“நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்.. இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்…….”
“மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்..” என்று அவசரமாக மோகனா கூறினாள்.
“குட்.. அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ காரணம் கேட்டு தொந்தரவு பண்ணா, ‘மாலு உன் கூட பேச கூடாது னு சொல்லிருக்கா‘ னு சொல்லிடு..”
“ஹ்ம்ம்..”
மாலினி கறாரான குரலில் பேசினாள், “அவ திட்டினாலோ மிரட்டினாலோ பதிலுக்கு நீயும் திட்டனும்.. எனக்கு கோபம் வராது னு சொல்லாத, கொஞ்சம் கொஞ்சமா உன்னை நீ மாத்திக்கணும்.. எதுகெடுத்தாலும் பயப்படக் கூடாது.. தைரியமா இருக்கணும்.. என்ன புரிதா?”
“ஹ்ம்..” என்று தலையை ஆட்டிய மோகனா, “எப்படி மாத்திக்கிறது மாலு? அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டாள்.
மாலினி மனதினுள், ‘இவளை மாத்துறது ரொம்ப கஷ்டம் பட் மாத்தி தான் ஆகணும்‘ என்று நினைத்துக் கொண்டாள்.
மாலினி, “நீ தான் அதை யோசிக்கணும்”
“மாலு” என்று மோகனா சிணுங்க, மாலினி, “முதல்ல இப்படி சிணுங்குறதை நிறுத்து”
மோகனா கண்ணிமைக்காமல் மாலினியை பார்க்க, மாலினிக்கு பாவமாக தான் இருந்தது ஆனால் மோகனாவை மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மாலினி கறாராகவே நடந்துக் கொண்டாள்.
“ஆர்லியிடம் பேசாதே ஆனால் அவள் திட்டினால் நீயும் திட்டுற, அதை விட்டுட்டு பயந்து போய் என்னிடம் வந்து அழுத, நான் உன் கூட பேசவே மாட்டேன்”
மோகனா அதே நிலையில் தான் இருந்தாள்.
மாலினி, “மோனி நான் சொன்னா சொன்னதை செய்வேன் னு உனக்கு தெரியும்.. நீ இனி ஆர்லிக்கு பயந்த நான் கண்டிப்பா உன் கூட பேசவே மாட்டேன்.. புரிதா?”
“ஹ்ம்ம்”
மோகனாவின் அன்னை செல்வி சாப்பிட அழைக்கவும் இருவரும் சென்றனர். மோகனா அமைதியாகவே இருந்தாள்.
அதை பார்த்து அருணாசலம் கண்ணசைவில் ‘என்ன?’ என்று மாலினியிடம் கேட்க, அவளும் கண்ணசைவில், ‘நத்திங்.. அப்பறம் சொல்றேன்‘ என்றாள்.
உணவை முடித்துக் கொண்டு அருணாசலமும் மாலினியும் கிளம்பினர்.
காரில் சென்று கொண்டிருந்த போது அமைதியாகவே வந்த மாலினியிடம் அருணாசலம், “என்ன டா யோசிக்கிற? மோனி ரொம்ப பயந்து போயிருக்காளா?”
“பயந்து இருந்தா.. இப்போ ஓகே தான்”
“அப்பறம் என்ன டா யோசனை?”
“யோசிக்க நிறைய இருக்கிறதே!”
“என்ன?”
மாலினி மோகனாவிடம் பேசியதை கூறினாள். பிறகு,
“இப்போ எனக்கு இருக்கிற டவுட்ஸ்..
-
என்ன தான் நான் செக் வச்சாலும்ஆர்லி மோனி கிட்ட பேசாம இருக்க மாட்டா! எப்படி மோனியை பார்த்துக்கிறது?
-
மோனி ஷங்கர் விஷயத்தில் யோசிச்சது.. அவனுக்கு சப்போர்ட் பண்ணது எல்லாம் அவ மனசை தெளிவுபடுத்துது.. பட் அதை அவ எப்போ உணர்வா னு தெரியலை.. பட் அவளுடைய சிந்திக்கும் திறன் கொஞ்சம் கூடியிருக்கிறது.. இந்த காதல் ஒரு குழந்தையை குமரியாக்குதே!