கல்யாணத்துக்கு அத்தனை சொந்தபந்தங்களையும் அழைத்திருந்தமையால் ரிஷப்சனை மும்பாயில் சிறிதாக வைத்துக்கொள்ளலாம் என்று அமுதன் சொல்லி விட, கனியும் தன் நண்பர்களை மாத்திரம் அழைத்து ஒரு பார்ட்டி கொடுப்பதாக கூறி விட மெதுவாக அதை செய்து கொள்ளலாம் கல்யாணத்தை சிறப்பாக செய்யலாம் என்று இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தனர்.
கல்யாண மண்டபமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு முகூர்த்தத்தில் இரண்டு கல்யாணம். இரண்டுமே சரவணகுமரனின் புதல்வர்களின் கல்யாணம். பெற்ற மகனும் கணியமுதன். வளர்ப்பு மகனும் கணியமுதன்.
கல்யாண பத்திரிகை வைக்க போகும் போது ஆரம்பித்த குழப்பம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சிவரஞ்சனியை தவிர்த்து அமுதனோடு சரவணகுமரன் செல்ல சரவணனின் சொந்தங்கள் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைக்க அதை சமாளித்து பத்திரிகை வைத்தால் இரண்டாவது கணியமுதனை பற்றி விசாரிப்புக்கள்.
“ரிஷி கல்யாணத்தைத்தான் கண்குளிர பார்க்க முடியல உன் கல்யாணத்தையாவது சொந்தபந்தத்தை கூப்டு பண்ணலாம்னு உன் அம்மா ஆசை பட்டாடா” சிவரஞ்சனி என்றதும் அமைதியானவன் தான் அமுதன். கல்யாணம் நடந்து முடியும் வரை பொறுமையையை கையில் பிடித்துக் கொண்டான்.
கல்யாணம் இனிதே நிறைவேற கல்யாண சடங்குகள் ஆரம்பமானது. இரண்டு ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் சடங்குகளை செய்யலாம் என பெரியவர்கள் முடிவெடுத்ததில் அமுதனின் திருமணம் நிறைவேறும் வரை காத்திருந்த கனி ஸ்ரீநிதியோடு சென்று மலர்விழியை சந்தித்தான்.
“மன்னிச்சிக்கோங்க அண்ணி எல்லாம் இவங்க பண்ண ட்ராமா தான் எனக்கொண்ணும் தெரியாது” முந்திக்கொண்டு ஸ்ரீநிதி ஜகா வாங்க
“தெரியும், தெரியும் கனிக்காக, அமுதனும் அமுதனுக்காக, கனியும் எதுவேனாலும் செய்வாங்கனு. ஆனா கல்யாண வியாசத்துல ஆள் மாறாட்டம் செய்வாங்கனு நினைக்கல” மலர்விழியும் இன்முகமாகவே சொல்ல
“சாரி சிஸ்டர் இவன் கேட்டதும் மறுக்க முடியல”
“நீங்க மட்டும் மறுத்திருந்தீங்க உங்க கல்யாணம் கேள்விக் குறிதான்” மலர்விழி அமுதனை பார்க்க கனியும் அவனைத்தான் பார்த்தான்
“ஆமாம்” என்றது அவன் பார்வை
“அடப்பாவி… பத்து வருஷ லவ் டா… காலேஜ் போக ஆரம்பிச்சபோ உண்ண சந்திச்சு உன் ஊருக்கு வந்தப்போ இவள பாத்து கவுந்துட்டேன். அமேரிக்கா போய் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் கல்யாணம்னு சொன்னதால வரும் வரனேயெல்லாம் செவ்வாதோஷம்னு பொய் சொல்லி தட்டி கழிச்சு கிட்டு இருந்தா எங்களை போய் பிரிக்க பாக்கிறியே” கனி கோபமாக சொல்ல
“உனக்கு ஜஸ்ட் பத்து வருஷம் தான் எனக்கு இருவது வருஷ லவ் டா… எது பெருசு”
“பொய் சொல்லுறான்” மலர்விழி அமுதனை அடிக்க கையோங்க
அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன் “உண்மைத் தாண்டி பபா…{babaa } அன்னைக்கி எங்கம்மா பெல்டால் விளாசினப்போ எனக்காக கண் கலங்கி என்ன தூக்க முடியாம என் கிட்டயே இருந்து அழுதியே அப்போ இருந்து” கீதாராணி அமுதனை அடித்த சம்பவத்தை சொல்ல
“டேய்… அப்போ எனக்கு அஞ்சு வயசுடா… அதுவும் அது ரிஷினு தான் நெனச்சேன். ஆமா அதென்ன பபா னு கூப்டுற” மலர்விழி முறைக்க
“அத அப்பொறம் சொல்லுறேன்” அமுதன் கம்சிமிட்ட அதில் மயங்கியவள் சுதாரித்து
“கால்ல விழுறேன்னு சொன்ன மறந்துடாத”
“முத்தமும் வைக்கிறேன்னு சொன்னேன் டி நீ மறந்துடாத” மனைவிக்கே மயக்கும் புன்னகையால் பதில் சொன்னவன் சடங்குகள் ஆரம்பமாகவும் அவ்விடம் சென்றான்.
அமுதன் சொன்னது போல் மெட்டி அணிவிக்கும் போது அவள் முன் மண்டியிற்று அமர்ந்தவன் அம்மியில் வைத்திருந்த காலை பிடித்து தன் தொடை மீது வைத்து மெட்டி அணிவித்து விட்டு கால்களுக்கு முத்தமிட்டான்.
சபையோர் முன்னிலையில் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத மலர்விழியும் வெக்காத்தால் சிவக்க
“அது சரி அவன் அண்ணன் பண்ணத பண்ணலைனா இரட்டைனு சொல்லுறதுல அர்த்தமென்ன?” பிரதீபன் சத்தமாக சொல்ல ரிஷியும் கயலும் தங்களின் நியாபகங்களில் மூழ்க
“கல்யாணம் அமுதனுக்குடா… நீங்க ரெண்டு பேரும் டூயட் பாட போய்டாதீங்க”
“இவன் பொண்டாட்டி ஓய்வெடுக்குறான்னு நம்மள போட்டு தாக்குறான். வார் நீ போய் தியாவா இங்க கூட்டிட்டு வா இவன என்னானு கேட்கட்டும்”
“ஏன்டா…. நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?”
“ஓஹ்… ஒஹ்.. நான் கூட இருந்தா உங்க நிம்மதி பறி போய்டுமா அண்ணா பாட்டிக்கும் எனக்கும் ஊட்டிக்கு டிக்கட் போடுங்க” தியா கணவனை முறைத்தவாறே வர
“பாத்தவச்சிட்டியே…. அவ வர்றான்னு தெரிஞ்சே தான் வாய கிளறினியா… உன்ன… இருடா… பழிவாங்காம விடமாட்டேன்” பிரதீபன் உள்குத்தோடு சொல்ல ரிஷி கண்டு கொண்டானில்லை.
அதற்கிடையில் அருந்ததியை பார்த்துவிட்டு வந்த மணமக்களை பெற்றோர் அச்சத்தை தூவி ஆசிர்வதிக்க, எல்லா சடங்குகளும் நிறைவானது.
“ஏன் பா சரவணா… உன் பையன் கல்யாணத்துக்கு வந்தா யாரோ பெத்த பையன் கல்யாணத்த நீ நடத்தி வைக்கிற? அதுவும் உன் பொண்டாட்டி குடும்பத்துல பொண்ணெடுத்து” வம்பு வளர்க்கவெனவே அலையும் பெருசுகள் சிலர் சரவணகுமாரனை பிடித்துக் கொண்டு அதில் மூத்தவர் கேள்வி எழுப்ப
“அவன் நான் தத்தெடுத்த மகன் மாமா”
“தத்தெடுத்த மகன்னு சொல்லுற சொத்துலையும் பங்கு கொடுத்தியா?” இன்னொரு பெருசு கேள்வி எழுப்ப
“ஆஹா நம்மள போட்டு வாங்க பாக்குறாங்களே முருகா காப்பாத்துப்பா…” சரவணனின் மனம் கூவ “என் பேர்ல எங்க மாமா சொத்து இருக்கு எல்லாம் என் பொண்டாட்டி பேர்ல இல்ல இருக்கு அவ பாத்து ஏதாச்சும் எனக்கு பண்ணினாதான் உண்டு” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல
“என்னடா சொல்லுற? பொண்டாட்டி பேர்ல சொத்தையெல்லாம் எதுக்குடா உங்கப்பா எழுதி வச்சாராறு” மீசையை முறுக்கியவாறே ஒருவர் கோபமாக பேச
“இவன் தமாஷ் பண்ணுறான் தாத்தா… கனிக்கு அவன் படிப்புதான் சொத்து அமேரிக்கா போய் கை நிறைய சம்பாதிச்சு இருக்கான் எங்க சொத்து அவனுக்கு எதுக்கு” ரிஷி அங்கே ஆஜராக
“அதானே பார்த்தேன் யார் சொத்தை யாருக்கு கொடுக்கிறது”
“என்னடா இந்தாளுக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிக் கிட்டு… தூக்கி போட்டு மிதிச்சேன்னு வை. நேரா போய் சுடுகாட்டுலதான் படுப்பான். வர வர நீ ரொம்ப நல்லவனாகிட்ட ரிஷி இதெல்லாம் நல்லதுக்கில்ல. சொல்லிட்டேன்” பிரதீபன் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள
“டேய் இவனுங்க பிரச்சினையை உண்டு பண்ணவெண்டே கேள்வி கேப்பானுங்க நாமளும் ஏடாகூடமாக பதில் சொல்லி பிரச்சினையை இழுத்து விட்டோம்னு வை சந்தோசமா நடக்க வேண்டிய பங்க்சன் ரணகளமாகிடும். நாம பொறுமையா, நல்ல விதமா பதில் சொன்னா அவங்களும் நாலு பேர்கிட்ட நல்ல விதமா தான் சொல்லியாகணும். புரிஞ்சுதா” ரிஷி புன்னகை முகமாக
“என் தங்கச்சி கயலுக்கு வேட்டி சட்ட போட்டா உன்ன மாதிரியே தாண்டா இருப்பா” ரிஷியை வாரியவாறே அவன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான் பிரதீபன்.
“சரி சரவணா ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒரே முகூர்த்தத்துல ஒரே மேடைல பண்ண வேண்டியதுதானே! எதுக்கு ரெண்டு முகூர்த்தத்துல வச்ச இப்ப பாரு கொஞ்சம் பேர் சாப்பிட போய்ட்டாங்க கொஞ்சம் பேர் உன் பையன் கல்யாணத்துல கலந்து கிட்டாங்க” ஒரு பெரியவர் கொஞ்சம் ஆதங்கத்தோடு சொல்ல மண்டையை சொரிந்தார் சரவணன்
“கேள்வி கேக்குறதெல்லாம் ஈஸி பதில் சொல்லும் போதுதான் நாக்கு தள்ளுது. இந்த அமுதன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான்” முணுமுத்தவர் “அது வந்து சித்தப்பா “என்ன இருந்தாலும் கனி, அமுதனை விட ஒரு மாசம் மூத்தவன் அதான்…”
“இதெல்லாம் ஒரு காரணாமாப்பா…”
“பொண்ணு ஜாதகத்துல இந்த முகூர்த்தத்துல பண்ணினாதான் சேமமா இருப்பாங்கன்னு சொன்னாங்க மாமா” சிவரஞ்சனி கணவனை காப்பாற்றி விட அவளை நன்றியோடு பார்த்து வைத்தார் சரவணன்.
“சரி சரி ஆகவேண்டிய போய் பாருங்க… அப்படியே குடிக்க ஏதாவது அனுப்புப்பா… ஒரே கசகசன்னு இருக்கு”
“ஒய் வாயாடி நில்லு போய் எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வா” அங்கே ஒருவன் வாட்டசாட்டமாக நின்றுக்கொண்டு அவளை ஏவ அவனை முறைத்துப் பார்த்தவள்
ஒரு தடவைக்கு நாலுதடவை அவனை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு “கை, கால் நல்லா தானே இருக்கு நீயே போய் எடுத்துக் கொண்டு வா” என்று விட்டு ஓடி விட்டாள்.
கனியும், ஸ்ரீநிதியும் குடும்பத்தோடு சில சொந்தங்களும் கோயம்புத்தூர் கிளம்பிச்செல்ல எஞ்சியிருந்த சொந்தபந்தங்களை தங்கவைக்கவென ஏற்பாடு செய்திருந்த வாடகை வீட்டுக்கு அழைத்து சென்று விட்ட ரிஷியும், ப்ரதீபனும் அவர்களின் தேவைகளை கவனிக்க ஆட்களை ஏற்பாடு செய்து விட்டே வீடு திரும்பினார்.
அவர்கள் வரும் போது மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே சென்று பூஜையறையில் வணங்கிக் கொண்டிருந்தனர்.
“வாடா நாம போய் அவன் ரூமை டெகரேட் பண்ணலாம். ஆடர் பண்ண பூவெல்லாம் வந்திருச்சா?” ரிஷி மாடியேற
“அந்த பொறுப்பை என் ரெண்டு தங்கச்சி கிட்டயும் கொடுத்துட்டேன்” பிரதீபன் சொல்ல
“டேய் அகல்யா ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைப்பாடா” ரிஷி வேகமாக படியேற
“பண்ணனும்னு தானே அவ கைல பொறுப்பை கொடுத்தேன். என்ன அலப்பறை பண்ணான் கொஞ்சமாச்சும் அனுபவிக்கட்டும்” சத்தமில்லாமல் சிரித்தவாறு மெதுவாக ஏறலானான் பிரதீபன்.
வெகு நேரமாகியும் ரிஷி அறைக்கு வராததால் கயல் கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க தள்ளாடியபடியே உள்ளே நுழைந்தான் ரிஷி. நன்றாக குடித்து விட்டு வரும் கணவனை அதிர்ச்சியாக ஒரு கணம் ஏறிட்ட கயல் எதுவும் பேசாது அவனை கட்டிலில் கிடத்த,
“சாரி வார் நாட்டு சரக்குனு தெரியாம குடிச்சிட்டேன். உங்கண்ணன் தான் ஊத்திக்க கொடுத்தான். போதை தெரிஞ்சதும் மொத வேல என் கையாலையே அவனை போடுறதுதான்” குடித்திருந்தாலும் நடந்ததை உளறிக்கொண்டிருந்தான் ரிஷி.
“ஆமா நாம காதலிச்சு கல்யாணம் பண்ணோம் பாரு கல்யாணம் பண்ணி அடுத்து நாளே போறதுக்கு. உன் கூட பேசி பழகி புரிஞ்சிகிட்டு கூட்டிட்டு போலாம்னு பார்த்தா.. அதுக்குள்ளே அம்மணி சண்டையை இழுத்து விட்டீங்க. இப்போ தானே நேரம் கூடி வந்திருக்கு.பேசாம கிளம்பி வர”
கணவன் பேசப் பேச முகம் சுருங்கியவள் அவன் குணமே அதுதான் என்று புரிய “என்ன ஆடர் போடுறீங்களா? நான் வேற வாமிட் பண்ணி கிட்டே இருக்கேன். அங்க போய் படுத்துதான் கிடக்க போறேன் அதுக்கு பேசாம வீட்டுலையே இருக்கேன். நான் வரல. நீங்க வேணா தனியா போங்க”
தியா கோபமாக பேசவும் ப்ரதீபனின் சத்தம் அடங்கி ஒலித்தது “பேபி டால் முதல்ல நீ வா… அங்க போனா உன் மூடே மாறும். ரொம்ப அழகான ஊர் ஊட்டி மாதிரி குளிர்.பனிமலை. குளம் உனக்கு புடிச்ச மாதிரி பூவெல்லாம் இருக்கு” மனைவியின் ஆசையை தூண்டும் விதமாக பேச
“அப்படி எங்க கூட்டிட்டு போறீங்க?”
“சுவிஸ்லாந்து”
“பிளைட்டுலயா?”
“ஆமா”
“நான் வரல”
“ப்சு.. இப்போ என்ன?”
“பயமா இருக்கு”
குலுங்கி சிரித்தவன் “நான்தான் கூடவே இருக்கேன்ல. என்ன பயம்?”
“ம்ம்.. நான் வரல”
“இப்படி கெஞ்சி கிட்டு இருந்தா நீ வழிக்கு வர மாட்ட உன்ன தூக்கிட்டு போறேன் டி. இப்போ தூங்கு” மனைவியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு முதுகை நீவி விட இப்போதே விமானத்தில் பறப்பது போல் அச்சத்தில் நடுங்கும் தியாவின் தேகத்தை உணரலானான் பிரதீபன்.
முதலிரவு அறையில் மலர்விழிக்காக காத்திருந்தான் அமுதன். அவனின் பொறுமையை சோதித்தவாறு கடிகாரமும் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருக்க, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்றான்.
“ஐயோ ராட்சசி வச்சி செய்வாளே! இப்போ என்ன பண்ணுறது யோசி அமுதா யோசி… ஒன்னும் தோன மாட்டேங்குதே!” காரில் வைத்து சமாதானப் படுத்தி இருந்தாலும் மலர்விழி ஒவ்வொன்றாக நியாபகப் படுத்தி வெறுப்பேத்துவாள் முதலிரவுக்கே மோசம் வந்து விடும் என்று அஞ்சி அமுதன் புலம்பியவாறு இருக்க
அறையினுள் வந்த மலர்விழியோ அமுதன் டென்ஷனாக நடப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு பால் செம்பை “நங்” என்ற சத்தம் எழ மேசையின் மீது வைத்தாள்.
அந்த சத்தத்தில் அவள் புறம் திரும்பியவன் “ஐயோ முருங்கை மரத்துல ஏறிட்டாளே! ஏதாவது பண்ணுடா அமுதா” மனம் கூவ “என்ன பபா அங்க வச்சிட்டா கைல கொடுத்து கால்ல விழ வேணாமா?” மலர்விழி முறைத்த முறைப்பில் “இரு இரு நமக்குள்ள எதுக்கு கால்ல விழுறதும், மன்னிப்பு கேக்குறதும்” என்றவன் மெதுவாக அவள் தோளின் மீது கை போட முழங்கையால் அவன் இடுப்பில் குத்தியவாறே விலக்கியவள்
“எப்படி சார் நான் உங்க கல்யாணத்துக்கு வந்தா வயிறெறிஞ்சி உங்க பாஸ்டனைட்டு நடக்காம போய்டுமா? நடக்காமலையே போகட்டும் நல்லா இழுத்து பொத்திக்கிட்டு தூங்கு” என்றவள் கட்டிலில் போய் படுத்துக் கொள்ள மலரின் கால்களை பிடித்துக் கெஞ்சலானான் அமுதன்.
“யாரு நீயா என்ன பேச்சு பேசின? பேசிட்டு அப்படியே இருந்துடுவியா சமாதானப்படுத்தவாவது ஒரு மெஸேஜ்? ஒரு போன்? ஒரு பொக்கேயாவது அனுப்பினியா? அதிரடியா கல்யாணம் பண்ணனுமா உனக்கு? நான் அமேரிக்கா கிளம்பி இருந்தா என்ன பண்ணி இருப்ப?”
“போக விட்டுருப்பேனா?” அவள் கால்மாட்டில் அமர்ந்தவாறே கண்ணடித்து சிரிக்க
“சரி முதல்ல அந்த பபாகு அர்த்தம் சொல்லு”
“சொன்னா நம்ம பஸ்ட் நைட்டு நடக்குமா?”
“ம்ம்…”
“ஐயோ ரொம்ப யோசிக்கிறாளே! கூடாதே….” “சீக்கிரம் சொல்லு” கெத்தாக கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொள்ள
அவனின் தோரணையில் மலர்விழிக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்ற ஆவல் கூடியது. “ம்ம்.. சரி சொல்லு”
“அது ஒன்னும் இல்ல டி… செல்லம் ரிஷி அவன் பொண்டாட்டிய “பேபி” னு கூடுறான். பிரதீபன் பய “டால்” னு கூப்பிடுறான். நானும் உன்ன எப்படி கூப்டுறதுனு யோசிச்சேன். சிலோன் போனப்போ ஒரு பாப்பாவை சிங்களத்துல கொஞ்சிக் கிட்டு இருந்தாங்க உடனே என் அறிவை யூஸ் பண்ணி பாப்பாக்கு சிங்களத்துல என்னானு கேட்டேன் பபானு {babaa } சொன்னாங்க நல்லா இருக்குல்ல…” ஏதோ சாகசம் பண்ணியது போல் சொல்ல
அவனது பதிலில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “ஏன் மலர்விழி எங்குற என் பேருக்கென்ன குறைச்சல்” வேண்டுமென்றே சீண்ட
“என்ன பபா நீ ஆசையாசையா செல்ல பேர் வச்சா இப்படி மோசம் பண்ணுறியே!”
“சரி சரி போய் தூங்கு”
“அடிப்பாவி… உன்னயெல்லாம் சாப்ட்டா டீல் பண்ணினா சரிவராது அதிரடிதான் சரி” என்றவாறே அவள் மேல் பாய்ந்திருக்க அலாரம் அடிக்கவும் சரியாக இருந்தது.
அதை தேடி அனைத்தவன் “என்னடி இது?”
“எனக்கென்ன தெரியும்”
“ஆமா ரூம் அலங்காரம் யாரு பண்ணா?”
“கயலும், அகல்யாவும்”
“அகி…..” பல்லைக்கடித்தான் அமுதன். அடுத்து அலாரம் எங்கிருந்து அடிக்கும் எப்போ அடிக்கும் அமுதனின் முகம் கலவரமடைய மலர்விழி விழுந்து விழுந்து சிரிக்கலானாள்.
தேனிலவுக்கு செல்ல இரு ஜோடிகளும் தயாராகி வர பயணப்பைகளும் அவர்கள் செல்லும் வாகனத்தில் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” சிவரஞ்சனி சொல்ல
“ஏன் பாட்டி நான் இருக்கும் நிலமைல இப்படி விமானத்துல பயணம் செய்யலாமா? கூடாதில்ல உன் பேரான தடுக்காம அமைதியா இருக்க?” தியா பொறும
“அடியேய் கூறு கெட்டவளே! புருஷன் கூட போக உனக்கு கசக்குதா? போடி போய் என்ஜோய் பண்ணிட்டு வா”
“ஐ… பாட்டி வர வர நீங்க மும்பாய் பாட்டியாகவே மாறிட்டீங்க” அகல்யா பார்வதிப் பாட்டிக்கு ஹை பை கொடுக்க பாட்டியும் கொடுத்தார்.
தியா முகம் சுங்கியவாறே விடை பெற பிரதீபன் அவளின் கையை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு “நான் கூடவே இருப்பேன் பாபி டால்” என்று கண்களாளேயே ஆறுதல் சொல்ல தியாவும் அவன் தோள் சாய்ந்தாள். அவளை அணைத்தவாறே வீட்டாருக்கு கையசைத்தவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொள்ள,
அமுதனும் மலர்விழியும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீவாதம் வாங்க நல்லபடியாக சென்று வரும் படி ஒவ்வொருவராக விடைக் கொடுக்க அனைவரிடமும் விடை பெற்று வண்டியில் ஏறினார்கள் புதுமணத் தம்பதியினர்.
அவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என்று வாழ்த்தி நாமும் விடை பெறுவோமாக.