இணை தேடும் இதயங்கள்
                            அத்தியாயம்  –  18
 
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரமலியை இன்றுதான் முதல்முதலாகப் பார்த்த ராமலிங்கத்திற்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா கம்பீரமாக ஒரு மகாராணி தோரணையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என வந்தவளை பார்க்கவும் இவருக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.. தங்களுக்கு தெரியாமல்  நடந்த திருமணம் என்பதால் பெண்ணுக்கு ஏதும் குறையோ, பிரச்சனையோ அதனால்தான் திடிருன்னு கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டாங்களோ என்ற பயம் அவர் மனதில் எழுந்திருந்தது.,
 
அப்பத்தாவும் ரெண்டு பேரையும் பார்த்து சோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கு எம்சிஆரு, சரோசா தேவி மாதிரி இருக்காக.. என்ன எம்சிஆரு எம் பேரனவிட கொஞ்சம் கலரு அதிகம் இவன் மாநிறம்..!! பரவாயில்ல பஸ்ஸ புடிக்காம செருப்பு தேயாம என்ற பேரனுக்கு ஒரு பொண்ணு அமைஞ்சிருச்சு..
 
இருவரும் இறங்கி வந்திருந்தவர்கள் ரமலி அவர்களை பார்த்து,” வாங்க என அழைத்து தன் தாயின் அருகில் சென்றவள்,” ஸாரி அங்கிள், ஸாரி கிராண்மா அன்னைக்கு எங்களுக்கு வேற வழியில்லாம இப்படி அவசரமா கல்யாணம் நடக்கிற மாதிரியாயிருச்சு”..
 
அப்பத்தா ,”அதென்னமா அங்கிளு, கிரைண்டருன்னு சும்மா மாமா அம்மாச்சின்னே கூப்பிடு..
 
சக்தி அவளை உறுத்து பார்க்க என்னவென்று தெரியாமல் நின்றவளை எல்லாரும் இருக்கும்போதே கையை பிடித்தவன்,” வா விழுந்து கும்பிடு” ..தன் தந்தை அருகே கையை விடாமல் அழைத்து சென்றவன் அவர் காலில் விழுந்தவர்கள் அடுத்து அப்பத்தா காலிலும், ரேணுகா காலிலும் விழ ரமலி பல்லை கடித்தாலும் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள்..
 
அப்பத்தாவோ அவர்களை வாழ்த்தி,” அடுத்த பத்து மாசத்துக்குள்ள எனக்கொரு கொள்ளுப்பேரனோ பேத்தியோ பெத்து குடுத்திருங்கத்தா..”
 
இந்த பாட்டி அவங்க பேரனுக்கு மேல இருக்கும் போலவே அவரிடம் சிரித்தபடி முகத்தை வைத்திருக்க,
 
ராமலிங்கம் தன் மகனிடம்,” அடுத்தென்ன சக்தி முடிவெடுத்திருக்க.. இப்படி யாருக்கும் தெரியாம நடந்தாலும் நம்ம சொந்தகாரங்களுக்கும், ஊராளுகளுக்கும் தெரியப்படுத்தனும்.. இல்லனா வாய் புளிச்சோ இல்ல மாங்கா புளிச்சிச்சோன்னு வாய்க்கு வந்தத பேசுவாங்க.. வெற்றிக்கும் திடிருன்னுதான கல்யாணம் நடந்திச்சு அதான் ஊருக்கே சொல்லி ஒரு விருந்த வைச்ச ரெண்டு ஜோடிக்கும் ஒரு வரவேற்பை வைச்சிரலாம் யோசிக்கிறேன் நீ என்ன சொல்ற சக்தி..?”
 
நீங்க சொன்னதுக்கு நான் எப்பப்பா மறுப்பு சொல்லியிருக்கேன் நீங்க என்ன செய்யனுமோ அதை செய்ங்க..
 
ப்பா என்ன நடிப்புடா சாமி…. .அடப்பாவி  அவனையே கண்ணெடுக்காமல் பார்த்தவள் இவன் நம்மகிட்ட என்னா பேச்சு பேசினான் இங்க என்னன்னா அப்படியே பம்முறான் பாவி பாவி…
 
தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென அவளை நோக்கி கண்ணடித்து உதட்டை குவித்து முத்தமிட இதை எதிர்பார்க்காதவளுக்கு நெஞ்சு படபடவென அடித்தது..
 
தன் மூத்தமகனை நினைச்சு பெருமைப்பட்டவர் இரண்டாவது மகனிடம் இதை எப்படி சொல்வது அவனை வழிக்கு கொண்டுவர யோசனை செய்தபடி,” சரி கிளம்புவோமாப்பு..
 
 அண்ணே நீங்க ஜோசியர்கிட்ட ஒரு நல்ல நாளப்பார்த்து குறிச்சிட்டு சொல்லுங்க.. அதுவரைக்கும் ஆத்தாவும் தம்பியும் இங்க இருக்கட்டும்..” எங்கே மகள் இப்போது இவர்களைவிட்டால் மீண்டும் முருங்கைமரம் ஏறிக் கொள்வாளோ என்ற பயம் முதல்ல வேண்டாம்னு சொன்னவ இப்ப இந்த தம்பி ஏதோ சொல்லவும்தான் அடங்கி பேசாம இருக்கா இந்த வாய்ப்பை விட்டுறக்கூடாது..
 
அது சரிவராதுத்தா..வீட்டோட மாப்பிள்ளையெல்லாம் எங்க பரம்பரையில பழக்கம் இல்ல அப்பப்ப வந்து போனாதான் மதிப்பு..
 
ரமலியோ மனதிற்குள் ஹப்பாடா அப்ப இவன் கிளம்பிருவானா.. நாம கொஞ்சம் ப்ரியா இருக்கலாம்.. என்ன ஆட்டம் போடுறான் போய் தொலைடா..
 
ரேணுகாவோ,” அண்ணே தம்பி இந்த வீட்டு மாப்பிள்ளையெல்லாம் இல்ல.. இந்த வீட்டு பிள்ள இவ்வளவு நாள் அப்படித்தான் பார்த்துக்கிட்டோம்.. அதோட நம்ம தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பம் பொழைக்கிது..ரெண்டுபேரும் அங்க போனா எல்லாத்தையும் பார்த்துக்க கொஞ்சம் சிரமமாயிருக்கும் .. இங்கயும் அங்கயும் மாறி மாறி இருக்கட்டும்ண்ணே.. அதோட சொத்து எல்லாம் தம்பி பேருலயும் ரமலி பேர்லயும்தான் இருக்கு அவங்க அத ஒழுங்கா பார்த்தாத்தான் இத்தனை வருசம் என் மாமனாரு பாடு பட்டதுக்கும் ஒரு பலன் இருக்கும்.. கொஞ்சம் மனசு வைங்கண்ணே.. கையெடுத்து கும்பிட…
 
ஏத்தா கையெடுத்தெல்லாம் கும்பிட்டுக்கிட்டு விடு சற்று யோசித்தவர் டேய் சக்தி இங்கனயே இருந்து மருமகளுக்கு என்ன ஒத்தாசை செய்யனுமோ எல்லாத்தையும் பாரு… நான் நல்லநாள குறிச்சிட்டு சொல்றேன்.. அப்ப அங்க வந்து ஒரு பத்துநாள் இருந்திட்டு வரலாம்.. அதோட உனக்கு எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ மருகளோடயும் தங்கச்சியோடவும் அங்க வந்திரு…. ஆம்பள இல்லாத வீடு நான் தங்கச்சிய விசாரிச்ச வரைக்கும் உன் மாமனாரோட தங்கச்சிங்க குடும்பம்தான் இவங்க மேல ரொம்ப வன்மமா இருக்காங்க.. எல்லாத்தையும் பார்த்து சூதான முடிச்சுவிடு.. தன் மகனை கூர்மையாக பார்த்துச் சொல்ல அதில் இருந்த செய்தியை படித்தவன்,
 
ம்ம் சரிப்பா எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..
 
ரேணுகா அண்ணே இந்த வீட்ட எப்பவும் நீங்க உங்க மருமக வீடுன்னு நினைக்காம தங்கச்சி வீடுன்னு நினைச்சுக்கோங்க.. எங்களுக்கும் உங்கள விட்டா வேற சொந்தகாரங்க யாரும் இல்ல.. பணம் இருக்கு சொத்து இருக்கு ஆனா உருத்தான சொந்த பந்தம் இல்லாத அநாதைங்க நாங்க ரெண்டுபேரும்.. நாங்க பண்ண தப்ப மன்னிச்சு நீங்க இத உங்க வீடா நினைச்சு வந்து போகனும்ணே.. இந்த விசயத்தை நான் முன்னாடியே சொல்லலைன்னு வருத்தப்படாதிங்க.. அன்னைக்கு தம்பி ரொம்பவும் மனசு கஷ்டத்தில இருந்துச்சு அதோட உங்க ஊருக்காரங்க சொந்தபந்தம் நிறைய பேர் இருந்தாங்க.. அதான் வேற மாதிரி பிரச்சனை எதுவும் வந்திரும்னுதான் நாங்க இதை பத்தி பேசலைண்ணே..  
              
பரவாயில்லத்தா என் பையன காப்பாத்தி அவன உங்க வீட்டு பிள்ளையா வைச்சு பார்த்திருக்கிங்க.. விடுங்க இனி எல்லாமே நல்லதா நடக்கும்..
 
ரமலியோ தன் தாயை முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவங்களே அவன அங்க கூட்டிட்டு போறேன்னு தானே சொல்றாங்க இந்த அம்மா வாயவைச்சிக்கிட்டு சும்மா இருந்தா என்ன புது சொந்தம் கொண்டாடுறாங்க.. இருந்தாலும் சரணை வெறும் கையோடு அனுப்பி வைக்க அவளுக்கு மனதில்லை.. அவன் தற்போதைய பேச்சுத்தான் பிடிக்கவில்லையே தவிர அவன் செய்த உதவி பெரிதுதானே.. அவளுக்கு ஒரு குழப்பமான உணர்வு இவனுடைய உண்மையான குணம்தான் எது.. இப்ப பார்க்கிறதா இல்ல முன்னாடி இருந்ததா..!!!
 
அண்ணே சாப்பிட்டுட்டுத்தான் போகனும் அவரை வற்புறுத்தி இருக்க வைத்தவர்  கீழிருந்த ஒரு அறையை காட்டி சற்று ஓய்வெடுக்கச் சொன்னார்..
 
 அப்பத்தாவோ தானும் மகனோடு கண்டிப்பா போகனும் அங்க மலரு ஒத்தையில கஷ்டப்படும் என்று சொல்லி ஊருக்கு மகனோடு கிளம்ப தயாராக,
 
சக்தியோ அப்பத்தா அவங்கள கொஞ்சம் தனிமையில விடுங்க அப்பதான் அந்த வெற்றிப்பய மலரோட அருமை புரிஞ்சு இங்கயே இருக்கனும்னு நினைப்பான்,.. அவன கொஞ்சம் விட்டுப்பிடிங்க.. நீங்க அங்க வரணும்னா அப்பா சொல்லியிருப்பாங்கதானே அப்பாவே ஏதோ நினைச்சிருக்காங்க போல.. கொஞ்சநாள் இங்ஙன இருங்க உங்களுக்கும் சிலபல வேலைகளை இங்க வைச்சிருக்கேன்..ப்ளிஸ் ப்ளிஸ்..” அவன் அப்பத்தாவை ஐஸ்வைக்க ரேணுகாவிற்கு அவர்களை பார்க்க மனது நிறைந்திருந்தது..
 
ரமலி தன் தாயிடம் சொல்லிவிட்டு தொழிற்சாலைக்கு கிளம்ப அவளோடு சக்தியும் கிளம்பியிருந்தான்.. அவளோடு நடந்தவனை,” நீங்க எங்க வர்றிங்க..??”
 
ரேணுகா ,” இதென்னடி இங்கிருந்த வரைக்கும் தம்பி உனக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்தாருன்னு சொல்லிட்டு இப்ப இதென்ன கேள்வி.. தம்பி இப்பத்தான் வந்திருக்கு வரவுமே அதுக்கு அலைச்சலகூட்ட வேணாம்.. இப்ப ஒன்னும் நீ போக வேண்டாம் நாளைக்கு கிளம்பு ..தம்பியும் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நீங்க போங்க தம்பி..”
 
ரமலிக்கு தன் தாய் மீது கோபம் கண்ணை மறைத்தாலும் இத்தனை நாள் தன்னோடு பேசாமல் இருந்துவிட்டு இன்று தன்னிடம பேசுபவரை எதிர்த்து பேச மனதில்லாமல் மாடியில் கால்வைத்தாள்..சக்தியோ இவமட்டும்தான் சண்டி மாடு போல அத்தை எப்போதும் நம்ம கட்சிதானோ அவரை பார்த்து தலையசைத்துவிட்டு ரமலி பின்னோடு சென்றான்..
 
 ரேணுகாவோ கடவுளே எனக்கு வாய்த்த வாழ்க்கையைத்தான் சரியில்லாம கொடுத்திட்ட.. இவங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்க.. இந்த தம்பியும் அப்பவும் இப்பவும் ஒரே மாதிரி தங்க பையனாத்தான் இருக்கு.. ஆம்பளைங்க எல்லாருமே அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிற அவ எண்ணத்தை மாத்தி நல்லபடியா இந்த தம்பியோட குடும்பம் நடத்த நீதான் துணையா இருக்கனும் அவரிடம் அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தவர் வேகமாக சமையலறைக்குள் நுழைந்திருந்தார்..
 
மலர் அமைதியாகவே தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க வெற்றிக்கு ஏதோ போலிருந்தது.. இத்தனை நாளும் பேசவில்லைதான் இருந்தாலும் இன்று அவள் முகம் வாடிப்போய் அழுததில் சிவந்து காணப்பட்டது.. இரண்டு மூன்று முறை வழிய பேசச்சென்றாலும் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள போடி என கண்டு கொள்ளாமல் தன் வேலையை மட்டும் பார்க்க ஆரம்பித்தான்..
 
மலருக்கு தன் மேலேயே கோபமாக இருந்தது.. நம்மள வேண்டாம் சொன்னவங்க முன்னாடி போய் அழுது நம்ம தரத்தை நாமளே கெடுத்துக்கிட்டமே, மாமா சொன்ன மாதிரி எது வந்தாலும் சமாளிக்க பழகனும்.. மலருக்கு மனஅழுத்தம் அதிகமாக இருந்தது.. சிறுவயதில் இருந்தே எதையும் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் பசியோடும் பட்டினியோடும் கிடந்தவள் வயதிற்கு வந்தபிறகு கிரிதரன் போன்ற ஆட்களிடம் தன் மானத்தை காப்பாற்ற போராட தன்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என ஏங்கினாள்..
 
 கல்லூரியில் சேர்ந்திருந்தாலாவது தன் கவனத்தை அதில் செலுத்தியிருப்பாள் அதற்கும் வழியில்லாமல் ஒருவேளை திருமணம் செய்தால் கணவன் தன்னை கண்ணுக்குள் வைத்து தாங்குவான் என நினைத்திருக்க அவளை திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என அவ்வளவுதூரம் போராடி கடைசியில் அத்தையின் கடைசி ஆசையை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றி … திருமணம் நடந்த அன்றே வேண்டாம் என சொல்லி அவள் மனதில் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியிருந்தான்..