துளிர் 3:
ஷிவேந்தர் தந்தை மணிவாசகம் இன்கம் டக்ஸ் அதிகாரியாக இருக்கிறார் .நேர்மைக்கு பெயர் போனவர். வேளையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் அவர் நேர்மை, திறமைக்காக அரசு மறுபடியும் அவரை சீப் கமிசியனராக பணயில் அமர்த்தி உள்ளது. வெளியே கண்டிப்பாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டார் .
அவர் அன்னை வைதேகி -அப்பா ஸ்ரீநிவாசன் அந்த வீட்டிலே அவர்களுடன் வசிக்கிறார்கள் .ஒரே காம்பௌண்டில் அவர் தம்பி சங்கர் -அவர் மனைவி செல்வி மற்றும் மகன்கள் சச்சின், ஆதியுடன் வசிக்கிறார்கள் ..
ஸ்ரீனிவாசன் சிடியில் பல கிளைகள் கொண்ட பர்னிச்சர் ஷோரூம் கடை வைத்து இருக்கிறார் . அவரும் அவர் இளைய மகன் சங்கரும் அதை நிர்வகித்து வருகிறார்கள் .
மணிவாசகம்- விசாலம் தம்பதியருக்கு நரேன் ,ரஞ்சனி, சுரேன் ,ஷிவேந்தர் என்று நான்கு பிள்ளைகள் .
நரேன் -சரண்யாவை கல்யாணம் செய்து ராகுல் என்று ஐந்து மாத மகன் உண்டு . நரேன், சிடியில் பிரபல ஹோட்டலை கட்டி நிர்வகித்து வருகிறான் .
ரஞ்சனி –கார்த்திக் திருமணம் செய்து கோவையில் வசித்து வருகிறாள்.
சுரேன் -நித்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் . சுரேன் கட்டுமான பணி செய்து வருகிறான். ஐந்து ஆண்டுகளாக அவன் நண்பனுடன் சேர்ந்து “ஸ்கை டச் constructions “ தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறான் .
நம்ம ஹீரோ ஷிவேந்தர் என்ன செய்யறான் கண்டு பிடித்து சொல்லுங்க மக்களே !!!
மணிவாசகம் அவர் மக்களுக்கு எதை கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ ,நேர்மை, உழைப்பு, உண்மை, நாணயம் பற்றி நன்கு போதித்துள்ளார். அதை எல்லாரிடமும் எதிர் பார்ப்பார்.. அதனாலே அவர் பிள்ளைகள் இன்று பெயர் சொல்லும் அளவில் சொந்தக் காலில் நின்று சாதித்து இருக்கிறார்கள் .
நரேன் சரண்யாவை சமாதனம் செய்து வெளியேறினவுடன், சின்ன அண்ணி நித்யா “என்ன கொழுந்தனரே! கொளுத்தி போட்டாச்சா!”
“இல்லையே ! நான் ஒன்னும் செய்யலையே! வாட் அண்ணி? என்னை பார்த்து என்ன சொல்லிவிட்டீர்கள்! சின்ன பையன் மனம் தாங்குமா” என்று போலி கண்ணீரை துடைத்தான்.
“எல்லாம் நல்லா தாங்கும் கொழுந்தனாரே! சரி, ரெண்டு வாரம் முன்பு பூந்தமல்லி சாலையில், பகல் ஒரு மணி அளவில் , நீயும் உன் நண்பன் குணாவும் , இள நீல கலர் சல்வார்…………” என்பதற்குள் சிவாக்கு நல்லா புரை ஏறியது ! இருமல் வேற ?
வேண்டும் என்றே இருமிய படி செய்கையில் நானா ?அது நான் இல்லை ..இருக்கவே இருக்காது!
அப்போது அங்கு வந்த பாட்டி வைதேகி “என்ன பேராண்டி ! தண்ணீர் குடிக்க வேண்டியது தான?”
“குடிக்கிறேன் பாட்டி” என்று வேகமாக அந்த இடத்தில் இருந்து நழுவினான் .
புலி துரத்தினால் ஓடுவோமே அப்படி ஒரே ஓட்டமாக அவன் அறைக்கு ஓடி சென்றான்.
இதை எதேர்ச்சையாக பார்த்த சரண்யா, அட பேயை கண்டது போல ஓடி வரான். எப்போதும் எங்களை தான ஓட விடுவான் . என்ன விஷயம் . ஏதோ இருக்கு கண்டு பிடிக்கிறேன் என்று கீழே எட்டி பார்த்தாள்.
அட , நித்யா அண்ணி எங்களை பார்த்து விட்டார்களா?
நடு ரோட்டில் சண்டை போட்டால்….உங்க அண்ணி என்ன? ஊரே பார்த்து இருக்கும். விட்டா சன் பிளாஷ் நியூஸ் சானலில் கூட உங்க சண்டை ஒளி பரப்பு ஆகி இருக்கும் என்றது மனசாட்சி .
அந்த பெரிய வணிக வளாகத்தில் வீட்டு உபயோக பொருள்களுக்கான எக்ஸ்சிபிஷன் நடந்து கொண்டு இருந்தது . மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் துண்டில் இருந்து டிவி, கணினி ,சோபா ,டைனிங் என்று அணைத்து வித பொருட்கள் பார்வைக்கும், விற்பதற்கும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது .தேவையென உள்ளே நுழைந்து விட்டால் எதை எடுக்க, எதை விட என்று மக்கள் திண்டாடும் வண்ணம் பொருட்கள் குவிந்து கிடந்தன. எப்படியாவது விற்று விட வேண்டும் என்று சில பொருட்களில் ஐம்பது சதவீதம் கூட தள்ளுபடி செய்து விற்றுக் கொண்டு இருந்தார்கள் பெரிய கடைகாரர்கள்.
ஷிவேந்தரும், அவன் நண்பன் குணாவும், தாத்தா போட்டு இருந்த அவர்கள் கடை பர்னிச்சர் ஸ்டாலில் உதவுவதற்காக அங்கு வந்து இருந்தனர்.
“சிவா, நாம மாட்டினோம் டா! அந்த பெண் அவங்க பாட்டியை கூட்டிக் கொண்டு வந்து இருக்கா? பின்னாடி போலிஸ் வராங்களா பாரு?” என்று குணா வேகமாக சிவாவை தேடி வந்தான்.
“யாரை டா சொல்லற?”
“அந்த ராங்கி ரங்கம்மா டா !”
அப்போது உள்ளே நுழைந்த ஷிவானியை கண்டு ஹே ஊசி பட்டாசு! பாப் கார்ன்? என்னை தேடி! ஹே அடங்கு ! உன்னை தேடி இல்லை உன் கடையை தேடி என்று மனசாட்சி இடித்துரைத்தது.
குணா முதுகில் ஒன்று வைத்து ” டேய், நீ எப்படி அவங்களை அப்படி சொல்லலாம். பாவம் மச்சி”.
“அன்று என்ன பேச்சு பேசினா! அவ பாவமா ? எப்ப டா இப்படி புத்தர் ஆன!”
விடு மச்சி! சின்ன பெண் தான என்று ஷிவேந்தர் பலமாக சபோர்ட் செய்தான் .
“அவங்களுக்கு நாம யாரு தெரியாது குணா! ஹெல்மெட் போட்டு இருந்தோமே ! தெரிய வாய்ப்பே இல்லை. நீயே உளறி காட்டிக் கொள்ளாத! நீ போய் அவங்களை கவனி ” என்று ஷிவேந்தர் அடுத்து வந்த நபரை காண நகரும் போது
“ஆமாம் டா, நான் யோசிக்கவே இல்லை.”
“யோசிக்க எல்லாம் மூளை வேண்டும் கண்ணா! அதை தான் லல்லி சிச்டரிடம் கழட்டி கொடுத்து வந்துவிட்டாயே” என்று ஷிவேந்தர் வாரிச் சென்றான்.
பல்லைக் கடித்த படி பின்னாலே சென்று “ஒத்துக்கிறேன் . உனக்கு ரொம்ப மூளை சிவா! எல்லாம் சரி! ஆனா எங்கயோ இடிப்பது போல இருக்கே, வந்து கவனிக்கிறேன் ” என்று குணா, ஷிவானி, அவள் பாட்டியிடம் சென்றான்.
பொருளை பற்றி விளக்கி முடித்து, எப்படியோ இவர்களிடம் உளறி கொட்டாம பேசி முடித்துவிட்டேன். குட் பாய் குணா, என்று அவனே அவனை தட்டிக் கொண்டான்.
“சிவா, இங்க வா” என்ற குரலில் ஷிவானி “ சிவானு” யாரு என்னை கூப்பிடுவது என்று கடுப்பாக திரும்பி பார்த்தாள்.
அந்த பக்கத்தில் ஷிவேந்தர் வரேன் கை காட்டினவுடன் ‘ஒ ஒ ஒ இவர் பெயரும் சிவா போல !’
அவள் பாட்டியும் யாரு டா நம்ம வனி குட்டியை இப்படி அழைப்பது. தெரிந்தவன் என்றால் தொலைந்தான். திரும்பி பார்த்து வேற யாரோ , நம்ம வனியை இல்லை . நல்ல வேலை என்று கோமதி பெருமூச்சு விட்டாள்.
இவளுக்கு ஏன் தான் இந்த பெயரை வைத்தோமோ! நல்ல பெயரை தேர்ந்து எடுத்தோம் சலித்து பத்து லட்சத்து ரெண்டாவது முறையாக பாட்டி தலையில் குட்டிக் கொண்டாள்.
ஷிவானிக்கு அவள் பெயரில் உள்ள சிவா பிடிக்கவே பிடிக்காது . ஷிவானி வீட்டில் இருப்பவர்களிடமும் , மற்ற தோழிகளிடமும் எப்போதும் அவளை வனி என்று அழைக்கும் படி தான் சொல்லுவாள். எல்லாரிடமும் முழு பெயர் ஷிவானி என்று தான் அறிமுக படித்திக் கொள்வாள் .
அப்படி யாராவது சுருக்கி ‘சிவா’ கூப்பிட்டால் உடனே பட்டென்று பையன் பேரு மாதிரி எதுக்கு இப்படி சிவா கூப்பிடறீங்க! வனி இல்லை ஷிவானி சொல்லுங்க , எனக்கு சிவா பிடிக்காது தெளிவாக சொல்லிவிடுவாள் .
வேண்டும் என்றே பல பேர் ‘ ஆண்களுக்கு நிகர் எல்லா உரிமை வேண்டும் . நாங்க போடும் பண்ட, சர்ட் எல்லாம் போடணும் , ஆனா இந்த பெயர் வேண்டாமா! அப்படி கூப்பிட்டால் என்ன செய்வ ? என்பவர்களிடத்தில் ‘உன் முகம் பேந்து இருந்தால் பார்க்க சகிக்காது ! எப்படி யோசித்து சொல்லு’ என்று எச்சரிக்கை செய்து ஒரு வழி செய்யாமல் விடமாட்டாள் .
“சிவா, அவங்க இதை எடுத்துக் கொள்கிறார்களாம். இன்னும் கொஞ்சம் டிஸ்கவுன்ட் கேட்கிறாங்க. எப்ப டெலிவரி கிடைக்கும் செக் செய்து கொண்டு வந்திடறேன்” என்று ஷிவேந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்து குணா சென்றான் .
ஷிவானியிடம் பேச மனசு பரபரத்தது. அதை ஒதுக்கி இயல்பாக வைதேகியிடம் பார்வை பதித்து “எஸ் சொல்லுங்க மேடம் , நல்ல சாய்ஸ் செய்து இருக்கீங்க . நல்ல பர்மா தேக்கில் செய்த கட்டில். நல்ல விலை தள்ளுபடியும் கூட. இதுவே எங்க ஷோரூமில் வந்து வாங்கி இருந்தா குறைந்தது முப்பது சதவீதம் கூடுதலா கொடுத்து தான் வாங்கி இருக்க முடியும்” என்று ஷிவேந்தர் அவன் பொருளின் தரத்தை பற்றி விளக்கிக் கொண்டே சென்றான்.
வீட்டில் போர் அடிக்குது கண்டிப்பா வெளியே போகணும் என்று ஷிவானி தான் அவள் பாட்டியை அழைத்து வந்து இருந்தாள். பாட்டி பேத்தியிடம் ‘ போறது போறோம் உன் அறைக்கு கட்டில் வாங்கிடலாம்’ என்றவுடன் ஷிவானி எக்ஸ்சிபிஷன் என்றால் சுத்தி பார்த்துவிட்டு காட்டன் கண்டி, பாப்கார்ன் மட்டும் சாப்பிட்டு வந்திடனும் ..எதையும் வாங்க வேண்டாம் சொல்லி அழைத்து வந்து இருந்தாள்.
“பாட்டி, நான் அப்பவே சொன்னேன்ல , விற்காத பொருளை எல்லாம் தள்ளுபடி என்று போட்டு நம்ம தலையில் கட்டறாங்க ! இவரே சொல்லறாரே ! கடைக்கு போனா நல்ல பொருளா கிடைக்கும் என்று ! கடைக்கே போகலாம் வா கோம்ஸ்…”
நான் எங்கே அப்படி சொன்னேன்! ஒரு வேலை சொல்லி இருப்பேனா என்று ஷிவாவிற்கே சந்தேகம் தோன்றி உறுதி ஆகும் அளவிற்கு ஷிவானி பேசிக் கொண்டே போனாள். இவளை மாதிரி நாலு பேர் இருந்தா போதும்.. விளங்கிடும் என்று எண்ணியதை சொல்ல முடியாமல்
“மிஸ், ..நான் கடைக்கு போனா இது போல தள்ளுபடி தான் கிடைக்காது சொன்னேன். மற்ற படி நீங்க எங்க போய் எடுத்தாலும் ஒரே தரமான பொருளை மட்டுமே விற்போம் !” என்று சிரித்த படி பேசியவுடன் மனதில் புன்னகை மன்னன் நினைப்பு !
சிரிப்பை பாரு, வழிசல் மன்னன் என்று ஷிவானி உள்ளுக்குள் புகைந்து கொண்டு “அங்க போனா ஒரு மாதிரி , இங்க ஒரு மாதிரி ! ஒரே பொருளுக்கு எதுக்கு இத்தனை கழிவு ! ஏதோ சரி இல்லாத காரணத்தால் தான எங்களிடம் தள்ள பார்க்கிறீங்க!”
அவன் ஐ டி கார்டில் பெயரை பார்த்து “ சொல்லுங்க மிஸ்டர் ஷிவேந்தர்!”
என்னை மாதிரியே செய்யறா ! copy cat . இருந்தாலும் ரொம்ப அறிவு டி உனக்கு என்று அவளை பாராட்டி வெளியே “மிஸ் ஷிவானி ,எங்க கம்பனி இன்று, நேற்று ஆரம்பித்த கம்பனி இல்லை . மக்களிடம் நல்ல புகழ் பெற்ற நிறுவனம் எங்களுடையது என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன் .. நீங்க யாரை வேண்டும் என்றாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தரத்தில் பெயர் பெற்றது . எல்லா பர்னிச்சர் ISO சான்றிதல் கொண்டது. சந்தையில் நாங்க தான் முதலில் இப்படி அறிமுகம் செய்து இருக்கோம்.”
ஆமாம், ஆமாம் பெரிய மன்னார் அண்ட் மன்னார் கம்பனி தான . எதில் எதிலோ ஏமாத்தறாங்க! காசு கொடுத்து கரக்ட் செய்தால் எவன் வேண்டும் என்றாலும் ISO தர சான்றிதல் கொடுத்திடுவான் இந்த லூசுக்கு தெரியாது போல . இவனை எல்லாம் யாரு வேளைக்கு வைத்தார்களோ என்று ஷிவானி முனங்கியது ஷிவேந்தருக்கு கேட்கவில்லை .
ஷிவானிக்கு திடீர் என்று இவருக்கு எப்படி என் பெயர் தெரியும். பாட்டி வனி மட்டும் தான சொன்னாங்க! முன்பே பார்த்து இருக்கேனா? தெரிந்தவனா ? என்று அவன் முகத்தை உத்து பார்த்தாள்.
ஷிவானி குறுகுறு பார்வையை கண்டு, என்னை கண்டு பிடித்து விட்டாளா ! அப்படி என்ன சொன்னேன் என்று ஷிவேந்தர் டென்ஷன் ஆனான். அவள் முகம் குழம்பி பின்னர் இயல்பானதை கண்டு இவளாவது கண்டு பிடிப்பதாவது என்று சிரித்துக் கொண்டான். எதற்கு அந்த பார்வை ! ஆஹா உரிமையா ஷிவானி அழைத்து உளறிவிட்டேனா! நல்ல வேலை கண்டுபிடிக்கவில்லை.
அவன் சிரிக்கும் முகத்தை கண்டு , இவனிடம் பொருள் வாங்கவே கூடாது முடிவு எடுத்து “இங்க, இந்த எக்ஸ்சிபிஷனில், லாபமே இல்லாமல் விற்கறீங்க சொல்ல வரீங்களா சிவா சார்” என்று இழுத்துக் கேட்டவுடன்
“கண்டிப்பா லாபம் இல்லை சொல்ல முடியாது, ஆனா மிகவும் குறைந்த சதவீதம் தான் சொல்ல வரேன். இங்கே விற்கும் பொருளுக்கு என்று டாக்ஸ் சலுகை கிடைக்கும் . இன்னும் நிறைய மக்கள் எங்கள் நிறுவனம், பொருள் தரம் பற்றி அறிய வாய்ப்பு ! ஒரு வருடம் கூடி விற்கும் பொருட்கள் இங்கே சில நாட்களில் விற்று விடுகிறது . விற்பனை அதிகமாகும் போது லாபம் குறைந்தால் தப்பு இல்லை என்று எங்கள் எண்ணம். அதில் தப்பு இல்லையே!”
அந்த பைக் ஆசாமி மாதிரியே பேசி என் வாயை அடைக்கிறானே! ஒரு வேலை அவனா இவன் !
அன்று முதல் தடவை கண்ணாடி போடாத போது இவன் முகம் போல் அவன் முகம் இருந்துச்சோ! ஷிவானி என்ன யோசித்தும் அவளுக்கு நினைவு இல்லை . ச ச இருக்காது. எனக்கு தான் அப்படி எண்ணம் என்று மனதை அடக்கினாள் .
ஷிவேந்தர், இதுவே வேற யாராவது அவனை இப்படி கேள்வி கேட்டு இருந்தால் நீ ஒன்றும் வாங்க தேவை இல்லை, போகலாம் என்று முகத்தில் அடித்தது போல சொல்லி இருப்பான்.
ஆனா அவனிடம் பேசும் அவன் ஷிவானியிடம் அப்படி எடுத்தெறிந்து பேச ஏனோ அவனுக்கு மனம் இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் என்று அவளுடன் இருக்கும் நேரத்தை வம்பு செய்து கடத்திக் கொண்டு இருந்தான் .
பொருட்களை எல்லாம் பார்வையிட்டு வந்த கோமதி பாட்டி இவர்கள் சண்டை ஓயாது என்று “வனி போதும் டா” என்று பேத்தியை அடக்கி ஷிவேந்தரிடம்
“பைனல் செய்திடலாம். கட்டிலோட மெத்தையும் வேண்டும் ! நல்ல போம் ரப்பர் மெத்தையும் சேர்த்து பில் போட்டிடுங்க! அவ சின்ன பெண். அது தான் .. இப்போது எல்லாம் கணினியில் பார்த்து அதிலே பணத்தை கட்டிவிட்டால் வீட்டிற்கே பொருள் வந்து விடுகிறதே! அதை விட்டு எதற்கு இப்படி தேடி அலையணும் எண்ணம் தான் இவளுக்கு. என்ன தான் இன்டர்நெட்டில் தரமான பொருள் விற்றாலும், நாலு கடை ஏறி நாம பார்த்து பார்த்து வாங்குவது போல வருமா?”
உங்க பேத்தி போல இருக்கும் சோம்பேறிகளுக்கு தான் ஒத்து வரும் என்று வாய்க்குள் முனங்கினான். அதை கேட்டு ஷிவானி கொதிப்பிற்கு சென்றாள். உன்னை என்ன செய்யறேன் பாரு என்று கருவிக் கொண்டு செல் போனில் மும்மரமாக எதையோ தேடிக் கொண்டு இருந்தாள்.
இன்டர்நெட்டில் அவர்கள் செலக்ட் செய்த கலைநயம் மிகுந்த கட்டில் போல கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. எங்களோடது ஸ்பெஷல் என்ற பெருமை பீத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்கலாம் பார்த்தால் முடியலையே ! அடங்கரானா பாரு !
கோமதி அந்த வயதிலும் கம்பீரமாக இருந்தாள். மொத்தத்தில் பணக்கார மாடர்ன் பாட்டி.. “நான் உங்க கடையில் தான் ரெகுலரா வாங்குவேன். கடை முதலாளி ஸ்ரீனிவாசன் சார் இல்லையா? அவர் இருந்தா வர சொல்லுங்க!”
“அவர் இல்லைங்க மேடம். முக்கியமான வேலையா வெளியே போய் இருக்காரு ! உங்களுக்கு தாத்தா இருந்தா என்ன டிஸ்கவுன்ட் தருவாரோ அதையே நான் தரேன் பாட்டி ! இதே பினிஷ் வேண்டுமா? இல்லை, அந்த செரி பினிஷ் வேண்டுமா? இது கூட நல்லா இருக்கு . அது இன்னும் மார்டனா இருக்கும் . பார்வைக்கும் ரிச்சா இருக்கும். இப்போதைக்கு வேகமா போகும் கலர்” என்று அவன் எண்ணியதை கூறி பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டான் .
பாட்டி பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஷிவானி , என்னமா பேசறான் .விக்காத பொருளை எப்படி அலங்காரம் செய்து விற்கிறான். இவங்களுக்கு எல்லாம் பேச கத்துக் கொடுக்கவா வேண்டும் . இப்படி பேசுபவனிடம் பொருள் வாங்குவதா ? நெவெர் .
“பாட்டி, போன தடவையே இந்த மாதிரி எக்ஸ்சிபிஷன் பொருள் வாங்கி ஏமாந்ததா சொன்ன! இப்பவும் நல்ல தரமான கடைக்கு போகாம இப்படி பாதி விலை கழிவு செய்து கொடுக்கும் கடை நோக்கியே சென்றால் எப்படி? எப்படி எல்லாம் பேசி கவுக்கறாங்க. இப்ப தான் ஒருத்தன் இதே பல்லவியை அந்த கடையில் அளந்து முடித்தான். அதற்குள் இவன். எங்கயாவது பஞ்சு கிடைக்குதா பாரு! காதில் ஓட்டையே விழுந்திடும் போல? எனக்கு போர் அடிக்குது !” என்று நச்சிய ஷிவானியை ஷிவேந்தர் முறைத்தான்.
“அதுவும் இதுவும் வேற வனி கண்ணா? அங்க நான் டிசைன்காக தான் பார்த்தேன். இது வித்தியாசமா இருக்குது .முதலில் பார்த்தவுடன் உனக்கும் பிடித்து இருக்கு சொன்ன தான வனி ” சோர்ந்து இருந்த பேத்தி முகத்தை கண்ட கோமதி
“என்ன ஆச்சு தங்கம். நீ கேட்டதால் தான வந்தோம் . உடம்பு சரி இல்லையா? ஷாபிங் என்றவுடன் குதி போட்டு கிளம்பின! இவங்க கடை ரொம்ப நம்பகமான கடை! பல வருஷமா இவங்க கடையில் தான் நம்ம வீட்டு பொருள், ஸ்கூல்க்கு எல்லாம் வாங்கிட்டு இருக்கோம்.”
“கோம்ஸ் ! எதிரில் இருப்பவன் கூட அவன் கடையை பற்றி இப்படி விளம்பர படுதல! பேசாம நீ இவன் கடையில் வேளைக்கு சேர்ந்திடலாம்” என்று ஷிவானி பல்லைக் கடித்தாள்.
“அப்படி எல்லாம் இல்லை வனி, வந்தது வந்தோம் வாங்கிட்டு போய்டலாம் . போன தடவை உங்க அம்மா தான் நான் சொன்னதை கேட்காமல் வேற கடையில் வாங்குனா! அது தான் வினையே !
நம்ம வீட்டில், ஹால் சோபாவில் நகராம ஆணி அடித்தால் போல உட்கார்ந்து கொண்டு இருப்பையே, அந்த சோபா கூட இவங்க கடையில் தான் வாங்கினது. சோபா தான் மாற்ற கூடாது சொல்லிட்ட .இந்த காட் உன் அறைக்கு ரொம்ப நல்லா இருக்கும். வேலைபாடு ரொம்ப அழகா இருக்கு.” ஷிவானி எதோ மறுப்பு சொல்வதற்குள் “இப்போது இருக்கும் காட் சின்னது. சரி வராது! பெரிதா பார்க்கலாம் தங்கம் .”
“தங்கம்! இது கூட நல்லா இருக்கே! ” அடுத்த ஐந்து நிமிடத்தில் ஷிவேந்தர் போன் வழியாக
“தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்ன தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பார்த்தேன்
ரவுடி பயன் ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்ட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்னை ……..
பிளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன பார்த்த
கலரா மாறுதே
துரு புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ் அடடடட
அவ ஷேப் அபபபபாபா
மொத்ததுல ஐயயாயையோ ”
இவன் வேண்டும் என்றே செய்யறானா? இல்லை எதேர்சையா நடந்துதா ? என்று ஷிவானியால் கண்டு பிடிக்க முடியவில்லை.
எங்க பாட்டி என்னை தங்கம் சொன்னதுக்காகவே இப்படி பாட்டை போட்டு இம்சை செய்யறானா? இவனை என்று கோபமாகி
” ஏன் பாட்டி, இத்தனை நாளா அதில் தான படுத்துக் கொண்டு இருக்கேன் ! இப்ப மட்டும் என்னவாம்” என்று மருத்துவக் கல்லூரி இறுதி வருடம் படிக்கும் ஷிவானி கூறினதை கேட்ட சிவா, விஷமமாக சிரித்துக் கொண்டு நகர்ந்தான்.
“கடைக்காரன் முன்பு என் மானத்த வாங்காதா வனி! அப்புறமா விளக்கறேன் “என்று பல்லைக் கடித்தார் கோமதி .
சிவா , ஷிவானியே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் . நான் சொல்வதை மீறி எங்க பாட்டி செய்யறாங்க என்று இப்படி குறுகுறு பார்க்கனுமா? இனி பாட்டி வாங்காம நகர மாட்டாங்க , தேவை இல்லாத வாக்கு வாதம் வேண்டாம், இவனுக்காக ஏன் வாங்காம போகணும் என்று எண்ணி அவள் பாட்டி தேர்வு செய்ததை எல்லாம் பார்வையிட்டு, வாங்கினது எல்லாம் தேவையா? உபயோகமா என்று அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.
முதலில் சரியான கஞ்சம் , இவளுக்கு இதை பற்றி எல்லாம் என்ன தெரிய போகுது என்று ஷிவேந்தர் நினைத்ததுக்கு மாறாக அவள் எந்த பொருள் எந்த இடத்துக்கு தேவை என அழகா அவள் பாட்டிக்கு விளக்கி, தேர்வு செய்ததை பாதி கழித்துக் கொண்டு இருந்தாள்.
இவளை முதலில் விரட்டனும். பேசியே ஒன்றும் வாங்க விடாமல் செய்திடுவா போல! இந்த மாதிரி பேசினால் நாங்க எல்லாம் என்னத்த விற்க ?
“சார் ! ஆயுள் முழுக்க ப்ரீ சர்விஸ் சொல்லறீங்க ! அப்படி என்றால் என்ன? ஏது ? எப்படி நம்பலாம்?” என்று வனி அவனை கேள்விகளால் துளைத்து, கடைசியில் பில் போட ஒத்துக் கொண்டாள் .
பேசியே இம்சை செய்திடுவா போல? இவளை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறேனோ ? என்னை நினைத்தால் எனக்கே பாவமா இருக்கே என்ற எண்ணம் தோன்றியவுடன் திடுகிட்டான் .
சும்மா விளையாட்டுக்கு என்று கிண்டல் செய்யும் நான் நிஜமாக காதலிக்கிறேனா? இது எப்படி? படிக்கும் காலத்தில் இருந்து எத்தனையோ பெண்களை கிண்டல் செய்து இருக்கேனே ?அப்போது எல்லாம் தோன்றாத எண்ணம் இவள் மீது மட்டும் எப்படி? அதுவும் இருமுறை பார்த்த பெண்ணை? கொஞ்சம் குழம்பித் தான் போனான் . இப்போதைக்கு எதையும் யோசிக்க வேண்டாம், கூடாது என்று ஒதுக்கினான் . .
” உங்க தாத்தாவை கேட்டதா சொல்லுங்க சார்! சங்கர் சார் மகனா நீங்க .ஒ, அவர் அண்ணனை பார்த்தது இல்லை . ரொம்ப சந்தோசம் பா .எனக்கு இன்னும் ரெண்டு நாளில் டெலிவரி கிடைத்தால் தேவல . வீட்டில் கொஞ்சம் வேலை நடந்து கொண்டு இருக்கு . அப்படியே செட் செய்திடுவேன். அதனால் தான் ..”
ஏன் சிவா, பாட்டி தாத்தாவ இப்படி கேட்கிறாங்க ..ஒரு வேலை தாத்தா சைட்டோ என்ற குணா காலை மிதித்தான்.
குணா அலறுவதை கண்டுகொள்ளாமல் “கண்டிப்பா பாட்டி” மனதில் இந்த வாயடி கட்டி மேய்கிறீங்க. உங்களுக்கு கோவிலே கட்டலாம் சொல்லி வெளியே ” ரெகுலர் கஸ்டமர் சொல்லறீங்க ,உங்களுக்காக நீங்க சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாமல் விடுவேனா” என்று அட்ரெஸ் வாங்கி பணம் பெற்றுக் கொண்டான் . அட்ரெஸ் அவன் செல்லில் பதிவு செய்து கொண்டான் .
அவர்கள் அங்கு இருந்து செல்வதற்குள் அவளுக்கு எதாவது கொடுக்க வேண்டும். எப்படி? என்று ஷிவேந்தர் உள்ளம் பரபரத்தது ..
அட்ரெஸ் உடன் அவள் செல் போன் எண் எழுதி இருக்காளா என்று பேபரை உத்து உத்து பார்த்தான். அதில் ஷிவானி புத்திசாலித்தனமாக அவள் வீட்டு எண்ணை தந்து இருந்தாள்.. அச்சோ அறிவு டீ ! இவளிடம் எப்படி நம்பர் வாங்குவது …
பாட்டியிடம், “உங்க நம்பரை தந்தா, இன்னும் பத்து நிமிடத்தில் நடக்கும் குலுக்கலில் சேர்த்திடலாம். தாத்தா நம்பர், உங்க பேத்தி நம்பர் இருந்தாலும் தாங்க . அதிர்ஷ்டம் யாருக்கு என்று பார்க்கலாம்” என்று நைசாக பேசி எண்ணை வாங்கிவிட்டான் .
செல் நம்பரை வாங்கினவுடனே அவளை அழைக்க, சீண்ட கைகள் பரபரத்தது . உடனே செய்தால் கண்டு கொள்வாள் அமைதியானான்.
அவர்கள் சென்ற அரை மணி நேரத்தில், ஷிவானி வீட்டுக்கு போய் இருக்க கூடாது வேண்டிக் கொண்டு விவரமா கோமதி எண்ணிற்கு அழைத்தான். “பாட்டி உங்க பேத்தி எண்ணிற்கு சிறப்பு குலுக்கள் பரிசு கிடைத்து இருக்கு .வாழ்த்துக்கள் . அவங்க லைன் பிசி வருது ! எங்க இருக்கீங்க? வந்து பரிசை வாங்கிக்கோங்க !”
வீட்டுக்கு போய் இருந்தாலும் நேரிலே போய் கொடுத்திட வேண்டியது தான் .
அங்கேயே ,வேற ஸ்டாலில் இருந்த கோமதி, ஷிவானியிடம் விஷயத்தை கூறியவுடன் ” பாட்டி, நீ போ! நான் வரவில்லை .ஒரு பேனா கொடுத்து சிறப்பு குலுக்கள் ஏமாத்துவாங்க. அதுவும் அங்க இருக்கும் லூசு, அந்த டுபாகூர் பிராட் கண்டிப்பா அப்படி தான் ஏமாத்த போறான்! அங்க போய் என்னால அசடு வழிய முடியாது … “
” என்ன தான் தராங்க பார்த்திடலாம்! அந்த வழியே போனா அப்படியே கார் பார்கிங் கிட்ட வனி. வா போகலாம் “..
ஷிவானியும், அவள் பாட்டியும் பில் போட்டு நகர்ந்தவுடன், ஷிவேந்தர் வந்த கஸ்டமர்களை கண்டு கொள்ளாமல் பக்கத்தில் வேகமாக சென்று கண்ணை கவரும் கிபிட் பேப்பர் வாங்கி வந்தான் .
ஷிவேந்தரும், குணாவும் காலையில் வந்தவுடன் எக்ஸிபிஷன் சுற்றி பார்க்க சென்று இருந்தனர் . சிவா, அவன் அறை கட்டிலுக்கு மிகவும் அழகா, பொருத்தமா இருக்கும் என்று எட்டாயிரம் கொடுத்து சிகப்பு ரோஜா போட்ட அழகிய வண்ண சடின் பெட்ஷீட், கம்போர்ட்டர் மட்டும் வித்தியாசமான தலையணை ஆசையாக வாங்கி இருந்தான் .
அங்கு உள்ள சோபாவில் அமர்ந்து, டேபிள் மீது பரப்பி இருந்த அழகிய கிபிட் கவர் மீது அவன் வாங்கி இருந்த எல்லா பொருட்களையும் வைத்து அழகாக , வேகமாக பாக் செய்தான் .
அவன் செயலை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த குணாக்கு தலை சுத்துவது போல இருந்தது. அவனுக்காக தான வாங்கினான் . அதை என்ன செய்யறான். என்ன வேகம் . எதுக்கு பாக்கிங். என்ன நடக்குது கூட புரிந்து கொள்ள முடியவில்லை.
என்ன நடக்குது என்ற குணாவிடம் “ஷிவானிக்கு சின்ன கிபிட் ..”
அடபாவி இதுவா சின்ன கிபிட். உனக்கே அநியாயமா இல்லை ….. இதை அவள் எடுத்துக் கொண்டு போகவே பெரிய வண்டி வேண்டும் டா !!!
அவர்கள் கடையில் இப்படி பரிசு எல்லாம் ஒரு போதும் கொடுத்தது இல்லை. அப்படி எதாவது தந்தாலும் சின்ன பெண் செட், சுவரில் மாட்டும் சின்ன பிரேம் போல தான் கொடுப்பார்கள்.
” இதை அவர்களுக்கு கொடுக்கணும் என்ன அவசியம் … டேய், சித்தப்பா , தாத்தா இங்கு இல்லை என்று இப்படி எல்லாம் அநியாயம் செய்யலாமா ? உன் காசு என்றாலும் கடை சார்பா தான கொடுக்கிற ? இது எல்லாம் சரி இல்லை சொல்லிட்டேன்! அப்படி என்ன செய்துட்டானு அவங்களுக்கு இந்த கிபிட் .. உன்னை அசிங்கமா திட்டினதுக்காகவா? நானும் திட்டறேன் ,கேட்டுக்கோ” என்று வசவு மழை பொழிந்தான்.
ஷிவேந்தர் கூலாக “டேய் போதும் டா ,ரொம்ப கொஞ்சாத ?கூச்சமா இருக்கு …”
அடபாவி , இந்த ஏரியாவே நாரி போகும் அளவிற்கு திட்டினேன், அது உனக்கு கொஞ்சுவது போல இருக்கா ?உன்னை ..என்று குணா கடுப்பானான்.
அவன் வேலையே குறியா இருந்த சிவாவிடம் “ டேய் ,இவங்களை விட அதிகமா பில் போட்டவங்க இருக்காங்க. எனக்கும் அதே போல பரிசு கொடுங்க என்று இவங்க பின்னாலே லைன் கட்டி நிற்க போறாங்க . அப்ப என்ன கொடுக்க போற? பார்க்க தான் டி போற மகனே! டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்க நக்கா ” பாடினான்.
குணா புலம்பலை கண்டு கொள்ளாமல் ” குணா , உனக்கு நல்ல வாயிஸ் கண்ணா. ஷிவானி வந்தா ஒரு போடோ எடுத்துக் கொடு, ப்ளீஸ் மச்சி ”
“டேய், இதுக்கு தான் ஐஸா. என்னை இதில் ஏன் டா கூட்டு சேர்க்கிற? உங்க தாத்தாக்கு தெரிந்தால் என் முதுகில் டின் கட்டிவிடுவாறு ! எனக்கு தேவையா?”
அவனை தள்ளிக் கொண்டு “உனக்கு தான கட்டுவாரு, எனக்கு என்ன? பேசாமல் வா டா “
இருக்கும் வேலை எல்லாம் விட்டு, பழக்க தோஷத்தில் அவர் கூப்பிட்டவுடன் உதவ வந்தது தப்பா போச்சு ! நான் உங்க ஆட்டத்துக்கு வரல !…….
வாசலிலே நின்று இருந்த ஷிவானியை கண்டு “அவங்களை வந்து வாங்கிக்க சொல்லுங்க பாட்டி “.
ஷிவானி “ரொம்ப முக்கியம்” என்று முனங்கியத்தை கேட்டு முக்கியம் தான் செல்லம் என்று மனதில் சொல்லி அவளுக்கு பரிசளிப்பது போல புகை படம் எடுத்துக் கொண்டான் .
கிபிட் பார்த்த கோமதி பாட்டி “ஏன் வனி, பேனா இத்தனை பெரிதாகவா இருக்கும், சிறப்பு பம்பர் குலுக்கள் போல ” என்றவுடன் ” பாட்டி ! அவன் முன்பு மானத்த வாங்காத” என்று பல்லைக் கடித்து வெளியேறினாள்.
வெளியேறினவுடன் ஷிவானி குறும்பாக இப்ப மாட்டி மகனே! பரிசா கொடுக்கிற …அவள் தோழிகளுக்கு எல்லாம் whats app குரூப்பில் கடையின் பெயர் , வாங்கின கட்டில் விலை, சிறப்பு சலுகை, வாங்கினவர்களுக்கு எல்லாம் சிறப்பு பம்பர் பரிசு, இந்த சலுகை இன்று மட்டும் என்று அவளுக்கு கிடைத்த பரிசை படம் பிடித்து அனுப்பி இருந்தாள்.
அதற்கு பிறகு அவள் தோழிகள் மெசேஜ் காட்டி கடைக்கு படை எடுத்தார்கள். வந்த அனைவரும் மெசஜ் காட்டி, என்ன பொருள் வாங்கினால் என்ன பரிசு, எத்தனை நாளைக்கு? என்று தாத்தா ஸ்ரீனிவாசனை ஒரு வழி செய்தனர் .
இன்று காலை, நானும், நீங்க சொன்ன விலைக்கு மேல் அதிக பில் போட்டு இருக்கேன். எனக்கும் பரிசு கொடுக்கணும். குலுக்கல் இருக்கு என்று சொல்லவே இல்லை . அது எப்படி மறந்தீங்க ! அதை விட பெரியதா வேண்டும் என்று வந்த ஒருத்தி சண்டை போட தொடங்கினாள் .
ஷிவேந்தரிடம் விசாரித்த போது “ ஏதோ மாற்றி போட்டு இருக்காங்க போல தாத்தா” என்று மழுப்பினான் . வந்தவர்களிடம் அப்படி இல்லை சொல்லி அனுப்புவதற்குள் போதும் என்றாகிவிட்டது.
“இப்படி கொடுத்தா மொட்டை அடித்து பரதேசம் போக வேண்டியது தான்” என்று அவன் தாத்தா புலம்பலை கேட்டு, சித்தப்பா சங்கர் ” யாரு செய்த வேலை சிவா ! அவன் கையில் கிடைத்தான், கைமா தான்”. அவர்களிடம் என்ன என்று சொல்ல முடியாமல் ஷிவேந்தர் விழி பிதுங்கி நின்றான் .
“நல்ல பேரை கெடுக்கவே நாலு பேர் இருக்காங்க!” என்ற தாத்தாவிடம் , நாலு பேரு எல்லாம் இல்லை உங்க பேரன் ஒருத்தனே போதும் என்று குணா முணுமுணுத்தான்.
ஏற்கனவே மண்டை காயிந்து நிற்கும் ஷிவேந்தர் ” நீயும் ஏன் டா? ஒழுங்கா ஓடிடு !உன் பெண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க வாய் இருக்காது ” விட்டா கோபத்தில் கொதறி இருப்பான் .
குணா வாயை மூடிக் கொண்டு “ஆத்தி,நான் வரல …”
ஷிவானி……இது உனக்கே நல்லா இருக்கா ? உனக்கு நல்லது தான செய்தேன் ! இரு உன்னை என்ன செய்யறேன் பாரு !