காதல் துளிர் 11:
ரைட் விஷயத்தை கேள்விப்பட்ட நிர்மலா ஊரில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தாள். பெண் கல்யாண நேரத்தில் இப்படியா நடக்கணும் என்றவுடன் கண்ணன் கோபமாக “ படிச்சவ மாதிரியா பேசற ? உன் வாயை வைத்துக் கொண்டு கொஞ்சமா சும்மா இரு .இது எல்லாம் இப்ப எல்லா இடத்திலும் சகஜம் தான் . போன வாரம் கூட அந்த RS நிறுவனத்தில் ரெண்டு நாளைக்கு விடிய விடிய சோதனை நடந்தது. செய்ய வேண்டியது செய்து எல்லாம் சரி செய்து விட்டார்கள்” .
மணிவாசகம் அப்படி விடமாட்டார் சார் என்று ஆடிட்டர் கூறியதை கண்ணன் காது கொடுத்துக் கேட்கவில்லை.
நிர்மலா கலக்கமான முகத்தைக் கண்டு “நீ பேசும், வருத்தப்படும் அளவிற்கு இங்கு ஒன்றும் நடக்கவில்லை” ..
எப்போதும் நிர்மலா நேர்மையானவள். இத்தனை ஊழல் செய்து, நியாயவாதி மாதிரி பேசுவதை கேட்டு, இவர் சொத்து முழுதும் வந்தவங்க பிடுங்கிட்டு விடனும், அப்ப தெரியும் இவருக்கு என்று மனதில் வறுத்து எடுத்தாள்.
நிர்மலா மெதுவாக “ஜோசியரிடம் உங்க ஜாதகத்தை கட்டினேன்”.
“என்ன சொன்னான் . நான் தான என் கட்டத்தை தீர்மானிக்கிறவன், அவன் என்ன சொல்லிட போறான்” என்று கிண்டலாக கேட்டவுடன்
“உங்க ஜாதக படி உங்களுக்கு கொஞ்சம் அவ பெயர் வர வாய்ப்பு இருக்கு சொன்னார் . இன்னும் கொஞ்ச காலத்துக்கு எதிலும் எச்சரிக்கையா இருக்கணும் சொல்லி இருக்கார் .பெண் கல்யாணம்……” என்று நிறுத்திவிட்டாள் .
“எதையும் முழுதா சொல்லவே மாட்டியா” என்ற கோபமாக கர்ஜித்தவுடன் “நம்ம பெண் தான் இந்த வீட்டு மகாலட்சுமி , அவளை கல்யாணம் செய்து கொடுத்தவுடன் அவர் சொன்ன கோவிலுக்கு போயிட்டு தான் அவ புகுந்த வீட்டுக்கு போகணுமாம் இல்லை என்றால் மேலும் கஷ்டம் வருமாம்.. அவ கல்யாணத்தால் உங்களுக்கு அவ பெயர், அவள் வாழ்க்கையிலும் சிக்கல் வருமாம்! அவளுக்கு ஆயுளில் கண்டம் இருக்காம்” ….
“உனக்கே நீ பேசுவது பைத்தியகார தனமா தெரியல, மேலே சொல்லு”
நிர்மலா, இவர் திட்டினாலும் பரவாயில்லை நான் சொல்ல வந்ததை சொல்லி ஆகனும் என்று “நம்ம வனி கல்யாணத்தில் தடைகள் வருமாம் . அவ இஷ்ட படி தான் கல்யாணம் நடக்குமாம்.. அவள் விரும்பும் பையன் …”
“என்ன அவ இஷ்டப்படி” என்று எகிறினார் “நாம தான் பையனை பார்த்து விட்டோமே ! எத்தனை பெரிய கோடீஸ்வரர் வீட்டு சம்மதம் கிடைத்து இருக்கு . அவளும் படிப்பை முடித்து விட்டாள் ! இனி கல்யாணம் செய்து கொண்டு மேல் படிப்பு படிக்கட்டும் அவர்களுக்கும் அதில் சம்மதம் .
பேசிய படி அடுத்த வாரம் வீட்டளவில் நிச்சயம் செய்து கொள்ளலாம் . யாருக்கு எல்லாம் தகவல் கொடுக்கணுமோ அவங்களுக்கு எல்லாம் சொல்லிவிடு, இதனால் ராஜ் எதோ சொல்லுவான் பார்க்கிறியா ? கல்யாண தடை வரும் யோசிக்கிறாயா ? முதலிலே இது எல்லாம் இப்ப சகஜம் சொன்னேனே! அவன் தான் அவங்க சொல்லும் பணத்தை எல்லாம் கட்டாத ! நான் என் ஆடிட்டர் அனுப்பறேன் அழைத்து பேசினான்” .
நிர்மலா தயங்கி நிற்பதை பார்த்து இன்னும் என்ன? இது பேசினதே அதிகம் என்பது போல பார்த்து வைத்தார் .
“போதும் நிம்மி ! தேவை இல்லாததை பேசி நேரத்தை வேஸ்ட் செய்யாத ? நான் சொல்வது தான் நடக்கும். அவளுக்கு ஏற்ற டாக்டர் மாப்பிளையை ஏற்கனவே தேர்வு செய்தாச்சு. தேவா தான் இந்த வீட்டு மருமகன். இதில் எந்த மாற்றமும் இல்லை …அப்படி மீறினால்…….” என்று எச்சரிக்கை செய்து நகர்ந்து விட்டார் .
ஊருக்கு போன போது , ஷிவானி யாரோ ஒருவனை காதலிக்கிறாள் என்று மாமியார் மூலமாக கேள்விப்பட்டதில் இருந்து நிர்மலா தவித்துக் கொண்டு இருக்கிறாள் . ஒரே வீட்டில் இருந்து எனக்கு தெரியவில்லையே என்று வருந்தினாள்.
இந்த விஷயத்தில் அப்பாக்கும் பெண்ணிற்கும் நடக்க இருக்கும் யுத்தத்தை நினைத்தால் நிர்மலாக்கு தொண்டை குழியில் தண்ணீர் இறங்க மறுத்தது.
வாசலில் ஷிவேந்தரை கண்ட ஷிவானி வீட்டில் நடந்த அத்தனை கலவரத்தையும் மறந்தாள். அவனை கண்டவுடன் ஷிவேந்தர் வீட்டில் எல்லாரும் எப்படி இருப்பாங்க ,என்ன பேச என்று அவள் எண்ணங்கள் அதிலே சுழன்று கொண்டு இருந்தது . கலக்கத்தை போக்க ஷிவேந்தர் அவளுடன் சுவாரஸ்யமா பேசிய படி வண்டி ஓட்டினான்..
ஷிவானி கைகளில் அடுக்கி இருந்த கண்ணாடி வளையல்கள் அவள் கை ஆட்டி பேசும் போது சலசலத்து சத்தம் செய்து கொண்டு இருந்தது.
அதை சிவா ரசித்துக் கொண்டு இருந்தான் .
அவன் அன்னை விசாலம், இரவே அவன் அக்கா ரஞ்சு வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். ஷிவேந்தர் அக்கா ரஞ்சனிக்கு கல்யாணம் ஆகி எட்டு வருடமா குழந்தை இல்லை . ரஞ்சனி , விசாலத்தை அழைத்து நாள் தள்ளி போய் இருக்கு . வீட்டில் எடுத்த டெஸ்ட் பாசிடிவ் வந்து இருக்கு ..நாளை காலை டாக்டர் வீட்டுக்கு போகணும், உடனே கிளம்பி வா என்று விஷயத்தை பகிர்ந்தவுடன் மாலை ஷிவேந்தர் கல்யாணம் விஷயமா அந்த பெண் பற்றி பேசினவுடன் மகள் நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறாள் என்று உள்ளம் சந்தோசம் கொண்டாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள்.
இந்த விஷயத்தாலே ஷிவானி மீது நல்ல எண்ணம் உண்டாகியது.
ஷிவேந்தர் அக்காக்காக சந்தோசம் கொண்டு மூன்று பை நிறைய பழங்கள், பலகாரக்கடையில் அக்காக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பாதி கடையை வாங்கி வந்து இருந்தான் .
ரயில் நிலையம் போகும் வழியில் ஷிவானி விஷயமாய் அம்மா ஒன்றும் சொல்லாமல் கிளம்பறாங்களே என்று அவன் மனம் வருத்தம் கொண்டது .
அவன் அன்னையை வம்பளக்கும் பொருட்டு “என்ன அம்மா, உனக்கு அக்கா தான் முக்கியம் கிளம்பற …நான் மாலை சொன்னதுக்கு பதிலே காணோம்.நீ மோசம் மா !”
” போக்கிரி பயலே ! பேசுவதை பாரு படவா, முதுகில் ரெண்டு கொடுத்தால் தான் சரி வரும் ! இப்போதைக்கு என் எண்ணம், உள்ளம் முழுதும் நான் பாட்டி ஆக போறேன் , உங்க அக்கா அம்மா ஆக போறா என்று டாக்டர் சொல்லும் அந்த இனிய செய்திக்காக தான் காத்துகிட்டு இருக்கு .. ..”
கலங்கின கண்களுடன் சந்தோஷமாக ஷிவேந்தர் கைகளை பிடித்து , “இத்தனை வருஷமா நாம எதுக்காக பல கோவில் ஏறி தவம் இருந்தோமோ அது வீண் போகல சிவா . வேண்டாத தெய்வமா , செய்யாத பூஜையா ? ஆண்டவன் நம்ம வேண்டுதலுக்கு செவி சாயித்து விட்டான் .. இருந்தாலும் டாக்டர் சொல்லும் வரை கலக்கமா தான் இருக்கு . நமக்கே இப்படி என்றால் உங்க அக்காக்கு எப்படி இருக்கும் . ஒரு வருஷமா ,ரெண்டு வருஷமா? பாவம் டா “
“ சும்மா தான் கிண்டல் செய்தேன் அம்மா . நீங்க முதலில் ஊருக்கு போய் நான் மாமா ஆகா போறேன் நல்ல செய்தியை சொல்லுங்க .. அப்புறமா என் விஷயத்தை பார்க்கலாம். இந்த தடவை கண்டிப்பா நீங்க நினைத்ததே நடக்கும் பாருங்க ! சிங்க குட்டி சீக்கிரம் வந்து இந்த பாட்டி கூட சண்டை போட போகுது ! ” என்று குஷி படுத்தினான் .
“சிவா , உன் விஷயத்தில் இப்ப நான் எதையும் சொல்வதா இல்லை ..ஊருக்கு போயிட்டு வந்து பேசலாம் .உங்க பாட்டி ,ரெண்டு அண்ணியும் இருப்பாங்க .. முதலில் நாளைக்கு அவங்களுக்கு அந்த பெண்ணை பிடிக்கட்டும். அப்புறம் யோசிக்கலாம்” என்று முடித்தாள் .
அம்மாக்கு பிடிக்கவில்லை, வீட்டுக்கே வர கூடாது, நான் சொல்பவள் தான் மருமகள். வாக்கு கொடுத்து இருக்க என்று மாலை குதித்தது என்ன? இப்ப மறைமுகமா நாளை பாட்டி , அண்ணிக்கு எல்லாம் பிடித்தால் பிறகு பார்க்கலாம் சொல்வது என்ன?? என்ன சொல்ல வராங்க !
மறைமுகமா சம்மதம் சொல்வது போல இருக்கு, இல்லாமலும் இருக்கு ..
என்ன தான் மனநல மருத்துவனா இருந்தாலும் இந்த பெண்கள் உள்ளத்தில் இருப்பது மட்டும் கண்டு பிடிக்கவே முடியறது இல்லை ..
மாலை இருந்ததுக்கு இப்ப முகம் கொடுத்தாவது பேசறாங்களே ,அதுவே போதும்.
உள்ளம் சந்தோஷத்தில் குதித்தாலும் இந்த விசாலம் திடீர் யு டர்ன் போட்டாலும் போடுவாங்க இவங்களை நம்பவே முடியாது ..
அவன் அம்மாவை பற்றி நன்கு அறிந்ததால் மேலும் பேசி உள்ளதை கெடுத்துக் கொள்ள கூடாது என்று பேசாமால் அமைதியானான்.
எப்படியோ அம்மா பக்கம் இருந்து எண்பது சதவீதம் ஓகே ஆனது போல தான். அப்படி இல்லை என்றாலும் பேசியே சரி செய்திடலாம் நம்பிக்கை கொண்டான் . அவன் அக்கா விஷயத்தை பற்றி பேசி ,இரவு தூங்கும் வரை ஷிவானிக்கு தைரியம் கொடுத்து ,வம்பு செய்து கொண்டு இருந்தான் .
காரில் ஏசி மீறி ஷிவானிக்கு வியர்த்தது . என்ன தான் இயல்பா பேசினாலும் , கலக்கமான ஷிவானி முகத்தை கண்ட ஷிவேந்தர் “ஹே செல்லம், உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லட்டா ….”
ஷிவானி ஆர்வமாக “அம்மா போன் செய்தார்களா ? நீங்க மாமா, நான் அத்தை என்று கன்பார்ம் செய்திட்டாங்களா?”
அவளை சீண்டும் விதமாக “நான் மாமா கன்பார்ம் ஆகிடுச்சு, நீ தான் அத்தையா என்று உறுதி ஆகவில்லை” என்று வம்புக்கு இழுத்ததை பார்த்து “ இந்த மாமனுக்கு நான் தான் ஜோடி நியாபகம் வெச்சுக்கோங்க ! அப்படி ஏமாத்தலாம் நினைத்தால் பொல்லாதவள் ஆகிடுவேனாக்கும் ஜாக்கிரதை” மிரட்டினாள்.
“அச்சோ பயமா இருக்கே ! கல்யாணம் முன்னாலே உன்னை இப்படி உருட்டி மிரட்டரான்களே சிவா ! நீ பாவம் டா” என்று அவனே அவனுக்குள் சொல்லிக் கொண்டான் .
“கிண்டல் வேண்டாம் சிவா! சீரியசா சொல்லறேன் ..சீக்கிரம் கல்யாணம் செய்து, வர போகும் உங்க மருமகனுக்கு ஒரு மருமகளை ஏற்பாடு செய்யலாம் பா !”
“அடிப்பாவி! என்னை விட வேகமா இருக்க ! நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன் வனி குட்டி..”
வீட்டில் , அவன் பாட்டி, சரண்யா அண்ணி ,நித்யா அண்ணி பிரியமாக பழகினார்கள். அவன் அண்ணிகள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் வாரிக் கொண்டு சந்தோஷமாக பேசி சிரித்து மகிழ்வதை பார்த்து, இப்படி பேசி சிரிக்க கூட எங்க வீட்டில் ஆள் இல்லையே , அவர்களுடன் அங்கேயே இருந்திட மாட்டோமா ஏங்கினாள்.
ஷிவானி கட்ட எடுத்து வந்த புடவையை பார்த்து, வனி ஒரு நிமிஷம் வந்திடறேன் என்று வேகமாக நித்யா சிவா அறைக்கு ஓடினாள்.
கையில் கவருடன் அவசரமாக வந்ததை பார்த்து “என்ன அக்கா, இப்படி அவசரமா எங்க போனீங்க !”
அந்த கவரில் அழகிய அடர் பிங்க் சிப்பான் புடவை வித் கோல்டன் ப்ரோகடே பார்டருடன் கண்ணை பறித்தது . கூடவே அழகாக தைக்கப்பட்ட ப்ளௌஸ் இருந்தது .
அதை பார்த்து “புடவை ரொம்ப அழகா இருக்கு ..எங்க எடுத்தீங்க ! யாருக்கு ?”
ஆர்வ கோளாறில் “உனக்கு தான் எடுத்திட்டு வந்தோம். உன் நிறத்துக்கு இது தான் சரியா இருக்கும் பார்த்து எடுத்தோம் . கடையை ஒரு வழி செய்திட்டோம் .நல்ல வேலை ,கடைக்காரன் துரத்துவதற்குள் இந்த புடவை கண்ணில் பட்டது .இல்லை என்றால் அசிங்கமாகி இருக்கும் வனி. எங்க வீட்டில் இப்படி ஒரு ரசனைகாரனா எனக்கே ஆச்சரியம் .கடைக்காரனை கேள்வியால் துளைத்து எடுத்துட்டான் ..”
உடனே நாக்கை கடித்து “இல்லை எடுத்தாச்சு, அக்கா செலெக்ஷன் , ரசனையை தான் சொல்லறேன்” என்று உளறி கிளறின நித்யாவை பார்த்து சரண்யா தலையில் அடித்து
“நிது ,நாம எடுத்தது ரொம்ப முக்கியமா ?வனிக்கு எப்படி இருக்கு கட்டி பார்க்கலாம்” என்று அவள் பேச்சுக்கு தடை போட்டாள்.
மாலை ஷிவானிக்கு புடவை எடுக்கணும் என்று ஷிவேந்தர் நித்யாவை கடைக்கு அழைத்து சென்றான் . புடவை செலக்ட் செய்வதற்குள் கடையை ஓர் வழி செய்து விட்டான். எடுத்திட்டு வந்தவுடன் சிவா சொன்ன அளவை வைத்து நித்யாவே தோராய அளவில் ப்ளௌஸ் தைத்து முடித்தாள். அவள் அளவிற்கு அது சரியாக ,கட்சிதமாக இருந்தது .
நித்யா, ஷிவானியை பார்த்தவுடன் இத்தனை துல்லியமா எப்படி அளவு சொன்னான் என்று குழம்பினாள் .
ஷிவேந்தர் அவன் தான் அந்த புடவையை தேர்வு செய்தான் என்று சொல்ல கூடாது பல தடவை சொல்லி இருந்தும், நித்யா உளறி விளக்கினது, சரண்யா அடக்கினதை வைத்தே அது சிவாவின் தேர்வு என்று தெளிவாக ஷிவானிக்கு தெளிவா தெரிந்துவிட்டது. அவனிடமே அதை பற்றி பிறகு கேட்டுக் கொள்ளலாம் சந்தோஷமாக கட்டிக் கொண்டாள்.
இரு அண்ணிகளும் ஷிவானிக்கு அழகாக புடவை கட்டி விட்டனர் .சீக்கிரம் புடவை கட்ட கத்துக்கோ… நாங்க ஒவ்வொரு தடவையும் வரமாட்டோம் என்ற மிரட்டும் தோணியில் கிண்டல் செய்யும் போது உள்ளே நுழைந்த ஷிவேந்தர் “எதுக்கு என் செல்லத்த மிரட்டறீங்க ! நானே ஆஹா எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்து இருக்கு குஷியா இருக்கேன், அதை கெடுத்துடுவீங்க போல !”
நேற்று அவன் இருவரிடமும் வைத்த கண்டிஷன் என்ன என்றால் “அண்ணிஸ், அவளுக்கு கட்டி மட்டும் விடுங்க, கட்ட சொல்லி தராதீங்க “என்று தான் .இருவரும் அவனை கேவலமான லுக் விட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு தான் .
அவன் பேச்சை கேட்ட ஷிவானி “என்ன சொல்லறீங்க இந்தர்..என்ன சான்ஸ்”
ரெண்டு அர்த்தமா ஏதோ சொல்லறானோ ! முழிக்கும் முழியே சரி இல்லையே என்று ஷிவானி என்னும் போது
“அது வந்து, உனக்கு எப்ப எல்லாம் புடவை கட்டனும் தோணுதோ அப்ப எல்லாம் வீட்டுக்கு அழைத்து வரலாம் நினைத்தேன், அதை தான் சொல்ல வந்தேன்” என்று மழுப்பினான் .
சரண்யா “அப்படியா சொல்ல வந்த .. இல்லையே ? எனக்கு என்னமோ நேற்று சொன்னது போல ”
நீயே எடுத்து, நித்தமும் நீயே கட்டி விடனும் ஆசையில் சொல்லற போல !அப்படி தான ? என்று ஷிவானிக்கு தெரியாமல் உதட்டை அசைத்தாள்.
அண்ணி உங்களுக்கு புண்ணியமா போகட்டும் ! ப்ளீஸ் என்று சத்தம் இல்லாமல் அவனும் உதட்டை அசைத்து கெஞ்சினான் .
நித்யா “ஒ,ஹோ இந்தர் நடக்கட்டும் ..”
புடவையில் அழகு பதுமையாக இருக்கும் ஷிவானி அழகில் கிறங்கி விளையாட்டாக “நான் அழைத்து வந்த பெண் எங்கே அண்ணி ! கிளம்பிட்டாளா ?அதுக்குள்ளே அவளுக்கு என்ன அவசரம் ..”
யாரை சிவா அழைத்து வந்தாய் !
“நான் அழைத்து வந்த என் செல்ல குட்டிய தான் காணோம் தேடறேன் . அந்த சின்ன பெண் எங்க போனாங்க”.
ஷிவேந்தர் கிண்டல் செய்யறான் புரிந்து கொண்டு ஷிவானி கன்னம் சிவந்தாள்.
அழகாக கன்னம் சிவந்து இருக்கும் வனியை ரசித்த சரண்யா “வனி, சிவா சொல்வது கேட்டுச்சா ? இவன் பேசுவது கொஞ்சம் ஓவரா இல்லை”
“அச்சோ வனியா இது ! என் செல்ல குட்டிக்கு என்ன ஆச்சு ! என்ன செய்து வைத்து இருக்கீங்க !அலங்காரம் செய்ய சொன்னா இப்படி அலங்கோலம் செய்து வைத்து இருக்கீங்க ! உங்களுக்கே நல்லா இருக்கா அன்னிஸ் . பார்லர் செலவு மிச்சம் பிடிக்கலாம் பார்த்தால்???”
நித்யா ரயில் வண்டி போல மூச்சு விட்டு “உனக்கே அலம்பலா இல்லை . அத்தனை அசிங்கமாவா இருக்கா ..அப்ப இந்த பெண்ணை ரிஜெக்ட் செய்திடலாமா .”
கிண்டலாக , “அண்ணி, என் செல்லம் அழகா தான் இருக்கா ..நீங்க செய்த மேக் அப் தான் மோசம் சொல்லறேன் ..”
என்னிடமேவா ! லொள்ளா செய்யற ? இரு சரண்யா அண்ணி பாயசம் எடுத்திட்டு வரேன் போறாங்க ..அது வேண்டாம் சொல்லறேன்..
பாயாசம் என்றால் சிவாக்கு உயிர் .. அது இல்லை சொன்னால் ?
“அச்சோ அண்ணி, நான் சொல்வதை கேளுங்க , நீ கொஞ்சம் திரும்பு வனி ! இப்ப தான் இவளை முழுதா பார்க்கிறேன் !” உச்சி முதல் பாதம் வரை சுவாரசியமா பார்த்து வைத்தான். சிவா பார்வையில் மேலும் சிவந்தாள்.
புடவையில் சிக்கு என்று தெரியும் அழகை ரசித்து “சூப்பர் பிகர் ல” அவன் அண்ணி முன்னாலே ஷிவானியை வர்ணித்தான் . “சும்மா இருங்க சிவா” ஷிவானி வெட்கப்பட்டு அவனை நன்றாக கிள்ளினாள்.
சிவா அலறுவதை பார்த்த நித்யா “இவனுக்கு இது எல்லாம் பத்தாது, இன்னும் வேண்டும் வனி ! குச்சி எடுத்திட்டு வரேன் .அதிலே நாலு போடு, அப்பவாது அடங்கிறானா பார்க்கலாம்” என்று மேலும் தூபம் போட்டாள் .
“அண்ணி, கலகம் செய்யாமல் உங்க கையால் பாய்சன் கொண்டு வாங்க பார்க்கலாம் ..”
நித்யா சரியா தான் கேட்டேனா “என்ன சொன்ன ..”
வேண்டும் என்றே , நீங்க செய்த பாயசம் தான் அப்படி இருக்கும் சொன்னேன் முனங்கி “சூடா பாயசம் சொன்னேன் நிது அண்ணி, போங்க கொஞ்சம் முந்திரி அதிகமா”
“உன்னை எல்லாம் கட்டி வைத்து உதைக்கணும் சிவா ! உப்பை போட்டு எடுத்திட்டு வரேன் ,கொஞ்சம் பொறு ” என்று மிரட்டி பத்து நிமிடம் என்று அவள் செல் போனில் அலாரம் செட் செய்து வெளியேறினாள்.
சிவா, கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்த ஷிவானியே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் . இங்கிதம் தெரிந்த அண்ணி என்று அவள் அருகில் முன்னேறினான்.
நான் எடுத்த புடவையில் என் செல்லம் தேவதை போல அழகா இருக்காங்க.. கண்ணை பிரித்து எடுக்க முடியவில்லை! கொள்ளறாலே என்று மனதில் வர்ணித்துக் கொண்டு இருந்தான்.
ஷிவானி அவன் பார்வையில் சிவந்து ,சிவா என்று காத்து தான் வந்தது..
“என்ன மேடம் காத்து தான் வருது !”
“எப்படி இருக்கேன் சிவா ! நல்லா இல்லையா ?”
நல்லா இல்லை சொல்லி யாரு அடி வாங்கறது செல்லம் என்று முணுமுணுத்ததை கேட்டு உங்களை என்று துரத்தினாள்.
ஒரு கட்டத்தில் அவன் கைகளில் ஆசையாக சிக்கிக் கொண்டாள். “சிவா, புடவைக்கு தேங்க்ஸ் ..உங்களை போலவே சூப்பர்” என்று அவன் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் ஒற்றினாள்.
“கண்டுபிடிச்சுட்டீங்களா ? கலக்கற செல்லம் ! என்னையே மயக்கற!”
அவள் மீது இருந்து வரும் இதமான நறுமணத்தில் மயங்கினான் .அவனை தொலைத்தான். “இப்படியா தேங்க்ஸ் சொல்லுவீங்க கண்ணம்மா ! எனக்கு வேண்டாம் நீயே வெச்சுக்கோ” என்று திருப்பி கொடுத்தான் . அவன் மீசையும், சவரம் செய்யாத முகமும் அழுத்தியதால் எரியும் கன்னத்தை தேய்த்த படி “நான் இப்படியா அழுந்த கொடுத்தேன் .
“அப்ப அதே போல திருப்பி கொடுத்திடு ! “
ச்சே போடா என்று அவன் மீது சாயிந்து முகத்தை மறைத்துக் கொண்டாள். அவள் நெற்றியில் இதழ் ஒற்றி ஆசையாக அனைத்துக் கொண்டான் .
“வனி, இங்கயே இருந்திடு டா ! எத்தனை சந்தோஷமா இருக்கேன் தெரியுமா ? நான் கற்பனை செய்தது போல எங்க வீட்டில் இயல்பாக பொருந்தி இருக்க”
ஷிவானி ஆச்சரியமாக “அது எப்படி நான் நினைத்ததையே சொல்லறீங்க !”
நான் ஒரு மன நல மருத்துவன் உன் மனதை படிக்க முடியாதா என்று சொல்ல வந்ததை நிறுத்தி, “பெண்டாட்டி நினைப்பது புருஷனுக்கு தெரியாதா, அதுவும் என் கியுட் பெண்டாட்டி” என்று அவள் முடி கற்றைகளை ஒதுக்கும் போது அவன் மூச்சு காற்று பட்டு அவள் தேகம் சிலிர்த்தது . அவள் கண்ணோடு கண் சேர்ந்து பல மெளன மொழிகள் பேசியது .
“அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்றில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் ………
மழையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருபதெல்லாம் மௌனத்திலே கலக்கும்”
என்று அவர்கள் மோன நிலைக்கேற்ப செல் போனில் பாட்டு இசைத்தது. இருவரும் இருந்த நிலையை எண்ணி சிரித்து அவசரமா விலகினார்கள்.
எங்கே பாட்டு சத்தம் என்று ஐந்து நிமிடம் தேடின பிறகு நித்யா வேலை தான் கண்டுபிடித்து “அண்ணி” என்று சத்தம் போட்டான் .
“உனக்கு வீட்டை சுற்றி காட்டறேன் பெண்டாட்டி வாங்க …”
அவன் வீடு ஷிவானி வீட்டை விட கொஞ்சம் சின்னதா அழகா இருந்தது. ஷிவானி வீட்டில் எங்கும் ஆடம்பர பொருட்கள் காணலாம் . அவ வீட்டில் மனிதர்களை விட பொருட்களுக்கு தான் எப்போதும் மதிப்பு அதிகம் .
ஆனால் இங்கு சிவா வீட்டில் அப்படி இல்லாமல் உயிர்ப்பு (liveliness) இருந்தது . பிரியமுள்ள மனிதர்கள் இருந்தனர் .
அவன் அறை வாசலிலே “இது யார் அறை தெரியுமா ?”
ஷிவேந்தர் கண்களை பார்க்க முடியாமல் வெட்கப்பட்டு “இத்தனை பில்ட் அப் கொடுக்கும் போதே தெரியாது, உங்க ரூம் தான ..சிவா, நான் அப்புறமா வரேன் ..இப்ப வேண்டாமே” என்று தயங்கினாள்.
அவள் வெட்கத்தை கண்டு விசில் அடித்து “அப்புறம் என்றால் எப்ப கண்மணி ?” ஷிவானி அவன் தோளில் சாயிந்து கொண்டு “நம்ம கல்யாணம் முடிந்து முறையா உங்க பெண்டாட்டியா சொல்ல வந்தேன்” ..
அவனும் வீரப்பா “போடி , நானும் உன்னை இப்ப அழைத்து செல்வதா இல்லை” ..
“என்னது டீயா ! வாய் நீளுது மிஸ்டர் !”
“என் பெண்டாட்டிய நான் எப்படி வேண்டும் என்றாலும் அழைப்பேன். உனக்கு என்ன ?” என்று புடவை மத்தியில் தெரிந்த வெற்றிடையில் கிள்ளினான்.
துள்ளி குதித்து ,சும்மா இரு திருடா என்று அவன் கைகளை அவள் கைகளுக்குள் பிணைத்துக் கொண்டாள்.
“பெட்ரூம் தான் பார்க்கவில்லை சொல்லிட்ட , என் அறை பால்கனி நீ பார்த்தே ஆகணும் . இப்படி போகலாம்” என்று ஆசையாக அழகிய ஊஞ்சல் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான். அவள் முதல் முதலா அவனிடம் அவள் கற்பனையில் வடித்த ஊஞ்சல் அப்படியே அங்கு அழகா வீற்று இருந்தது.
தேக்கு மரத்திலான ஊஞ்சல் ..சங்கிலியில் யானைகள் ஒன்றோடு ஒன்று சேர்த்து அழகா பிணைக்க பட்டிருந்தது . “சூப்பர் இந்தர்” என்று வேகமாக அதில் ஆட ஆரம்பித்தாள். அந்த பால்கனி முழுதும் மரங்களால் சூழ்ந்து பார்ப்பதற்கே அழகாக, ரம்மியமாக இருந்தது . பகல் 12 மணி என்று சொன்னால் தான் தெரியும் . அத்தனை குளுமையாக இருந்தது . பல வித பூக்களில் இருந்து வரும் நறுமணம் அந்த இடத்தையே நிறைத்து இருந்தது.
அவள் சந்தோசம் அவனையும் தொற்றிக் கொண்டது . அவனும் அவளுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டான் .இப்படி படுதறாலே ராட்ஷசி ..
ஷிவேந்தர் விழுங்கும் பார்வையை கண்டு, மேலும் அங்கு தனித்து இருப்பது சரி வராது என்று ஷிவானி குரலே எழும்பாமல் “மணி ஆச்சு! கிளம்பலாமா சிவா ?”
பல முறை அழைத்த பிறகு “என்ன சொன்ன வனி!”
அவனை வம்பிற்கு இழுக்கும் விதமாக “ எதுக்கு என்னை கட்டி பிடித்து கிஸ் செய்தாய், யாராவது பார்த்தால்….” என்று இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.
சிவாக்கு அவள் எதோ கிரேக், லத்தின் மொழி பேசுவது போல இருந்தது .. அப்பாவியாக “என்ன சொன்ன ?திரும்ப சொல்லு ?”
ஷிவானி பழிப்பு கட்டி “Golden words cannot be repeated புருஷா? நீங்களே என்ன சொன்னேன் கண்டு பிடித்து சொல்லுங்க பார்க்கலாம்” .
ஆஹா வந்த சான்ஸ் விடாத சிவா என்று மனம் கூச்சலிட்டது . “நான் சொல்ல எல்லாம் மாட்டேன், செயலில் காட்டறேன் ,என்ன ரெடியா” என்று கண்ணடித்து கிறக்கமான குரலில் கேட்டவுடன் “நான் இந்த ஆட்டத்துக்கு வரல” என்று வேகமாக அங்க இருந்து நழுவினாள்.
எதிரே வந்த சரண்யாவும் ,நித்யாவும் “எதுக்கு இப்படி புலி துரத்தினது போல ஓடி வர” என்று முடிப்பதற்குள் ஷிவேந்தர் அங்கு ஓடி வந்தான் .
இந்த புலி தான் துரத்துச்சா ? பொல்லாத புலி தான் ..சரி தான …
வாசலிலே வண்டி சத்தம் கேட்டவுடன் மாமா வந்தாச்சு, அப்பா வந்தாச்சு என்று ஆளாலுக்கு குரல் கொடுத்தனர் .
“மாமா என்றால் இப்படி பயமா ? ரொம்ப ஸ்ட்ரிக்டா !” கலக்கமாக “ரொம்ப கோபக்காறரா !” என்ற ஷிவானி கேள்விக்கு இல்லை ஆமாம் என்று இருவரும் பல விதத்தில் தலை ஆட்டினர் .
“சிவா, மாமாவை போய் பார்க்கலாமா ?”
“கண்டிப்பா வனி ! அப்பா சொல்லிவிட்டால் அம்மா வேண்டாம் சொல்லவே மாட்டாங்க.” வந்தவுடனே மணிவாசகம் கிளம்பிவிட்டதால் அவளால் அப்போது அவரை பார்க்க முடியவில்லை .
மணியை பார்த்து “நேரம் ஆச்சு ! இன்னொரு முறை பார்க்கலாம் ,இப்ப கிளம்பலாமா ? என்று சிவா கேட்டவுடன் “துரத்துவதிலே இரு இந்தர். எனக்கு இங்க இருந்து கிளம்பவே மனசு இல்லை பா !”
“அப்ப இங்கயே இருந்துவிடு ! எனக்கும் அது தான் சந்தோசம் !”
“ஆசையை பாரு ! சீக்கிரம் வந்து பெண் கேட்கும் வழியை பாருங்க ! இன்னும் ஒரு மாதம் தான் டைம்! அதற்குள் உங்க பெண்டாட்டியா உங்க வீட்டில் இருக்கணும்”..
நித்யா ,சரண்யா ,பாட்டி எல்லாரும் சீக்கிரம் பெண் கேட்டு வருவதாக வாக்கு கொடுத்தனர் .
அவன் சித்தி ,சச்சினுக்கு கூட அவளை மிகவும் பிடித்துவிட்டது.
முதலில் ஷிவேந்தர் வீட்டிற்குள் கலக்கமாக நுழைந்த ஷிவானிக்கு அங்கு இருந்த மூன்று மணி நேரத்தில் அவள் கலக்கம் , பயம் , படபடப்பு அத்தனையும் மாயமாக மறைந்ததை உணர்ந்தாள் .
எப்போதும் தனிமையில் பொழுதை கழிக்கும் ஷிவானிக்கு இவர்கள் வீடு சொர்க்க பூமி போல தோன்றியது .
இந்த வீட்டில் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . என் கோமு பாட்டி போல் அன்பா பார்த்துக் கொள்ளும் தேகி பாட்டி, சந்தோஷமாக பேசி சிரித்து, எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் ரெண்டு அண்ணிகள், என் மீது மிகுந்த அக்கறை ,எனக்காக ஒவ்வொன்றா பார்த்து செய்யும் , பாச மழை பொழியும் எனக்கே எனக்கான சிவா என்று அவள் சந்தோஷ மன நிலைக்கான காரணங்களை மனதில் அடுக்கிக் கொண்டே சென்றாள். அந்த நொடி தரையில் கால் பதியாமல் பறந்து கொண்டு இருப்பதாக உணர்ந்தாள். அந்த தருணம் அப்படியே உறைந்து விடாதா, சிவாவுடன் அங்கேயே தங்கி விட மாட்டோமா என்று ஏங்கினாள்.
இந்தர் , “அத்தை ,மாமா ,உங்க ரெண்டு அண்ணாவை அடுத்த முறை கண்டிப்பா பார்த்திடனும்” என்று படி இறங்கும் போது ஹால் சுவரில் பெரிதாக மாட்டப்பட்ட அவர்கள் குடும்ப போட்டோவை பார்த்தாள். கிட்ட போய் பார்த்தவுடன் அவள் முகம் வியர்த்தது !
“என்ன குட்டிமா, ஐயா அழகை பார்த்து அப்படியே பிரீஸ் ஆகிட்டீங்களா? என் அருகில் இருக்கும் இடத்தை சீக்கிரம் நிரப்ப வாங்க மேடம் .அந்த போட்டோ வந்த பிறகு இதை மாற்றிடலாம்” .
கிசுகிசுப்பாக, “ நான் சொல்வதை அப்படியே கற்பனை செய்து பாரேன் கண்ணம்மா.. நீ வயிற்றைக் தள்ளிக் கொண்டு, ஒரு கையில் நான் உன்னை அனைத்துக் கொண்டு , மறு கையில் நம்ம ஒரு வயது பொடி பையனை தூக்கிக் கொண்டு ..சூப்பர் வனி செல்லம்” என்று அவளை ஆசையாக இறுக்கி அனைத்துக் கொண்டான் .
அவள் கைகளை இறுக பற்றி ‘தாங்கஸ் for everything கண்ணம்மா’ ..அவள் எதிர் பார்க்காத சமயத்தில் அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான் .
இதை எதையும் உணரும் நிலையில் ஷிவானி இல்லை என்று சிவாக்கு தெரியாது.
இல்லை, நான் சரியா பார்க்கவில்லை .அப்படி இருக்காது .. மீண்டும் அந்த புகை படத்தை பார்க்க பயந்தாள்..
பயமாக இருந்தாலும் பொய்யாக இருக்க கூடாதா என்ற நப்பாசையில் மறுபடியும் அவர்கள் குடும்ப புகை படத்தை உத்துப் பார்த்தாள். அவள் கண்கள் காண்பது நினைவே ! ஒருவரை ஒரு முறை பார்த்தால் ஷிவானியால் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது ..அது உண்மை என்று நினைக்கவே நா வரண்டது .
சிவா சொல்வது எதுவும் நிறைவேறாது என்று அவனுக்கு தெரியாது என்று ஷிவானி உள்ளம் ஊமையாக அழுதது .
என்ன தான் அடக்க நினைத்தாலும் அவளை அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் …கண்ணீரால் பார்வை மங்கியது .
என்ன டா அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறா ? அந்த இளநிற வண்ண சட்டை போட்டு இருக்கும் பையன் அழகா இருக்கான் தான ! அவன் அழகை பார்த்து மயங்கிடீன்களா என்று அவன் தற்பெருமை பேசிக் கொண்டு இருந்த போது ஷிவானி அப்படியே சிவா மீது மயங்கி சரிந்தாள்.
ஷிவானிக்கு எதனால் மயக்கம்? கண்டுபிடியுங்க, இல்லை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.