“அது அப்போ யோசிக்காம பேசிட்டேன் தான்.. பட் ஷங்கர் ரொம்ப நல்ல பையன்.. நான் சொன்னப்ப கூட ஆர்லி முன்னாடியே தயங்க தான் செய்தான்.. தென் இவனிங் கூப்பிட்டப்ப, “நான் வரது சரிவராது.. நிறைய விஷயம்யோசிக்கணும்.. மோனி பயம் போன பிறகு நான் அவளை பார்த்தா தான் சரி வரும் இல்லை மேலும் பயப்படுவா.. முக்கியமான விஷயம் மோனி பேரென்ட்ஸ்.. அவங்க என்ன நினைப்பாங்க னு தெரியாம.. ஹ்ம்ம்..யோசிச்சு பார்த்தாஉனக்கே புரியும்..” னு சொல்லிட்டான்.. ஸோ நைஸ் பாய்”
“ஹ்ம்ம்.. நைஸ் பாய் தான்.. நீ இனிமேல்…………..”
“இப்படி யோசிக்காம பேச மாட்டேன்.. அதுவும் செல்வி ஆன்ட்டி பத்தி தெரிஞ்சும் யோசிக்காம பேசினது தப்பு தான்.. சாரி பா”
[மோகனாவின் அன்னை செல்விக்கு ஆண்-பெண் பேதமின்றி பழகுவதில் பிடித்தம் கிடையாது]
“குட்.. இனி யோசிச்சு பேசு..எப்போதும் இதை நினைவில் வச்சுக்கோ மாலு.. நாம பேசுறதில், ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்.. ஸோயோசிச்சு பேசணும்”
“ஓகே.. ஓகே.. ஓகே..”
அருணாசலம் புன்னகைத்தார்.
(என்னதான் அலுத்துக் கொள்வது போல் மாலினி பேசினாலும், தான் சொன்னதை அவள் மனதினுள் பதித்திருப்பாள் என்பதை நன்கு அறிந்ததால், புன்னகைத்தார்.)
மாலினி சிறுகோபத்துடன், “அந்த நாதாரி எப்போ என் கிட்ட அடி வாங்க போறான் னு தெரியலை”
“யாரை டா சொல்ற? ஸ்ரீராம் ஆ? என்ன பண்ணான்?”
“அந்த நாதாரியே தான்.. சேகர் கிட்ட என்ன பேச்சு பேசுனான்! இன்னைக்கு இளிச்சுட்டு வந்து நிக்குறான்.. அவனை”
“பசங்க குணம் அப்படி தான் டா.. நான் M.Sc படிச்சப்ப, 38 பசங்க 7 பொண்ணுங்க.. சிலபசங்க பொண்ணுங்க கிட்ட நார்மலா பேசுறது போல் பேசிட்டு எங்களிடம் வந்து அது என் ஆள் னுசண்டை போடுவான்க.. அது அவன்க நேச்சர்.. நீ தான் பில்ட்டர் பண்ணி பழகனும்”
“என்னநேச்சரோ!தைரியம் இருந்தா அந்த பொண்ணு முன்னாடியே சண்டை போட வேண்டியது தானே.. அது என்ன பிரெண்ட் னுஅவ கிட்ட பழகிட்டு அவ பின்னாடி ‘என் ஆள்‘ னு சொல்றது! மானம் கெட்ட பொழப்பு.. சை”
“அவனை பற்றி தெரிஞ்சுடுச்சு.. ஸோ இனி விலகிடு.. அவனை பற்றி யோசிக்காத..விடு டா.. வேற எதுவும் இன்ட்ரெஸ்டிங் ஆ நடக்கலையா?”
“ஓ நடந்துதே! சிவா புண்ணியத்தில் பிருந்தா டயட் இருக்க போறா”
அருணாசலம் ஆச்சரியமாக பார்க்கவும், மாலினி புன்னகையுடன்,“நாங்களும் இப்படி தான் ஷாக் ஆனோம்.. பட் உண்மையாவே டயட்டில் இருப்பது போல் தான் தெரியுது.. ஐ தின்க் சிவா பிருந்தாக்கு ரூட் விடுறான்”
“சிவா மனசுலபிருந்தா வா” என்று கூறி அருணாசலம் புன்னகைத்தார்.
சிறிது யோசித்த மாலினி, “எனக்கு ஒரு டவுட் பா! காலேஜ் திறந்து ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ளேயே எப்படி லவ் பண்ண ஆரம்சிடுறாங்க!
என் கிளாஸ்லேயே சிங்கில் சைடு லவ் போக, மூணுஜோடிகள்இருக்குது.. இதுல மத்த டிப்பார்ட்மென்ட்ஸ் சேர்த்தாஎத்தனை ஜோடிகள்இருக்குது தெரியுமா?”
அருணாசலம் சிறு புன்னகையுடன், “இந்த காலத்து பசங்க பொண்ணுங்க ரொம்ப பாஸ்ட் ஆ தான் இருக்கிறீங்க..
நிறைய ஜோடிகள்னு சொல்ற பட் அதில் எத்தனை உண்மையான காதல் னு போக போக தான் தெரியும்..
சிலது டைம் பாஸ் ஆ இருக்கும்,
சிலது ஜஸ்ட் பிஸிகல் அட்ரக்சன் ஆ இருக்கும்,
சிலது இன்பக்சுவேஷன் ஆ இருக்கும்,
இன்னும் சிலது ‘எனக்கும் ஆள் இருக்குது‘ னு சொல்லிக்கிறதுக்காக கூட இருக்கும்..”
“என்னவோ போ.. “ என்று மாலினி அலுத்துக் கொள்ளவும் அருணாசலம் சிரித்தார்.
மோகனா வீட்டிற்கு வந்திருந்தனர்.
மோகனா சுவற்றில் சாய்ந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள், காய்ச்சல் இல்லை என்றாலும் சிறிது சோர்வாக தெரிந்தாள்.
மோகனா மாலினியை பார்த்ததும் சிறு பயம் கலந்த குரலில்,“ஹே மாலு.. நெத்தில என்ன காயம்?”
“செவத்துல(சுவற்றில்) இடிச்சுட்டேன்.. இதை விடு.. நீ எப்படி இருக்க?”
“ஓ! செல்வா தான் ஏதோ செஞ்சுடானோ னு நினைச்சேன்.. ரொம்ப வலிக்குதா மாலு?” என்று கவலையுடன் கேட்டாள்.
“மோனி.. மோனி.. செல்வா என்னை ஒன்றும் செய்ய மாட்டான்.. நீ பயப்பட கூடாது ஓகே யா?”
மோகனா ‘சரி‘என்பது போல் தலையை ஆட்டினாள்.
மாலினி அருணாச்சலத்தை பார்க்க, அவர்,“நீங்க பேசிட்டு இருங்க.. நாங்க ஹாலில் இருக்கோம்” என்று கூறி மோகனையும் செல்வியையும் அழைத்து சென்றார்.
மாலினி மோகனா அருகில் அமர்ந்து மென்மையாகபேச தொடங்கினாள்.
“மோனி, ஆர்லி என்ன சொல்லி உன்னை பயமுறுத்தினா?”
மோகனா சிறிது மிரட்சியுடன் பார்க்க, மாலினி மோகனாவின்கையை ஆதரவாகபற்றி,“மோனி பயப்படக் கூடாது னு சொன்னேனே.. ஆர்லி என்ன சொன்னா னு சொல்லு, அவ சொன்னது சரியா தப்பா னு நான் சொல்றேன்”
“அது.. அது”
“நீ என்னை நம்புற தானே”
“ஹ்ம்ம்” என்று வேகமாக தலையை ஆட்டினாள் மோகனா.
“அப்போ சொல்லு..”
மோகனா தயக்கத்துடன், குழந்தை போல்,“நான் சொல்வேன் ஆனா நீ ஷங்கரை திட்டக் கூடாது.. ஓகே வா?”
“ஆர்லி பற்றி தானே கேட்டேன்.. நான் ஏன் ஷங்கரை திட்ட கூடாது?”
“ஆர்லி சொன்னா நீ ஷங்கரை திட்டுனா, ஏற்கனவே உன் மேல் கோபமா இருக்கிற செல்வா உன்னை அடிப்பான் னு”
“ஆர்லி தெரியாம சொல்லி இருக்கா.. செல்வா என்னை ஒன்னும் செய்ய மாட்டான்..”
“அவன் ஏதாவது செஞ்சுட்டா?” என்று பயந்தாள் மோகனா.
“மோனி நான் சரியா தானே சொல்வேன்?”
“ஹ்ம்ம்”
“அப்போ பயப்படாத.. ஷங்கருக்கும் செல்வாக்கும் சம்பந்தம் இல்லை.. ஸோ நான் ஷங்கரை திட்டுனா செல்வா ஒன்னும் செய்ய மாட்டான்.. சரியா?”
மோகனா அரை மனதுடன் “சரி” என்றாள்.
மாலினி, “ஆர்லி வேற என்ன சொன்னா?”
மோகனா யோசனையுடன்,“ஷங்கர் செஞ்சதை உன்னிடம் சொல்ல கூடாது னு சொன்னா.. அவன் செஞ்சதை சொல்றேன் ஆனா நீ அவனை திட்டக் கூடாது”
“மோனி செல்வா என்னை ஒன்னும் செய்ய மாட்டான் னு சொன்னேனே.. திரும்ப ஏன் இப்படி சொல்ற?”
“அது ஓகே தான்..”
“அப்பறம் என்ன?”
“அது வந்து.. (தயக்கத்துடன்)ஷங்கர் பாவம் தானே அதான் திட்டாத னு சொன்னேன்”
மோகனாவின் இந்த பதிலில் இருந்தே மாலினிக்கு அவளது மனம் புரிந்தது, இருந்தாலும் இது வெறும் பிடித்தம் மட்டும் தானா இல்லை அதற்கும் மேல் போகும் அன்பா என்று தெரிந்து கொள்ள, பேச்சுகொடுத்தாள்.
மாலினி சிறுபுன்னகையுடன், “அவன் தப்பு செய்யலை னா திட்ட மாட்டேன்”
“…”
“என்ன?”
“ஹ்ம்ம்..அவன் செஞ்சது தப்பு தான் ஆனா நீ திட்டக் கூடாது”
“ஏன்?”
“அது.. அது.. ஹ்ம்ம்.. அவன் குட் பாய்”
“குட் பாய்ஸ் யாராச்சும் தப்பு செய்வாங்களா?”
சிறிது யோசித்த மோகனா, “நான் குட் கேர்ள் தானே! நான் தப்பு செஞ்சிருக்கேனே!”
மோகனா இந்தளவிற்கு சிந்திப்பதை நினைத்துமாலினி மனதினுள் வியந்தாள். மாலினிக்கு இப்பொழுது மோகனாவின் மனம் தெள்ள தெளிவாக புரிந்தது, மோகனா எதுவரை சமாளிக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் மேலும் பேச்சை வளர்த்தாள்.
மாலினி சிறு புன்னகையுடன், “நீ குட் கேர்ள்தான்.. நீ தப்பு செஞ்சா நான் என்ன செய்வேன்?”
“திட்டுவ”
“அப்போ ஷங்கர் தப்பு செஞ்சா திட்டலாம் தானே!”
‘ஆம்‘ என்பது போல் தலையை ஆட்டிய மோகனா மறு நொடியே மறுப்பாக ஆட்டி,“ஹம்.. அவன் தான் சாரி கேட்டானே! இனி செய்ய மாட்டேன் னு சொல்லிட்டானே!” என்று கூறியவள், கண்ணில் சிறு அச்சத்துடன்,“ஆனா ஆர்லி அவன் சாரி சொல்லிட்டு சொல்லிட்டு திரும்ப செய்வான்.. அதுவும்.. அதுவும்..” என்று தயங்கியவளின் கண்கள் கலங்கின.
மாலினி மோகனாவின் தோளை பற்றி, “மோனி பயப்படக் கூடாது.. ஆர்லி தேவை இல்லாம பயமுறுத்தி இருக்கா.. ஷங்கர் குட் பாய் னு நீயே சொன்னியே.. நீ சாரி கேட்டபின் அந்த தப்பை திருப்பி செய்வியா? மாட்ட தானே.. ஷங்கரும் செய்ய மாட்டான்.. அன்னைக்கு ஏதோ தெரியாம அப்படி செஞ்சிட்டான்.. இனி அப்படி செய்ய மாட்டான்.. இன்னைக்கு கூட என்னிடம் என்ன சொன்னான் தெரியுமா?
‘மோனி கிட்ட ரொம்ப சாரி கேட்டேன் னு சொல்லு‘ னு தான் சொன்னான்..”
மோகனா கலங்கிய விழிகளுடன் அதிர்ச்சியுடன், “உனக்கு.. உனக்கு தெரியுமா மாலு? அவன் என்ன செஞ்சான் னு தெரியுமா?”
“தெரியும் டா.. இன்னைக்கு அவனே சொன்னான்.. நான் திட்டுறதுக்கு முன் அவனே ரொம்ப சாரி கேட்டான்.. உன்னிடமும்சாரிகேட்க சொன்னான்.. நீ எப்படி இருக்க னு கேட்டான்.. உன்னை நினைச்சு ரொம்ப கவலை பட்டான்”
மோகனா சிறு புன்னகையுடன், “ஷங்கர் குட் பாய் தானே மாலு?”
மோகனாவின் கண்களை துடைத்துவிட்டபடியே மாலினி, “ஹ்ம்ம்.. குட் பாய் தான்” என்று சிறுபுன்னகையுடன் கூறினாள்.
ஒன்றும் புரியாமலேயே மோகனா ‘சரி‘ என்று தலையை ஆட்டினாள்.
மோகனா யோசனையில் இருக்கவும் மாலினி, “என்ன மோனி? என்ன டவுட்? கேளு”
“நீ ஏன் ஆர்லியை பேட் கேர்ள் சொல்ற?”
‘என்ன சொல்வது? எப்படி புரிய வைக்கிறது?’ என்று மாலினி திணற, மோகனா தானே ஒரு காரணத்தை யோசித்து கேட்டாள்.
மோகனா, “அவ பொய் சொல்லி என்னை பயபுறுத்தினதால் அப்படி சொல்றியா மாலு?”
மாலினி மோகனாவின் கன்னத்தில் கை வைத்து சிறிது அழுத்தி, “ஆமா டா” என்றாள்.
மோகனாவிற்கு அடுத்த சந்தேகம் எழுந்தது.
“அவ என்னை பயபுறுத்திடே இருப்பாளா?”
“நீ தைரியமா அவளை திட்டிட்டா பயமுறுத்த மாட்டா”
“ஓ.. அதான் அவ கிட்ட கோபமா பேச சொன்னியா? ஆனா எனக்கு தான் கோபமே வராதே!”
மாலினி மனதினுள், ‘ஐயோ மோனி செல்லம் உன்னை என்ன தான் டா செய்றது.. ஒழுங்கா மார்க் வாங்கி இருந்தா CSE யே வந்துருப்பியே!‘என்று புலம்பினாள்.
மாலினி, “ஓகே நீ கோபமா பேச வேண்டாம்.. பட் அவ சொல்றதை நம்பக் கூடாது.. பயப்படக் கூடாது.. அவ என்ன சொன்னாலும் உடனே என்னிடமோ ஷங்கரிடமோ சொல்லிடனும் சரியா?”
“ஹ்ம்ம்.. ஓகே”
“இப்ப சொல்லு ஆர்லி ஷங்கர் பத்தி என்ன சொன்னா?”
மோகனா அன்று நடந்ததை(மதிய இடைவெளியில் இருந்து மாலை வரை நடந்ததை)அப்படியே ஒப்பித்தாள்.
மோகனா சொன்னதை கேட்டதும் மாலினிக்கு ஆர்லி மேல் பெரும் கோபம் வந்தது, மேலும் அவள் மோகனாவை சும்மா விடமாட்டாள் என்று நினைத்த மாலினி, ஆர்லியை எதிர்க் கொள்ள, மோகனாவை தயார்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.
மாலினி, “மோனி.. இப்போ மூணு விஷயம் சொல்ல போறேன். நல்லா கவனி..”
“ஹ்ம்ம்..”
“முதல் விஷயம்.. செல்வா ஒரு விஷயத்தில் என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கிறான், உண்மை தெரிந்ததும் கோபம் போய்டும்..ஸோ அவனால்எனக்கு எந்த ஆபத்தும் கிடையாது.. அவன் என்னை ஒன்னும் செய்ய மாட்டான்..புரிதா..”
“ஹ்ம்ம்..”
“ரெண்டாவது.. ஷங்கர் குட் பாய் தான்.. இனி அப்படி செய்ய மாட்டான்.. என்னை நம்புறது போல் அவனை நீ நம்பலாம்.. ஏதும் சந்தேகம் வந்தால் அவனிடம் கேள்..அவன் சொல்வதை கேட்டு நடந்துக்கோ.. என்னை போல் அவனும் உன் நல்லதிற்………….”
“நான் தான் உன்னிடம் கேட்டுப்பேனே மாலு.. ஏன் அவனிடம் கேட்க சொல்ற?”
ஒரு நொடி தயங்கிய மாலினி, நிதானமாக பேசினாள்,“நேத்தே CSE IT னு கிளாஸ் பிரிச்சிட்டாங்க”
“மாலு…. அப்போ நான் தனியாவா… ஹும்கூம்.. நான் மாட்டேன்….”
“மோனி.. ஏற்கனவே தெரிஞ்சு தானே காலேஜ் சேர்ந்த, எப்படியும் கிளாஸ் பிரிச்சிருவாங்க னு தெரிஞ்சது தானே.. என்ன கொஞ்சம் சீக்கிரம் பிரிச்சிட்டாங்க அவ்ளோ தான்..”
“ஹ்ம்ம்.. மாலு”
“மோனி கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் பட் அப்பறம் பழகிடும், சரியா”
“ஹ்ம்ம்..”
“உன் கூட தான் ஷங்கர் இருப்பானே!”
மோகனாவின் முகம் ஒரு நொடி மலர்ந்தாலும் அடுத்த நொடியே வாடியது, “ஹ்ம்ம்.. நீ இருக்க மாட்டியே”
“கிளாஸ் டைம் கிளாஸ் தான் கவனிக்கணும். ஸோ எந்த கிளாஸ்ஸில் இருந்தா என்ன? பிரேக் டைமில் நீ என் கிளாஸ்க்கு வந்துரு.. தட்ஸ் ஆல்..”
“ஹ்ம்ம்..”
“மோனி.. இப்படி யோசிச்சு பாரு.. சப்போஸ் உனக்கு இந்த காலேஜில் இடம் கிடைக்கலை னா நீ வேற காலேஜ் போயிருப்ப.. அதுக்கு இது பெட்டெர் தானே.. (மாலினி சிரித்த முகத்துடன் தொடர்ந்தாள்) நாம ஒரே காலேஜ்.. பிரேக் டைமில் ஒன்னா ஸ்பென்ட் பண்ணலாம், ஜாலியா பேசலாம்..”
ஒரு நொடி ஆச்சரியப் பட்ட மாலினி,“அது கரெக்ட் தான்..எப்போதும் னு நான் சொன்னது.. எந்த விஷயமா இருந்தாலும் அதை நினைத்து கலங்காம, பாசிடிவ் எனர்ஜியோடு யோசிச்சு, சால்வ் பண்ணிட்டு, சிரிச்ச முகமா இருக்கணும்”
“ஹ்ம்ம்.. பஸ்ட் ஒன் – செல்வா நல்லவன் தான், உன்னை எதுவும் செய்ய மாட்டான்..
செகண்ட் – (புன்னகையுடன் பேசினாள்) ஷங்கர் குட் பாய்.. உன்னை போல் எனக்கு வெரி குட் பிரெண்ட்.. என்னை நல்லா பார்த்துப்பான்.. எதுவும் டவுட் னா, நீ இல்லை னா அவனிடம் கேட்டு அவன் சொல்வது போல் நடந்துக்கணும்.. ஓகே யா?”