கபூர் வேலை முடிந்து வீட்டிற்குள் வர அவரது பேபி அவருக்காக ஹாலிலேயே காத்திருந்தாள்
“என்ன பேபி இன்னைக்கு ஷூட் எதுவும் இல்லையா வெளிய போன மாதிரியே தெரியல”
“இல்லை டாடி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் வெயிட் பண்றேன்”
“உனக்கு ஏதாவது பேசனும்னா நேரே நான் எங்க இருக்கேன்னு கேட்டு அங்க வந்திருக்கலாம்தானே இல்ல என்கிட்ட வாங்க டாடினு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வர போறேன் நீ எதுக்காக வெயிட் பண்ற”
“அது விடுங்க டாடி இப்ப நான் சொல்றத கேளுங்க “
“சரி சொல்லு அப்டி என்ன பேச என்னோட பொண்ணு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணா”
“டாடி நான் ஒரு ப்ரோக்ராம் பிளான் பண்ணி இருக்கேன் அத நியூ சேனல்ல பண்ணவா”
“தாராளமா பண்ணிக்கோடா அது உன்னோட சேனல் தானே”
“அதுக்கு உங்களோட ஹெல்ப் வேனும் எனக்கு எப்படி பண்றதுன்னு தெரியல ஒரு ஐடியா இருக்கு அத நான் உங்களுக்கு சொல்றேன் முதலில் கேளுங்க ஓகே வா”என்று கேட்க அவரும் அவள் கூறுவதை கேட்பதற்கு தயாராக இருந்தார்
“டிடி பேண்ட்னா அதுல கிட்டார் ட்ரம்ஸ் பியானோ இந்த மாதிரி இன்ஸ்றுமெண்ட்ஸ் வாசிக்கிறவங்க அப்புறமா லீட் சிங்கர் இவங்க எல்லாம் சேர்ந்து தான் பேண்ட்”
“சரிம்மா நீ ப்ரோக்ராம் பத்தி என்ன யோசிச்சிருக்க அதை சொல்லு”
“டாடி நாம முதல்ல நம்ம சேனல்ல ஒரு விளம்பரம் கொடுப்போம் இந்த ப்ரோக்ராம் பத்தி ஒரு சின்ன இன்றோடக்சன் மாதிரி கொடுக்கலாம் இதில் பேண்ட் இருக்குறவங்க இல்லாதவங்க எல்லாருமே செலக்ஷனில் கலந்துக்கணும் அவங்கவங்க எதுல பெஸ்ட் டோ அத அவங்க ப்ரொவாம் பண்ணனும் நமக்கு ஓகேன்னு தோனுறவங்க எல்லாரையும் நாம செலக்ட் பண்ணிக்கலாம் அதுக்கப்புறமும் பேண்ட் அவங்க விருப்பப்படி தெரிந்தெடுக்கட்டும் பேலன்ஸ் யாராவது இருந்தா நாம அவங்கள ஜாயின் பண்ணி விட்டுடலாம்”
“மத்தபடி மத்த காம்படிஷன் மாதிரி தான் இதுல வின் பண்ற பேண்டுக்கு நாம ஒரு மியூசிக்கலி நைட் ஏற்பாடு பண்ணலாம் அந்த பேண்ட நம்ம சேனல் மூலமா லான்ச் பண்ணலாம் என்ன டாடி சொல்றீங்க”
“நல்ல ஐடியா பேபி இது நிச்சயமா ரொம்ப நல்லா ரீச் ஆகும்”
“அப்றம் முக்யமான விஷயம் டாடி இதுல கண்டிப்பா லியான் கலந்துக்கணும் அவன் தானா வந்து கண்டிப்பா ஜாயின் பண்ணிக்க மாட்டான் ஷோ அதோட ரெஸ்பான்சிபிலிட்டி உங்களோடது ஓகே” என்று கூறி சென்றாள்
நேஹா அவள் தோழிகளுடன் ஒரு ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவளது கைப்பேசி மெலிதாய் இசைத்தது
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு
பறந்து போனா அழகா
ஆம் அவனது குரலில் தான் ஒலித்தது அவளது மொபைல் அன்று அவன் பாடிய ஹோட்டலிலிருந்து வீடியோ கேட்டு அதில் அவன் தெளிவாக பதிய வில்லை என்றதும் ஆடியோவை மட்டும் கட் செய்து ரிங்டோனாக செட் செய்து இருந்தாள்
இந்த ஆடியோவை எடுப்பதற்குள் அவள் பல காரியங்கள் செய்து இருந்தாள் தந்தையிடம் கேட்டால் நொடிப்பொழுதில் நடத்தி முடிப்பார் என்றாலும் இதை அவளே செய்ய நினைத்து சில காலங்களை ஓட்டி இருந்தாள்
அவன் குரலில் மயங்கிப் போய் இருந்தவளின் கையை அவள் தோழி தட்ட சுய நினைவிற்கு வந்தவள் மொபைலை எடுத்துப் பார்க்க அவள் தந்தை தான் அழைத்துக் கொண்டிருந்தார்
“ஹாய் டாடி”
“ஹாய் எங்க இருக்க பேபி லஞ்ச் சாப்பிட்டியா”
“இப்ப ஃப்ரெண்ட்ஸ் கூட லஞ்ச் தான் டாடி சாப்பிட்டு இருக்கேன் நீங்க சாப்பிட்டீங்களா டாடி”
“நான் சாப்பிட்டேன் மா நீ அன்னைக்கு சொன்னேல பேண்ட் காம்படிஷன் அத பத்தி பேச வேண்டியவங்க எல்லார்கிட்டயும் பேசி டிஸ்கஸ் பண்ணி பிளான் ரெடி பண்ணியாச்சு அதை என்னோட பேபி கிட்ட சொல்லிட்டு அவளோட ஒப்பினியன் கேட்டுட்டு ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் எப்ப பேசலாம்”
“டாடி நான் லஞ்ச் முடிச்சுட்டேன் நீங்க எங்க இருக்கீங்க”
“நான் லஞ்சுக்கு வீட்டுக்கு தாண்டா வந்தேன் “
“சரி டாடி நீங்க வீட்டிலேயே இருங்க நான் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடறேன்” என்று கூறியவள் சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்தாள்
“டாடி என்ன பிளான் பண்ணி இருக்கீங்க”
“சொல்றேன் மொதல்ல உட்காரு ” என்று அவளை சோபாவில் அமர்த்தி அவர் அவளருகே அமர்ந்து “இந்த காம்படிஷன் டூ இயர்ஸ் நடக்கிற மாதிரி இருக்கும்”
“நீ சொன்னதுதாம்மா இந்த பேண்ட் என்கிற கான்செப்ட் சிங்கிங் மாதிரி கிடையாது சிங்கிங்னா ஒருத்தர் தனியா பண்றது இது கொஞ்சம் சேஞ்ச் இல்லையா அதுமட்டுமில்லாமல் நீ முக்கியமா லியான் இதில் கலந்துக்கனும்னு சொல்லி இருக்க எவ்ரி வீக்னு சொல்லும்போது அவன் வேலை பார்க்க முடியாது அதைக் காரணம் காட்டியே இதுல கலந்துக்காம இருக்கலாம் இல்லையா”
“யூ ஆர் ரியலி கரெக்ட் டாடி மந்த்லி ஒன்ஸ்னு சொல்லும்போது அத நல்ல கிராண்டா பண்ணலாம் அப்டி பண்ணா நிறையபேர அட்ரேக்ட் பன்னும் இதுதான் சரி”
“அப்புறம் டாடி என்கிட்ட இன்னொரு விஷ் இருக்கு”
“என்னன்னு சொல்லு பேபி பண்ணிடலாம்”
“டாடி அந்த ப்ரோக்ராமுக்கு என்ன பேரு வச்சு இருக்கீங்க”
“நியூ பேண்ட் காம்பெடிஷன் எப்படி இருக்கு”
“ரொம்ப நல்லா இருக்கு டாடி”
“சரி என்னோட பொண்ணுக்கு வேண்டியது என்ன”
“டாடி இந்த நியூ பேண்ட் காம்பெடிஷன நானே கோஸ்ட் பண்ணவா அதோட நான் உங்க பொண்ணுன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் என்ன எல்லாருக்கும் மாடல் நேஹாவா அறிமுகப்படுத்துங்க ஓகேவா” என்று கேட்க எப்பொழுதும் போல் அவள் தந்தை இன்றும் தலையசைத்து வைத்தார் அவளின் ஆசைக்கு
இரண்டு இளைஞர்கள் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்
“என்னடா நீ வேலை பாக்குற நியூஸ் சேனல் ல புதுசா ஏதோ ப்ரோக்ராம் பண்றாங்க போல”
“ஆமாண்டா ஆனா இது எப்படி உனக்கு தெரியும்”
“ஆமா நீ மட்டும் தான் அந்த சேனல்ல வேலை பாக்குற பாரு புது ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆனதும் உனக்கு வேலை அதிகம் இருக்குமே”
“ஏண்டா ப்ரோக்ராம்னு சொன்னவங்க என்ன ப்ரோக்ராம்னு சொல்லலியா அது ஒரு காம்பெடிஷன் டா அதுல நான் வேலை பார்க்க ஒன்னும் இல்ல”
“என்னது இன்னொரு காம்படிஷனா அதான் பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜூனியர் சீனியர்னு நாலஞ்சு பண்றீங்களே ஒருவேளை வயசானவங்களுக்கு தனியா சாங் காம்படிஷன் டான்ஸ் கம்படிஷன் தொடங்க போறீங்களா என்ன”
“ஏன்டா பாட்டு பாடுறதும் டான்ஸ் ஆடுறதும் மட்டும் தான் டேலன்டா என்ன இந்த பியானோ வாசிக்குறது புல்லாங்குழல் ஊதுறது இது எல்லாம் இல்லையா அவங்களுக்காக பண்றது தான் இந்த பேண்ட் காம்பெடிஷன்”
அங்கு ஒரு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே ஒரு அம்மாவும் மகளும் பேசிக் கொண்டிருந்தார்கள்
“என்னடி இது புதுசா ஏதோ பேண்ட் போட்டி னு வருது போல”
“ஆமாம்மா இந்த சூப்பர் சிங்கருல எல்லாம் மியூசிக் ப்ளே பண்ணுவாங்க இல்ல அவங்களுக்கு தான் தனியா ஒரு ஸ்டேஜ்ல போடுறாங்க”
“அது எதுக்குடி தனியா”
“அம்மா பாட்டு பாடுறவங்க அங்க இங்கேனு இருக்க மாதிரி இந்த மாதிரி ஸ்பெஷல் டேலண்ட் இருக்கிறவங்களும் அங்க இங்கேனு பிரிஞ்சு இருப்பாங்க அவங்களை ஒன்னு சேர்கிறதுக்கு தான் இந்த மாதிரி பண்ணி இருக்காங்க”
“அவங்க சொல்றது சரிதான் இது அங்கங்க பிரிஞ்சு இருக்கிற டேலண்டெட் பர்சன்ஸ்ஸ ஒன்னு சேர்க்குறதுக்கு ஒரு போட்டி உங்களுக்கு பேண்ட் இருக்கோ இல்லையோ நீங்க இதுல தாராளமா கலந்துக்கலாம் பேண்ட் இல்லாதவங்களுக்கு நாங்களே பேண்ட கிரியேட் பண்ணி கொடுக்கிறோம்”
“இவ இங்க என்ன பண்றான்னு பாக்குறீங்களா இந்த காம்படிஷன் பத்தி சொன்னதும் எனக்கு ரொம்ப எக்ஸ்சைட் ஆய்டுச்சு சோ இந்த காம்பெடிஷன் நான்தான் கோஸ்ட் பண்ண போறேன் இன்னும் சரியா ரெண்டு மாசத்துல எவ்ரி மந்த் ஃபர்ஸ்ட் சண்டே நிறைய பேண்ஸோட உங்கள நியு சேனல்ல பார்க்க வரேன்” என்று அந்தத் தொலைக்காட்சி பெட்டியில் சிரித்துக்கொண்டிருந்தாள் நேஹா அருகே நியூ பேண்ட் காம்பெடிஷன் என்று வண்ண எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தது
தொலைக்காட்சிப் பெட்டியில் அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த லியோனின் கண்களில் ஏதோ ஒரு உணர்வு
“அண்ணா நீயும் இதுல கலந்துக்கலாமே உனக்குதான் கிட்டார் நல்லா வாசிக்க தெரியுமே”
“அதெல்லாம் சரிவராது” என்று கூறி அவனது ஆஸ்தான இடமான பால்கனிக்கு சென்றான்
அங்கு பால்கனியில் அவனின் தாய் ஆசைக்காக சில ரோஜா செடிகளும் மல்லிகையும் கொடியும் படர்ந்திருந்தது
பால்கனியில் உள்ள கம்பியை கைகளால் பற்றிக் கொண்டு அந்த நிறுமனத்தை உள்ளிழுத்து இரவு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் அவன் நினைவுகள் மட்டும் சற்று முன் பார்த்த விளம்பரத்திலேயே இருந்தது
நியூஸ் சேனல் மூலமாக அவர்கள் வெப்சைட்டில் ஒரு லிங்க் புதிதாக சேர்த்திருந்தனர் இந்த காம்படிஷனில் சேர விரும்புபவர்கள் பதிவு செய்யவேண்டி அதற்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுத்து இருந்தனர்
மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் லியான் அதில் பதிவு செய்யாததை பார்த்த நேஹா தன் அருகில் அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்த அவளது தந்தையை பார்த்தாள்
“என்னம்மா இன்னும் அந்த பையன் ரெஜிஸ்ட்டர் பண்ணலயா நான் நாளைக்கு பேசுறேன் விடு “என்று கூறி அவளையும் சாப்பிட வைத்தார்
அடுத்தநாள் அலுவலகம் சென்ற சிறிது நேரத்திலேயே கபூரின் பி ஏ லியானிடம் வந்து அவனை கபூர் அழைப்பதாக கூறினார் அவனும் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பனை பார்த்து விட்டு எழுந்து சென்றான்
“மே ஐ கமின் சார்”
“கமின் எங் மேன் டேக் யுவர் சீட் ” அவன் அவரைப் பார்த்து மெலிதாக சிரித்து விட்டு இருக்கையில் அமர்ந்தான்
“எஸ் சார் எனக்கு கிட்டார் வாசிக்குறது சின்ன வயசிலிருந்து ரொம்ப பிடிக்கும்”
“ஓ ஓகே அப்படின்னா நம்ம சேனலில் புதுசா ஒரு காம்படிஷன் தொடங்குறோம் ஆட் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன் நீங்கள் ரெஜிஸ்டர் பண்ணி இருக்கீங்களா”
“நோ சார் “
“வொய் மேன் உனக்கு கிட்டார் வாசிக்குறது ரொம்ப பிடிக்கும்னு சொல்ற அப்புறம் என்ன பிரச்சனை”
“இல்ல சார் வேலை பார்த்துக்கிட்டே எப்படி”
“கமான் மேன் உன்ன மாதிரி தன்னுடைய கனவுகளை விலக்கி வைச்சுட்டு இருக்க உங்களுக்காகத்தான் இந்த மாதிரி காம்படிஷன் நாங்க வைக்கிறோம் அதுவும் மாசத்துல ஒரு நாள் தானே சரி உனக்கு எக்ஸ்ச்ரா ஜாப் எதுவும் வராம நான் பாத்துக்குறேன் என்ன ஓகே தானே “
“அது வந்து சார்”
“இங்க பாரு வாய்ப்புகள் வாழ்க்கையில் அடிக்கடி வராது அதுவும் நமக்கு பிடித்த விஷயத்துக்கு வாய்ப்பு வந்தும் அதை உதறி விட்டார் நாமதான் பின்னாடி வருத்தப்படனும்”
“ஓகே சார் நான் ரெஜிஸ்டர் பண்றேன்”
“குட் இதத்தான் நான் எதிர்பார்த்தேன் டூ யுவர் பெஸ்ட் லியான்”
“தேங்க்யூ சார்” என்று கூறி தன் இடத்திற்க்கு வந்தான்