து இருக்கிறாள் ,எத்தனை பெருந்தன்மையா எடுத்துக்கிறாங்க என்று தாயுள்ளம் சந்தோசம் கொண்டது .
ஷிவேந்தர் அறையில் ஷிவானிக்காக காத்துக் கொண்டு இருந்த போது முதலில் அவன் அண்ணன் சுரேன் வந்தான் . “இவளுங்க செய்வது சரி இல்லை சிவா! சொன்னால் சண்டைக்கு வராங்க” என்று புலம்பினான் . அடுத்து அவன் பெரிய அண்ணன் நரேன் வந்தான் .
சுரேன் நரேனிடம் “ வா டா ! உனக்கும் என் நிலைமை தானா? வெளியே, என்ன தான் பெரிய ஆளா இருந்தாலும் இவங்களிடம் வாய் திறக்க முடியுதா சொல்லு! என் சுதந்திரமே போச்சு! இன்று இரவு உங்களுடன் தானா , இது சரி இல்லை . இப்படி எல்லாம் அறையை ஆலங்காரம் செய்து வைத்துக் கொண்டு சும்மா இரு என்றால் முடியுமா? ”
சிவாவை பார்த்து “ இவனுக்கு எப்படியோ, எனக்கு கடுப்பா இருக்கு நரேன்! இன்று நித்யா என்ன சொன்னாலும் கேட்பதா இல்லை” என்று புலம்பியதை பார்த்து சிவா, இருவரும் என்ன மொழியில் பேசறாங்க முழித்தான்.
“டேய்! உனக்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சு நினைப்பா?அப்ப சிவா நிலைமையை கொஞ்சம் யோசித்து பாரு ! ஏற்கனவே நேற்று நைட் ஒன்றும் இல்லை.. இன்றும் ” என்ற நரேன் பேசினதை கேட்டு சிவா, என்ன இன்றும்? இவனுங்க எதுக்கு இப்ப உயிரை வாங்கறானுங்க …

“என்ன அண்ணா! ரூம் எப்படி இருக்கு ! ரொமாண்டிக் பீல் இருக்கா? நான் நினைத்த படியே அறை அலங்காரம் அமைந்து விட்டது . எல்லாம் சரியா இருக்கா செக் செய்ய வந்தீங்களா?” என்றதை கேட்டு நரேனும் சுரேனும் சிரித்துக் கொண்டனர் ….
இப்ப என்ன ஜோக் சொல்லிட்டேன் இப்படி சிரிக்கிறாங்க! என்னை பார்த்தால் இவங்களுக்கு எப்படி இருக்கு என்று கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு முறைத்தான்.
அப்போது உள்ளே நுழைந்த அவர்கள் தாத்தாவை கண்டு “அச்சோ! இவரும் நம்மளுடன் இங்க தான் தங்க போறாரா? பேசியே இம்சை செய்வாரே” என்று சுரேன் முணுமுணுத்தான்.
” என்ன பேராண்டி, என்ன மூன்று பேரும் மாநாடு போடறீங்க போல! என்ன ரகசியம் சுரேன் ! ”
அறையை நோட்டம் விட்டு ” உங்க பாட்டி நச்சு தாங்க முடியல! எல்லாம் சரியா தான இருக்கு”. அறையை பார்த்து சிவாவிடம் “ரசனைக்காரன் டா !கலக்கற பேராண்டி, என்ஜாய்” என்று கண்ணடித்தார் .

என்னத்த என்ஜாய் ……..இங்க என்ன வட்ட மேஜை கான்பிரன்ஸ் நடத்தறேனா என்ன ? ஆளாளுக்கு சுத்தி பார்த்து பேசிக்கிட்டு இருக்காங்க என்று சிவா நொந்து கொண்டான்.
நரேன் தயங்கி “தாத்தா, நீங்களும் இங்கே எங்களுடனா ? “
அவர் புரியாமல் ” என்ன டா உங்களுடன்? என்ன டா, எனக்கு தெரியாமல் மூன்று பேரும் சரக்கு அடிக்கிறீங்களா? ஒழுங்கா ஒரு கிளாஸ் கொடுத்தீங்க என்றால் பேசாமல் போய்டுவேன் ! இல்லை உங்க பாட்டியிடம் சொல்லிடுவேன் !”

ஷிவேந்தர் அதிர்ச்சியா , “சரக்கா ! அதுவும் இப்பவா! ஷிவானி கேட்டால்? ”
மனதில், இன்று எனக்கு முதல் இரவு நடக்க கூடாது என்றே இந்த பெரிசு முடிவே கட்டிடுச்சு போல! மணி வேற பத்தரை ஆச்சு, இவளை எங்க இன்னும் காணோம் !
சிவா ” கடுபேத்தாத தாத்தா ! சரக்கும் இல்லை, ஒன்றும் இல்லை”. மூவரும் ஒன்றாக “முதலில் கிளம்புங்க!”
“ நான் போக மாட்டேன், எனக்கும் வேண்டும்” என்று அங்கேயே அமர்ந்தவுடன் வெளியே பாட்டி குரலை கேட்டு ” பாட்டி, தாத்தாக்கு சரக்கு வேண்டுமாம், கொஞ்சம் என்ன பாரு” என்று ஷிவேந்தர் குரல் கொடுத்தான்.
“அடே, எங்களுக்கே பத்தாது , இல்லை என்றால் போக போறேன், வேண்டும் என்றால் என் ரூமில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து வந்து கொடுக்க போறேன். எதுக்கு டா பேராண்டி ஊரை கூட்டர! டேய் சுரேன், இரு, போகும் போது உன் பெண்டாட்டியிடம் போட்டு கொடுத்திட்டு போறேன் . எல்லார் வீட்டிலையும் தாத்தாவும் பேரனும் எப்படி சோசியலா பழகறாங்க ! இங்க ஒரு கிளாஸ் சரக்குக்கு பிகு செய்யறீங்க. நான் உங்களை மாதிரி கஞ்சம் கிடையாது ! நீங்க வந்தாலும் தருவேன் . நான் போய் ஒரு பாட்டில் குடிக்கிறேன். அப்ப தான் நிம்மதியா தூக்கம் வரும் ” .
சுரேன் அதிர்ச்சியா என்னது “ஒரு பாட்டிலா……..இவருக்கே டூ மச்சா இல்லை . இந்த உடம்பு தாங்குமா..”
“எல்லாம் தாங்கும் !எப்போதும் ஸ்டெடி டா !”
சிவா அதற்குள் “என்னது அஜீரணமா? ஒரு பாட்டில் ஓம் வாடர் குடிக்க போறீங்களா? கண்டதை சாப்பிடாதீங்க கேட்டால் தான ? பாட்டி கொடுப்பாங்க ! குடிங்க ” என்று கிண்டல் செய்ததை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் .
தாத்தா கோபமாக “போங்க டா கொரிலாஸ்….”
“கொரில்லா தாத்தா மட்டும் எப்படி மனிதனா இருக்க முடியும்” என்ற ஷிவேந்தரிடம், “ வேண்டாம் ! நீ நல்ல மூடில் இருந்தால் தான் என் பேத்தி சந்தோஷமாக இருக்க முடியும் என்ற ஒரே காரணத்தால் பேசாமல் கிளம்பறேன் ! கண்ணடித்து என்ஜாய் …………..”
தாத்தா சொன்னது போல அவர் அறைக்கு சென்று ஒரு பெரிய சரக்கு பாட்டிலுடன் செல்பி போட்டோ எடுத்து அனுப்பினதை பார்த்து சிவா வாயை பிளந்தான் . “சுரேன் , இங்க பாரு ! நிஜமா தான் சொல்லி இருக்காரு போல !”

நரேன் அங்கேயே சன் மியூசிக் போட்டு அமர்ந்து கொண்டான் . அதில் “வாடி வாடி நாட்டுக் கட்டை, வசமா வந்து மாட்டிகிட்ட !”
மனுஷன் நிலைமை புரியாம இப்படி வேற பாட்டை போட்டு இம்சை செய்யறாங்களே என்று சிவா டென்ஷன் ஆனான்……
சுரேன் சோபாவில் கால் நீட்டி படுத்துக் கொண்டான். இவங்க நகர்வது போல இல்லையே! என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்காங்க !

அவன் அறை முழுதும் ரோஜா மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்ததை பார்த்து “அலங்காரம் எல்லாம் சூப்பரா இருக்கு சிவா! ரொம்ப ரொமாண்டிகா இருக்கு . என்னமோ செய்யுது . இது என்ன ரோஜா… வாசனை ஆளை தூக்குது … இருந்து என்ன பிரயோஜனம்” என்ற சுரேனை பார்த்து தலையணை பறந்தது .
“என்ன பிரயோஜனம் உனக்கு தெரியாதா ? நீ இப்ப கிளம்பலைனா நான் உன்னை தூக்கிடுவேன்… உனக்கு இங்க என்ன வேலை ? முதலில் கிளம்பு ! அண்ணா நீயும் தான்! என் அறை என்ன எக்சிபிஷனா, ஆளாளுக்கு வந்து சுத்தி பார்த்திட்டு போறீங்க ! எனக்கு தூக்கம் வருது, முதலில் கிளம்புங்க, உங்கள் அறையில் போய் டிவி பாருங்க .டேய் சுரேன், நீ போய் உன் ரூம் சோபாவில் படுத்துக்கோ ”
“கிளம்பறதா? உனக்கு தூக்கம் வந்தா தூங்கு ! நாங்களும் தூங்க போறோம்! இன்று இங்கு தான் படுக்கனுமாம் . வெளியே போனா நான் தொலைந்தேன் ..” என்ற சுரேனை பார்த்து சிவா அதிர்ச்சியா “என்னது ?? என்ன சொன்னீங்க..”
நரேன் , “எனக்கு மெத்தையில் படுத்தா தான் தூக்கம் வரும் ……,”
சுரேன் உடனே, “எனக்கும் அதே ! அப்ப சிவா சோபாவில் படுத்துக்கோ ! உன்னிடம், என் பெண்டாட்டியும், அண்ணியும் ஏதோ பெட் வைத்தார்களாம் . அதுக்காக இப்படியா சிவா!” என்று புலம்பிய சுரேனை சிவா பாவமாக பார்த்தான் .
நித்யா, சரண்யாவை எண்ணி அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை . இவங்க நிஜமா சொன்னாங்களா ?அப்ப இன்னைக்கும்……. முடியவே முடியாது….
அண்ணி ……………
என்னுடைய லட்டை இன்று கடத்திகிட்டவாது வந்திடனும் என்று நேராக சரண்யாவிடம் சென்றான் ! நித்யாவும் அங்கு தான் இருந்தாள்.
“ என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கீங்க ! மனுஷன் நிலைமை புரியாம படுத்தாதீங்க! நீங்க ரெண்டு பேரும் பெட் வெச்சதை விட அதிகமா வாங்கி தரேன்! ப்ளீஸ் அண்ணி ” என்றதை பார்க்க அவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது .
சரண்யா ,எல்லாம் எடுத்து வைத்த படி “வனியும் எங்க கட்சி தான் . சரி சொல்லிட்டா? உங்களை தோற்க விடுவேனா அக்கா சபோர்ட் வேற ! நல்ல பெண் “
கடன்காரி, குட்டி பிசாசு புருஷனுக்கு சபோர்ட் செய்யணும் தோணுதா பாரு ! அவன் கண்கள் அவன் மனையாளை தேடி அலைந்தது .
அதை கண்டு சரண்யா “ சிவா , ஷிவானி பாத்ரூமில் இருக்கா? நாங்க சொன்னால் சொன்னது தான். பேசாமல் உன் அறைக்கு போ ! நாங்க பெட் வெச்சாலும் , அத்தையும் , பாட்டியும் , நாள் நல்லா இல்லை . எதா இருந்தாலும், இன்னும் மூன்று நாள் கழித்து தான் என்று சொன்னதால் உங்க அண்ணனுங்களை துணைக்கு அனுப்பினோம்” .
அவள் அப்பாவியாக, “ இதில் நாங்க என்ன செய்ய முடியும் சொல்லு ! இன்னும் மூன்றே மூன்று நாள்”
ஷிவேந்தர் கடுப்பாக இன்னும் மூன்று நாள்…………………. என்று மனதில் நீட்டி , முழக்கி சொல்லி பார்த்தான்.
ஷிவேந்தர் முகத்தை கண்டு நித்யாவும், சரண்யாவும் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுக் கொண்டு இருந்தனர்….
அவனுக்கு மேலே என்ன பேசுவது என்று கூட புரியவில்லை . சிவா அவன் மனதில் எல்லாரையும் தாளித்து, வறுத்துக் கொண்டு இருந்தான்.
ஷிவானி வெளியே வருவாளா என்று நின்று பார்த்தான். கண்ணில் சிக்காமல் ஆட்டம் கட்டும் இவளை என்ன செய்தால் தகும் . எல்லாம் இவங்க செய்யும் சதி வேலை தான் …
“பிடிவாதமாக அண்ணி, அவளிடம் நான் பேசணும்” .
“பேசலாம். வெளியே வந்தா சொல்லறோம் ! போனில் பேசிக்கோங்க”
போனிலா என்று அதிர்ந்து , மேலும் அங்கே இருந்தால் எதோ சொல்லிடுவானோ பயந்து அவன் அறைக்கு திரும்பினான் .
சுரேன் , நரேன் பாடி கார்ட் போல அவனுடன் வருவதை பார்த்து, “என்னை கொலைகாரன் ஆக்காதீங்க ! ரெண்டு பேரும் ஹாலில் படுங்க” என்று கோபமாக அறை கதவை சாற்றிக் கொண்டான் .
கதவு பின்னால் அழகாக சிரித்துக் கொண்டு நிற்கும் ஷிவானியை பார்த்து மெய் மறந்தான் . கனவா என்று கூட யோசித்தான் . அவள் சிரிப்பை கண்டு அவன் கோபம் அத்தனையும் மாயமாக மறைந்தது . ஒரே எட்டில் அவளை அணைத்து
“அழகூரில் பூத்தவளே
எனை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
எனை மார்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே
எனை அடியோடு சாய்த்தவளே……………… “
பாடிய படி அவளை தூக்கிக் கொண்டு மெதுவாக கட்டிலுக்கு முன்னேறினான் . அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு அவனிடம் குறும்பாக “அறைக்குள் வந்தவுடன் உங்க முகத்தை பார்க்க சகிக்கல சிவா ! கேவலமா இருந்தது ! ஒரு நிமிடம் இந்த முகத்தையா லவ் செய்தேன் ஷாக் ஆகிட்டேன் ” என்று கலாயத்தவுடன் ” இந்த முகத்துக்கு என் முகமே அதிகம் சக்கர கட்டி “என்றவுடன்
“ கொழுப்பு ! ஓவர் லொள்ளு தான் ! அக்கா சொன்னாங்க அங்கேயே இருந்து இருக்கணும் . இப்ப கூட ஒன்றும் இல்லை, நான் போறேன்” என்று திமிரியவுடன் ‘சும்மா இரு , இல்லை நடப்பதே வேறு’ என்று கண்களை உருட்டி மிரட்டினான் .
“அச்சோ, பயமா இருக்கே ! கை வலிக்க போகுது சொன்னேன் செல்லம்” என்று கொஞ்சினாள்.
அவன் முறைப்பை கண்டு இத்தனை “மெதுவா போனா எப்ப போய் சேரது , அதுக்காக சொன்னேன்! பாட்டு எல்லாம் பலமா இருக்கு ! யாரோ கொஞ்சம் நேரம் முன்பு அப்படி கத்திக் கொண்டு இருந்தாங்க . அது யாரு இந்தர் ? எதுக்கு சத்தம் ..”
“ஒன்றுமே தெரியாதா என் செல்ல குட்டிக்கு ! சத்தம் போடணும் வேண்டுதல் . நாம நினைத்தது எல்லாம் அப்ப தான் நடக்கும் !”
அவன் காதில் “ இப்ப சத்தம் வெளியே கேட்டால் தப்பா நினைக்க மாட்டாங்க ? நல்லா இருக்குமா , எப்படி சிவா ” என்று அப்பாவியாக கேட்டவுடன் சிவா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான் .. உன்னை.. என்று ஆப்பிள் கன்னத்தை கடித்துவைத்தான்
“வலிக்குது டா ! என் ஹீரோ அப்படி என்ன நினைத்தீங்க! ”
அதுவா என்று அவள் காதில் ரகசியம் பேசினவுடன் ‘சி ,நீங்க..’ என்று அவள் மார்பில் மேலும் ஒன்றிக் கொண்டாள்.
“கட்டில் வந்திடுச்சு! கீழே இறக்கி விடுங்க !”
“Welcome to our room கண்ணம்மா… அறை எப்படி இருக்கு” .அறை மிகவும் அழகாக இருந்தது . “ சுப்பரா இருக்கு ! உங்களை போலவே ரொமாண்டிக்கா !” என்று கன்னத்தில் முத்தம் பதித்தாள்.