7.2:
மாலை தோட்டத்தில் கோமதி பாட்டி , பேத்தி ஷிவானியிடம் மகன் சொன்னான் என்று சொல்லாமல் அவளே பேசுவது போல
“வனி குட்டி , இன்னும் ரெண்டு மாதத்தில் படிப்பு முடிய போகுது .அப்புறம் என்ன செய்வதா உத்தேசம் . மேல் படிப்பு என்ன படிப்பதா இருக்க ? இங்கயே படிக்க போறியா ? இல்லை வெளிநாடா ? உங்க அப்பனை விட அதிகமா படித்து அவனை விட பெரிய ஆளா வரணும்.. இது என் ஆசையும் கூட !”
ஷிவானி பதில் பேசாமல் அமைதியாக எங்கோ வெறிப்பதை பார்த்து பேத்தி கைகளை நீவிய படி “பதில் சொன்னால் தான நீ என்ன நினைக்கிற என்று புரியும்”
பாட்டியை இப்போது இப்படி பேச சொல்லி யார் தூண்டி விடரா என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . அவள் மனதில் எரிமலையே வெடித்துக் கொண்டு இருந்தது.
கோபத்தை அடக்கி பாட்டியிடம் பொறுமையாக “எனக்கு தான் இந்த தொழிலே வேண்டாம் சொல்லறேனே ! அப்புறம் எதுக்கு இதில் படிப்பை தொடரனும். உள் நாட்டிலே படிக்கும் ஐடியா இல்லை . இதில் வெளிநாடா, இதன் மூலம் எங்க அப்பாக்கு ஒரு பாடம்” என்று ஏளனமாக சிரித்தாள் .
இவள் படிப்பு, உழைப்பு அத்தனையும் வீண் என்று இவளுக்கு ஏன் புரிய மாடீங்குது. அப்படி மக்கு பெண்ணா இருந்தால் கூட விட்டுவிடலாம் .இவள் வாழ்க்கை , எதிர் காலமே பாழாவது இவளுக்கு புரியவில்லையா ? இல்லை புரியாதது போல நடிக்கிறாளா ?ஒரு வருடமா ? ரெண்டு வருடமா? மொத்தம் ஐந்து வருடம் .
“வனி , நான் பேசுவதை குறுக்க பேசாமல் கேளு ! பேசி முடித்த பிறகு உன் அபிப்ராயாதை சொல்லு” என்று வனி வாய்க்கு பூட்டு போட்டு ” நீ, உங்க அப்பா மேல இருக்கும் கோபத்தில் கஷ்டப்பட்டு படிச்ச, படித்த படிப்பை வேண்டாம் சொல்லற ? மூளை என்று இருக்கா? இல்லையா? மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தெரியுமா ?”
அவள் ஏதோ சொல்ல வருவதைக் கேட்டு “குறுக்கே பேசாத சொன்னேன் . கேட்டா உங்க அப்பா மீது இருக்கும் கோபத்தில் அப்படி தான் செய்வேன் சொல்லற ? இப்ப காட்டும் பிடிவாதத்தை நீ அப்பவே காட்டி இருக்கலாம் .சரி, அது உன் இஷ்டம் .இந்த படிப்பை ஒரு ஏழைக்கு கொடுத்து இருந்தால் அவனையும் உயர்த்தி அவன் குடும்பத்தையும் உயர்த்தி, வாழ்க்கையில் முன்னேறி இருப்பான் ..
நமக்கும் புண்ணியமா இருந்து இருக்கும் . எல்லாம் எளிதாக கிடைத்ததால் தான் உனக்கு இதன் அருமை தெரியவில்லை .வெளி உலகத்தையும் கொஞ்சம் பாரு ! நான் தூக்கி வளர்த்த உனக்கு, கொஞ்சமாவது நன்றி கடன் இருந்தா நான் சொல்வதை கேளு !”
கண்களில் நீர் கோர்த்த படி “என்ன கோமு ,எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யறையா?”
“அப்படி எல்லாம் இல்லை குட்டி.. எனக்காக என் ஆசைக்காக ! நான் சொல்வதை கொஞ்சமாவது யோசித்து பாரு !அவரை பழி வாங்கறேன் என்று உன் வாழ்கையே கெடுத்துக் கொள்ளாதே தான் சொல்ல வரேன் . உனக்கு என்று இந்த தொழில் தான் எழுதி இருக்கு என்றால் அதன் படியே செய் செல்லமா ” என்று சொல்லி முடிப்பதற்குள்
“பாட்டி, இந்த பேச்சை பேசாத எத்தனை தடவை சொல்வது . முடியவே முடியாது .நீ யாரு சொல்லி பேசற எனக்கு தெரியும் .அவரிடம் முதலும் கடைசியுமா தெளிவா சொல்லிவிடு ! நீ என்னிடம் மேற்கொண்டு இதை பற்றி பேசினால் நான் ஹாஸ்டலில் போய் தங்கிக் கொள்வேன் ! எங்க அப்பா மீது இருக்கும் கோபத்தாலே எனக்கு மருத்துவ தொழிலை பிடிக்கவே இல்லை .என் இஷ்டம் இல்லாமல் அவர் என்னை கட்டாயபடுத்தி படிக்க வைத்தார் என்பதற்காகவே நான் மருத்துவத்தை தொடர போவது இல்லை ” .
“உனக்கு இத்தனை ரோஷம் ஆகாது வனி ! ஆ வூனா என் வாயை அடைத்து விடு . கண்ணை திறந்து கொண்டே கிணத்தில் குதிப்பேன் சொல்லற? நான் என்ன செய்ய முடியும் .வேடிக்கை தான் பார்க்க முடியும் .உன்னை கட்டிக்க போறவன் என்ன பாடு படபோறானோ ? உன்னை அடக்கற குதிரையா கட்டி வைக்கிறேன் .நடக்குதா இல்லையா பாரு” என சபதம் போல கூறினவுடன்
“போ கோமு ! உனக்கு வேற வேலையே இல்லை .எனக்கு கல்யாணமே வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கேன் . இதில் ஒருத்தன் அடக்க வேற வரானாம்”
மகன் பிடிவாதத்தை விட இவள் பிடிவாதம் அதிகமா இருக்கே ! பிடிவாதத்தில் அவனுக்கு தப்பாமல் பிறந்து இருக்கா ! இப்ப பேசினால் வீண் பிடிவாதம் தான் அதிகரிக்கும் .கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும் முடிவு செய்தாள் .
என் பேத்திக்கு கொஞ்சம் நல்ல புத்தியை கொடு ஆண்டவா என்று வேண்டிக் கொள்வதை விட அப்போதைக்கு கோமதிக்கு வேற வழி தெரியவில்லை .
அன்றிரவு ஷிவானி தனிமையில், பாடும் போது எதுக்கு அந்த சிரித்த கண்கள் தோன்றி இம்சை செய்ய வேண்டும்.. ரொம்ப attractive eyes ..உடனே அந்த கண்களை கண் முன் கொண்டு வந்து அதை பேப்பரில் தீட்டினாள்.
மிகவும் பழக்கமான கண்கள் போல இருக்கே ! அதை பார்க்க ஒரே பரவசமாக இருந்தது. அதே சந்தோஷத்துடன் தூங்க சென்றாள். அடுத்த நாள் காலையில் விழிக்கும் போதே அந்த கண்களில் தான் விழித்தாள். ஏனோ அதை பார்க்க பார்க்க உற்சாகம் தோன்றியது
மனதில் do I love that guy ..

ச, அவன் தான் ஏதோ விளையாட்டு தனமா காதல் வசனம் பேசினான் என்றால் நானும் லூசு தனமா நினைக்கிறேனே?
ஹரிக்கு கூப்பிட்டு அவள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டாள்.
பார்த்து ஷிவானி, ஹாய் பெண்டாட்டி வந்து நிற்க போறான் . அப்படி வந்தால் ஹாய் புருஷா, சொல்லி வைக்காத..
முதலில் வரட்டும் பார்க்கலாம் என்று சிரித்துக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் வேகமாக சென்றது .
எப்போதும் வீட்டில் அதிக நேரம் செலவு செய்யாத கண்ணன் அன்று வீட்டில் இருப்பதை கண்ட ஷிவானிக்கு ஆச்சரியம் . அதை விட உலக அதிசயம் என்றால் அவள் அன்னையுடன் பேசிக் கொண்டு இருந்தது .
வனி என்றாவது அவள் அப்பாவிடம் பேசணும் என்றாலே உன்னிடம் பேசும் நேரத்தில் பல லட்சம் பணம் சம்பாத்தித்து விடுவேன். நேரத்தின் அருமையே தெரியாதா ? பொறுப்புள்ள பெண்ணா நடந்துக்கோ என்று திட்டு விழும். இதுவே அவள் வளர்ந்த பிறகு நல்ல மருத்துவரா நடந்துக்கோ என்று அட்வைஸ் மழை பொழிய தொடங்கிடுவார் .
அந்த நேரத்தில் எல்லாம் முதலில் பொறுப்புள்ள மனிதனா , அப்பாவா நடந்துகோங்க என்று வனிக்கு கத்த வேண்டும் என்று தான் தோன்றும் .
ஷிவானி என்று இல்லை அவர் மனைவியிடமே இப்படி தான் ஒரு நாளும் அவர்கள் சிரித்து பேசி ஷிவானி பார்த்ததே இல்லை .எப்படி தான் இவர்களால் இப்படி இயந்திரதனமா இருக்க முடியுதோ என்று சலித்து, வியந்தும் இருக்கிறாள்.
ஷிவானி, கண்ணனிடம் பிடிவாதமாக பேச வேண்டும் என்றால் மட்டும் தான் நின்று என்ன என்று கேட்பார். அதுவும் ரெண்டு நிமிடத்தில் சுருக்க சொல்லி முடிக்க வேண்டும் நிபந்தனையோடு !
அவள் கூற வேண்டியதை கூறும் வரை அவரை நகர விட மாட்டாள் .
அவ பிடிவாதத்தை கண்டு வேண்டா வெறுப்பாக சொல்லு என்று தான் அமர்ந்து இருப்பார் . அவர் செகரட்டரி ராஜீவ், மோனல், பிலோ வந்து அழைத்தால் வனி என்று ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுக்காமல் கிளம்பிடுவார். .
இப்படியும் இருப்பார்களா என்று வனி பல முறை நொந்து இருக்கிறாள் . இந்த காரணத்தாலே அவள் தந்தையிடம் எதையுமே பகிர்ந்தது இல்லை.
அவள் அம்மாவும் பள்ளி, மருத்துவம் என்று எந்நேரமும் பிசியாக இருக்கிறவள் . சிறு வயதில், அவள் அன்னையிடம் பேசணும் அலுவலகத்துக்கு அழைத்தால் முதலில் அவள் செகரடரியுடன் தான் பேச முடியும் .
அவளும் படித்தாயா ? சாபிட்டாயா? வெளியில் எங்கயாவது போகனுமா? பணம் வேண்டுமா ? ரொம்ப அர்ஜெண்டா என்று பல கேள்விகளை கேட்டு சிறிது நேரத்தில் அவள் அன்னையை தொடர்பு கொள்ள சொல்வதாக சொல்லுவாள் . பொறுப்பான பதவியில் அன்னை, தந்தை இருப்பதாக தோன்றினாலும் கிடைக்கும் சிறிது நேரத்தில் அவளை கண்டு கொள்ளலாமே , அந்த நேரத்தை அவளுக்காக மட்டும் செலவு செய்யணும் என்ற எண்ணம், ஆசை, ஏக்கம் அவளுக்கு இருந்து கொண்டே இருக்கும் .
இப்போதுள்ள பெற்றோர்கள் இங்கு தான் தப்பு செய்கிறார்கள் .அவரவருக்கு அவர்கள் செய்யும் வேலை தான் முக்கியம் .இப்போது இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருவரும் வேளைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் .
வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஆளுக்கு ஒரு பக்கம் கம்ப்யூட்டர், செல் போன் என்று இருப்பதை விட்டு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நேரத்தை செலவு செய்யலாமே !
வீட்டில் இருக்கும் நாலு பேருக்கு ஒரு குரூப் . அம்மா மகளிடம் பேசவேண்டும் என்றால் செல் போன் மூலமாக தான் பேசுவது .கேட்டால் அவ எந்நேரமும் செல்லும் கையுமா இருப்பா, உடனே பதில் தருவா பெருமை வேற ..
இது எந்த அளவிற்கு முன்னேற்றம் பாருங்க .தப்பு சொல்லவில்லை .இதுவே வெளியே இருந்தால் சரி …வீட்டிலும் கடைபிடித்தால் ..
என் குழந்தைக்காக தான வேளைக்கு போறேன் அவள் வசதியா வாழ தான என்று சொல்லாமல் உங்கள் குழந்தைக்காக தினமும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் .
அந்த நேரத்தில் சந்தோஷமாக பேசி சிரியுங்கள் . அப்பவும் ஹோம் வர்க் செய்தாயா ,படித்தாயா,ஏன் மார்க் கம்மி ,படிக்க சொன்னேனே, படித்தால் தான என்று சொல்லி அவர்களை வருந்த வைக்க வேண்டாமே !
பள்ளிகூடத்தில் நடந்த சுவாரசியமான விஷயத்தை பற்றி கேளுங்க. நீங்க படித்த ,இல்லை உங்களுக்கு நடந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் . புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள் .புத்தகத்தை விட சிறந்த நண்பன் இல்லை .
அவர்கள் பள்ளி ,கல்லூரியில் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .அவர்கள் மனதில் உள்ளதை உங்களிடம் சுதந்திரமாக பகிரவிடவும் .
அவர்கள் எதாவது சொன்னால், கேட்டால் உடனே விடை கொடுக்காமல் உங்க பிள்ளைகளையே சிந்திக்க விடுங்க . தப்பா,சரியா யோசிக்க விட்டு பிறகு சொல்லி திருத்துங்கள். அதை விட்டு, அம்மாவிடம் சொன்னா திட்டுவாங்க ,கோபப்படுவாங்க என்ற எண்ணத்தை விதைக்க வேண்டாம் . அப்படி நினைத்தால் எல்லாத்தையும் மறைக்க தோன்றும்..
குழந்தைகள் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் .அவர்களிடம் எப்படி பழகுகிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள் .அவர்களை வீட்டுக்கு அழைத்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தெரியாமல் கண்காணியுங்கள் .
எது நடந்தாலும் என் அம்மா ,அப்பா எனக்கு துணையாக ,பக்க பலமா இருப்பார்கள், எதா இருந்தாலும் அவர்களிடம் சொன்னால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையை கொடுங்கள் .அவர்கள் மனதில் விதையுங்கள் .அந்த நம்பிக்கை தான் நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் மிக பெரிய சொத்து.
அவர்கள் செய்த சின்ன விஷயத்தையும் பாராட்டுங்கள் .மூன்று கோல்டன் வோர்ட்ஸ் சாரி, thankyou, ப்ளீஸ் உபயோகிக்க சொல்லி கொடுங்கள்.

வேலை செய்பவனுக்கு எதுக்கு தேங்க்ஸ்,ப்ளீஸ் ,சாரி என்று எண்ணத்தை விதைக்க வேண்டாம். மனிதனை மதிக்க கற்றுக் கொடுங்கள் .மூன்று கோல்டன் வார்த்தைகளை நீங்களும் முடிந்த அளவிற்கு உபயோகிங்கள் . அவர்களிடமும் தான் .
அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் .சின்ன சின்ன விஷயத்தையும் உங்களிடம் தான் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்
*****
ஷிவானி , சிறுவயதில் பாட்டியிடம், மற்ற அம்மா போல ஏன் என் அப்பா ,அம்மா இல்லை. என்னை கடைக்கு கூட்டிக் கொண்டு போக சொல்லு ,என் பிறந்த நாளைக்கு கேக் வெட்டனும் வர சொல்லு, ஓபன் டே ,ஸ்போர்ட்ஸ் டே , சினிமா போகலாம், பிரிண்ட்ஸ் எல்லாரும் வீட்டுக்கு வர சொல்லணும், அம்மாவை இருக்க சொல்லு, ப்ராஜெக்ட் செய்து தர சொல்லு என்று படுத்தி எடுத்திடுவாள். அந்த நேரத்தில் பிஞ்சு மனதை அறிந்த பாட்டி பல கதைகளை கூறி தேற்றுவாள் . முடிந்த அளவு அவளுக்கு இணையாக பேசி சிரித்து, உதவி செய்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வாள் .
அவள் அன்னையிடம் அவள் எண்ணத்தை , ஆசை பகிர்ந்த போது சின்ன பிள்ளை போல பிஹெவ் செய்யாத வனி ! கொஞ்சம் மேசுர்ட் நடந்துக்கோ, u cant expect me to be an ordinary women, be ambitious என்று சொன்னவுடன்
But I am an ordinary child mummy என்று பிஞ்சு உள்ளம் அழுதது.

பாட்டி இல்லை என்றால் பேத்தி எந்நேரமும் தனியாக பொழுதை கழிக்க நேர்கிறதே என்று வருந்தி மகன், மருமகளிடம்
“ஷிவானியை ஊருக்கு அழைத்துக் கொண்டு போய் பார்த்துக்கிறேன் . உங்க அப்பா தோட்டம், தொறவு எல்லாம் விட்டு வர மாட்டார் . இங்கேயும் என்னால் அதிக நாள் இருக்க முடியவில்லை” என்று அவள் எண்ணத்தை பகிர்ந்தவுடன் கண்ணன் “எதுக்கு தனியா கழிக்கணும், எத்தனையோ இருக்கு ..எத்தனை என்ட்ரன்ஸ் இருக்கு .. அதற்கு அவளை தயார் படுதிக்க சொல்லுங்க ! விருப்பட்ட கிளாஸ் போக சொல்லுங்க . நாங்க எல்லாம் இங்க தான இருக்கோம் .அப்புறம் என்ன காட்டில் இருப்பது போல தனி “
கோமதி பாட்டி ” நீ இருக்க சொல்லு ! இங்க என்று சொல்லாத ! நடு இரவு போல பார்ட்டி முடித்து வந்து காலை ஆறு மணிக்கு கிளம்பி போற! இரவு தங்க மட்டும் தான் வீடு . அதுவும் சில நாள் serviced apartments தங்கிக் கொள்கிறாய். வாரத்துக்கு ஒரு முறையாவது உன் பெண்டாட்டி பிள்ளைகளை பார்க்கிறாயா? கண்டிப்பா இல்லை . வீட்டில் யார் இருக்கா, இல்லை, தெரிந்து கொள்ள ஒன்று உங்க வண்டியை பார்க்கணும், இல்லை வேலையாளை கேட்கணும் .
போதும் கண்ணா ! இனி உன் குடும்பத்துக்காக நேரத்தை செலவு செய் ! உன் பிள்ளைகளுக்கு இப்போது தேவை அன்பும் அரவணைப்பும் தான் ,அதை நாம தான் அவர்களுக்கு கொடுக்கணும் இல்லை என்றால் தப்பா போய்டும் ! வேற வழியில் செல்ல சான்ஸ் இருக்கு !”
பாட்டி சொன்னது போல தான் கடைசியில் நடந்தது .
நிர்மலா ,”அத்தை, அவ பேச்சை எல்லாம் கேட்டு நீங்க வருந்த தேவை இல்லை !சின்ன பெண் ! நான் பார்த்துக்கிறேன் .நீங்க போயிட்டு அடுத்த முறை ரெண்டு மாதம் இருப்பது போல மாமாவை கூட்டிக் கொண்டு வாங்க” .
பாட்டி கிளம்பும் போது பேத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து தான் விடுவாள் .என்ன தான் மகன் ,மருமகள் என்றாலும் ஒரு அளவிற்கு மேல் சொல்ல முடியாதே !
முதல் எல்லாம் எதற்கு எடுத்தாலும் அப்பா, அம்மா வேண்டும் என்று நச்சிய வனி, வளர வளர அவர்கள் இப்படி தான் என்று பழகிக் கொண்டாள். இருந்தாலும் அவள் அடி மனதில் ஏக்கம் அப்படியே இருந்தது .
வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் வெஸ்டேர்ன் டான்ஸ் போய் சேர்ந்து கொண்டாள். தனிமையை விரட்ட வெஸ்டேர்ன் டான்ஸ் வட்டார நபர்களிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள். அங்கு வந்தது தான் வினையே !
அவள் பெற்றோர்களாலே வளர வளர மருத்துவ தொழில் மீது கோபம், வெறுப்பு உண்டாகியது . இப்படி தான் சம்பாதிக்கணும் அவசியம் இல்லை, அப்படி பட்ட பணமே வேண்டாம் என்ற எண்ணம் உண்டாகியது. கூலி ஆள் கூட சந்தோஷமா குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்கிறான். யாரு வேண்டும் என்றாலும் இருக்கட்டும் ! கண்டிப்பா எனக்கு வர போறவன் மருத்துவனா இருக்கவே கூடாது என்று தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறாள் ..
பாவம் ஷிவேந்தர் உன் நிலைமை???


பார்க்கலாம் அவள் எண்ணப்படியே அமையுமா என்று?