“உனக்கே கோபம் இல்லை. அப்புறம் நான் எதுக்கு கோப படணும்?சரி நான் என்ன பிராடு தனம் பண்ணுனேன்”
“நீ எனக்கு மச்சானாக போற அப்படிங்குற விஷயத்தை மறைச்சிட்ட பாத்தியா? வீட்ல நடக்குறது எல்லாம் உனக்கு ரேணு சொன்னாளா? பிராடு, உனக்கு உன் ஆள் மலர் தான சொன்னா”
“இது எப்படி உனக்கு தெரியும்? இது யாருக்கும் தெரியாதே”, என்று அதிர்ச்சியானன் ஆரோன்.
“உனக்கு மட்டும் தான் உன் நண்பன் மேல அக்கறை இருக்குமா? எங்க வீட்டுக்காரருக்கும் உன் மேல அளவு கடந்த அன்பு இருக்கு. அதனால தான் பையன் நல்ல வழியில போரானான்னு வேவு பாத்துருக்கார்”
“எப்பாடி தெரிஞ்சது சந்தோஷம் தான். சீக்கிரம் வீட்ல பேசி கல்யாணம் செஞ்சு வைங்கப்பா, உங்க அக்கா கூட இதுக்கு மேல மல்லுக்கட்ட முடியலை. சரி, ரெண்டு பேரும் ஹேப்பியா இருங்க. நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
“இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னொரு தடவை முத்தம் கொடுத்துக்கவா?”, என்று கேட்டான் கண்ணன்.
“எதெல்லாம் என்கிட்ட கேட்டு செய்யணுமோ அதெல்லாம் கேக்காத. எதெல்லாம் கேக்காம செய்யணுமோ அதெல்லாம் கேளு”, என்று அவனை முறைத்த படி சொன்னவளின் உதடுகளை சிறை செய்தான் கண்ணன்.
விருப்பத்துடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள் அவனை இறுக்கிக் கொண்டாள்.
முதல் முறையாக அவன் கைகள் சற்று எல்லை மீறி அவள் உடலில் ஊர்ந்தது. அதை உணர்ந்தாலும் தடுக்க தோன்றாமல் அவன் செய்கையில் கரைந்தவள் அவனுடன் மேலும் ஒன்றினாள்.
சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தவன் இன்னும் திருமணம் நடக்க வில்லை. இது தப்பு என்று முடிவுக்கு வந்து “வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டான்.
சரி என்று மண்டையை ஆட்டியவள் “போறதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும்”, என்று கேட்டாள்.
“உன்னோட கார் தான் என்னை இடிச்சதுன்னும், நமக்கு கல்யாணம் ஆகவே இல்லைன்னும் கடைசி வரை எங்க அம்மா அப்பாக்கு தெரியவே கூடாது. சொல்ல மாட்டேனு சத்தியம் பண்ணு”, என்று சொல்லி சத்தியத்தை வாங்கிக் கொண்டே அவனுடன் கிளம்பினாள்.
அப்போது தான் அவர்களைப் பார்த்த வாசு “இப்படியே ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று வாழ்த்தி வழி அனுப்பினான்.
கண்ணன் மைதிலியை அழைத்துச் சென்றது அவனுடைய வீட்டுக்கு தான். ஒரு நொடி திகைத்தாலும் மைதிலி ஒன்றும் சொல்ல வில்லை.
ஹாலில் நின்று “சாரு”,என்று அழைத்ததும் அனைவரும் அங்கே வந்து விட்டார்கள்.
சாரு மாணிக்கவேலை அழைத்துக் கொண்டு வந்தாள். மனிஷா எதுவோ பேச வந்தாள். “இப்ப இங்க என்னை தவிர வேற யாரும் பேச கூடாது”, என்று கத்தினான் கண்ணன்.
“மைதிலி என்னோட பொண்டாட்டி. அவ படிப்பு முடிஞ்ச பிறகு எங்க கல்யாணம் கிராண்டா நடக்கும். கண்ட நாய் எல்லாம் இனி அவளை பேசுனா நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டி இருக்கும். அப்பா நீங்க என் மேல எழுதி வச்சிருக்குற சொத்துல சில மாற்றம் செஞ்சிருக்கேன். இந்த வீடு உங்க பேர்ல தான் இருக்கு. உங்க காலத்துக்கு அப்புறம் இது உங்க மனைவிக்கு தான் போகும். அது மட்டுமில்லாம அவங்க கல்லதனமா வங்கி வச்சிருக்குற சொத்தை பத்தி எல்லாம் நான் கேக்க மாட்டேன். உங்க உழைப்புல உருவான கம்பெனி, மித்த புராபர்ட்டி எல்லாம் அருண் பேர்ல எழுதி வச்சிட்டேன். இனி அவன் தான் பாத்துக்குவான். சாருவுக்கு தேவையான நகை சொத்து எல்லாம் ரெடியா இருக்கு. அருணோட நண்பனை அவ விரும்புறா. அவனுக்கே அவளை கல்யாணம் செஞ்சி கொடுக்கணும்னு நானும் விருப்ப படுறேன். எம் . கே அப்படிங்க்ற பேரை அருண் என்ன வேணா மாத்திக்கலாம். எங்க தாத்தா பாட்டி என் பேர்ல எழுதி வச்சதுல மிச்ச இருக்குற சொத்தும், நீங்க கட்டுன எம். கே ஹாஸ்பிட்டல் மட்டும் எனக்கு போதும். வேற ஏதும் எனக்கு வேண்டாம். இனி நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். என்னோட வீட்டுக்கு போறேன். ஏதாவது உதவின்னா நீங்க எப்பவேணும்னாலும் என்னை கூப்பிடலாம். அருண் சாரு அப்பாவை நல்லா பாத்துக்கோங்க. எதுனாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் அப்புறம் வந்து என்னோட திங்க்ஸ் எடுத்துக்குறேன். அப்புறம் உங்க பொண்டாட்டியோட அண்ணன் எதுவோ கிரிமினல் வேலை செஞ்சு போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான். அவன் தான் நான் மைதிலி மேல காரை ஏத்துனேன்னு உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிருக்கான். என் நண்பன் கஷ்டடில தான் அவன் இருக்கான். உங்க பொண்டாட்டி என்னோட வாழ்க்கைல ஏதாவது கிரிமினலா யோசிச்சா நான் என் தாத்தா பாட்டி கொலை கேஸ்ல இவங்களை கோர்த்து விட வேண்டி வரும். நான் வரேன். வா மைத்தி”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
எல்லாரும் மனிஷாவை அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்.
“அன்னைக்கே கள்ள நோட்டு வேலைல இறங்காதேன்னு அவன் கிட்ட சொன்னேனே? கொலை பத்தி அண்ணன் போட்டுக் கொடுக்காம இருக்கணுமே”, என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் மனிஷா.
கண்ணனும் மைதிலியும் காரில் ஏற போகும் போது “அண்ணா நான் எப்படி அவ்வளவு பிஸ்னசையும் பாத்துக்க முடியும்?”, என்று கேட்டான் அருண்.
“அதெல்லாம் உன்னால முடியும். அப்புறம் உன் பேர்ல மாத்தி எழுதிட்டேன்னு தான் சொன்னேன். உனக்காக வேலை செய்ய மாட்டேன்னு சொல்லலை. நான் எல்லாம் சொல்லித் தரேன். அப்புறம் சக்தி வீட்டுல நீயும் பேசு. நான் சதீஷ் கிட்ட பேசுறேன்”, என்றான் கண்ணன்.
“நீங்க கிட்ட இருந்தா கண்டிப்பா நான் பாத்துக்குவேன். சக்தியும் எப்ப டா கல்யாணம்னு தான் இருக்கான். நான் பேசுறேன். தேங்க்ஸ் அண்ணா. பை அண்ணி”, என்று விடை கொடுத்தான் அருண். செக்யூரிட்டியும் அந்த கிஃப்ட்டை கொடுக்க மறக்க வில்லை.
மைதிலி வீட்டுக்கு சென்றதும் எப்போதும் போல் அவர்களை வரவேற்றார்கள் கருணாகரனும் வேதவள்ளியும்.
சாப்பிட்டு முடித்த பிறகு மைதிலி அறையில் அமர்ந்து அந்த கிஃப்ட்டை பிரித்தான் கண்ணன். அவன் சந்தோசத்தைக் கண்டு மைதிலியும் மலர்ந்தாள்.
இரவு உணவையும் முடித்து விட்டு அவன் வீட்டுக்கு சென்றான் கண்ணன்.
மைதிலியோ ஒரு டைரியை தூக்கி கொண்டு எழுத அமர்ந்தாள். அதைப் பார்த்த வேதவள்ளி “ஏய் உனக்கு எல்லாம் நினைவு வந்துருச்சா டி?”, என்று கேட்டாள்.
“இல்லையே மா எதுக்கு கேக்குற?”
“பின்ன முன்னாடி தான் ஒரு பேனா வாங்குனா கூட எழுதி வைப்ப. டைரி குமிஞ்சது தான் மிச்சம். இப்ப மறுபடி ஆரம்பிக்கிற?”
“என்னது நான் டைரி எழுதுவேனா?”, என்று கேட்டு வீட்டையே ரெண்டு படுத்தியவள் அனைத்து டைரியையும் தேடி எடுத்தாள்.
பின் ஒன்று ஒன்றாக எடுத்து வாசிக்க வாசிக்க அவளைப் பற்றியே அதிகம் தெரிந்து கொண்டாள். கண்ணனைப் பற்றி எழுதாத டைரியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோபத்தில் கூட அவனைப் பற்றி எழுதி இருந்தாள்.
ஆக்ஸிடெண்ட் நடப்பதற்கு முன்பு அவனை பார்த்தது எல்லாம் எழுதிய டைரியைப் அதிக ஆர்வம் கொண்டு படித்தாள். அதைப் படித்ததும் எல்லை இல்லா சந்தோஷம் அவளுக்குள் வந்தது.
அதன் பின் நாட்கள் அழகானதாக சென்றது. காலேஜ் படிப்பு, கண்ணனுடனான சந்திப்பு, அவன் முத்தம் எல்லாம் அழகானதாக இருந்தது. ரேணுகாவுக்கு பார்த்த வரணும் சரியாக வர அடுத்த முகூர்த்தத்திலே அவள் திருமணம் முடிந்தது. மைதிலி கடைசி வருடம் படிக்கும் போது கண்ணனே ஆரோனை பற்றி கருணாகரனிடம் பேசினான்.
“என்னோட பிரண்ட், ரொம்ப நல்ல பையன். நல்ல வேலைல இருக்கான். ஆனா சொந்தம்னு சொல்ல என்னை விட்டா அவனுக்கு யாரும் இல்லை. உங்களுக்கு பிடிச்சிருந்தா மலர்க்கு முடிக்கலாம்”, என்று அவன் சொன்னதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
மலர் ஆரோன் காதலும் கருணாகரன் வேதவள்ளியிடம் இருந்து மறைக்க பட்டது.
மைதிலி படிப்பு முடிந்து இரண்டு மாதம் கழித்து மைதிலி கண்ணன் திருமணம் அனைவர் ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தது. இவர்கள் திருமணத்துக்கு அனைவரும் வந்திருந்தார்கள். ரேணுகா கையில் மூன்று மாத குழந்தையை வைத்திருந்தாள்.
மாணிக்கவேலிடம் ஆசீர் வாதம் வாங்கி விட்டு தங்கள் வீட்டுக்கு மைதிலியை அழைத்து வந்து விட்டான் கண்ணன்.
அன்று இரவு கண்ணனுடைய வீட்டில் அவர்கள் அறையில் நுழைந்ததும் அவன் கையில் அந்த டைரியைக் கொடுத்தாள் மைதிலி.
அதைப் படித்துப் பார்த்தவன் “அடப்பாவி, இதை முன்னாடியே என்கிட்ட கொடுத்துருக்கலாம்ல?”, என்றான்.
அதில் கண்ணனைப் பார்த்த நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக எழுதி இருந்தாள் மைதிலி. அவனுடைய அழகை வர்ணித்தும் எழுதி இருந்தாள். பள்ளிக்கு அவன் வந்த அன்று அவனைப் பற்றி அவள் தோழிகள் “அழகா இருக்காங்க”, என்று சொன்னதற்க்கு “எப்படி என்னோட கண்ணனை இவங்க ரசிக்கலாம்”, என்று பொறாமைப் பட்டு எழுதி இருந்தாள். அனைத்துமே அவள் அவன் மீது வைத்திருந்த அன்பைத்தான் காட்டியது.
அவள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்ததை அந்த டைரி எடுத்துக் காட்டியது.
“இன்னைக்கு கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணணும்னு தான் இவ்வளவு நாள் சொல்லலை”, என்று சிரித்தாள் மைதிலி.
“அப்பவே என்னை சைட் அடிச்சிருக்க கேடி. என் டிரெஸ்ஸ் வரை ரசிச்சிருக்க? நான் பாரின் போனதுக்கு அப்புறம் என்னை எப்பவும் உன் மனசு தேடிட்டே தான் இருந்துருக்கு. அந்த வயசுல உனக்கு வந்தது காதலான்னு சொல்ல தெரியலை. ஆனா எனக்கு வந்த உணர்வுகள் உனக்கும் வந்துருக்கு, இது போதும் மைத்தி, உன் மனசுல நான் இருந்ததுக்கு இதை விட வேற என்ன வேணும். ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தேன். ஒரு வேளை என்னை அண்ணனா நினைச்சேன்னு சொல்லிருவியோன்னு. இப்ப தான் நிம்மதியா இருக்கு. இனி உனக்கு பழசு நினைவு வந்தாலும் உன்னை சமாளிச்சிருவேன்”, என்று சிரித்தான்.
“இனி பழசு நினைவு வந்தாலும் உங்களை விட்டு போகாம இருக்க இன்னொரு வழியும் இருக்கு. அதுவும் ட்ரை பண்ணுங்க”
“என்னது மைத்தி?”
“நம்ம ரெண்டு பேரோட சாயல் வர மாதிரி ஒரு பிள்ளையை கொடுத்துட்டா எப்படி போவேனாம்?
“சூப்பர் ஐடியா? ஆனா இப்ப தான் படிப்பு முடிச்சிருக்க. உடனே குழந்தைன்னா…?”
“நீங்க என்னை விட ஏழு வயசு மூத்தவங்களாம். அதனால சீக்கிரம் பிள்ளை பெத்துக்கனுமாம். உங்க மாமியார் ஆர்டர்”
“ஹா ஹா, மாமியார் சொன்னா கேட்டுக்க வேண்டியது தான். நீ வேலைக்கு போக வேண்டாமா?”
“அப்புறம் இப்ப பாக்குறது வேலை இல்லையா? உங்க ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் யாரு பாக்காங்கலாம்?”
“ஓகே ஓகே, ஆனா இப்ப நமக்கு பேபி வேண்டாம். ஆரோனுக்கு முதல்ல குழந்தை பிறக்கட்டும்.உடனே நாமளும் பெத்துக்கலாம் சரியா? அக்காக்கு முன்னாடி நீ குழந்தை உண்டானா ஏதாவது பேச்சு வரும். அது மட்டுமில்லாம நான் இன்னும் உன் உடம்புல மச்சம் எங்க இருக்குன்னு கூட பாக்கலையே டி”, என்று சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்.
“நானா பாக்க வேண்டாம்னு சொன்னேன்?”, என்று சொல்லிக் கொண்டே அவன் தீண்டலில் கரைந்தாள்.
“ஹ்ம் வீட்டுக்கு போய்ட்டோம்னு சொன்னாங்க. அடுத்த வாரம் விஷ்ணு சார்க்கு கல்யாணாம்னு கூப்பிட்டாங்களே? என்ன முடிவு பண்ணிருக்கீங்க?”
“போயிட்டு வருவோம் மைத்தி”
“நான் உங்க கிட்ட இல்லாதப்ப என்னை ரொம்ப மிஸ் பண்ணிருப்பீங்கல்ல?”
“பின்ன பண்ணாம, நீ இல்லாம எப்படி ஒரு தவிப்பு தெரியுமா? அதெல்லாம் கொடுமை. உன் கிட்ட பேசாம நானும் தாண்டி ரொம்ப அழுதேன்.ஆனா நீ இப்ப வரைக்கும் ஒண்ணு சொல்லலை”
“என்னது?”
“யோசி”
“ஐ லவ் யு கண்ணா”, என்று சொல்லி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“ஐ லவ் யு கண்ணம்மா. கிஸ்ஸ் கன்னத்துல எல்லாம் கிடையாது.எங்க எல்லாம் கொடுக்கணும்னு நான் சொல்லித் தரேன்”, என்று சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்தான். அவளும் அவன் சொல்லித்தரும் பாடம் கற்க ஆர்வமானாள்.
தீண்டலும் காதலும் அவர்கள் வாழ்கையில் தொடரும்….
தீண்டல் இனிக்கும்….முற்றும்!!!!
எப்போதும் போல் இந்த கதைக்கும் கருத்துக்களை தெரிவித்த என் தோழிகளுக்கு என் நன்றிகள்.
திருமணத்துக்கு பிறகு நான் எழுதிய முதல் கதை.
This story is dedicated to my lovable husband Kannan